Thursday, November 03, 2016

Leaviyaraagamam 6 | லேவியராகமம் 6 | Leviticus 6

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  6:1)

pinnum  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  6:1)

ஒருவன்  கர்த்தருக்கு  விரோதமாக  அநியாயம்  செய்து,  தன்  வசத்தில்  ஒப்புவிக்கப்பட்ட  பொருளிலாவது,  கொடுக்கல்  வாங்கலிலாவது,  தன்  அயலானுக்கு  மாறாட்டம்பண்ணி,  அல்லது  ஒரு  வஸ்துவைப்  பலாத்காரமாய்ப்  பறித்துக்கொண்டு,  அல்லது  தன்  அயலானுக்கு  இடுக்கண்செய்து,  (லேவியராகமம்  6:2)

oruvan  karththarukku  viroathamaaga  aniyaayam  seythu,  than  vasaththil  oppuvikkappatta  poru'lilaavathu,  kodukkal  vaanggalilaavathu,  than  ayalaanukku  maa’raattampa'n'ni,  allathu  oru  vasthuvaip  balaathkaaramaayp  pa’riththukko'ndu,  allathu  than  ayalaanukku  idukka'nseythu,  (leaviyaraagamam  6:2)

அல்லது  காணாமற்போனதைக்  கண்டடைந்தும்  அதை  மறுதலித்து,  அதைக்குறித்துப்  பொய்யாணையிட்டு,  மனிதர்  செய்யும்  இவைமுதலான  யாதொரு  காரியத்தில்  பாவஞ்செய்தானேயாகில்,  (லேவியராகமம்  6:3)

allathu  kaa'naama’rpoanathaik  ka'ndadainthum  athai  ma’ruthaliththu,  athaikku’riththup  poyyaa'naiyittu,  manithar  seyyum  ivaimuthalaana  yaathoru  kaariyaththil  paavagnseythaaneayaagil,  (leaviyaraagamam  6:3)

அவன்  செய்த  பாவத்தினாலே  குற்றவாளியானபடியால்,  தான்  பலாத்காரமாய்ப்  பறித்துக்கொண்டதையும்,  இடுக்கண்செய்து  பெற்றுக்கொண்டதையும்,  தன்  வசத்திலே  ஒப்புவிக்கப்பட்டதையும்,  காணாமற்போயிருந்து  தான்  கண்டெடுத்ததையும்,  (லேவியராகமம்  6:4)

avan  seytha  paavaththinaalea  kut’ravaa'liyaanapadiyaal,  thaan  balaathkaaramaayp  pa’riththukko'ndathaiyum,  idukka'nseythu  pet’rukko'ndathaiyum,  than  vasaththilea  oppuvikkappattathaiyum,  kaa'naama’rpoayirunthu  thaan  ka'ndeduththathaiyum,  (leaviyaraagamam  6:4)

பொய்யாணையிட்டுச்  சம்பாதித்த  பொருளையும்  திரும்பக்  கொடுக்கக்கடவன்;  அந்த  முதலைக்  கொடுக்கிறதும்  அல்லாமல்,  அதினோடு  ஐந்தில்  ஒரு  பங்கு  அதிகமாகவுங்  கூட்டி,  அதைத்  தான்  குற்றநிவாரணபலியை  இடும்  நாளில்,  அதற்குரியவனுக்குக்  கொடுத்துவிட்டு,  (லேவியராகமம்  6:5)

poyyaa'naiyittuch  sambaathiththa  poru'laiyum  thirumbak  kodukkakkadavan;  antha  muthalaik  kodukki’rathum  allaamal,  athinoadu  ainthil  oru  panggu  athigamaagavung  kootti,  athaith  thaan  kut’ranivaara'nabaliyai  idum  naa'lil,  atha’rkuriyavanukkuk  koduththuvittu,  (leaviyaraagamam  6:5)

தன்  குற்றநிவாரணபலியாக,  உன்  மதிப்புக்குச்  சரியான  பழுதற்ற  ஆட்டுக்கடாவைக்  கர்த்தருக்குச்  செலுத்தும்படி,  அதை  ஆசாரியனிடத்தில்  குற்றநிவாரணபலியாகக்  கொண்டுவருவானாக.  (லேவியராகமம்  6:6)

than  kut’ranivaara'nabaliyaaga,  un  mathippukkuch  sariyaana  pazhuthat’ra  aattukkadaavaik  karththarukkuch  seluththumpadi,  athai  aasaariyanidaththil  kut’ranivaara'nabaliyaagak  ko'nduvaruvaanaaga.  (leaviyaraagamam  6:6)

கர்த்தருடைய  சந்நிதியில்  அவன்  பாவத்தை  ஆசாரியன்  நிவிர்த்திசெய்யக்கடவன்;  அப்பொழுது  அவன்  குற்றவாளியாகச்  செய்த  அப்படிப்பட்ட  எந்தக்  காரியமும்  அவனுக்கு  மன்னிக்கப்படும்  என்றார்.  (லேவியராகமம்  6:7)

karththarudaiya  sannithiyil  avan  paavaththai  aasaariyan  nivirththiseyyakkadavan;  appozhuthu  avan  kut’ravaa'liyaagach  seytha  appadippatta  enthak  kaariyamum  avanukku  mannikkappadum  en’raar.  (leaviyaraagamam  6:7)

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  6:8)

pinnum  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  6:8)

நீ  ஆரோனுக்கும்  அவன்  குமாரருக்கும்  கற்பிக்கவேண்டிய  சர்வாங்க  தகனபலிக்குரிய  பிரமாணம்  என்னவென்றால்,  சர்வாங்க  தகனபலியானது  இராமுழுவதும்  விடியற்காலமட்டும்  பலிபீடத்தின்மேல்  எரியவேண்டும்;  பலிபீடத்தின்மேலுள்ள  அக்கினி  எரிந்துகொண்டே  இருக்கவேண்டும்.  (லேவியராகமம்  6:9)

nee  aaroanukkum  avan  kumaararukkum  ka’rpikkavea'ndiya  sarvaangga  thaganabalikkuriya  piramaa'nam  ennaven’raal,  sarvaangga  thaganabaliyaanathu  iraamuzhuvathum  vidiya’rkaalamattum  balipeedaththinmeal  eriyavea'ndum;  balipeedaththinmealu'l'la  akkini  erinthuko'ndea  irukkavea'ndum.  (leaviyaraagamam  6:9)

ஆசாரியன்  தன்  சணல்நூல்  அங்கியைத்  தரித்து,  தன்  சணல்நூல்  ஜல்லடத்தை  அரையில்  போட்டுக்கொண்டு,  பலிபீடத்தின்மேல்  அக்கினியில்  எரிந்த  சர்வாங்க  தகனபலியின்  சாம்பலை  எடுத்து,  பலிபீடத்துப்  பக்கத்தில்  கொட்டி,  (லேவியராகமம்  6:10)

aasaariyan  than  sa'nalnool  anggiyaith  thariththu,  than  sa'nalnool  jalladaththai  araiyil  poattukko'ndu,  balipeedaththinmeal  akkiniyil  erintha  sarvaangga  thaganabaliyin  saambalai  eduththu,  balipeedaththup  pakkaththil  kotti,  (leaviyaraagamam  6:10)

பின்பு  தன்  வஸ்திரங்களைக்  கழற்றி,  வேறு  வஸ்திரங்களை  உடுத்திக்கொண்டு,  அந்தச்  சாம்பலைப்  பாளயத்துக்குப்  புறம்பே  சுத்தமான  ஒரு  இடத்திலே  கொண்டுபோய்க்  கொட்டக்கடவன்.  (லேவியராகமம்  6:11)

pinbu  than  vasthirangga'laik  kazhat’ri,  vea’ru  vasthirangga'lai  uduththikko'ndu,  anthach  saambalaip  paa'layaththukkup  pu’rambea  suththamaana  oru  idaththilea  ko'ndupoayk  kottakkadavan.  (leaviyaraagamam  6:11)

பலிபீடத்தின்மேலிருக்கிற  அக்கினி  அவியாமல்  எரிந்துகொண்டிருக்கவேண்டும்;  ஆசாரியன்  காலைதோறும்  அதின்மேல்  எரியும்படி  கட்டைகளைப்  போட்டு,  அதின்மேல்  சர்வாங்க  தகனபலியை  வரிசையாக  வைத்து,  அதின்மேல்  சமாதான  பலிகளின்  கொழுப்பைப்  போட்டுத்  தகனிக்கக்கடவன்.  (லேவியராகமம்  6:12)

balipeedaththinmealirukki’ra  akkini  aviyaamal  erinthuko'ndirukkavea'ndum;  aasaariyan  kaalaithoa’rum  athinmeal  eriyumpadi  kattaiga'laip  poattu,  athinmeal  sarvaangga  thaganabaliyai  varisaiyaaga  vaiththu,  athinmeal  samaathaana  baliga'lin  kozhuppaip  poattuth  thaganikkakkadavan.  (leaviyaraagamam  6:12)

பலிபீடத்தின்மேல்  அக்கினி  எப்பொழுதும்  எரிந்துகொண்டிருக்கவேண்டும்;  அது  ஒருபொழுதும்  அவிந்துபோகலாகாது.  (லேவியராகமம்  6:13)

balipeedaththinmeal  akkini  eppozhuthum  erinthuko'ndirukkavea'ndum;  athu  orupozhuthum  avinthupoagalaagaathu.  (leaviyaraagamam  6:13)

போஜனபலியின்  பிரமாணம்  என்னவென்றால்,  ஆரோனின்  குமாரர்  அதைக்  கர்த்தருடைய  சந்நிதியில்  பலிபீடத்துக்கு  முன்னே  படைக்கவேண்டும்.  (லேவியராகமம்  6:14)

poajanabaliyin  piramaa'nam  ennaven’raal,  aaroanin  kumaarar  athaik  karththarudaiya  sannithiyil  balipeedaththukku  munnea  padaikkavea'ndum.  (leaviyaraagamam  6:14)

அவன்  போஜனபலியின்  மெல்லிய  மாவிலும்  அதின்  எண்ணெயிலும்  தன்  கைப்பிடி  நிறைய  எடுத்து,  போஜனபலியின்மேலுள்ள  தூபவர்க்கம்  யாவற்றோடும்  கூட  அதை  ஞாபகக்குறியாகப்  பலிபீடத்தின்மேல்  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையாகத்  தகனிக்கக்கடவன்.  (லேவியராகமம்  6:15)

avan  poajanabaliyin  melliya  maavilum  athin  e'n'neyilum  than  kaippidi  ni’raiya  eduththu,  poajanabaliyinmealu'l'la  thoobavarkkam  yaavat’roadum  kooda  athai  gnaabagakku’riyaagap  balipeedaththinmeal  karththarukkuch  sugantha  vaasanaiyaagath  thaganikkakkadavan.  (leaviyaraagamam  6:15)

அதில்  மீதியானதை  ஆரோனும்  அவன்  குமாரரும்  புசிப்பார்களாக;  அது  புளிப்பில்லா  அப்பத்துடன்  பரிசுத்த  ஸ்தலத்தில்  புசிக்கப்படக்கடவது;  ஆசரிப்புக்  கூடாரத்தின்  பிராகாரத்தில்  அதைப்  புசிக்கவேண்டும்.  (லேவியராகமம்  6:16)

athil  meethiyaanathai  aaroanum  avan  kumaararum  pusippaarga'laaga;  athu  pu'lippillaa  appaththudan  parisuththa  sthalaththil  pusikkappadakkadavathu;  aasarippuk  koodaaraththin  piraagaaraththil  athaip  pusikkavea'ndum.  (leaviyaraagamam  6:16)

அதைப்  புளித்தமாவுள்ளதாகப்  பாகம்பண்ணவேண்டாம்;  அது  எனக்கு  இடப்படும்  தகனங்களில்  நான்  அவர்களுக்குக்  கொடுத்த  அவர்களுடைய  பங்கு;  அது  பாவநிவாரண  பலியைப்போலும்  குற்றநிவாரண  பலியைப்போலும்  மகா  பரிசுத்தமானது.  (லேவியராகமம்  6:17)

athaip  pu'liththamaavu'l'lathaagap  paagampa'n'navea'ndaam;  athu  enakku  idappadum  thaganangga'lil  naan  avarga'lukkuk  koduththa  avarga'ludaiya  panggu;  athu  paavanivaara'na  baliyaippoalum  kut’ranivaara'na  baliyaippoalum  mahaa  parisuththamaanathu.  (leaviyaraagamam  6:17)

ஆரோனின்  பிள்ளைகளில்  ஆண்மக்கள்  யாவரும்  அதைப்  புசிப்பார்களாக;  கர்த்தருக்கு  இடப்படும்  தகனபலிகளில்  அது  உங்கள்  தலைமுறைதோறும்  நித்திய  கட்டளையாய்  இருக்கக்கடவது;  அவைகளைத்  தொடுகிறவனெவனும்  பரிசுத்தமாய்  இருப்பான்  என்று  சொல்  என்றார்.  (லேவியராகமம்  6:18)

aaroanin  pi'l'laiga'lil  aa'nmakka'l  yaavarum  athaip  pusippaarga'laaga;  karththarukku  idappadum  thaganabaliga'lil  athu  ungga'l  thalaimu’raithoa’rum  niththiya  katta'laiyaay  irukkakkadavathu;  avaiga'laith  thodugi’ravanevanum  parisuththamaay  iruppaan  en’ru  sol  en’raar.  (leaviyaraagamam  6:18)

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  6:19)

pinnum  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  6:19)

ஆரோன்  அபிஷேகம்  பண்ணப்படும்  நாளில்,  அவனும்  அவன்  குமாரரும்  கர்த்தருக்குச்  செலுத்தவேண்டிய  படைப்பு  என்னவென்றால்,  ஒரு  எப்பா  அளவான  மெல்லிய  மாவிலே  பத்தில்  ஒரு  பங்கை,  காலையில்  பாதியும்  மாலையில்  பாதியும்,  நித்திய  போஜனபலியாகச்  செலுத்தக்கடவர்கள்.  (லேவியராகமம்  6:20)

aaroan  abisheagam  pa'n'nappadum  naa'lil,  avanum  avan  kumaararum  karththarukkuch  seluththavea'ndiya  padaippu  ennaven’raal,  oru  eppaa  a'lavaana  melliya  maavilea  paththil  oru  panggai,  kaalaiyil  paathiyum  maalaiyil  paathiyum,  niththiya  poajanabaliyaagach  seluththakkadavarga'l.  (leaviyaraagamam  6:20)

அது  சட்டியிலே  எண்ணெய்விட்டுப்  பாகம்பண்ணப்படக்கடவது;  பாகம்பண்ணப்பட்டபின்பு  அதைக்  கொண்டுவந்து,  போஜனபலியாகப்  பாகம்பண்ணப்பட்ட  துண்டுகளைக்  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையாகப்  படைக்கக்கடவாய்.  (லேவியராகமம்  6:21)

athu  sattiyilea  e'n'neyvittup  paagampa'n'nappadakkadavathu;  paagampa'n'nappattapinbu  athaik  ko'nduvanthu,  poajanabaliyaagap  paagampa'n'nappatta  thu'nduga'laik  karththarukkuch  sugantha  vaasanaiyaagap  padaikkakkadavaay.  (leaviyaraagamam  6:21)

அவன்  குமாரரில்  அவனுடைய  ஸ்தலத்திலே  அபிஷேகம்பண்ணப்படுகிற  ஆசாரியனும்  அப்படியே  செய்யக்கடவன்;  அது  முழுவதும்  தகனிக்கப்படவேண்டும்;  அது  கர்த்தர்  நியமித்த  நித்திய  கட்டளை.  (லேவியராகமம்  6:22)

avan  kumaararil  avanudaiya  sthalaththilea  abisheagampa'n'nappadugi’ra  aasaariyanum  appadiyea  seyyakkadavan;  athu  muzhuvathum  thaganikkappadavea'ndum;  athu  karththar  niyamiththa  niththiya  katta'lai.  (leaviyaraagamam  6:22)

ஆசாரியனுக்காக  இடப்படும்  எந்தப்  போஜனபலியும்  புசிக்கப்படாமல்,  முழுவதும்  தகனிக்கப்படவேண்டும்  என்றார்.  (லேவியராகமம்  6:23)

aasaariyanukkaaga  idappadum  enthap  poajanabaliyum  pusikkappadaamal,  muzhuvathum  thaganikkappadavea'ndum  en’raar.  (leaviyaraagamam  6:23)

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  6:24)

pinnum  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  6:24)

நீ  ஆரோனோடும்  அவன்  குமாரரோடும்  சொல்லவேண்டியதாவது,  பாவநிவாரணபலியின்  பிரமாணம்  என்னவென்றால்,  சர்வாங்க  தகனபலி  கொல்லப்படும்  இடத்தில்  பாவநிவாரணபலியும்  கர்த்தருடைய  சந்நிதியில்  கொல்லப்படக்கடவது;  அது  மகா  பரிசுத்தமானது.  (லேவியராகமம்  6:25)

nee  aaroanoadum  avan  kumaararoadum  sollavea'ndiyathaavathu,  paavanivaara'nabaliyin  piramaa'nam  ennaven’raal,  sarvaangga  thaganabali  kollappadum  idaththil  paavanivaara'nabaliyum  karththarudaiya  sannithiyil  kollappadakkadavathu;  athu  mahaa  parisuththamaanathu.  (leaviyaraagamam  6:25)

பாவநிவிர்த்திசெய்ய  அதைப்  பலியிடுகிற  ஆசாரியன்  அதைப்  புசிக்கக்கடவன்;  ஆசரிப்புக்  கூடாரத்தின்  பிராகாரமாகிய  பரிசுத்த  ஸ்தலத்திலே  அது  புசிக்கப்படவேண்டும்.  (லேவியராகமம்  6:26)

paavanivirththiseyya  athaip  baliyidugi’ra  aasaariyan  athaip  pusikkakkadavan;  aasarippuk  koodaaraththin  piraagaaramaagiya  parisuththa  sthalaththilea  athu  pusikkappadavea'ndum.  (leaviyaraagamam  6:26)

அதின்  மாம்சத்தில்  படுகிறது  எதுவும்  பரிசுத்தமாயிருக்கும்;  அதின்  இரத்தத்திலே  கொஞ்சம்  ஒரு  வஸ்திரத்தில்  தெறித்ததானால்,  இரத்தந்தெறித்த  வஸ்திரத்தைப்  பரிசுத்த  ஸ்தலத்தில்  கழுவவேண்டும்.  (லேவியராகமம்  6:27)

athin  maamsaththil  padugi’rathu  ethuvum  parisuththamaayirukkum;  athin  iraththaththilea  kogncham  oru  vasthiraththil  the’riththathaanaal,  iraththanthe’riththa  vasthiraththaip  parisuththa  sthalaththil  kazhuvavea'ndum.  (leaviyaraagamam  6:27)

அது  சமைக்கப்பட்ட  மண்பாண்டம்  உடைக்கப்படவேண்டும்;  செப்புப்பானையில்  சமைக்கப்பட்டதானால்,  அது  விளக்கப்பட்டுத்  தண்ணீரில்  கழுவப்படவேண்டும்.  (லேவியராகமம்  6:28)

athu  samaikkappatta  ma'npaa'ndam  udaikkappadavea'ndum;  seppuppaanaiyil  samaikkappattathaanaal,  athu  vi'lakkappattuth  tha'n'neeril  kazhuvappadavea'ndum.  (leaviyaraagamam  6:28)

ஆசாரியரில்  ஆண்மக்கள்  யாவரும்  அதைப்  புசிப்பார்களாக;  அது  மகா  பரிசுத்தமானது.  (லேவியராகமம்  6:29)

aasaariyaril  aa'nmakka'l  yaavarum  athaip  pusippaarga'laaga;  athu  mahaa  parisuththamaanathu.  (leaviyaraagamam  6:29)

எந்தப்  பாவநிவாரணபலியின்  இரத்தத்தில்  கொஞ்சம்  பரிசுத்த  ஸ்தலத்தில்  பாவநிவிர்த்தியின்பொருட்டு  ஆசரிப்புக்  கூடாரத்திற்குள்ளே  கொண்டுவரப்பட்டதோ,  அந்தப்  பலி  புசிக்கப்படலாகாது,  அது  அக்கினியிலே  தகனிக்கப்படவேண்டும்.  (லேவியராகமம்  6:30)

enthap  paavanivaara'nabaliyin  iraththaththil  kogncham  parisuththa  sthalaththil  paavanivirththiyinporuttu  aasarippuk  koodaaraththi’rku'l'lea  ko'nduvarappattathoa,  anthap  bali  pusikkappadalaagaathu,  athu  akkiniyilea  thaganikkappadavea'ndum.  (leaviyaraagamam  6:30)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!