Thursday, November 03, 2016

Leaviyaraagamam 1 | லேவியராகமம் 1 | Leviticus 1

கர்த்தர்  ஆசரிப்புக்  கூடாரத்திலிருந்து  மோசேயைக்  கூப்பிட்டு,  அவனை  நோக்கி:  (லேவியராகமம்  1:1)

karththar  aasarippuk  koodaaraththilirunthu  moaseayaik  kooppittu,  avanai  noakki:  (leaviyaraagamam  1:1)

நீ  இஸ்ரவேல்  புத்திரரிடத்தில்  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  உங்களில்  ஒருவன்  கர்த்தருக்குப்  பலிசெலுத்த  வந்தால்,  மாட்டுமந்தையிலாவது  ஆட்டுமந்தையிலாவது  ஒரு  மிருகத்தைத்  தெரிந்தெடுத்து,  பலிசெலுத்த  வேண்டும்.  (லேவியராகமம்  1:2)

nee  israveal  puththiraridaththil  sollavea'ndiyathu  ennaven’raal,  ungga'lil  oruvan  karththarukkup  baliseluththa  vanthaal,  maattumanthaiyilaavathu  aattumanthaiyilaavathu  oru  mirugaththaith  therintheduththu,  baliseluththa  vea'ndum.  (leaviyaraagamam  1:2)

அவன்  செலுத்துவது  மாட்டு  மந்தையிலிருந்து  எடுக்கப்பட்ட  சர்வாங்க  தகனபலியானால்,  அவன்  பழுதற்ற  ஒரு  காளையைச்  செலுத்துவானாக;  கர்த்தருடைய  சந்நிதியில்  தான்  அங்கிகரிக்கப்படும்படி,  அவன்  அதை  ஆசரிப்புக்  கூடாரவாசலில்  கொண்டுவந்து,  (லேவியராகமம்  1:3)

avan  seluththuvathu  maattu  manthaiyilirunthu  edukkappatta  sarvaangga  thaganabaliyaanaal,  avan  pazhuthat’ra  oru  kaa'laiyaich  seluththuvaanaaga;  karththarudaiya  sannithiyil  thaan  anggigarikkappadumpadi,  avan  athai  aasarippuk  koodaaravaasalil  ko'nduvanthu,  (leaviyaraagamam  1:3)

அது  தன்  பாவநிவிர்த்திக்கென்று  அங்கிகரிக்கப்படும்படி  தன்  கையை  அதின்  தலையின்மேல்  வைத்து,  (லேவியராகமம்  1:4)

athu  than  paavanivirththikken’ru  anggigarikkappadumpadi  than  kaiyai  athin  thalaiyinmeal  vaiththu,  (leaviyaraagamam  1:4)

கர்த்தருடைய  சந்நிதியில்  அந்தக்  காளையைக்  கொல்லக்கடவன்;  அப்பொழுது  ஆரோனின்  குமாரராகிய  ஆசாரியர்கள்  அதின்  இரத்தத்தை  எடுத்து,  அதை  ஆசரிப்புக்  கூடாரவாசலில்  இருக்கிற  பலிபீடத்தின்மேல்  சுற்றிலும்  தெளிக்கக்கடவர்கள்.  (லேவியராகமம்  1:5)

karththarudaiya  sannithiyil  anthak  kaa'laiyaik  kollakkadavan;  appozhuthu  aaroanin  kumaararaagiya  aasaariyarga'l  athin  iraththaththai  eduththu,  athai  aasarippuk  koodaaravaasalil  irukki’ra  balipeedaththinmeal  sut’rilum  the'likkakkadavarga'l.  (leaviyaraagamam  1:5)

பின்பு  அவன்  அந்தச்  சர்வாங்க  தகனபலியைத்  தோலுரித்து,  அதைச்  சந்துசந்தாகத்  துண்டிக்கக்கடவன்.  (லேவியராகமம்  1:6)

pinbu  avan  anthach  sarvaangga  thaganabaliyaith  thoaluriththu,  athaich  santhusanthaagath  thu'ndikkakkadavan.  (leaviyaraagamam  1:6)

அப்பொழுது  ஆசாரியனாகிய  ஆரோனின்  குமாரர்  பலிபீடத்தின்மேல்  அக்கினியைப்  போட்டு,  அக்கினியின்மேல்  கட்டைகளை  அடுக்கி,  (லேவியராகமம்  1:7)

appozhuthu  aasaariyanaagiya  aaroanin  kumaarar  balipeedaththinmeal  akkiniyaip  poattu,  akkiniyinmeal  kattaiga'lai  adukki,  (leaviyaraagamam  1:7)

அவன்  குமாரராகிய  ஆசாரியர்கள்,  துண்டங்களையும்  தலையையும்  கொழுப்பையும்  பலிபீடத்திலுள்ள  அக்கினியில்  இருக்கிற  கட்டைகளின்மேல்  அடுக்கிவைக்கக்கடவர்கள்.  (லேவியராகமம்  1:8)

avan  kumaararaagiya  aasaariyarga'l,  thu'ndangga'laiyum  thalaiyaiyum  kozhuppaiyum  balipeedaththilu'l'la  akkiniyil  irukki’ra  kattaiga'linmeal  adukkivaikkakkadavarga'l.  (leaviyaraagamam  1:8)

அதின்  குடல்களையும்  தொடைகளையும்  அவன்  தண்ணீரினால்  கழுவுவானாக;  அவைகளையெல்லாம்  ஆசாரியன்  பலிபீடத்தின்மேல்  சர்வாங்க  தகனபலியாகத்  தகனிக்கக்கடவன்;  இது  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  தகனபலி.  (லேவியராகமம்  1:9)

athin  kudalga'laiyum  thodaiga'laiyum  avan  tha'n'neerinaal  kazhuvuvaanaaga;  avaiga'laiyellaam  aasaariyan  balipeedaththinmeal  sarvaangga  thaganabaliyaagath  thaganikkakkadavan;  ithu  karththarukkuch  sugantha  vaasanaiyaana  thaganabali.  (leaviyaraagamam  1:9)

அவன்  செலுத்துவது  செம்மறியாட்டு  மந்தையிலுள்ள  ஆடுகளிலாவது  வெள்ளாட்டு  மந்தையிலுள்ள  ஆடுகளிலாவது  எடுக்கப்பட்ட  சர்வாங்க  தகன  பலியானால்,  பழுதற்ற  ஒரு  கடாவைக்  கொண்டுவந்து,  (லேவியராகமம்  1:10)

avan  seluththuvathu  semma’riyaattu  manthaiyilu'l'la  aaduga'lilaavathu  ve'l'laattu  manthaiyilu'l'la  aaduga'lilaavathu  edukkappatta  sarvaangga  thagana  baliyaanaal,  pazhuthat’ra  oru  kadaavaik  ko'nduvanthu,  (leaviyaraagamam  1:10)

கர்த்தருடைய  சந்நிதியில்  பலிபீடத்தின்  வடபுறத்தில்  அதைக்  கொல்லக்கடவன்;  அப்பொழுது  ஆரோனின்  குமாரராகிய  ஆசாரியர்கள்  அதின்  இரத்தத்தைப்  பலிபீடத்தின்மேல்  சுற்றிலும்  தெளிக்கக்கடவர்கள்.  (லேவியராகமம்  1:11)

karththarudaiya  sannithiyil  balipeedaththin  vadapu’raththil  athaik  kollakkadavan;  appozhuthu  aaroanin  kumaararaagiya  aasaariyarga'l  athin  iraththaththaip  balipeedaththinmeal  sut’rilum  the'likkakkadavarga'l.  (leaviyaraagamam  1:11)

பின்பு  அவன்  அதைச்  சந்துசந்தாகத்  துண்டித்து,  அதின்  தலையையும்  கொழுப்பையும்  கூடவைப்பானாக;  அவைகளை  ஆசாரியன்  பலிபீடத்திலுள்ள  அக்கினியில்  இருக்கிற  கட்டைகளின்மேல்  அடுக்கிவைக்கக்கடவன்.  (லேவியராகமம்  1:12)

pinbu  avan  athaich  santhusanthaagath  thu'ndiththu,  athin  thalaiyaiyum  kozhuppaiyum  koodavaippaanaaga;  avaiga'lai  aasaariyan  balipeedaththilu'l'la  akkiniyil  irukki’ra  kattaiga'linmeal  adukkivaikkakkadavan.  (leaviyaraagamam  1:12)

குடல்களையும்  தொடைகளையும்  அவன்  தண்ணீரினால்  கழுவுவானாக;  அவைகளையெல்லாம்  ஆசாரியன்  கொண்டுவந்து  பலிபீடத்தின்மேல்  தகனிக்கக்கடவன்;  இது  சர்வாங்க  தகனபலி;  இது  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  தகனபலி.  (லேவியராகமம்  1:13)

kudalga'laiyum  thodaiga'laiyum  avan  tha'n'neerinaal  kazhuvuvaanaaga;  avaiga'laiyellaam  aasaariyan  ko'nduvanthu  balipeedaththinmeal  thaganikkakkadavan;  ithu  sarvaangga  thaganabali;  ithu  karththarukkuch  sugantha  vaasanaiyaana  thaganabali.  (leaviyaraagamam  1:13)

அவன்  கர்த்தருக்குச்  செலுத்துவது  பறவைகளிலிருந்து  எடுக்கப்பட்ட  சர்வாங்க  தகனபலியானால்,  காட்டுப்  புறாக்களிலாவது  புறாக்குஞ்சுகளிலாவது  எடுத்துச்  செலுத்தக்கடவன்.  (லேவியராகமம்  1:14)

avan  karththarukkuch  seluththuvathu  pa’ravaiga'lilirunthu  edukkappatta  sarvaangga  thaganabaliyaanaal,  kaattup  pu’raakka'lilaavathu  pu’raakkugnchuga'lilaavathu  eduththuch  seluththakkadavan.  (leaviyaraagamam  1:14)

அதை  ஆசாரியன்  பலிபீடத்தண்டையில்  கொண்டுவந்து,  அதின்  தலையைக்கிள்ளி,  பலிபீடத்தில்  தகனித்து,  அதின்  இரத்தத்தைப்  பலிபீடத்தின்  பக்கத்தில்  சிந்தவிட்டு,  (லேவியராகமம்  1:15)

athai  aasaariyan  balipeedaththa'ndaiyil  ko'nduvanthu,  athin  thalaiyaikki'l'li,  balipeedaththil  thaganiththu,  athin  iraththaththaip  balipeedaththin  pakkaththil  sinthavittu,  (leaviyaraagamam  1:15)

அதின்  இரைப்பையை  அதின்  மலத்தோடுங்கூட  எடுத்து,  அதைப்  பலிபீடத்தண்டையில்  கீழ்புறமாகச்  சாம்பல்  இருக்கிற  இடத்திலே  எறிந்துவிட்டு,  (லேவியராகமம்  1:16)

athin  iraippaiyai  athin  malaththoadungkooda  eduththu,  athaip  balipeedaththa'ndaiyil  keezhpu’ramaagach  saambal  irukki’ra  idaththilea  e’rinthuvittu,  (leaviyaraagamam  1:16)

பின்பு  அதின்  செட்டைகளுடன்  அதை  இரண்டாக்காமல்  பிளப்பானாக;  பின்பு  ஆசாரியன்  அதைப்  பலிபீடத்திலுள்ள  அக்கினியில்  இருக்கிற  கட்டைகளின்மேல்  தகனிக்கக்கடவன்;  இது  சர்வாங்க  தகனபலி;  இது  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  தகனபலி.  (லேவியராகமம்  1:17)

pinbu  athin  settaiga'ludan  athai  ira'ndaakkaamal  pi'lappaanaaga;  pinbu  aasaariyan  athaip  balipeedaththilu'l'la  akkiniyil  irukki’ra  kattaiga'linmeal  thaganikkakkadavan;  ithu  sarvaangga  thaganabali;  ithu  karththarukkuch  sugantha  vaasanaiyaana  thaganabali.  (leaviyaraagamam  1:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!