Wednesday, November 02, 2016

Negeamiyaa 6 | நெகேமியா 6 | Nehemiah 6

நான்  அலங்கத்தைக்  கட்டிமுடித்ததையும்,  இனி  அதிலே  திறப்பு  ஒன்றுமில்லை  என்பதையும்,  சன்பல்லாத்தும்,  தொபியாவும்,  அரபியனான  கேஷேமும்  எங்களுக்குண்டாயிருந்த  மற்றப்  பகைஞரும்  கேள்விப்பட்டபோது,  (நெகேமியா  6:1)

naan  alanggaththaik  kattimudiththathaiyum,  ini  athilea  thi’rappu  on’rumillai  enbathaiyum,  sanballaaththum,  thobiyaavum,  arabiyanaana  keasheamum  engga'lukku'ndaayiruntha  mat’rap  pagaignarum  kea'lvippattapoathu,  (negeamiyaa  6:1)

நான்  வாசல்களுக்கு  இன்னும்  கதவுபோடாதிருக்கையில்,  சன்பல்லாத்தும்,  கேஷேமும்  ஆள்  அனுப்பி:  நாம்  ஓனோ  பள்ளத்தாக்கில்  இருக்கிற  கிராமங்கள்  ஒன்றில்  ஒருவரையொருவர்  கண்டு  பேசுவோம்  வாரும்  என்று  கூப்பிட்டார்கள்;  அவர்களோவென்றால்  எனக்குப்  பொல்லாப்புச்  செய்ய  நினைத்தார்கள்.  (நெகேமியா  6:2)

naan  vaasalga'lukku  innum  kathavupoadaathirukkaiyil,  sanballaaththum,  keasheamum  aa'l  anuppi:  naam  oanoa  pa'l'laththaakkil  irukki’ra  kiraamangga'l  on’ril  oruvaraiyoruvar  ka'ndu  peasuvoam  vaarum  en’ru  kooppittaarga'l;  avarga'loaven’raal  enakkup  pollaappuch  seyya  ninaiththaarga'l.  (negeamiyaa  6:2)

அப்பொழுது  நான்  அவர்களிடத்திற்கு  ஆட்களை  அனுப்பி:  நான்  பெரிய  வேலையைச்  செய்கிறேன்,  நான்  வரக்கூடாது;  நான்  அந்த  வேலையைவிட்டு  உங்களிடத்திற்கு  வருகிறதினால்  அது  மினக்கட்டுப்போவானேன்  என்று  சொல்லச்சொன்னேன்.  (நெகேமியா  6:3)

appozhuthu  naan  avarga'lidaththi’rku  aadka'lai  anuppi:  naan  periya  vealaiyaich  seygi’rean,  naan  varakkoodaathu;  naan  antha  vealaiyaivittu  ungga'lidaththi’rku  varugi’rathinaal  athu  minakkattuppoavaanean  en’ru  sollachsonnean.  (negeamiyaa  6:3)

அவர்கள்  இந்தப்பிரகாரமாக  நாலுதரம்  எனக்குச்  சொல்லியனுப்பினார்கள்;  நானும்  இந்தப்பிரகாரமாகவே  அவர்களுக்கு  மறுமொழி  அனுப்பினேன்.  (நெகேமியா  6:4)

avarga'l  inthappiragaaramaaga  naalutharam  enakkuch  solliyanuppinaarga'l;  naanum  inthappiragaaramaagavea  avarga'lukku  ma’rumozhi  anuppinean.  (negeamiyaa  6:4)

ஐந்தாந்தரமும்  சன்பல்லாத்து  அந்தப்  பிரகாரமாகவே  தன்  வேலைக்காரனையும்,  அவன்  கையிலே  முத்திரைபோடாத  ஒரு  கடிதத்தையும்  எனக்கு  அனுப்பினான்.  (நெகேமியா  6:5)

ainthaantharamum  sanballaaththu  anthap  piragaaramaagavea  than  vealaikkaaranaiyum,  avan  kaiyilea  muththiraipoadaatha  oru  kadithaththaiyum  enakku  anuppinaan.  (negeamiyaa  6:5)

அதிலே:  நீரும்  யூதரும்  கலகம்பண்ண  நினைக்கிறீர்கள்  என்றும்,  அதற்காக  நீர்  அலங்கத்தைக்  கட்டுகிறீர்  என்றும்,  இவ்விதமாக  நீர்  அவர்களுக்கு  ராஜாவாகப்  போகிறீர்  என்றும்,  (நெகேமியா  6:6)

athilea:  neerum  yootharum  kalagampa'n'na  ninaikki’reerga'l  en’rum,  atha’rkaaga  neer  alanggaththaik  kattugi’reer  en’rum,  ivvithamaaga  neer  avarga'lukku  raajaavaagap  poagi’reer  en’rum,  (negeamiyaa  6:6)

யூதாவிலே  ஒரு  ராஜா  இருக்கிறார்  என்று  உம்மைக்குறித்து  எருசலேமிலே  கூறுகிற  தீர்க்கதரிசிகளையும்  சம்பாதித்தீரென்றும்  புறஜாதிகளுக்குள்ளே  பிரஸ்தாபமாயிருக்கிறது,  கஷ்மூவும்  அப்படிச்  சொல்லுகிறான்;  இப்போதும்  இந்தச்  செய்தி  ராஜாவுக்கு  எட்டுமே;  ஆகையால்  நாம்  ஒருவரோடொருவர்  ஆலோசனைபண்ணுகிறதற்காக  நீர்  வரவேண்டும்  என்று  எழுதியிருந்தது.  (நெகேமியா  6:7)

yoothaavilea  oru  raajaa  irukki’raar  en’ru  ummaikku’riththu  erusaleamilea  koo’rugi’ra  theerkkatharisiga'laiyum  sambaathiththeeren’rum  pu’rajaathiga'lukku'l'lea  pirasthaabamaayirukki’rathu,  kashmoovum  appadich  sollugi’raan;  ippoathum  inthach  seythi  raajaavukku  ettumea;  aagaiyaal  naam  oruvaroadoruvar  aaloasanaipa'n'nugi’ratha’rkaaga  neer  varavea'ndum  en’ru  ezhuthiyirunthathu.  (negeamiyaa  6:7)

அதற்கு  நான்:  நீர்  சொல்லுகிற  அந்தக்  காரியங்களில்  ஒன்றும்  நடக்கவில்லை;  அவைகள்  உம்முடைய  மனோராஜ்யமே  ஒழிய  வேறல்ல  என்று  சொல்லியனுப்பினேன்.  (நெகேமியா  6:8)

atha’rku  naan:  neer  sollugi’ra  anthak  kaariyangga'lil  on’rum  nadakkavillai;  avaiga'l  ummudaiya  manoaraajyamea  ozhiya  vea’ralla  en’ru  solliyanuppinean.  (negeamiyaa  6:8)

அந்த  வேலை  நடந்தேறாதபடிக்கு,  எங்கள்  கை  சலித்துப்போம்  என்று  சொல்லி,  அவர்கள்  எல்லாரும்  எங்களைப்  பயமுறுத்தப்பார்த்தார்கள்.  ஆதலால்  தேவனே,  நீர்  என்  கைகளைத்  திடப்படுத்தியருளும்.  (நெகேமியா  6:9)

antha  vealai  nadanthea’raathapadikku,  engga'l  kai  saliththuppoam  en’ru  solli,  avarga'l  ellaarum  engga'laip  bayamu’ruththappaarththaarga'l.  aathalaal  theavanea,  neer  en  kaiga'laith  thidappaduththiyaru'lum.  (negeamiyaa  6:9)

மெகதாபெயேலின்  குமாரனாகிய  தெலாயாவின்  மகன்  செமாயா  தன்  வீட்டிலே  அடைக்கப்பட்டிருக்கும்போது,  நான்  அவனிடத்தில்  போனேன்;  அப்பொழுது  அவன்:  நாம்  இருவருமாய்  தேவனுடைய  வீடாகிய  ஆலயத்துக்குள்ளே  போய்,  தேவாலயத்தின்  கதவுகளைப்  பூட்டுவோம்  வாரும்;  உம்மைக்  கொன்றுபோட  வருவார்கள்,  இரவிலே  உம்மைக்  கொன்றுபோட  வருவார்கள்  என்றான்.  (நெகேமியா  6:10)

megathaabeyealin  kumaaranaagiya  thelaayaavin  magan  semaayaa  than  veettilea  adaikkappattirukkumpoathu,  naan  avanidaththil  poanean;  appozhuthu  avan:  naam  iruvarumaay  theavanudaiya  veedaagiya  aalayaththukku'l'lea  poay,  theavaalayaththin  kathavuga'laip  poottuvoam  vaarum;  ummaik  kon’rupoada  varuvaarga'l,  iravilea  ummaik  kon’rupoada  varuvaarga'l  en’raan.  (negeamiyaa  6:10)

அதற்கு  நான்:  என்னைப்போன்ற  மனிதன்  ஓடிப்போவானோ?  என்னைப்  போன்றவன்  உயிர்  பிழைக்கும்படி  தேவாலயத்திலே  போய்ப்  பதுங்குவானோ?  நான்  போவதில்லை  என்றேன்.  (நெகேமியா  6:11)

atha’rku  naan:  ennaippoan’ra  manithan  oadippoavaanoa?  ennaip  poan’ravan  uyir  pizhaikkumpadi  theavaalayaththilea  poayp  pathungguvaanoa?  naan  poavathillai  en’rean.  (negeamiyaa  6:11)

தேவன்  அவனை  அனுப்பவில்லையென்றும்,  தொபியாவும்  சன்பல்லாத்தும்  அவனுக்குக்  கூலிகொடுத்ததினால்,  அவன்  எனக்கு  விரோதமாய்  அந்தத்  தீர்க்கதரிசனத்தைச்  சொன்னான்  என்றும்  அறிந்துகொண்டேன்.  (நெகேமியா  6:12)

theavan  avanai  anuppavillaiyen’rum,  thobiyaavum  sanballaaththum  avanukkuk  koolikoduththathinaal,  avan  enakku  viroathamaay  anthath  theerkkatharisanaththaich  sonnaan  en’rum  a’rinthuko'ndean.  (negeamiyaa  6:12)

நான்  பயந்து  அப்படிச்  செய்து  பாவங்கட்டிக்கொள்ளுகிறதற்கும்,  என்னை  நிந்திக்கத்தக்க  அபகீர்த்திக்கு  முகாந்தரம்  உண்டாக்குகிறதற்கும்  அவனுக்குக்  கைக்கூலி  கொடுத்திருந்தார்கள்.  (நெகேமியா  6:13)

naan  bayanthu  appadich  seythu  paavangkattikko'l'lugi’ratha’rkum,  ennai  ninthikkaththakka  abakeerththikku  mugaantharam  u'ndaakkugi’ratha’rkum  avanukkuk  kaikkooli  koduththirunthaarga'l.  (negeamiyaa  6:13)

என்  தேவனே,  தொபியாவும்  சன்பல்லாத்தும்  செய்த  இந்தச்  செய்கைகளுக்குத்தக்கதாக  நீர்  அவர்களையும்,  நொவதியாள்  என்னும்  தீர்க்கதரிசியானவளையும்,  எனக்குப்  பயமுண்டாக்கப்  பார்த்த  மற்றத்  தீர்க்கதரிசிகளையும்  நினைத்துக்கொள்ளும்.  (நெகேமியா  6:14)

en  theavanea,  thobiyaavum  sanballaaththum  seytha  inthach  seygaiga'lukkuththakkathaaga  neer  avarga'laiyum,  novathiyaa'l  ennum  theerkkatharisiyaanava'laiyum,  enakkup  bayamu'ndaakkap  paarththa  mat’rath  theerkkatharisiga'laiyum  ninaiththukko'l'lum.  (negeamiyaa  6:14)

அப்படியே  அலங்கமானது  ஐம்பத்திரண்டு  நாளைக்குள்ளே  கட்டப்பட்டு,  எலூல்  மாதம்  இருபத்தைந்தாந்தேதியிலே  முடிந்தது.  (நெகேமியா  6:15)

appadiyea  alanggamaanathu  aimbaththira'ndu  naa'laikku'l'lea  kattappattu,  elool  maatham  irubaththainthaantheathiyilea  mudinthathu.  (negeamiyaa  6:15)

எங்கள்  பகைஞர்  எல்லாரும்  அதைக்  கேட்டபோதும்,  எங்கள்  சுற்றுப்புறத்தாராகிய  புறஜாதியான  அனைவரும்  கண்டபோதும்,  மிகவும்  முனையற்றுப்போய்,  இந்தக்  கிரியை  எங்கள்  தேவனால்  கைகூடி  வந்ததென்று  அறிந்தார்கள்.  (நெகேமியா  6:16)

engga'l  pagaignar  ellaarum  athaik  keattapoathum,  engga'l  sut’ruppu’raththaaraagiya  pu’rajaathiyaana  anaivarum  ka'ndapoathum,  migavum  munaiyat’ruppoay,  inthak  kiriyai  engga'l  theavanaal  kaikoodi  vanthathen’ru  a’rinthaarga'l.  (negeamiyaa  6:16)

அந்த  நாட்களில்  யூதாவிலுள்ள  பெரிய  மனிதரிடத்திலிருந்து  தொபியாவுக்குப்  போகிறதும்,  தொபியாவினிடத்திலிருந்து  அவர்களுக்கு  வருகிறதுமான  கடிதங்கள்  அநேகமாயிருந்தது.  (நெகேமியா  6:17)

antha  naadka'lil  yoothaavilu'l'la  periya  manitharidaththilirunthu  thobiyaavukkup  poagi’rathum,  thobiyaavinidaththilirunthu  avarga'lukku  varugi’rathumaana  kadithangga'l  aneagamaayirunthathu.  (negeamiyaa  6:17)

அவன்  ஆராகின்  குமாரனாகிய  செகனியாவுக்கு  மருமகனாயிருந்ததும்  அல்லாமல்,  அவன்  குமாரனாகிய  யோகனான்  பெரகியாவின்  குமாரனாகிய  மெசுல்லாமின்  குமாரத்தியை  விவாகம்பண்ணியிருந்தபடியாலும்,  யூதாவில்  அநேகர்  அவனுக்கு  ஆணையிட்டுக்  கொடுத்திருந்தார்கள்.  (நெகேமியா  6:18)

avan  aaraakin  kumaaranaagiya  sekaniyaavukku  marumaganaayirunthathum  allaamal,  avan  kumaaranaagiya  yoaganaan  berakiyaavin  kumaaranaagiya  mesullaamin  kumaaraththiyai  vivaagampa'n'niyirunthapadiyaalum,  yoothaavil  aneagar  avanukku  aa'naiyittuk  koduththirunthaarga'l.  (negeamiyaa  6:18)

அவன்  செய்யும்  நன்மைகளையும்  அவர்கள்  எனக்கு  முன்பாக  விவரித்து,  என்  வார்த்தைகளை  அவனுக்குக்  கொண்டுபோவார்கள்;  தொபியா  எனக்குப்  பயமுண்டாகக்  கடிதங்களை  அனுப்புவான்.  (நெகேமியா  6:19)

avan  seyyum  nanmaiga'laiyum  avarga'l  enakku  munbaaga  vivariththu,  en  vaarththaiga'lai  avanukkuk  ko'ndupoavaarga'l;  thobiyaa  enakkup  bayamu'ndaagak  kadithangga'lai  anuppuvaan.  (negeamiyaa  6:19)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!