Thursday, November 03, 2016

Leaviyaraagamam 7 | லேவியராகமம் 7 | Leviticus 7


குற்றநிவாரண  பலியின்  பிரமாணம்  என்னவென்றால்,  அது  மகா  பரிசுத்தமானது.  (லேவியராகமம்  7:1)

kut’ranivaara'na  baliyin  piramaa'nam  ennaven’raal,  athu  mahaa  parisuththamaanathu.  (leaviyaraagamam  7:1)

சர்வாங்க  தகனபலி  கொல்லப்படும்  இடத்தில்,  குற்றநிவாரண  பலியும்  கொல்லப்படவேண்டும்;  அதின்  இரத்தத்தைப்  பலிபீடத்தின்மேல்  சுற்றிலும்  தெளித்து,  (லேவியராகமம்  7:2)

sarvaangga  thaganabali  kollappadum  idaththil,  kut’ranivaara'na  baliyum  kollappadavea'ndum;  athin  iraththaththaip  balipeedaththinmeal  sut’rilum  the'liththu,  (leaviyaraagamam  7:2)

அதினுடைய  கொழுப்பு  முழுவதையும்,  அதின்  வாலையும்,  குடல்களை  மூடிய  கொழுப்பையும்,  (லேவியராகமம்  7:3)

athinudaiya  kozhuppu  muzhuvathaiyum,  athin  vaalaiyum,  kudalga'lai  moodiya  kozhuppaiyum,  (leaviyaraagamam  7:3)

இரண்டு  குண்டிக்காய்களையும்,  அவைகளின்மேல்  சிறு  குடல்களினிடத்திலிருக்கிற  கொழுப்பையும்,  குண்டிக்காய்களோடேகூடக்  கல்லீரலின்மேல்  இருக்கிற  ஜவ்வையும்  எடுத்துச்  செலுத்துவானாக.  (லேவியராகமம்  7:4)

ira'ndu  ku'ndikkaayga'laiyum,  avaiga'linmeal  si’ru  kudalga'linidaththilirukki’ra  kozhuppaiyum,  ku'ndikkaayga'loadeakoodak  kalleeralinmeal  irukki’ra  javvaiyum  eduththuch  seluththuvaanaaga.  (leaviyaraagamam  7:4)

இவைகளை  ஆசாரியன்  பலிபீடத்தின்மேல்  கர்த்தருக்குத்  தகனபலியாகத்  தகனிக்கக்கடவன்;  அது  குற்றநிவாரண  பலி.  (லேவியராகமம்  7:5)

ivaiga'lai  aasaariyan  balipeedaththinmeal  karththarukkuth  thaganabaliyaagath  thaganikkakkadavan;  athu  kut’ranivaara'na  bali.  (leaviyaraagamam  7:5)

ஆசாரியரில்  ஆண்மக்கள்  யாவரும்  அதைப்  புசிப்பார்களாக;  அது  பரிசுத்த  ஸ்தலத்தில்  புசிக்கப்படவேண்டும்;  அது  மகா  பரிசுத்தமானது.  (லேவியராகமம்  7:6)

aasaariyaril  aa'nmakka'l  yaavarum  athaip  pusippaarga'laaga;  athu  parisuththa  sthalaththil  pusikkappadavea'ndum;  athu  mahaa  parisuththamaanathu.  (leaviyaraagamam  7:6)

பாவநிவாரணபலி  எப்படியோ  குற்றநிவாரணபலியும்  அப்படியே;  அவ்விரண்டிற்கும்  பிரமாணம்  ஒன்றே;  அதினாலே  பாவநிவிர்த்திசெய்த  ஆசாரியனை  அது  சேரும்.  (லேவியராகமம்  7:7)

paavanivaara'nabali  eppadiyoa  kut’ranivaara'nabaliyum  appadiyea;  avvira'ndi’rkum  piramaa'nam  on’rea;  athinaalea  paavanivirththiseytha  aasaariyanai  athu  searum.  (leaviyaraagamam  7:7)

ஒருவனுடைய  சர்வாங்க  தகனபலியைச்  செலுத்தின  ஆசாரியன்  தான்  செலுத்தின  தகனபலியின்  தோலைத்  தனக்காக  வைத்துக்கொள்ளவேண்டும்.  (லேவியராகமம்  7:8)

oruvanudaiya  sarvaangga  thaganabaliyaich  seluththina  aasaariyan  thaan  seluththina  thaganabaliyin  thoalaith  thanakkaaga  vaiththukko'l'lavea'ndum.  (leaviyaraagamam  7:8)

அடுப்பிலே  பாகம்பண்ணப்பட்டதும்,  சட்டியிலும்  தட்டின்மேலும்  சமைக்கப்பட்டதுமான  போஜனபலி  யாவும்  அதைச்  செலுத்துகிற  ஆசாரியனுடையவைகளாயிருக்கும்.  (லேவியராகமம்  7:9)

aduppilea  paagampa'n'nappattathum,  sattiyilum  thattinmealum  samaikkappattathumaana  poajanabali  yaavum  athaich  seluththugi’ra  aasaariyanudaiyavaiga'laayirukkum.  (leaviyaraagamam  7:9)

எண்ணெயிலே  பிசைந்ததும்  எண்ணெயிலே  பிசையாததுமான  சகல  போஜனபலியும்  ஆரோனுடைய  குமாரர்  யாவருக்கும்  சரிபங்காகச்  சேரவேண்டும்.  (லேவியராகமம்  7:10)

e'n'neyilea  pisainthathum  e'n'neyilea  pisaiyaathathumaana  sagala  poajanabaliyum  aaroanudaiya  kumaarar  yaavarukkum  saripanggaagach  searavea'ndum.  (leaviyaraagamam  7:10)

கர்த்தருக்குச்  செலுத்துகிற  சமாதானபலிகளின்  பிரமாணம்  என்னவென்றால்,  (லேவியராகமம்  7:11)

karththarukkuch  seluththugi’ra  samaathaanabaliga'lin  piramaa'nam  ennaven’raal,  (leaviyaraagamam  7:11)

அதை  ஸ்தோத்திரத்துக்காகச்  செலுத்துவானானால்,  அவன்  ஸ்தோத்திர  பலியோடுங்கூட  எண்ணெயிலே  பிசைந்த  புளிப்பில்லா  அதிரசங்களையும்,  எண்ணெய்  பூசப்பட்ட  புளிப்பில்லா  அடைகளையும்,  எண்ணெயிலே  பிசைந்து  வறுக்கப்பட்ட  மெல்லிய  மாவினால்  செய்த  அதிரசங்களையும்  படைக்கக்கடவன்.  (லேவியராகமம்  7:12)

athai  sthoaththiraththukkaagach  seluththuvaanaanaal,  avan  sthoaththira  baliyoadungkooda  e'n'neyilea  pisaintha  pu'lippillaa  athirasangga'laiyum,  e'n'ney  poosappatta  pu'lippillaa  adaiga'laiyum,  e'n'neyilea  pisainthu  va’rukkappatta  melliya  maavinaal  seytha  athirasangga'laiyum  padaikkakkadavan.  (leaviyaraagamam  7:12)

அவைகளைப்  படைக்கிறதும்  அல்லாமல்,  புளித்தமாவினால்  செய்த  அப்பத்தையும்,  தன்னுடைய  சமாதான  பலியாகிய  ஸ்தோத்திரபலியோடுகூட  படைக்கவேண்டும்.  (லேவியராகமம்  7:13)

avaiga'laip  padaikki’rathum  allaamal,  pu'liththamaavinaal  seytha  appaththaiyum,  thannudaiya  samaathaana  baliyaagiya  sthoaththirabaliyoadukooda  padaikkavea'ndum.  (leaviyaraagamam  7:13)

அந்தப்  படைப்பு  முழுவதிலும்  வகைக்கு  ஒவ்வொன்றை  எடுத்துக்  கர்த்தருக்கு  ஏறெடுத்துப்  படைக்கும்  பலியாகச்  செலுத்துவானாக;  அது  சமாதான  பலியின்  இரத்தத்தைத்  தெளித்த  ஆசாரியனுடையதாகும்.  (லேவியராகமம்  7:14)

anthap  padaippu  muzhuvathilum  vagaikku  ovvon’rai  eduththuk  karththarukku  ea’reduththup  padaikkum  baliyaagach  seluththuvaanaaga;  athu  samaathaana  baliyin  iraththaththaith  the'liththa  aasaariyanudaiyathaagum.  (leaviyaraagamam  7:14)

சமாதானபலியாகிய  ஸ்தோத்திர  பலியின்  மாம்சமானது  செலுத்தப்பட்ட  அன்றைத்தினமே  புசிக்கப்படவேண்டும்;  அதில்  ஒன்றும்  விடியற்காலமட்டும்  வைக்கப்படலாகாது.  (லேவியராகமம்  7:15)

samaathaanabaliyaagiya  sthoaththira  baliyin  maamsamaanathu  seluththappatta  an’raiththinamea  pusikkappadavea'ndum;  athil  on’rum  vidiya’rkaalamattum  vaikkappadalaagaathu.  (leaviyaraagamam  7:15)

அவன்  செலுத்தும்  பலி  பொருத்தனையாயாவது  உற்சாகபலியாயாவது  இருக்குமானால்,  அது  செலுத்தப்படும்  நாளிலும்,  அதில்  மீதியானது  மறுநாளிலும்  புசிக்கப்படலாம்.  (லேவியராகமம்  7:16)

avan  seluththum  bali  poruththanaiyaayaavathu  u’rchaagabaliyaayaavathu  irukkumaanaal,  athu  seluththappadum  naa'lilum,  athil  meethiyaanathu  ma’runaa'lilum  pusikkappadalaam.  (leaviyaraagamam  7:16)

பலியின்  மாம்சத்தில்  மீதியாயிருக்கிறது  மூன்றாம்  நாளில்  அக்கினியிலே  சுட்டெரிக்கப்படக்கடவது.  (லேவியராகமம்  7:17)

baliyin  maamsaththil  meethiyaayirukki’rathu  moon’raam  naa'lil  akkiniyilea  sutterikkappadakkadavathu.  (leaviyaraagamam  7:17)

சமாதானபலியின்  மாம்சத்தில்  மீதியானது  மூன்றாம்  நாளில்  புசிக்கப்படுமானால்,  அது  அங்கிகரிக்கப்படாது;  அதைச்  செலுத்தினவனுக்கு  அது  பலிக்காது;  அது  அருவருப்பாயிருக்கும்;  அதைப்  புசிக்கிறவன்  தன்  அக்கிரமத்தைச்  சுமப்பான்.  (லேவியராகமம்  7:18)

samaathaanabaliyin  maamsaththil  meethiyaanathu  moon’raam  naa'lil  pusikkappadumaanaal,  athu  anggigarikkappadaathu;  athaich  seluththinavanukku  athu  palikkaathu;  athu  aruvaruppaayirukkum;  athaip  pusikki’ravan  than  akkiramaththaich  sumappaan.  (leaviyaraagamam  7:18)

தீட்டான  எந்த  வஸ்துவிலாவது  அந்த  மாம்சம்  பட்டதானால்  அது  புசிக்கப்படாமல்  அக்கினியிலே  சுட்டெரிக்கப்படக்கடவது;  மற்ற  மாம்சத்தையோ  சுத்தமாயிருக்கிறவனெவனும்  புசிக்கலாம்.  (லேவியராகமம்  7:19)

theettaana  entha  vasthuvilaavathu  antha  maamsam  pattathaanaal  athu  pusikkappadaamal  akkiniyilea  sutterikkappadakkadavathu;  mat’ra  maamsaththaiyoa  suththamaayirukki’ravanevanum  pusikkalaam.  (leaviyaraagamam  7:19)

ஒருவன்  தீட்டுள்ளவனாயிருக்கையில்  கர்த்தருடைய  சமாதானபலியின்  மாம்சத்தைப்  புசித்தால்,  அவன்  தன்  ஜனத்தாரில்  இராதபடிக்கு  அறுப்புண்டுபோவான்.  (லேவியராகமம்  7:20)

oruvan  theettu'l'lavanaayirukkaiyil  karththarudaiya  samaathaanabaliyin  maamsaththaip  pusiththaal,  avan  than  janaththaaril  iraathapadikku  a’ruppu'ndupoavaan.  (leaviyaraagamam  7:20)

மனுஷருடைய  தீட்டையாவது,  தீட்டான  மிருகத்தையாவது,  அருவருக்கப்படத்தக்க  தீட்டான  மற்ற  எந்த  வஸ்துவையாவது  ஒருவன்  தொட்டிருந்து,  கர்த்தருடைய  சமாதானபலியின்  மாம்சத்திலே  புசித்தால்,  அவன்  தன்  ஜனங்களில்  இராதபடிக்கு  அறுப்புண்டுபோவான்  என்றார்.  (லேவியராகமம்  7:21)

manusharudaiya  theettaiyaavathu,  theettaana  mirugaththaiyaavathu,  aruvarukkappadaththakka  theettaana  mat’ra  entha  vasthuvaiyaavathu  oruvan  thottirunthu,  karththarudaiya  samaathaanabaliyin  maamsaththilea  pusiththaal,  avan  than  janangga'lil  iraathapadikku  a’ruppu'ndupoavaan  en’raar.  (leaviyaraagamam  7:21)

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  7:22)

pinnum  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  7:22)

நீ  இஸ்ரவேல்  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  மாடு  ஆடு  வெள்ளாடு  என்பவைகளின்  கொழுப்பை  நீங்கள்  புசிக்கலாகாது.  (லேவியராகமம்  7:23)

nee  israveal  puththiraroadea  sollavea'ndiyathu  ennaven’raal,  maadu  aadu  ve'l'laadu  enbavaiga'lin  kozhuppai  neengga'l  pusikkalaagaathu.  (leaviyaraagamam  7:23)

தானாய்ச்  செத்த  மிருகத்தின்  கொழுப்பையும்,  பீறுண்ட  மிருகத்தின்  கொழுப்பையும்  பலவித  வேலைகளுக்கு  வழங்கலாம்;  ஆனாலும்  நீங்கள்  அதை  ஒருபோதும்  புசிக்கலாகாது.  (லேவியராகமம்  7:24)

thaanaaych  seththa  mirugaththin  kozhuppaiyum,  pee’ru'nda  mirugaththin  kozhuppaiyum  palavitha  vealaiga'lukku  vazhanggalaam;  aanaalum  neengga'l  athai  orupoathum  pusikkalaagaathu.  (leaviyaraagamam  7:24)

கர்த்தருக்குத்  தகனபலியாகச்  செலுத்தப்படும்  மிருகத்தின்  கொழுப்பைப்  புசிக்கிற  எந்த  ஆத்துமாவும்  தன்  ஜனங்களில்  இராதபடிக்கு  அறுப்புண்டுபோவான்.  (லேவியராகமம்  7:25)

karththarukkuth  thaganabaliyaagach  seluththappadum  mirugaththin  kozhuppaip  pusikki’ra  entha  aaththumaavum  than  janangga'lil  iraathapadikku  a’ruppu'ndupoavaan.  (leaviyaraagamam  7:25)

உங்கள்  வாசஸ்தலங்களில்  எங்கும்  யாதொரு  பறவையின்  இரத்தத்தையாவது,  யாதொரு  மிருகத்தின்  இரத்தத்தையாவது  புசிக்கலாகாது.  (லேவியராகமம்  7:26)

ungga'l  vaasasthalangga'lil  enggum  yaathoru  pa’ravaiyin  iraththaththaiyaavathu,  yaathoru  mirugaththin  iraththaththaiyaavathu  pusikkalaagaathu.  (leaviyaraagamam  7:26)

எவ்வித  இரத்தத்தையாகிலும்  புசிக்கிற  எவனும்  தன்  ஜனங்களில்  இராதபடிக்கு  அறுப்புண்டுபோவான்  என்று  சொல்  என்றார்.  (லேவியராகமம்  7:27)

evvitha  iraththaththaiyaagilum  pusikki’ra  evanum  than  janangga'lil  iraathapadikku  a’ruppu'ndupoavaan  en’ru  sol  en’raar.  (leaviyaraagamam  7:27)

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  7:28)

pinnum  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  7:28)

நீ  இஸ்ரவேல்  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  கர்த்தருக்குச்  சமாதானபலி  செலுத்துகிறவன்  தான்  செலுத்தும்  சமாதானபலியைக்  கர்த்தருடைய  சந்நிதியில்  கொண்டுவருவானாக.  (லேவியராகமம்  7:29)

nee  israveal  puththiraroadea  sollavea'ndiyathu  ennaven’raal,  karththarukkuch  samaathaanabali  seluththugi’ravan  thaan  seluththum  samaathaanabaliyaik  karththarudaiya  sannithiyil  ko'nduvaruvaanaaga.  (leaviyaraagamam  7:29)

கர்த்தருக்குத்  தகனபலியாகப்  படைப்பவைகளை  அவன்  கைகளே  கொண்டுவரவேண்டும்;  மார்க்கண்டத்தையும்  அதனோடுகூட  அதின்மேல்  வைத்த  கொழுப்பையும்  கர்த்தருடைய  சந்நிதியில்  அசைவாட்டும்  பலியாக  அசைவாட்டும்படிக்குக்  கொண்டுவரக்கடவன்.  (லேவியராகமம்  7:30)

karththarukkuth  thaganabaliyaagap  padaippavaiga'lai  avan  kaiga'lea  ko'nduvaravea'ndum;  maarkka'ndaththaiyum  athanoadukooda  athinmeal  vaiththa  kozhuppaiyum  karththarudaiya  sannithiyil  asaivaattum  baliyaaga  asaivaattumpadikkuk  ko'nduvarakkadavan.  (leaviyaraagamam  7:30)

அப்பொழுது  ஆசாரியன்  அந்தக்  கொழுப்பைப்  பலிபீடத்தின்மேல்  தகனிக்கவேண்டும்;  மார்க்கண்டமோ  ஆரோனையும்  அவன்  குமாரரையும்  சேரும்.  (லேவியராகமம்  7:31)

appozhuthu  aasaariyan  anthak  kozhuppaip  balipeedaththinmeal  thaganikkavea'ndum;  maarkka'ndamoa  aaroanaiyum  avan  kumaararaiyum  searum.  (leaviyaraagamam  7:31)

உங்கள்  சமாதானபலிகளில்  வலது  முன்னந்தொடையை  ஏறெடுத்துப்  படைக்கும்  பலியாகப்  படைக்கும்படி  ஆசாரியனிடத்தில்  கொடுப்பீர்களாக.  (லேவியராகமம்  7:32)

ungga'l  samaathaanabaliga'lil  valathu  munnanthodaiyai  ea’reduththup  padaikkum  baliyaagap  padaikkumpadi  aasaariyanidaththil  koduppeerga'laaga.  (leaviyaraagamam  7:32)

ஆரோனுடைய  குமாரரில்,  சமாதானபலியின்  இரத்தத்தையும்  கொழுப்பையும்  செலுத்துகிறவனுக்கு,  வலது  முன்னந்தொடை  பங்காகச்  சேரும்.  (லேவியராகமம்  7:33)

aaroanudaiya  kumaararil,  samaathaanabaliyin  iraththaththaiyum  kozhuppaiyum  seluththugi’ravanukku,  valathu  munnanthodai  panggaagach  searum.  (leaviyaraagamam  7:33)

இஸ்ரவேல்  புத்திரரின்  சமாதானபலிகளில்  அசைவாட்டும்  மார்க்கண்டத்தையும்  ஏறெடுத்துப்படைக்கும்  முன்னந்தொடையையும்  நான்  அவர்கள்  கையில்  வாங்கி,  அவைகளை  ஆசாரியனாகிய  ஆரோனுக்கும்  அவன்  குமாரருக்கும்  இஸ்ரவேல்  புத்திரருக்குள்  நடக்கும்  நித்திய  கட்டளையாகக்  கொடுத்தேன்  என்று  சொல்  என்றார்.  (லேவியராகமம்  7:34)

israveal  puththirarin  samaathaanabaliga'lil  asaivaattum  maarkka'ndaththaiyum  ea’reduththuppadaikkum  munnanthodaiyaiyum  naan  avarga'l  kaiyil  vaanggi,  avaiga'lai  aasaariyanaagiya  aaroanukkum  avan  kumaararukkum  israveal  puththirarukku'l  nadakkum  niththiya  katta'laiyaagak  koduththean  en’ru  sol  en’raar.  (leaviyaraagamam  7:34)

கர்த்தருக்கு  ஆசாரிய  ஊழியம்  செய்யும்படி  ஆரோனும்  அவன்  குமாரரும்  நியமிக்கப்பட்ட  நாளிலே,  இது  அபிஷேகம்பண்ணப்பட்ட  அவர்களுக்குக்  கர்த்தருடைய  தகனபலிகளில்  கிடைக்கும்படி  உண்டான  கட்டளை.  (லேவியராகமம்  7:35)

karththarukku  aasaariya  oozhiyam  seyyumpadi  aaroanum  avan  kumaararum  niyamikkappatta  naa'lilea,  ithu  abisheagampa'n'nappatta  avarga'lukkuk  karththarudaiya  thaganabaliga'lil  kidaikkumpadi  u'ndaana  katta'lai.  (leaviyaraagamam  7:35)

இப்படி  அவர்களுக்கு  இஸ்ரவேல்  புத்திரர்  தங்கள்  தலைமுறைதோறும்  நித்திய  நியமமாகக்  கொடுக்கும்படி  கர்த்தர்  அவர்களை  அபிஷேகம்பண்ணின  நாளிலே  கட்டளையிட்டார்.  (லேவியராகமம்  7:36)

ippadi  avarga'lukku  israveal  puththirar  thangga'l  thalaimu’raithoa’rum  niththiya  niyamamaagak  kodukkumpadi  karththar  avarga'lai  abisheagampa'n'nina  naa'lilea  katta'laiyittaar.  (leaviyaraagamam  7:36)

சர்வாங்க  தகனபலிக்கும்  போஜனபலிக்கும்  பாவநிவாரண  பலிக்கும்  குற்றநிவாரண  பலிக்கும்  பிரதிஷ்டை  பலிகளுக்கும்  சமாதான  பலிகளுக்கும்  அடுத்த  பிரமாணம்  இதுவே.  (லேவியராகமம்  7:37)

sarvaangga  thaganabalikkum  poajanabalikkum  paavanivaara'na  balikkum  kut’ranivaara'na  balikkum  pirathishdai  baliga'lukkum  samaathaana  baliga'lukkum  aduththa  piramaa'nam  ithuvea.  (leaviyaraagamam  7:37)

கர்த்தருக்குத்  தங்கள்  பலிகளைச்  செலுத்தவேண்டும்  என்று  அவர்  இஸ்ரவேல்  புத்திரருக்குச்  சீனாய்  வனாந்தரத்திலே  கற்பிக்கும்போது  இவைகளை  மோசேக்குச்  சீனாய்  மலையில்  கட்டளையிட்டார்.  (லேவியராகமம்  7:38)

karththarukkuth  thangga'l  baliga'laich  seluththavea'ndum  en’ru  avar  israveal  puththirarukkuch  seenaay  vanaantharaththilea  ka’rpikkumpoathu  ivaiga'lai  moaseakkuch  seenaay  malaiyil  katta'laiyittaar.  (leaviyaraagamam  7:38)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!