Thursday, November 03, 2016

Leaviyaraagamam 2 | லேவியராகமம் 2 | Leviticus 2

ஒருவன்  போஜனபலியாகிய  காணிக்கையைக்  கர்த்தருக்குச்  செலுத்தவேண்டுமானால்,  அவன்  காணிக்கை  மெல்லிய  மாவாயிருப்பதாக;  அவன்  அதின்மேல்  எண்ணெய்  வார்த்து,  அதின்மேல்  தூபவர்க்கம்  போட்டு,  (லேவியராகமம்  2:1)

oruvan  poajanabaliyaagiya  kaa'nikkaiyaik  karththarukkuch  seluththavea'ndumaanaal,  avan  kaa'nikkai  melliya  maavaayiruppathaaga;  avan  athinmeal  e'n'ney  vaarththu,  athinmeal  thoobavarkkam  poattu,  (leaviyaraagamam  2:1)

அதை  ஆரோனின்  குமாரராகிய  ஆசாரியர்களிடத்தில்  கொண்டுவருவானாக;  அப்பொழுது  ஆசாரியன்  அந்த  மாவிலும்  எண்ணெயிலும்  ஒரு  கைப்பிடி  நிறைய  தூபவர்க்கம்  எல்லாவற்றோடும்  எடுத்து,  அதைப்  பலிபீடத்தின்மேல்  ஞாபகக்குறியாகத்  தகனிக்கக்கடவன்;  அது  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  தகனபலி.  (லேவியராகமம்  2:2)

athai  aaroanin  kumaararaagiya  aasaariyarga'lidaththil  ko'nduvaruvaanaaga;  appozhuthu  aasaariyan  antha  maavilum  e'n'neyilum  oru  kaippidi  ni’raiya  thoobavarkkam  ellaavat’roadum  eduththu,  athaip  balipeedaththinmeal  gnaabagakku’riyaagath  thaganikkakkadavan;  athu  karththarukkuch  sugantha  vaasanaiyaana  thaganabali.  (leaviyaraagamam  2:2)

அந்தப்  போஜனபலியில்  மீதியாயிருப்பது  ஆரோனையும்  அவன்  குமாரரையும்  சேரும்;  கர்த்தருக்கு  இடும்  தகனபலிகளில்  இது  மகா  பரிசுத்தமானது.  (லேவியராகமம்  2:3)

anthap  poajanabaliyil  meethiyaayiruppathu  aaroanaiyum  avan  kumaararaiyum  searum;  karththarukku  idum  thaganabaliga'lil  ithu  mahaa  parisuththamaanathu.  (leaviyaraagamam  2:3)

நீ  படைப்பது  அடுப்பில்  பாகம்பண்ணப்பட்ட  போஜனபலியானால்,  அது  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவினால்  செய்த  புளிப்பில்லா  அதிரசங்களாயாவது,  எண்ணெய்  பூசப்பட்ட  புளிப்பில்லா  அடைகளாயாவது  இருப்பதாக.  (லேவியராகமம்  2:4)

nee  padaippathu  aduppil  paagampa'n'nappatta  poajanabaliyaanaal,  athu  e'n'neyilea  pisaintha  melliya  maavinaal  seytha  pu'lippillaa  athirasangga'laayaavathu,  e'n'ney  poosappatta  pu'lippillaa  adaiga'laayaavathu  iruppathaaga.  (leaviyaraagamam  2:4)

நீ  படைப்பது  தட்டையான  சட்டியில்  பாகம்பண்ணப்பட்ட  போஜனபலியானால்,  அது  எண்ணெயிலே  பிசைந்த  புளிப்பில்லா  மெல்லிய  மாவினால்  செய்யப்பட்டதாயிருப்பதாக.  (லேவியராகமம்  2:5)

nee  padaippathu  thattaiyaana  sattiyil  paagampa'n'nappatta  poajanabaliyaanaal,  athu  e'n'neyilea  pisaintha  pu'lippillaa  melliya  maavinaal  seyyappattathaayiruppathaaga.  (leaviyaraagamam  2:5)

அதைத்  துண்டு  துண்டாகப்  பிட்டு,  அதின்மேல்  எண்ணெய்  வார்ப்பாயாக;  இது  ஒரு  போஜனபலி.  (லேவியராகமம்  2:6)

athaith  thu'ndu  thu'ndaagap  pittu,  athinmeal  e'n'ney  vaarppaayaaga;  ithu  oru  poajanabali.  (leaviyaraagamam  2:6)

நீ  படைப்பது  பொரிக்குஞ்  சட்டியில்  பாகம்பண்ணப்பட்ட  போஜனபலியானால்,  அது  எண்ணெயிலே  பிசைந்த  மெல்லிய  மாவினால்  செய்யப்படுவதாக.  (லேவியராகமம்  2:7)

nee  padaippathu  porikkugn  sattiyil  paagampa'n'nappatta  poajanabaliyaanaal,  athu  e'n'neyilea  pisaintha  melliya  maavinaal  seyyappaduvathaaga.  (leaviyaraagamam  2:7)

இப்படிச்  செய்யப்பட்ட  போஜனபலியைக்  கர்த்தருக்குச்  செலுத்துவாயாக;  அது  ஆசாரியனிடத்தில்  கொண்டுவரப்படும்போது,  அவன்  அதைப்  பலிபீடத்தண்டையில்  கொண்டுவந்து,  (லேவியராகமம்  2:8)

ippadich  seyyappatta  poajanabaliyaik  karththarukkuch  seluththuvaayaaga;  athu  aasaariyanidaththil  ko'nduvarappadumpoathu,  avan  athaip  balipeedaththa'ndaiyil  ko'nduvanthu,  (leaviyaraagamam  2:8)

அந்தப்  போஜனபலியிலிருந்து  ஆசாரியன்  ஞாபகக்குறியாக  ஒரு  பங்கை  எடுத்துப்  பலிபீடத்தின்மேல்  தகனிக்கக்கடவன்;  இது  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  தகனபலி.  (லேவியராகமம்  2:9)

anthap  poajanabaliyilirunthu  aasaariyan  gnaabagakku’riyaaga  oru  panggai  eduththup  balipeedaththinmeal  thaganikkakkadavan;  ithu  karththarukkuch  sugantha  vaasanaiyaana  thaganabali.  (leaviyaraagamam  2:9)

இந்தப்  போஜனபலியில்  மீதியானது  ஆரோனையும்  அவன்  குமாரரையும்  சேரும்;  கர்த்தருக்கு  இடும்  தகனங்களில்  இது  மகா  பரிசுத்தமானது.  (லேவியராகமம்  2:10)

inthap  poajanabaliyil  meethiyaanathu  aaroanaiyum  avan  kumaararaiyum  searum;  karththarukku  idum  thaganangga'lil  ithu  mahaa  parisuththamaanathu.  (leaviyaraagamam  2:10)

நீங்கள்  கர்த்தருக்குச்  செலுத்தும்  எந்த  போஜனபலியும்  புளித்தமாவினால்  செய்யப்படாதிருப்பதாக;  புளித்தமாவுள்ளதொன்றையும்  தேனுள்ளதொன்றையும்  கர்த்தருக்குத்  தகனபலியாகத்  தகனிக்கவேண்டாம்.  (லேவியராகமம்  2:11)

neengga'l  karththarukkuch  seluththum  entha  poajanabaliyum  pu'liththamaavinaal  seyyappadaathiruppathaaga;  pu'liththamaavu'l'lathon’raiyum  theanu'l'lathon’raiyum  karththarukkuth  thaganabaliyaagath  thaganikkavea'ndaam.  (leaviyaraagamam  2:11)

முதற்கனிகளைக்  காணிக்கையாகக்  கொண்டுவந்து,  அவைகளைக்  கர்த்தருக்குச்  செலுத்தலாம்;  ஆனாலும்,  பலிபீடத்தின்மேல்  அவைகள்  சுகந்த  வாசனையாகத்  தகனிக்கப்படலாகாது.  (லேவியராகமம்  2:12)

mutha’rkaniga'laik  kaa'nikkaiyaagak  ko'nduvanthu,  avaiga'laik  karththarukkuch  seluththalaam;  aanaalum,  balipeedaththinmeal  avaiga'l  sugantha  vaasanaiyaagath  thaganikkappadalaagaathu.  (leaviyaraagamam  2:12)

நீ  படைக்கிற  எந்த  போஜனபலியும்  உப்பினால்  சாரமாக்கப்படுவதாக;  உன்  தேவனுடைய  உடன்படிக்கையின்  உப்பை  உன்  போஜனபலியிலே  குறையவிடாமல்,  நீ  படைப்பது  எல்லாவற்றோடும்  உப்பையும்  படைப்பாயாக.  (லேவியராகமம்  2:13)

nee  padaikki’ra  entha  poajanabaliyum  uppinaal  saaramaakkappaduvathaaga;  un  theavanudaiya  udanpadikkaiyin  uppai  un  poajanabaliyilea  ku’raiyavidaamal,  nee  padaippathu  ellaavat’roadum  uppaiyum  padaippaayaaga.  (leaviyaraagamam  2:13)

முதற்பலன்களை  போஜனபலியாக  நீ  கர்த்தருக்குச்  செலுத்தவந்தால்,  நிறைந்த  பச்சையான  கதிர்களை  நெருப்பிலே  வாட்டி  உதிர்த்து,  அதை  உன்  முதற்பலனின்  போஜனபலியாகக்  கொண்டுவரக்கடவாய்.  (லேவியராகமம்  2:14)

mutha’rpalanga'lai  poajanabaliyaaga  nee  karththarukkuch  seluththavanthaal,  ni’raintha  pachchaiyaana  kathirga'lai  neruppilea  vaatti  uthirththu,  athai  un  mutha’rpalanin  poajanabaliyaagak  ko'nduvarakkadavaay.  (leaviyaraagamam  2:14)

அதின்மேல்  எண்ணெய்  வார்த்து,  அதின்மேல்  தூபவர்க்கத்தைப்  போடுவாயாக;  இது  ஒரு  போஜனபலி.  (லேவியராகமம்  2:15)

athinmeal  e'n'ney  vaarththu,  athinmeal  thoobavarkkaththaip  poaduvaayaaga;  ithu  oru  poajanabali.  (leaviyaraagamam  2:15)

பின்பு  ஆசாரியன்,  உதிர்த்த  தானியத்திலும்  எண்ணெயிலும்  எடுத்து,  ஞாபகக்குறியான  பங்கை  அதின்  தூபவர்க்கம்  எல்லாவற்றோடுங்கூடத்  தகனிக்கக்கடவன்;  இது  கர்த்தருக்கு  இடும்  தகனபலி.  (லேவியராகமம்  2:16)

pinbu  aasaariyan,  uthirththa  thaaniyaththilum  e'n'neyilum  eduththu,  gnaabagakku’riyaana  panggai  athin  thoobavarkkam  ellaavat’roadungkoodath  thaganikkakkadavan;  ithu  karththarukku  idum  thaganabali.  (leaviyaraagamam  2:16)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!