Thursday, November 03, 2016

Leaviyaraagamam 9 | லேவியராகமம் 9 | Leviticus 9

எட்டாம்  நாளிலே  மோசே  ஆரோனையும்  அவன்  குமாரரையும்  இஸ்ரவேலின்  மூப்பரையும்  அழைத்து,  (லேவியராகமம்  9:1)

ettaam  naa'lilea  moasea  aaroanaiyum  avan  kumaararaiyum  isravealin  moopparaiyum  azhaiththu,  (leaviyaraagamam  9:1)

ஆரோனை  நோக்கி:  நீ  பாவநிவாரணபலியாகப்  பழுதற்ற  ஒரு  கன்றுக்குட்டியையும்,  சர்வாங்க  தகனபலியாகப்  பழுதற்ற  ஒரு  ஆட்டுக்கடாவையும்  தெரிந்துகொண்டு,  கர்த்தருடைய  சந்நிதியில்  பலியிடக்கடவாய்.  (லேவியராகமம்  9:2)

aaroanai  noakki:  nee  paavanivaara'nabaliyaagap  pazhuthat’ra  oru  kan’rukkuttiyaiyum,  sarvaangga  thaganabaliyaagap  pazhuthat’ra  oru  aattukkadaavaiyum  therinthuko'ndu,  karththarudaiya  sannithiyil  baliyidakkadavaay.  (leaviyaraagamam  9:2)

மேலும்  இஸ்ரவேல்  புத்திரரை  நோக்கி:  கர்த்தருடைய  சந்நிதியில்  பலியிடும்படிக்கு,  நீங்கள்  பாவநிவாரணபலியாகப்  பழுதற்ற  ஒரு  வெள்ளாட்டுக்கடாவையும்,  சர்வாங்க  தகனபலியாக  ஒரு  வயதான  பழுதற்ற  ஒரு  கன்றுக்குட்டியையும்,  ஒரு  ஆட்டுக்குட்டியையும்,  (லேவியராகமம்  9:3)

mealum  israveal  puththirarai  noakki:  karththarudaiya  sannithiyil  baliyidumpadikku,  neengga'l  paavanivaara'nabaliyaagap  pazhuthat’ra  oru  ve'l'laattukkadaavaiyum,  sarvaangga  thaganabaliyaaga  oru  vayathaana  pazhuthat’ra  oru  kan’rukkuttiyaiyum,  oru  aattukkuttiyaiyum,  (leaviyaraagamam  9:3)

சமாதானபலிகளாக  ஒரு  காளையையும்,  ஒரு  ஆட்டுக்கடாவையும்,  எண்ணெயிலே  பிசைந்த  போஜனபலியையும்  கொண்டுவாருங்கள்;  இன்று  கர்த்தர்  உங்களுக்குத்  தரிசனமாவார்  என்று  சொல்  என்றான்.  (லேவியராகமம்  9:4)

samaathaanabaliga'laaga  oru  kaa'laiyaiyum,  oru  aattukkadaavaiyum,  e'n'neyilea  pisaintha  poajanabaliyaiyum  ko'nduvaarungga'l;  in’ru  karththar  ungga'lukkuth  tharisanamaavaar  en’ru  sol  en’raan.  (leaviyaraagamam  9:4)

மோசே  கட்டளையிட்டவைகளை  அவர்கள்  ஆசரிப்புக்  கூடாரத்துக்கு  முன்பாகக்  கொண்டுவந்தார்கள்.  சபையார்  எல்லாரும்  சேர்ந்து,  கர்த்தருடைய  சந்நிதியில்  நின்றார்கள்.  (லேவியராகமம்  9:5)

moasea  katta'laiyittavaiga'lai  avarga'l  aasarippuk  koodaaraththukku  munbaagak  ko'nduvanthaarga'l.  sabaiyaar  ellaarum  searnthu,  karththarudaiya  sannithiyil  nin’raarga'l.  (leaviyaraagamam  9:5)

அப்பொழுது  மோசே:  கர்த்தர்  கட்டளையிட்ட  இந்தக்  காரியத்தைச்  செய்யுங்கள்;  கர்த்தருடைய  மகிமை  உங்களுக்குக்  காணப்படும்  என்றான்.  (லேவியராகமம்  9:6)

appozhuthu  moasea:  karththar  katta'laiyitta  inthak  kaariyaththaich  seyyungga'l;  karththarudaiya  magimai  ungga'lukkuk  kaa'nappadum  en’raan.  (leaviyaraagamam  9:6)

மோசே  ஆரோனை  நோக்கி:  நீ  பலிபீடத்தண்டையில்  சேர்ந்து,  கர்த்தர்  கட்டளையிட்டபடியே,  உன்  பாவநிவாரண  பலியையும்  உன்  சர்வாங்க  தகனபலியையும்  செலுத்தி,  உனக்காகவும்  ஜனங்களுக்காகவும்  பாவநிவிர்த்தி  செய்து,  ஜனங்களுடைய  பலியையும்  செலுத்தி,  அவர்களுக்காகவும்  பாவநிவிர்த்தி  செய்  என்றான்.  (லேவியராகமம்  9:7)

moasea  aaroanai  noakki:  nee  balipeedaththa'ndaiyil  searnthu,  karththar  katta'laiyittapadiyea,  un  paavanivaara'na  baliyaiyum  un  sarvaangga  thaganabaliyaiyum  seluththi,  unakkaagavum  janangga'lukkaagavum  paavanivirththi  seythu,  janangga'ludaiya  baliyaiyum  seluththi,  avarga'lukkaagavum  paavanivirththi  sey  en’raan.  (leaviyaraagamam  9:7)

அப்பொழுது  ஆரோன்  பலிபீடத்தண்டையில்  சேர்ந்து,  தன்  பாவநிவாரணபலியாகிய  கன்றுக்குட்டியைக்  கொன்றான்.  (லேவியராகமம்  9:8)

appozhuthu  aaroan  balipeedaththa'ndaiyil  searnthu,  than  paavanivaara'nabaliyaagiya  kan’rukkuttiyaik  kon’raan.  (leaviyaraagamam  9:8)

ஆரோனின்  குமாரர்  அதின்  இரத்தத்தை  அவனிடத்தில்  கொண்டுவந்தார்கள்;  அவன்  தன்  விரலை  அந்த  இரத்தத்தில்  தோய்த்து,  பலிபீடத்தின்  கொம்புகளின்மேல்  பூசி,  மற்ற  இரத்தத்தைப்  பலிபீடத்தின்  அடியிலே  ஊற்றி,  (லேவியராகமம்  9:9)

aaroanin  kumaarar  athin  iraththaththai  avanidaththil  ko'nduvanthaarga'l;  avan  than  viralai  antha  iraththaththil  thoayththu,  balipeedaththin  kombuga'linmeal  poosi,  mat’ra  iraththaththaip  balipeedaththin  adiyilea  oot’ri,  (leaviyaraagamam  9:9)

பாவநிவாரணபலியின்  கொழுப்பையும்,  குண்டிக்காய்களையும்,  கல்லீரலில்  எடுத்த  ஜவ்வையும்,  கர்த்தர்  மோசேக்குக்  கட்டளையிட்டபடியே,  பலிபீடத்தின்மேல்  தகனித்து,  (லேவியராகமம்  9:10)

paavanivaara'nabaliyin  kozhuppaiyum,  ku'ndikkaayga'laiyum,  kalleeralil  eduththa  javvaiyum,  karththar  moaseakkuk  katta'laiyittapadiyea,  balipeedaththinmeal  thaganiththu,  (leaviyaraagamam  9:10)

மாம்சத்தையும்  தோலையும்  பாளயத்துக்குப்  புறம்பே  அக்கினியிலே  சுட்டெரித்தான்.  (லேவியராகமம்  9:11)

maamsaththaiyum  thoalaiyum  paa'layaththukkup  pu’rambea  akkiniyilea  sutteriththaan.  (leaviyaraagamam  9:11)

பின்பு  சர்வாங்க  தகனபலியையும்  கொன்றான்;  ஆரோனின்  குமாரர்  அதின்  இரத்தத்தை  அவனிடத்தில்  கொண்டுவந்தார்கள்;  அதை  அவன்  பலிபீடத்தின்மேல்  சுற்றிலும்  தெளித்தான்.  (லேவியராகமம்  9:12)

pinbu  sarvaangga  thaganabaliyaiyum  kon’raan;  aaroanin  kumaarar  athin  iraththaththai  avanidaththil  ko'nduvanthaarga'l;  athai  avan  balipeedaththinmeal  sut’rilum  the'liththaan.  (leaviyaraagamam  9:12)

சர்வாங்க  தகனபலியின்  துண்டங்களையும்  தலையையும்  அவனிடத்தில்  கொண்டுவந்தார்கள்;  அவன்  அவைகளைப்  பலிபீடத்தின்மேல்  தகனித்து,  (லேவியராகமம்  9:13)

sarvaangga  thaganabaliyin  thu'ndangga'laiyum  thalaiyaiyum  avanidaththil  ko'nduvanthaarga'l;  avan  avaiga'laip  balipeedaththinmeal  thaganiththu,  (leaviyaraagamam  9:13)

குடல்களையும்  தொடைகளையும்  கழுவி,  பலிபீடத்தின்மேல்  இருந்த  சர்வாங்க  தகனபலியின்மேல்  தகனித்தான்.  (லேவியராகமம்  9:14)

kudalga'laiyum  thodaiga'laiyum  kazhuvi,  balipeedaththinmeal  iruntha  sarvaangga  thaganabaliyinmeal  thaganiththaan.  (leaviyaraagamam  9:14)

பின்பு  அவன்  ஜனங்களின்  பலியைக்  கொண்டுவந்து,  ஜனங்களின்  பாவநிவிர்த்திக்குரிய  வெள்ளாட்டுக்கடாவைக்  கொன்று,  முந்தினதைப்  பலியிட்டதுபோல,  அதைப்  பாவநிவாரணபலியாக்கி,  (லேவியராகமம்  9:15)

pinbu  avan  janangga'lin  baliyaik  ko'nduvanthu,  janangga'lin  paavanivirththikkuriya  ve'l'laattukkadaavaik  kon’ru,  munthinathaip  baliyittathupoala,  athaip  paavanivaara'nabaliyaakki,  (leaviyaraagamam  9:15)

சர்வாங்க  தகனபலியையும்  கொண்டுவந்து,  நியமத்தின்படி  அதைப்  பலியிட்டு,  (லேவியராகமம்  9:16)

sarvaangga  thaganabaliyaiyum  ko'nduvanthu,  niyamaththinpadi  athaip  baliyittu,  (leaviyaraagamam  9:16)

போஜனபலியையும்  கொண்டுவந்து,  அதில்  கைநிறைய  எடுத்து,  அதைக்  காலையில்  செலுத்தும்  சர்வாங்க  தகனபலியுடனே  பலிபீடத்தின்மேல்  தகனித்தான்.  (லேவியராகமம்  9:17)

poajanabaliyaiyum  ko'nduvanthu,  athil  kaini’raiya  eduththu,  athaik  kaalaiyil  seluththum  sarvaangga  thaganabaliyudanea  balipeedaththinmeal  thaganiththaan.  (leaviyaraagamam  9:17)

பின்பு  ஜனங்களின்  சமாதானபலிகளாகிய  காளையையும்  ஆட்டுக்கடாவையும்  கொன்றான்;  ஆரோனின்  குமாரர்  அதின்  இரத்தத்தை  அவனிடத்தில்  கொண்டுவந்தார்கள்;  அவன்  அதைப்  பலிபீடத்தின்மேல்  சுற்றிலும்  தெளித்து,  (லேவியராகமம்  9:18)

pinbu  janangga'lin  samaathaanabaliga'laagiya  kaa'laiyaiyum  aattukkadaavaiyum  kon’raan;  aaroanin  kumaarar  athin  iraththaththai  avanidaththil  ko'nduvanthaarga'l;  avan  athaip  balipeedaththinmeal  sut’rilum  the'liththu,  (leaviyaraagamam  9:18)

காளையிலும்  ஆட்டுக்கடாவிலும்  எடுத்த  கொழுப்பையும்,  வாலையும்,  குடல்களை  மூடிய  ஜவ்வையும்,  குண்டிக்காய்களையும்,  கல்லீரலின்மேல்  இருந்த  ஜவ்வையும்  கொண்டுவந்து,  (லேவியராகமம்  9:19)

kaa'laiyilum  aattukkadaavilum  eduththa  kozhuppaiyum,  vaalaiyum,  kudalga'lai  moodiya  javvaiyum,  ku'ndikkaayga'laiyum,  kalleeralinmeal  iruntha  javvaiyum  ko'nduvanthu,  (leaviyaraagamam  9:19)

கொழுப்பை  மார்க்கண்டங்களின்மேல்  வைத்தார்கள்;  அந்தக்  கொழுப்பைப்  பலிபீடத்தின்மேல்  தகனித்தான்.  (லேவியராகமம்  9:20)

kozhuppai  maarkka'ndangga'linmeal  vaiththaarga'l;  anthak  kozhuppaip  balipeedaththinmeal  thaganiththaan.  (leaviyaraagamam  9:20)

மார்க்கண்டங்களையும்  வலது  முன்னந்தொடையையும்,  மோசே  கட்டளையிட்டபடியே,  ஆரோன்  கர்த்தருடைய  சந்நிதியில்  அசைவாட்டும்  பலியாக  அசைவாட்டினான்.  (லேவியராகமம்  9:21)

maarkka'ndangga'laiyum  valathu  munnanthodaiyaiyum,  moasea  katta'laiyittapadiyea,  aaroan  karththarudaiya  sannithiyil  asaivaattum  baliyaaga  asaivaattinaan.  (leaviyaraagamam  9:21)

பின்பு  ஆரோன்  ஜனங்களுக்கு  நேராகத்  தன்  கைகளை  உயர்த்தி,  அவர்களை  ஆசீர்வதித்து,  தான்  பாவநிவாரணபலியையும்,  சர்வாங்க  தகனபலியையும்,  சமாதான  பலிகளையும்  செலுத்தின  இடத்திலிருந்து  இறங்கினான்.  (லேவியராகமம்  9:22)

pinbu  aaroan  janangga'lukku  nearaagath  than  kaiga'lai  uyarththi,  avarga'lai  aaseervathiththu,  thaan  paavanivaara'nabaliyaiyum,  sarvaangga  thaganabaliyaiyum,  samaathaana  baliga'laiyum  seluththina  idaththilirunthu  i’rangginaan.  (leaviyaraagamam  9:22)

பின்பு  மோசேயும்  ஆரோனும்  ஆசரிப்புக்  கூடாரத்துக்குள்  பிரவேசித்து,  வெளியே  வந்து,  ஜனங்களை  ஆசீர்வதித்தார்கள்;  அப்பொழுது  கர்த்தருடைய  மகிமை  சகல  ஜனங்களுக்கும்  காணப்பட்டது.  (லேவியராகமம்  9:23)

pinbu  moaseayum  aaroanum  aasarippuk  koodaaraththukku'l  piraveasiththu,  ve'liyea  vanthu,  janangga'lai  aaseervathiththaarga'l;  appozhuthu  karththarudaiya  magimai  sagala  janangga'lukkum  kaa'nappattathu.  (leaviyaraagamam  9:23)

அன்றியும்  கர்த்தருடைய  சந்நிதியிலிருந்து  அக்கினி  புறப்பட்டு,  பலிபீடத்தின்மேல்  இருந்த  சர்வாங்க  தகனபலியையும்  கொழுப்பையும்  எரித்துவிட்டது;  ஜனங்களெல்லாரும்  அதைக்  கண்டபோது  ஆரவாரித்து  முகங்குப்புற  விழுந்தார்கள்.  (லேவியராகமம்  9:24)

an’riyum  karththarudaiya  sannithiyilirunthu  akkini  pu’rappattu,  balipeedaththinmeal  iruntha  sarvaangga  thaganabaliyaiyum  kozhuppaiyum  eriththuvittathu;  janangga'lellaarum  athaik  ka'ndapoathu  aaravaariththu  mugangkuppu’ra  vizhunthaarga'l.  (leaviyaraagamam  9:24)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!