Saturday, November 05, 2016

Leaviyaraagamam 24 | லேவியராகமம் 24 | Leviticus 24

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  24:1)

pinnum  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  24:1)

குத்துவிளக்கு  எப்பொழுதும்  எரிந்துகொண்டிருக்கும்படி  அதற்காக  இடித்துப்  பிழிந்த  தெளிவான  ஒலிவ  எண்ணெயை  இஸ்ரவேல்  புத்திரர்  உன்னிடத்தில்  கொண்டுவரும்படி  அவர்களுக்குக்  கட்டளையிடு.  (லேவியராகமம்  24:2)

kuththuvi'lakku  eppozhuthum  erinthuko'ndirukkumpadi  atha’rkaaga  idiththup  pizhintha  the'livaana  oliva  e'n'neyai  israveal  puththirar  unnidaththil  ko'nduvarumpadi  avarga'lukkuk  katta'laiyidu.  (leaviyaraagamam  24:2)

ஆசரிப்புக்  கூடாரத்தில்  சாட்சிசந்நிதியின்  திரைக்கு  வெளிப்புறமாக  ஆரோன்  அதை  எப்பொழுதும்  சாயங்காலம்  தொடங்கி  விடியற்காலம்மட்டும்  கர்த்தருடைய  சந்நிதியில்  எரியும்படி  ஏற்றக்கடவன்;  இது  உங்கள்  தலைமுறைதோறும்  செல்லவேண்டிய  நித்திய  கட்டளை.  (லேவியராகமம்  24:3)

aasarippuk  koodaaraththil  saadchisannithiyin  thiraikku  ve'lippu’ramaaga  aaroan  athai  eppozhuthum  saayanggaalam  thodanggi  vidiya’rkaalammattum  karththarudaiya  sannithiyil  eriyumpadi  eat’rakkadavan;  ithu  ungga'l  thalaimu’raithoa’rum  sellavea'ndiya  niththiya  katta'lai.  (leaviyaraagamam  24:3)

அவன்  எப்பொழுதும்  கர்த்தருடைய  சந்நிதியில்  பரிசுத்தமான  குத்துவிளக்கின்மேல்  இருக்கிற  விளக்குகளை  எரிய  வைக்கக்கடவன்.  (லேவியராகமம்  24:4)

avan  eppozhuthum  karththarudaiya  sannithiyil  parisuththamaana  kuththuvi'lakkinmeal  irukki’ra  vi'lakkuga'lai  eriya  vaikkakkadavan.  (leaviyaraagamam  24:4)

அன்றியும்  நீ  மெல்லிய  மாவை  எடுத்து,  அதைப்  பன்னிரண்டு  அப்பங்களாகச்  சுடுவாயாக;  ஒவ்வொரு  அப்பம்  மரக்காலிலே  பத்தில்  இரண்டுபங்கு  மாவினால்  செய்யப்படவேண்டும்.  (லேவியராகமம்  24:5)

an’riyum  nee  melliya  maavai  eduththu,  athaip  pannira'ndu  appangga'laagach  suduvaayaaga;  ovvoru  appam  marakkaalilea  paththil  ira'ndupanggu  maavinaal  seyyappadavea'ndum.  (leaviyaraagamam  24:5)

அவைகளை  நீ  கர்த்தருடைய  சந்நிதியில்  பரிசுத்தமான  மேஜையின்மேல்  இரண்டு  அடுக்காக,  ஒவ்வொரு  அடுக்கில்  அவ்வாறு  அப்பம்  இருக்கும்படியாக  வைத்து,  (லேவியராகமம்  24:6)

avaiga'lai  nee  karththarudaiya  sannithiyil  parisuththamaana  meajaiyinmeal  ira'ndu  adukkaaga,  ovvoru  adukkil  avvaa’ru  appam  irukkumpadiyaaga  vaiththu,  (leaviyaraagamam  24:6)

ஒவ்வொரு  அடுக்கினிடத்தில்  சுத்தமான  தூபவர்க்கம்  போடக்கடவாய்;  அது  அப்பத்தோடிருந்து,  ஞாபகக்குறியாகக்  கர்த்தருக்கேற்ற  தகனபலியாயிருக்கும்.  (லேவியராகமம்  24:7)

ovvoru  adukkinidaththil  suththamaana  thoobavarkkam  poadakkadavaay;  athu  appaththoadirunthu,  gnaabagakku’riyaagak  karththarukkeat’ra  thaganabaliyaayirukkum.  (leaviyaraagamam  24:7)

அப்பத்தை  நித்திய  உடன்படிக்கையாக  இஸ்ரவேல்  புத்திரர்  கையிலே  வாங்கி,  ஓய்வுநாள்தோறும்  கர்த்தருடைய  சந்நிதியில்  அடுக்கிவைக்கக்கடவன்.  (லேவியராகமம்  24:8)

appaththai  niththiya  udanpadikkaiyaaga  israveal  puththirar  kaiyilea  vaanggi,  oayvunaa'lthoa’rum  karththarudaiya  sannithiyil  adukkivaikkakkadavan.  (leaviyaraagamam  24:8)

அது  ஆரோனையும்  அவன்  குமாரரையும்  சேரும்;  அதைப்  பரிசுத்த  இடத்திலே  புசிக்கக்கடவர்கள்;  நித்திய  கட்டளையாகக்  கர்த்தருக்கு  இடப்படும்  தகனபலிகளில்  அது  அவனுக்கு  மகா  பரிசுத்தமாயிருக்கும்  என்றார்.  (லேவியராகமம்  24:9)

athu  aaroanaiyum  avan  kumaararaiyum  searum;  athaip  parisuththa  idaththilea  pusikkakkadavarga'l;  niththiya  katta'laiyaagak  karththarukku  idappadum  thaganabaliga'lil  athu  avanukku  mahaa  parisuththamaayirukkum  en’raar.  (leaviyaraagamam  24:9)

அக்காலத்திலே  இஸ்ரவேல்  ஜாதியான  ஸ்திரீக்கும்  எகிப்திய  புருஷனுக்கும்  பிறந்த  புத்திரனாகிய  ஒருவன்  இஸ்ரவேல்  புத்திரரோடேகூடப்  புறப்பட்டு  வந்திருந்தான்;  இவனும்  இஸ்ரவேலனாகிய  ஒரு  மனிதனும்  பாளயத்திலே  சண்டைபண்ணினார்கள்.  (லேவியராகமம்  24:10)

akkaalaththilea  israveal  jaathiyaana  sthireekkum  egipthiya  purushanukkum  pi’rantha  puththiranaagiya  oruvan  israveal  puththiraroadeakoodap  pu’rappattu  vanthirunthaan;  ivanum  isravealanaagiya  oru  manithanum  paa'layaththilea  sa'ndaipa'n'ninaarga'l.  (leaviyaraagamam  24:10)

அப்பொழுது  இஸ்ரவேல்  ஜாதியான  அந்த  ஸ்திரீயின்  மகன்  கர்த்தரின்  நாமத்தை  நிந்தித்துத்  தூஷித்தான்.  அவனை  மோசேயினிடத்தில்  கொண்டுவந்தார்கள்.  அவன்  தாயின்  பேர்  செலோமித்;  அவள்  தாண்  கோத்திரத்தானாகிய  திப்ரியின்  குமாரத்தி.  (லேவியராகமம்  24:11)

appozhuthu  israveal  jaathiyaana  antha  sthireeyin  magan  karththarin  naamaththai  ninthiththuth  thooshiththaan.  avanai  moaseayinidaththil  ko'nduvanthaarga'l.  avan  thaayin  pear  seloamith;  ava'l  thaa'n  koaththiraththaanaagiya  thibriyin  kumaaraththi.  (leaviyaraagamam  24:11)

கர்த்தரின்  வாக்கினாலே  தங்களுக்கு  உத்தரவு  வருமட்டும்,  அவனைக்  காவல்படுத்தினார்கள்.  (லேவியராகமம்  24:12)

karththarin  vaakkinaalea  thangga'lukku  uththaravu  varumattum,  avanaik  kaavalpaduththinaarga'l.  (leaviyaraagamam  24:12)

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  24:13)

appozhuthu  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  24:13)

தூஷித்தவனைப்  பாளயத்துக்குப்  புறம்பே  கொண்டுபோ;  கேட்டவர்கள்  எல்லாரும்  தங்கள்  கைகளை  அவன்  தலையின்மேல்  வைப்பார்களாக;  பின்பு  சபையார்  எல்லாரும்  அவனைக்  கல்லெறியக்கடவர்கள்.  (லேவியராகமம்  24:14)

thooshiththavanaip  paa'layaththukkup  pu’rambea  ko'ndupoa;  keattavarga'l  ellaarum  thangga'l  kaiga'lai  avan  thalaiyinmeal  vaippaarga'laaga;  pinbu  sabaiyaar  ellaarum  avanaik  kalle’riyakkadavarga'l.  (leaviyaraagamam  24:14)

மேலும்  நீ  இஸ்ரவேல்  புத்திரரை  நோக்கி:  எவனாகிலும்  தன்  தேவனைத்  தூஷித்தால்,  அவன்  தன்  பாவத்தைச்  சுமப்பான்.  (லேவியராகமம்  24:15)

mealum  nee  israveal  puththirarai  noakki:  evanaagilum  than  theavanaith  thooshiththaal,  avan  than  paavaththaich  sumappaan.  (leaviyaraagamam  24:15)

கர்த்தருடைய  நாமத்தை  நிந்திக்கிறவன்  கொலைசெய்யப்படவேண்டும்;  சபையார்  எல்லாரும்  அவனைக்  கல்லெறியவேண்டும்;  பரதேசியானாலும்  சுதேசியானாலும்  கர்த்தரின்  நாமத்தைத்  தூஷிக்கிறவன்  கொலைசெய்யப்படவேண்டும்.  (லேவியராகமம்  24:16)

karththarudaiya  naamaththai  ninthikki’ravan  kolaiseyyappadavea'ndum;  sabaiyaar  ellaarum  avanaik  kalle’riyavea'ndum;  paratheasiyaanaalum  sutheasiyaanaalum  karththarin  naamaththaith  thooshikki’ravan  kolaiseyyappadavea'ndum.  (leaviyaraagamam  24:16)

ஒரு  மனிதனைக்  கொல்லுகிறவன்  எவனோ  அவன்  கொலைசெய்யப்படவேண்டும்.  (லேவியராகமம்  24:17)

oru  manithanaik  kollugi’ravan  evanoa  avan  kolaiseyyappadavea'ndum.  (leaviyaraagamam  24:17)

மிருகத்தைக்  கொன்றவன்  மிருகத்துக்கு  மிருகம்  கொடுக்கக்கடவன்.  (லேவியராகமம்  24:18)

mirugaththaik  kon’ravan  mirugaththukku  mirugam  kodukkakkadavan.  (leaviyaraagamam  24:18)

ஒருவன்  பிறனை  ஊனப்படுத்தினால்,  அவன்  செய்தபடியே  அவனுக்கும்  செய்யப்படக்கடவது.  (லேவியராகமம்  24:19)

oruvan  pi’ranai  oonappaduththinaal,  avan  seythapadiyea  avanukkum  seyyappadakkadavathu.  (leaviyaraagamam  24:19)

நொறுக்குதலுக்கு  நொறுக்குதல்,  கண்ணுக்குக்  கண்,  பல்லுக்குப்  பல்;  அவன்  ஒரு  மனிதனை  ஊனப்படுத்தினதுபோல  அவனும்  ஊனப்படுத்தப்படவேண்டும்.  (லேவியராகமம்  24:20)

no’rukkuthalukku  no’rukkuthal,  ka'n'nukkuk  ka'n,  pallukkup  pal;  avan  oru  manithanai  oonappaduththinathupoala  avanum  oonappaduththappadavea'ndum.  (leaviyaraagamam  24:20)

மிருகத்தைக்  கொன்றவன்  பதில்  கொடுக்கவேண்டும்;  மனிதனைக்  கொன்றவனோ  கொலைசெய்யப்படக்கடவன்.  (லேவியராகமம்  24:21)

mirugaththaik  kon’ravan  bathil  kodukkavea'ndum;  manithanaik  kon’ravanoa  kolaiseyyappadakkadavan.  (leaviyaraagamam  24:21)

உங்களில்  பரதேசிக்கும்  சுதேசிக்கும்  ஒரே  நியாயம்  இருக்கவேண்டும்;  நான்  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்று  சொல்  என்றார்.  (லேவியராகமம்  24:22)

ungga'lil  paratheasikkum  sutheasikkum  orea  niyaayam  irukkavea'ndum;  naan  ungga'l  theavanaagiya  karththar  en’ru  sol  en’raar.  (leaviyaraagamam  24:22)

அப்படியே,  தூஷித்தவனைப்  பாளயத்துக்குப்  புறம்பே  கொண்டுபோய்,  அவனைக்  கல்லெறியும்படி  மோசே  இஸ்ரவேல்  புத்திரரோடே  சொன்னான்;  கர்த்தர்  மோசேக்குக்  கட்டளையிட்டபடியே  செய்தார்கள்.  (லேவியராகமம்  24:23)

appadiyea,  thooshiththavanaip  paa'layaththukkup  pu’rambea  ko'ndupoay,  avanaik  kalle’riyumpadi  moasea  israveal  puththiraroadea  sonnaan;  karththar  moaseakkuk  katta'laiyittapadiyea  seythaarga'l.  (leaviyaraagamam  24:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!