Wednesday, November 02, 2016

Negeamiyaa 11 | நெகேமியா 11 | Nehemiah 11


ஜனத்தின்  அதிகாரிகள்  எருசலேமிலே  குடியிருந்தார்கள்;  மற்ற  ஜனங்கள்,  தங்களுக்குள்ளே  பத்துப்பேரில்  ஒருவனை  எருசலேமென்னும்  பரிசுத்த  நகரத்திலும்  ஒன்பதுபேரை  மற்றப்  பட்டணங்களிலும்  குடியிருக்கப்பண்ண,  சீட்டுகளைப்  போட்டார்கள்.  (நெகேமியா  11:1)

janaththin  athigaariga'l  erusaleamilea  kudiyirunthaarga'l;  mat’ra  janangga'l,  thangga'lukku'l'lea  paththuppearil  oruvanai  erusaleamennum  parisuththa  nagaraththilum  onbathupearai  mat’rap  patta'nangga'lilum  kudiyirukkappa'n'na,  seettuga'laip  poattaarga'l.  (negeamiyaa  11:1)

ஆனாலும்  எருசலேமிலே  குடியிருக்க  மனப்பூர்வமாய்ச்  சம்மதித்த  மனுஷர்களையெல்லாம்  ஜனங்கள்  வாழ்த்தினார்கள்.  (நெகேமியா  11:2)

aanaalum  erusaleamilea  kudiyirukka  manappoorvamaaych  sammathiththa  manusharga'laiyellaam  janangga'l  vaazhththinaarga'l.  (negeamiyaa  11:2)

யூதாவின்  பட்டணங்களில்  இஸ்ரவேலரும்,  ஆசாரியரும்,  லேவியரும்,  நிதனீமியரும்,  சாலொமோனுடைய  வேலைக்காரரின்  புத்திரரும்,  அவரவர்  தங்கள்  பட்டணங்களிலுள்ள  தங்கள்  காணிபூமியிலே  குடியிருந்தார்கள்;  எருசலேமிலே  குடியிருந்த  நாடுகளின்  தலைவர்  யாரென்றால்:  (நெகேமியா  11:3)

yoothaavin  patta'nangga'lil  isravealarum,  aasaariyarum,  leaviyarum,  nithaneemiyarum,  saalomoanudaiya  vealaikkaararin  puththirarum,  avaravar  thangga'l  patta'nangga'lilu'l'la  thangga'l  kaa'niboomiyilea  kudiyirunthaarga'l;  erusaleamilea  kudiyiruntha  naaduga'lin  thalaivar  yaaren’raal:  (negeamiyaa  11:3)

எருசலேமிலே  யூதா  புத்திரரில்  சிலரும்,  பென்யமீன்  புத்திரரில்  சிலரும்  குடியிருந்தார்கள்;  யூதா  புத்திரரிலே  பேரேசின்  புத்திரருக்குள்  ஒருவனான  மகலாலெயேலின்  குமாரனாகிய  செபதியாவின்  குமாரன்  அமரியாவுக்குப்  பிறந்த  சகரியாவுக்குக்  குமாரனான  உசியாவின்  மகன்  அத்தாயாவும்,  (நெகேமியா  11:4)

erusaleamilea  yoothaa  puththiraril  silarum,  benyameen  puththiraril  silarum  kudiyirunthaarga'l;  yoothaa  puththirarilea  peareasin  puththirarukku'l  oruvanaana  magalaaleyealin  kumaaranaagiya  sepathiyaavin  kumaaran  amariyaavukkup  pi’rantha  sagariyaavukkuk  kumaaranaana  usiyaavin  magan  aththaayaavum,  (negeamiyaa  11:4)

சீலோனின்  குமாரன்  சகரியாவுக்குக்  குமாரனாகிய  யோயாரிபுக்குக்  குமாரனான  அதாயாவுக்குப்  பிறந்த  அசாயாவின்  குமாரன்  கொல்லோசே  பெற்ற  பாருக்கின்  மகன்  மாசெயாவுமே.  (நெகேமியா  11:5)

seeloanin  kumaaran  sagariyaavukkuk  kumaaranaagiya  yoayaaribukkuk  kumaaranaana  athaayaavukkup  pi’rantha  asaayaavin  kumaaran  kolloasea  pet’ra  baarukkin  magan  maaseyaavumea.  (negeamiyaa  11:5)

எருசலேமிலே  குடியிருக்கிற  பேரேசின்  புத்திரரெல்லாரும்  நானூற்று  அறுபத்தெட்டுப்  பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்.  (நெகேமியா  11:6)

erusaleamilea  kudiyirukki’ra  peareasin  puththirarellaarum  naanoot’ru  a’rubaththettup  baraakkiramasaaliga'laayirunthaarga'l.  (negeamiyaa  11:6)

பென்யமீன்  புத்திரரில்  யாரென்றால்,  சல்லு  என்பவன்;  இவன்  மெசுல்லாமுக்கும்,  இவன்  யோவேலுக்கும்,  இவன்  பெதாயாவுக்கும்,  இவன்  கொலாயாவுக்கும்,  இவன்  மாசெயாவுக்கும்,  இவன்  இதியேலுக்கும்,  இவன்  எசாயாவுக்கும்  குமாரனானவன்.  (நெகேமியா  11:7)

benyameen  puththiraril  yaaren’raal,  sallu  enbavan;  ivan  mesullaamukkum,  ivan  yoavealukkum,  ivan  pethaayaavukkum,  ivan  kolaayaavukkum,  ivan  maaseyaavukkum,  ivan  ithiyealukkum,  ivan  esaayaavukkum  kumaaranaanavan.  (negeamiyaa  11:7)

அவனுக்குப்பின்  கப்பாய்,  சல்லாய்  முதலானவர்கள்  தொளாயிரத்து  இருபத்தெட்டுப்பேர்.  (நெகேமியா  11:8)

avanukkuppin  kabbaay,  sallaay  muthalaanavarga'l  tho'laayiraththu  irubaththettuppear.  (negeamiyaa  11:8)

அவர்கள்மேல்  விசாரிப்புக்காரனான  சிக்ரியின்  குமாரன்  யோவேலும்,  பட்டணத்தின்மேல்  இரண்டாவது  விசாரிப்புக்காரனான  செனுவாவின்  குமாரன்  யூதாவுமே.  (நெகேமியா  11:9)

avarga'lmeal  visaarippukkaaranaana  sikriyin  kumaaran  yoavealum,  patta'naththinmeal  ira'ndaavathu  visaarippukkaaranaana  senuvaavin  kumaaran  yoothaavumea.  (negeamiyaa  11:9)

ஆசாரியர்களில்  யோயாரிபின்  குமாரன்  யெதாயா,  யாகின்  என்பவர்களும்,  (நெகேமியா  11:10)

aasaariyarga'lil  yoayaaribin  kumaaran  yethaayaa,  yaakin  enbavarga'lum,  (negeamiyaa  11:10)

அகிதூபின்  குமாரன்  மெராயோத்துக்குப்  பிறந்த  சாதோக்கின்  குமாரன்  மெசுல்லாம்  பெற்ற  இல்க்கியாவின்  மகன்  செராயா  என்னும்  தேவனுடைய  ஆலயத்தின்  விசாரணைக்கர்த்தனும்,  (நெகேமியா  11:11)

agithoobin  kumaaran  meraayoaththukkup  pi’rantha  saathoakkin  kumaaran  mesullaam  pet’ra  ilkkiyaavin  magan  seraayaa  ennum  theavanudaiya  aalayaththin  visaara'naikkarththanum,  (negeamiyaa  11:11)

ஆலயத்திலே  பணிவிடை  செய்கிற  அவர்கள்  சகோதரராகிய  எண்ணூற்று  இருபத்திரண்டுபேரும்,  மல்கியாவின்  குமாரன்  பஸ்கூருக்கு  மகனான  சகரியாவின்  குமாரன்  அம்சிக்குப்  பிறந்த  பெல்லியாவின்  குமாரன்  எரோகாமுக்குப்  பிறந்த  அதாயாவும்,  (நெகேமியா  11:12)

aalayaththilea  pa'nividai  seygi’ra  avarga'l  sagoathararaagiya  e'n'noot’ru  irubaththira'ndupearum,  malkiyaavin  kumaaran  paskoorukku  maganaana  sagariyaavin  kumaaran  amsikkup  pi’rantha  pelliyaavin  kumaaran  eroagaamukkup  pi’rantha  athaayaavum,  (negeamiyaa  11:12)

பிதா  வம்சத்தலைவராகிய  அவனுடைய  சகோதரர்  இருநூற்று  நாற்பத்திரண்டுபேரும்,  இம்மேரின்  குமாரன்  மெசில்லேமோத்தின்  மகனாகிய  அகசாய்க்குப்  பிறந்த  அசரெயேலின்  மகன்  அமாசாயும்,  (நெகேமியா  11:13)

pithaa  vamsaththalaivaraagiya  avanudaiya  sagoatharar  irunoot’ru  naa’rpaththira'ndupearum,  immearin  kumaaran  mesilleamoaththin  maganaagiya  agasaaykkup  pi’rantha  asareyealin  magan  amaasaayum,  (negeamiyaa  11:13)

அவர்களுடைய  சகோதரராகிய  பராக்கிரமசாலிகள்  நூற்று  இருபத்தெட்டுப்பேருமே;  இவர்கள்மேல்  அகெதோலிமின்  குமாரன்  சப்தியேல்  விசாரிப்புக்காரனாயிருந்தான்.  (நெகேமியா  11:14)

avarga'ludaiya  sagoathararaagiya  baraakkiramasaaliga'l  noot’ru  irubaththettuppearumea;  ivarga'lmeal  akethoalimin  kumaaran  sabthiyeal  visaarippukkaaranaayirunthaan.  (negeamiyaa  11:14)

லேவியரிலே  புன்னியின்  குமாரன்  அசபியாவின்  மகனாகிய  அஸ்ரிக்காமின்  குமாரனான  அசூபின்  மகன்  செமாயாவும்,  (நெகேமியா  11:15)

leaviyarilea  bunniyin  kumaaran  asabiyaavin  maganaagiya  asrikkaamin  kumaaranaana  asoobin  magan  semaayaavum,  (negeamiyaa  11:15)

தேவனுடைய  ஆலயத்தின்  வெளிவேலையை  விசாரிக்கிற  லேவியரின்  தலைவரிலே  சபெதாயும்,  யோசபாத்தும்,  (நெகேமியா  11:16)

theavanudaiya  aalayaththin  ve'livealaiyai  visaarikki’ra  leaviyarin  thalaivarilea  sabethaayum,  yoasabaaththum,  (negeamiyaa  11:16)

ஆசாபின்  குமாரன்  சப்தியின்  குமாரனாகிய  மீகாவின்  மகன்  மத்தனியா  ஜெபத்தில்  ஸ்தோத்திரப்பாட்டைத்  துவக்குகிற  தலைவனும்  அவன்  சகோதரரில்  இரண்டாவதான  பக்பூக்கியா  என்னும்  ஒருவனும்,  எதுத்தூனின்  குமாரன்  காலாவின்  மகனாகிய  சமுவாவின்  குமாரன்  அப்தாவுமே.  (நெகேமியா  11:17)

aasaapin  kumaaran  sabthiyin  kumaaranaagiya  meekaavin  magan  maththaniyaa  jebaththil  sthoaththirappaattaith  thuvakkugi’ra  thalaivanum  avan  sagoathararil  ira'ndaavathaana  bakbookkiyaa  ennum  oruvanum,  ethuththoonin  kumaaran  kaalaavin  maganaagiya  samuvaavin  kumaaran  abthaavumea.  (negeamiyaa  11:17)

பரிசுத்த  பட்டணத்திலிருந்த  லேவியர்  எல்லாரும்  இருநூற்று  எண்பத்துநாலுபேர்.  (நெகேமியா  11:18)

parisuththa  patta'naththiliruntha  leaviyar  ellaarum  irunoot’ru  e'nbaththunaalupear.  (negeamiyaa  11:18)

வாசல்  காவலாளர்  அக்கூபும்,  தல்மோனும்,  வாசல்களில்  காவல்காக்கிற  அவர்கள்  சகோதரரும்  நூற்றுஎழுபத்திரண்டுபேர்.  (நெகேமியா  11:19)

vaasal  kaavalaa'lar  akkoobum,  thalmoanum,  vaasalga'lil  kaavalkaakki’ra  avarga'l  sagoathararum  noot’ruezhubaththira'ndupear.  (negeamiyaa  11:19)

மற்ற  இஸ்ரவேலரும்,  ஆசாரியரும்,  லேவியரும்,  யூதாவின்  சகல  பட்டணங்களிலும்,  அவரவர்  தங்கள்  சுதந்தரத்திலிருந்தார்கள்.  (நெகேமியா  11:20)

mat’ra  isravealarum,  aasaariyarum,  leaviyarum,  yoothaavin  sagala  patta'nangga'lilum,  avaravar  thangga'l  suthantharaththilirunthaarga'l.  (negeamiyaa  11:20)

நிதனீமியர்  ஓபேலிலே  குடியிருந்தார்கள்;  அவர்கள்மேல்  சீகாவும்  கிஸ்பாவும்  விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.  (நெகேமியா  11:21)

nithaneemiyar  oapealilea  kudiyirunthaarga'l;  avarga'lmeal  seegaavum  kispaavum  visaarippukkaararaayirunthaarga'l.  (negeamiyaa  11:21)

எருசலேமிலிருக்கிற  லேவியரின்  விசாரிப்புக்காரன்  மீகாவின்  குமாரன்  மத்தனியாவின்  மகனாகிய  அசபியாவுக்குப்  பிறந்த  பானியின்  குமாரன்  ஊசி  என்பவன்  தேவனுடைய  ஆலயத்தின்  ஊழியத்துக்கு  நிற்கிற  பாடகராகிய  ஆசாபின்  குமாரரில்  ஒருவன்.  (நெகேமியா  11:22)

erusaleamilirukki’ra  leaviyarin  visaarippukkaaran  meekaavin  kumaaran  maththaniyaavin  maganaagiya  asabiyaavukkup  pi’rantha  baaniyin  kumaaran  oosi  enbavan  theavanudaiya  aalayaththin  oozhiyaththukku  ni’rki’ra  paadagaraagiya  aasaapin  kumaararil  oruvan.  (negeamiyaa  11:22)

பாடகராகிய  அவர்களுக்காக  அன்றாடகப்படி  கொடுக்கப்படும்படி  ராஜாவினால்  கட்டளையிடப்பட்டிருந்தது.  (நெகேமியா  11:23)

paadagaraagiya  avarga'lukkaaga  an’raadagappadi  kodukkappadumpadi  raajaavinaal  katta'laiyidappattirunthathu.  (negeamiyaa  11:23)

யூதாவின்  குமாரனாகிய  சேராக்கின்  புத்திரரில்  மெசெசாபெயேலின்  குமாரன்  பெத்தகியா  ஜனத்தின்  காரியங்களுக்கெல்லாம்  ராஜாவின்  சமுகத்தில்  நின்றான்.  (நெகேமியா  11:24)

yoothaavin  kumaaranaagiya  searaakkin  puththiraril  mesesaabeyealin  kumaaran  peththakiyaa  janaththin  kaariyangga'lukkellaam  raajaavin  samugaththil  nin’raan.  (negeamiyaa  11:24)

தங்கள்  நாட்டுப்புறங்களான  கிராமங்களில்  இருக்கிறவர்களுக்குள்ளே  யூதாவின்  புத்திரரில்  சிலர்  கீரியாத்அர்பாவிலும்  அதின்  கிராமங்களிலும்,  தீபோனிலும்  அதின்  கிராமங்களிலும்,  எகாப்செயேலிலும்  அதின்  கிராமங்களிலும்,  (நெகேமியா  11:25)

thangga'l  naattuppu’rangga'laana  kiraamangga'lil  irukki’ravarga'lukku'l'lea  yoothaavin  puththiraril  silar  keeriyaatharbaavilum  athin  kiraamangga'lilum,  theeboanilum  athin  kiraamangga'lilum,  egaabseyealilum  athin  kiraamangga'lilum,  (negeamiyaa  11:25)

யெசுவாவிலும்,  மோலாதாகிலும்,  பெத்பெலேதிலும்,  (நெகேமியா  11:26)

yesuvaavilum,  moalaathaakilum,  bethpeleathilum,  (negeamiyaa  11:26)

ஆத்சார்சூகாலிலும்,  பெயெர்செபாவிலும்  அதின்  கிராமங்களிலும்,  (நெகேமியா  11:27)

aathsaarsoogaalilum,  beyersebaavilum  athin  kiraamangga'lilum,  (negeamiyaa  11:27)

சிக்லாகிலும்,  மேகோனாகிலும்  அதின்  கிராமங்களிலும்,  (நெகேமியா  11:28)

siklaakilum,  meakoanaakilum  athin  kiraamangga'lilum,  (negeamiyaa  11:28)

என்ரிம்மோனிலும்,  சாரேயாகிலும்,  யர்மூத்திலும்,  (நெகேமியா  11:29)

entimmoanilum,  saareayaakilum,  yarmooththilum,  (negeamiyaa  11:29)

சானோவாகிலும்,  அதுல்லாமிலும்  அவைகளின்  கிராமங்களிலும்,  லாகீசிலும்  அதின்  நாட்டுப்புறங்களிலும்,  அசெக்காவிலும்  அதின்  கிராமங்களிலும்,  பெயெர்செபாதொடங்கி  இன்னோமின்  பள்ளத்தாக்குமட்டும்  குடியேறினார்கள்.  (நெகேமியா  11:30)

saanoavaakilum,  athullaamilum  avaiga'lin  kiraamangga'lilum,  laageesilum  athin  naattuppu’rangga'lilum,  asekkaavilum  athin  kiraamangga'lilum,  beyersebaathodanggi  innoamin  pa'l'laththaakkumattum  kudiyea’rinaarga'l.  (negeamiyaa  11:30)

கேபாவின்  ஊராராயிருந்த  பென்யமீன்  புத்திரர்,  மிக்மாஸ்,  ஆயா,  பெத்தேல்  ஊர்களிலும்  அதின்  கிராமங்களிலும்,  (நெகேமியா  11:31)

keabaavin  ooraaraayiruntha  benyameen  puththirar,  mikmaas,  aayaa,  beththeal  oorga'lilum  athin  kiraamangga'lilum,  (negeamiyaa  11:31)

ஆனதோத்,  நோப்,  அனனியா,  (நெகேமியா  11:32)

aanathoath,  noab,  ananiyaa,  (negeamiyaa  11:32)

ஆத்சோர்,  ராமா,  கித்தாயிம்,  (நெகேமியா  11:33)

aathsoar,  raamaa,  kiththaayim,  (negeamiyaa  11:33)

ஆதீத்,  செபோயிம்,  நெபலாத்,  (நெகேமியா  11:34)

aatheeth,  seboayim,  nebalaath,  (negeamiyaa  11:34)

லோத்,  ஓனோ  என்னும்  ஊர்களிலும்,  சிற்பாசாரிகளின்  பள்ளத்தாக்கிலும்  குடியிருந்தார்கள்.  (நெகேமியா  11:35)

loath,  oanoa  ennum  oorga'lilum,  si’rpaasaariga'lin  pa'l'laththaakkilum  kudiyirunthaarga'l.  (negeamiyaa  11:35)

லேவியரிலே  சில  வகுப்பார்  யூதாவிலும்,  சிலர்  பென்யமீனிலும்  இருந்தார்கள்.  (நெகேமியா  11:36)

leaviyarilea  sila  vaguppaar  yoothaavilum,  silar  benyameenilum  irunthaarga'l.  (negeamiyaa  11:36)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!