Friday, November 04, 2016

Leaviyaraagamam 14 | லேவியராகமம் 14 | Leviticus 14


பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  14:1)

pinnum  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  14:1)

குஷ்டரோகியினுடைய  சுத்திகரிப்பின்  நாளில்  அவனுக்கடுத்த  பிரமாணம்  என்னவென்றால்:  அவன்  ஆசாரியனிடத்தில்  கொண்டுவரப்படவேண்டும்.  (லேவியராகமம்  14:2)

kushdaroagiyinudaiya  suththigarippin  naa'lil  avanukkaduththa  piramaa'nam  ennaven’raal:  avan  aasaariyanidaththil  ko'nduvarappadavea'ndum.  (leaviyaraagamam  14:2)

ஆசாரியன்  பாளயத்துக்குப்  புறம்பே  போய்;  குஷ்டரோகியின்  குஷ்டவியாதி  சொஸ்தமாயிற்று  என்று  கண்டால்,  (லேவியராகமம்  14:3)

aasaariyan  paa'layaththukkup  pu’rambea  poay;  kushdaroagiyin  kushdaviyaathi  sosthamaayit’ru  en’ru  ka'ndaal,  (leaviyaraagamam  14:3)

சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக,  உயிரோடிருக்கும்  சுத்தமான  இரண்டு  குருவிகளையும்,  கேதுருக்  கட்டையையும்,  சிவப்புநூலையும்,  ஈசோப்பையும்  வாங்கிவரக்  கட்டளையிடக்கடவன்.  (லேவியராகமம்  14:4)

suththigarikkappadavea'ndiyavanukkaaga,  uyiroadirukkum  suththamaana  ira'ndu  kuruviga'laiyum,  keathuruk  kattaiyaiyum,  sivappunoolaiyum,  eesoappaiyum  vaanggivarak  katta'laiyidakkadavan.  (leaviyaraagamam  14:4)

பின்பு,  ஆசாரியன்  அந்தக்  குருவிகளில்  ஒன்றை  ஒரு  மண்பாண்டத்திலுள்ள  ஊற்றுநீர்மேல்  கொல்லச்  சொல்லி,  (லேவியராகமம்  14:5)

pinbu,  aasaariyan  anthak  kuruviga'lil  on’rai  oru  ma'npaa'ndaththilu'l'la  oot’runeermeal  kollach  solli,  (leaviyaraagamam  14:5)

உயிருள்ள  குருவியையும்,  கேதுருக்  கட்டையையும்,  சிவப்புநூலையும்,  ஈசோப்பையும்  எடுத்து,  இவைகளையும்  உயிருள்ள  குருவியையும்  ஊற்றுநீர்மேல்  கொல்லப்பட்ட  குருவியின்  இரத்தத்திலே  தோய்த்து,  (லேவியராகமம்  14:6)

uyiru'l'la  kuruviyaiyum,  keathuruk  kattaiyaiyum,  sivappunoolaiyum,  eesoappaiyum  eduththu,  ivaiga'laiyum  uyiru'l'la  kuruviyaiyum  oot’runeermeal  kollappatta  kuruviyin  iraththaththilea  thoayththu,  (leaviyaraagamam  14:6)

குஷ்டம்  நீங்கச்  சுத்திகரிக்கப்படுகிறவன்மேல்  ஏழுதரம்  தெளித்து,  அவனைச்  சுத்தம்பண்ணி,  உயிருள்ள  குருவியை  வெளியிலே  விட்டுவிடக்கடவன்.  (லேவியராகமம்  14:7)

kushdam  neenggach  suththigarikkappadugi’ravanmeal  eazhutharam  the'liththu,  avanaich  suththampa'n'ni,  uyiru'l'la  kuruviyai  ve'liyilea  vittuvidakkadavan.  (leaviyaraagamam  14:7)

சுத்திகரிக்கப்படுகிறவன்  தன்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  தன்  மயிர்  முழுவதையும்  சிரைத்து,  தான்  சுத்தமாகும்படி  ஜலத்தில்  ஸ்நானம்பண்ணி,  பின்பு  பாளயத்தில்  பிரவேசித்து,  தன்  கூடாரத்துக்குப்  புறம்பே  ஏழுநாள்  தங்கி,  (லேவியராகமம்  14:8)

suththigarikkappadugi’ravan  than  vasthirangga'laith  thoayththu,  than  mayir  muzhuvathaiyum  siraiththu,  thaan  suththamaagumpadi  jalaththil  snaanampa'n'ni,  pinbu  paa'layaththil  piraveasiththu,  than  koodaaraththukkup  pu’rambea  eazhunaa'l  thanggi,  (leaviyaraagamam  14:8)

ஏழாம்  நாளிலே  தன்  தலையையும்  தாடியையும்  புருவங்களையும்  தன்னுடைய  மயிர்  முழுவதையும்  சிரைத்து,  தன்  வஸ்திரங்களைத்  தோய்த்து,  ஜலத்தில்  ஸ்நானம்பண்ணவேண்டும்;  அப்பொழுது  சுத்தமாயிருப்பான்.  (லேவியராகமம்  14:9)

eazhaam  naa'lilea  than  thalaiyaiyum  thaadiyaiyum  puruvangga'laiyum  thannudaiya  mayir  muzhuvathaiyum  siraiththu,  than  vasthirangga'laith  thoayththu,  jalaththil  snaanampa'n'navea'ndum;  appozhuthu  suththamaayiruppaan.  (leaviyaraagamam  14:9)

எட்டாம்நாளிலே  அவன்  பழுதற்ற  இரண்டு  ஆட்டுக்குட்டிகளையும்,  ஒரு  வயதான  பழுதற்ற  ஒரு  பெண்ணாட்டுக்குட்டியையும்,  போஜனபலிக்காக  எண்ணெயிலே  பிசைந்த  ஒரு  மரக்காலில்  பத்தில்  மூன்று  பங்காகிய  மெல்லிய  மாவையும்,  ஆழாக்கு  எண்ணெயையும்  கொண்டுவரக்கடவன்.  (லேவியராகமம்  14:10)

ettaamnaa'lilea  avan  pazhuthat’ra  ira'ndu  aattukkuttiga'laiyum,  oru  vayathaana  pazhuthat’ra  oru  pe'n'naattukkuttiyaiyum,  poajanabalikkaaga  e'n'neyilea  pisaintha  oru  marakkaalil  paththil  moon’ru  panggaagiya  melliya  maavaiyum,  aazhaakku  e'n'neyaiyum  ko'nduvarakkadavan.  (leaviyaraagamam  14:10)

சுத்திகரிக்கிற  ஆசாரியன்  சுத்திகரிக்கப்படும்  மனிதனையும்  அவ்வஸ்துக்களையும்  ஆசரிப்புக்  கூடாரவாசலிலே  கர்த்தருடைய  சந்நிதியில்  நிறுத்தக்கடவன்.  (லேவியராகமம்  14:11)

suththigarikki’ra  aasaariyan  suththigarikkappadum  manithanaiyum  avvasthukka'laiyum  aasarippuk  koodaaravaasalilea  karththarudaiya  sannithiyil  ni’ruththakkadavan.  (leaviyaraagamam  14:11)

பின்பு,  ஆசாரியன்  ஒரு  ஆட்டுக்குட்டியைப்  பிடித்து,  அதையும்  அந்த  ஆழாக்கு  எண்ணெயையும்  குற்றநிவாரணபலியாகக்  கொண்டுவந்து,  கர்த்தருடைய  சந்நிதியில்  அசைவாட்டும்  பலியாக  அசைவாட்டி,  (லேவியராகமம்  14:12)

pinbu,  aasaariyan  oru  aattukkuttiyaip  pidiththu,  athaiyum  antha  aazhaakku  e'n'neyaiyum  kut’ranivaara'nabaliyaagak  ko'nduvanthu,  karththarudaiya  sannithiyil  asaivaattum  baliyaaga  asaivaatti,  (leaviyaraagamam  14:12)

பாவநிவாரணபலியும்  சர்வாங்க  தகனபலியும்  இடும்  பரிசுத்த  ஸ்தலத்திலே  அந்த  ஆட்டுக்குட்டியைக்  கொல்லக்கடவன்;  குற்றநிவாரணபலி  பாவநிவாரணபலியைப்போல  ஆசாரியனுக்கு  உரியது;  அது  மகா  பரிசுத்தமானது.  (லேவியராகமம்  14:13)

paavanivaara'nabaliyum  sarvaangga  thaganabaliyum  idum  parisuththa  sthalaththilea  antha  aattukkuttiyaik  kollakkadavan;  kut’ranivaara'nabali  paavanivaara'nabaliyaippoala  aasaariyanukku  uriyathu;  athu  mahaa  parisuththamaanathu.  (leaviyaraagamam  14:13)

அந்தக்  குற்றநிவாரணபலியின்  இரத்தத்தில்  ஆசாரியன்  கொஞ்சம்  எடுத்து,  சுத்திகரிக்கப்படுகிறவன்  வலதுகாதின்  மடலிலும்,  அவன்  வலதுகையின்  பெருவிரலிலும்,  வலதுகாலின்  பெருவிரலிலும்  பூசக்கடவன்.  (லேவியராகமம்  14:14)

anthak  kut’ranivaara'nabaliyin  iraththaththil  aasaariyan  kogncham  eduththu,  suththigarikkappadugi’ravan  valathukaathin  madalilum,  avan  valathukaiyin  peruviralilum,  valathukaalin  peruviralilum  poosakkadavan.  (leaviyaraagamam  14:14)

பின்பு,  ஆசாரியன்  அந்த  ஆழாக்கு  எண்ணெயிலே  கொஞ்சம்  தன்  இடதுகையில்  வார்த்து,  (லேவியராகமம்  14:15)

pinbu,  aasaariyan  antha  aazhaakku  e'n'neyilea  kogncham  than  idathukaiyil  vaarththu,  (leaviyaraagamam  14:15)

தன்  இடதுகையிலுள்ள  எண்ணெயில்  தன்  வலதுகையின்  விரலைத்தோய்த்து,  தன்  விரலினால்  ஏழுதரம்  அந்த  எண்ணெயில்  எடுத்து,  கர்த்தருடைய  சந்நிதியில்  தெளித்து,  (லேவியராகமம்  14:16)

than  idathukaiyilu'l'la  e'n'neyil  than  valathukaiyin  viralaiththoayththu,  than  viralinaal  eazhutharam  antha  e'n'neyil  eduththu,  karththarudaiya  sannithiyil  the'liththu,  (leaviyaraagamam  14:16)

தன்  உள்ளங்கையில்  இருக்கிற  மீதியான  எண்ணெயிலே  கொஞ்சம்  எடுத்து  சுத்திகரிக்கப்படுகிறவன்  வலதுகாதின்  மடலிலும்,  அவன்  வலதுகையின்  பெருவிரலிலும்,  வலதுகாலின்  பெருவிரலிலும்,  முந்திப்  பூசியிருக்கிற  குற்றநிவாரணபலியினுடைய  இரத்தத்தின்மேல்  பூசி,  (லேவியராகமம்  14:17)

than  u'l'langkaiyil  irukki’ra  meethiyaana  e'n'neyilea  kogncham  eduththu  suththigarikkappadugi’ravan  valathukaathin  madalilum,  avan  valathukaiyin  peruviralilum,  valathukaalin  peruviralilum,  munthip  poosiyirukki’ra  kut’ranivaara'nabaliyinudaiya  iraththaththinmeal  poosi,  (leaviyaraagamam  14:17)

தன்  உள்ளங்கையில்  இருக்கிற  மீதியான  எண்ணெயைச்  சுத்திகரிக்கப்படுகிறவன்  தலையிலே  வார்த்து,  கர்த்தருடைய  சந்நிதியில்  அவனுக்காகப்  பாவநிவிர்த்தி  செய்யக்கடவன்.  (லேவியராகமம்  14:18)

than  u'l'langkaiyil  irukki’ra  meethiyaana  e'n'neyaich  suththigarikkappadugi’ravan  thalaiyilea  vaarththu,  karththarudaiya  sannithiyil  avanukkaagap  paavanivirththi  seyyakkadavan.  (leaviyaraagamam  14:18)

ஆசாரியன்  பாவநிவாரணபலியையும்  செலுத்தி,  சுத்திகரிக்கப்படுகிறவனின்  தீட்டு  நீங்க,  அவனுக்குப்  பாவநிவிர்த்தி  செய்து,  பின்பு  சர்வாங்க  தகனபலியைக்  கொன்று,  (லேவியராகமம்  14:19)

aasaariyan  paavanivaara'nabaliyaiyum  seluththi,  suththigarikkappadugi’ravanin  theettu  neengga,  avanukkup  paavanivirththi  seythu,  pinbu  sarvaangga  thaganabaliyaik  kon’ru,  (leaviyaraagamam  14:19)

சர்வாங்க  தகனபலியையும்  போஜனபலியையும்  பலிபீடத்தின்மேல்  வைத்து,  அவனுக்காகப்  பாவநிவிர்த்தி  செய்யக்கடவன்;  அப்பொழுது  அவன்  சுத்தமாயிருப்பான்.  (லேவியராகமம்  14:20)

sarvaangga  thaganabaliyaiyum  poajanabaliyaiyum  balipeedaththinmeal  vaiththu,  avanukkaagap  paavanivirththi  seyyakkadavan;  appozhuthu  avan  suththamaayiruppaan.  (leaviyaraagamam  14:20)

அவன்  இம்மாத்திரம்  செய்யத்  திராணியற்ற  தரித்திரனாயிருந்தால்,  அவன்  தன்  பாவநிவிர்த்திக்கென்று  அசைவாட்டும்  குற்றநிவாரணபலியாக  ஒரு  ஆட்டுக்குட்டியையும்,  போஜனபலிக்கு  எண்ணெயில்  பிசைந்த  ஒரு  மரக்கால்  மெல்லிய  மாவிலே  பத்தில்  ஒரு  பங்கையும்,  ஆழாக்கு  எண்ணெயையும்,  (லேவியராகமம்  14:21)

avan  immaaththiram  seyyath  thiraa'niyat’ra  thariththiranaayirunthaal,  avan  than  paavanivirththikken’ru  asaivaattum  kut’ranivaara'nabaliyaaga  oru  aattukkuttiyaiyum,  poajanabalikku  e'n'neyil  pisaintha  oru  marakkaal  melliya  maavilea  paththil  oru  panggaiyum,  aazhaakku  e'n'neyaiyum,  (leaviyaraagamam  14:21)

தன்  திராணிக்குத்  தக்கபடி  இரண்டு  காட்டுப்புறாக்களையாவது  இரண்டு  புறாக்குஞ்சுகளையாவது,  ஒன்று  பாவநிவாரணபலியாகவும்,  மற்றொன்று  சர்வாங்க  தகனபலியாகவும்  செலுத்தும்படி  வாங்கி,  (லேவியராகமம்  14:22)

than  thiraa'nikkuth  thakkapadi  ira'ndu  kaattuppu’raakka'laiyaavathu  ira'ndu  pu’raakkugnchuga'laiyaavathu,  on’ru  paavanivaara'nabaliyaagavum,  mat’ron’ru  sarvaangga  thaganabaliyaagavum  seluththumpadi  vaanggi,  (leaviyaraagamam  14:22)

தான்  சுத்திகரிக்கப்படும்படி  எட்டாம்  நாளில்  ஆசரிப்புக்  கூடாரவாசலிலே  கர்த்தருடைய  சந்நிதியில்  ஆசாரியனிடத்துக்குக்  கொண்டுவருவானாக.  (லேவியராகமம்  14:23)

thaan  suththigarikkappadumpadi  ettaam  naa'lil  aasarippuk  koodaaravaasalilea  karththarudaiya  sannithiyil  aasaariyanidaththukkuk  ko'nduvaruvaanaaga.  (leaviyaraagamam  14:23)

அப்பொழுது  ஆசாரியன்  குற்றநிவாரணபலிக்குரிய  ஆட்டுக்குட்டியையும்  அந்த  ஆழாக்கு  எண்ணெயையும்  வாங்கி,  கர்த்தருடைய  சந்நிதியில்  அசைவாட்டும்  போஜனபலியாக  அசைவாட்டி,  (லேவியராகமம்  14:24)

appozhuthu  aasaariyan  kut’ranivaara'nabalikkuriya  aattukkuttiyaiyum  antha  aazhaakku  e'n'neyaiyum  vaanggi,  karththarudaiya  sannithiyil  asaivaattum  poajanabaliyaaga  asaivaatti,  (leaviyaraagamam  14:24)

குற்றநிவாரண  பலிக்கான  அந்த  ஆட்டுக்குட்டியைக்  கொன்று,  குற்றநிவாரணபலியின்  இரத்தத்தில்  கொஞ்சம்  எடுத்து,  சுத்திகரிக்கப்படுகிறவன்  வலதுகாதின்  மடலிலும்,  அவன்  வலதுகையின்  பெருவிரலிலும்,  வலதுகாலின்  பெருவிரலிலும்  பூசி,  (லேவியராகமம்  14:25)

kut’ranivaara'na  balikkaana  antha  aattukkuttiyaik  kon’ru,  kut’ranivaara'nabaliyin  iraththaththil  kogncham  eduththu,  suththigarikkappadugi’ravan  valathukaathin  madalilum,  avan  valathukaiyin  peruviralilum,  valathukaalin  peruviralilum  poosi,  (leaviyaraagamam  14:25)

அந்த  எண்ணெயிலே  கொஞ்சம்  தன்  இடதுகையில்  வார்த்து,  (லேவியராகமம்  14:26)

antha  e'n'neyilea  kogncham  than  idathukaiyil  vaarththu,  (leaviyaraagamam  14:26)

தன்  இடதுகையிலுள்ள  எண்ணெயிலே  தன்  வலதுவிரலைத்  தோய்த்து,  கர்த்தருடைய  சந்நிதியில்  ஏழுதரம்  தெளித்து,  (லேவியராகமம்  14:27)

than  idathukaiyilu'l'la  e'n'neyilea  than  valathuviralaith  thoayththu,  karththarudaiya  sannithiyil  eazhutharam  the'liththu,  (leaviyaraagamam  14:27)

தன்  உள்ளங்கையில்  இருக்கிற  எண்ணெயில்  கொஞ்சம்  எடுத்துச்  சுத்திகரிக்கப்படுகிறவன்  வலதுகாதின்  மடலிலும்,  அவன்  வலதுகையின்  பெருவிரலிலும்,  வலதுகாலின்  பெருவிரலிலும்  குற்றநிவாரணபலியின்  இரத்தம்  பூசியிருக்கிற  இடத்தின்மேல்  பூசி,  (லேவியராகமம்  14:28)

than  u'l'langkaiyil  irukki’ra  e'n'neyil  kogncham  eduththuch  suththigarikkappadugi’ravan  valathukaathin  madalilum,  avan  valathukaiyin  peruviralilum,  valathukaalin  peruviralilum  kut’ranivaara'nabaliyin  iraththam  poosiyirukki’ra  idaththinmeal  poosi,  (leaviyaraagamam  14:28)

தன்  உள்ளங்கையில்  இருக்கிற  மற்ற  எண்ணெயைச்  சுத்திகரிக்கப்படுகிறவன்  தலையின்மேல்  அவனுக்காகக்  கர்த்தருடைய  சந்நிதியில்  பாவநிவிர்த்தி  செய்யும்படி  தடவி,  (லேவியராகமம்  14:29)

than  u'l'langkaiyil  irukki’ra  mat’ra  e'n'neyaich  suththigarikkappadugi’ravan  thalaiyinmeal  avanukkaagak  karththarudaiya  sannithiyil  paavanivirththi  seyyumpadi  thadavi,  (leaviyaraagamam  14:29)

பின்பு,  அவன்  தன்  திராணிக்கும்  தகுதிக்கும்  தக்கதாய்க்  காட்டுப்புறாக்களையாவது  புறாக்குஞ்சுகளையாவது  கொண்டுவந்து,  (லேவியராகமம்  14:30)

pinbu,  avan  than  thiraa'nikkum  thaguthikkum  thakkathaayk  kaattuppu’raakka'laiyaavathu  pu’raakkugnchuga'laiyaavathu  ko'nduvanthu,  (leaviyaraagamam  14:30)

அவைகளில்  ஒன்றைப்  பாவநிவாரணபலியும்,  மற்றொன்றைச்  சர்வாங்க  தகனபலியுமாக்கி,  போஜனபலியோடேகூடச்  செலுத்தி,  இப்படியே  ஆசாரியன்  சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக,  கர்த்தருடைய  சந்நிதியில்  பாவநிவிர்த்தி  செய்யக்கடவன்.  (லேவியராகமம்  14:31)

avaiga'lil  on’raip  paavanivaara'nabaliyum,  mat’ron’raich  sarvaangga  thaganabaliyumaakki,  poajanabaliyoadeakoodach  seluththi,  ippadiyea  aasaariyan  suththigarikkappadugi’ravanukkaaga,  karththarudaiya  sannithiyil  paavanivirththi  seyyakkadavan.  (leaviyaraagamam  14:31)

தன்  சுத்திகரிப்புக்கு  வேண்டியவைகளைச்  சம்பாதிக்கக்கூடாத  குஷ்டரோகியைக்  குறித்த  பிரமாணம்  இதுவே  என்றார்.  (லேவியராகமம்  14:32)

than  suththigarippukku  vea'ndiyavaiga'laich  sambaathikkakkoodaatha  kushdaroagiyaik  ku’riththa  piramaa'nam  ithuvea  en’raar.  (leaviyaraagamam  14:32)

பின்னும்  கர்த்தர்  மோசேயையும்  ஆரோனையும்  நோக்கி:  (லேவியராகமம்  14:33)

pinnum  karththar  moaseayaiyum  aaroanaiyum  noakki:  (leaviyaraagamam  14:33)

நான்  உங்களுக்குக்  காணியாட்சியாகக்  கொடுக்கும்  கானான்  தேசத்திலே  நீங்கள்  போய்ச்  சேர்ந்தபின்பு,  உங்கள்  காணியாட்சியான  தேசத்தில்  ஒரு  வீட்டிலே  குஷ்டதோஷத்தை  நான்  வரப்பண்ணினால்,  (லேவியராகமம்  14:34)

naan  ungga'lukkuk  kaa'niyaadchiyaagak  kodukkum  kaanaan  theasaththilea  neengga'l  poaych  searnthapinbu,  ungga'l  kaa'niyaadchiyaana  theasaththil  oru  veettilea  kushdathoashaththai  naan  varappa'n'ninaal,  (leaviyaraagamam  14:34)

அந்த  வீட்டிற்கு  உடையவன்  வந்து,  வீட்டிலே  தோஷம்  வந்திருக்கிறதாகத்  தோன்றுகிறது  என்று  ஆசாரியனுக்கு  அறிவிக்கக்கடவன்.  (லேவியராகமம்  14:35)

antha  veetti’rku  udaiyavan  vanthu,  veettilea  thoasham  vanthirukki’rathaagath  thoan’rugi’rathu  en’ru  aasaariyanukku  a’rivikkakkadavan.  (leaviyaraagamam  14:35)

அப்பொழுது  வீட்டிலுள்ள  யாவும்  தீட்டுப்படாதபடிக்கு,  ஆசாரியன்  அந்தத்  தோஷத்தைப்  பார்க்கப்  போகும்முன்னே  வீட்டை  ஒழித்துவைக்கும்படி  சொல்லி,  பின்பு  வீட்டைப்  பார்க்கும்படி  போய்,  (லேவியராகமம்  14:36)

appozhuthu  veettilu'l'la  yaavum  theettuppadaathapadikku,  aasaariyan  anthath  thoashaththaip  paarkkap  poagummunnea  veettai  ozhiththuvaikkumpadi  solli,  pinbu  veettaip  paarkkumpadi  poay,  (leaviyaraagamam  14:36)

அந்தத்  தோஷம்  இருக்கிற  இடத்தைப்  பார்க்கக்கடவன்;  அப்பொழுது  வீட்டுச்  சுவர்களிலே  கொஞ்சம்  பச்சையும்  கொஞ்சம்  சிவப்புமான  குழி  விழுந்திருந்து,  அவைகள்  மற்றச்  சுவரைப்பார்க்கிலும்  பள்ளமாயிருக்கக்கண்டால்,  (லேவியராகமம்  14:37)

anthath  thoasham  irukki’ra  idaththaip  paarkkakkadavan;  appozhuthu  veettuch  suvarga'lilea  kogncham  pachchaiyum  kogncham  sivappumaana  kuzhi  vizhunthirunthu,  avaiga'l  mat’rach  suvaraippaarkkilum  pa'l'lamaayirukkakka'ndaal,  (leaviyaraagamam  14:37)

ஆசாரியன்  வீட்டைவிட்டுப்  புறப்பட்டு  வாசற்படியிலே  வந்து,  வீட்டை  ஏழுநாள்  அடைத்துவைத்து,  (லேவியராகமம்  14:38)

aasaariyan  veettaivittup  pu’rappattu  vaasa’rpadiyilea  vanthu,  veettai  eazhunaa'l  adaiththuvaiththu,  (leaviyaraagamam  14:38)

ஏழாம்நாளிலே  திரும்பப்  போய்ப்  பார்த்து,  தோஷம்  வீட்டுச்  சுவர்களில்  படர்ந்ததென்று  கண்டால்,  (லேவியராகமம்  14:39)

eazhaamnaa'lilea  thirumbap  poayp  paarththu,  thoasham  veettuch  suvarga'lil  padarnthathen’ru  ka'ndaal,  (leaviyaraagamam  14:39)

தோஷம்  இருக்கும்  அவ்விடத்துக்  கல்லுகளைப்  பெயர்க்கவும்,  பட்டணத்துக்குப்  புறம்பே  அசுத்தமான  ஒரு  இடத்திலே  போடவும்  அவன்  கட்டளையிட்டு,  (லேவியராகமம்  14:40)

thoasham  irukkum  avvidaththuk  kalluga'laip  peyarkkavum,  patta'naththukkup  pu’rambea  asuththamaana  oru  idaththilea  poadavum  avan  katta'laiyittu,  (leaviyaraagamam  14:40)

வீட்டை  உள்ளே  சுற்றிலும்  செதுக்கச்சொல்லி,  செதுக்கிப்போட்ட  மண்ணைப்  பட்டணத்துக்குப்  புறம்பே  அசுத்தமான  ஒரு  இடத்திலே  கொட்டவும்,  (லேவியராகமம்  14:41)

veettai  u'l'lea  sut’rilum  sethukkachsolli,  sethukkippoatta  ma'n'naip  patta'naththukkup  pu’rambea  asuththamaana  oru  idaththilea  kottavum,  (leaviyaraagamam  14:41)

வேறே  கல்லுகளை  எடுத்துவந்து,  அந்தக்  கல்லுகளுக்குப்  பதிலாகக்  கட்டி,  வேறே  சாந்தை  எடுத்து  வீட்டைப்  பூசவும்  கட்டளையிடுவானாக.  (லேவியராகமம்  14:42)

vea’rea  kalluga'lai  eduththuvanthu,  anthak  kalluga'lukkup  bathilaagak  katti,  vea’rea  saanthai  eduththu  veettaip  poosavum  katta'laiyiduvaanaaga.  (leaviyaraagamam  14:42)

கல்லுகளைப்  பெயர்த்து,  வீட்டைச்  செதுக்கி,  நவமாய்ப்  பூசினபின்பும்,  அந்தத்  தோஷம்  திரும்ப  வீட்டில்  வந்ததானால்,  (லேவியராகமம்  14:43)

kalluga'laip  peyarththu,  veettaich  sethukki,  navamaayp  poosinapinbum,  anthath  thoasham  thirumba  veettil  vanthathaanaal,  (leaviyaraagamam  14:43)

ஆசாரியன்  போய்ப்  பார்க்கக்கடவன்;  தோஷம்  வீட்டில்  படர்ந்ததானால்,  அது  வீட்டை  அரிக்கிற  குஷ்டம்;  அது  தீட்டாயிருக்கும்.  (லேவியராகமம்  14:44)

aasaariyan  poayp  paarkkakkadavan;  thoasham  veettil  padarnthathaanaal,  athu  veettai  arikki’ra  kushdam;  athu  theettaayirukkum.  (leaviyaraagamam  14:44)

ஆகையால்  வீடுமுழுவதையும்  இடித்து,  அதின்  கல்லுகளையும்,  மரங்களையும்,  அதின்  சாந்து  எல்லாவற்றையும்  பட்டணத்துக்குப்  புறம்பே  அசுத்தமான  இடத்திலே  கொண்டுபோகவேண்டும்.  (லேவியராகமம்  14:45)

aagaiyaal  veedumuzhuvathaiyum  idiththu,  athin  kalluga'laiyum,  marangga'laiyum,  athin  saanthu  ellaavat’raiyum  patta'naththukkup  pu’rambea  asuththamaana  idaththilea  ko'ndupoagavea'ndum.  (leaviyaraagamam  14:45)

வீடு  அடைக்கப்பட்டிருக்கும்  நாட்களில்  அதற்குள்  பிரவேசிக்கிறவன்  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்.  (லேவியராகமம்  14:46)

veedu  adaikkappattirukkum  naadka'lil  atha’rku'l  piraveasikki’ravan  saayanggaalamattum  theettuppattiruppaan.  (leaviyaraagamam  14:46)

அந்த  வீட்டிலே  படுத்தவன்  தன்  வஸ்திரங்களைத்  தோய்க்கக்கடவன்;  அந்த  வீட்டிலே  சாப்பிட்டவனும்  தன்  வஸ்திரங்களைத்  தோய்க்கக்கடவன்.  (லேவியராகமம்  14:47)

antha  veettilea  paduththavan  than  vasthirangga'laith  thoaykkakkadavan;  antha  veettilea  saappittavanum  than  vasthirangga'laith  thoaykkakkadavan.  (leaviyaraagamam  14:47)

ஆசாரியன்  திரும்ப  வந்து,  வீடு  பூசப்பட்டபின்பு  வீட்டிலே  அந்தத்  தோஷம்  படரவில்லை  என்று  கண்டானேயாகில்,  தோஷம்  நிவிர்த்தியானபடியால்,  ஆசாரியன்  அந்த  வீட்டைச்  சுத்தம்  என்று  தீர்க்கக்கடவன்.  (லேவியராகமம்  14:48)

aasaariyan  thirumba  vanthu,  veedu  poosappattapinbu  veettilea  anthath  thoasham  padaravillai  en’ru  ka'ndaaneayaagil,  thoasham  nivirththiyaanapadiyaal,  aasaariyan  antha  veettaich  suththam  en’ru  theerkkakkadavan.  (leaviyaraagamam  14:48)

அப்பொழுது  வீட்டிற்குத்  தோஷங்கழிக்க,  இரண்டு  குருவிகளையும்,  கேதுருக்கட்டையையும்,  சிவப்புநூலையும்,  ஈசோப்பையும்  எடுத்து,  (லேவியராகமம்  14:49)

appozhuthu  veetti’rkuth  thoashangkazhikka,  ira'ndu  kuruviga'laiyum,  keathurukkattaiyaiyum,  sivappunoolaiyum,  eesoappaiyum  eduththu,  (leaviyaraagamam  14:49)

ஒரு  குருவியை  ஒரு  மண்பாண்டத்திலுள்ள  ஊற்றுநீரின்மேல்  கொன்று,  (லேவியராகமம்  14:50)

oru  kuruviyai  oru  ma'npaa'ndaththilu'l'la  oot’runeerinmeal  kon’ru,  (leaviyaraagamam  14:50)

கேதுருக்கட்டையையும்,  ஈசோப்பையும்,  சிவப்புநூலையும்,  உயிருள்ள  குருவியையும்  எடுத்து,  இவைகளைக்  கொல்லப்பட்ட  குருவியின்  இரத்தத்திலும்  ஊற்று  நீரிலும்  தோய்த்து,  வீட்டின்மேல்  ஏழுதரம்  தெளித்து,  (லேவியராகமம்  14:51)

keathurukkattaiyaiyum,  eesoappaiyum,  sivappunoolaiyum,  uyiru'l'la  kuruviyaiyum  eduththu,  ivaiga'laik  kollappatta  kuruviyin  iraththaththilum  oot’ru  neerilum  thoayththu,  veettinmeal  eazhutharam  the'liththu,  (leaviyaraagamam  14:51)

குருவியின்  இரத்தத்தினாலும்,  ஊற்றுநீரினாலும்,  உயிருள்ள  குருவியினாலும்,  கேதுருக்கட்டையினாலும்  ஈசோப்பினாலும்,  சிவப்புநூலினாலும்  வீட்டிற்குத்  தோஷங்கழித்து,  (லேவியராகமம்  14:52)

kuruviyin  iraththaththinaalum,  oot’runeerinaalum,  uyiru'l'la  kuruviyinaalum,  keathurukkattaiyinaalum  eesoappinaalum,  sivappunoolinaalum  veetti’rkuth  thoashangkazhiththu,  (leaviyaraagamam  14:52)

உயிருள்ள  குருவியைப்  பட்டணத்துக்குப்  புறம்பே  வெளியிலே  விட்டுவிட்டு,  இப்படி  வீட்டிற்குப்  பிராயச்சித்தம்  செய்யக்கடவன்;  அப்பொழுது  அது  சுத்தமாயிருக்கும்.  (லேவியராகமம்  14:53)

uyiru'l'la  kuruviyaip  patta'naththukkup  pu’rambea  ve'liyilea  vittuvittu,  ippadi  veetti’rkup  piraayachchiththam  seyyakkadavan;  appozhuthu  athu  suththamaayirukkum.  (leaviyaraagamam  14:53)

இது  சகலவித  குஷ்டரோகத்துக்கும்,  சொறிக்கும்,  (லேவியராகமம்  14:54)

ithu  sagalavitha  kushdaroagaththukkum,  so’rikkum,  (leaviyaraagamam  14:54)

வஸ்திரக்  குஷ்டத்துக்கும்,  வீட்டுக்  குஷ்டத்துக்கும்,  (லேவியராகமம்  14:55)

vasthirak  kushdaththukkum,  veettuk  kushdaththukkum,  (leaviyaraagamam  14:55)

தடிப்புக்கும்,  அசறுக்கும்,  வெள்ளைப்படருக்கும்  அடுத்த  பிரமாணம்.  (லேவியராகமம்  14:56)

thadippukkum,  asa’rukkum,  ve'l'laippadarukkum  aduththa  piramaa'nam.  (leaviyaraagamam  14:56)

குஷ்டம்  எப்பொழுது  தீட்டுள்ளது  என்றும்,  எப்பொழுது  தீட்டில்லாதது  என்றும்  தெரிவிப்பதற்குக்  குஷ்டரோகத்துக்கு  அடுத்த  பிரமாணம்  இதுவே  என்றார்.  (லேவியராகமம்  14:57)

kushdam  eppozhuthu  theettu'l'lathu  en’rum,  eppozhuthu  theettillaathathu  en’rum  therivippatha’rkuk  kushdaroagaththukku  aduththa  piramaa'nam  ithuvea  en’raar.  (leaviyaraagamam  14:57)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!