Friday, November 04, 2016

Leaviyaraagamam 15 | லேவியராகமம் 15 | Leviticus 15

பின்னும்  கர்த்தர்  மோசேயையும்  ஆரோனையும்  நோக்கி:  (லேவியராகமம்  15:1)

pinnum  karththar  moaseayaiyum  aaroanaiyum  noakki:  (leaviyaraagamam  15:1)

நீங்கள்  இஸ்ரவேல்  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  ஒருவனுக்குப்  பிரமியம்  உண்டானால்,  அவன்  தன்  பிரமியத்தினாலே  தீட்டானவன்.  (லேவியராகமம்  15:2)

neengga'l  israveal  puththiraroadea  sollavea'ndiyathu  ennaven’raal:  oruvanukkup  piramiyam  u'ndaanaal,  avan  than  piramiyaththinaalea  theettaanavan.  (leaviyaraagamam  15:2)

அவனுடைய  மாம்சத்திலுள்ள  பிரமியம்  ஊறிக்கொண்டிருந்தாலும்,  அவன்  பிரமியம்  அடைபட்டிருந்தாலும்,  அதினால்  அவனுக்குத்  தீட்டுண்டாகும்.  (லேவியராகமம்  15:3)

avanudaiya  maamsaththilu'l'la  piramiyam  oo’rikko'ndirunthaalum,  avan  piramiyam  adaipattirunthaalum,  athinaal  avanukkuth  theettu'ndaagum.  (leaviyaraagamam  15:3)

பிரமியமுள்ளவன்  படுக்கிற  எந்தப்  படுக்கையும்  தீட்டாகும்;  அவன்  எதின்மேல்  உட்காருகிறானோ  அதுவும்  தீட்டாகும்.  (லேவியராகமம்  15:4)

piramiyamu'l'lavan  padukki’ra  enthap  padukkaiyum  theettaagum;  avan  ethinmeal  udkaarugi’raanoa  athuvum  theettaagum.  (leaviyaraagamam  15:4)

அவன்  படுக்கையைத்  தொடுகிறவன்  தன்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  தண்ணீரில்  முழுகக்கடவன்;  சாயங்காலமட்டும்  அவன்  தீட்டுப்பட்டிருப்பானாக.  (லேவியராகமம்  15:5)

avan  padukkaiyaith  thodugi’ravan  than  vasthirangga'laith  thoayththu,  tha'n'neeril  muzhugakkadavan;  saayanggaalamattum  avan  theettuppattiruppaanaaga.  (leaviyaraagamam  15:5)

பிரமியம்  உள்ளவன்  உட்கார்ந்ததின்மேல்  உட்காருகிறவன்  தன்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  தண்ணீரில்  முழுகி,  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பானாக.  (லேவியராகமம்  15:6)

piramiyam  u'l'lavan  udkaarnthathinmeal  udkaarugi’ravan  than  vasthirangga'laith  thoayththu,  tha'n'neeril  muzhugi,  saayanggaalamattum  theettuppattiruppaanaaga.  (leaviyaraagamam  15:6)

பிரமியம்  உள்ளவனின்  சரீரத்தைத்  தொடுகிறவன்  தன்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  தண்ணீரில்  முழுகி,  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பானாக.  (லேவியராகமம்  15:7)

piramiyam  u'l'lavanin  sareeraththaith  thodugi’ravan  than  vasthirangga'laith  thoayththu,  tha'n'neeril  muzhugi,  saayanggaalamattum  theettuppattiruppaanaaga.  (leaviyaraagamam  15:7)

பிரமியம்  உள்ளவன்  சுத்தமாயிருக்கிற  ஒருவன்மேல்  துப்பினால்,  இவன்  தன்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  தண்ணீரில்  முழுகி,  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பானாக.  (லேவியராகமம்  15:8)

piramiyam  u'l'lavan  suththamaayirukki’ra  oruvanmeal  thuppinaal,  ivan  than  vasthirangga'laith  thoayththu,  tha'n'neeril  muzhugi,  saayanggaalamattum  theettuppattiruppaanaaga.  (leaviyaraagamam  15:8)

பிரமியம்  உள்ளவன்  ஏறும்  எந்தச்சேணமும்  தீட்டாயிருக்கும்.  (லேவியராகமம்  15:9)

piramiyam  u'l'lavan  ea’rum  enthachsea'namum  theettaayirukkum.  (leaviyaraagamam  15:9)

அவனுக்குக்  கீழிருந்த  எதையாகிலும்  தொடுகிறவன்  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்;  அதை  எடுத்துக்கொண்டு  போகிறவன்  தன்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  தண்ணீரில்  முழுகி,  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பானாக.  (லேவியராகமம்  15:10)

avanukkuk  keezhiruntha  ethaiyaagilum  thodugi’ravan  saayanggaalamattum  theettuppattiruppaan;  athai  eduththukko'ndu  poagi’ravan  than  vasthirangga'laith  thoayththu,  tha'n'neeril  muzhugi,  saayanggaalamattum  theettuppattiruppaanaaga.  (leaviyaraagamam  15:10)

பிரமியம்  உள்ளவன்  தன்  கைகளைத்  தண்ணீரினால்  கழுவாமல்  ஒருவனைத்  தொட்டால்,  இவன்  தன்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  தண்ணீரில்  முழுகி,  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பானாக.  (லேவியராகமம்  15:11)

piramiyam  u'l'lavan  than  kaiga'laith  tha'n'neerinaal  kazhuvaamal  oruvanaith  thottaal,  ivan  than  vasthirangga'laith  thoayththu,  tha'n'neeril  muzhugi,  saayanggaalamattum  theettuppattiruppaanaaga.  (leaviyaraagamam  15:11)

பிரமியம்  உள்ளவன்  தொட்ட  மண்பாண்டம்  உடைக்கப்படவும்,  மரச்சாமான்  எல்லாம்  தண்ணீரினால்  கழுவப்படவும்  வேண்டும்.  (லேவியராகமம்  15:12)

piramiyam  u'l'lavan  thotta  ma'npaa'ndam  udaikkappadavum,  marachsaamaan  ellaam  tha'n'neerinaal  kazhuvappadavum  vea'ndum.  (leaviyaraagamam  15:12)

பிரமியம்  உள்ளவன்  தன்  பிரமியம்  நீங்கிச்  சுத்தமானால்,  தன்  சுத்திகரிப்புக்கென்று  ஏழுநாள்  எண்ணிக்கொண்டிருந்து,  தன்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  தன்  தேகத்தை  ஊற்றுநீரில்  கழுவக்கடவன்;  அப்பொழுது  சுத்தமாயிருப்பான்.  (லேவியராகமம்  15:13)

piramiyam  u'l'lavan  than  piramiyam  neenggich  suththamaanaal,  than  suththigarippukken’ru  eazhunaa'l  e'n'nikko'ndirunthu,  than  vasthirangga'laith  thoayththu,  than  theagaththai  oot’runeeril  kazhuvakkadavan;  appozhuthu  suththamaayiruppaan.  (leaviyaraagamam  15:13)

எட்டாம்நாளிலே,  அவன்  இரண்டு  காட்டுப்  புறாக்களையாவது,  இரண்டு  புறாக்குஞ்சுகளையாவது,  ஆசரிப்புக்  கூடாரவாசலிலே  கர்த்தருடைய  சந்நிதியில்  கொண்டுவந்து,  ஆசாரியனிடத்தில்  கொடுக்கக்கடவன்.  (லேவியராகமம்  15:14)

ettaamnaa'lilea,  avan  ira'ndu  kaattup  pu’raakka'laiyaavathu,  ira'ndu  pu’raakkugnchuga'laiyaavathu,  aasarippuk  koodaaravaasalilea  karththarudaiya  sannithiyil  ko'nduvanthu,  aasaariyanidaththil  kodukkakkadavan.  (leaviyaraagamam  15:14)

ஆசாரியன்  அவைகளில்  ஒன்றைப்  பாவநிவாரணபலியும்  மற்றொன்றைச்  சர்வாங்க  தகனபலியுமாக்கி,  அவனுக்காகக்  கர்த்தருடைய  சந்நிதியில்  அவன்  பிரமியத்தினிமித்தம்  பாவநிவிர்த்தி  செய்யவேண்டும்.  (லேவியராகமம்  15:15)

aasaariyan  avaiga'lil  on’raip  paavanivaara'nabaliyum  mat’ron’raich  sarvaangga  thaganabaliyumaakki,  avanukkaagak  karththarudaiya  sannithiyil  avan  piramiyaththinimiththam  paavanivirththi  seyyavea'ndum.  (leaviyaraagamam  15:15)

ஒருவனிலிருந்து  இந்திரியம்  கழிந்ததுண்டானால்,  அவன்  தண்ணீரில்  முழுகவேண்டும்;  சாயங்காலமட்டும்  அவன்  தீட்டுப்பட்டிருப்பானாக.  (லேவியராகமம்  15:16)

oruvanilirunthu  inthiriyam  kazhinthathu'ndaanaal,  avan  tha'n'neeril  muzhugavea'ndum;  saayanggaalamattum  avan  theettuppattiruppaanaaga.  (leaviyaraagamam  15:16)

கழிந்த  இந்திரியம்  பட்ட  வஸ்திரமும்  தோலும்  தண்ணீரினால்  கழுவப்பட்டு,  சாயங்காலமட்டும்  தீட்டாயிருப்பதாக.  (லேவியராகமம்  15:17)

kazhintha  inthiriyam  patta  vasthiramum  thoalum  tha'n'neerinaal  kazhuvappattu,  saayanggaalamattum  theettaayiruppathaaga.  (leaviyaraagamam  15:17)

இந்திரியம்  கழிந்தவனோடே  ஸ்திரீ  படுத்துக்கொண்டிருந்தால்,  இருவரும்  தண்ணீரில்  முழுகி,  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பார்களாக.  (லேவியராகமம்  15:18)

inthiriyam  kazhinthavanoadea  sthiree  paduththukko'ndirunthaal,  iruvarum  tha'n'neeril  muzhugi,  saayanggaalamattum  theettuppattiruppaarga'laaga.  (leaviyaraagamam  15:18)

சூதகஸ்திரீ  தன்  சரீரத்திலுள்ள  உதிர  ஊறலினிமித்தம்  ஏழுநாள்  தன்  விலக்கத்தில்  இருக்கக்கடவள்;  அவளைத்  தொடுகிறவன்  எவனும்  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பானாக.  (லேவியராகமம்  15:19)

soothagasthiree  than  sareeraththilu'l'la  uthira  oo’ralinimiththam  eazhunaa'l  than  vilakkaththil  irukkakkadava'l;  ava'laith  thodugi’ravan  evanum  saayanggaalamattum  theettuppattiruppaanaaga.  (leaviyaraagamam  15:19)

அவள்  விலக்கலாயிருக்கையில்,  எதின்மேல்  படுத்துக்கொள்ளுகிறாளோ  எதின்மேல்  உட்காருகிறாளோ  அதெல்லாம்  தீட்டாயிருக்கும்.  (லேவியராகமம்  15:20)

ava'l  vilakkalaayirukkaiyil,  ethinmeal  paduththukko'l'lugi’raa'loa  ethinmeal  udkaarugi’raa'loa  athellaam  theettaayirukkum.  (leaviyaraagamam  15:20)

அவள்  படுக்கையைத்  தொடுகிறவன்  எவனும்  தன்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  தண்ணீரில்  முழுகி,  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பானாக.  (லேவியராகமம்  15:21)

ava'l  padukkaiyaith  thodugi’ravan  evanum  than  vasthirangga'laith  thoayththu,  tha'n'neeril  muzhugi,  saayanggaalamattum  theettuppattiruppaanaaga.  (leaviyaraagamam  15:21)

அவள்  உட்கார்ந்த  மணையைத்  தொடுகிறவன்  எவனும்  தன்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  தண்ணீரில்  முழுகி,  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பானாக.  (லேவியராகமம்  15:22)

ava'l  udkaarntha  ma'naiyaith  thodugi’ravan  evanum  than  vasthirangga'laith  thoayththu,  tha'n'neeril  muzhugi,  saayanggaalamattum  theettuppattiruppaanaaga.  (leaviyaraagamam  15:22)

அவள்  படுக்கையின்மேலாகிலும்,  அவள்  உட்கார்ந்த  மணையின்மேலாகிலும்  இருந்த  எதையாகிலும்  தொட்டவன்,  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பானாக.  (லேவியராகமம்  15:23)

ava'l  padukkaiyinmealaagilum,  ava'l  udkaarntha  ma'naiyinmealaagilum  iruntha  ethaiyaagilum  thottavan,  saayanggaalamattum  theettuppattiruppaanaaga.  (leaviyaraagamam  15:23)

ஒருவன்  அவளோடே  படுத்துக்கொண்டதும்,  அவள்  தீட்டு  அவன்மேல்  பட்டதுமுண்டானால்,  அவன்  ஏழுநாள்  தீட்டாயிருப்பானாக;  அவன்  படுக்கிற  படுக்கையும்  தீட்டுப்படும்.  (லேவியராகமம்  15:24)

oruvan  ava'loadea  paduththukko'ndathum,  ava'l  theettu  avanmeal  pattathumu'ndaanaal,  avan  eazhunaa'l  theettaayiruppaanaaga;  avan  padukki’ra  padukkaiyum  theettuppadum.  (leaviyaraagamam  15:24)

ஒரு  ஸ்திரீ  விலகியிருக்கவேண்டியகாலம்  அல்லாமல்  அவளுடைய  உதிரம்  அநேகநாள்  ஊறிக்கொண்டிருந்தால்,  அல்லது  அந்தக்  காலத்துக்கு  மிஞ்சி  அது  கண்டிருக்கும்  நாளெல்லாம்  ஊறிக்கொண்டிருந்தால்,  தன்  விலக்கத்தின்  நாட்களிலிருந்ததுபோல  அவள்  தீட்டாயிருப்பாளாக.  (லேவியராகமம்  15:25)

oru  sthiree  vilagiyirukkavea'ndiyakaalam  allaamal  ava'ludaiya  uthiram  aneaganaa'l  oo’rikko'ndirunthaal,  allathu  anthak  kaalaththukku  mignchi  athu  ka'ndirukkum  naa'lellaam  oo’rikko'ndirunthaal,  than  vilakkaththin  naadka'lilirunthathupoala  ava'l  theettaayiruppaa'laaga.  (leaviyaraagamam  15:25)

அந்த  நாட்களெல்லாம்  அவள்  படுக்கும்  எந்தப்  படுக்கையும்,  அவள்  விலக்கத்தின்  படுக்கையைப்போல,  அவளுக்குத்  தீட்டாயிருக்கும்;  அவள்  உட்கார்ந்த  மணையும்,  அவளுடைய  விலக்கத்தின்  தீட்டைப்போலவே  தீட்டாயிருக்கும்.  (லேவியராகமம்  15:26)

antha  naadka'lellaam  ava'l  padukkum  enthap  padukkaiyum,  ava'l  vilakkaththin  padukkaiyaippoala,  ava'lukkuth  theettaayirukkum;  ava'l  udkaarntha  ma'naiyum,  ava'ludaiya  vilakkaththin  theettaippoalavea  theettaayirukkum.  (leaviyaraagamam  15:26)

அப்படிப்பட்டவைகளைத்  தொடுகிறவன்  எவனும்  தன்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  தண்ணீரில்  முழுகி,  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பானாக.  (லேவியராகமம்  15:27)

appadippattavaiga'laith  thodugi’ravan  evanum  than  vasthirangga'laith  thoayththu,  tha'n'neeril  muzhugi,  saayanggaalamattum  theettuppattiruppaanaaga.  (leaviyaraagamam  15:27)

அவள்  தன்  உதிர  ஊறல்  நின்று  சுத்தமானபோது,  அவள்  ஏழுநாள்  எண்ணிக்கொள்வாளாக;  அதின்பின்பு  சுத்தமாயிருப்பாள்.  (லேவியராகமம்  15:28)

ava'l  than  uthira  oo’ral  nin’ru  suththamaanapoathu,  ava'l  eazhunaa'l  e'n'nikko'lvaa'laaga;  athinpinbu  suththamaayiruppaa'l.  (leaviyaraagamam  15:28)

எட்டாம்  நாளிலே  இரண்டு  காட்டுப்புறாக்களையாவது,  இரண்டு  புறாக்குஞ்சுகளையாவது,  ஆசரிப்புக்  கூடாரவாசலில்  ஆசாரியனிடத்தில்  கொண்டுவரக்கடவள்.  (லேவியராகமம்  15:29)

ettaam  naa'lilea  ira'ndu  kaattuppu’raakka'laiyaavathu,  ira'ndu  pu’raakkugnchuga'laiyaavathu,  aasarippuk  koodaaravaasalil  aasaariyanidaththil  ko'nduvarakkadava'l.  (leaviyaraagamam  15:29)

ஆசாரியன்  அவைகளில்  ஒன்றைப்  பாவநிவாரணபலியும்,  மற்றொன்றைச்  சர்வாங்க  தகனபலியுமாக்கி,  அவளுக்காகக்  கர்த்தருடைய  சந்நிதியில்  அவளுடைய  உதிர  ஊறலினிமித்தம்  பாவநிவிர்த்தி  செய்யக்கடவன்.  (லேவியராகமம்  15:30)

aasaariyan  avaiga'lil  on’raip  paavanivaara'nabaliyum,  mat’ron’raich  sarvaangga  thaganabaliyumaakki,  ava'lukkaagak  karththarudaiya  sannithiyil  ava'ludaiya  uthira  oo’ralinimiththam  paavanivirththi  seyyakkadavan.  (leaviyaraagamam  15:30)

இஸ்ரவேல்  புத்திரர்  தங்கள்  நடுவே  இருக்கிற  என்னுடைய  வாசஸ்தலத்தைத்  தீட்டுப்படுத்தி,  தங்கள்  தீட்டுகளால்  சாகாதபடிக்கு,  இப்படி  நீங்கள்  அவர்கள்  தீட்டுகளுக்கு  அவர்களை  விலக்கிவைக்கக்கடவீர்கள்.  (லேவியராகமம்  15:31)

israveal  puththirar  thangga'l  naduvea  irukki’ra  ennudaiya  vaasasthalaththaith  theettuppaduththi,  thangga'l  theettuga'laal  saagaathapadikku,  ippadi  neengga'l  avarga'l  theettuga'lukku  avarga'lai  vilakkivaikkakkadaveerga'l.  (leaviyaraagamam  15:31)

பிரமியமுள்ளவனுக்கும்,  இந்திரியக்  கழிவினாலே  தீட்டானவனுக்கும்,  (லேவியராகமம்  15:32)

piramiyamu'l'lavanukkum,  inthiriyak  kazhivinaalea  theettaanavanukkum,  (leaviyaraagamam  15:32)

சூதக  பலவீனமுள்ளவளுக்கும்,  பிரமியமுள்ள  ஸ்திரீ  புருஷருக்கும்,  தீட்டாயிருக்கிறவளோடே  படுத்துக்கொண்டவனுக்கும்  ஏற்ற  பிரமாணம்  இதுவே  என்றார்.  (லேவியராகமம்  15:33)

soothaga  balaveenamu'l'lava'lukkum,  piramiyamu'l'la  sthiree  purusharukkum,  theettaayirukki’rava'loadea  paduththukko'ndavanukkum  eat’ra  piramaa'nam  ithuvea  en’raar.  (leaviyaraagamam  15:33)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!