Friday, November 04, 2016

Leaviyaraagamam 17 | லேவியராகமம் 17 | Leviticus 17

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  17:1)

pinnum  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  17:1)

நீ  ஆரோனோடும்  அவன்  குமாரரோடும்  இஸ்ரவேல்  புத்திரர்  அனைவரோடும்  சொல்லவேண்டியதாவது;  கர்த்தர்  கட்டளையிடுகிறது  என்னவென்றால்:  (லேவியராகமம்  17:2)

nee  aaroanoadum  avan  kumaararoadum  israveal  puththirar  anaivaroadum  sollavea'ndiyathaavathu;  karththar  katta'laiyidugi’rathu  ennaven’raal:  (leaviyaraagamam  17:2)

இஸ்ரவேல்  குடும்பத்தாரில்  எவனாகிலும்  மாட்டையாவது  செம்மறியாட்டையாவது  வெள்ளாட்டையாவது  ஆசரிப்புக்  கூடாரவாசலாகிய  கர்த்தருடைய  வாசஸ்தலத்துக்கு  முன்பாக,  கர்த்தருக்குச்  செலுத்தும்படி  கொண்டுவராமல்,  (லேவியராகமம்  17:3)

israveal  kudumbaththaaril  evanaagilum  maattaiyaavathu  semma’riyaattaiyaavathu  ve'l'laattaiyaavathu  aasarippuk  koodaaravaasalaagiya  karththarudaiya  vaasasthalaththukku  munbaaga,  karththarukkuch  seluththumpadi  ko'nduvaraamal,  (leaviyaraagamam  17:3)

பாளயத்துக்குள்ளேயாகிலும்  பாளயத்துக்குப்  புறம்பேயாகிலும்  அதைக்  கொன்றால்,  அது  அந்த  மனிதனுக்கு  இரத்தப்பழியாக  எண்ணப்படும்.  அந்த  மனிதன்  இரத்தம்  சிந்தினபடியால்,  தன்  ஜனத்தில்  இராமல்  அறுப்புண்டு  போவான்.  (லேவியராகமம்  17:4)

paa'layaththukku'l'leayaagilum  paa'layaththukkup  pu’rambeayaagilum  athaik  kon’raal,  athu  antha  manithanukku  iraththappazhiyaaga  e'n'nappadum.  antha  manithan  iraththam  sinthinapadiyaal,  than  janaththil  iraamal  a’ruppu'ndu  poavaan.  (leaviyaraagamam  17:4)

ஆகையால்  இஸ்ரவேல்  புத்திரர்  வெளியிலே  பலியிடுகிற  தங்கள்  பலிகளை,  ஆசரிப்புக்  கூடாரவாசலில்  ஆசாரியனிடத்தில்  கர்த்தருடைய  சந்நிதியில்  கொண்டுவந்து,  அங்கே  அவைகளைக்  கர்த்தருக்குச்  சமாதானபலிகளாகச்  செலுத்தக்கடவர்கள்.  (லேவியராகமம்  17:5)

aagaiyaal  israveal  puththirar  ve'liyilea  baliyidugi’ra  thangga'l  baliga'lai,  aasarippuk  koodaaravaasalil  aasaariyanidaththil  karththarudaiya  sannithiyil  ko'nduvanthu,  anggea  avaiga'laik  karththarukkuch  samaathaanabaliga'laagach  seluththakkadavarga'l.  (leaviyaraagamam  17:5)

அங்கே  ஆசாரியன்  இரத்தத்தை  ஆசரிப்புக்  கூடாரவாசலிலிருக்கிற  கர்த்தருடைய  பலிபீடத்தின்மேல்  தெளித்து,  கொழுப்பைக்  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையாகத்  தகனிக்கக்கடவன்.  (லேவியராகமம்  17:6)

anggea  aasaariyan  iraththaththai  aasarippuk  koodaaravaasalilirukki’ra  karththarudaiya  balipeedaththinmeal  the'liththu,  kozhuppaik  karththarukkuch  sugantha  vaasanaiyaagath  thaganikkakkadavan.  (leaviyaraagamam  17:6)

தாங்கள்  சோரமார்க்கமாய்ப்  பின்பற்றுகிற  பேய்களுக்குத்  தங்கள்  பலிகளை  இனிச்  செலுத்தாதிருப்பார்களாக;  இது  அவர்கள்  தலைமுறைதோறும்  அவர்களுக்கு  நித்திய  கட்டளையாயிருக்கக்கடவது.  (லேவியராகமம்  17:7)

thaangga'l  soaramaarkkamaayp  pinpat’rugi’ra  peayga'lukkuth  thangga'l  baliga'lai  inich  seluththaathiruppaarga'laaga;  ithu  avarga'l  thalaimu’raithoa’rum  avarga'lukku  niththiya  katta'laiyaayirukkakkadavathu.  (leaviyaraagamam  17:7)

மேலும்  நீ  அவர்களை  நோக்கி:  இஸ்ரவேல்  குடும்பத்தாரிலும்  உங்கள்  நடுவே  தங்குகிற  அந்நியர்களிலும்  எவனாகிலும்  சர்வாங்க  தகனபலி  முதலானவைகளையிட்டு,  (லேவியராகமம்  17:8)

mealum  nee  avarga'lai  noakki:  israveal  kudumbaththaarilum  ungga'l  naduvea  thanggugi’ra  anniyarga'lilum  evanaagilum  sarvaangga  thaganabali  muthalaanavaiga'laiyittu,  (leaviyaraagamam  17:8)

அதை  ஆசரிப்புக்  கூடாரவாசலிலே  கர்த்தருக்குச்  செலுத்தும்படி  கொண்டுவராவிட்டால்,  அவன்  தன்  ஜனத்தில்  இராமல்  அறுப்புண்டுபோவான்  என்று  சொல்.  (லேவியராகமம்  17:9)

athai  aasarippuk  koodaaravaasalilea  karththarukkuch  seluththumpadi  ko'nduvaraavittaal,  avan  than  janaththil  iraamal  a’ruppu'ndupoavaan  en’ru  sol.  (leaviyaraagamam  17:9)

இஸ்ரவேல்  குடும்பத்தாரிலும்  உங்களுக்குள்  தங்கும்  அந்நியர்களிலும்  எவனாகிலும்  இரத்தம்  என்னப்பட்டதைப்  புசித்தால்,  இரத்தத்தைப்  புசித்த  அவனுக்கு  விரோதமாக  நான்  என்  முகத்தைத்  திருப்பி,  அவன்  தன்  ஜனத்தில்  இராதபடிக்கு  அவனை  அறுப்புண்டுபோகப்  பண்ணுவேன்.  (லேவியராகமம்  17:10)

israveal  kudumbaththaarilum  ungga'lukku'l  thanggum  anniyarga'lilum  evanaagilum  iraththam  ennappattathaip  pusiththaal,  iraththaththaip  pusiththa  avanukku  viroathamaaga  naan  en  mugaththaith  thiruppi,  avan  than  janaththil  iraathapadikku  avanai  a’ruppu'ndupoagap  pa'n'nuvean.  (leaviyaraagamam  17:10)

மாம்சத்தின்  உயிர்  இரத்தத்தில்  இருக்கிறது;  நான்  அதை  உங்களுக்குப்  பலிபீடத்தின்மேல்  உங்கள்  ஆத்துமாக்களுக்காகப்  பாவநிவிர்த்தி  செய்யும்படிக்குக்  கட்டளையிட்டேன்;  ஆத்துமாவிற்காகப்  பாவநிவிர்த்தி  செய்கிறது  இரத்தமே.  (லேவியராகமம்  17:11)

maamsaththin  uyir  iraththaththil  irukki’rathu;  naan  athai  ungga'lukkup  balipeedaththinmeal  ungga'l  aaththumaakka'lukkaagap  paavanivirththi  seyyumpadikkuk  katta'laiyittean;  aaththumaavi’rkaagap  paavanivirththi  seygi’rathu  iraththamea.  (leaviyaraagamam  17:11)

அதினிமித்தம்  உங்களில்  ஒருவனும்  இரத்தம்  புசிக்கவேண்டாம்,  உங்கள்  நடுவே  தங்குகிற  அந்நியனும்  இரத்தம்  புசிக்கவேண்டாம்  என்று  இஸ்ரவேல்  புத்திரருக்குச்  சொன்னேன்.  (லேவியராகமம்  17:12)

athinimiththam  ungga'lil  oruvanum  iraththam  pusikkavea'ndaam,  ungga'l  naduvea  thanggugi’ra  anniyanum  iraththam  pusikkavea'ndaam  en’ru  israveal  puththirarukkuch  sonnean.  (leaviyaraagamam  17:12)

இஸ்ரவேல்  புத்திரரிலும்  உங்களுக்குள்  தங்குகிற  அந்நியர்களிலும்  எவனாகிலும்  புசிக்கத்தக்க  ஒரு  மிருகத்தையாவது  ஒரு  பட்சியையாவது  வேட்டையாடிப்  பிடித்தால்,  அவன்  அதின்  இரத்தத்தைச்  சிந்தப்பண்ணி,  மண்ணினால்  அதை  மூடக்கடவன்.  (லேவியராகமம்  17:13)

israveal  puththirarilum  ungga'lukku'l  thanggugi’ra  anniyarga'lilum  evanaagilum  pusikkaththakka  oru  mirugaththaiyaavathu  oru  padchiyaiyaavathu  veattaiyaadip  pidiththaal,  avan  athin  iraththaththaich  sinthappa'n'ni,  ma'n'ninaal  athai  moodakkadavan.  (leaviyaraagamam  17:13)

சகல  மாம்சத்துக்கும்  இரத்தம்  உயிராயிருக்கிறது;  இரத்தம்  ஜீவனுக்குச்  சமானம்;  ஆகையால்  எந்த  மாம்சத்தின்  இரத்தத்தையும்  புசிக்கவேண்டாம்;  சகல  மாம்சத்தின்  உயிரும்  அதின்  இரத்தந்தானே;  அதைப்  புசிக்கிற  எவனும்  அறுப்புண்டுபோவான்  என்று  இஸ்ரவேல்  புத்திரருக்குச்  சொன்னேன்.  (லேவியராகமம்  17:14)

sagala  maamsaththukkum  iraththam  uyiraayirukki’rathu;  iraththam  jeevanukkuch  samaanam;  aagaiyaal  entha  maamsaththin  iraththaththaiyum  pusikkavea'ndaam;  sagala  maamsaththin  uyirum  athin  iraththanthaanea;  athaip  pusikki’ra  evanum  a’ruppu'ndupoavaan  en’ru  israveal  puththirarukkuch  sonnean.  (leaviyaraagamam  17:14)

தானாய்  இறந்துபோனதையாவது,  பீறுண்டதையாவது,  புசித்தவன்  எவனும்,  அவன்  சுதேசியானாலும்  பரதேசியானாலும்,  தன்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  தண்ணீரில்  முழுகி,  சாயங்காலமட்டும்  தீட்டாயிருப்பானாக;  பின்பு  சுத்தமாயிருப்பான்.  (லேவியராகமம்  17:15)

thaanaay  i’ranthupoanathaiyaavathu,  pee’ru'ndathaiyaavathu,  pusiththavan  evanum,  avan  sutheasiyaanaalum  paratheasiyaanaalum,  than  vasthirangga'laith  thoayththu,  tha'n'neeril  muzhugi,  saayanggaalamattum  theettaayiruppaanaaga;  pinbu  suththamaayiruppaan.  (leaviyaraagamam  17:15)

அவன்  தன்  வஸ்திரங்களைத்  தோய்க்காமலும்,  ஸ்நானம்பண்ணாமலும்  இருந்தால்,  தன்  அக்கிரமத்தைச்  சுமப்பான்  என்று  சொல்  என்றார்.  (லேவியராகமம்  17:16)

avan  than  vasthirangga'laith  thoaykkaamalum,  snaanampa'n'naamalum  irunthaal,  than  akkiramaththaich  sumappaan  en’ru  sol  en’raar.  (leaviyaraagamam  17:16)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!