Saturday, November 05, 2016

Leaviyaraagamam 22 | லேவியராகமம் 22 | Leviticus 22


பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  22:1)

pinnum  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  22:1)

இஸ்ரவேல்  புத்திரர்  எனக்கென்று  நியமித்துச்  செலுத்துகிற  பரிசுத்த  வஸ்துக்களைக்குறித்து  ஆரோனும்  அவன்  குமாரரும்  என்  பரிசுத்த  நாமத்தைப்  பரிசுத்தக்  குலைச்சலாக்காதபடிக்கு  எச்சரிக்கையாய்  இருக்கவேண்டும்  என்று  அவர்களோடே  சொல்;  நான்  கர்த்தர்.  (லேவியராகமம்  22:2)

israveal  puththirar  enakken’ru  niyamiththuch  seluththugi’ra  parisuththa  vasthukka'laikku’riththu  aaroanum  avan  kumaararum  en  parisuththa  naamaththaip  parisuththak  kulaichchalaakkaathapadikku  echcharikkaiyaay  irukkavea'ndum  en’ru  avarga'loadea  sol;  naan  karththar.  (leaviyaraagamam  22:2)

அன்றியும்  நீ  அவர்களை  நோக்கி:  உங்கள்  தலைமுறைகளிலுள்ள  சந்ததியாரில்  எவனாகிலும்  தான்  தீட்டுப்பட்டிருக்கும்போது,  இஸ்ரவேல்  புத்திரர்  கர்த்தருக்கு  நியமித்துச்  செலுத்துகிற  பரிசுத்தமானவைகளண்டையில்  சேர்ந்தால்,  அந்த  ஆத்துமா  என்  சந்நிதியில்  இராதபடிக்கு  அறுப்புண்டுபோவான்  என்று  சொல்;  நான்  கர்த்தர்.  (லேவியராகமம்  22:3)

an’riyum  nee  avarga'lai  noakki:  ungga'l  thalaimu’raiga'lilu'l'la  santhathiyaaril  evanaagilum  thaan  theettuppattirukkumpoathu,  israveal  puththirar  karththarukku  niyamiththuch  seluththugi’ra  parisuththamaanavaiga'la'ndaiyil  searnthaal,  antha  aaththumaa  en  sannithiyil  iraathapadikku  a’ruppu'ndupoavaan  en’ru  sol;  naan  karththar.  (leaviyaraagamam  22:3)

ஆரோனின்  சந்ததியாரில்  எவன்  குஷ்டரோகியோ,  எவன்  பிரமியமுள்ளவனோ,  அவன்  சுத்தமாகும்மட்டும்  பரிசுத்தமானவைகளில்  புசிக்கலாகாது;  பிணத்தினாலே  தீட்டானவைகளில்  எதையாகிலும்  தொட்டவனும்,  இந்திரியங்கழிந்தவனும்,  (லேவியராகமம்  22:4)

aaroanin  santhathiyaaril  evan  kushdaroagiyoa,  evan  piramiyamu'l'lavanoa,  avan  suththamaagummattum  parisuththamaanavaiga'lil  pusikkalaagaathu;  pi'naththinaalea  theettaanavaiga'lil  ethaiyaagilum  thottavanum,  inthiriyangkazhinthavanum,  (leaviyaraagamam  22:4)

தீட்டுப்படுத்துகிற  யாதொரு  ஊரும்  பிராணியையாகிலும்  தீட்டுள்ள  மனிதனையாகிலும்  தொட்டவனும்,  (லேவியராகமம்  22:5)

theettuppaduththugi’ra  yaathoru  oorum  piraa'niyaiyaagilum  theettu'l'la  manithanaiyaagilum  thottavanum,  (leaviyaraagamam  22:5)

சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்;  அவன்  ஜலத்தில்  ஸ்நானம்பண்ணும்வரைக்கும்  பரிசுத்தமானவைகளில்  புசிக்கலாகாது.  (லேவியராகமம்  22:6)

saayanggaalamattum  theettuppattiruppaan;  avan  jalaththil  snaanampa'n'numvaraikkum  parisuththamaanavaiga'lil  pusikkalaagaathu.  (leaviyaraagamam  22:6)

சூரியன்  அஸ்தமித்தபின்பு  சுத்தமாயிருப்பான்;  அதன்பின்பு  அவன்  பரிசுத்தமானவைகளில்  புசிக்கலாம்;  அது  அவனுடைய  ஆகாரம்.  (லேவியராகமம்  22:7)

sooriyan  asthamiththapinbu  suththamaayiruppaan;  athanpinbu  avan  parisuththamaanavaiga'lil  pusikkalaam;  athu  avanudaiya  aagaaram.  (leaviyaraagamam  22:7)

தானாய்ச்  செத்ததையும்  பீறுண்டதையும்  அவன்  புசிக்கிறதினாலே  தன்னைத்  தீட்டுப்படுத்தலாகாது;  நான்  கர்த்தர்.  (லேவியராகமம்  22:8)

thaanaaych  seththathaiyum  pee’ru'ndathaiyum  avan  pusikki’rathinaalea  thannaith  theettuppaduththalaagaathu;  naan  karththar.  (leaviyaraagamam  22:8)

ஆகையால்  பரிசுத்தமானதை  அவர்கள்  பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே,  பாவம்  சுமந்து  அதினிமித்தம்  சாகாதபடிக்கு,  என்  கட்டளையைக்  காக்கக்கடவர்கள்;  நான்  அவர்களைப்  பரிசுத்தமாக்குகிற  கர்த்தர்.  (லேவியராகமம்  22:9)

aagaiyaal  parisuththamaanathai  avarga'l  parisuththakkulaichchalaakkugi’rathinaalea,  paavam  sumanthu  athinimiththam  saagaathapadikku,  en  katta'laiyaik  kaakkakkadavarga'l;  naan  avarga'laip  parisuththamaakkugi’ra  karththar.  (leaviyaraagamam  22:9)

அந்நியன்  ஒருவனும்  பரிசுத்தமானவைகளில்  புசிக்கலாகாது;  ஆசாரியன்  வீட்டில்  தங்கியிருக்கிறவனும்  கூலிவேலை  செய்கிறவனும்  பரிசுத்தமானதில்  புசிக்கலாகாது.  (லேவியராகமம்  22:10)

anniyan  oruvanum  parisuththamaanavaiga'lil  pusikkalaagaathu;  aasaariyan  veettil  thanggiyirukki’ravanum  koolivealai  seygi’ravanum  parisuththamaanathil  pusikkalaagaathu.  (leaviyaraagamam  22:10)

ஆசாரியனால்  பணத்துக்குக்  கொள்ளப்பட்டவனும்,  அவன்  வீட்டிலே  பிறந்தவனும்  அவனுடைய  ஆகாரத்தில்  புசிக்கலாம்.  (லேவியராகமம்  22:11)

aasaariyanaal  pa'naththukkuk  ko'l'lappattavanum,  avan  veettilea  pi’ranthavanum  avanudaiya  aagaaraththil  pusikkalaam.  (leaviyaraagamam  22:11)

ஆசாரியனுடைய  குமாரத்தி  அந்நியனுக்கு  வாழ்க்கைப்பட்டால்,  அவள்  பரிசுத்தமானவைகளின்  படைப்பிலே  புசிக்கலாகாது.  (லேவியராகமம்  22:12)

aasaariyanudaiya  kumaaraththi  anniyanukku  vaazhkkaippattaal,  ava'l  parisuththamaanavaiga'lin  padaippilea  pusikkalaagaathu.  (leaviyaraagamam  22:12)

விதவையாய்ப்போன,  அல்லது  தள்ளப்பட்டவளான  ஆசாரியனுடைய  குமாரத்தி  பிள்ளையில்லாதிருந்து,  தன்  தகப்பன்  வீட்டில்  தன்னுடைய  இளவயதில்  இருந்ததுபோலத்  திரும்பவந்து  இருந்தாளேயாகில்,  அவள்  தன்  தகப்பன்  ஆகாரத்தில்  புசிக்கலாம்;  அந்நியனாகிய  ஒருவனும்  அதில்  புசிக்கலாகாது.  (லேவியராகமம்  22:13)

vithavaiyaayppoana,  allathu  tha'l'lappattava'laana  aasaariyanudaiya  kumaaraththi  pi'l'laiyillaathirunthu,  than  thagappan  veettil  thannudaiya  i'lavayathil  irunthathupoalath  thirumbavanthu  irunthaa'leayaagil,  ava'l  than  thagappan  aagaaraththil  pusikkalaam;  anniyanaagiya  oruvanum  athil  pusikkalaagaathu.  (leaviyaraagamam  22:13)

ஒருவன்  அறியாமல்  பரிசுத்தமானதில்  புசித்ததுண்டானால்,  அவன்  அதிலே  ஐந்தில்  ஒரு  பங்கு  அதிகமாய்க்  கூட்டிப்  பரிசுத்தமானவைகளோடுங்கூட  ஆசாரியனுக்குக்  கொடுக்கக்கடவன்.  (லேவியராகமம்  22:14)

oruvan  a’riyaamal  parisuththamaanathil  pusiththathu'ndaanaal,  avan  athilea  ainthil  oru  panggu  athigamaayk  koottip  parisuththamaanavaiga'loadungkooda  aasaariyanukkuk  kodukkakkadavan.  (leaviyaraagamam  22:14)

அவர்கள்  கர்த்தருக்குப்  படைக்கிற  இஸ்ரவேல்  புத்திரருடைய  பரிசுத்தமானவைகளைப்  பரிசுத்தக்குலைச்சலாக்காமலும்,  (லேவியராகமம்  22:15)

avarga'l  karththarukkup  padaikki’ra  israveal  puththirarudaiya  parisuththamaanavaiga'laip  parisuththakkulaichchalaakkaamalum,  (leaviyaraagamam  22:15)

அவைகளைப்  புசிக்கிறதினால்  அவர்கள்மேல்  குற்றமான  அக்கிரமத்தைச்  சுமரப்பண்ணாமலும்  இருப்பார்களாக;  நான்  அவர்களைப்  பரிசுத்தமாக்குகிற  கர்த்தர்  என்று  சொல்  என்றார்.  (லேவியராகமம்  22:16)

avaiga'laip  pusikki’rathinaal  avarga'lmeal  kut’ramaana  akkiramaththaich  sumarappa'n'naamalum  iruppaarga'laaga;  naan  avarga'laip  parisuththamaakkugi’ra  karththar  en’ru  sol  en’raar.  (leaviyaraagamam  22:16)

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  22:17)

pinnum  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  22:17)

நீ  ஆரோனோடும்  அவன்  குமாரரோடும்  இஸ்ரவேல்  புத்திரர்  அனைவரோடும்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  இஸ்ரவேல்  குடும்பத்தாரிலும்  இஸ்ரவேலில்  தங்குகிற  அந்நியர்களிலும்  தங்களுடைய  பொருத்தனைகளின்படியாகிலும்  உற்சாகத்தின்படியாகிலும்  சர்வாங்க  தகனபலிகளாகக்  கர்த்தருக்குத்  தங்கள்  காணிக்கையை  எவர்கள்  செலுத்தப்போகிறார்களோ,  (லேவியராகமம்  22:18)

nee  aaroanoadum  avan  kumaararoadum  israveal  puththirar  anaivaroadum  sollavea'ndiyathu  ennaven’raal:  israveal  kudumbaththaarilum  isravealil  thanggugi’ra  anniyarga'lilum  thangga'ludaiya  poruththanaiga'linpadiyaagilum  u’rchaagaththinpadiyaagilum  sarvaangga  thaganabaliga'laagak  karththarukkuth  thangga'l  kaa'nikkaiyai  evarga'l  seluththappoagi’raarga'loa,  (leaviyaraagamam  22:18)

அவர்கள்  தங்கள்  மனதின்படியே  மாடுகளிலாகிலும்  ஆடுகளிலாகிலும்  வெள்ளாடுகளிலாகிலும்  பழுதற்ற  ஒரு  ஆணைப்  பிடித்துவந்து  செலுத்துவார்களாக.  (லேவியராகமம்  22:19)

avarga'l  thangga'l  manathinpadiyea  maaduga'lilaagilum  aaduga'lilaagilum  ve'l'laaduga'lilaagilum  pazhuthat’ra  oru  aa'naip  pidiththuvanthu  seluththuvaarga'laaga.  (leaviyaraagamam  22:19)

பழுதுள்ள  ஒன்றையும்  செலுத்த  வேண்டாம்;  அது  உங்கள்நிமித்தம்  அங்கிகரிக்கப்படுவதில்லை.  (லேவியராகமம்  22:20)

pazhuthu'l'la  on’raiyum  seluththa  vea'ndaam;  athu  ungga'lnimiththam  anggigarikkappaduvathillai.  (leaviyaraagamam  22:20)

ஒருவன்  விசேஷித்த  பொருத்தனையாயாவது,  உற்சாகமாயாவது,  கர்த்தருக்கு  மாடுகளிலாகிலும்  ஆடுகளிலாகிலும்  சமாதானபலிகளைச்  செலுத்தப்போனால்,  அது  அங்கிகரிக்கப்படும்படி,  ஒரு  பழுதுமில்லாமல்  உத்தமமாயிருக்கவேண்டும்.  (லேவியராகமம்  22:21)

oruvan  viseashiththa  poruththanaiyaayaavathu,  u’rchaagamaayaavathu,  karththarukku  maaduga'lilaagilum  aaduga'lilaagilum  samaathaanabaliga'laich  seluththappoanaal,  athu  anggigarikkappadumpadi,  oru  pazhuthumillaamal  uththamamaayirukkavea'ndum.  (leaviyaraagamam  22:21)

குருடு,  நெரிசல்,  முடம்,  கழலை,  சொறி,  புண்  முதலிய  பழுதுள்ளவைகளை  நீங்கள்  கர்த்தருக்குச்  செலுத்தாமலும்,  அவைகளாலே  கர்த்தருக்குப்  பலிபீடத்தின்மேல்  தகனபலியிடாமலும்  இருப்பீர்களாக.  (லேவியராகமம்  22:22)

kurudu,  nerisal,  mudam,  kazhalai,  so’ri,  pu'n  muthaliya  pazhuthu'l'lavaiga'lai  neengga'l  karththarukkuch  seluththaamalum,  avaiga'laalea  karththarukkup  balipeedaththinmeal  thaganabaliyidaamalum  iruppeerga'laaga.  (leaviyaraagamam  22:22)

நீண்ட  அல்லது  குறுகின  அவயவமுள்ள  மாட்டையும்  ஆட்டையும்  நீ  உற்சாகபலியாக  இடலாம்;  பொருத்தனைக்காக  அது  அங்கிகரிக்கப்படமாட்டாது.  (லேவியராகமம்  22:23)

nee'nda  allathu  ku’rugina  avayavamu'l'la  maattaiyum  aattaiyum  nee  u’rchaagabaliyaaga  idalaam;  poruththanaikkaaga  athu  anggigarikkappadamaattaathu.  (leaviyaraagamam  22:23)

விதை  நசுங்கினதையும்  நொறுங்கினதையும்  காயம்பட்டதையும்  விதை  அறுக்கப்பட்டதையும்  நீங்கள்  கர்த்தருக்குச்  செலுத்தாமலும்,  அவைகளை  உங்கள்  தேசத்திலே  பலியிடாமலும்  இருப்பீர்களாக.  (லேவியராகமம்  22:24)

vithai  nasungginathaiyum  no’rungginathaiyum  kaayampattathaiyum  vithai  a’rukkappattathaiyum  neengga'l  karththarukkuch  seluththaamalum,  avaiga'lai  ungga'l  theasaththilea  baliyidaamalum  iruppeerga'laaga.  (leaviyaraagamam  22:24)

அந்நிய  புத்திரன்  கையிலும்  இப்படிப்பட்டதை  வாங்கி,  தேவனுக்கு  அப்பமாகச்  செலுத்தீர்களாக;  அவைகளின்  கேடும்  பழுதும்  அவைகளில்  இருக்கிறது;  அவைகள்  உங்களுக்காக  அங்கிகரிக்கப்படுவதில்லை  என்று  சொல்  என்றார்.  (லேவியராகமம்  22:25)

anniya  puththiran  kaiyilum  ippadippattathai  vaanggi,  theavanukku  appamaagach  seluththeerga'laaga;  avaiga'lin  keadum  pazhuthum  avaiga'lil  irukki’rathu;  avaiga'l  ungga'lukkaaga  anggigarikkappaduvathillai  en’ru  sol  en’raar.  (leaviyaraagamam  22:25)

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  22:26)

pinnum  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  22:26)

ஒரு  கன்றாவது  செம்மறியாட்டுக்  குட்டியாவது  வெள்ளாட்டுக்குட்டியாவது  பிறந்தால்,  அது  ஏழுநாள்  தன்  தாயினிடத்தில்  இருக்கக்கடவது;  எட்டாம்  நாள்முதல்  அது  கர்த்தருக்குத்  தகனபலியாக  அங்கிகரிக்கப்படும்.  (லேவியராகமம்  22:27)

oru  kan’raavathu  semma’riyaattuk  kuttiyaavathu  ve'l'laattukkuttiyaavathu  pi’ranthaal,  athu  eazhunaa'l  than  thaayinidaththil  irukkakkadavathu;  ettaam  naa'lmuthal  athu  karththarukkuth  thaganabaliyaaga  anggigarikkappadum.  (leaviyaraagamam  22:27)

பசுவையும்  அதின்  கன்றையும்,  ஆட்டையும்  அதின்  குட்டியையும்  ஒரே  நாளில்  கொல்லவேண்டாம்.  (லேவியராகமம்  22:28)

pasuvaiyum  athin  kan’raiyum,  aattaiyum  athin  kuttiyaiyum  orea  naa'lil  kollavea'ndaam.  (leaviyaraagamam  22:28)

கர்த்தருக்கு  ஸ்தோத்திரபலியைச்  செலுத்துவீர்களானால்  மனப்பூர்வமாய்  அதைச்  செலுத்துவீர்களாக.  (லேவியராகமம்  22:29)

karththarukku  sthoaththirabaliyaich  seluththuveerga'laanaal  manappoorvamaay  athaich  seluththuveerga'laaga.  (leaviyaraagamam  22:29)

அந்நாளிலேதான்  அது  புசிக்கப்படவேண்டும்;  விடியற்காலம்மட்டும்  நீங்கள்  அதில்  ஒன்றும்  மீதியாக  வைக்கவேண்டாம்;  நான்  கர்த்தர்.  (லேவியராகமம்  22:30)

annaa'lileathaan  athu  pusikkappadavea'ndum;  vidiya’rkaalammattum  neengga'l  athil  on’rum  meethiyaaga  vaikkavea'ndaam;  naan  karththar.  (leaviyaraagamam  22:30)

நீங்கள்  என்  கட்டளைகளைக்  கைக்கொண்டு,  அவைகளின்படி  செய்யக்கடவீர்கள்;  நான்  கர்த்தர்.  (லேவியராகமம்  22:31)

neengga'l  en  katta'laiga'laik  kaikko'ndu,  avaiga'linpadi  seyyakkadaveerga'l;  naan  karththar.  (leaviyaraagamam  22:31)

என்  பரிசுத்த  நாமத்தைப்  பரிசுத்தக்குலைச்சலாக்காதிருப்பீர்களாக;  நான்  இஸ்ரவேல்  புத்திரர்  நடுவே  பரிசுத்தர்  என்று  மதிக்கப்படுவேன்;  நான்  உங்களைப்  பரிசுத்தமாக்குகிற  கர்த்தர்.  (லேவியராகமம்  22:32)

en  parisuththa  naamaththaip  parisuththakkulaichchalaakkaathiruppeerga'laaga;  naan  israveal  puththirar  naduvea  parisuththar  en’ru  mathikkappaduvean;  naan  ungga'laip  parisuththamaakkugi’ra  karththar.  (leaviyaraagamam  22:32)

நான்  உங்களுக்குத்  தேவனாயிருப்பதற்காக,  உங்களை  எகிப்துதேசத்திலிருந்து  புறப்படப்பண்ணினேன்;  நான்  கர்த்தர்  என்று  சொல்  என்றார்.  (லேவியராகமம்  22:33)

naan  ungga'lukkuth  theavanaayiruppatha’rkaaga,  ungga'lai  egipthutheasaththilirunthu  pu’rappadappa'n'ninean;  naan  karththar  en’ru  sol  en’raar.  (leaviyaraagamam  22:33)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!