Thursday, November 03, 2016

Leaviyaraagamam 4 | லேவியராகமம் 4 | Leviticus 4

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  4:1)

pinnum  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  4:1)

நீ  இஸ்ரவேல்  புத்திரரிடத்தில்  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  ஒருவன்  கர்த்தருடைய  கட்டளைகளில்  யாதொன்றை  அறியாமையினால்  மீறி,  செய்யத்தகாததைச்  செய்து  பாவத்துக்கு  உட்பட்டால்  அறியவேண்டியதாவது:  (லேவியராகமம்  4:2)

nee  israveal  puththiraridaththil  sollavea'ndiyathu  ennaven’raal,  oruvan  karththarudaiya  katta'laiga'lil  yaathon’rai  a’riyaamaiyinaal  mee’ri,  seyyaththagaathathaich  seythu  paavaththukku  udpattaal  a’riyavea'ndiyathaavathu:  (leaviyaraagamam  4:2)

அபிஷேகம்  பெற்ற  ஆசாரியன்,  ஜனங்கள்  குற்றத்திற்கு  உட்படத்தக்கதாகப்  பாவஞ்செய்தால்,  தான்  செய்த  பாவத்தினிமித்தம்  பழுதற்ற  ஒரு  இளங்காளையைப்  பாவநிவாரணபலியாகக்  கர்த்தருடைய  சந்நிதியில்  கொண்டுவரக்கடவன்.  (லேவியராகமம்  4:3)

abisheagam  pet’ra  aasaariyan,  janangga'l  kut’raththi’rku  udpadaththakkathaagap  paavagnseythaal,  thaan  seytha  paavaththinimiththam  pazhuthat’ra  oru  i'langkaa'laiyaip  paavanivaara'nabaliyaagak  karththarudaiya  sannithiyil  ko'nduvarakkadavan.  (leaviyaraagamam  4:3)

அவன்  அந்தக்  காளையை  ஆசரிப்புக்  கூடாரவாசலிலே  கர்த்தருடைய  சந்நிதியில்  கொண்டுவந்து,  அதின்  தலைமேல்  தன்  கையை  வைத்து,  கர்த்தருடைய  சந்நிதியில்  அதைக்  கொல்லக்கடவன்.  (லேவியராகமம்  4:4)

avan  anthak  kaa'laiyai  aasarippuk  koodaaravaasalilea  karththarudaiya  sannithiyil  ko'nduvanthu,  athin  thalaimeal  than  kaiyai  vaiththu,  karththarudaiya  sannithiyil  athaik  kollakkadavan.  (leaviyaraagamam  4:4)

அப்பொழுது,  அபிஷேகம்  பெற்ற  ஆசாரியன்  அந்தக்  காளையின்  இரத்தத்தில்  கொஞ்சம்  எடுத்து,  அதை  ஆசரிப்புக்  கூடாரத்தில்  கொண்டுவந்து,  (லேவியராகமம்  4:5)

appozhuthu,  abisheagam  pet’ra  aasaariyan  anthak  kaa'laiyin  iraththaththil  kogncham  eduththu,  athai  aasarippuk  koodaaraththil  ko'nduvanthu,  (leaviyaraagamam  4:5)

தன்  விரலை  இரத்தத்தில்  தோய்த்து,  பரிசுத்த  ஸ்தலத்தின்  திரைக்கு  எதிரே  கர்த்தருடைய  சந்நிதியில்  ஏழுதரம்  தெளிக்கக்கடவன்.  (லேவியராகமம்  4:6)

than  viralai  iraththaththil  thoayththu,  parisuththa  sthalaththin  thiraikku  ethirea  karththarudaiya  sannithiyil  eazhutharam  the'likkakkadavan.  (leaviyaraagamam  4:6)

பின்பு,  ஆசாரியன்  அந்த  இரத்தத்தில்  கொஞ்சம்  எடுத்து,  ஆசரிப்புக்  கூடாரத்திலே  கர்த்தருடைய  சந்நிதியில்  இருக்கும்  சுகந்த  தூபபீடத்துக்  கொம்புகளின்மேல்  பூசி,  காளையினுடைய  மற்ற  இரத்தம்  முழுவதையும்  ஆசரிப்புக்  கூடாரவாசலுக்கு  முன்பாக  இருக்கிற  தகனபலிபீடத்தின்  அடியிலே  ஊற்றிவிட்டு,  (லேவியராகமம்  4:7)

pinbu,  aasaariyan  antha  iraththaththil  kogncham  eduththu,  aasarippuk  koodaaraththilea  karththarudaiya  sannithiyil  irukkum  sugantha  thoobapeedaththuk  kombuga'linmeal  poosi,  kaa'laiyinudaiya  mat’ra  iraththam  muzhuvathaiyum  aasarippuk  koodaaravaasalukku  munbaaga  irukki’ra  thaganabalipeedaththin  adiyilea  oot’rivittu,  (leaviyaraagamam  4:7)

பாவநிவாரணபலியான  காளையின்  எல்லாக்  கொழுப்புமாகிய  குடல்களை  மூடிய  கொழுப்பையும்,  அவைகள்மேல்  இருக்கிற  கொழுப்பு  முழுவதையும்,  (லேவியராகமம்  4:8)

paavanivaara'nabaliyaana  kaa'laiyin  ellaak  kozhuppumaagiya  kudalga'lai  moodiya  kozhuppaiyum,  avaiga'lmeal  irukki’ra  kozhuppu  muzhuvathaiyum,  (leaviyaraagamam  4:8)

இரண்டு  குண்டிக்காய்களையும்,  அவைகள்மேல்  சிறு  குடல்களினிடத்தில்  இருக்கிற  கொழுப்பையும்,  குண்டிக்காய்களோடேகூடக்  கல்லீரலின்மேல்  இருக்கிற  ஜவ்வையும்,  (லேவியராகமம்  4:9)

ira'ndu  ku'ndikkaayga'laiyum,  avaiga'lmeal  si’ru  kudalga'linidaththil  irukki’ra  kozhuppaiyum,  ku'ndikkaayga'loadeakoodak  kalleeralinmeal  irukki’ra  javvaiyum,  (leaviyaraagamam  4:9)

சமாதானபலியின்  காளையிலிருந்து  எடுக்கிறதுபோல  அதிலிருந்து  எடுத்து,  அவைகளைத்  தகனபலிபீடத்தின்மேல்  தகனிக்கக்கடவன்.  (லேவியராகமம்  4:10)

samaathaanabaliyin  kaa'laiyilirunthu  edukki’rathupoala  athilirunthu  eduththu,  avaiga'laith  thaganabalipeedaththinmeal  thaganikkakkadavan.  (leaviyaraagamam  4:10)

காளையின்  தோலையும்,  அதின்  மாம்சம்  முழுவதையும்,  அதின்  தலையையும்,  தொடைகளையும்,  அதின்  குடல்களையும்,  அதின்  சாணியையும்,  (லேவியராகமம்  4:11)

kaa'laiyin  thoalaiyum,  athin  maamsam  muzhuvathaiyum,  athin  thalaiyaiyum,  thodaiga'laiyum,  athin  kudalga'laiyum,  athin  saa'niyaiyum,  (leaviyaraagamam  4:11)

காளை  முழுவதையும்  பாளயத்துக்குப்  புறம்பே  சாம்பல்  கொட்டுகிற  சுத்தமான  இடத்திலே  கொண்டுபோய்,  கட்டைகளின்மேல்  போட்டு,  அக்கினியாலே  சுட்டெரிக்கக்கடவன்;  சாம்பல்  கொட்டியிருக்கிற  இடத்திலே  அதைச்  சுட்டெரிக்கக்கடவன்.  (லேவியராகமம்  4:12)

kaa'lai  muzhuvathaiyum  paa'layaththukkup  pu’rambea  saambal  kottugi’ra  suththamaana  idaththilea  ko'ndupoay,  kattaiga'linmeal  poattu,  akkiniyaalea  sutterikkakkadavan;  saambal  kottiyirukki’ra  idaththilea  athaich  sutterikkakkadavan.  (leaviyaraagamam  4:12)

இஸ்ரவேல்  சபையார்  எல்லாரும்  அறியாமையினால்  பாவஞ்செய்து,  காரியம்  தங்கள்  கண்களுக்கு  மறைவாயிருக்கிறதினால்,  கர்த்தருடைய  கட்டளைகளில்  யாதொன்றை  மீறி,  செய்யத்தகாததைச்  செய்து,  பாவத்துக்குட்பட்டுக்  குற்றவாளிகளானால்,  (லேவியராகமம்  4:13)

israveal  sabaiyaar  ellaarum  a’riyaamaiyinaal  paavagnseythu,  kaariyam  thangga'l  ka'nga'lukku  ma’raivaayirukki’rathinaal,  karththarudaiya  katta'laiga'lil  yaathon’rai  mee’ri,  seyyaththagaathathaich  seythu,  paavaththukkudpattuk  kut’ravaa'liga'laanaal,  (leaviyaraagamam  4:13)

அவர்கள்  செய்த  பாவம்  தெரியவரும்போது,  சபையார்  அந்தப்  பாவத்தினிமித்தம்  ஒரு  இளங்காளையை  ஆசரிப்புக்  கூடாரத்துக்கு  முன்பாகப்  பலியிடக்  கொண்டுவரவேண்டும்.  (லேவியராகமம்  4:14)

avarga'l  seytha  paavam  theriyavarumpoathu,  sabaiyaar  anthap  paavaththinimiththam  oru  i'langkaa'laiyai  aasarippuk  koodaaraththukku  munbaagap  baliyidak  ko'nduvaravea'ndum.  (leaviyaraagamam  4:14)

சபையின்  மூப்பர்  கர்த்தருடைய  சந்நிதியில்  தங்கள்  கைகளை  அதின்  தலைமேல்  வைக்கக்கடவர்கள்;  பின்பு  கர்த்தருடைய  சந்நிதியில்  அந்தக்  காளையைக்  கொல்லவேண்டும்.  (லேவியராகமம்  4:15)

sabaiyin  mooppar  karththarudaiya  sannithiyil  thangga'l  kaiga'lai  athin  thalaimeal  vaikkakkadavarga'l;  pinbu  karththarudaiya  sannithiyil  anthak  kaa'laiyaik  kollavea'ndum.  (leaviyaraagamam  4:15)

அப்பொழுது,  அபிஷேகம்  பெற்ற  ஆசாரியன்  அதின்  இரத்தத்தில்  கொஞ்சம்  எடுத்து,  ஆசரிப்புக்  கூடாரத்தில்  கொண்டுவந்து,  (லேவியராகமம்  4:16)

appozhuthu,  abisheagam  pet’ra  aasaariyan  athin  iraththaththil  kogncham  eduththu,  aasarippuk  koodaaraththil  ko'nduvanthu,  (leaviyaraagamam  4:16)

தன்  விரலை  இரத்தத்தில்  தோய்த்து,  கர்த்தருடைய  சந்நிதியில்  திரைக்கு  எதிரே  ஏழுதரம்  தெளித்து,  (லேவியராகமம்  4:17)

than  viralai  iraththaththil  thoayththu,  karththarudaiya  sannithiyil  thiraikku  ethirea  eazhutharam  the'liththu,  (leaviyaraagamam  4:17)

ஆசரிப்புக்  கூடாரத்தில்  கர்த்தருடைய  சந்நிதியில்  இருக்கும்  பலிபீடத்தின்  கொம்புகளின்மேல்  அந்த  இரத்தத்தில்  கொஞ்சம்  பூசி,  மற்ற  இரத்தமெல்லாம்  ஆசரிப்புக்  கூடாரவாசலில்  இருக்கிற  தகனபலிபீடத்தின்  அடியிலே  ஊற்றிவிட்டு,  (லேவியராகமம்  4:18)

aasarippuk  koodaaraththil  karththarudaiya  sannithiyil  irukkum  balipeedaththin  kombuga'linmeal  antha  iraththaththil  kogncham  poosi,  mat’ra  iraththamellaam  aasarippuk  koodaaravaasalil  irukki’ra  thaganabalipeedaththin  adiyilea  oot’rivittu,  (leaviyaraagamam  4:18)

அதின்  கொழுப்பு  முழுவதையும்  அதிலிருந்து  எடுத்து,  பலிபீடத்தின்மேல்  தகனித்து,  (லேவியராகமம்  4:19)

athin  kozhuppu  muzhuvathaiyum  athilirunthu  eduththu,  balipeedaththinmeal  thaganiththu,  (leaviyaraagamam  4:19)

பாவநிவாரணபலியின்  காளையைச்  செய்தபிரகாரம்  இந்தக்  காளையையும்  செய்து,  இவ்வண்ணமாய்  ஆசாரியன்  அவர்களுக்குப்  பாவநிவிர்த்தி  செய்யக்கடவன்;  அப்பொழுது  அது  அவர்களுக்கு  மன்னிக்கப்படும்.  (லேவியராகமம்  4:20)

paavanivaara'nabaliyin  kaa'laiyaich  seythapiragaaram  inthak  kaa'laiyaiyum  seythu,  ivva'n'namaay  aasaariyan  avarga'lukkup  paavanivirththi  seyyakkadavan;  appozhuthu  athu  avarga'lukku  mannikkappadum.  (leaviyaraagamam  4:20)

பின்பு  காளையைப்  பாளயத்துக்குப்  புறம்பே  கொண்டுபோய்,  முந்தின  காளையைச்  சுட்டெரித்ததுபோலச்  சுட்டெரிக்கக்கடவன்;  இது  சபைக்காகச்  செய்யப்படும்  பாவநிவாரணபலி.  (லேவியராகமம்  4:21)

pinbu  kaa'laiyaip  paa'layaththukkup  pu’rambea  ko'ndupoay,  munthina  kaa'laiyaich  sutteriththathupoalach  sutterikkakkadavan;  ithu  sabaikkaagach  seyyappadum  paavanivaara'nabali.  (leaviyaraagamam  4:21)

ஒரு  பிரபு  தன்  தேவனாகிய  கர்த்தருடைய  கட்டளைகளில்  யாதொன்றை  மீறி,  அறியாமையினால்  செய்யத்தகாததைச்  செய்து,  பாவத்துக்குட்பட்டுக்  குற்றவாளியானால்,  (லேவியராகமம்  4:22)

oru  pirabu  than  theavanaagiya  karththarudaiya  katta'laiga'lil  yaathon’rai  mee’ri,  a’riyaamaiyinaal  seyyaththagaathathaich  seythu,  paavaththukkudpattuk  kut’ravaa'liyaanaal,  (leaviyaraagamam  4:22)

தான்  செய்தது  பாவம்  என்று  தனக்குத்  தெரியவரும்போது,  அவன்  வெள்ளாடுகளில்  பழுதற்ற  ஒரு  இளங்கடாவைப்  பலியாகக்  கொண்டுவந்து,  (லேவியராகமம்  4:23)

thaan  seythathu  paavam  en’ru  thanakkuth  theriyavarumpoathu,  avan  ve'l'laaduga'lil  pazhuthat’ra  oru  i'langkadaavaip  baliyaagak  ko'nduvanthu,  (leaviyaraagamam  4:23)

அந்தக்  கடாவின்  தலைமேல்  தன்  கையை  வைத்து,  கர்த்தருடைய  சந்நிதியில்  சர்வாங்க  தகனபலி  கொல்லப்படும்  இடத்தில்  அதைக்  கொல்லக்கடவன்;  இது  பாவநிவாரணபலி.  (லேவியராகமம்  4:24)

anthak  kadaavin  thalaimeal  than  kaiyai  vaiththu,  karththarudaiya  sannithiyil  sarvaangga  thaganabali  kollappadum  idaththil  athaik  kollakkadavan;  ithu  paavanivaara'nabali.  (leaviyaraagamam  4:24)

அப்பொழுது  ஆசாரியன்  அதின்  இரத்தத்தில்  கொஞ்சம்  தன்  விரலால்  எடுத்து,  தகனபலிபீடத்துக்  கொம்புகளின்மேல்  பூசி,  மற்ற  இரத்தத்தைத்  தகனபலிபீடத்தின்  அடியிலே  ஊற்றிவிட்டு,  (லேவியராகமம்  4:25)

appozhuthu  aasaariyan  athin  iraththaththil  kogncham  than  viralaal  eduththu,  thaganabalipeedaththuk  kombuga'linmeal  poosi,  mat’ra  iraththaththaith  thaganabalipeedaththin  adiyilea  oot’rivittu,  (leaviyaraagamam  4:25)

அதின்  கொழுப்பு  முழுவதையும்,  சமாதானபலியின்  கொழுப்பைப்போல,  பலிபீடத்தின்மேல்  தகனித்து,  இவ்வண்ணமாய்  ஆசாரியன்  அவன்  செய்த  பாவத்தைக்குறித்து  அவனுக்காகப்  பாவநிவிர்த்தி  செய்யக்கடவன்;  அப்பொழுது  அது  அவனுக்கு  மன்னிக்கப்படும்.  (லேவியராகமம்  4:26)

athin  kozhuppu  muzhuvathaiyum,  samaathaanabaliyin  kozhuppaippoala,  balipeedaththinmeal  thaganiththu,  ivva'n'namaay  aasaariyan  avan  seytha  paavaththaikku’riththu  avanukkaagap  paavanivirththi  seyyakkadavan;  appozhuthu  athu  avanukku  mannikkappadum.  (leaviyaraagamam  4:26)

சாதாரண  ஜனங்களில்  ஒருவன்  அறியாமையினால்  கர்த்தரின்  கட்டளைகளில்  யாதொன்றை  மீறி,  செய்யத்தகாததைச்  செய்து,  பாவத்துக்குட்பட்டுக்  குற்றவாளியானால்,  (லேவியராகமம்  4:27)

saathaara'na  janangga'lil  oruvan  a’riyaamaiyinaal  karththarin  katta'laiga'lil  yaathon’rai  mee’ri,  seyyaththagaathathaich  seythu,  paavaththukkudpattuk  kut’ravaa'liyaanaal,  (leaviyaraagamam  4:27)

தான்  செய்தது  பாவம்  என்று  தனக்குத்  தெரியவரும்போது,  அவன்  தான்  செய்த  பாவத்தினிமித்தம்  வெள்ளாடுகளில்  பழுதற்ற  ஒரு  பெண்குட்டியைப்  பலியாகக்  கொண்டுவந்து,  (லேவியராகமம்  4:28)

thaan  seythathu  paavam  en’ru  thanakkuth  theriyavarumpoathu,  avan  thaan  seytha  paavaththinimiththam  ve'l'laaduga'lil  pazhuthat’ra  oru  pe'nkuttiyaip  baliyaagak  ko'nduvanthu,  (leaviyaraagamam  4:28)

பாவநிவாரணபலியின்  தலைமேல்  தன்  கையை  வைத்து,  சர்வாங்க  தகனபலியிடும்  இடத்தில்  அந்தப்  பாவநிவாரணபலியைக்  கொல்லக்கடவன்.  (லேவியராகமம்  4:29)

paavanivaara'nabaliyin  thalaimeal  than  kaiyai  vaiththu,  sarvaangga  thaganabaliyidum  idaththil  anthap  paavanivaara'nabaliyaik  kollakkadavan.  (leaviyaraagamam  4:29)

அப்பொழுது  ஆசாரியன்  அதின்  இரத்தத்தில்  கொஞ்சம்  தன்  விரலால்  எடுத்து,  தகனபலிபீடத்துக்  கொம்புகளின்மேல்  பூசி,  மற்ற  இரத்தமெல்லாம்  பலிபீடத்தின்  அடியிலே  ஊற்றிவிட்டு,  (லேவியராகமம்  4:30)

appozhuthu  aasaariyan  athin  iraththaththil  kogncham  than  viralaal  eduththu,  thaganabalipeedaththuk  kombuga'linmeal  poosi,  mat’ra  iraththamellaam  balipeedaththin  adiyilea  oot’rivittu,  (leaviyaraagamam  4:30)

சமாதானபலியிலிருந்து  கொழுப்பை  எடுப்பதுபோல,  அதின்  கொழுப்பு  முழுவதையும்  எடுத்து,  ஆசாரியன்  பலிபீடத்தின்மேல்  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையாகத்  தகனித்து,  இவ்வண்ணமாய்  அவனுக்குப்  பாவநிவிர்த்தி  செய்யக்கடவன்;  அப்பொழுது  அது  அவனுக்கு  மன்னிக்கப்படும்.  (லேவியராகமம்  4:31)

samaathaanabaliyilirunthu  kozhuppai  eduppathupoala,  athin  kozhuppu  muzhuvathaiyum  eduththu,  aasaariyan  balipeedaththinmeal  karththarukkuch  sugantha  vaasanaiyaagath  thaganiththu,  ivva'n'namaay  avanukkup  paavanivirththi  seyyakkadavan;  appozhuthu  athu  avanukku  mannikkappadum.  (leaviyaraagamam  4:31)

அவன்  பாவநிவாரணபலியாக  ஒரு  ஆட்டுக்குட்டியைக்  கொண்டுவருவானாகில்,  பழுதற்ற  பெண்குட்டியைக்  கொண்டுவந்து,  (லேவியராகமம்  4:32)

avan  paavanivaara'nabaliyaaga  oru  aattukkuttiyaik  ko'nduvaruvaanaagil,  pazhuthat’ra  pe'nkuttiyaik  ko'nduvanthu,  (leaviyaraagamam  4:32)

அந்தப்  பாவநிவாரணபலியின்  தலைமேல்  தன்  கையை  வைத்து,  சர்வாங்க  தகனபலி  கொல்லப்படும்  இடத்தில்  அதைப்  பாவநிவாரணபலியாகக்  கொல்லக்கடவன்.  (லேவியராகமம்  4:33)

anthap  paavanivaara'nabaliyin  thalaimeal  than  kaiyai  vaiththu,  sarvaangga  thaganabali  kollappadum  idaththil  athaip  paavanivaara'nabaliyaagak  kollakkadavan.  (leaviyaraagamam  4:33)

அப்பொழுது  ஆசாரியன்  அந்தப்  பாவநிவாரணபலியின்  இரத்தத்தில்  கொஞ்சம்  தன்  விரலால்  எடுத்து,  தகன  பலிபீடத்துக்  கொம்புகளின்மேல்  பூசி,  மற்ற  இரத்தமெல்லாம்  பலிபீடத்தின்  அடியிலே  ஊற்றிவிட்டு,  (லேவியராகமம்  4:34)

appozhuthu  aasaariyan  anthap  paavanivaara'nabaliyin  iraththaththil  kogncham  than  viralaal  eduththu,  thagana  balipeedaththuk  kombuga'linmeal  poosi,  mat’ra  iraththamellaam  balipeedaththin  adiyilea  oot’rivittu,  (leaviyaraagamam  4:34)

சமாதான  பலியான  ஆட்டுக்குட்டியின்  கொழுப்பை  எடுக்கிறதுபோல,  அதின்  கொழுப்பு  முழுவதையும்  எடுத்து,  கர்த்தருக்கு  இடப்படும்  தகனபலிகளைப்போல,  பலிபீடத்தின்மேல்  ஆசாரியன்  தகனிக்கவேண்டும்;  இவ்வண்ணமாய்  அவன்  செய்த  பாவத்துக்கு  ஆசாரியன்  பாவநிவிர்த்தி  செய்யக்கடவன்;  அப்பொழுது  அது  அவனுக்கு  மன்னிக்கப்படும்.  (லேவியராகமம்  4:35)

samaathaana  baliyaana  aattukkuttiyin  kozhuppai  edukki’rathupoala,  athin  kozhuppu  muzhuvathaiyum  eduththu,  karththarukku  idappadum  thaganabaliga'laippoala,  balipeedaththinmeal  aasaariyan  thaganikkavea'ndum;  ivva'n'namaay  avan  seytha  paavaththukku  aasaariyan  paavanivirththi  seyyakkadavan;  appozhuthu  athu  avanukku  mannikkappadum.  (leaviyaraagamam  4:35)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!