Tuesday, November 01, 2016

Es'raa 7 | எஸ்றா 7 | Ezra 7

இந்த  வர்த்தமானங்களுக்குப்பின்பு,  செராயாவின்  குமாரனாகிய  எஸ்றா,  பெர்சியாவின்  ராஜாவாகிய  அர்தசஷ்டா  அரசாளுகிற  காலத்திலே  பாபிலோனிலிருந்து  வந்தான்;  இந்தச்  செராயா  அசரியாவின்  குமாரன்,  இவன்  இல்க்கியாவின்  குமாரன்,  (எஸ்றா  7:1)

intha  varththamaanangga'lukkuppinbu,  seraayaavin  kumaaranaagiya  es’raa,  persiyaavin  raajaavaagiya  arthasashdaa  arasaa'lugi’ra  kaalaththilea  baabiloanilirunthu  vanthaan;  inthach  seraayaa  asariyaavin  kumaaran,  ivan  ilkkiyaavin  kumaaran,  (es’raa  7:1)

இவன்  சல்லூமின்  குமாரன்,  இவன்  சாதோக்கின்  குமாரன்,  இவன்  அகிதூபின்  குமாரன்,  (எஸ்றா  7:2)

ivan  salloomin  kumaaran,  ivan  saathoakkin  kumaaran,  ivan  agithoobin  kumaaran,  (es’raa  7:2)

இவன்  அமரியாவின்  குமாரன்,  இவன்  அசரியாவின்  குமாரன்,  இவன்  மெராயோதின்  குமாரன்,  (எஸ்றா  7:3)

ivan  amariyaavin  kumaaran,  ivan  asariyaavin  kumaaran,  ivan  meraayoathin  kumaaran,  (es’raa  7:3)

இவன்  சேராகியாவின்  குமாரன்,  இவன்  ஊசியின்  குமாரன்,  இவன்  புக்கியின்  குமாரன்,  (எஸ்றா  7:4)

ivan  searaakiyaavin  kumaaran,  ivan  oosiyin  kumaaran,  ivan  bukkiyin  kumaaran,  (es’raa  7:4)

இவன்  அபிசுவாவின்  குமாரன்,  இவன்  பினெகாசின்  குமாரன்,  இவன்  எலெயாசாரின்  குமாரன்,  இவன்  பிரதான  ஆசாரியனான  ஆரோனின்  குமாரன்.  (எஸ்றா  7:5)

ivan  abisuvaavin  kumaaran,  ivan  pinegaasin  kumaaran,  ivan  eleyaasaarin  kumaaran,  ivan  pirathaana  aasaariyanaana  aaroanin  kumaaran.  (es’raa  7:5)

இந்த  எஸ்றா  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  அருளிய  மோசேயின்  நியாயப்பிரமாணத்திலே  தேறின  வேதபாரகனாயிருந்தான்;  அவனுடைய  தேவனாகிய  கர்த்தருடைய  கரம்  அவன்மேல்  இருந்ததினால்,  அவன்  கேட்டவைகளையெல்லாம்  ராஜா  அவனுக்குக்  கொடுத்தான்.  (எஸ்றா  7:6)

intha  es’raa  isravealin  theavanaagiya  karththar  aru'liya  moaseayin  niyaayappiramaa'naththilea  thea’rina  veathapaaraganaayirunthaan;  avanudaiya  theavanaagiya  karththarudaiya  karam  avanmeal  irunthathinaal,  avan  keattavaiga'laiyellaam  raajaa  avanukkuk  koduththaan.  (es’raa  7:6)

அவனோடேகூட  இஸ்ரவேல்  புத்திரரிலும்,  ஆசாரியரிலும்,  லேவியரிலும்,  பாடகரிலும்,  வாசல்  காவலாளரிலும்,  நிதனீமியரிலும்,  சிலர்  அர்தசஷ்டா  ராஜாவின்  ஏழாம்  வருஷத்திலே  எருசலேமுக்குப்  போனார்கள்.  (எஸ்றா  7:7)

avanoadeakooda  israveal  puththirarilum,  aasaariyarilum,  leaviyarilum,  paadagarilum,  vaasal  kaavalaa'larilum,  nithaneemiyarilum,  silar  arthasashdaa  raajaavin  eazhaam  varushaththilea  erusaleamukkup  poanaarga'l.  (es’raa  7:7)

ஐந்தாம்  மாதத்தில்  அவன்  எருசலேமுக்கு  வந்தான்;  அது  அந்த  ராஜாவின்  ஏழாம்  வருஷமானது.  (எஸ்றா  7:8)

ainthaam  maathaththil  avan  erusaleamukku  vanthaan;  athu  antha  raajaavin  eazhaam  varushamaanathu.  (es’raa  7:8)

முதலாம்  மாதம்  முதல்தேதியிலே  அவன்  பாபிலோனிலிருந்து  பிரயாணமாகப்  புறப்பட்டு,  ஐந்தாம்  மாதம்  முதல்தேதியிலே  தன்  தேவனுடைய  தயவுள்ள  கரம்  தன்மேலிருந்ததினால்  எருசலேமுக்கு  வந்தான்.  (எஸ்றா  7:9)

muthalaam  maatham  muthaltheathiyilea  avan  baabiloanilirunthu  pirayaa'namaagap  pu’rappattu,  ainthaam  maatham  muthaltheathiyilea  than  theavanudaiya  thayavu'l'la  karam  thanmealirunthathinaal  erusaleamukku  vanthaan.  (es’raa  7:9)

கர்த்தருடைய  வேதத்தை  ஆராயவும்,  அதின்படி  செய்யவும்,  இஸ்ரவேலிலே  கட்டளைகளையும்  நீதிநியாயங்களையும்  உபதேசிக்கவும்,  எஸ்றா  தன்  இருதயத்தைப்  பக்குவப்படுத்தியிருந்தான்.  (எஸ்றா  7:10)

karththarudaiya  veathaththai  aaraayavum,  athinpadi  seyyavum,  isravealilea  katta'laiga'laiyum  neethiniyaayangga'laiyum  ubatheasikkavum,  es’raa  than  iruthayaththaip  pakkuvappaduththiyirunthaan.  (es’raa  7:10)

கர்த்தருடைய  கற்பனைகளின்  வார்த்தைகளிலும்,  அவர்  இஸ்ரவேலுக்குக்  கொடுத்த  கட்டளைகளிலும்,  படித்துத்  தேறின  வேதபாரகனாகிய  எஸ்றா  என்னும்  ஆசாரியனுக்கு,  ராஜாவாகிய  அர்தசஷ்டா  கொடுத்த  சன்னதின்  நகலாவது:  (எஸ்றா  7:11)

karththarudaiya  ka’rpanaiga'lin  vaarththaiga'lilum,  avar  isravealukkuk  koduththa  katta'laiga'lilum,  padiththuth  thea’rina  veathapaaraganaagiya  es’raa  ennum  aasaariyanukku,  raajaavaagiya  arthasashdaa  koduththa  sannathin  nagalaavathu:  (es’raa  7:11)

ராஜாதிராஜாவாகிய  அர்தசஷ்டா  பரலோகத்தின்  தேவனுடைய  நியாயப்பிரமாணத்தைப்  போதிக்கிற  உத்தம  வேதபாரகனாகிய  எஸ்றா  என்னும்  ஆசாரியனுக்குப்  பூரண  சமாதானமுண்டாக  வாழ்த்தி  எழுதுகிறது  என்னவென்றால்:  (எஸ்றா  7:12)

raajaathiraajaavaagiya  arthasashdaa  paraloagaththin  theavanudaiya  niyaayappiramaa'naththaip  poathikki’ra  uththama  veathapaaraganaagiya  es’raa  ennum  aasaariyanukkup  poora'na  samaathaanamu'ndaaga  vaazhththi  ezhuthugi’rathu  ennaven’raal:  (es’raa  7:12)

நம்முடைய  ராஜ்யத்தில்  இருக்கிற  இஸ்ரவேல்  ஜனத்திலும்,  அதின்  ஆசாரியரிலும்,  லேவியரிலும்,  உன்னோடேகூட  எருசலேமுக்குப்  போக  மனப்பூர்வமாயிருக்கிற  யாவரும்  போகலாம்  என்று  நம்மாலே  உத்தரவாகிறது.  (எஸ்றா  7:13)

nammudaiya  raajyaththil  irukki’ra  israveal  janaththilum,  athin  aasaariyarilum,  leaviyarilum,  unnoadeakooda  erusaleamukkup  poaga  manappoorvamaayirukki’ra  yaavarum  poagalaam  en’ru  nammaalea  uththaravaagi’rathu.  (es’raa  7:13)

நீ  உன்  கையிலிருக்கிற  உன்  தேவனுடைய  நியாயப்பிரமாணத்தின்படி,  யூதாவையும்  எருசலேமையும்  விசாரித்து  நடத்தவும்,  (எஸ்றா  7:14)

nee  un  kaiyilirukki’ra  un  theavanudaiya  niyaayappiramaa'naththinpadi,  yoothaavaiyum  erusaleamaiyum  visaariththu  nadaththavum,  (es’raa  7:14)

ராஜாவும்  அவருடைய  மந்திரிமாரும்  எருசலேமில்  வாசம்பண்ணுகிற  இஸ்ரவேலின்  தேவனுக்கு  மனப்பூர்வமாய்க்  கொடுத்த  வெள்ளியையும்  பொன்னையும்,  (எஸ்றா  7:15)

raajaavum  avarudaiya  manthirimaarum  erusaleamil  vaasampa'n'nugi’ra  isravealin  theavanukku  manappoorvamaayk  koduththa  ve'l'liyaiyum  ponnaiyum,  (es’raa  7:15)

பாபிலோன்  சீமையெங்கும்  உனக்குக்  கிடைக்கும்  எல்லா  வெள்ளியையும்  பொன்னையும்,  உன்னுடைய  ஜனமும்  ஆசாரியரும்  எருசலேமிலுள்ள  தங்கள்  தேவனுடைய  ஆலயத்துக்கென்று  மனஉற்சாகமாய்க்  கொடுக்கும்  காணிக்கைகளையும்  நீ  கொண்டுபோகவும்,  நீ  ராஜாவினாலும்  அவருடைய  ஏழு  மந்திரிமாராலும்  அனுப்பப்படுகிறாய்.  (எஸ்றா  7:16)

baabiloan  seemaiyenggum  unakkuk  kidaikkum  ellaa  ve'l'liyaiyum  ponnaiyum,  unnudaiya  janamum  aasaariyarum  erusaleamilu'l'la  thangga'l  theavanudaiya  aalayaththukken’ru  manau’rchaagamaayk  kodukkum  kaa'nikkaiga'laiyum  nee  ko'ndupoagavum,  nee  raajaavinaalum  avarudaiya  eazhu  manthirimaaraalum  anuppappadugi’raay.  (es’raa  7:16)

ஆகையால்  அந்தத்  திரவியத்தினால்  நீ  தாமதமின்றி  காளைகளையும்,  ஆட்டுக்கடாக்களையும்,  ஆட்டுக்குட்டிகளையும்,  அவைகளுக்கடுத்த  போஜனபலிகளையும்,  பானபலிகளையும்  வாங்கி,  அவைகளை  எருசலேமிலுள்ள  உங்கள்  தேவனுடைய  ஆலயத்துப்  பலிபீடத்தின்மேல்  செலுத்துவாயாக.  (எஸ்றா  7:17)

aagaiyaal  anthath  thiraviyaththinaal  nee  thaamathamin’ri  kaa'laiga'laiyum,  aattukkadaakka'laiyum,  aattukkuttiga'laiyum,  avaiga'lukkaduththa  poajanabaliga'laiyum,  baanabaliga'laiyum  vaanggi,  avaiga'lai  erusaleamilu'l'la  ungga'l  theavanudaiya  aalayaththup  balipeedaththinmeal  seluththuvaayaaga.  (es’raa  7:17)

மீதியான  வெள்ளியையும்  பொன்னையும்  கொண்டு  செய்யவேண்டியதின்னதென்று  உனக்கும்  உன்  சகோதரருக்கும்  நலமாய்த்  தோன்றுகிறபடி  அதை  உங்கள்  தேவனுடைய  சித்தத்தின்படியே  செய்யுங்கள்.  (எஸ்றா  7:18)

meethiyaana  ve'l'liyaiyum  ponnaiyum  ko'ndu  seyyavea'ndiyathinnathen’ru  unakkum  un  sagoathararukkum  nalamaayth  thoan’rugi’rapadi  athai  ungga'l  theavanudaiya  siththaththinpadiyea  seyyungga'l.  (es’raa  7:18)

உன்  தேவனுடைய  ஆலயத்தின்  ஆராதனைக்காக  உனக்குக்  கொடுக்கப்பட்ட  பணிமுட்டுகளையும்  நீ  எருசலேமின்  தேவனுடைய  சந்நிதியில்  ஒப்புவிக்கக்கடவாய்.  (எஸ்றா  7:19)

un  theavanudaiya  aalayaththin  aaraathanaikkaaga  unakkuk  kodukkappatta  pa'nimuttuga'laiyum  nee  erusaleamin  theavanudaiya  sannithiyil  oppuvikkakkadavaay.  (es’raa  7:19)

பின்னும்  உன்  தேவனுடைய  ஆலயத்துக்கு  அவசியமாய்க்  கொடுக்கவேண்டியிருப்பதை,  நீ  ராஜாவின்  கஜானாவிலிருந்து  வாங்கிக்  கொடுப்பாயாக.  (எஸ்றா  7:20)

pinnum  un  theavanudaiya  aalayaththukku  avasiyamaayk  kodukkavea'ndiyiruppathai,  nee  raajaavin  kajaanaavilirunthu  vaanggik  koduppaayaaga.  (es’raa  7:20)

நதிக்கு  அப்புறத்திலிருக்கிற  எல்லா  கஜான்சிகளுக்கும்  அர்தசஷ்டா  என்னும்  ராஜாவாகிய  நாம்  இடுகிற  கட்டளை  என்னவென்றால்,  பரலோகத்தின்  தேவனுடைய  நியாயப்பிரமாணத்தைப்  போதிக்கும்  வேதபாரகனாகிய  எஸ்றா  என்னும்  ஆசாரியன்  நூறு  தாலந்து  வெள்ளி,  நூற்றுக்கலக்  கோதுமை,  நூற்றுக்கலத்  திராட்சரசம்,  நூற்றுக்கல  எண்ணெய்மட்டும்  உங்களைக்  கேட்பவை  எல்லாவற்றையும்,  (எஸ்றா  7:21)

nathikku  appu’raththilirukki’ra  ellaa  kajaansiga'lukkum  arthasashdaa  ennum  raajaavaagiya  naam  idugi’ra  katta'lai  ennaven’raal,  paraloagaththin  theavanudaiya  niyaayappiramaa'naththaip  poathikkum  veathapaaraganaagiya  es’raa  ennum  aasaariyan  noo’ru  thaalanthu  ve'l'li,  noot’rukkalak  koathumai,  noot’rukkalath  thiraadcharasam,  noot’rukkala  e'n'neymattum  ungga'laik  keadpavai  ellaavat’raiyum,  (es’raa  7:21)

வேண்டிய  உப்பையும்,  தாமதமில்லாமல்  கொடுக்கவும்,  (எஸ்றா  7:22)

vea'ndiya  uppaiyum,  thaamathamillaamal  kodukkavum,  (es’raa  7:22)

பரலோகத்தின்  தேவனுடைய  கற்பனையின்படியே,  எது  தேவையாயிருக்குமோ  அதுவெல்லாம்  பரலோகத்தின்  தேவனுடைய  ஆலயத்திற்கு  ஜாக்கிரதையாய்ச்  செலுத்தப்படவும்  வேண்டும்;  ராஜாவும்  அவர்  குமாரரும்  ஆளும்  ராஜ்யத்தின்மேல்  கடுங்கோபம்  வருவானேன்.  (எஸ்றா  7:23)

paraloagaththin  theavanudaiya  ka’rpanaiyinpadiyea,  ethu  theavaiyaayirukkumoa  athuvellaam  paraloagaththin  theavanudaiya  aalayaththi’rku  jaakkirathaiyaaych  seluththappadavum  vea'ndum;  raajaavum  avar  kumaararum  aa'lum  raajyaththinmeal  kadungkoabam  varuvaanean.  (es’raa  7:23)

பின்னும்  ஆசாரியரும்,  லேவியரும்,  பாடகரும்,  வாசல்  காவலாளரும்,  நிதனீமியரும்,  தேவனுடைய  ஆலயத்தின்  பணிவிடைக்காரருமான  ஒருவன்மேலும்  பகுதியாகிலும்  தீர்வையாகிலும்  ஆயமாகிலும்  சுமத்தலாகாதென்று  அவர்களைக்குறித்து  உங்களுக்கு  அறியப்படுத்துகிறோம்.  (எஸ்றா  7:24)

pinnum  aasaariyarum,  leaviyarum,  paadagarum,  vaasal  kaavalaa'larum,  nithaneemiyarum,  theavanudaiya  aalayaththin  pa'nividaikkaararumaana  oruvanmealum  paguthiyaagilum  theervaiyaagilum  aayamaagilum  sumaththalaagaathen’ru  avarga'laikku’riththu  ungga'lukku  a’riyappaduththugi’roam.  (es’raa  7:24)

பின்னும்  நதிக்கு  அப்புறத்திலிருந்து  உன்  தேவனுடைய  நியாயப்பிரமாணங்களை  அறிந்த  சகல  ஜனங்களையும்  நியாயம்  விசாரிக்கத்தக்க  துரைகளையும்,  நியாயாதிபதிகளையும்,  எஸ்றாவாகிய  நீ  உன்னிலுள்ள  உன்  தேவனுடைய  ஞானத்தின்படியே  ஏற்படுத்துவாயாக;  அந்தப்  பிரமாணங்களை  அறியாதவர்களுக்கு  அவைகளை  உபதேசிக்கவுங்கடவாய்.  (எஸ்றா  7:25)

pinnum  nathikku  appu’raththilirunthu  un  theavanudaiya  niyaayappiramaa'nangga'lai  a’rintha  sagala  janangga'laiyum  niyaayam  visaarikkaththakka  thuraiga'laiyum,  niyaayaathibathiga'laiyum,  es’raavaagiya  nee  unnilu'l'la  un  theavanudaiya  gnaanaththinpadiyea  ea’rpaduththuvaayaaga;  anthap  piramaa'nangga'lai  a’riyaathavarga'lukku  avaiga'lai  ubatheasikkavungkadavaay.  (es’raa  7:25)

உன்  தேவனுடைய  நியாயப்பிரமாணத்தின்படியேயும்,  ராஜாவினுடைய  நியாயப்பிரமாணத்தின்படியேயும்  செய்யாதவனெவனும்  உடனே  மரணத்துக்காகிலும்,  தேசத்துக்குப்  புறம்பாக்குதலுக்காகிலும்,  அபராதத்துக்காகிலும்,  காவலுக்காகிலும்  தீர்க்கப்பட்டுத்  தண்டிக்கப்படக்கடவன்  என்று  எழுதியிருந்தது.  (எஸ்றா  7:26)

un  theavanudaiya  niyaayappiramaa'naththinpadiyeayum,  raajaavinudaiya  niyaayappiramaa'naththinpadiyeayum  seyyaathavanevanum  udanea  mara'naththukkaagilum,  theasaththukkup  pu’rambaakkuthalukkaagilum,  abaraathaththukkaagilum,  kaavalukkaagilum  theerkkappattuth  tha'ndikkappadakkadavan  en’ru  ezhuthiyirunthathu.  (es’raa  7:26)

எருசலேமிலுள்ள  கர்த்தருடைய  ஆலயத்தை  அலங்கரிக்க,  இப்படிப்பட்ட  யோசனையை  ராஜாவின்  இருதயத்தில்  அருளி,  ராஜாவுக்கும்  அவருடைய  மந்திரிமார்களுக்கும்  ராஜாவின்  கைக்குள்ளான  பலத்த  எல்லா  மகாப்  பிரபுக்களுக்கும்  முன்பாக  எனக்குத்  தயவு  கிடைக்கப்பண்ணின  எங்கள்  பிதாக்களின்  தேவனாகிய  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்.  (எஸ்றா  7:27)

erusaleamilu'l'la  karththarudaiya  aalayaththai  alanggarikka,  ippadippatta  yoasanaiyai  raajaavin  iruthayaththil  aru'li,  raajaavukkum  avarudaiya  manthirimaarga'lukkum  raajaavin  kaikku'l'laana  balaththa  ellaa  mahaap  pirabukka'lukkum  munbaaga  enakkuth  thayavu  kidaikkappa'n'nina  engga'l  pithaakka'lin  theavanaagiya  karththarukku  sthoaththiram.  (es’raa  7:27)

அப்படியே  என்  தேவனாகிய  கர்த்தருடைய  கரம்  என்மேல்  இருந்ததினால்  நான்  திடன்கொண்டு,  இஸ்ரவேலில்  சில  தலைவரை  என்னோடேகூட  வரும்படி  சேர்த்துக்கொண்டேன்.  (எஸ்றா  7:28)

appadiyea  en  theavanaagiya  karththarudaiya  karam  enmeal  irunthathinaal  naan  thidanko'ndu,  isravealil  sila  thalaivarai  ennoadeakooda  varumpadi  searththukko'ndean.  (es’raa  7:28)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!