Wednesday, November 02, 2016

Negeamiyaa 13 | நெகேமியா 13 | Nehemiah 13

அன்றையதினம்  ஜனங்கள்  கேட்க,  மோசேயின்  புஸ்தகத்தை  வாசித்தார்கள்;  அதிலே  அம்மோனியரும்  மோவாபியரும்,  இஸ்ரவேல்  புத்திரருக்கு  அப்பமும்  தண்ணீரும்  கொடுக்க  எதிர்கொண்டுவராமல்,  அவர்களைச்  சபிக்க  அவர்களுக்கு  விரோதமாய்ப்  பிலேயாமைக்  கூலிபொருந்திக்கொண்டபடியினால்,  (நெகேமியா  13:1)

an’raiyathinam  janangga'l  keadka,  moaseayin  pusthagaththai  vaasiththaarga'l;  athilea  ammoaniyarum  moavaabiyarum,  israveal  puththirarukku  appamum  tha'n'neerum  kodukka  ethirko'nduvaraamal,  avarga'laich  sabikka  avarga'lukku  viroathamaayp  bileayaamaik  kooliporunthikko'ndapadiyinaal,  (negeamiyaa  13:1)

அவர்கள்  என்றைக்கும்,  அந்தச்  சாபத்தை  ஆசீர்வாதமாகத்  திருப்பின  எங்கள்  தேவனுடைய  சபைக்குட்படலாகாது  என்று  எழுதியிருக்கிறதாகக்  காணப்பட்டது.  (நெகேமியா  13:2)

avarga'l  en’raikkum,  anthach  saabaththai  aaseervaathamaagath  thiruppina  engga'l  theavanudaiya  sabaikkudpadalaagaathu  en’ru  ezhuthiyirukki’rathaagak  kaa'nappattathu.  (negeamiyaa  13:2)

ஆகையால்  அவர்கள்  அந்தக்  கட்டளையைக்  கேட்டபோது,  பல  ஜாதியான  ஜனங்களையெல்லாம்  இஸ்ரவேலைவிட்டுப்  பிரித்துவிட்டார்கள்.  (நெகேமியா  13:3)

aagaiyaal  avarga'l  anthak  katta'laiyaik  keattapoathu,  pala  jaathiyaana  janangga'laiyellaam  isravealaivittup  piriththuvittaarga'l.  (negeamiyaa  13:3)

இதற்குமுன்னே  எங்கள்  தேவனுடைய  ஆலயத்தின்  அறைகளை  விசாரிக்க  வைக்கப்பட்ட  ஆசாரியனாகிய  எலியாசிப்  தொபியாவோடே  சம்பந்தங்கலந்தவனாயிருந்து,  (நெகேமியா  13:4)

itha’rkumunnea  engga'l  theavanudaiya  aalayaththin  a’raiga'lai  visaarikka  vaikkappatta  aasaariyanaagiya  eliyaasib  thobiyaavoadea  sambanthangkalanthavanaayirunthu,  (negeamiyaa  13:4)

முற்காலத்தில்  காணிக்கைகளும்,  சாம்பிராணியும்,  பணிமுட்டுகளும்,  லேவியருக்கும்  பாடகருக்கும்  வாசல்காவலாளருக்கும்  கட்டளைபண்ணப்பட்ட  தானியம்  திராட்சரசம்  எண்ணெய்  என்பவைகளிலே  தசமபாகமும்,  ஆசாரியரைச்  சேருகிற  படைப்பான  காணிக்கைகளும்  வைக்கப்பட்டிருந்த  இடத்தில்  ஒரு  பெரிய  அறையை  அவனுக்கு  ஆயத்தம்பண்ணியிருந்தான்.  (நெகேமியா  13:5)

mu’rkaalaththil  kaa'nikkaiga'lum,  saambiraa'niyum,  pa'nimuttuga'lum,  leaviyarukkum  paadagarukkum  vaasalkaavalaa'larukkum  katta'laipa'n'nappatta  thaaniyam  thiraadcharasam  e'n'ney  enbavaiga'lilea  thasamapaagamum,  aasaariyaraich  searugi’ra  padaippaana  kaa'nikkaiga'lum  vaikkappattiruntha  idaththil  oru  periya  a’raiyai  avanukku  aayaththampa'n'niyirunthaan.  (negeamiyaa  13:5)

இதெல்லாம்  நடக்கும்போது  நான்  எருசலேமில்  இல்லை;  பாபிலோன்  ராஜாவாகிய  அர்தசஷ்டாவின்  முப்பத்திரண்டாம்  வருஷத்திலே  நான்  ராஜாவினிடத்திற்குப்போய்,  சிலநாளுக்குப்பின்பு  திரும்ப  ராஜாவினிடத்தில்  உத்தரவு  பெற்றுக்கொண்டு,  (நெகேமியா  13:6)

ithellaam  nadakkumpoathu  naan  erusaleamil  illai;  baabiloan  raajaavaagiya  arthasashdaavin  muppaththira'ndaam  varushaththilea  naan  raajaavinidaththi’rkuppoay,  silanaa'lukkuppinbu  thirumba  raajaavinidaththil  uththaravu  pet’rukko'ndu,  (negeamiyaa  13:6)

எருசலேமுக்கு  வந்தேன்;  அப்பொழுது  எலியாசிப்  தொபியாவுக்குத்  தேவனுடைய  ஆலயத்துப்  பிராகாரங்களில்  ஒரு  அறையை  ஆயத்தம்பண்ணினதினால்,  செய்த  பொல்லாப்பை  அறிந்துகொண்டேன்.  (நெகேமியா  13:7)

erusaleamukku  vanthean;  appozhuthu  eliyaasib  thobiyaavukkuth  theavanudaiya  aalayaththup  piraagaarangga'lil  oru  a’raiyai  aayaththampa'n'ninathinaal,  seytha  pollaappai  a’rinthuko'ndean.  (negeamiyaa  13:7)

அதினால்  நான்  மிகவும்  மனமடிவாகி,  தொபியாவின்  வீட்டுத்  தட்டுமுட்டுகளையெல்லாம்  அந்த  அறையிலிருந்து  வெளியே  எறிந்துவிட்டேன்.  (நெகேமியா  13:8)

athinaal  naan  migavum  manamadivaagi,  thobiyaavin  veettuth  thattumuttuga'laiyellaam  antha  a’raiyilirunthu  ve'liyea  e’rinthuvittean.  (negeamiyaa  13:8)

பின்பு  நான்  அறைவீடுகளைச்  சுத்திகரிக்கச்சொல்லி,  தேவனுடைய  ஆலயப்பணிமுட்டுகளையும்  காணிக்கைகளையும்  சாம்பிராணியையும்  அங்கே  திரும்பக்கொண்டுவந்து  வைத்தேன்.  (நெகேமியா  13:9)

pinbu  naan  a’raiveeduga'laich  suththigarikkachsolli,  theavanudaiya  aalayappa'nimuttuga'laiyum  kaa'nikkaiga'laiyum  saambiraa'niyaiyum  anggea  thirumbakko'nduvanthu  vaiththean.  (negeamiyaa  13:9)

பின்னையும்  லேவியருக்கு  அவர்கள்  பங்குகள்  கொடுக்கப்படவில்லையென்பதையும்,  பணிவிடை  செய்கிற  லேவியரும்  பாடகரும்  அவரவர்  தங்கள்  வெளிநிலங்களுக்கு  ஓடிப்போனார்கள்  என்பதையும்  நான்  அறிந்துகொண்டேன்.  (நெகேமியா  13:10)

pinnaiyum  leaviyarukku  avarga'l  pangguga'l  kodukkappadavillaiyenbathaiyum,  pa'nividai  seygi’ra  leaviyarum  paadagarum  avaravar  thangga'l  ve'linilangga'lukku  oadippoanaarga'l  enbathaiyum  naan  a’rinthuko'ndean.  (negeamiyaa  13:10)

அப்பொழுது  நான்  தலைமையானவர்களோடே  வழக்காடி,  தேவனுடைய  ஆலயம்  கைவிடப்பட்டுப்போவானேன்  என்று  சொல்லி,  அவர்களைச்  சேர்த்து,  அவரவர்  நிலையில்  அவர்களை  வைத்தேன்.  (நெகேமியா  13:11)

appozhuthu  naan  thalaimaiyaanavarga'loadea  vazhakkaadi,  theavanudaiya  aalayam  kaividappattuppoavaanean  en’ru  solli,  avarga'laich  searththu,  avaravar  nilaiyil  avarga'lai  vaiththean.  (negeamiyaa  13:11)

அப்பொழுது  யூதர்  எல்லாரும்  தானியம்  திராட்சரசம்  எண்ணெய்  என்பவைகளில்  தசமபாகத்தைப்  பொக்கிஷ  அறைகளில்  கொண்டுவந்தார்கள்.  (நெகேமியா  13:12)

appozhuthu  yoothar  ellaarum  thaaniyam  thiraadcharasam  e'n'ney  enbavaiga'lil  thasamapaagaththaip  pokkisha  a’raiga'lil  ko'nduvanthaarga'l.  (negeamiyaa  13:12)

அப்பொழுது  நான்  ஆசாரியனாகிய  செலேமியாவையும்,  வேதபாரகனாகிய  சாதோக்கையும்,  லேவியரில்  பெதாயாவையும்,  இவர்களுக்குக்  கைத்துணையாக  மத்தனியாவின்  குமாரன்  சக்கூரின்  மகனாகிய  ஆனானையும்  பொக்கிஷ  அறைகளின்மேல்  விசாரிப்புக்காரராக  வைத்தேன்;  அவர்கள்  உண்மையுள்ளவர்கள்  என்று  எண்ணப்பட்டார்கள்;  ஆகையால்  தங்கள்  சகோதரருக்குப்  பங்கிடுகிற  வேலை  அவர்களுக்கு  ஒப்புவிக்கப்பட்டது.  (நெகேமியா  13:13)

appozhuthu  naan  aasaariyanaagiya  seleamiyaavaiyum,  veathapaaraganaagiya  saathoakkaiyum,  leaviyaril  pethaayaavaiyum,  ivarga'lukkuk  kaiththu'naiyaaga  maththaniyaavin  kumaaran  sakkoorin  maganaagiya  aanaanaiyum  pokkisha  a’raiga'linmeal  visaarippukkaararaaga  vaiththean;  avarga'l  u'nmaiyu'l'lavarga'l  en’ru  e'n'nappattaarga'l;  aagaiyaal  thangga'l  sagoathararukkup  panggidugi’ra  vealai  avarga'lukku  oppuvikkappattathu.  (negeamiyaa  13:13)

என்  தேவனே,  நான்  என்  தேவனுடைய  ஆலயத்துக்காகவும்  அதின்  முறைமைகளுக்காகவும்  செய்த  நற்கிரியைகளைக்  குலைத்துப்போடாமல்,  இந்தக்  காரியத்திலே  என்னை  நினைத்தருளும்.  (நெகேமியா  13:14)

en  theavanea,  naan  en  theavanudaiya  aalayaththukkaagavum  athin  mu’raimaiga'lukkaagavum  seytha  na’rkiriyaiga'laik  kulaiththuppoadaamal,  inthak  kaariyaththilea  ennai  ninaiththaru'lum.  (negeamiyaa  13:14)

அந்த  நாட்களில்  நான்  யூதாவிலே  ஓய்வுநாளில்  சிலர்  ஆலைகளை  மிதிக்கிறதையும்,  சிலர்  தானியப்  பொதிகளைக்  கழுதைகள்மேல்  ஏற்றிக்கொண்டு  வருகிறதையும்,  திராட்சரசம்,  திராட்சப்பழம்,  அத்திப்பழம்  முதலானவைகளின்  பற்பல  சுமைகளை  ஓய்வுநாளிலே  எருசலேமுக்குக்  கொண்டுவருகிறதையும்  கண்டு,  அவர்கள்  தின்பண்டம்  விற்கிற  நாளைப்பற்றி  அவர்களைத்  திடசாட்சியாய்க்  கடிந்துகொண்டேன்.  (நெகேமியா  13:15)

antha  naadka'lil  naan  yoothaavilea  oayvunaa'lil  silar  aalaiga'lai  mithikki’rathaiyum,  silar  thaaniyap  pothiga'laik  kazhuthaiga'lmeal  eat’rikko'ndu  varugi’rathaiyum,  thiraadcharasam,  thiraadchappazham,  aththippazham  muthalaanavaiga'lin  pa’rpala  sumaiga'lai  oayvunaa'lilea  erusaleamukkuk  ko'nduvarugi’rathaiyum  ka'ndu,  avarga'l  thinpa'ndam  vi’rki’ra  naa'laippat’ri  avarga'laith  thidasaadchiyaayk  kadinthuko'ndean.  (negeamiyaa  13:15)

மீனையும்  சகலவித  சரக்குகளையும்  கொண்டுவந்து,  ஓய்வுநாளிலே  யூதா  புத்திரருக்கும்  எருசலேமில்  இருக்கிறவர்களுக்கும்  விற்கிற  சில  தீரியரும்  உள்ளே  குடியிருந்தார்கள்.  (நெகேமியா  13:16)

meenaiyum  sagalavitha  sarakkuga'laiyum  ko'nduvanthu,  oayvunaa'lilea  yoothaa  puththirarukkum  erusaleamil  irukki’ravarga'lukkum  vi’rki’ra  sila  theeriyarum  u'l'lea  kudiyirunthaarga'l.  (negeamiyaa  13:16)

ஆகையால்  நான்  யூதாவின்  பெரியவர்களைக்  கடிந்துகொண்டு:  நீங்கள்  ஓய்வுநாளைப்  பரிசுத்தக்  குலைச்சலாக்குகிற  இந்தப்  பொல்லாத  செய்கையென்ன?  (நெகேமியா  13:17)

aagaiyaal  naan  yoothaavin  periyavarga'laik  kadinthuko'ndu:  neengga'l  oayvunaa'laip  parisuththak  kulaichchalaakkugi’ra  inthap  pollaatha  seygaiyenna?  (negeamiyaa  13:17)

உங்கள்  பிதாக்கள்  இப்படிச்  செய்ததினாலல்லவா,  நமது  தேவன்  நம்மேலும்  இந்த  நகரத்தின்மேலும்  இந்தத்  தீங்கையெல்லாம்  வரப்பண்ணினார்;  நீங்களோவென்றால்  ஓய்வுநாளைப்  பரிசுத்தக்  குலைச்சலாக்குகிறதினால்,  இஸ்ரவேலின்மேலிருக்கிற  உக்கிரத்தை  அதிகரிக்கப்பண்ணுகிறீர்கள்  என்று  அவர்களுக்குச்  சொன்னேன்.  (நெகேமியா  13:18)

ungga'l  pithaakka'l  ippadich  seythathinaalallavaa,  namathu  theavan  nammealum  intha  nagaraththinmealum  inthath  theenggaiyellaam  varappa'n'ninaar;  neengga'loaven’raal  oayvunaa'laip  parisuththak  kulaichchalaakkugi’rathinaal,  isravealinmealirukki’ra  ukkiraththai  athigarikkappa'n'nugi’reerga'l  en’ru  avarga'lukkuch  sonnean.  (negeamiyaa  13:18)

ஆகையால்  ஓய்வுநாளுக்கு  முன்னே  எருசலேமின்  பட்டணவாசலில்,  மாலைமயங்கும்போது,  கதவுகளைப்  பூட்டவும்,  ஓய்வுநாள்  முடியுமட்டும்  அவைகளைத்  திறவாதிருக்கவும்  வேண்டுமென்று  கட்டளையிட்டு,  ஓய்வுநாளிலே  ஒரு  சுமையும்  உள்ளே  வராதபடிக்கு  வாசலண்டையிலே  என்  வேலைக்காரரில்  சிலரை  நிறுத்தினேன்.  (நெகேமியா  13:19)

aagaiyaal  oayvunaa'lukku  munnea  erusaleamin  patta'navaasalil,  maalaimayanggumpoathu,  kathavuga'laip  poottavum,  oayvunaa'l  mudiyumattum  avaiga'laith  thi’ravaathirukkavum  vea'ndumen’ru  katta'laiyittu,  oayvunaa'lilea  oru  sumaiyum  u'l'lea  varaathapadikku  vaasala'ndaiyilea  en  vealaikkaararil  silarai  ni’ruththinean.  (negeamiyaa  13:19)

அதினால்  வர்த்தகரும்,  சகலவித  சரக்குகளை  விற்கிறவர்களும்,  இரண்டொருதரம்  எருசலேமுக்குப்  புறம்பே  இராத்தங்கினார்கள்.  (நெகேமியா  13:20)

athinaal  varththagarum,  sagalavitha  sarakkuga'lai  vi’rki’ravarga'lum,  ira'ndorutharam  erusaleamukkup  pu’rambea  iraaththangginaarga'l.  (negeamiyaa  13:20)

அப்பொழுது  நான்  அவர்களைத்  திடசாட்சியாய்க்  கடிந்துகொண்டு,  நீங்கள்  அலங்கத்தண்டையிலே  இராத்தங்குகிறது  என்ன?  நீங்கள்  மறுபடியும்  இப்படிச்  செய்தால்,  உங்கள்மேல்  கைபோடுவேன்  என்று  அவர்களோடே  சொன்னேன்;  அதுமுதல்  அவர்கள்  ஓய்வுநாளில்  வராதிருந்தார்கள்.  (நெகேமியா  13:21)

appozhuthu  naan  avarga'laith  thidasaadchiyaayk  kadinthuko'ndu,  neengga'l  alanggaththa'ndaiyilea  iraaththanggugi’rathu  enna?  neengga'l  ma’rupadiyum  ippadich  seythaal,  ungga'lmeal  kaipoaduvean  en’ru  avarga'loadea  sonnean;  athumuthal  avarga'l  oayvunaa'lil  varaathirunthaarga'l.  (negeamiyaa  13:21)

ஓய்வுநாளைப்  பரிசுத்தமாக்கும்படிக்கு,  உங்களைச்  சுத்தம்பண்ணிக்கொண்டு  வாசல்களைக்  காக்க  வாருங்கள்  என்று  லேவியருக்கும்  சொன்னேன்.  என்  தேவனே,  இதைக்குறித்து  நீர்  என்னை  நினைத்தருளி,  உம்முடைய  மிகுந்த  கிருபையின்படி  எனக்கு  இரங்குவீராக.  (நெகேமியா  13:22)

oayvunaa'laip  parisuththamaakkumpadikku,  ungga'laich  suththampa'n'nikko'ndu  vaasalga'laik  kaakka  vaarungga'l  en’ru  leaviyarukkum  sonnean.  en  theavanea,  ithaikku’riththu  neer  ennai  ninaiththaru'li,  ummudaiya  miguntha  kirubaiyinpadi  enakku  irangguveeraaga.  (negeamiyaa  13:22)

அஸ்தோத்,  அம்மோன்,  மோவாப்  ஜாதிகளான  ஸ்திரீகளைச்  சேர்த்துக்கொண்ட  சில  யூதரையும்  அந்த  நாட்களில்  கண்டேன்.  (நெகேமியா  13:23)

asthoath,  ammoan,  moavaab  jaathiga'laana  sthireega'laich  searththukko'nda  sila  yootharaiyum  antha  naadka'lil  ka'ndean.  (negeamiyaa  13:23)

அவர்கள்  பிள்ளைகள்  பேசின  பேச்சில்  பாதி  அஸ்தோத்  பாஷையாயிருந்தது;  இவர்கள்  அந்தந்த  ஜாதிகளின்  பாஷையைத்தவிர,  யூதபாஷையைத்  திட்டமாய்ப்  பேச  அறியாதிருந்தார்கள்.  (நெகேமியா  13:24)

avarga'l  pi'l'laiga'l  peasina  peachchil  paathi  asthoath  baashaiyaayirunthathu;  ivarga'l  anthantha  jaathiga'lin  baashaiyaiththavira,  yoothabaashaiyaith  thittamaayp  peasa  a’riyaathirunthaarga'l.  (negeamiyaa  13:24)

அவர்களையும்  நான்  கடிந்துகொண்டு,  அவர்கள்மேல்  வரும்  சாபத்தைக்  கூறி,  அவர்களில்  சிலரை  அடித்து,  மயிரைப்  பிய்த்து:  நீங்கள்  உங்கள்  குமாரத்திகளை  அவர்கள்  குமாரருக்குக்  கொடாமலும்,  அவர்கள்  குமாரத்திகளில்  ஒருவரையும்  உங்கள்  குமாரருக்காகிலும்  உங்களுக்காகிலும்  கொள்ளாமலும்  இருக்கவேண்டுமென்று  அவர்களை  தேவன்மேல்  ஆணையிடப்பண்ணி,  நான்  அவர்களை  நோக்கி:  (நெகேமியா  13:25)

avarga'laiyum  naan  kadinthuko'ndu,  avarga'lmeal  varum  saabaththaik  koo’ri,  avarga'lil  silarai  adiththu,  mayiraip  piyththu:  neengga'l  ungga'l  kumaaraththiga'lai  avarga'l  kumaararukkuk  kodaamalum,  avarga'l  kumaaraththiga'lil  oruvaraiyum  ungga'l  kumaararukkaagilum  ungga'lukkaagilum  ko'l'laamalum  irukkavea'ndumen’ru  avarga'lai  theavanmeal  aa'naiyidappa'n'ni,  naan  avarga'lai  noakki:  (negeamiyaa  13:25)

இஸ்ரவேலின்  ராஜாவாகிய  சாலொமோன்  இதினாலே  பாவஞ்செய்தானல்லவா?  அவனைப்போன்ற  ராஜா  அநேகம்  ஜாதிகளுக்குள்ளே  உண்டாயிருந்ததில்லை;  அவன்  தன்  தேவனாலே  சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்;  தேவன்  அவனை  இஸ்ரவேலனைத்தின்மேலும்  ராஜாவாக  வைத்தார்;  அப்படிப்பட்டவனையும்  மறுஜாதியான  ஸ்திரீகள்  பாவஞ்செய்யப்பண்ணினார்களே.  (நெகேமியா  13:26)

isravealin  raajaavaagiya  saalomoan  ithinaalea  paavagnseythaanallavaa?  avanaippoan’ra  raajaa  aneagam  jaathiga'lukku'l'lea  u'ndaayirunthathillai;  avan  than  theavanaalea  sineagikkappattavanaayirunthaan;  theavan  avanai  isravealanaiththinmealum  raajaavaaga  vaiththaar;  appadippattavanaiyum  ma’rujaathiyaana  sthireega'l  paavagnseyyappa'n'ninaarga'lea.  (negeamiyaa  13:26)

நீங்கள்  மறுஜாதியான  ஸ்திரீகளைச்  சேர்த்துக்கொள்ளுகிறதினால்,  நம்முடைய  தேவனுக்குத்  துரோகிகளாகி,  இந்தப்  பெரிய  பொல்லாப்பையெல்லாம்  செய்யும்படி,  உங்களுக்கு  இடங்கொடுப்போமோ  என்றேன்.  (நெகேமியா  13:27)

neengga'l  ma’rujaathiyaana  sthireega'laich  searththukko'l'lugi’rathinaal,  nammudaiya  theavanukkuth  thuroagiga'laagi,  inthap  periya  pollaappaiyellaam  seyyumpadi,  ungga'lukku  idangkoduppoamoa  en’rean.  (negeamiyaa  13:27)

யொயதாவின்  புத்திரரிலே  பிரதான  ஆசாரியனாகிய  எலியாசிபினுடைய  குமாரன்  ஒருவன்  ஓரோனியனான  சன்பல்லாத்துக்கு  மருமகனானான்;  ஆகையால்  அவனை  என்னைவிட்டுத்  துரத்தினேன்.  (நெகேமியா  13:28)

yoyathaavin  puththirarilea  pirathaana  aasaariyanaagiya  eliyaasibinudaiya  kumaaran  oruvan  oaroaniyanaana  sanballaaththukku  marumaganaanaan;  aagaiyaal  avanai  ennaivittuth  thuraththinean.  (negeamiyaa  13:28)

என்  தேவனே,  அவர்கள்  ஆசாரிய  ஊழியத்தையும்,  ஆசாரிய  ஊழியத்துக்கும்  லேவியருக்கும்  இருக்கிற  உடன்படிக்கையையும்  தீட்டுப்படுத்தினார்கள்  என்று  அவர்களை  நினைத்துக்கொள்ளும்.  (நெகேமியா  13:29)

en  theavanea,  avarga'l  aasaariya  oozhiyaththaiyum,  aasaariya  oozhiyaththukkum  leaviyarukkum  irukki’ra  udanpadikkaiyaiyum  theettuppaduththinaarga'l  en’ru  avarga'lai  ninaiththukko'l'lum.  (negeamiyaa  13:29)

இப்படியே  நான்  மறுஜாதியாரையெல்லாம்  நீக்கி,  ஆசாரியரையும்  லேவியரையும்  சுத்திகரித்து,  அவரவரை  அவர்கள்  வேலையின்  முறைகளில்  நிறுத்தி,  (நெகேமியா  13:30)

ippadiyea  naan  ma’rujaathiyaaraiyellaam  neekki,  aasaariyaraiyum  leaviyaraiyum  suththigariththu,  avaravarai  avarga'l  vealaiyin  mu’raiga'lil  ni’ruththi,  (negeamiyaa  13:30)

குறிக்கப்பட்ட  காலங்களிலே  செலுத்தப்படவேண்டிய  விறகுகாணிக்கையையும்,  முதற்பலன்களையுங்குறித்துத்  திட்டம்பண்ணினேன்.  என்  தேவனே  எனக்கு  நன்மையுண்டாக  என்னை  நினைத்தருளும்.  (நெகேமியா  13:31)

ku’rikkappatta  kaalangga'lilea  seluththappadavea'ndiya  vi’ragukaa'nikkaiyaiyum,  mutha’rpalanga'laiyungku’riththuth  thittampa'n'ninean.  en  theavanea  enakku  nanmaiyu'ndaaga  ennai  ninaiththaru'lum.  (negeamiyaa  13:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!