Tuesday, November 08, 2016

Yoasuvaa 15 | யோசுவா 15 | Joshua 15

யூதா  புத்திரரின்  கோத்திரத்திற்கு  அவர்களுடைய  வம்சங்களின்படி  உண்டான  பங்குவீதமாவது:  ஏதோமின்  எல்லைக்கு  அருகான  சீன்வனாந்தரமே  தென்புறத்தின்  கடையெல்லை.  (யோசுவா  15:1)

yoothaa  puththirarin  koaththiraththi’rku  avarga'ludaiya  vamsangga'linpadi  u'ndaana  pangguveethamaavathu:  eathoamin  ellaikku  arugaana  seenvanaantharamea  thenpu’raththin  kadaiyellai.  (yoasuvaa  15:1)

தென்புறமான  அவர்களுடைய  எல்லை  உப்புக்கடலின்  கடைசியில்  தெற்கு  முகமாயிருக்கிற  முனைதுவக்கி,  (யோசுவா  15:2)

thenpu’ramaana  avarga'ludaiya  ellai  uppukkadalin  kadaisiyil  the’rku  mugamaayirukki’ra  munaithuvakki,  (yoasuvaa  15:2)

தென்புறத்திலிருக்கிற  அக்ராபீமின்  மேடுகளுக்கும்,  அங்கேயிருந்து  சீனுக்கும்  போய்,  தெற்கேயிருக்கிற  காதேஸ்பர்னெயாவுக்கு  ஏறி,  எஸ்ரோனைக்  கடந்து,  ஆதாருக்கு  ஏறி,  கர்க்காவைச்  சுற்றிப்போய்,  (யோசுவா  15:3)

thenpu’raththilirukki’ra  akraabeemin  meaduga'lukkum,  anggeayirunthu  seenukkum  poay,  the’rkeayirukki’ra  kaatheasbarneyaavukku  ea’ri,  esroanaik  kadanthu,  aathaarukku  ea’ri,  karkkaavaich  sut’rippoay,  (yoasuvaa  15:3)

அஸ்மோனுக்கும்,  அங்கேயிருந்து  எகிப்தின்  ஆற்றுக்கும்  சென்று,  கடல்மட்டும்  போய்  முடியும்;  இதுவே  உங்களுக்குத்  தென்புறமான  எல்லையாயிருக்கும்  என்றான்.  (யோசுவா  15:4)

asmoanukkum,  anggeayirunthu  egipthin  aat’rukkum  sen’ru,  kadalmattum  poay  mudiyum;  ithuvea  ungga'lukkuth  thenpu’ramaana  ellaiyaayirukkum  en’raan.  (yoasuvaa  15:4)

கீழ்ப்புறமான  எல்லை,  யோர்தான்  முகத்துவாரமட்டும்  இருக்கிற  உப்புக்கடல்.  வடபுறமான  எல்லை,  யோர்தான்  முகத்துவாரமிருக்கிற  கடலின்  முனை  துவக்கி,  (யோசுவா  15:5)

keezhppu’ramaana  ellai,  yoarthaan  mugaththuvaaramattum  irukki’ra  uppukkadal.  vadapu’ramaana  ellai,  yoarthaan  mugaththuvaaramirukki’ra  kadalin  munai  thuvakki,  (yoasuvaa  15:5)

பெத்எக்லாவுக்கு  ஏறி,  வடக்கேயிருக்கிற  பெத்அரபாவைக்  கடந்து,  ரூபனின்  குமாரனாகிய  போகனின்  கல்லுக்கு  ஏறிப்போய்,  (யோசுவா  15:6)

betheklaavukku  ea’ri,  vadakkeayirukki’ra  betharabaavaik  kadanthu,  roobanin  kumaaranaagiya  boaganin  kallukku  ea’rippoay,  (yoasuvaa  15:6)

அப்புறம்  ஆகோர்  பள்ளத்தாக்கை  விட்டுத்  தெபீருக்கு  ஏறி,  வடக்கே  ஆற்றின்  தென்புறமான  அதும்மீமின்  மேட்டுக்கு  முன்பாக  இருக்கிற  கில்காலுக்கு  நேராகவும்,  அங்கேயிருந்து  என்சேமேசின்  தண்ணீரிடத்துக்கும்  போய்,  என்ரோகேல்  என்னும்  கிணற்றுக்குச்  சென்று,  (யோசுவா  15:7)

appu’ram  aakoar  pa'l'laththaakkai  vittuth  thebeerukku  ea’ri,  vadakkea  aat’rin  thenpu’ramaana  athummeemin  meattukku  munbaaga  irukki’ra  kilgaalukku  nearaagavum,  anggeayirunthu  enseameasin  tha'n'neeridaththukkum  poay,  enroakeal  ennum  ki'nat’rukkuch  sen’ru,  (yoasuvaa  15:7)

அப்புறம்  எபூசியர்  குடியிருக்கிற  எருசலேமுக்குத்  தென்புறமாய்  இன்னோமுடைய  குமாரனின்  பள்ளத்தாக்கைக்  கடந்து,  வடக்கேயிருக்கிற  இராட்சதருடைய  பள்ளத்தாக்கின்  கடைசியில்  மேற்காக  இன்னோம்  பள்ளத்தாக்கின்  முன்னிருக்கிற  மலையின்  சிகரமட்டும்  ஏறிப்போய்,  (யோசுவா  15:8)

appu’ram  eboosiyar  kudiyirukki’ra  erusaleamukkuth  thenpu’ramaay  innoamudaiya  kumaaranin  pa'l'laththaakkaik  kadanthu,  vadakkeayirukki’ra  iraadchatharudaiya  pa'l'laththaakkin  kadaisiyil  mea’rkaaga  innoam  pa'l'laththaakkin  munnirukki’ra  malaiyin  sigaramattum  ea’rippoay,  (yoasuvaa  15:8)

அந்த  மலையின்  சிகரத்திலிருந்து  நெப்தோவாவின்  நீரூற்றுக்குப்  போய்,  எப்பெரோன்  மலையின்  பட்டணங்களுக்குச்  சென்று,  கீரியாத்யெயாரீமாகிய  பாலாவுக்குப்  போய்,  (யோசுவா  15:9)

antha  malaiyin  sigaraththilirunthu  nepthoavaavin  neeroot’rukkup  poay,  epperoan  malaiyin  patta'nangga'lukkuch  sen’ru,  keeriyaathyeyaareemaagiya  baalaavukkup  poay,  (yoasuvaa  15:9)

பாலாவிலிருந்து  மேற்கே  சேயீர்  மலைக்குத்  திரும்பி,  வடக்கே  இருக்கிற  கெசலோனாகிய  யெயாரீம்  மலைக்குப்  பக்கமாகப்  போய்,  பெத்ஷிமேசுக்கு  இறங்கி,  திம்னாவுக்குப்  போய்,  (யோசுவா  15:10)

baalaavilirunthu  mea’rkea  seayeer  malaikkuth  thirumbi,  vadakkea  irukki’ra  kesaloanaagiya  yeyaareem  malaikkup  pakkamaagap  poay,  bethshimeasukku  i’ranggi,  thimnaavukkup  poay,  (yoasuvaa  15:10)

அப்புறம்  வடக்கேயிருக்கிற  எக்ரோனுக்குப்  பக்கமாய்ச்  சென்று,  சிக்ரோனுக்கு  ஓடி,  பாலாமலையைக்  கடந்து,  யாப்னியேலுக்குச்  சென்று,  கடலிலே  முடியும்.  (யோசுவா  15:11)

appu’ram  vadakkeayirukki’ra  ekroanukkup  pakkamaaych  sen’ru,  sikroanukku  oadi,  baalaamalaiyaik  kadanthu,  yaabniyealukkuch  sen’ru,  kadalilea  mudiyum.  (yoasuvaa  15:11)

மேற்புறமான  எல்லை,  பெரிய  சமுத்திரமே;  இது  யூதா  புத்திரருக்கு  அவர்களுடைய  வம்சங்களின்படி  சுற்றிலுமிருக்கும்  எல்லை.  (யோசுவா  15:12)

mea’rpu’ramaana  ellai,  periya  samuththiramea;  ithu  yoothaa  puththirarukku  avarga'ludaiya  vamsangga'linpadi  sut’rilumirukkum  ellai.  (yoasuvaa  15:12)

எப்புன்னேயின்  குமாரனாகிய  காலேபுக்கு,  யோசுவா,  கர்த்தர்  தனக்குக்  கட்டளையிட்டபடி,  ஏனாக்கின்  தகப்பனாகிய  அர்பாவின்  பட்டணமான  எபிரோனை,  யூதா  புத்திரரின்  நடுவே,  பங்காகக்  கொடுத்தான்.  (யோசுவா  15:13)

eppunneayin  kumaaranaagiya  kaaleabukku,  yoasuvaa,  karththar  thanakkuk  katta'laiyittapadi,  eanaakkin  thagappanaagiya  arbaavin  patta'namaana  ebiroanai,  yoothaa  puththirarin  naduvea,  panggaagak  koduththaan.  (yoasuvaa  15:13)

அங்கேயிருந்த  சேசாய்,  அகீமான்,  தல்மாய்  என்னும்  ஏனாக்கின்  மூன்று  குமாரரையும்  காலேப்  துரத்திவிட்டு,  (யோசுவா  15:14)

anggeayiruntha  seasaay,  ageemaan,  thalmaay  ennum  eanaakkin  moon’ru  kumaararaiyum  kaaleab  thuraththivittu,  (yoasuvaa  15:14)

அங்கேயிருந்து  தெபீரின்  குடிகளிடத்திற்குப்  போனான்;  முற்காலத்திலே  தெபீரின்  பேர்  கீரியாத்செப்பேர்.  (யோசுவா  15:15)

anggeayirunthu  thebeerin  kudiga'lidaththi’rkup  poanaan;  mu’rkaalaththilea  thebeerin  pear  keeriyaathseppear.  (yoasuvaa  15:15)

கீரியாத்செப்பேரைச்  சங்காரம்பண்ணிப்  பிடிக்கிறவனுக்கு,  என்  குமாரத்தியாகிய  அக்சாளை  விவாகம்பண்ணிக்கொடுப்பேன்  என்று  காலேப்  சொன்னான்.  (யோசுவா  15:16)

keeriyaathseppearaich  sanggaarampa'n'nip  pidikki’ravanukku,  en  kumaaraththiyaagiya  aksaa'lai  vivaagampa'n'nikkoduppean  en’ru  kaaleab  sonnaan.  (yoasuvaa  15:16)

அப்பொழுது  காலேபின்  சகோதரனாகிய  கேனாசின்  மகன்  ஒத்னியேல்  அதைப்  பிடித்தான்;  ஆகையால்  தன்  குமாரத்தி  அக்சாளை  அவனுக்கு  விவாகம்பண்ணிக்  கொடுத்தான்.  (யோசுவா  15:17)

appozhuthu  kaaleabin  sagoatharanaagiya  keanaasin  magan  othniyeal  athaip  pidiththaan;  aagaiyaal  than  kumaaraththi  aksaa'lai  avanukku  vivaagampa'n'nik  koduththaan.  (yoasuvaa  15:17)

அவள்  புறப்படுகையில்,  என்  தகப்பனிடத்தில்  ஒரு  வயல்வெளியைக்  கேட்கவேண்டும்  என்று  அவனிடத்தில்  உத்தரவு  பெற்றுக்கொண்டு,  கழுதையின்மேலிருந்து  இறங்கினாள்.  காலேப்  பார்த்து:  உனக்கு  என்னவேண்டும்  என்றான்.  (யோசுவா  15:18)

ava'l  pu’rappadugaiyil,  en  thagappanidaththil  oru  vayalve'liyaik  keadkavea'ndum  en’ru  avanidaththil  uththaravu  pet’rukko'ndu,  kazhuthaiyinmealirunthu  i’rangginaa'l.  kaaleab  paarththu:  unakku  ennavea'ndum  en’raan.  (yoasuvaa  15:18)

அப்பொழுது  அவள்:  எனக்கு  ஒரு  ஆசீர்வாதம்  தரவேண்டும்;  எனக்கு  வறட்சியான  நிலத்தைத்  தந்தீர்;  நீர்ப்பாய்ச்சலான  நிலத்தையும்  எனக்குத்  தரவேண்டும்  என்றாள்;  அப்பொழுது  அவளுக்கு  மேற்புறத்திலும்  கீழ்ப்புறத்திலும்  நீர்ப்பாய்ச்சலான  நிலங்களைக்  கொடுத்தான்.  (யோசுவா  15:19)

appozhuthu  ava'l:  enakku  oru  aaseervaatham  tharavea'ndum;  enakku  va’radchiyaana  nilaththaith  thantheer;  neerppaaychchalaana  nilaththaiyum  enakkuth  tharavea'ndum  en’raa'l;  appozhuthu  ava'lukku  mea’rpu’raththilum  keezhppu’raththilum  neerppaaychchalaana  nilangga'laik  koduththaan.  (yoasuvaa  15:19)

யூதா  புத்திரருக்கு  அவர்களுடைய  வம்சங்களின்படி  உண்டான  சுதந்தரம்  என்னவென்றால்:  (யோசுவா  15:20)

yoothaa  puththirarukku  avarga'ludaiya  vamsangga'linpadi  u'ndaana  suthantharam  ennaven’raal:  (yoasuvaa  15:20)

கடையாந்தரத்  தென்புறமான  ஏதோமின்  எல்லைக்கு  நேராய்,  யூதா  புத்திரரின்  கோத்திரத்திற்குக்  கிடைத்த  பட்டணங்களாவன:  கப்செயேல்,  எதேர்,  யாகூர்,  (யோசுவா  15:21)

kadaiyaantharath  thenpu’ramaana  eathoamin  ellaikku  nearaay,  yoothaa  puththirarin  koaththiraththi’rkuk  kidaiththa  patta'nangga'laavana:  kabseyeal,  ethear,  yaagoor,  (yoasuvaa  15:21)

கீனா,  திமோனா,  அதாதா,  (யோசுவா  15:22)

keenaa,  thimoanaa,  athaathaa,  (yoasuvaa  15:22)

கேதேஸ்,  ஆத்சோர்,  இத்னான்,  (யோசுவா  15:23)

keatheas,  aathsoar,  ithnaan,  (yoasuvaa  15:23)

சீப்,  தேலெம்,  பெயாலோத்,  (யோசுவா  15:24)

seep,  thealem,  beyaaloath,  (yoasuvaa  15:24)

ஆத்சோர்,  அதாத்தா,  கீரியோத்,  எஸ்ரோன்  என்னும்  ஆத்சோர்,  (யோசுவா  15:25)

aathsoar,  athaaththaa,  keeriyoath,  esroan  ennum  aathsoar,  (yoasuvaa  15:25)

ஆமாம்,  சேமா,  மொலாதா,  (யோசுவா  15:26)

aamaam,  seamaa,  molaathaa,  (yoasuvaa  15:26)

ஆத்சார்காதா,  எஸ்மோன்,  பெத்பாலேத்,  (யோசுவா  15:27)

aathsaarkaathaa,  esmoan,  bethpaaleath,  (yoasuvaa  15:27)

ஆத்சார்சூகால்,  பெயெர்செபா,  பிஸ்யோத்யா,  (யோசுவா  15:28)

aathsaarsoogaal,  beyersebaa,  bisyoathyaa,  (yoasuvaa  15:28)

பாலா,  ஈயிம்,  ஆத்சேம்,  (யோசுவா  15:29)

baalaa,  eeyim,  aathseam,  (yoasuvaa  15:29)

எல்தோலாத்,  கெசீல்,  ஒர்மா,  (யோசுவா  15:30)

elthoalaath,  keseel,  ormaa,  (yoasuvaa  15:30)

சிக்லாக்,  மத்மன்னா,  சன்சன்னா,  (யோசுவா  15:31)

siklaak,  mathmannaa,  sansannaa,  (yoasuvaa  15:31)

லெபாயோத்,  சில்லீம்,  ஆயின்,  ரிம்மோன்  என்பவைகள்;  எல்லாப்  பட்டணங்களும்  அவைகளுடைய  கிராமங்களுமுட்பட  இருபத்தொன்பது.  (யோசுவா  15:32)

lebaayoath,  silleem,  aayin,  rimmoan  enbavaiga'l;  ellaap  patta'nangga'lum  avaiga'ludaiya  kiraamangga'lumudpada  irubaththonbathu.  (yoasuvaa  15:32)

பள்ளத்தாக்கு  நாட்டில்  எஸ்தாவோல்,  சோரியா,  அஷ்னா,  (யோசுவா  15:33)

pa'l'laththaakku  naattil  esthaavoal,  soariyaa,  ashnaa,  (yoasuvaa  15:33)

சனோகா,  என்கன்னீம்,  தப்புவா,  ஏனாம்,  (யோசுவா  15:34)

sanoagaa,  enkanneem,  thappuvaa,  eanaam,  (yoasuvaa  15:34)

யர்மூத்,  அதுல்லாம்,  சோக்கோ,  அசேக்கா,  (யோசுவா  15:35)

yarmooth,  athullaam,  soakkoa,  aseakkaa,  (yoasuvaa  15:35)

சாராயீம்,  அதித்தாயீம்,  கெதேரா,  கேதெரொத்தாயீம்;  இந்தப்  பட்டணங்களும்  அவைகளுடைய  கிராமங்களுமுட்படப்  பதினான்கு.  (யோசுவா  15:36)

saaraayeem,  athiththaayeem,  kethearaa,  keatheroththaayeem;  inthap  patta'nangga'lum  avaiga'ludaiya  kiraamangga'lumudpadap  pathinaangu.  (yoasuvaa  15:36)

சேனான்,  அதாஷா,  மிக்தால்காத்,  (யோசுவா  15:37)

seanaan,  athaashaa,  mikthaalgaath,  (yoasuvaa  15:37)

திலியான்,  மிஸ்பே,  யோக்தெயேல்,  (யோசுவா  15:38)

thiliyaan,  mispea,  yoaktheyeal,  (yoasuvaa  15:38)

லாகீஸ்,  போஸ்காத்,  எக்லோன்,  (யோசுவா  15:39)

laagees,  boaskaath,  ekloan,  (yoasuvaa  15:39)

காபோன்,  லகமாம்,  கித்லீஷ்,  (யோசுவா  15:40)

kaaboan,  lagamaam,  kithleesh,  (yoasuvaa  15:40)

கெதெரோத்,  பெத்டாகோன்,  நாகமா,  மக்கேதா;  இந்தப்  பட்டணங்களும்  அவைகளுடைய  கிராமங்களுமுட்படப்  பதினாறு.  (யோசுவா  15:41)

ketheroath,  bethdaagoan,  naagamaa,  makkeathaa;  inthap  patta'nangga'lum  avaiga'ludaiya  kiraamangga'lumudpadap  pathinaa’ru.  (yoasuvaa  15:41)

லிப்னா,  ஏத்தேர்,  ஆஷான்,  (யோசுவா  15:42)

libnaa,  eaththear,  aashaan,  (yoasuvaa  15:42)

இப்தா,  அஸ்னா,  நெத்சீப்,  (யோசுவா  15:43)

ipthaa,  asnaa,  nethseeb,  (yoasuvaa  15:43)

கேகிலா,  அக்சீப்,  மரேஷா;  இந்தப்  பட்டணங்களும்  அவைகளுடைய  கிராமங்களுமுட்பட  ஒன்பது.  (யோசுவா  15:44)

keagilaa,  akseeb,  mareashaa;  inthap  patta'nangga'lum  avaiga'ludaiya  kiraamangga'lumudpada  onbathu.  (yoasuvaa  15:44)

எக்ரோனும்  அதின்  வெளிநிலங்களும்  கிராமங்களும்,  (யோசுவா  15:45)

ekroanum  athin  ve'linilangga'lum  kiraamangga'lum,  (yoasuvaa  15:45)

எக்ரோன்  துவக்கிச்  சமுத்திரம்மட்டும்,  அஸ்தோத்தின்  புறத்திலிருக்கிற  சகல  ஊர்களும்,  அவைகளின்  கிராமங்களும்,  (யோசுவா  15:46)

ekroan  thuvakkich  samuththirammattum,  asthoaththin  pu’raththilirukki’ra  sagala  oorga'lum,  avaiga'lin  kiraamangga'lum,  (yoasuvaa  15:46)

அஸ்தோத்தும்,  அதின்  வெளிநிலங்களும்  கிராமங்களும்,  காசாவும்  எகிப்தின்  நதிமட்டுமிருக்கிற  அதின்  வெளிநிலங்களும்  கிராமங்களுமே;  பெரிய  சமுத்திரமே  எல்லை.  (யோசுவா  15:47)

asthoaththum,  athin  ve'linilangga'lum  kiraamangga'lum,  kaasaavum  egipthin  nathimattumirukki’ra  athin  ve'linilangga'lum  kiraamangga'lumea;  periya  samuththiramea  ellai.  (yoasuvaa  15:47)

மலைகளில்,  சாமீர்,  யாத்தீர்,  சோக்கோ,  (யோசுவா  15:48)

malaiga'lil,  saameer,  yaaththeer,  soakkoa,  (yoasuvaa  15:48)

தன்னா,  தெபீர்  என்னப்பட்ட  கீரியாத்சன்னா,  (யோசுவா  15:49)

thannaa,  thebeer  ennappatta  keeriyaathsannaa,  (yoasuvaa  15:49)

ஆனாப்,  எஸ்தெமொ,  ஆனீம்,  (யோசுவா  15:50)

aanaab,  esthemo,  aaneem,  (yoasuvaa  15:50)

கோசேன்,  ஓலோன்,  கிலொ;  இந்தப்  பட்டணங்களும்  அவைகளுடைய  கிராமங்களுமுட்படப்  பதினொன்று.  (யோசுவா  15:51)

koasean,  oaloan,  kilo;  inthap  patta'nangga'lum  avaiga'ludaiya  kiraamangga'lumudpadap  pathinon’ru.  (yoasuvaa  15:51)

அராப்,  தூமா,  எஷியான்,  (யோசுவா  15:52)

araab,  thoomaa,  eshiyaan,  (yoasuvaa  15:52)

யானூம்,  பெத்தப்புவா,  ஆப்பெக்கா,  (யோசுவா  15:53)

yaanoom,  beththappuvaa,  aappekkaa,  (yoasuvaa  15:53)

உம்தா,  எபிரோனாகிய  கீரியாத்அர்பா,  சீயோர்;  இந்தப்  பட்டணங்களும்  அவைகளுடைய  கிராமங்களுமுட்பட  ஒன்பது.  (யோசுவா  15:54)

umthaa,  ebiroanaagiya  keeriyaatharbaa,  seeyoar;  inthap  patta'nangga'lum  avaiga'ludaiya  kiraamangga'lumudpada  onbathu.  (yoasuvaa  15:54)

மாகோன்,  கர்மேல்,  சீப்,  யுத்தா,  (யோசுவா  15:55)

maagoan,  karmeal,  seep,  yuththaa,  (yoasuvaa  15:55)

யெஸ்ரயேல்,  யொக்தெயாம்,  சனோகா,  (யோசுவா  15:56)

yesrayeal,  yoktheyaam,  sanoagaa,  (yoasuvaa  15:56)

காயின்,  கிபியா,  திம்னா;  இந்தப்  பட்டணங்களும்  அவைகளுடைய  கிராமங்களுமுட்படப்  பத்து.  (யோசுவா  15:57)

kaayin,  kibiyaa,  thimnaa;  inthap  patta'nangga'lum  avaiga'ludaiya  kiraamangga'lumudpadap  paththu.  (yoasuvaa  15:57)

அல்கூல்,  பெத்சூர்,  கெதோர்,  (யோசுவா  15:58)

alkool,  bethsoor,  kethoar,  (yoasuvaa  15:58)

மகாராத்,  பெதானோத்,  எல்தெகோன்;  இந்தப்  பட்டணங்களும்  அவைகளுடைய  கிராமங்களுமுட்பட  ஆறு.  (யோசுவா  15:59)

magaaraath,  bethaanoath,  elthegoan;  inthap  patta'nangga'lum  avaiga'ludaiya  kiraamangga'lumudpada  aa’ru.  (yoasuvaa  15:59)

கீரியாத்யெயாரீமாகிய  கீரியாத்பாகால்,  ரபா;  இந்தப்  பட்டணங்களும்  அவைகளுடைய  கிராமங்களுமுட்பட  இரண்டு.  (யோசுவா  15:60)

keeriyaathyeyaareemaagiya  keeriyaathbaagaal,  rabaa;  inthap  patta'nangga'lum  avaiga'ludaiya  kiraamangga'lumudpada  ira'ndu.  (yoasuvaa  15:60)

வனாந்தரத்தில்,  பெத்அரபா,  மித்தீன்,  செக்காக்கா,  (யோசுவா  15:61)

vanaantharaththil,  betharabaa,  miththeen,  sekkaakkaa,  (yoasuvaa  15:61)

நிப்சான்,  உப்புப்பட்டணம்,  என்கேதி;  இந்தப்  பட்டணங்களும்  அவைகளுடைய  கிராமங்களுமுட்பட  ஆறு.  (யோசுவா  15:62)

nibsaan,  uppuppatta'nam,  engeathi;  inthap  patta'nangga'lum  avaiga'ludaiya  kiraamangga'lumudpada  aa’ru.  (yoasuvaa  15:62)

எருசலேமிலே  குடியிருந்த  எபூசியரை  யூதா  புத்திரர்  துரத்திவிடக்கூடாமற்போயிற்று;  ஆகையால்  இந்நாள்மட்டும்  எபூசியர்  யூதா  புத்திரரோடே  எருசலேமிலே  குடியிருக்கிறார்கள்.  (யோசுவா  15:63)

erusaleamilea  kudiyiruntha  eboosiyarai  yoothaa  puththirar  thuraththividakkoodaama’rpoayit’ru;  aagaiyaal  innaa'lmattum  eboosiyar  yoothaa  puththiraroadea  erusaleamilea  kudiyirukki’raarga'l.  (yoasuvaa  15:63)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!