Saturday, November 05, 2016

Leaviyaraagamam 23 | லேவியராகமம் 23 | Leviticus 23

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  23:1)

pinnum  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  23:1)

நீ  இஸ்ரவேல்  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  சபைகூடிவந்து  பரிசுத்த  நாட்களாக  ஆசரிக்கும்படி,  நீங்கள்  கூறவேண்டிய  கர்த்தருடைய  பண்டிகை  நாட்களாவன:  (லேவியராகமம்  23:2)

nee  israveal  puththiraroadea  sollavea'ndiyathu  ennaven’raal:  sabaikoodivanthu  parisuththa  naadka'laaga  aasarikkumpadi,  neengga'l  koo’ravea'ndiya  karththarudaiya  pa'ndigai  naadka'laavana:  (leaviyaraagamam  23:2)

ஆறுநாளும்  வேலை  செய்யவேண்டும்;  ஏழாம்நாள்  பரிசுத்த  சபைகூடுதலான  ஓய்வுநாள்,  அதில்  ஒரு  வேலையும்  செய்யவேண்டாம்;  அது  உங்கள்  வாசஸ்தலங்களிலெல்லாம்  கர்த்தருக்கென்று  ஓய்ந்திருக்கும்  நாளாயிருப்பதாக.  (லேவியராகமம்  23:3)

aa’runaa'lum  vealai  seyyavea'ndum;  eazhaamnaa'l  parisuththa  sabaikooduthalaana  oayvunaa'l,  athil  oru  vealaiyum  seyyavea'ndaam;  athu  ungga'l  vaasasthalangga'lilellaam  karththarukken’ru  oaynthirukkum  naa'laayiruppathaaga.  (leaviyaraagamam  23:3)

சபைகூடிவந்து  பரிசுத்தமாய்  ஆசரிக்கும்படி,  நீங்கள்  குறித்தகாலத்தில்  கூறவேண்டிய  கர்த்தரின்  பண்டிகைகளாவன:  (லேவியராகமம்  23:4)

sabaikoodivanthu  parisuththamaay  aasarikkumpadi,  neengga'l  ku’riththakaalaththil  koo’ravea'ndiya  karththarin  pa'ndigaiga'laavana:  (leaviyaraagamam  23:4)

முதலாம்  மாதம்  பதினாலாம்  தேதி  அந்திநேரமாகிற  வேளையிலே  கர்த்தரின்  பஸ்கா  பண்டிகையும்,  (லேவியராகமம்  23:5)

muthalaam  maatham  pathinaalaam  theathi  anthinearamaagi’ra  vea'laiyilea  karththarin  paskaa  pa'ndigaiyum,  (leaviyaraagamam  23:5)

அந்த  மாதம்  பதினைந்தாம்  தேதியிலே,  கர்த்தருக்குப்  புளிப்பில்லா  அப்பப்  பண்டிகையுமாய்  இருக்கும்;  ஏழுநாள்  புளிப்பில்லா  அப்பங்களைப்  புசிக்கவேண்டும்.  (லேவியராகமம்  23:6)

antha  maatham  pathinainthaam  theathiyilea,  karththarukkup  pu'lippillaa  appap  pa'ndigaiyumaay  irukkum;  eazhunaa'l  pu'lippillaa  appangga'laip  pusikkavea'ndum.  (leaviyaraagamam  23:6)

முதலாம்  நாள்  உங்களுக்குப்  பரிசுத்தமான  சபைகூடுதல்;  அதிலே  சாதாரணமான  யாதொரு  வேலையும்  செய்யவேண்டாம்.  (லேவியராகமம்  23:7)

muthalaam  naa'l  ungga'lukkup  parisuththamaana  sabaikooduthal;  athilea  saathaara'namaana  yaathoru  vealaiyum  seyyavea'ndaam.  (leaviyaraagamam  23:7)

ஏழுநாளும்  கர்த்தருக்குத்  தகனபலியிடவேண்டும்;  ஏழாம்நாள்  பரிசுத்தமான  சபைகூடுதல்;  அதில்  சாதாரணமான  யாதொரு  வேலையும்  செய்யலாகாது  என்று  சொல்  என்றார்.  (லேவியராகமம்  23:8)

eazhunaa'lum  karththarukkuth  thaganabaliyidavea'ndum;  eazhaamnaa'l  parisuththamaana  sabaikooduthal;  athil  saathaara'namaana  yaathoru  vealaiyum  seyyalaagaathu  en’ru  sol  en’raar.  (leaviyaraagamam  23:8)

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  23:9)

pinnum  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  23:9)

நீ  இஸ்ரவேல்  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  நான்  உங்களுக்குக்  கொடுக்கும்  தேசத்தில்  நீங்கள்  போய்ச்  சேர்ந்து,  அதின்  வெள்ளாண்மையை  அறுக்கும்போது,  உங்கள்  அறுப்பின்  முதற்பலனாகிய  ஒரு  கதிர்க்கட்டை  ஆசாரியனிடத்தில்  கொண்டுவரக்கடவீர்கள்.  (லேவியராகமம்  23:10)

nee  israveal  puththiraroadea  sollavea'ndiyathu  ennaven’raal:  naan  ungga'lukkuk  kodukkum  theasaththil  neengga'l  poaych  searnthu,  athin  ve'l'laa'nmaiyai  a’rukkumpoathu,  ungga'l  a’ruppin  mutha’rpalanaagiya  oru  kathirkkattai  aasaariyanidaththil  ko'nduvarakkadaveerga'l.  (leaviyaraagamam  23:10)

உங்களுக்காக  அது  அங்கிகரிக்கப்படும்படி,  ஆசாரியன்  அந்தக்  கதிர்க்கட்டை  ஓய்வுநாளுக்கு  மறுநாளில்  கர்த்தருடைய  சந்நிதியில்  அசைவாட்டவேண்டும்.  (லேவியராகமம்  23:11)

ungga'lukkaaga  athu  anggigarikkappadumpadi,  aasaariyan  anthak  kathirkkattai  oayvunaa'lukku  ma’runaa'lil  karththarudaiya  sannithiyil  asaivaattavea'ndum.  (leaviyaraagamam  23:11)

நீங்கள்  அந்தக்  கதிர்க்கட்டை  அசைவாட்டும்  நாளில்  கர்த்தருக்குச்  சர்வாங்க  தகனபலியாக,  ஒரு  வயதான  பழுதற்ற  ஒரு  ஆட்டுக்குட்டியையும்,  (லேவியராகமம்  23:12)

neengga'l  anthak  kathirkkattai  asaivaattum  naa'lil  karththarukkuch  sarvaangga  thaganabaliyaaga,  oru  vayathaana  pazhuthat’ra  oru  aattukkuttiyaiyum,  (leaviyaraagamam  23:12)

கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  தகனபலியாக  ஒரு  மரக்காலிலே  பத்தில்  இரண்டு  பங்கானதும்  எண்ணெயிலே  பிசைந்ததுமான  மெல்லிய  மாவாகிய  போஜனபலியையும்,  திராட்சப்பழரசத்திலே  காற்படியாகிய  பானபலியையும்  செலுத்தக்கடவீர்கள்.  (லேவியராகமம்  23:13)

karththarukkuch  sugantha  vaasanaiyaana  thaganabaliyaaga  oru  marakkaalilea  paththil  ira'ndu  panggaanathum  e'n'neyilea  pisainthathumaana  melliya  maavaagiya  poajanabaliyaiyum,  thiraadchappazharasaththilea  kaa’rpadiyaagiya  baanabaliyaiyum  seluththakkadaveerga'l.  (leaviyaraagamam  23:13)

உங்கள்  தேவனுக்குக்  காணிக்கையை  நீங்கள்  கொண்டுவரும்  அந்நாள்மட்டும்,  அப்பமும்  வாட்டிய  கதிரும்  பச்சைக்கதிரும்  புசியீர்களாக;  இது  உங்கள்  வாசஸ்தலங்களிலெல்லாம்  உங்கள்  தலைமுறைதோறும்  செல்லவேண்டிய  நித்திய  கட்டளை.  (லேவியராகமம்  23:14)

ungga'l  theavanukkuk  kaa'nikkaiyai  neengga'l  ko'nduvarum  annaa'lmattum,  appamum  vaattiya  kathirum  pachchaikkathirum  pusiyeerga'laaga;  ithu  ungga'l  vaasasthalangga'lilellaam  ungga'l  thalaimu’raithoa’rum  sellavea'ndiya  niththiya  katta'lai.  (leaviyaraagamam  23:14)

நீங்கள்  அசைவாட்டும்  கதிர்க்கட்டைக்  கொண்டுவரும்  ஓய்வுநாளுக்கு  மறுநாள்  முதற்கொண்டு  எண்ணத்துவக்கி,  ஏழுவாரங்கள்  நிறைவேறினபின்பு,  (லேவியராகமம்  23:15)

neengga'l  asaivaattum  kathirkkattaik  ko'nduvarum  oayvunaa'lukku  ma’runaa'l  mutha’rko'ndu  e'n'naththuvakki,  eazhuvaarangga'l  ni’raivea’rinapinbu,  (leaviyaraagamam  23:15)

ஏழாம்  ஓய்வுநாளுக்கு  மறுநாளாகிய  ஐம்பதாம்  நாள்மட்டும்  எண்ணி,  கர்த்தருக்குப்  புதிய  போஜனபலியைச்  செலுத்தக்கடவீர்கள்.  (லேவியராகமம்  23:16)

eazhaam  oayvunaa'lukku  ma’runaa'laagiya  aimbathaam  naa'lmattum  e'n'ni,  karththarukkup  puthiya  poajanabaliyaich  seluththakkadaveerga'l.  (leaviyaraagamam  23:16)

நீங்கள்  ஒரு  மரக்காலிலே  பத்தில்  இரண்டு  பங்காகிய  மெல்லிய  மாவிலே  புளிப்பாகப்  பாகம்பண்ணப்பட்ட  அசைவாட்டும்  காணிக்கையாயிருக்கிற  இரண்டு  அப்பங்களை  உங்கள்  வாசஸ்தலங்களிலிருந்து  கர்த்தருக்கென்று  முதற்பலனாகக்  கொண்டுவந்து,  (லேவியராகமம்  23:17)

neengga'l  oru  marakkaalilea  paththil  ira'ndu  panggaagiya  melliya  maavilea  pu'lippaagap  paagampa'n'nappatta  asaivaattum  kaa'nikkaiyaayirukki’ra  ira'ndu  appangga'lai  ungga'l  vaasasthalangga'lilirunthu  karththarukken’ru  mutha’rpalanaagak  ko'nduvanthu,  (leaviyaraagamam  23:17)

அப்பத்தோடேகூடக்  கர்த்தருக்குச்  சர்வாங்க  தகனபலியாக,  ஒரு  வயதான  பழுதற்ற  ஏழு  ஆட்டுக்குட்டிகளையும்,  ஒரு  காளையையும்,  இரண்டு  ஆட்டுக்கடாக்களையும்  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  தகனபலியாக  அவைகளுக்கு  அடுத்த  போஜனபலியையும்,  பானபலிகளையும்  செலுத்தி,  (லேவியராகமம்  23:18)

appaththoadeakoodak  karththarukkuch  sarvaangga  thaganabaliyaaga,  oru  vayathaana  pazhuthat’ra  eazhu  aattukkuttiga'laiyum,  oru  kaa'laiyaiyum,  ira'ndu  aattukkadaakka'laiyum  karththarukkuch  sugantha  vaasanaiyaana  thaganabaliyaaga  avaiga'lukku  aduththa  poajanabaliyaiyum,  baanabaliga'laiyum  seluththi,  (leaviyaraagamam  23:18)

வெள்ளாடுகளில்  ஒரு  கடாவைப்  பாவநிவாரணபலியாகவும்,  ஒரு  வயதான  இரண்டு  ஆட்டுக்குட்டிகளைச்  சமாதான  பலியாகவும்  இடக்கடவீர்கள்.  (லேவியராகமம்  23:19)

ve'l'laaduga'lil  oru  kadaavaip  paavanivaara'nabaliyaagavum,  oru  vayathaana  ira'ndu  aattukkuttiga'laich  samaathaana  baliyaagavum  idakkadaveerga'l.  (leaviyaraagamam  23:19)

அவைகளை  ஆசாரியன்  முதற்பலனாகிய  அப்பத்தோடும்  இரண்டு  ஆட்டுக்குட்டிகளோடுங்கூடக்  கர்த்தருடைய  சந்நிதியில்  அசைவாட்டும்  பலியாக  அசைவாட்டக்கடவன்;  கர்த்தருக்குப்  பரிசுத்தமாகிய  அவைகள்  ஆசாரியனுடையவைகளாகும்.  (லேவியராகமம்  23:20)

avaiga'lai  aasaariyan  mutha’rpalanaagiya  appaththoadum  ira'ndu  aattukkuttiga'loadungkoodak  karththarudaiya  sannithiyil  asaivaattum  baliyaaga  asaivaattakkadavan;  karththarukkup  parisuththamaagiya  avaiga'l  aasaariyanudaiyavaiga'laagum.  (leaviyaraagamam  23:20)

அந்த  நாள்  உங்களுக்குச்  சபை  கூடும்  பரிசுத்த  நாள்  என்று  கூறவேண்டும்;  அதிலே  சாதாரணமான  யாதொரு  வேலையும்  செய்யலாகாது;  இது  உங்கள்  வாசஸ்தலங்களிலெல்லாம்  உங்கள்  தலைமுறைதோறும்  செல்லவேண்டிய  நித்திய  கட்டளை.  (லேவியராகமம்  23:21)

antha  naa'l  ungga'lukkuch  sabai  koodum  parisuththa  naa'l  en’ru  koo’ravea'ndum;  athilea  saathaara'namaana  yaathoru  vealaiyum  seyyalaagaathu;  ithu  ungga'l  vaasasthalangga'lilellaam  ungga'l  thalaimu’raithoa’rum  sellavea'ndiya  niththiya  katta'lai.  (leaviyaraagamam  23:21)

உங்கள்  தேசத்தின்  வெள்ளாண்மையை  நீங்கள்  அறுக்கையில்,  வயலின்  ஓரத்தில்  இருக்கிறதை  முற்றிலும்  அறுக்காமலும்,  சிந்திக்கிடக்கிற  கதிர்களைப்  பொறுக்காமலும்,  எளியவனுக்கும்  பரதேசிக்கும்  அவைகளை  விட்டுவிடவேண்டும்;  நான்  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்று  சொல்  என்றார்.  (லேவியராகமம்  23:22)

ungga'l  theasaththin  ve'l'laa'nmaiyai  neengga'l  a’rukkaiyil,  vayalin  oaraththil  irukki’rathai  mut’rilum  a’rukkaamalum,  sinthikkidakki’ra  kathirga'laip  po’rukkaamalum,  e'liyavanukkum  paratheasikkum  avaiga'lai  vittuvidavea'ndum;  naan  ungga'l  theavanaagiya  karththar  en’ru  sol  en’raar.  (leaviyaraagamam  23:22)

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  23:23)

pinnum  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  23:23)

நீ  இஸ்ரவேல்  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  உங்களுக்கு  ஏழாம்  மாதம்  முதலாந்தேதி  எக்காளச்  சத்தத்தால்  ஞாபகக்குறியாகக்  கொண்டாடுகிற  பண்டிகை  என்கிற  சபை  கூடும்  பரிசுத்த  ஓய்வுநாளாய்  இருப்பதாக.  (லேவியராகமம்  23:24)

nee  israveal  puththiraroadea  sollavea'ndiyathu  ennaven’raal:  ungga'lukku  eazhaam  maatham  muthalaantheathi  ekkaa'lach  saththaththaal  gnaabagakku’riyaagak  ko'ndaadugi’ra  pa'ndigai  engi’ra  sabai  koodum  parisuththa  oayvunaa'laay  iruppathaaga.  (leaviyaraagamam  23:24)

அதிலே  சாதாரணமான  யாதொரு  வேலையும்  செய்யாமல்,  கர்த்தருக்குத்  தகனபலி  செலுத்தவேண்டும்  என்று  சொல்  என்றார்.  (லேவியராகமம்  23:25)

athilea  saathaara'namaana  yaathoru  vealaiyum  seyyaamal,  karththarukkuth  thaganabali  seluththavea'ndum  en’ru  sol  en’raar.  (leaviyaraagamam  23:25)

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  23:26)

pinnum  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  23:26)

அந்த  ஏழாம்  மாதம்  பத்தாந்தேதி  உங்களுக்குப்  பாவநிவிர்த்தி  செய்யும்  நாளும்  சபைகூடும்  பரிசுத்தநாளுமாயிருப்பதாக;  அப்பொழுது  நீங்கள்  உங்கள்  ஆத்துமாக்களைத்  தாழ்மைப்படுத்தி,  கர்த்தருக்குத்  தகனபலி  செலுத்தக்கடவீர்கள்.  (லேவியராகமம்  23:27)

antha  eazhaam  maatham  paththaantheathi  ungga'lukkup  paavanivirththi  seyyum  naa'lum  sabaikoodum  parisuththanaa'lumaayiruppathaaga;  appozhuthu  neengga'l  ungga'l  aaththumaakka'laith  thaazhmaippaduththi,  karththarukkuth  thaganabali  seluththakkadaveerga'l.  (leaviyaraagamam  23:27)

அந்த  நாள்  உங்கள்  தேவனாகிய  கர்த்தருடைய  சந்நிதியில்  உங்களுக்காகப்  பாவநிவிர்த்தி  செய்யப்படும்  பாவநிவாரண  நாளாயிருக்கிறபடியால்,  அதிலே  யாதொரு  வேலையும்  செய்யவேண்டாம்.  (லேவியராகமம்  23:28)

antha  naa'l  ungga'l  theavanaagiya  karththarudaiya  sannithiyil  ungga'lukkaagap  paavanivirththi  seyyappadum  paavanivaara'na  naa'laayirukki’rapadiyaal,  athilea  yaathoru  vealaiyum  seyyavea'ndaam.  (leaviyaraagamam  23:28)

அந்நாளிலே  தன்னைத்  தாழ்மைப்படுத்தாத  எந்த  ஆத்துமாவும்  தன்  ஜனத்தில்  இராதபடிக்கு  அறுப்புண்டுபோவான்.  (லேவியராகமம்  23:29)

annaa'lilea  thannaith  thaazhmaippaduththaatha  entha  aaththumaavum  than  janaththil  iraathapadikku  a’ruppu'ndupoavaan.  (leaviyaraagamam  23:29)

அந்நாளிலே  ஒரு  ஆத்துமா  யாதொரு  வேலையைச்  செய்தால்,  அந்த  ஆத்துமாவை  அவன்  ஜனத்தின்  நடுவிலே  வைக்காமல்  அழிப்பேன்.  (லேவியராகமம்  23:30)

annaa'lilea  oru  aaththumaa  yaathoru  vealaiyaich  seythaal,  antha  aaththumaavai  avan  janaththin  naduvilea  vaikkaamal  azhippean.  (leaviyaraagamam  23:30)

அதில்  நீங்கள்  எந்த  வேலையும்  செய்யாதிருப்பது  உங்கள்  வாசஸ்தலங்களிலெல்லாம்  உங்கள்  தலைமுறைதோறும்  செல்லவேண்டிய  நித்திய  கட்டளை.  (லேவியராகமம்  23:31)

athil  neengga'l  entha  vealaiyum  seyyaathiruppathu  ungga'l  vaasasthalangga'lilellaam  ungga'l  thalaimu’raithoa’rum  sellavea'ndiya  niththiya  katta'lai.  (leaviyaraagamam  23:31)

அது  உங்களுக்கு  விசேஷித்த  ஓய்வுநாள்;  அதில்  உங்கள்  ஆத்துமாக்களைத்  தாழ்மைப்படுத்தவேண்டும்;  அந்த  மாதத்தின்  ஒன்பதாந்தேதி  சாயங்காலம்  துவக்கி,  மறுநாள்  சாயங்காலமட்டும்  உங்கள்  ஓய்வை  ஆசரிக்கக்கடவீர்கள்  என்றார்.  (லேவியராகமம்  23:32)

athu  ungga'lukku  viseashiththa  oayvunaa'l;  athil  ungga'l  aaththumaakka'laith  thaazhmaippaduththavea'ndum;  antha  maathaththin  onbathaantheathi  saayanggaalam  thuvakki,  ma’runaa'l  saayanggaalamattum  ungga'l  oayvai  aasarikkakkadaveerga'l  en’raar.  (leaviyaraagamam  23:32)

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  23:33)

pinnum  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  23:33)

நீ  இஸ்ரவேல்  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  அந்த  ஏழாம்  மாதம்  பதினைந்தாந்தேதிமுதல்  ஏழுநாளளவும்  கர்த்தருக்கு  ஆசரிக்கும்  கூடாரப்பண்டிகையாயிருப்பதாக.  (லேவியராகமம்  23:34)

nee  israveal  puththiraroadea  sollavea'ndiyathu  ennaven’raal:  antha  eazhaam  maatham  pathinainthaantheathimuthal  eazhunaa'la'lavum  karththarukku  aasarikkum  koodaarappa'ndigaiyaayiruppathaaga.  (leaviyaraagamam  23:34)

முதலாம்  நாள்  சபைகூடும்  பரிசுத்த  நாள்;  அதிலே  சாதாரணமான  யாதொரு  வேலையும்  செய்யலாகாது.  (லேவியராகமம்  23:35)

muthalaam  naa'l  sabaikoodum  parisuththa  naa'l;  athilea  saathaara'namaana  yaathoru  vealaiyum  seyyalaagaathu.  (leaviyaraagamam  23:35)

ஏழுநாளும்  கர்த்தருக்குத்  தகனபலி  செலுத்தக்கடவீர்கள்;  எட்டாம்  நாள்  உங்களுக்குச்  சபைகூடும்  பரிசுத்தநாள்;  அதிலே  கர்த்தருக்குத்  தகனபலி  செலுத்தக்கடவீர்கள்;  அது  ஆசரிக்கப்படும்  நாள்;  அதிலே  சாதாரணமான  யாதொரு  வேலையும்  செய்யவேண்டாம்.  (லேவியராகமம்  23:36)

eazhunaa'lum  karththarukkuth  thaganabali  seluththakkadaveerga'l;  ettaam  naa'l  ungga'lukkuch  sabaikoodum  parisuththanaa'l;  athilea  karththarukkuth  thaganabali  seluththakkadaveerga'l;  athu  aasarikkappadum  naa'l;  athilea  saathaara'namaana  yaathoru  vealaiyum  seyyavea'ndaam.  (leaviyaraagamam  23:36)

நீங்கள்  கர்த்தருடைய  ஓய்வுநாட்களில்  செலுத்துவதும்  தவிர,  நீங்கள்  கர்த்தருக்குப்  படைக்கிற  உங்கள்  எல்லாக்  காணிக்கைகளும்  பொருத்தனைகளும்  உற்சாகபலிகளும்  தவிர,  (லேவியராகமம்  23:37)

neengga'l  karththarudaiya  oayvunaadka'lil  seluththuvathum  thavira,  neengga'l  karththarukkup  padaikki’ra  ungga'l  ellaak  kaa'nikkaiga'lum  poruththanaiga'lum  u’rchaagabaliga'lum  thavira,  (leaviyaraagamam  23:37)

நீங்கள்  அந்தந்த  நாளுக்குத்தக்கதாய்க்  கர்த்தருக்குச்  சர்வாங்க  தகனபலி,  போஜனபலி,  இரத்தபலி,  பானபலி  முதலானவைகளைச்  செலுத்தும்படி  சபைகூடிவந்து,  பரிசுத்தமாய்  ஆசரிப்பதற்காக  நீங்கள்  கூறவேண்டிய  கர்த்தருடைய  பண்டிகைகள்  இவைகளே.  (லேவியராகமம்  23:38)

neengga'l  anthantha  naa'lukkuththakkathaayk  karththarukkuch  sarvaangga  thaganabali,  poajanabali,  iraththabali,  baanabali  muthalaanavaiga'laich  seluththumpadi  sabaikoodivanthu,  parisuththamaay  aasarippatha’rkaaga  neengga'l  koo’ravea'ndiya  karththarudaiya  pa'ndigaiga'l  ivaiga'lea.  (leaviyaraagamam  23:38)

நிலத்தின்  பலனை  நீங்கள்  சேர்த்துவைக்கும்  ஏழாம்  மாதம்  பதினைந்தாந்தேதிமுதல்  கர்த்தருக்குப்  பண்டிகையை  ஏழுநாள்  ஆசரிக்கக்கடவீர்கள்;  முதலாம்  நாளிலும்  ஓய்வு;  எட்டாம்  நாளிலும்  ஓய்வு.  (லேவியராகமம்  23:39)

nilaththin  palanai  neengga'l  searththuvaikkum  eazhaam  maatham  pathinainthaantheathimuthal  karththarukkup  pa'ndigaiyai  eazhunaa'l  aasarikkakkadaveerga'l;  muthalaam  naa'lilum  oayvu;  ettaam  naa'lilum  oayvu.  (leaviyaraagamam  23:39)

முதல்  நாளிலே  அலங்காரமான  விருட்சங்களின்  கனிகளையும்  பேரீச்சின்  ஓலைகளையும்  தழைத்திருக்கிற  விருட்சங்களின்  கிளைகளையும்  ஆற்றலரிகளையும்  கொண்டுவந்து,  உங்கள்  தேவனாகிய  கர்த்தருடைய  சந்நிதியில்  ஏழுநாளும்  மகிழ்ச்சியாயிருங்கள்.  (லேவியராகமம்  23:40)

muthal  naa'lilea  alanggaaramaana  virudchangga'lin  kaniga'laiyum  peareechchin  oalaiga'laiyum  thazhaiththirukki’ra  virudchangga'lin  ki'laiga'laiyum  aat’ralariga'laiyum  ko'nduvanthu,  ungga'l  theavanaagiya  karththarudaiya  sannithiyil  eazhunaa'lum  magizhchchiyaayirungga'l.  (leaviyaraagamam  23:40)

வருஷந்தோறும்  ஏழுநாள்  கர்த்தருக்கு  இந்தப்  பண்டிகையை  ஆசரிக்கக்கடவீர்கள்;  இது  உங்கள்  தலைமுறைதோறும்  செல்லவேண்டிய  நித்திய  கட்டளை;  ஏழாம்  மாதத்தில்  அதை  ஆசரிக்கவேண்டும்.  (லேவியராகமம்  23:41)

varushanthoa’rum  eazhunaa'l  karththarukku  inthap  pa'ndigaiyai  aasarikkakkadaveerga'l;  ithu  ungga'l  thalaimu’raithoa’rum  sellavea'ndiya  niththiya  katta'lai;  eazhaam  maathaththil  athai  aasarikkavea'ndum.  (leaviyaraagamam  23:41)

நான்  இஸ்ரவேல்  புத்திரரை  எகிப்து  தேசத்திலிருந்து  புறப்படப்பண்ணினபோது,  அவர்களைக்  கூடாரங்களில்  குடியிருக்கப்பண்ணினதை  உங்கள்  சந்ததியார்  அறியும்படிக்கு,  (லேவியராகமம்  23:42)

naan  israveal  puththirarai  egipthu  theasaththilirunthu  pu’rappadappa'n'ninapoathu,  avarga'laik  koodaarangga'lil  kudiyirukkappa'n'ninathai  ungga'l  santhathiyaar  a’riyumpadikku,  (leaviyaraagamam  23:42)

ஏழுநாள்  கூடாரங்களில்  குடியிருக்கக்கடவீர்கள்;  இஸ்ரவேலில்  பிறந்தவர்கள்  எல்லாரும்  கூடாரங்களில்  வாசம்பண்ணவேண்டும்;  நான்  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்று  சொல்  என்றார்.  (லேவியராகமம்  23:43)

eazhunaa'l  koodaarangga'lil  kudiyirukkakkadaveerga'l;  isravealil  pi’ranthavarga'l  ellaarum  koodaarangga'lil  vaasampa'n'navea'ndum;  naan  ungga'l  theavanaagiya  karththar  en’ru  sol  en’raar.  (leaviyaraagamam  23:43)

அப்படியே  மோசே  கர்த்தருடைய  பண்டிகைகளை  இஸ்ரவேல்  புத்திரருக்குத்  தெரிவித்தான்.  (லேவியராகமம்  23:44)

appadiyea  moasea  karththarudaiya  pa'ndigaiga'lai  israveal  puththirarukkuth  theriviththaan.  (leaviyaraagamam  23:44)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!