Monday, March 21, 2016

Pirasanggi 4 | பிரசங்கி 4 | Ecclesiastes 4


இதற்குப்பின்பு  நான்  சூரியனுக்குக்கீழே  செய்யப்படும்  கொடுமைகளையெல்லாம்  சிந்தித்துப்பார்த்தேன்;  இதோ,  ஒடுக்கப்பட்டவர்களின்  கண்ணீரைக்  கண்டேன்,  அவர்களைத்  தேற்றுவாரில்லை;  ஒடுக்குகிறவர்கள்  பட்சத்தில்  பெலம்  இருந்தது,  அப்படியிருந்தும்  தேற்றுவாரில்லை.  (பிரசங்கி  4:1)

itha’rkuppinbu  naan  sooriyanukkukkeezhea  seyyappadum  kodumaiga'laiyellaam  sinthiththuppaarththean;  ithoa,  odukkappattavarga'lin  ka'n'neeraik  ka'ndean,  avarga'laith  theat’ruvaarillai;  odukkugi'ravarga'l  padchaththil  belam  irunthathu,  appadiyirunthum  theat’ruvaarillai.  (pirasanggi  4:1)

ஆதலால்  இன்னும்  உயிரோடிருந்து  பிழைக்கிறவர்களைப்பார்க்கிலும்  முன்னமே  காலஞ்சென்று  மரித்தவர்களையே  பாக்கியவான்கள்  என்றேன்.  (பிரசங்கி  4:2)

aathalaal  innum  uyiroadirunthu  pizhaikki'ravarga'laippaarkkilum  munnamea  kaalagnsen'ru  mariththavarga'laiyea  baakkiyavaanga'l  en'rean.  (pirasanggi  4:2)

இவ்விருதிறத்தாருடைய  நிலைமையைப்பார்க்கிலும்  இன்னும்  பிறவாதவனுடைய  நிலைமையே  வாசி;  அவன்  சூரியனுக்குக்  கீழே  செய்யப்படும்  துர்ச்செய்கைகளைக்  காணவில்லையே.  (பிரசங்கி  4:3)

ivviruthi'raththaarudaiya  nilaimaiyaippaarkkilum  innum  pi'ravaathavanudaiya  nilaimaiyea  vaasi;  avan  sooriyanukkuk  keezhea  seyyappadum  thurchseygaiga'laik  kaa'navillaiyea.  (pirasanggi  4:3)

மனுஷன்  படும்  எல்லாப்  பிரயாசமும்,  பயன்படும்  எல்லாக்  கிரியையும்,  அயலானுடைய  பொறாமைக்கு  ஏதுவாயிருக்கிறதை  நான்  கண்டேன்;  இதுவும்  மாயையும்,  மனதுக்குச்  சஞ்சலமுமாயிருக்கிறது.  (பிரசங்கி  4:4)

manushan  padum  ellaap  pirayaasamum,  payanpadum  ellaak  kiriyaiyum,  ayalaanudaiya  po'raamaikku  eathuvaayirukki'rathai  naan  ka'ndean;  ithuvum  maayaiyum,  manathukkuch  sagnchalamumaayirukki'rathu.  (pirasanggi  4:4)

மூடன்  தன்  கைகளைக்  கட்டிக்கொண்டு,  தன்  சதையையே  தின்கிறான்.  (பிரசங்கி  4:5)

moodan  than  kaiga'laik  kattikko'ndu,  than  sathaiyaiyea  thingi'raan.  (pirasanggi  4:5)

வருத்தத்தோடும்  மனச்சஞ்சலத்தோடும்  இரண்டு  கைப்பிடியும்  நிறையக்கொண்டிருப்பதைப்பார்க்கிலும்,  அமைச்சலோடு  ஒரு  கைப்பிடி  நிறையக்  கொண்டிருப்பதே  நலம்.  (பிரசங்கி  4:6)

varuththaththoadum  manachsagnchalaththoadum  ira'ndu  kaippidiyum  ni'raiyakko'ndiruppathaippaarkkilum,  amaichchaloadu  oru  kaippidi  ni'raiyak  ko'ndiruppathea  nalam.  (pirasanggi  4:6)

பின்பு  நான்  திரும்பிக்கொண்டு  சூரியனுக்குக்  கீழே  மாயையான  வேறொரு  காரியத்தைக்  கண்டேன்.  (பிரசங்கி  4:7)

pinbu  naan  thirumbikko'ndu  sooriyanukkuk  keezhea  maayaiyaana  vea'roru  kaariyaththaik  ka'ndean.  (pirasanggi  4:7)

ஒருவன்  ஒண்டிக்காரனாயிருக்கிறான்;  அவனுக்கு  உடனாளியுமில்லை,  அவனுக்குப்  பிள்ளையும்  சகோதரனுமில்லை;  அப்படியிருந்தும்  அவன்  படும்  பிரயாசத்துக்கு  முடிவில்லை;  அவன்  கண்  ஐசுவரியத்தால்  திருப்தியாகிறதுமில்லை;  நான்  ஒரு  நன்மையையும்  அநுபவியாமல்  யாருக்காகப்  பிரயாசப்படுகிறேன்  என்று  அவன்  சிந்திக்கிறதுமில்லை;  இதுவும்  மாயை,  தீராத  தொல்லை.  (பிரசங்கி  4:8)

oruvan  o'ndikkaaranaayirukki'raan;  avanukku  udanaa'liyumillai,  avanukkup  pi'l'laiyum  sagoatharanumillai;  appadiyirunthum  avan  padum  pirayaasaththukku  mudivillai;  avan  ka'n  aisuvariyaththaal  thirupthiyaagi'rathumillai;  naan  oru  nanmaiyaiyum  anubaviyaamal  yaarukkaagap  pirayaasappadugi'rean  en'ru  avan  sinthikki'rathumillai;  ithuvum  maayai,  theeraatha  thollai.  (pirasanggi  4:8)

ஒண்டியாயிருப்பதிலும்  இருவர்  கூடியிருப்பது  நலம்;  அவர்களுடைய  பிரயாசத்தினால்  அவர்களுக்கு  நல்ல  பலனுண்டாகும்.  (பிரசங்கி  4:9)

o'ndiyaayiruppathilum  iruvar  koodiyiruppathu  nalam;  avarga'ludaiya  pirayaasaththinaal  avarga'lukku  nalla  palanu'ndaagum.  (pirasanggi  4:9)

ஒருவன்  விழுந்தால்  அவன்  உடனாளி  அவனைத்  தூக்கிவிடுவான்;  ஒண்டியாயிருந்து  விழுகிறவனுக்கு  ஐயோ,  அவனைத்  தூக்கிவிடத்  துணையில்லையே.  (பிரசங்கி  4:10)

oruvan  vizhunthaal  avan  udanaa'li  avanaith  thookkividuvaan;  o'ndiyaayirunthu  vizhugi'ravanukku  aiyoa,  avanaith  thookkividath  thu'naiyillaiyea.  (pirasanggi  4:10)

இரண்டுபேராய்ப்  படுத்துக்கொண்டிருந்தால்  அவர்களுக்குச்  சூடுண்டாகும்;  ஒண்டியாயிருக்கிறவனுக்குச்  சூடுண்டாவது  எப்படி?  (பிரசங்கி  4:11)

ira'ndupearaayp  paduththukko'ndirunthaal  avarga'lukkuch  soodu'ndaagum;  o'ndiyaayirukki'ravanukkuch  soodu'ndaavathu  eppadi?  (pirasanggi  4:11)

ஒருவனை  யாதாமொருவன்  மேற்கொள்ள  வந்தால்  இருவரும்  அவனுக்கு  எதிர்த்து  நிற்கலாம்;  முப்புரிநூல்  சீக்கிரமாய்  அறாது.  (பிரசங்கி  4:12)

oruvanai  yaathaamoruvan  mea’rko'l'la  vanthaal  iruvarum  avanukku  ethirththu  ni’rkalaam;  muppurinool  seekkiramaay  a'raathu.  (pirasanggi  4:12)

இனி  ஆலோசனையைக்  கேளாத  கிழவனும்  மூடனுமாகிய  ராஜாவைப்பார்க்கிலும்,  ஏழையும்  ஞானியுமாகிய  இளைஞனே  வாசி.  (பிரசங்கி  4:13)

ini  aaloasanaiyaik  kea'laatha  kizhavanum  moodanumaagiya  raajaavaippaarkkilum,  eazhaiyum  gnaaniyumaagiya  i'laignanea  vaasi.  (pirasanggi  4:13)

அரசாளச்  சிறைச்சாலையிலிருந்து  புறப்படுவாருமுண்டு;  ராஜாங்கத்தில்  பிறந்து  ஏழையாவாருமுண்டு.  (பிரசங்கி  4:14)

arasaa'lach  si'raichsaalaiyilirunthu  pu'rappaduvaarumu'ndu;  raajaanggaththil  pi'ranthu  eazhaiyaavaarumu'ndu.  (pirasanggi  4:14)

சூரியனுக்குக்கீழே  ஜீவனுள்ளோர்  யாவரும்  ராஜாவின்  பட்டத்திற்கு  வரப்போகிற  பிள்ளையின்  பட்சத்தில்  சார்ந்திருப்பதைக்  கண்டேன்.  (பிரசங்கி  4:15)

sooriyanukkukkeezhea  jeevanu'l'loar  yaavarum  raajaavin  pattaththi’rku  varappoagi'ra  pi'l'laiyin  padchaththil  saarnthiruppathaik  ka'ndean.  (pirasanggi  4:15)

அவர்களுக்குமுன்  அப்படிச்  செய்த  ஜனங்களின்  இலக்கத்திற்கு  முடிவில்லை;  இனி  இருப்பவர்கள்  இவன்மேலும்  பிரியம்  வைக்காமற்போவார்கள்;  இதுவும்  மாயையும்,  மனதுக்குச்  சஞ்சலமுமாயிருக்கிறது.  (பிரசங்கி  4:16)

avarga'lukkumun  appadich  seytha  janangga'lin  ilakkaththi’rku  mudivillai;  ini  iruppavarga'l  ivanmealum  piriyam  vaikkaama’rpoavaarga'l;  ithuvum  maayaiyum,  manathukkuch  sagnchalamumaayirukki'rathu.  (pirasanggi  4:16)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!