Friday, November 04, 2016

Leaviyaraagamam 16 | லேவியராகமம் 16 | Leviticus 16


ஆரோனின்  இரண்டு  குமாரர்  கர்த்தருடைய  சந்நிதியிலே  சேர்ந்து  மரித்துப்போனபின்பு,  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  16:1)

aaroanin  ira'ndu  kumaarar  karththarudaiya  sannithiyilea  searnthu  mariththuppoanapinbu,  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  16:1)

கிருபாசனத்தின்மேல்  ஒரு  மேகத்தில்  நான்  காணப்படுவேன்;  ஆதலால்  உன்  சகோதரனாகிய  ஆரோன்  சாகாதபடி,  பரிசுத்த  ஸ்தலத்திலே  திரைக்கு  உட்புறத்திலிருக்கிற  பெட்டியின்மேலுள்ள  கிருபாசன  மூடிக்கு  முன்பாகச்  சகல  வேளையிலும்  வரவேண்டாம்  என்று  அவனுக்குச்  சொல்.  (லேவியராகமம்  16:2)

kirubaasanaththinmeal  oru  meagaththil  naan  kaa'nappaduvean;  aathalaal  un  sagoatharanaagiya  aaroan  saagaathapadi,  parisuththa  sthalaththilea  thiraikku  udpu’raththilirukki’ra  pettiyinmealu'l'la  kirubaasana  moodikku  munbaagach  sagala  vea'laiyilum  varavea'ndaam  en’ru  avanukkuch  sol.  (leaviyaraagamam  16:2)

ஆரோன்  பரிசுத்த  ஸ்தலத்துக்குள்  பிரவேசிக்கவேண்டிய  விதமாவது:  அவன்  ஒரு  காளையைப்  பாவநிவாரணபலியாகவும்,  ஒரு  ஆட்டுக்கடாவைச்  சர்வாங்க  தகனபலியாகவும்  செலுத்திப்  பிரவேசிக்கவேண்டும்.  (லேவியராகமம்  16:3)

aaroan  parisuththa  sthalaththukku'l  piraveasikkavea'ndiya  vithamaavathu:  avan  oru  kaa'laiyaip  paavanivaara'nabaliyaagavum,  oru  aattukkadaavaich  sarvaangga  thaganabaliyaagavum  seluththip  piraveasikkavea'ndum.  (leaviyaraagamam  16:3)

அவன்  பரிசுத்தமான  சணல்நூல்  சட்டையைத்  தரித்து,  தன்  அரைக்குச்  சணல்நூல்  ஜல்லடத்தைப்  போட்டு,  சணல்நூல்  இடைக்கச்சையைக்  கட்டி,  சணல்நூல்  பாகையைத்  தரித்துக்கொண்டிருக்கவேண்டும்;  அவைகள்  பரிசுத்த  வஸ்திரங்கள்;  அவன்  ஜலத்திலே  ஸ்நானம்பண்ணி,  அவைகளைத்  தரித்துக்கொண்டு,  (லேவியராகமம்  16:4)

avan  parisuththamaana  sa'nalnool  sattaiyaith  thariththu,  than  araikkuch  sa'nalnool  jalladaththaip  poattu,  sa'nalnool  idaikkachchaiyaik  katti,  sa'nalnool  paagaiyaith  thariththukko'ndirukkavea'ndum;  avaiga'l  parisuththa  vasthirangga'l;  avan  jalaththilea  snaanampa'n'ni,  avaiga'laith  thariththukko'ndu,  (leaviyaraagamam  16:4)

இஸ்ரவேல்  புத்திரராகிய  சபையாரிடத்திலே,  பாவநிவாரணபலியாக  இரண்டு  வெள்ளாட்டுக்கடாக்களையும்,  சர்வாங்க  தகனபலியாக  ஒரு  ஆட்டுக்கடாவையும்  வாங்கக்கடவன்.  (லேவியராகமம்  16:5)

israveal  puththiraraagiya  sabaiyaaridaththilea,  paavanivaara'nabaliyaaga  ira'ndu  ve'l'laattukkadaakka'laiyum,  sarvaangga  thaganabaliyaaga  oru  aattukkadaavaiyum  vaanggakkadavan.  (leaviyaraagamam  16:5)

பின்பு  ஆரோன்  தனக்காகவும்  தன்  வீட்டாருக்காகவும்  பாவநிவிர்த்தி  செய்யும்படிக்கு,  தன்னுடைய  பாவநிவாரணபலியின்  காளையைச்  சேரப்பண்ணி,  (லேவியராகமம்  16:6)

pinbu  aaroan  thanakkaagavum  than  veettaarukkaagavum  paavanivirththi  seyyumpadikku,  thannudaiya  paavanivaara'nabaliyin  kaa'laiyaich  searappa'n'ni,  (leaviyaraagamam  16:6)

அந்த  இரண்டு  வெள்ளாட்டுக்கடாக்களையும்  கொண்டுவந்து,  ஆசரிப்புக்  கூடாரவாசலிலே  கர்த்தருடைய  சந்நிதியில்  நிறுத்தி,  (லேவியராகமம்  16:7)

antha  ira'ndu  ve'l'laattukkadaakka'laiyum  ko'nduvanthu,  aasarippuk  koodaaravaasalilea  karththarudaiya  sannithiyil  ni’ruththi,  (leaviyaraagamam  16:7)

அந்த  இரண்டு  வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக்  கர்த்தருக்கென்று  ஒரு  சீட்டும்,  போக்காடாக  விடப்படும்  வெள்ளாட்டுக்கடாவுக்கென்று  ஒரு  சீட்டும்  போட்டு,  (லேவியராகமம்  16:8)

antha  ira'ndu  ve'l'laattukkadaakka'laiyungku’riththuk  karththarukken’ru  oru  seettum,  poakkaadaaga  vidappadum  ve'l'laattukkadaavukken’ru  oru  seettum  poattu,  (leaviyaraagamam  16:8)

கர்த்தருக்கென்று  சீட்டு  விழுந்த  வெள்ளாட்டுக்கடாவைப்  பாவநிவாரணபலியாகச்  சேரப்பண்ணி,  (லேவியராகமம்  16:9)

karththarukken’ru  seettu  vizhuntha  ve'l'laattukkadaavaip  paavanivaara'nabaliyaagach  searappa'n'ni,  (leaviyaraagamam  16:9)

போக்காடாக  விடப்படச்  சீட்டு  விழுந்த  வெள்ளாட்டுக்கடாவை,  அதைக்கொண்டு  பாவநிவிர்த்தி  உண்டாக்கவும்  அதைப்  போக்காடாக  வனாந்தரத்திலே  போகவிடவும்,  கர்த்தருடைய  சந்நிதியில்  உயிரோடே  நிறுத்தி;  (லேவியராகமம்  16:10)

poakkaadaaga  vidappadach  seettu  vizhuntha  ve'l'laattukkadaavai,  athaikko'ndu  paavanivirththi  u'ndaakkavum  athaip  poakkaadaaga  vanaantharaththilea  poagavidavum,  karththarudaiya  sannithiyil  uyiroadea  ni’ruththi;  (leaviyaraagamam  16:10)

பின்பு  ஆரோன்  தனக்காகவும்  தன்  வீட்டாருக்காகவும்  பாவநிவிர்த்தி  செய்யும்படி,  தன்னுடைய  பாவநிவாரணத்துக்கான  காளையைக்  கொண்டுவந்து,  அதைக்  கொன்று,  (லேவியராகமம்  16:11)

pinbu  aaroan  thanakkaagavum  than  veettaarukkaagavum  paavanivirththi  seyyumpadi,  thannudaiya  paavanivaara'naththukkaana  kaa'laiyaik  ko'nduvanthu,  athaik  kon’ru,  (leaviyaraagamam  16:11)

கர்த்தருடைய  சந்நிதியிலிருக்கும்  பலிபீடத்தின்மேலுள்ள  நெருப்புத்தணலினால்  தூபகலசத்தை  நிரப்பி,  பொடியாக்கப்பட்ட  சுகந்த  தூபவர்க்கத்திலே  தன்  கைப்பிடிகள்  நிறைய  எடுத்து,  திரைக்கு  உட்புறமாகக்  கொண்டுவந்து,  (லேவியராகமம்  16:12)

karththarudaiya  sannithiyilirukkum  balipeedaththinmealu'l'la  neruppuththa'nalinaal  thoobakalasaththai  nirappi,  podiyaakkappatta  sugantha  thoobavarkkaththilea  than  kaippidiga'l  ni’raiya  eduththu,  thiraikku  udpu’ramaagak  ko'nduvanthu,  (leaviyaraagamam  16:12)

தான்  சாகாதபடிக்குத்  தூபமேகமானது  சாட்சிப்பெட்டியின்மேல்  இருக்கும்  கிருபாசனத்தை  மூடத்தக்கதாக,  கர்த்தருடைய  சந்நிதியில்  அக்கினியின்மேல்  தூபவர்க்கத்தைப்  போடக்கடவன்.  (லேவியராகமம்  16:13)

thaan  saagaathapadikkuth  thoobameagamaanathu  saadchippettiyinmeal  irukkum  kirubaasanaththai  moodaththakkathaaga,  karththarudaiya  sannithiyil  akkiniyinmeal  thoobavarkkaththaip  poadakkadavan.  (leaviyaraagamam  16:13)

பின்பு  காளையின்  இரத்தத்திலே  கொஞ்சம்  எடுத்து,  கீழ்ப்புறமாக  நின்று,  தன்  விரலினால்  கிருபாசனத்தின்மேல்  தெளித்து,  அந்த  இரத்தத்தில்  கொஞ்சம்  எடுத்துக்  கிருபாசனத்துக்கு  முன்பாக  ஏழுதரம்  தன்  விரலினால்  தெளிக்கக்கடவன்.  (லேவியராகமம்  16:14)

pinbu  kaa'laiyin  iraththaththilea  kogncham  eduththu,  keezhppu’ramaaga  nin’ru,  than  viralinaal  kirubaasanaththinmeal  the'liththu,  antha  iraththaththil  kogncham  eduththuk  kirubaasanaththukku  munbaaga  eazhutharam  than  viralinaal  the'likkakkadavan.  (leaviyaraagamam  16:14)

பின்பு  ஜனத்தினுடைய  பாவநிவாரணபலியான  வெள்ளாட்டுக்கடாவை  அவன்  கொன்று,  அதின்  இரத்தத்தைத்  திரைக்கு  உட்புறமாகக்  கொண்டுவந்து,  காளையின்  இரத்தத்தைத்  தெளித்ததுபோல,  அதின்  இரத்தத்தையும்  கிருபாசனத்தின்மேலும்  அதற்கு  முன்பாகவும்  தெளித்து,  (லேவியராகமம்  16:15)

pinbu  janaththinudaiya  paavanivaara'nabaliyaana  ve'l'laattukkadaavai  avan  kon’ru,  athin  iraththaththaith  thiraikku  udpu’ramaagak  ko'nduvanthu,  kaa'laiyin  iraththaththaith  the'liththathupoala,  athin  iraththaththaiyum  kirubaasanaththinmealum  atha’rku  munbaagavum  the'liththu,  (leaviyaraagamam  16:15)

இஸ்ரவேல்  புத்திரருடைய  தீட்டுகளினிமித்தமும்,  அவர்களுடைய  சகல  பாவங்களினாலும்  உண்டான  அவர்களுடைய  மீறுதல்களினிமித்தமும்,  பரிசுத்த  ஸ்தலத்திற்காகப்  பிராயச்சித்தஞ்செய்து,  அவர்களிடத்தில்  அவர்களுடைய  தீட்டுகளுக்குள்ளே  நிற்கிற  ஆசரிப்புக்  கூடாரத்திற்காகவும்  அப்படியே  செய்யக்கடவன்.  (லேவியராகமம்  16:16)

israveal  puththirarudaiya  theettuga'linimiththamum,  avarga'ludaiya  sagala  paavangga'linaalum  u'ndaana  avarga'ludaiya  mee’ruthalga'linimiththamum,  parisuththa  sthalaththi’rkaagap  piraayachchiththagnseythu,  avarga'lidaththil  avarga'ludaiya  theettuga'lukku'l'lea  ni’rki’ra  aasarippuk  koodaaraththi’rkaagavum  appadiyea  seyyakkadavan.  (leaviyaraagamam  16:16)

பாவநிவிர்த்தி  செய்யும்படி  அவன்  பரிசுத்த  ஸ்தலத்துக்குள்  பிரவேசித்து,  தனக்காகவும்  தன்  வீட்டாருக்காகவும்  இஸ்ரவேல்  சபையார்  அனைவருக்காகவும்  பாவநிவிர்த்தி  செய்து,  வெளியே  வருமளவும்  ஆசரிப்புக்  கூடாரத்தில்  ஒருவரும்  இருக்கலாகாது.  (லேவியராகமம்  16:17)

paavanivirththi  seyyumpadi  avan  parisuththa  sthalaththukku'l  piraveasiththu,  thanakkaagavum  than  veettaarukkaagavum  israveal  sabaiyaar  anaivarukkaagavum  paavanivirththi  seythu,  ve'liyea  varuma'lavum  aasarippuk  koodaaraththil  oruvarum  irukkalaagaathu.  (leaviyaraagamam  16:17)

பின்பு  அவன்  கர்த்தருடைய  சந்நிதியில்  இருக்கிற  பலிபீடத்தண்டை  வந்து,  அதற்காகப்  பிராயச்சித்தஞ்செய்து,  காளையின்  இரத்தத்திலும்  வெள்ளாட்டுக்கடாவின்  இரத்தத்திலும்  கொஞ்சம்  எடுத்து,  பலிபீடத்துக்  கொம்புகளின்மேல்  சுற்றிலும்  பூசி,  (லேவியராகமம்  16:18)

pinbu  avan  karththarudaiya  sannithiyil  irukki’ra  balipeedaththa'ndai  vanthu,  atha’rkaagap  piraayachchiththagnseythu,  kaa'laiyin  iraththaththilum  ve'l'laattukkadaavin  iraththaththilum  kogncham  eduththu,  balipeedaththuk  kombuga'linmeal  sut’rilum  poosi,  (leaviyaraagamam  16:18)

தன்  விரலினால்  அந்த  இரத்தத்தில்  எடுத்து,  ஏழுதரம்  அதின்மேல்  தெளித்து,  அதை  இஸ்ரவேல்  புத்திரரின்  தீட்டுகள்  நீங்கச்  சுத்திகரித்து,  பரிசுத்தப்படுத்தக்கடவன்.  (லேவியராகமம்  16:19)

than  viralinaal  antha  iraththaththil  eduththu,  eazhutharam  athinmeal  the'liththu,  athai  israveal  puththirarin  theettuga'l  neenggach  suththigariththu,  parisuththappaduththakkadavan.  (leaviyaraagamam  16:19)

அவன்  இப்படிப்  பரிசுத்த  ஸ்தலத்துக்கும்  ஆசரிப்புக்  கூடாரத்துக்கும்  பலிபீடத்துக்கும்  பிராயச்சித்தஞ்செய்து  தீர்ந்தபின்பு,  உயிரோடிருக்கிற  வெள்ளாட்டுக்கடாவைச்  சேரப்பண்ணி,  (லேவியராகமம்  16:20)

avan  ippadip  parisuththa  sthalaththukkum  aasarippuk  koodaaraththukkum  balipeedaththukkum  piraayachchiththagnseythu  theernthapinbu,  uyiroadirukki’ra  ve'l'laattukkadaavaich  searappa'n'ni,  (leaviyaraagamam  16:20)

அதின்  தலையின்மேல்  ஆரோன்  தன்  இரண்டு  கைகளையும்  வைத்து,  அதின்மேல்  இஸ்ரவேல்  புத்திரருடைய  சகல  அக்கிரமங்களையும்  அவர்களுடைய  எல்லாப்  பாவங்களினாலும்  உண்டான  அவர்களுடைய  சகல  மீறுதல்களையும்  அறிக்கையிட்டு,  அவைகளை  வெள்ளாட்டுக்கடாவினுடைய  தலையின்மேல்  சுமத்தி,  அதை  அதற்கான  ஆள்வசமாய்  வனாந்தரத்துக்கு  அனுப்பிவிடக்கடவன்.  (லேவியராகமம்  16:21)

athin  thalaiyinmeal  aaroan  than  ira'ndu  kaiga'laiyum  vaiththu,  athinmeal  israveal  puththirarudaiya  sagala  akkiramangga'laiyum  avarga'ludaiya  ellaap  paavangga'linaalum  u'ndaana  avarga'ludaiya  sagala  mee’ruthalga'laiyum  a’rikkaiyittu,  avaiga'lai  ve'l'laattukkadaavinudaiya  thalaiyinmeal  sumaththi,  athai  atha’rkaana  aa'lvasamaay  vanaantharaththukku  anuppividakkadavan.  (leaviyaraagamam  16:21)

அந்த  வெள்ளாட்டுக்கடா  அவர்களுடைய  அக்கிரமங்களையெல்லாம்  தன்மேல்  சுமந்துகொண்டு,  குடியில்லாத  தேசத்துக்குப்  போவதாக;  அவன்  அந்த  வெள்ளாட்டுக்கடாவை  வனாந்தரத்திலே  போகவிடக்கடவன்.  (லேவியராகமம்  16:22)

antha  ve'l'laattukkadaa  avarga'ludaiya  akkiramangga'laiyellaam  thanmeal  sumanthuko'ndu,  kudiyillaatha  theasaththukkup  poavathaaga;  avan  antha  ve'l'laattukkadaavai  vanaantharaththilea  poagavidakkadavan.  (leaviyaraagamam  16:22)

ஆரோன்  ஆசரிப்புக்  கூடாரத்துக்குள்  வந்து,  தான்  பரிசுத்த  ஸ்தலத்துக்குள்  பிரவேசிக்கும்போது,  உடுத்தியிருந்த  சணல்நூல்  வஸ்திரங்களைக்  களைந்து,  அங்கே  வைத்துவிட்டு,  (லேவியராகமம்  16:23)

aaroan  aasarippuk  koodaaraththukku'l  vanthu,  thaan  parisuththa  sthalaththukku'l  piraveasikkumpoathu,  uduththiyiruntha  sa'nalnool  vasthirangga'laik  ka'lainthu,  anggea  vaiththuvittu,  (leaviyaraagamam  16:23)

பரிசுத்த  இடத்திலே  ஜலத்தில்  ஸ்நானம்பண்ணி,  தன்  வஸ்திரங்களை  உடுத்திக்கொண்டு,  வெளியே  வந்து,  தன்  சர்வாங்க  தகனபலியையும்  ஜனங்களின்  சர்வாங்க  தகனபலியையும்  இட்டு,  தனக்காகவும்  ஜனங்களுக்காகவும்  பாவநிவிர்த்தி  செய்து,  (லேவியராகமம்  16:24)

parisuththa  idaththilea  jalaththil  snaanampa'n'ni,  than  vasthirangga'lai  uduththikko'ndu,  ve'liyea  vanthu,  than  sarvaangga  thaganabaliyaiyum  janangga'lin  sarvaangga  thaganabaliyaiyum  ittu,  thanakkaagavum  janangga'lukkaagavum  paavanivirththi  seythu,  (leaviyaraagamam  16:24)

பாவநிவாரணபலியின்  கொழுப்பைப்  பலிபீடத்தின்மேல்  தகனிக்கக்கடவன்.  (லேவியராகமம்  16:25)

paavanivaara'nabaliyin  kozhuppaip  balipeedaththinmeal  thaganikkakkadavan.  (leaviyaraagamam  16:25)

போகவிடப்படும்  போக்காடாகிய  வெள்ளாட்டுக்கடாவைக்  கொண்டுபோய்  விட்டவன்,  தன்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  ஜலத்தில்  ஸ்நானம்பண்ணி,  பின்பு  பாளயத்துக்குள்  வருவானாக.  (லேவியராகமம்  16:26)

poagavidappadum  poakkaadaagiya  ve'l'laattukkadaavaik  ko'ndupoay  vittavan,  than  vasthirangga'laith  thoayththu,  jalaththil  snaanampa'n'ni,  pinbu  paa'layaththukku'l  varuvaanaaga.  (leaviyaraagamam  16:26)

பாவநிவிர்த்திக்கென்று  பரிசுத்த  ஸ்தலத்துக்குள்  இரத்தம்  கொண்டுவரப்பட்ட  பாவநிவாரணபலியாகிய  காளையையும்,  பாவநிவாரணபலியாகிய  வெள்ளாட்டுக்கடாவையும்,  பாளயத்துக்குப்  புறம்பே  கொண்டுபோய்,  அவைகளின்  தோலையும்  மாம்சத்தையும்  சாணியையும்  அக்கினியிலே  சுட்டெரிக்கக்கடவர்கள்.  (லேவியராகமம்  16:27)

paavanivirththikken’ru  parisuththa  sthalaththukku'l  iraththam  ko'nduvarappatta  paavanivaara'nabaliyaagiya  kaa'laiyaiyum,  paavanivaara'nabaliyaagiya  ve'l'laattukkadaavaiyum,  paa'layaththukkup  pu’rambea  ko'ndupoay,  avaiga'lin  thoalaiyum  maamsaththaiyum  saa'niyaiyum  akkiniyilea  sutterikkakkadavarga'l.  (leaviyaraagamam  16:27)

அவைகளைச்  சுட்டெரித்தவன்  தன்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  ஜலத்திலே  ஸ்நானம்பண்ணி,  பின்பு  பாளயத்துக்குள்  வருவானாக.  (லேவியராகமம்  16:28)

avaiga'laich  sutteriththavan  than  vasthirangga'laith  thoayththu,  jalaththilea  snaanampa'n'ni,  pinbu  paa'layaththukku'l  varuvaanaaga.  (leaviyaraagamam  16:28)

ஏழாம்  மாதம்  பத்தாம்  தேதியிலே,  சுதேசியானாலும்  உங்களுக்குள்  தங்கும்  பரதேசியானாலும்,  தங்கள்  ஆத்துமாக்களைத்  தாழ்மைப்படுத்துவதுமன்றி,  ஒரு  வேலையும்  செய்யாமல்  இருக்கவேண்டும்;  இது  உங்களுக்கு  நித்திய  கட்டளையாய்  இருக்கக்கடவது.  (லேவியராகமம்  16:29)

eazhaam  maatham  paththaam  theathiyilea,  sutheasiyaanaalum  ungga'lukku'l  thanggum  paratheasiyaanaalum,  thangga'l  aaththumaakka'laith  thaazhmaippaduththuvathuman’ri,  oru  vealaiyum  seyyaamal  irukkavea'ndum;  ithu  ungga'lukku  niththiya  katta'laiyaay  irukkakkadavathu.  (leaviyaraagamam  16:29)

கர்த்தருடைய  சந்நிதியில்  உங்கள்  பாவமெல்லாம்  நீங்கிச்  சுத்திகரிக்கப்படும்படி,  அந்நாளில்  உங்களைச்  சுத்திகரிக்கும்பொருட்டு,  உங்களுக்காகப்  பாவநிவிர்த்தி  செய்யப்படும்.  (லேவியராகமம்  16:30)

karththarudaiya  sannithiyil  ungga'l  paavamellaam  neenggich  suththigarikkappadumpadi,  annaa'lil  ungga'laich  suththigarikkumporuttu,  ungga'lukkaagap  paavanivirththi  seyyappadum.  (leaviyaraagamam  16:30)

உங்களுக்கு  அது  விசேஷித்த  ஓய்வுநாள்;  அதிலே  உங்கள்  ஆத்துமாக்களைத்  தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்;  இது  நித்திய  கட்டளை.  (லேவியராகமம்  16:31)

ungga'lukku  athu  viseashiththa  oayvunaa'l;  athilea  ungga'l  aaththumaakka'laith  thaazhmaippaduththakkadaveerga'l;  ithu  niththiya  katta'lai.  (leaviyaraagamam  16:31)

அபிஷேகம்  பெற்றவனும்,  தன்  தகப்பன்  பட்டத்திற்கு  வந்து  ஆசாரிய  ஊழியஞ்செய்யப்  பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாகிய  ஆசாரியனே  பாவநிவிர்த்தி  செய்யக்கடவன்.  அவன்  பரிசுத்த  வஸ்திரங்களாகிய  சணல்நூல்  வஸ்திரங்களை  உடுத்திக்கொண்டு,  (லேவியராகமம்  16:32)

abisheagam  pet’ravanum,  than  thagappan  pattaththi’rku  vanthu  aasaariya  oozhiyagnseyyap  pirathishdaipa'n'nappattavanumaagiya  aasaariyanea  paavanivirththi  seyyakkadavan.  avan  parisuththa  vasthirangga'laagiya  sa'nalnool  vasthirangga'lai  uduththikko'ndu,  (leaviyaraagamam  16:32)

பரிசுத்த  ஸ்தலத்துக்கும்  ஆசரிப்புக்  கூடாரத்துக்கும்  பலிபீடத்துக்கும்  பிராயச்சித்தஞ்செய்து,  ஆசாரியருக்காகவும்  சபையின்  சகல  ஜனங்களுக்காகவும்  பாவநிவிர்த்தி  செய்யக்கடவன்.  (லேவியராகமம்  16:33)

parisuththa  sthalaththukkum  aasarippuk  koodaaraththukkum  balipeedaththukkum  piraayachchiththagnseythu,  aasaariyarukkaagavum  sabaiyin  sagala  janangga'lukkaagavum  paavanivirththi  seyyakkadavan.  (leaviyaraagamam  16:33)

இப்படி  வருஷத்தில்  ஒருமுறை  இஸ்ரவேல்  புத்திரருக்காக,  அவர்களுடைய  சகல  பாவங்களுக்கும்  பாவநிவிர்த்தி  செய்வது,  உங்களுக்கு  நித்திய  கட்டளையாயிருக்கக்கடவது  என்று  சொல்  என்றார்.  கர்த்தர்  மோசேக்குக்  கட்டளையிட்டபடியே  ஆரோன்  செய்தான்.  (லேவியராகமம்  16:34)

ippadi  varushaththil  orumu’rai  israveal  puththirarukkaaga,  avarga'ludaiya  sagala  paavangga'lukkum  paavanivirththi  seyvathu,  ungga'lukku  niththiya  katta'laiyaayirukkakkadavathu  en’ru  sol  en’raar.  karththar  moaseakkuk  katta'laiyittapadiyea  aaroan  seythaan.  (leaviyaraagamam  16:34)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!