Friday, November 04, 2016

Leaviyaraagamam 11 | லேவியராகமம் 11 | Leviticus 11

கர்த்தர்  மோசேயையும்  ஆரோனையும்  நோக்கி:  (லேவியராகமம்  11:1)

karththar  moaseayaiyum  aaroanaiyum  noakki:  (leaviyaraagamam  11:1)

நீங்கள்  இஸ்ரவேல்  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  பூமியிலிருக்கிற  சகல  மிருகங்களிலும்  நீங்கள்  புசிக்கத்தக்க  ஜீவஜந்துக்கள்  யாதெனில்:  (லேவியராகமம்  11:2)

neengga'l  israveal  puththiraroadea  sollavea'ndiyathu  ennaven’raal,  boomiyilirukki’ra  sagala  mirugangga'lilum  neengga'l  pusikkaththakka  jeevajanthukka'l  yaathenil:  (leaviyaraagamam  11:2)

மிருகங்களில்  விரிகுளம்புள்ளதாயிருந்து,  குளம்புகள்  இரண்டாகப்  பிரிந்திருக்கிறதும்  அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம்  நீங்கள்  புசிக்கலாம்.  (லேவியராகமம்  11:3)

mirugangga'lil  viriku'lambu'l'lathaayirunthu,  ku'lambuga'l  ira'ndaagap  pirinthirukki’rathum  asaipoadugi’rathumaanavaiga'laiyellaam  neengga'l  pusikkalaam.  (leaviyaraagamam  11:3)

ஆனாலும்,  அசைபோடுகிறதும்  விரிகுளம்புள்ளதுமானவைகளில்  ஒட்டகமானது  அசைபோடுகிறதாயிருந்தாலும்,  அதற்கு  விரிகுளம்பில்லாதபடியால்,  அது  உங்களுக்கு  அசுத்தமாயிருக்கும்.  (லேவியராகமம்  11:4)

aanaalum,  asaipoadugi’rathum  viriku'lambu'l'lathumaanavaiga'lil  ottagamaanathu  asaipoadugi’rathaayirunthaalum,  atha’rku  viriku'lambillaathapadiyaal,  athu  ungga'lukku  asuththamaayirukkum.  (leaviyaraagamam  11:4)

குழிமுசலானது  அசைபோடுகிறதாயிருந்தாலும்,  அதற்கு  விரிகுளம்பில்லை;  அது  உங்களுக்கு  அசுத்தமாயிருக்கும்.  (லேவியராகமம்  11:5)

kuzhimusalaanathu  asaipoadugi’rathaayirunthaalum,  atha’rku  viriku'lambillai;  athu  ungga'lukku  asuththamaayirukkum.  (leaviyaraagamam  11:5)

முயலானது  அசைபோடுகிறதாயிருந்தும்,  அதற்கு  விரிகுளம்பில்லை;  அது  உங்களுக்கு  அசுத்தமாயிருக்கும்.  (லேவியராகமம்  11:6)

muyalaanathu  asaipoadugi’rathaayirunthum,  atha’rku  viriku'lambillai;  athu  ungga'lukku  asuththamaayirukkum.  (leaviyaraagamam  11:6)

பன்றியின்  குளம்பு  விரிகுளம்பும்  இரண்டாகப்  பிரிந்ததுமாயிருந்தும்,  அது  அசைபோடாது;  அது  உங்களுக்கு  அசுத்தமாயிருக்கும்.  (லேவியராகமம்  11:7)

pan’riyin  ku'lambu  viriku'lambum  ira'ndaagap  pirinthathumaayirunthum,  athu  asaipoadaathu;  athu  ungga'lukku  asuththamaayirukkum.  (leaviyaraagamam  11:7)

இவைகளின்  மாம்சத்தைப்  புசிக்கவும்,  இவைகளின்  உடல்களைத்  தொடவும்  வேண்டாம்;  இவைகள்  உங்களுக்குத்  தீட்டாயிருக்கக்கடவது.  (லேவியராகமம்  11:8)

ivaiga'lin  maamsaththaip  pusikkavum,  ivaiga'lin  udalga'laith  thodavum  vea'ndaam;  ivaiga'l  ungga'lukkuth  theettaayirukkakkadavathu.  (leaviyaraagamam  11:8)

ஜலத்திலிருக்கிறவைகளில்  நீங்கள்  புசிக்கத்தக்கது  யாதெனில்:  கடல்களும்  ஆறுகளுமாகிய  தண்ணீர்களிலே  சிறகும்  செதிளும்  உள்ளவைகளையெல்லாம்  நீங்கள்  புசிக்கலாம்.  (லேவியராகமம்  11:9)

jalaththilirukki’ravaiga'lil  neengga'l  pusikkaththakkathu  yaathenil:  kadalga'lum  aa’ruga'lumaagiya  tha'n'neerga'lilea  si’ragum  sethi'lum  u'l'lavaiga'laiyellaam  neengga'l  pusikkalaam.  (leaviyaraagamam  11:9)

ஆனாலும்,  கடல்களும்  ஆறுகளுமாகிய  தண்ணீர்களில்  நீந்துகிறதும்  வாழ்கிறதுமான  பிராணிகளில்  சிறகும்  செதிளும்  இல்லாதவைகள்  யாவும்  உங்களுக்கு  அருவருப்பாயிருப்பதாக.  (லேவியராகமம்  11:10)

aanaalum,  kadalga'lum  aa’ruga'lumaagiya  tha'n'neerga'lil  neenthugi’rathum  vaazhgi’rathumaana  piraa'niga'lil  si’ragum  sethi'lum  illaathavaiga'l  yaavum  ungga'lukku  aruvaruppaayiruppathaaga.  (leaviyaraagamam  11:10)

அவைகள்  உங்களுக்கு  அருவருப்பாயிருக்கக்கடவது;  அவைகளின்  மாம்சத்தைப்  புசியாதிருந்து,  அவைகளின்  உடல்களை  அருவருப்பீர்களாக.  (லேவியராகமம்  11:11)

avaiga'l  ungga'lukku  aruvaruppaayirukkakkadavathu;  avaiga'lin  maamsaththaip  pusiyaathirunthu,  avaiga'lin  udalga'lai  aruvaruppeerga'laaga.  (leaviyaraagamam  11:11)

தண்ணீர்களிலே  சிறகும்  செதிளும்  இல்லாத  யாவும்  உங்களுக்கு  அருவருப்பாயிருக்கக்கடவது.  (லேவியராகமம்  11:12)

tha'n'neerga'lilea  si’ragum  sethi'lum  illaatha  yaavum  ungga'lukku  aruvaruppaayirukkakkadavathu.  (leaviyaraagamam  11:12)

பறவைகளில்  நீங்கள்  புசியாமல்  அருவருக்கவேண்டியவைகள்  யாதெனில்:  கழுகும்,  கருடனும்,  கடலுராஞ்சியும்,  (லேவியராகமம்  11:13)

pa’ravaiga'lil  neengga'l  pusiyaamal  aruvarukkavea'ndiyavaiga'l  yaathenil:  kazhugum,  karudanum,  kadaluraagnchiyum,  (leaviyaraagamam  11:13)

பருந்தும்,  சகலவித  வல்லூறும்,  (லேவியராகமம்  11:14)

parunthum,  sagalavitha  valloo’rum,  (leaviyaraagamam  11:14)

சகலவித  காகங்களும்,  (லேவியராகமம்  11:15)

sagalavitha  kaagangga'lum,  (leaviyaraagamam  11:15)

தீக்குருவியும்,  கூகையும்,  செம்புகமும்,  சகலவித  டேகையும்,  (லேவியராகமம்  11:16)

theekkuruviyum,  koogaiyum,  sembugamum,  sagalavitha  deagaiyum,  (leaviyaraagamam  11:16)

ஆந்தையும்,  நீர்க்காகமும்,  கோட்டானும்,  (லேவியராகமம்  11:17)

aanthaiyum,  neerkkaagamum,  koattaanum,  (leaviyaraagamam  11:17)

நாரையும்,  கூழக்கடாவும்,  குருகும்,  (லேவியராகமம்  11:18)

naaraiyum,  koozhakkadaavum,  kurugum,  (leaviyaraagamam  11:18)

கொக்கும்,  சகலவித  ராஜாளியும்,  புழுக்கொத்தியும்,  வௌவாலும்  ஆகிய  இவைகளே.  (லேவியராகமம்  11:19)

kokkum,  sagalavitha  raajaa'liyum,  puzhukkoththiyum,  vauvaalum  aagiya  ivaiga'lea.  (leaviyaraagamam  11:19)

பறக்கிறவைகளில்  நாலுகாலால்  நடமாடுகிற  ஊரும்  பிராணிகள்  யாவும்  உங்களுக்கு  அருவருப்பாயிருப்பதாக.  (லேவியராகமம்  11:20)

pa’rakki’ravaiga'lil  naalukaalaal  nadamaadugi’ra  oorum  piraa'niga'l  yaavum  ungga'lukku  aruvaruppaayiruppathaaga.  (leaviyaraagamam  11:20)

ஆகிலும்,  பறக்கிறவைகளில்  நாலுகாலால்  நடமாடுகிற  யாவிலும்,  நீங்கள்  புசிக்கத்தக்கது  யாதெனில்:  தரையிலே  தத்துகிறதற்குக்  கால்களுக்குமேல்  தொடைகள்  உண்டாயிருக்கிறவைகளிலே,  (லேவியராகமம்  11:21)

aagilum,  pa’rakki’ravaiga'lil  naalukaalaal  nadamaadugi’ra  yaavilum,  neengga'l  pusikkaththakkathu  yaathenil:  tharaiyilea  thaththugi’ratha’rkuk  kaalga'lukkumeal  thodaiga'l  u'ndaayirukki’ravaiga'lilea,  (leaviyaraagamam  11:21)

வெட்டுக்கிளி  ஜாதியாயிருக்கிறதையும்,  சோலையாம்  என்னும்  கிளிஜாதியாயிருக்கிறதையும்,  அர்கொல்  என்னும்  கிளிஜாதியாயிருக்கிறதையும்,  ஆகாபு  என்னும்  கிளிஜாதியாயிருக்கிறதையும்  நீங்கள்  புசிக்கலாம்.  (லேவியராகமம்  11:22)

vettukki'li  jaathiyaayirukki’rathaiyum,  soalaiyaam  ennum  ki'lijaathiyaayirukki’rathaiyum,  arkol  ennum  ki'lijaathiyaayirukki’rathaiyum,  aagaabu  ennum  ki'lijaathiyaayirukki’rathaiyum  neengga'l  pusikkalaam.  (leaviyaraagamam  11:22)

பறக்கிறவைகளில்  நாலுகாலால்  நடமாடுகிற  மற்ற  யாவும்  உங்களுக்கு  அருவருப்பாயிருப்பதாக.  (லேவியராகமம்  11:23)

pa’rakki’ravaiga'lil  naalukaalaal  nadamaadugi’ra  mat’ra  yaavum  ungga'lukku  aruvaruppaayiruppathaaga.  (leaviyaraagamam  11:23)

அவைகளாலே  தீட்டுப்படுவீர்கள்;  அவைகளின்  உடலைத்  தொடுகிறவன்  எவனும்  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்.  (லேவியராகமம்  11:24)

avaiga'laalea  theettuppaduveerga'l;  avaiga'lin  udalaith  thodugi’ravan  evanum  saayanggaalamattum  theettuppattiruppaan.  (leaviyaraagamam  11:24)

அவைகளின்  உடலைச்  சுமந்தவன்  எவனும்  தன்  வஸ்திரங்களைத்  தோய்க்கக்கடவன்;  அவன்  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்.  (லேவியராகமம்  11:25)

avaiga'lin  udalaich  sumanthavan  evanum  than  vasthirangga'laith  thoaykkakkadavan;  avan  saayanggaalamattum  theettuppattiruppaan.  (leaviyaraagamam  11:25)

விரிநகங்களுள்ளவைகளாயிருந்தும்,  இருபிளவான  குளம்பில்லாமலும்  அசைபோடாமலும்  இருக்கிற  மிருகங்கள்  யாவும்  உங்களுக்கு  அசுத்தமாயிருப்பதாக;  அவைகளைத்  தொடுகிறவன்  எவனும்  தீட்டுப்படுவான்.  (லேவியராகமம்  11:26)

virinagangga'lu'l'lavaiga'laayirunthum,  irupi'lavaana  ku'lambillaamalum  asaipoadaamalum  irukki’ra  mirugangga'l  yaavum  ungga'lukku  asuththamaayiruppathaaga;  avaiga'laith  thodugi’ravan  evanum  theettuppaduvaan.  (leaviyaraagamam  11:26)

நாலுகாலால்  நடக்கிற  சகல  ஜீவன்களிலும்  தங்கள்  உள்ளங்கால்களை  ஊன்றி  நடக்கிற  யாவும்  உங்களுக்கு  அசுத்தமாயிருப்பதாக;  அவைகளின்  உடலைத்  தொடுகிறவன்  எவனும்  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்.  (லேவியராகமம்  11:27)

naalukaalaal  nadakki’ra  sagala  jeevanga'lilum  thangga'l  u'l'langkaalga'lai  oon’ri  nadakki’ra  yaavum  ungga'lukku  asuththamaayiruppathaaga;  avaiga'lin  udalaith  thodugi’ravan  evanum  saayanggaalamattum  theettuppattiruppaan.  (leaviyaraagamam  11:27)

அவைகளின்  உடலைச்  சுமந்தவன்  தன்  வஸ்திரங்களைத்  தோய்க்கக்கடவன்;  அவன்  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்;  இவைகள்  உங்களுக்குத்  தீட்டாயிருக்கக்கடவது.  (லேவியராகமம்  11:28)

avaiga'lin  udalaich  sumanthavan  than  vasthirangga'laith  thoaykkakkadavan;  avan  saayanggaalamattum  theettuppattiruppaan;  ivaiga'l  ungga'lukkuth  theettaayirukkakkadavathu.  (leaviyaraagamam  11:28)

தரையில்  ஊருகிற  பிராணிகளில்  உங்களுக்கு  அசுத்தமானவைகள்  எவையெனில்:  பெருச்சாளியும்,  எலியும்,  சகலவிதமான  ஆமையும்,  (லேவியராகமம்  11:29)

tharaiyil  oorugi’ra  piraa'niga'lil  ungga'lukku  asuththamaanavaiga'l  evaiyenil:  peruchchaa'liyum,  eliyum,  sagalavithamaana  aamaiyum,  (leaviyaraagamam  11:29)

உடும்பும்,  அழுங்கும்,  ஓணானும்,  பல்லியும்,  பச்சோந்தியும்  ஆகிய  இவைகளே.  (லேவியராகமம்  11:30)

udumbum,  azhunggum,  oa'naanum,  palliyum,  pachchoanthiyum  aagiya  ivaiga'lea.  (leaviyaraagamam  11:30)

சகல  ஊரும்  பிராணிகளிலும்  இவைகள்  உங்களுக்குத்  தீட்டாயிருக்கக்கடவது;  அவைகளில்  செத்ததைத்  தொடுகிறவன்  எவனும்  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்.  (லேவியராகமம்  11:31)

sagala  oorum  piraa'niga'lilum  ivaiga'l  ungga'lukkuth  theettaayirukkakkadavathu;  avaiga'lil  seththathaith  thodugi’ravan  evanum  saayanggaalamattum  theettuppattiruppaan.  (leaviyaraagamam  11:31)

அவைகளில்  செத்தது  ஒன்று  யாதொன்றின்மேல்  விழுந்தால்  அது  தீட்டுப்பட்டிருக்கும்;  அது  மரப்பாத்திரமானாலும்,  வஸ்திரமானாலும்,  தோலானாலும்,  பையானாலும்,  வேலை  செய்கிறதற்கேற்ற  ஆயுதமானாலும்  சாயங்காலமட்டும்  தீட்டாயிருக்கும்;  அது  தண்ணீரில்  போடப்படவேண்டும்,  அப்பொழுது  சுத்தமாகும்.  (லேவியராகமம்  11:32)

avaiga'lil  seththathu  on’ru  yaathon’rinmeal  vizhunthaal  athu  theettuppattirukkum;  athu  marappaaththiramaanaalum,  vasthiramaanaalum,  thoalaanaalum,  paiyaanaalum,  vealai  seygi’ratha’rkeat’ra  aayuthamaanaalum  saayanggaalamattum  theettaayirukkum;  athu  tha'n'neeril  poadappadavea'ndum,  appozhuthu  suththamaagum.  (leaviyaraagamam  11:32)

அவைகளில்  ஒன்று  மண்பாண்டத்திற்குள்  விழுந்தால்,  அதற்குள்  இருக்கிறவை  யாவும்  தீட்டுப்பட்டிருக்கும்;  அதை  உடைத்துப்போடவேண்டும்.  (லேவியராகமம்  11:33)

avaiga'lil  on’ru  ma'npaa'ndaththi’rku'l  vizhunthaal,  atha’rku'l  irukki’ravai  yaavum  theettuppattirukkum;  athai  udaiththuppoadavea'ndum.  (leaviyaraagamam  11:33)

புசிக்கத்தக்க  போஜனபதார்த்தத்தின்மேல்  அந்தத்  தண்ணீர்  பட்டால்,  அது  தீட்டாகும்;  குடிக்கத்தக்க  எந்தப்  பானமும்  அப்படிப்பட்ட  பாத்திரத்தினால்  தீட்டுப்படும்.  (லேவியராகமம்  11:34)

pusikkaththakka  poajanapathaarththaththinmeal  anthath  tha'n'neer  pattaal,  athu  theettaagum;  kudikkaththakka  enthap  baanamum  appadippatta  paaththiraththinaal  theettuppadum.  (leaviyaraagamam  11:34)

அவைகளின்  உடலில்  யாதொன்று  எதின்மேல்  விழுதோ,  அதுவும்  தீட்டுப்படும்;  அடுப்பானாலும்  மண்தொட்டியானாலும்  தகர்க்கப்படுவதாக;  அவைகள்  தீட்டுப்பட்டிருக்கும்;  ஆகையால்,  அவைகள்  உங்களுக்குத்  தீட்டாயிருக்கக்கடவது.  (லேவியராகமம்  11:35)

avaiga'lin  udalil  yaathon’ru  ethinmeal  vizhuthoa,  athuvum  theettuppadum;  aduppaanaalum  ma'nthottiyaanaalum  thagarkkappaduvathaaga;  avaiga'l  theettuppattirukkum;  aagaiyaal,  avaiga'l  ungga'lukkuth  theettaayirukkakkadavathu.  (leaviyaraagamam  11:35)

ஆனாலும்,  நீரூற்றும்  மிகுந்த  ஜலம்  உண்டாகிய  கிணறும்  சுத்தமாயிருக்கும்;  அவைகளிலுள்ள  உடலைத்  தொடுகிறவனோ  தீட்டுப்படுவான்.  (லேவியராகமம்  11:36)

aanaalum,  neeroot’rum  miguntha  jalam  u'ndaagiya  ki'na’rum  suththamaayirukkum;  avaiga'lilu'l'la  udalaith  thodugi’ravanoa  theettuppaduvaan.  (leaviyaraagamam  11:36)

மேற்சொல்லியவைகளின்  உடலில்  யாதொன்று  விதைத்தானியத்தின்மேல்  விழுந்தால்,  அது  தீட்டுப்படாது.  (லேவியராகமம்  11:37)

mea’rsolliyavaiga'lin  udalil  yaathon’ru  vithaiththaaniyaththinmeal  vizhunthaal,  athu  theettuppadaathu.  (leaviyaraagamam  11:37)

அந்த  உடலில்  யாதொன்று  தண்ணீர்  வார்க்கப்பட்டிருக்கிற  விதையின்மேல்  விழுந்ததானால்,  அது  உங்களுக்குத்  தீட்டாயிருக்கக்கடவது.  (லேவியராகமம்  11:38)

antha  udalil  yaathon’ru  tha'n'neer  vaarkkappattirukki’ra  vithaiyinmeal  vizhunthathaanaal,  athu  ungga'lukkuth  theettaayirukkakkadavathu.  (leaviyaraagamam  11:38)

உங்களுக்கு  ஆகாரத்துக்கான  ஒரு  மிருகம்  செத்தால்,  அதின்  உடலைத்  தொடுகிறவன்  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்.  (லேவியராகமம்  11:39)

ungga'lukku  aagaaraththukkaana  oru  mirugam  seththaal,  athin  udalaith  thodugi’ravan  saayanggaalamattum  theettuppattiruppaan.  (leaviyaraagamam  11:39)

அதின்  மாம்சத்தைப்  புசித்தவன்  தன்  வஸ்திரங்களைத்  தோய்க்கக்கடவன்;  அவன்  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்;  அதின்  உடலை  எடுத்துப்போனவனும்  தன்  வஸ்திரங்களைத்  தோய்க்கக்கடவன்;  அவனும்  சாயங்காலமட்டும்  தீட்டுப்பட்டிருப்பான்.  (லேவியராகமம்  11:40)

athin  maamsaththaip  pusiththavan  than  vasthirangga'laith  thoaykkakkadavan;  avan  saayanggaalamattum  theettuppattiruppaan;  athin  udalai  eduththuppoanavanum  than  vasthirangga'laith  thoaykkakkadavan;  avanum  saayanggaalamattum  theettuppattiruppaan.  (leaviyaraagamam  11:40)

தரையில்  ஊருகிற  பிராணிகளெல்லாம்  உங்களுக்கு  அருவருப்பாயிருக்கக்கடவது;  அவை  புசிக்கப்படலாகாது.  (லேவியராகமம்  11:41)

tharaiyil  oorugi’ra  piraa'niga'lellaam  ungga'lukku  aruvaruppaayirukkakkadavathu;  avai  pusikkappadalaagaathu.  (leaviyaraagamam  11:41)

தரையில்  ஊருகிற  சகல  பிராணிகளிலும்,  வயிற்றினால்  நகருகிறவைகளையும்,  நாலுகாலால்  நடமாடுகிறவைகளையும்,  அநேகங்  கால்களுள்ளவைகளையும்  புசியாதிருப்பீர்களாக;  அவைகள்  அருவருப்பானவைகள்.  (லேவியராகமம்  11:42)

tharaiyil  oorugi’ra  sagala  piraa'niga'lilum,  vayit’rinaal  nagarugi’ravaiga'laiyum,  naalukaalaal  nadamaadugi’ravaiga'laiyum,  aneagang  kaalga'lu'l'lavaiga'laiyum  pusiyaathiruppeerga'laaga;  avaiga'l  aruvaruppaanavaiga'l.  (leaviyaraagamam  11:42)

ஊருகிற  எந்தப்  பிராணிகளிலும்  உங்களை  அருவருப்பாக்கிக்கொள்ளாமலும்,  அவைகளால்  தீட்டுப்படாமலும்  இருப்பீர்களாக;  அவைகளாலே  நீங்கள்  தீட்டுப்படுவீர்கள்.  (லேவியராகமம்  11:43)

oorugi’ra  enthap  piraa'niga'lilum  ungga'lai  aruvaruppaakkikko'l'laamalum,  avaiga'laal  theettuppadaamalum  iruppeerga'laaga;  avaiga'laalea  neengga'l  theettuppaduveerga'l.  (leaviyaraagamam  11:43)

நான்  உங்கள்  தேவனாகிய  கர்த்தர்,  நான்  பரிசுத்தர்;  ஆகையால்,  தரையில்  ஊருகிற  எந்தப்  பிராணிகளிலும்  உங்களைத்  தீட்டுப்படுத்தாமல்,  உங்களைப்  பரிசுத்தமாக்கிக்கொண்டு,  பரிசுத்தராயிருப்பீர்களாக.  (லேவியராகமம்  11:44)

naan  ungga'l  theavanaagiya  karththar,  naan  parisuththar;  aagaiyaal,  tharaiyil  oorugi’ra  enthap  piraa'niga'lilum  ungga'laith  theettuppaduththaamal,  ungga'laip  parisuththamaakkikko'ndu,  parisuththaraayiruppeerga'laaga.  (leaviyaraagamam  11:44)

நான்  உங்கள்  தேவனாயிருக்கும்படி  உங்களை  எகிப்து  தேசத்திலிருந்து  வரப்பண்ணின  கர்த்தர்,  நான்  பரிசுத்தர்;  ஆகையால்,  நீங்களும்  பரிசுத்தராயிருப்பீர்களாக.  (லேவியராகமம்  11:45)

naan  ungga'l  theavanaayirukkumpadi  ungga'lai  egipthu  theasaththilirunthu  varappa'n'nina  karththar,  naan  parisuththar;  aagaiyaal,  neengga'lum  parisuththaraayiruppeerga'laaga.  (leaviyaraagamam  11:45)

சுத்தமானதற்கும்  அசுத்தமானதற்கும்,  புசிக்கத்தக்க  ஜந்துக்களுக்கும்  புசிக்கத்தகாத  ஜந்துக்களுக்கும்  வித்தியாசம்பண்ணும்பொருட்டு,  (லேவியராகமம்  11:46)

suththamaanatha’rkum  asuththamaanatha’rkum,  pusikkaththakka  janthukka'lukkum  pusikkaththagaatha  janthukka'lukkum  viththiyaasampa'n'numporuttu,  (leaviyaraagamam  11:46)

மிருகத்துக்கும்  பறவைகளுக்கும்,  தண்ணீர்களில்  நீந்துகிற  சகல  ஜீவஜந்துக்களுக்கும்,  பூமியின்மேல்  ஊருகிற  சகல  பிராணிகளுக்கும்  அடுத்த  பிரமாணம்  இதுவே  என்று  சொல்லுங்கள்  என்றார்.  (லேவியராகமம்  11:47)

mirugaththukkum  pa’ravaiga'lukkum,  tha'n'neerga'lil  neenthugi’ra  sagala  jeevajanthukka'lukkum,  boomiyinmeal  oorugi’ra  sagala  piraa'niga'lukkum  aduththa  piramaa'nam  ithuvea  en’ru  sollungga'l  en’raar.  (leaviyaraagamam  11:47)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!