Thursday, November 03, 2016

Leaviyaraagamam 8 | லேவியராகமம் 8 | Leviticus 8


கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  8:1)

karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  8:1)

நீ  ஆரோனையும்  அவன்  குமாரரையும்  வரவழைத்து,  வஸ்திரங்களையும்,  அபிஷேகதைலத்தையும்,  பாவநிவாரணபலிக்கு  ஒரு  காளையையும்,  இரண்டு  ஆட்டுக்கடாக்களையும்,  ஒரு  கூடையில்  புளிப்பில்லா  அப்பங்களையும்  கொண்டுவந்து,  (லேவியராகமம்  8:2)

nee  aaroanaiyum  avan  kumaararaiyum  varavazhaiththu,  vasthirangga'laiyum,  abisheagathailaththaiyum,  paavanivaara'nabalikku  oru  kaa'laiyaiyum,  ira'ndu  aattukkadaakka'laiyum,  oru  koodaiyil  pu'lippillaa  appangga'laiyum  ko'nduvanthu,  (leaviyaraagamam  8:2)

சபையையெல்லாம்  ஆசரிப்புக்  கூடாரவாசலுக்கு  முன்பாகக்  கூடிவரச்செய்  என்றார்.  (லேவியராகமம்  8:3)

sabaiyaiyellaam  aasarippuk  koodaaravaasalukku  munbaagak  koodivarachsey  en’raar.  (leaviyaraagamam  8:3)

கர்த்தர்  தனக்குக்  கட்டளையிட்டபடியே  மோசே  செய்தான்;  சபை  ஆசரிப்புக்  கூடாரவாசலுக்கு  முன்பாகக்  கூடின  போது,  (லேவியராகமம்  8:4)

karththar  thanakkuk  katta'laiyittapadiyea  moasea  seythaan;  sabai  aasarippuk  koodaaravaasalukku  munbaagak  koodina  poathu,  (leaviyaraagamam  8:4)

மோசே  சபையை  நோக்கி:  செய்யும்படி  கர்த்தர்  கட்டளையிட்ட  காரியம்  இதுவே  என்று  சொல்லி,  (லேவியராகமம்  8:5)

moasea  sabaiyai  noakki:  seyyumpadi  karththar  katta'laiyitta  kaariyam  ithuvea  en’ru  solli,  (leaviyaraagamam  8:5)

கர்த்தர்  தனக்குக்  கட்டளையிட்டபடியே,  மோசே  ஆரோனையும்  அவன்  குமாரரையும்  வரவழைத்து,  அவர்களை  ஜலத்தினால்  ஸ்நானம்பண்ணுவித்து,  (லேவியராகமம்  8:6)

karththar  thanakkuk  katta'laiyittapadiyea,  moasea  aaroanaiyum  avan  kumaararaiyum  varavazhaiththu,  avarga'lai  jalaththinaal  snaanampa'n'nuviththu,  (leaviyaraagamam  8:6)

அவனுக்கு  உள்ளங்கியைப்  போட்டு,  இடைக்கச்சையைக்  கட்டி,  மேலங்கியை  உடுத்தி,  ஏபோத்தைத்  தரித்து,  அதின்மேல்  ஏபோத்தின்  விசித்திரமான  கச்சையைக்  கட்டி,  (லேவியராகமம்  8:7)

avanukku  u'l'langgiyaip  poattu,  idaikkachchaiyaik  katti,  mealanggiyai  uduththi,  eaboaththaith  thariththu,  athinmeal  eaboaththin  visiththiramaana  kachchaiyaik  katti,  (leaviyaraagamam  8:7)

அவனுக்கு  மார்ப்பதக்கத்தை  அணிந்து,  மார்ப்பதக்கத்திலே  ஊரீம்  தும்மீம்  என்பவைகளையும்  வைத்து,  (லேவியராகமம்  8:8)

avanukku  maarppathakkaththai  a'ninthu,  maarppathakkaththilea  ooreem  thummeem  enbavaiga'laiyum  vaiththu,  (leaviyaraagamam  8:8)

அவன்  தலையிலே  பாகையைத்  தரித்து,  பாகையின்மேல்  அவன்  நெற்றியிலே  பரிசுத்த  கிரீடம்  என்னும்  பொற்பட்டத்தைக்  கட்டினான்.  (லேவியராகமம்  8:9)

avan  thalaiyilea  paagaiyaith  thariththu,  paagaiyinmeal  avan  net’riyilea  parisuththa  kireedam  ennum  po’rpattaththaik  kattinaan.  (leaviyaraagamam  8:9)

பின்பு  மோசே,  அபிஷேகதைலத்தை  எடுத்து,  வாசஸ்தலத்தையும்  அதிலுள்ள  யாவற்றையும்  அபிஷேகம்பண்ணி,  பரிசுத்தப்படுத்தி,  (லேவியராகமம்  8:10)

pinbu  moasea,  abisheagathailaththai  eduththu,  vaasasthalaththaiyum  athilu'l'la  yaavat’raiyum  abisheagampa'n'ni,  parisuththappaduththi,  (leaviyaraagamam  8:10)

அதில்  கொஞ்சம்  எடுத்து,  பலிபீடத்தின்மேல்  ஏழுதரம்  தெளித்து,  பலிபீடத்தையும்  அதின்  சகல  பணிமுட்டுகளையும்,  தொட்டியையும்  அதின்  பாதத்தையும்  பரிசுத்தப்படுத்தும்படிக்கு  அபிஷேகம்பண்ணி,  (லேவியராகமம்  8:11)

athil  kogncham  eduththu,  balipeedaththinmeal  eazhutharam  the'liththu,  balipeedaththaiyum  athin  sagala  pa'nimuttuga'laiyum,  thottiyaiyum  athin  paathaththaiyum  parisuththappaduththumpadikku  abisheagampa'n'ni,  (leaviyaraagamam  8:11)

அபிஷேகதைலத்திலே  கொஞ்சம்  ஆரோனுடைய  சிரசின்மேல்  வார்த்து,  அவனைப்  பரிசுத்தப்படுத்தும்படி  அபிஷேகம்பண்ணினான்.  (லேவியராகமம்  8:12)

abisheagathailaththilea  kogncham  aaroanudaiya  sirasinmeal  vaarththu,  avanaip  parisuththappaduththumpadi  abisheagampa'n'ninaan.  (leaviyaraagamam  8:12)

பின்பு  மோசே,  கர்த்தர்  தனக்குக்  கட்டளையிட்டபடியே,  ஆரோனின்  குமாரரை  வரவழைத்து,  அவர்களுக்கு  அங்கிகளை  உடுத்தி,  இடைக்கச்சைகளைக்  கட்டி,  குல்லாக்களைத்  தரித்து,  (லேவியராகமம்  8:13)

pinbu  moasea,  karththar  thanakkuk  katta'laiyittapadiyea,  aaroanin  kumaararai  varavazhaiththu,  avarga'lukku  anggiga'lai  uduththi,  idaikkachchaiga'laik  katti,  kullaakka'laith  thariththu,  (leaviyaraagamam  8:13)

பாவநிவாரண  பலிக்கான  காளையைக்  கொண்டுவந்தான்;  அதினுடைய  தலையின்மேல்  ஆரோனும்  அவன்  குமாரரும்  தங்கள்  கைகளை  வைத்தார்கள்;  (லேவியராகமம்  8:14)

paavanivaara'na  balikkaana  kaa'laiyaik  ko'nduvanthaan;  athinudaiya  thalaiyinmeal  aaroanum  avan  kumaararum  thangga'l  kaiga'lai  vaiththaarga'l;  (leaviyaraagamam  8:14)

அப்பொழுது  அது  கொல்லப்பட்டது;  மோசே  அதின்  இரத்தத்தை  எடுத்து,  தன்  விரலினால்  பலிபீடத்தின்  கொம்புகளின்மேல்  சுற்றிலும்  பூசி,  பலிபீடத்திற்காகப்  பிராயச்சித்தஞ்செய்து,  மற்ற  இரத்தத்தைப்  பலிபீடத்தின்  அடியில்  ஊற்றிவிட்டு,  அதின்மேல்  பாவநிவிர்த்தி  செய்யும்பொருட்டு  அதைப்  பரிசுத்தப்படுத்தினான்.  (லேவியராகமம்  8:15)

appozhuthu  athu  kollappattathu;  moasea  athin  iraththaththai  eduththu,  than  viralinaal  balipeedaththin  kombuga'linmeal  sut’rilum  poosi,  balipeedaththi’rkaagap  piraayachchiththagnseythu,  mat’ra  iraththaththaip  balipeedaththin  adiyil  oot’rivittu,  athinmeal  paavanivirththi  seyyumporuttu  athaip  parisuththappaduththinaan.  (leaviyaraagamam  8:15)

பின்பு  மோசே,  கர்த்தர்  தனக்குக்  கட்டளையிட்டபடியே,  குடல்கள்மேல்  இருந்த  கொழுப்பு  முழுவதையும்,  கல்லீரலின்மேல்  இருந்த  ஜவ்வையும்,  இரண்டு  குண்டிக்காய்களையும்,  அவைகளின்  கொழுப்பையும்  எடுத்து,  பலிபீடத்தின்மேல்  தகனித்து,  (லேவியராகமம்  8:16)

pinbu  moasea,  karththar  thanakkuk  katta'laiyittapadiyea,  kudalga'lmeal  iruntha  kozhuppu  muzhuvathaiyum,  kalleeralinmeal  iruntha  javvaiyum,  ira'ndu  ku'ndikkaayga'laiyum,  avaiga'lin  kozhuppaiyum  eduththu,  balipeedaththinmeal  thaganiththu,  (leaviyaraagamam  8:16)

காளையையும்  அதின்  தோலையும்  மாம்சத்தையும்  சாணியையும்  பாளயத்துக்குப்  புறம்பே  அக்கினியிலே  சுட்டெரித்தான்.  (லேவியராகமம்  8:17)

kaa'laiyaiyum  athin  thoalaiyum  maamsaththaiyum  saa'niyaiyum  paa'layaththukkup  pu’rambea  akkiniyilea  sutteriththaan.  (leaviyaraagamam  8:17)

பின்பு  அவன்  சர்வாங்க  தகனபலிக்கு  ஆட்டுக்கடாவைக்  கொண்டுவந்தான்;  அதின்  தலையின்மேல்  ஆரோனும்  அவன்  குமாரரும்  தங்கள்  கைகளை  வைத்தார்கள்.  (லேவியராகமம்  8:18)

pinbu  avan  sarvaangga  thaganabalikku  aattukkadaavaik  ko'nduvanthaan;  athin  thalaiyinmeal  aaroanum  avan  kumaararum  thangga'l  kaiga'lai  vaiththaarga'l.  (leaviyaraagamam  8:18)

அப்பொழுது  அது  கொல்லப்பட்டது;  மோசே  அதின்  இரத்தத்தைப்  பலிபீடத்தின்மேல்  சுற்றிலும்  தெளித்தான்.  (லேவியராகமம்  8:19)

appozhuthu  athu  kollappattathu;  moasea  athin  iraththaththaip  balipeedaththinmeal  sut’rilum  the'liththaan.  (leaviyaraagamam  8:19)

ஆட்டுக்கடா  சந்து  சந்தாகத்  துண்டிக்கப்பட்டது;  கர்த்தர்  தனக்குக்  கட்டளையிட்டபடியே,  மோசே  அதின்  தலையையும்  துண்டங்களையும்  கொழுப்பையும்  தகனித்தான்.  (லேவியராகமம்  8:20)

aattukkadaa  santhu  santhaagath  thu'ndikkappattathu;  karththar  thanakkuk  katta'laiyittapadiyea,  moasea  athin  thalaiyaiyum  thu'ndangga'laiyum  kozhuppaiyum  thaganiththaan.  (leaviyaraagamam  8:20)

குடல்களையும்  தொடைகளையும்  தண்ணீரால்  கழுவினபின்,  மோசே  ஆட்டுக்கடா  முழுவதையும்  பலிபீடத்தின்மேல்  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனைக்கான  சர்வாங்க  தகனபலியாகத்  தகனித்தான்.  (லேவியராகமம்  8:21)

kudalga'laiyum  thodaiga'laiyum  tha'n'neeraal  kazhuvinapin,  moasea  aattukkadaa  muzhuvathaiyum  balipeedaththinmeal  karththarukkuch  sugantha  vaasanaikkaana  sarvaangga  thaganabaliyaagath  thaganiththaan.  (leaviyaraagamam  8:21)

பின்பு  பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய  மற்ற  ஆட்டுக்கடாவைக்  கொண்டுவந்தான்;  அதின்  தலையின்மேல்  ஆரோனும்  அவன்  குமாரரும்  தங்கள்  கைகளை  வைத்தார்கள்.  (லேவியராகமம்  8:22)

pinbu  pirathishdaippaduththuvatha’rkuriya  mat’ra  aattukkadaavaik  ko'nduvanthaan;  athin  thalaiyinmeal  aaroanum  avan  kumaararum  thangga'l  kaiga'lai  vaiththaarga'l.  (leaviyaraagamam  8:22)

பின்பு  அது  கொல்லப்பட்டது;  மோசே  அதின்  இரத்தத்தில்  கொஞ்சம்  எடுத்து,  ஆரோனுடைய  வலதுகாதின்  மடலிலும்  வலதுகையின்  பெருவிரலிலும்  வலதுகாலின்  பெருவிரலிலும்  பூசினான்.  (லேவியராகமம்  8:23)

pinbu  athu  kollappattathu;  moasea  athin  iraththaththil  kogncham  eduththu,  aaroanudaiya  valathukaathin  madalilum  valathukaiyin  peruviralilum  valathukaalin  peruviralilum  poosinaan.  (leaviyaraagamam  8:23)

பின்பு  ஆரோனுடைய  குமாரரையும்  அழைத்தான்;  மோசே  அந்த  இரத்தத்திலே  கொஞ்சம்  அவர்களுடைய  வலதுகாதின்  மடலிலும்  வலதுகையின்  பெருவிரலிலும்  வலது  காலின்  பெருவிரலிலும்  பூசி,  இரத்தத்தைப்  பலிபீடத்தின்மேல்  சுற்றிலும்  தெளித்து,  (லேவியராகமம்  8:24)

pinbu  aaroanudaiya  kumaararaiyum  azhaiththaan;  moasea  antha  iraththaththilea  kogncham  avarga'ludaiya  valathukaathin  madalilum  valathukaiyin  peruviralilum  valathu  kaalin  peruviralilum  poosi,  iraththaththaip  balipeedaththinmeal  sut’rilum  the'liththu,  (leaviyaraagamam  8:24)

கொழுப்பையும்,  வாலையும்,  குடல்கள்மேலிருந்த  கொழுப்பு  முழுவதையும்,  கல்லீரலின்மேலிருந்த  ஜவ்வையும்,  இரண்டு  குண்டிக்காய்களையும்,  அவைகளின்  கொழுப்பையும்,  வலது  முன்னந்தொடையையும்  எடுத்து,  (லேவியராகமம்  8:25)

kozhuppaiyum,  vaalaiyum,  kudalga'lmealiruntha  kozhuppu  muzhuvathaiyum,  kalleeralinmealiruntha  javvaiyum,  ira'ndu  ku'ndikkaayga'laiyum,  avaiga'lin  kozhuppaiyum,  valathu  munnanthodaiyaiyum  eduththu,  (leaviyaraagamam  8:25)

கர்த்தருடைய  சந்நிதியில்  வைத்திருந்த  புளிப்பில்லா  அப்பங்களின்  கூடையிலுள்ள  புளிப்பில்லா  அதிரசத்தில்  ஒன்றையும்,  எண்ணெயிட்ட  அப்பமாகிய  அதிரசத்தில்  ஒன்றையும்,  ஒரு  அடையையும்  எடுத்து,  அந்தக்  கொழுப்பின்மேலும்,  முன்னந்தொடையின்மேலும்  வைத்து,  (லேவியராகமம்  8:26)

karththarudaiya  sannithiyil  vaiththiruntha  pu'lippillaa  appangga'lin  koodaiyilu'l'la  pu'lippillaa  athirasaththil  on’raiyum,  e'n'neyitta  appamaagiya  athirasaththil  on’raiyum,  oru  adaiyaiyum  eduththu,  anthak  kozhuppinmealum,  munnanthodaiyinmealum  vaiththu,  (leaviyaraagamam  8:26)

அவைகளையெல்லாம்  ஆரோனுடைய  உள்ளங்கைகளிலும்  அவன்  குமாரருடைய  உள்ளங்கைகளிலும்  வைத்து,  அசைவாட்டும்  பலியாகக்  கர்த்தருடைய  சந்நிதியில்  அசைவாட்டி,  (லேவியராகமம்  8:27)

avaiga'laiyellaam  aaroanudaiya  u'l'langkaiga'lilum  avan  kumaararudaiya  u'l'langkaiga'lilum  vaiththu,  asaivaattum  baliyaagak  karththarudaiya  sannithiyil  asaivaatti,  (leaviyaraagamam  8:27)

பின்பு  மோசே  அவைகளை  அவர்கள்  உள்ளங்கைகளிலிருந்து  எடுத்து,  பலிபீடத்தின்மேலிருக்கிற  தகனபலியின்மேல்  தகனித்தான்;  அவைகள்  சுகந்த  வாசனையான  பிரதிஷ்டைப்  பலிகள்;  இது  கர்த்தருக்குத்  தகனபலியானது.  (லேவியராகமம்  8:28)

pinbu  moasea  avaiga'lai  avarga'l  u'l'langkaiga'lilirunthu  eduththu,  balipeedaththinmealirukki’ra  thaganabaliyinmeal  thaganiththaan;  avaiga'l  sugantha  vaasanaiyaana  pirathishdaip  baliga'l;  ithu  karththarukkuth  thaganabaliyaanathu.  (leaviyaraagamam  8:28)

பின்பு  மோசே  மார்க்கண்டத்தை  எடுத்து,  அதைக்  கர்த்தருடைய  சந்நிதியில்  அசைவாட்டும்  பலியாக  அசைவாட்டினான்.  கர்த்தர்  மோசேக்குக்  கட்டளையிட்டபடியே  பிரதிஷ்டையின்  ஆட்டுக்கடாவிலே  அது  மோசேயின்  பங்காயிற்று.  (லேவியராகமம்  8:29)

pinbu  moasea  maarkka'ndaththai  eduththu,  athaik  karththarudaiya  sannithiyil  asaivaattum  baliyaaga  asaivaattinaan.  karththar  moaseakkuk  katta'laiyittapadiyea  pirathishdaiyin  aattukkadaavilea  athu  moaseayin  panggaayit’ru.  (leaviyaraagamam  8:29)

மோசே  அபிஷேகதைலத்திலும்,  பலிபீடத்தின்மேலிருந்த  இரத்தத்திலும்  கொஞ்சம்  எடுத்து,  ஆரோன்மேலும்  அவன்  வஸ்திரங்கள்மேலும்,  அவன்  குமாரர்மேலும்  அவர்கள்  வஸ்திரங்கள்மேலும்  தெளித்து,  ஆரோனையும்  அவன்  வஸ்திரங்களையும்,  அவன்  குமாரரையும்,  அவன்  குமாரரின்  வஸ்திரங்களையும்  பரிசுத்தப்படுத்தினான்.  (லேவியராகமம்  8:30)

moasea  abisheagathailaththilum,  balipeedaththinmealiruntha  iraththaththilum  kogncham  eduththu,  aaroanmealum  avan  vasthirangga'lmealum,  avan  kumaararmealum  avarga'l  vasthirangga'lmealum  the'liththu,  aaroanaiyum  avan  vasthirangga'laiyum,  avan  kumaararaiyum,  avan  kumaararin  vasthirangga'laiyum  parisuththappaduththinaan.  (leaviyaraagamam  8:30)

பின்பு  மோசே  ஆரோனையும்  அவன்  குமாரரையும்  நோக்கி:  நீங்கள்  அந்த  மாம்சத்தை  ஆசரிப்புக்  கூடாரவாசலிலே  வேவித்து,  ஆரோனும்  அவன்  குமாரரும்  அதைப்  புசிப்பார்களாக  என்று  கட்டளையிட்டிருக்கிறபடியே,  அங்கே  அதையும்  உங்கள்  பிரதிஷ்டைப்  பலிகளுள்ள  கூடையில்  இருக்கிற  அப்பத்தையும்  புசித்து,  (லேவியராகமம்  8:31)

pinbu  moasea  aaroanaiyum  avan  kumaararaiyum  noakki:  neengga'l  antha  maamsaththai  aasarippuk  koodaaravaasalilea  veaviththu,  aaroanum  avan  kumaararum  athaip  pusippaarga'laaga  en’ru  katta'laiyittirukki’rapadiyea,  anggea  athaiyum  ungga'l  pirathishdaip  baliga'lu'l'la  koodaiyil  irukki’ra  appaththaiyum  pusiththu,  (leaviyaraagamam  8:31)

மாம்சத்திலும்  அப்பத்திலும்  மீதியானதை  அக்கினியிலே  சுட்டெரித்து,  (லேவியராகமம்  8:32)

maamsaththilum  appaththilum  meethiyaanathai  akkiniyilea  sutteriththu,  (leaviyaraagamam  8:32)

பிரதிஷ்டையின்  நாட்கள்  நிறைவேறும்வரைக்கும்,  ஏழுநாள்  ஆசரிப்புக்  கூடாரவாசலை  விட்டுப்  புறப்படாதிருங்கள்;  ஏழுநாளளவும்  நீங்கள்  பிரதிஷ்டைப்படுத்தப்படுவீர்கள்.  (லேவியராகமம்  8:33)

pirathishdaiyin  naadka'l  ni’raivea’rumvaraikkum,  eazhunaa'l  aasarippuk  koodaaravaasalai  vittup  pu’rappadaathirungga'l;  eazhunaa'la'lavum  neengga'l  pirathishdaippaduththappaduveerga'l.  (leaviyaraagamam  8:33)

இன்று  செய்ததுபோல,  உங்கள்  பாவநிவிர்த்திக்காக  இனிமேலும்  செய்யவேண்டும்  என்று  கர்த்தர்  கட்டளையிட்டார்.  (லேவியராகமம்  8:34)

in’ru  seythathupoala,  ungga'l  paavanivirththikkaaga  inimealum  seyyavea'ndum  en’ru  karththar  katta'laiyittaar.  (leaviyaraagamam  8:34)

நீங்கள்  சாகாதபடிக்கு  ஏழுநாள்  இரவும்  பகலும்  ஆசரிப்புக்  கூடாரவாசலிலிருந்து,  கர்த்தருடைய  காவலைக்  காக்கக்கடவீர்கள்;  இப்படி  நான்  கற்பிக்கப்பட்டேன்  என்றான்.  (லேவியராகமம்  8:35)

neengga'l  saagaathapadikku  eazhunaa'l  iravum  pagalum  aasarippuk  koodaaravaasalilirunthu,  karththarudaiya  kaavalaik  kaakkakkadaveerga'l;  ippadi  naan  ka’rpikkappattean  en’raan.  (leaviyaraagamam  8:35)

கர்த்தர்  மோசேயைக்கொண்டு  கட்டளையிட்ட  எல்லாக்  காரியங்களையும்  ஆரோனும்  அவன்  குமாரரும்  செய்தார்கள்.  (லேவியராகமம்  8:36)

karththar  moaseayaikko'ndu  katta'laiyitta  ellaak  kaariyangga'laiyum  aaroanum  avan  kumaararum  seythaarga'l.  (leaviyaraagamam  8:36)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!