Tuesday, November 01, 2016

Es'raa 8 | எஸ்றா 8 | Ezra 8

அர்தசஷ்டா  ராஜா  அரசாளும்  காலத்தில்  பாபிலோனிலிருந்து  என்னோடேகூட  வந்த  தங்கள்  பிதாக்கள்  வம்சங்களின்  தலைவரும்  அவர்கள்  வம்ச  அட்டவணைகளுமாவன:  (எஸ்றா  8:1)

arthasashdaa  raajaa  arasaa'lum  kaalaththil  baabiloanilirunthu  ennoadeakooda  vantha  thangga'l  pithaakka'l  vamsangga'lin  thalaivarum  avarga'l  vamsa  attava'naiga'lumaavana:  (es’raa  8:1)

பினெகாசின்  புத்திரரில்  கெர்சோம்,  இத்தாமாரின்  புத்திரரில்  தானியேல்,  தாவீதின்  புத்திரரில்  அத்தூஸ்,  (எஸ்றா  8:2)

pinegaasin  puththiraril  kersoam,  iththaamaarin  puththiraril  thaaniyeal,  thaaveethin  puththiraril  aththoos,  (es’raa  8:2)

பாரோஷின்  புத்திரரில்  ஒருவனான  செக்கனியாவின்  புத்திரரில்  சகரியாவும்,  அவனோடேகூட  வம்ச  அட்டவணையில்  எழுதியிருக்கிற  நூற்றைம்பது  ஆண்மக்களும்,  (எஸ்றா  8:3)

paaroashin  puththiraril  oruvanaana  sekkaniyaavin  puththiraril  sagariyaavum,  avanoadeakooda  vamsa  attava'naiyil  ezhuthiyirukki’ra  noot’raimbathu  aa'nmakka'lum,  (es’raa  8:3)

பாகாத்மோவாபின்  புத்திரரில்  செரகியாவின்  குமாரனாகிய  எலியோனாயும்,  அவனோடேகூட  இருநூறு  ஆண்மக்களும்,  (எஸ்றா  8:4)

paahaathmoavaabin  puththiraril  serakiyaavin  kumaaranaagiya  eliyoanaayum,  avanoadeakooda  irunoo’ru  aa'nmakka'lum,  (es’raa  8:4)

செக்கனியாவின்  புத்திரரில்  யகசியேலின்  குமாரனும்,  அவனோடேகூட  முந்நூறு  ஆண்மக்களும்,  (எஸ்றா  8:5)

sekkaniyaavin  puththiraril  yagasiyealin  kumaaranum,  avanoadeakooda  munnoo’ru  aa'nmakka'lum,  (es’raa  8:5)

ஆதினின்  புத்திரரில்  யோனத்தானின்  குமாரனாகிய  ஏபேதும்,  அவனோடேகூட  ஐம்பது  ஆண்மக்களும்,  (எஸ்றா  8:6)

aathinin  puththiraril  yoanaththaanin  kumaaranaagiya  eabeathum,  avanoadeakooda  aimbathu  aa'nmakka'lum,  (es’raa  8:6)

ஏலாமின்  புத்திரரில்  அதலியாவின்  குமாரனாகிய  எஷாயாவும்,  அவனோடேகூட  எழுபது  ஆண்மக்களும்,  (எஸ்றா  8:7)

ealaamin  puththiraril  athaliyaavin  kumaaranaagiya  eshaayaavum,  avanoadeakooda  ezhubathu  aa'nmakka'lum,  (es’raa  8:7)

செப்பதியாவின்  புத்திரரில்  மிகவேலின்  குமாரனாகிய  செப்பதியாவும்,  அவனோடேகூட  எண்பது  ஆண்மக்களும்,  (எஸ்றா  8:8)

seppathiyaavin  puththiraril  migavealin  kumaaranaagiya  seppathiyaavum,  avanoadeakooda  e'nbathu  aa'nmakka'lum,  (es’raa  8:8)

யோவாபின்  புத்திரரில்  யெகியேலின்  குமாரனாகிய  ஒபதியாவும்,  அவனோடேகூட  இருநூற்றுப்  பதினெட்டு  ஆண்மக்களும்,  (எஸ்றா  8:9)

yoavaabin  puththiraril  yegiyealin  kumaaranaagiya  obathiyaavum,  avanoadeakooda  irunoot’rup  pathinettu  aa'nmakka'lum,  (es’raa  8:9)

செலோமித்தின்  புத்திரரில்  யொசிபியாவின்  குமாரனும்,  அவனோடேகூட  நூற்றறுபது  ஆண்மக்களும்,  (எஸ்றா  8:10)

seloamiththin  puththiraril  yosipiyaavin  kumaaranum,  avanoadeakooda  noot’ra’rubathu  aa'nmakka'lum,  (es’raa  8:10)

பெயாயின்  புத்திரரில்  பெயாயின்  குமாரனாகிய  சகரியாவும்,  அவனோடேகூட  இருபத்தெட்டு  ஆண்மக்களும்,  (எஸ்றா  8:11)

beyaayin  puththiraril  beyaayin  kumaaranaagiya  sagariyaavum,  avanoadeakooda  irubaththettu  aa'nmakka'lum,  (es’raa  8:11)

அஸ்காதின்  புத்திரரில்  காத்தானின்  குமாரனாகிய  யோகனானும்,  அவனோடேகூட  நூற்றுப்பத்து  ஆண்மக்களும்,  (எஸ்றா  8:12)

askaathin  puththiraril  kaaththaanin  kumaaranaagiya  yoaganaanum,  avanoadeakooda  noot’ruppaththu  aa'nmakka'lum,  (es’raa  8:12)

அதோனிகாமின்  கடைசிப்புத்திரரான  எலிபேலேத்,  ஏயெல்,  செமாயா  என்னும்  நாமங்களுள்ளவர்களும்,  அவர்களோடேகூட  அறுபது  ஆண்மக்களும்,  (எஸ்றா  8:13)

athoanikaamin  kadaisippuththiraraana  elipealeath,  eayel,  semaayaa  ennum  naamangga'lu'l'lavarga'lum,  avarga'loadeakooda  a’rubathu  aa'nmakka'lum,  (es’raa  8:13)

பிக்வாயின்  புத்திரரில்  ஊத்தாயும்,  சபூதும்,  அவர்களோடேகூட  எழுபது  ஆண்மக்களுமே.  (எஸ்றா  8:14)

bikvaayin  puththiraril  ooththaayum,  saboothum,  avarga'loadeakooda  ezhubathu  aa'nmakka'lumea.  (es’raa  8:14)

இவர்களை  நான்  அகாவாவுக்கு  ஓடுகிற  நதியண்டையிலே  கூட்டிக்கொண்டுபோனேன்;  அங்கே  மூன்றுநாள்  தங்கியிருந்தோம்;  நான்  ஜனங்களையும்  ஆசாரியரையும்  பார்வையிடும்போது,  லேவியின்  புத்திரரில்  ஒருவரையும்  அங்கே  காணவில்லை.  (எஸ்றா  8:15)

ivarga'lai  naan  agaavaavukku  oadugi’ra  nathiya'ndaiyilea  koottikko'ndupoanean;  anggea  moon’runaa'l  thanggiyirunthoam;  naan  janangga'laiyum  aasaariyaraiyum  paarvaiyidumpoathu,  leaviyin  puththiraril  oruvaraiyum  anggea  kaa'navillai.  (es’raa  8:15)

ஆகையால்  நான்  எலியேசர்,  அரியேல்,  செமாயா,  எல்நாத்தான்,  யாரிப்,  எல்நாத்தான்,  நாத்தான்,  சகரியா,  மிசுல்லாம்  என்னும்  தலைவரையும்,  யோயாரிப்,  எல்நாத்தான்  என்னும்  புத்திமான்களையும்  அழைப்பித்து,  (எஸ்றா  8:16)

aagaiyaal  naan  eliyeasar,  ariyeal,  semaayaa,  elnaaththaan,  yaarib,  elnaaththaan,  naaththaan,  sagariyaa,  misullaam  ennum  thalaivaraiyum,  yoayaarib,  elnaaththaan  ennum  buththimaanga'laiyum  azhaippiththu,  (es’raa  8:16)

கசிப்பியா  என்னும்  ஸ்தலத்திலிருக்கிற  தலைவனாகிய  இத்தோவிடத்திற்குச்  செய்தி  கொண்டுபோக  அவர்களுக்குக்  கற்பித்து,  நமது  தேவனுடைய  ஆலயத்துப்  பணிவிடைக்காரரை  எங்களிடத்திற்கு  அழைத்துவரும்படி,  அவர்கள்  கசிப்பியா  என்னும்  ஸ்தலத்திலிருக்கிற  தங்கள்  சகோதரனாகிய  இத்தோவுக்கும்,  நிதனீமியருக்கும்  சொல்லவேண்டிய  வார்த்தைகளைச்  சொல்லிக்கொடுத்தேன்.  (எஸ்றா  8:17)

kasippiyaa  ennum  sthalaththilirukki’ra  thalaivanaagiya  iththoavidaththi’rkuch  seythi  ko'ndupoaga  avarga'lukkuk  ka’rpiththu,  namathu  theavanudaiya  aalayaththup  pa'nividaikkaararai  engga'lidaththi’rku  azhaiththuvarumpadi,  avarga'l  kasippiyaa  ennum  sthalaththilirukki’ra  thangga'l  sagoatharanaagiya  iththoavukkum,  nithaneemiyarukkum  sollavea'ndiya  vaarththaiga'laich  sollikkoduththean.  (es’raa  8:17)

அவர்கள்  எங்கள்மேலிருந்த  எங்கள்  தேவனுடைய  தயையுள்ள  கரத்தின்படியே,  இஸ்ரவேலுக்குப்  பிறந்த  லேவியின்  குமாரனாகிய  மகேலியின்  புத்திரரில்  புத்தியுள்ள  மனுஷனாகிய  செரெபியாவும்  அவன்  குமாரரும்  சகோதரருமான  பதினெட்டுப்பேரையும்,  (எஸ்றா  8:18)

avarga'l  engga'lmealiruntha  engga'l  theavanudaiya  thayaiyu'l'la  karaththinpadiyea,  isravealukkup  pi’rantha  leaviyin  kumaaranaagiya  magealiyin  puththiraril  buththiyu'l'la  manushanaagiya  serebiyaavum  avan  kumaararum  sagoathararumaana  pathinettuppearaiyum,  (es’raa  8:18)

மெராரியரின்  புத்திரரில்  அஷபியாவும்  அவனோடே  எஷாயாவும்  அவன்  சகோதரரும்  அவர்கள்  குமாரருமான  இருபதுபேரையும்,  (எஸ்றா  8:19)

meraariyarin  puththiraril  ashabiyaavum  avanoadea  eshaayaavum  avan  sagoathararum  avarga'l  kumaararumaana  irubathupearaiyum,  (es’raa  8:19)

தாவீதும்  பிரபுக்களும்  லேவியருக்குப்  பணிவிடைக்காரராக  வைத்த  நிதனீமியரில்  இருநூற்று  இருபதுபேரையும்,  எங்களிடத்தில்  அழைத்துக்கொண்டுவந்தார்கள்;  அவர்கள்  எல்லாருடைய  பேர்களும்  குறிக்கப்பட்டன.  (எஸ்றா  8:20)

thaaveethum  pirabukka'lum  leaviyarukkup  pa'nividaikkaararaaga  vaiththa  nithaneemiyaril  irunoot’ru  irubathupearaiyum,  engga'lidaththil  azhaiththukko'nduvanthaarga'l;  avarga'l  ellaarudaiya  pearga'lum  ku’rikkappattana.  (es’raa  8:20)

அப்பொழுது  நாங்கள்  எங்கள்  தேவனுக்கு  முன்பாக  எங்களைத்  தாழ்த்துகிறதற்கும்,  எங்களுக்காகவும்  எங்கள்  பிள்ளைகளுக்காகவும்  எங்கள்  சகல  பொருள்களுக்காகவும்  செவ்வையான  வழியைத்  தேடுகிறதற்கும்,  நான்  அங்கே  அந்த  அகாவா  நதியண்டையிலே  உபவாசத்தைக்  கூறினேன்.  (எஸ்றா  8:21)

appozhuthu  naangga'l  engga'l  theavanukku  munbaaga  engga'laith  thaazhththugi’ratha’rkum,  engga'lukkaagavum  engga'l  pi'l'laiga'lukkaagavum  engga'l  sagala  poru'lga'lukkaagavum  sevvaiyaana  vazhiyaith  theadugi’ratha’rkum,  naan  anggea  antha  agaavaa  nathiya'ndaiyilea  ubavaasaththaik  koo’rinean.  (es’raa  8:21)

வழியிலே  சத்துருவை  விலக்கி,  எங்களுக்குத்  துணைசெய்யும்படிக்கு,  நான்  ராஜாவினிடத்தில்  சேவகரையும்  குதிரைவீரரையும்  கேட்க  வெட்கப்பட்டிருந்தேன்;  எங்கள்  தேவனுடைய  கரம்  தம்மைத்  தேடுகிறவர்கள்  எல்லார்மேலும்  அவர்களுக்கு  நன்மையாக  இருக்கிறதென்றும்,  அவருடைய  வல்லமையும்  அவருடைய  கோபமும்  அவரை  விட்டு  விலகுகிறவர்கள்  எல்லார்மேலும்  இருக்கிறதென்றும்,  நாங்கள்  ராஜாவுக்குச்  சொல்லியிருந்தோம்.  (எஸ்றா  8:22)

vazhiyilea  saththuruvai  vilakki,  engga'lukkuth  thu'naiseyyumpadikku,  naan  raajaavinidaththil  seavagaraiyum  kuthiraiveeraraiyum  keadka  vedkappattirunthean;  engga'l  theavanudaiya  karam  thammaith  theadugi’ravarga'l  ellaarmealum  avarga'lukku  nanmaiyaaga  irukki’rathen’rum,  avarudaiya  vallamaiyum  avarudaiya  koabamum  avarai  vittu  vilagugi’ravarga'l  ellaarmealum  irukki’rathen’rum,  naangga'l  raajaavukkuch  solliyirunthoam.  (es’raa  8:22)

அப்படியே  நாங்கள்  உபவாசம்பண்ணி,  எங்கள்  தேவனிடத்திலே  அதைத்  தேடினோம்;  எங்கள்  விண்ணப்பத்தைக்  கேட்டருளினார்.  (எஸ்றா  8:23)

appadiyea  naangga'l  ubavaasampa'n'ni,  engga'l  theavanidaththilea  athaith  theadinoam;  engga'l  vi'n'nappaththaik  keattaru'linaar.  (es’raa  8:23)

பின்பு  நான்  ஆசாரியரின்  தலைவரிலே  பன்னிரண்டுபேராகிய  செரெபியாவையும்,  அஷ்பியாவையும்,  அவர்கள்  சகோதரரிலே  பத்துப்பேரையும்  பிரித்தெடுத்து,  (எஸ்றா  8:24)

pinbu  naan  aasaariyarin  thalaivarilea  pannira'ndupearaagiya  serebiyaavaiyum,  ashbiyaavaiyum,  avarga'l  sagoathararilea  paththuppearaiyum  piriththeduththu,  (es’raa  8:24)

ராஜாவும்,  அவருடைய  ஆலோசனைக்காரரும்,  அவருடைய  பிரபுக்களும்,  அங்கேயிருந்த  சகல  இஸ்ரவேலரும்,  எங்கள்  தேவனுடைய  ஆலயத்துக்கென்று  எடுத்துக்கொடுத்த  காணிக்கையாகிய  வெள்ளியையும்,  பொன்னையும்,  பணிமுட்டுகளையும்  அவர்களிடத்தில்  நிறுத்துக்  கொடுத்தேன்.  (எஸ்றா  8:25)

raajaavum,  avarudaiya  aaloasanaikkaararum,  avarudaiya  pirabukka'lum,  anggeayiruntha  sagala  isravealarum,  engga'l  theavanudaiya  aalayaththukken’ru  eduththukkoduththa  kaa'nikkaiyaagiya  ve'l'liyaiyum,  ponnaiyum,  pa'nimuttuga'laiyum  avarga'lidaththil  ni’ruththuk  koduththean.  (es’raa  8:25)

அவர்கள்  கையிலே  நான்  அறுநூற்று  ஐம்பது  தாலந்து  வெள்ளியையும்,  நூறுதாலந்து  நிறையான  வெள்ளிப்  பணிமுட்டுகளையும்,  நூறுதாலந்து  பொன்னையும்,  (எஸ்றா  8:26)

avarga'l  kaiyilea  naan  a’runoot’ru  aimbathu  thaalanthu  ve'l'liyaiyum,  noo’ruthaalanthu  ni’raiyaana  ve'l'lip  pa'nimuttuga'laiyum,  noo’ruthaalanthu  ponnaiyum,  (es’raa  8:26)

ஆயிரம்  தங்கக்காசு  பெறுமான  இருபது  பொற்கிண்ணங்களையும்,  பொன்னைப்போல  எண்ணப்பட்ட  பளபளப்பான  இரண்டு  நல்ல  வெண்கலப்  பாத்திரங்களையும்  நிறுத்துக்கொடுத்து,  (எஸ்றா  8:27)

aayiram  thanggakkaasu  pe’rumaana  irubathu  po’rki'n'nangga'laiyum,  ponnaippoala  e'n'nappatta  pa'lapa'lappaana  ira'ndu  nalla  ve'ngalap  paaththirangga'laiyum  ni’ruththukkoduththu,  (es’raa  8:27)

அவர்களை  நோக்கி:  நீங்கள்  கர்த்தருக்குப்  பரிசுத்தமானவர்கள்;  இந்தப்  பணிமுட்டுகளும்,  உங்கள்  பிதாக்களுடைய  தேவனாகிய  கர்த்தருக்கு  மனஉற்சாகமாய்ச்  செலுத்தப்பட்ட  இந்த  வெள்ளியும்,  இந்தப்  பொன்னும்  பரிசுத்தமானவைகள்.  (எஸ்றா  8:28)

avarga'lai  noakki:  neengga'l  karththarukkup  parisuththamaanavarga'l;  inthap  pa'nimuttuga'lum,  ungga'l  pithaakka'ludaiya  theavanaagiya  karththarukku  manau’rchaagamaaych  seluththappatta  intha  ve'l'liyum,  inthap  ponnum  parisuththamaanavaiga'l.  (es’raa  8:28)

நீங்கள்  அதை  எருசலேமிலிருக்கிற  தேவனுடைய  ஆலயத்தின்  அறைகளில்  ஆசாரியர்  லேவியருடைய  பிரபுக்களுக்கும்,  இஸ்ரவேலுடைய  வம்சத்தலைவர்களுக்கும்  முன்பாக  நிறுத்து  ஒப்புவிக்குமட்டும்  விழிப்பாயிருந்து,  அதைக்  காத்துக்கொள்ளுங்கள்  என்றேன்.  (எஸ்றா  8:29)

neengga'l  athai  erusaleamilirukki’ra  theavanudaiya  aalayaththin  a’raiga'lil  aasaariyar  leaviyarudaiya  pirabukka'lukkum,  isravealudaiya  vamsaththalaivarga'lukkum  munbaaga  ni’ruththu  oppuvikkumattum  vizhippaayirunthu,  athaik  kaaththukko'l'lungga'l  en’rean.  (es’raa  8:29)

அப்படியே  அந்த  ஆசாரியரும்  லேவியரும்,  அந்த  வெள்ளியையும்  பொன்னையும்  பணிமுட்டுகளையும்  எருசலேமிலிருக்கிற  எங்கள்  தேவனுடைய  ஆலயத்துக்குக்  கொண்டுபோகும்படிக்கு,  நிறுத்து  வாங்கிக்கொண்டார்கள்.  (எஸ்றா  8:30)

appadiyea  antha  aasaariyarum  leaviyarum,  antha  ve'l'liyaiyum  ponnaiyum  pa'nimuttuga'laiyum  erusaleamilirukki’ra  engga'l  theavanudaiya  aalayaththukkuk  ko'ndupoagumpadikku,  ni’ruththu  vaanggikko'ndaarga'l.  (es’raa  8:30)

நாங்கள்  எருசலேமுக்குப்போக,  முதலாம்  மாதம்  பன்னிரண்டாந்தேதியிலே,  அகாவா  நதியைவிட்டுப்  பயணம்  புறப்பட்டோம்;  எங்கள்  தேவனுடைய  கரம்  எங்கள்மேலிருந்து,  வழியிலே  சத்துருவின்  கைக்கும்,  பதிவிருக்கிறவர்களின்  கைக்கும்  எங்களைத்  தப்புவித்தது.  (எஸ்றா  8:31)

naangga'l  erusaleamukkuppoaga,  muthalaam  maatham  pannira'ndaantheathiyilea,  agaavaa  nathiyaivittup  paya'nam  pu’rappattoam;  engga'l  theavanudaiya  karam  engga'lmealirunthu,  vazhiyilea  saththuruvin  kaikkum,  pathivirukki’ravarga'lin  kaikkum  engga'laith  thappuviththathu.  (es’raa  8:31)

நாங்கள்  எருசலேமுக்கு  வந்து,  அங்கே  மூன்றுநாள்  இருந்தபின்பு,  (எஸ்றா  8:32)

naangga'l  erusaleamukku  vanthu,  anggea  moon’runaa'l  irunthapinbu,  (es’raa  8:32)

நாலாம்  நாளிலே  அந்த  வெள்ளியும்  பொன்னும்  பணிமுட்டுகளும்,  எங்கள்  தேவனுடைய  ஆலயத்தில்  ஆசாரியனாகிய  உரியாவின்  குமாரன்  மெரேமோத்தின்  கையிலும்,  பினெகாசின்  குமாரன்  எலெயாசாரின்  கையிலும்,  எல்லாவற்றிற்கும்  இருந்த  நிறையின்படியேயும்  நிறுத்து,  ஒப்புவிக்கப்பட்டது;  யெசுவாவின்  குமாரன்  யோசபாத்தும்,  பின்னூயின்  குமாரன்  நொவதியாவும்  என்கிற  லேவியரும்  அவர்களோடேகூட  இருந்தார்கள்.  (எஸ்றா  8:33)

naalaam  naa'lilea  antha  ve'l'liyum  ponnum  pa'nimuttuga'lum,  engga'l  theavanudaiya  aalayaththil  aasaariyanaagiya  uriyaavin  kumaaran  mereamoaththin  kaiyilum,  pinegaasin  kumaaran  eleyaasaarin  kaiyilum,  ellaavat’ri’rkum  iruntha  ni’raiyinpadiyeayum  ni’ruththu,  oppuvikkappattathu;  yesuvaavin  kumaaran  yoasabaaththum,  binnooyin  kumaaran  novathiyaavum  engi’ra  leaviyarum  avarga'loadeakooda  irunthaarga'l.  (es’raa  8:33)

அந்த  நிறையெல்லாம்  அக்காலத்தில்  எழுதப்பட்டது.  (எஸ்றா  8:34)

antha  ni’raiyellaam  akkaalaththil  ezhuthappattathu.  (es’raa  8:34)

சிறைப்பட்டு  மீண்டவர்கள்  இஸ்ரவேலின்  தேவனுக்குச்  சர்வாங்க  தகனபலிகளாக  இஸ்ரவேல்  அனைத்தினிமித்தம்  பன்னிரண்டு  காளைகளையும்,  தொண்ணூற்றாறு  ஆட்டுக்கடாக்களையும்,  எழுபத்தேழு  ஆட்டுக்குட்டிகளையும்,  பாவநிவாரணத்துக்காகப்  பன்னிரண்டு  வெள்ளாட்டுக்கடாக்களையும்  பலியிட்டு,  அவையெல்லாம்  கர்த்தருக்குச்  சர்வாங்க  தகனபலியாகச்  செலுத்தினார்கள்.  (எஸ்றா  8:35)

si’raippattu  mee'ndavarga'l  isravealin  theavanukkuch  sarvaangga  thaganabaliga'laaga  israveal  anaiththinimiththam  pannira'ndu  kaa'laiga'laiyum,  tho'n'noot’raa’ru  aattukkadaakka'laiyum,  ezhubaththeazhu  aattukkuttiga'laiyum,  paavanivaara'naththukkaagap  pannira'ndu  ve'l'laattukkadaakka'laiyum  baliyittu,  avaiyellaam  karththarukkuch  sarvaangga  thaganabaliyaagach  seluththinaarga'l.  (es’raa  8:35)

பின்பு  ராஜாவின்  சன்னதுகளை  நதிக்கு  இப்புறத்திலிருக்கிற  ராஜாவின்  தேசாதிபதிகளுக்கும்  அதிகாரிகளுக்கும்  ஒப்புவித்தார்கள்;  அப்பொழுது  அவர்கள்  ஜனங்களுக்கும்  தேவனுடைய  ஆலயத்துக்கும்  உதவியாயிருந்தார்கள்.  (எஸ்றா  8:36)

pinbu  raajaavin  sannathuga'lai  nathikku  ippu’raththilirukki’ra  raajaavin  theasaathibathiga'lukkum  athigaariga'lukkum  oppuviththaarga'l;  appozhuthu  avarga'l  janangga'lukkum  theavanudaiya  aalayaththukkum  uthaviyaayirunthaarga'l.  (es’raa  8:36)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!