Tuesday, November 01, 2016

Es'raa 5 | எஸ்றா 5 | Ezra 5

அப்பொழுது  ஆகாய்  தீர்க்கதரிசியும்,  இத்தோவின்  குமாரனாகிய  சகரியா  என்னும்  தீர்க்கதரிசியும்,  யூதாவிலும்  எருசலேமிலுமுள்ள  யூதருக்கு  இஸ்ரவேல்  தேவனின்  நாமத்திலே  தீர்க்கதரிசனம்  சொன்னார்கள்.  (எஸ்றா  5:1)

appozhuthu  aagaay  theerkkatharisiyum,  iththoavin  kumaaranaagiya  sagariyaa  ennum  theerkkatharisiyum,  yoothaavilum  erusaleamilumu'l'la  yootharukku  israveal  theavanin  naamaththilea  theerkkatharisanam  sonnaarga'l.  (es’raa  5:1)

அப்பொழுது  செயல்தியேலின்  குமாரனாகிய  செருபாபேலும்  யோசதாக்கின்  குமாரனாகிய  யெசுவாவும்  எழும்பி,  எருசலேமிலுள்ள  தேவனுடைய  ஆலயத்தைக்  கட்டத்தொடங்கினார்கள்;  அவர்களுக்குத்  திடன்சொல்ல  தேவனுடைய  தீர்க்கதரிசிகளும்  இருந்தார்கள்.  (எஸ்றா  5:2)

appozhuthu  seyalthiyealin  kumaaranaagiya  serubaabealum  yoasathaakkin  kumaaranaagiya  yesuvaavum  ezhumbi,  erusaleamilu'l'la  theavanudaiya  aalayaththaik  kattaththodangginaarga'l;  avarga'lukkuth  thidansolla  theavanudaiya  theerkkatharisiga'lum  irunthaarga'l.  (es’raa  5:2)

அக்காலத்திலே  நதிக்கு  இப்புறத்தில்  இருக்கிற  நாடுகளுக்கு  அதிபதியாகிய  தத்னாய்  என்பவனும்,  சேத்தார்பொஸ்னாயும்,  அவர்கள்  வகையராவும்  அவர்களிடத்துக்கு  வந்து,  இந்த  ஆலயத்தைக்  கட்டவும்,  இந்த  மதிலை  எடுப்பிக்கவும்  உங்களுக்குக்  கட்டளையிட்டவன்  யார்  என்று  அவர்களைக்  கேட்டார்கள்.  (எஸ்றா  5:3)

akkaalaththilea  nathikku  ippu’raththil  irukki’ra  naaduga'lukku  athibathiyaagiya  thathnaay  enbavanum,  seaththaarbosnaayum,  avarga'l  vagaiyaraavum  avarga'lidaththukku  vanthu,  intha  aalayaththaik  kattavum,  intha  mathilai  eduppikkavum  ungga'lukkuk  katta'laiyittavan  yaar  en’ru  avarga'laik  keattaarga'l.  (es’raa  5:3)

அப்பொழுது  அதற்கு  ஏற்ற  உத்தரவையும்,  இந்த  மாளிகையைக்  கட்டுகிற  மனிதரின்  நாமங்களையும்  அவர்களுக்குச்  சொன்னோம்.  (எஸ்றா  5:4)

appozhuthu  atha’rku  eat’ra  uththaravaiyum,  intha  maa'ligaiyaik  kattugi’ra  manitharin  naamangga'laiyum  avarga'lukkuch  sonnoam.  (es’raa  5:4)

ஆனாலும்  இந்தச்  செய்தி  தரியுவினிடத்திற்குப்  போய்  எட்டுகிறவரைக்கும்  இவர்கள்  யூதருடைய  மூப்பரின்  வேலையைத்  தடுக்காதபடிக்கு,  அவர்களுடைய  தேவனின்  கண்  அவர்கள்மேல்  வைக்கப்பட்டிருந்தது;  அப்பொழுது  இதைக்குறித்து  அவர்கள்  சொன்ன  மறுமொழியைக்  கடிதத்தில்  எழுதியனுப்பினார்கள்.  (எஸ்றா  5:5)

aanaalum  inthach  seythi  thariyuvinidaththi’rkup  poay  ettugi’ravaraikkum  ivarga'l  yootharudaiya  moopparin  vealaiyaith  thadukkaathapadikku,  avarga'ludaiya  theavanin  ka'n  avarga'lmeal  vaikkappattirunthathu;  appozhuthu  ithaikku’riththu  avarga'l  sonna  ma’rumozhiyaik  kadithaththil  ezhuthiyanuppinaarga'l.  (es’raa  5:5)

நதிக்கு  இப்புறத்திலிருக்கிற  தத்னாய்  என்னும்  தேசாதிபதியும்,  சேத்தார்பொஸ்னாயும்,  நதிக்கு  இப்புறத்திலிருக்கிற  அப்பற்சாகியரான  அவன்  வகையராவும்,  ராஜாவாகிய  தரியுவுக்கு  எழுதியனுப்பின  கடிதத்தின்  நகலாவது:  (எஸ்றா  5:6)

nathikku  ippu’raththilirukki’ra  thathnaay  ennum  theasaathibathiyum,  seaththaarbosnaayum,  nathikku  ippu’raththilirukki’ra  appa’rsaagiyaraana  avan  vagaiyaraavum,  raajaavaagiya  thariyuvukku  ezhuthiyanuppina  kadithaththin  nagalaavathu:  (es’raa  5:6)

ராஜாவாகிய  தரியுவுக்குச்  சகல  சமாதானமும்  உண்டாவதாக.  (எஸ்றா  5:7)

raajaavaagiya  thariyuvukkuch  sagala  samaathaanamum  u'ndaavathaaga.  (es’raa  5:7)

நாங்கள்  யூதர்  சீமையிலுள்ள  மகா  தேவனுடைய  ஆலயத்துக்குப்  போனோம்;  அது  பெருங்கற்களால்  கட்டப்படுகிறது;  மதில்களின்மேல்  உத்திரங்கள்  பாய்ச்சப்பட்டு,  அந்த  வேலை  துரிசாய்  நடந்து,  அவர்களுக்குக்  கைகூடிவருகிறதென்பது  ராஜாவுக்குத்  தெரியலாவதாக.  (எஸ்றா  5:8)

naangga'l  yoothar  seemaiyilu'l'la  mahaa  theavanudaiya  aalayaththukkup  poanoam;  athu  perungka’rka'laal  kattappadugi’rathu;  mathilga'linmeal  uththirangga'l  paaychchappattu,  antha  vealai  thurisaay  nadanthu,  avarga'lukkuk  kaikoodivarugi’rathenbathu  raajaavukkuth  theriyalaavathaaga.  (es’raa  5:8)

அப்பொழுது  நாங்கள்  அவர்கள்  மூப்பர்களை  நோக்கி:  இந்த  ஆலயத்தைக்  கட்டவும்,  இந்த  மதிலை  எடுப்பிக்கவும்  உங்களுக்குக்  கட்டளையிட்டது  யார்  என்று  கேட்டோம்.  (எஸ்றா  5:9)

appozhuthu  naangga'l  avarga'l  moopparga'lai  noakki:  intha  aalayaththaik  kattavum,  intha  mathilai  eduppikkavum  ungga'lukkuk  katta'laiyittathu  yaar  en’ru  keattoam.  (es’raa  5:9)

இதுவுமல்லாமல்,  அவர்களுக்குள்ளே  தலைவரான  மனிதர்  இன்னாரென்று  உமக்கு  எழுதி  அறியப்படுத்தும்படி  அவர்கள்  நாமங்கள்  என்னவென்றும்  கேட்டோம்.  (எஸ்றா  5:10)

ithuvumallaamal,  avarga'lukku'l'lea  thalaivaraana  manithar  innaaren’ru  umakku  ezhuthi  a’riyappaduththumpadi  avarga'l  naamangga'l  ennaven’rum  keattoam.  (es’raa  5:10)

அவர்கள்  எங்களுக்குப்  பிரதியுத்தரமாக:  நாங்கள்  பரலோகத்துக்கும்  பூலோகத்துக்கும்  தேவனாயிருக்கிறவருக்கு  அடியாராயிருந்து,  இஸ்ரவேலின்  பெரிய  ராஜா  ஒருவன்  அநேக  வருஷங்களுக்குமுன்னே  கட்டித்தீர்த்த  இந்த  ஆலயத்தை  நாங்கள்  மறுபடியும்  கட்டுகிறோம்.  (எஸ்றா  5:11)

avarga'l  engga'lukkup  pirathiyuththaramaaga:  naangga'l  paraloagaththukkum  booloagaththukkum  theavanaayirukki’ravarukku  adiyaaraayirunthu,  isravealin  periya  raajaa  oruvan  aneaga  varushangga'lukkumunnea  kattiththeerththa  intha  aalayaththai  naangga'l  ma’rupadiyum  kattugi’roam.  (es’raa  5:11)

எங்கள்  பிதாக்கள்  பரலோகத்தின்  தேவனுக்குக்  கோபமூட்டினபடியினால்,  அவர்  இவர்களைப்  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்  என்னும்  கல்தேயன்  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  அவன்  இந்த  ஆலயத்தை  நிர்மூலமாக்கி,  ஜனத்தைப்  பாபிலோனுக்குக்  கொண்டுபோனான்.  (எஸ்றா  5:12)

engga'l  pithaakka'l  paraloagaththin  theavanukkuk  koabamoottinapadiyinaal,  avar  ivarga'laip  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaar  ennum  kaltheayan  kaiyil  oppukkoduththaar;  avan  intha  aalayaththai  nirmoolamaakki,  janaththaip  baabiloanukkuk  ko'ndupoanaan.  (es’raa  5:12)

ஆனாலும்  பாபிலோன்  ராஜாவாகிய  கோரேசின்  முதலாம்  வருஷத்திலே  கோரேஸ்  ராஜாவானவர்  தேவனுடைய  இந்த  ஆலயத்தைக்  கட்டும்படி  கட்டளையிட்டார்.  (எஸ்றா  5:13)

aanaalum  baabiloan  raajaavaagiya  koareasin  muthalaam  varushaththilea  koareas  raajaavaanavar  theavanudaiya  intha  aalayaththaik  kattumpadi  katta'laiyittaar.  (es’raa  5:13)

நேபுகாத்நேச்சார்  எருசலேமிலிருந்த  தேவாலயத்திலிருந்து  எடுத்து,  பாபிலோன்  கோவிலில்  கொண்டுபோய்  வைத்திருந்த  தேவனுடைய  ஆலயத்தின்  பொன்  வெள்ளிப்  பணிமுட்டுகளையும்  ராஜாவாகிய  கோரேஸ்  பாபிலோன்  கோவிலிலிருந்து  எடுத்து,  அவர்  தேசாதிபதியாக  நியமித்த  செஸ்பாத்சாரென்னும்  நாமமுள்ளவனிடத்தில்  அவைகளை  ஒப்புவித்து,  (எஸ்றா  5:14)

neabukaathneachchaar  erusaleamiliruntha  theavaalayaththilirunthu  eduththu,  baabiloan  koavilil  ko'ndupoay  vaiththiruntha  theavanudaiya  aalayaththin  pon  ve'l'lip  pa'nimuttuga'laiyum  raajaavaagiya  koareas  baabiloan  koavililirunthu  eduththu,  avar  theasaathibathiyaaga  niyamiththa  sesbaathsaarennum  naamamu'l'lavanidaththil  avaiga'lai  oppuviththu,  (es’raa  5:14)

அவனை  நோக்கி:  நீ  இந்தப்  பணிமுட்டுகளை  எடுத்து,  எருசலேமிலிருக்கும்  தேவாலயத்துக்குக்  கொண்டுபோ;  தேவனுடைய  ஆலயம்  அதின்  ஸ்தானத்திலே  கட்டப்படவேண்டும்  என்றார்.  (எஸ்றா  5:15)

avanai  noakki:  nee  inthap  pa'nimuttuga'lai  eduththu,  erusaleamilirukkum  theavaalayaththukkuk  ko'ndupoa;  theavanudaiya  aalayam  athin  sthaanaththilea  kattappadavea'ndum  en’raar.  (es’raa  5:15)

அப்பொழுது  அந்தச்  செஸ்பாத்சார்  வந்து,  எருசலேமிலுள்ள  தேவனுடைய  ஆலயத்தின்  அஸ்திபாரத்தைப்  போட்டான்;  அந்நாள்முதல்  இதுவரைக்கும்  அது  கட்டப்பட்டுவருகிறது;  அது  இன்னும்  முடியவில்லை  என்றார்கள்.  (எஸ்றா  5:16)

appozhuthu  anthach  sesbaathsaar  vanthu,  erusaleamilu'l'la  theavanudaiya  aalayaththin  asthibaaraththaip  poattaan;  annaa'lmuthal  ithuvaraikkum  athu  kattappattuvarugi’rathu;  athu  innum  mudiyavillai  en’raarga'l.  (es’raa  5:16)

இப்பொழுதும்  ராஜாவுக்குச்  சித்தமாயிருந்தால்,  எருசலேமிலுள்ள  தேவனுடைய  ஆலயத்தைக்  கட்ட,  ராஜாவாகிய  கோரேஸ்  கட்டளையிட்டதுண்டோ  என்று  பாபிலோனில்  இருக்கிற  ராஜாவின்  கஜானாவிலே  ஆராய்ந்து  பார்க்கவும்,  இந்த  விஷயத்தில்  ராஜாவினுடைய  சித்தம்  இன்னதென்று  எங்களுக்கு  எழுதியனுப்பவும்  உத்தரவாகவேண்டும்  என்று  எழுதியனுப்பினார்கள்.  (எஸ்றா  5:17)

ippozhuthum  raajaavukkuch  siththamaayirunthaal,  erusaleamilu'l'la  theavanudaiya  aalayaththaik  katta,  raajaavaagiya  koareas  katta'laiyittathu'ndoa  en’ru  baabiloanil  irukki’ra  raajaavin  kajaanaavilea  aaraaynthu  paarkkavum,  intha  vishayaththil  raajaavinudaiya  siththam  innathen’ru  engga'lukku  ezhuthiyanuppavum  uththaravaagavea'ndum  en’ru  ezhuthiyanuppinaarga'l.  (es’raa  5:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!