Wednesday, November 02, 2016

Negeamiyaa 1 | நெகேமியா 1 | Nehemiah 1

அகலியாவின்  குமாரனாகிய  நெகேமியாவின்  நடபடிகள்:  இருபதாம்  வருஷம்  கிஸ்லேயுமாதத்தில்  நான்  சூசான்  என்னும்  அரமனையில்  இருக்கும்போது  சம்பவித்தது  என்னவென்றால்,  (நெகேமியா  1:1)

agaliyaavin  kumaaranaagiya  negeamiyaavin  nadapadiga'l:  irubathaam  varusham  kisleayumaathaththil  naan  soosaan  ennum  aramanaiyil  irukkumpoathu  sambaviththathu  ennaven’raal,  (negeamiyaa  1:1)

என்  சகோதரரில்  ஒருவனாகிய  ஆனானியும்,  வேறே  சில  மனுஷரும்  யூதாவிலிருந்து  வந்தார்கள்;  அவர்களிடத்தில்  நான்  சிறையிருப்பில்  மீந்து  தப்பின  யூதரின்  செய்தியையும்,  எருசலேமின்  செய்தியையும்  விசாரித்தேன்.  (நெகேமியா  1:2)

en  sagoathararil  oruvanaagiya  aanaaniyum,  vea’rea  sila  manusharum  yoothaavilirunthu  vanthaarga'l;  avarga'lidaththil  naan  si’raiyiruppil  meenthu  thappina  yootharin  seythiyaiyum,  erusaleamin  seythiyaiyum  visaariththean.  (negeamiyaa  1:2)

அதற்கு  அவர்கள்:  சிறையிருப்பில்  மீந்திருக்கிறவர்கள்  அந்தத்  தேசத்திலே  மகா  தீங்கையும்  நிந்தையையும்  அநுபவிக்கிறார்கள்;  எருசலேமின்  அலங்கம்  இடிபட்டதும்,  அதின்  வாசல்கள்  அக்கினியால்  சுட்டெரிக்கப்பட்டதுமாய்க்  கிடக்கிறது  என்றார்கள்.  (நெகேமியா  1:3)

atha’rku  avarga'l:  si’raiyiruppil  meenthirukki’ravarga'l  anthath  theasaththilea  mahaa  theenggaiyum  ninthaiyaiyum  anubavikki’raarga'l;  erusaleamin  alanggam  idipattathum,  athin  vaasalga'l  akkiniyaal  sutterikkappattathumaayk  kidakki’rathu  en’raarga'l.  (negeamiyaa  1:3)

இந்த  வார்த்தைகளைக்  கேட்டபோது  நான்  உட்கார்ந்து  அழுது,  சில  நாளாய்த்  துக்கித்து,  உபவாசித்து,  மன்றாடி,  பரலோகத்தின்  தேவனை  நோக்கி:  (நெகேமியா  1:4)

intha  vaarththaiga'laik  keattapoathu  naan  udkaarnthu  azhuthu,  sila  naa'laayth  thukkiththu,  ubavaasiththu,  man’raadi,  paraloagaththin  theavanai  noakki:  (negeamiyaa  1:4)

பரலோகத்தின்  தேவனாகிய  கர்த்தாவே,  உம்மில்  அன்புகூர்ந்து,  உம்முடைய  கற்பனைகளைக்  கைக்கொள்ளுகிறவர்களுக்கு,  உடன்படிக்கையையும்  கிருபையையும்  காக்கிற  மகத்துவமும்  பயங்கரமுமான  தேவனே,  (நெகேமியா  1:5)

paraloagaththin  theavanaagiya  karththaavea,  ummil  anbukoornthu,  ummudaiya  ka’rpanaiga'laik  kaikko'l'lugi’ravarga'lukku,  udanpadikkaiyaiyum  kirubaiyaiyum  kaakki’ra  magaththuvamum  bayanggaramumaana  theavanea,  (negeamiyaa  1:5)

உமது  அடியாராகிய  இஸ்ரவேல்  புத்திரருக்காக  இன்று  இரவும்பகலும்  உமக்கு  முன்பாக  மன்றாடி,  இஸ்ரவேல்  புத்திரராகிய  நாங்கள்  உமக்கு  விரோதமாகச்  செய்த  பாவங்களை  அறிக்கையிடுகிற  அடியேனுடைய  ஜெபத்தைக்  கேட்கிறதற்கு,  உம்முடைய  செவி  கவனித்தும்,  உம்முடைய  கண்கள்  திறந்தும்  இருப்பதாக;  நானும்  என்  தகப்பன்  வீட்டாரும்  பாவஞ்செய்தோம்.  (நெகேமியா  1:6)

umathu  adiyaaraagiya  israveal  puththirarukkaaga  in’ru  iravumpagalum  umakku  munbaaga  man’raadi,  israveal  puththiraraagiya  naangga'l  umakku  viroathamaagach  seytha  paavangga'lai  a’rikkaiyidugi’ra  adiyeanudaiya  jebaththaik  keadki’ratha’rku,  ummudaiya  sevi  kavaniththum,  ummudaiya  ka'nga'l  thi’ranthum  iruppathaaga;  naanum  en  thagappan  veettaarum  paavagnseythoam.  (negeamiyaa  1:6)

நாங்கள்  உமக்கு  முன்பாக  மிகவும்  கெட்டவர்களாய்  நடந்தோம்;  நீர்  உம்முடைய  தாசனாகிய  மோசேக்குக்  கற்பித்த  கற்பனைகளையும்,  கட்டளைகளையும்,  நியாயங்களையும்  கைக்கொள்ளாதேபோனோம்.  (நெகேமியா  1:7)

naangga'l  umakku  munbaaga  migavum  kettavarga'laay  nadanthoam;  neer  ummudaiya  thaasanaagiya  moaseakkuk  ka’rpiththa  ka’rpanaiga'laiyum,  katta'laiga'laiyum,  niyaayangga'laiyum  kaikko'l'laatheapoanoam.  (negeamiyaa  1:7)

நீங்கள்  கட்டளையை  மீறினால்,  நான்  உங்களை  ஜாதிகளுக்குள்ளே  சிதறடிப்பேன்  என்றும்,  (நெகேமியா  1:8)

neengga'l  katta'laiyai  mee’rinaal,  naan  ungga'lai  jaathiga'lukku'l'lea  sitha’radippean  en’rum,  (negeamiyaa  1:8)

நீங்கள்  என்னிடத்தில்  திரும்பி,  என்  கற்பனைகளைக்  கைக்கொண்டு,  அவைகளின்படி  செய்வீர்களானால்,  உங்களிலே  தள்ளுண்டு  போனவர்கள்  வானத்தின்  கடையாந்தரத்தில்  இருந்தாலும்,  நான்  அங்கேயிருந்து  அவர்களைச்  சேர்த்து,  என்  நாமம்  விளங்கும்படி  நான்  தெரிந்துகொண்ட  ஸ்தலத்துக்கு  அவர்களைக்  கொண்டுவருவேன்  என்றும்  தேவரீர்  உம்முடைய  தாசனாகிய  மோசேக்குக்  கட்டளையிட்ட  வார்த்தையை  நினைத்தருளும்.  (நெகேமியா  1:9)

neengga'l  ennidaththil  thirumbi,  en  ka’rpanaiga'laik  kaikko'ndu,  avaiga'linpadi  seyveerga'laanaal,  ungga'lilea  tha'l'lu'ndu  poanavarga'l  vaanaththin  kadaiyaantharaththil  irunthaalum,  naan  anggeayirunthu  avarga'laich  searththu,  en  naamam  vi'langgumpadi  naan  therinthuko'nda  sthalaththukku  avarga'laik  ko'nduvaruvean  en’rum  theavareer  ummudaiya  thaasanaagiya  moaseakkuk  katta'laiyitta  vaarththaiyai  ninaiththaru'lum.  (negeamiyaa  1:9)

தேவரீர்  உமது  மகா  வல்லமையினாலும்,  உமது  பலத்த  கரத்தினாலும்,  மீட்டுக்கொண்ட  உமது  அடியாரும்  உமது  ஜனங்களும்  இவர்கள்தானே.  (நெகேமியா  1:10)

theavareer  umathu  mahaa  vallamaiyinaalum,  umathu  balaththa  karaththinaalum,  meettukko'nda  umathu  adiyaarum  umathu  janangga'lum  ivarga'lthaanea.  (negeamiyaa  1:10)

ஆண்டவரே,  உமது  அடியானின்  ஜெபத்தையும்,  உமது  நாமத்துக்குப்  பயப்படவேண்டும்  என்று  விரும்புகிற  உமது  அடியாரின்  ஜெபத்தையும்  உமது  செவிகள்  கவனித்திருப்பதாக;  இன்றைக்கு  உமது  அடியானுக்குக்  காரியத்தைக்  கைகூடி  வரப்பண்ணி,  இந்த  மனுஷனுக்கு  முன்பாக  எனக்கு  இரக்கம்  கிடைக்கப்பண்ணியருளும்  என்று  பிரார்த்தித்தேன்.  நான்  ராஜாவுக்குப்  பானபாத்திரக்காரனாயிருந்தேன்.  (நெகேமியா  1:11)

aa'ndavarea,  umathu  adiyaanin  jebaththaiyum,  umathu  naamaththukkup  bayappadavea'ndum  en’ru  virumbugi’ra  umathu  adiyaarin  jebaththaiyum  umathu  seviga'l  kavaniththiruppathaaga;  in’raikku  umathu  adiyaanukkuk  kaariyaththaik  kaikoodi  varappa'n'ni,  intha  manushanukku  munbaaga  enakku  irakkam  kidaikkappa'n'niyaru'lum  en’ru  piraarththiththean.  naan  raajaavukkup  baanapaaththirakkaaranaayirunthean.  (negeamiyaa  1:11)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!