Tuesday, November 01, 2016

Es'raa 3 | எஸ்றா 3 | Ezra 3

இஸ்ரவேல்  புத்திரர்  பட்டணங்களிலே  குடியேறி,  ஏழாம்  மாதமானபோது,  ஜனங்கள்  ஏகோபித்து  எருசலேமிலே  கூடினார்கள்.  (எஸ்றா  3:1)

israveal  puththirar  patta'nangga'lilea  kudiyea’ri,  eazhaam  maathamaanapoathu,  janangga'l  eagoabiththu  erusaleamilea  koodinaarga'l.  (es’raa  3:1)

அப்பொழுது  யோசதாக்கின்  குமாரனாகிய  யெசுவாவும்,  அவன்  சகோதரராகிய  ஆசாரியரும்,  செயல்தியேலின்  குமாரனாகிய  செருபாபேலும்,  அவன்  சகோதரரும்  எழும்பி,  தேவனுடைய  மனிதனாகிய  மோசேயின்  நியாயப்பிரமாணத்தில்  எழுதியிருக்கிறபடி  சர்வாங்க  தகனங்களைப்  பலியிடும்படிக்கு,  இஸ்ரவேலுடைய  தேவனின்  பலிபீடத்தைக்  கட்டினார்கள்.  (எஸ்றா  3:2)

appozhuthu  yoasathaakkin  kumaaranaagiya  yesuvaavum,  avan  sagoathararaagiya  aasaariyarum,  seyalthiyealin  kumaaranaagiya  serubaabealum,  avan  sagoathararum  ezhumbi,  theavanudaiya  manithanaagiya  moaseayin  niyaayappiramaa'naththil  ezhuthiyirukki’rapadi  sarvaangga  thaganangga'laip  baliyidumpadikku,  isravealudaiya  theavanin  balipeedaththaik  kattinaarga'l.  (es’raa  3:2)

அவர்கள்  அத்தேசத்தின்  ஜனங்களுக்குப்  பயந்ததினால்,  பலிபீடத்தை  அதின்  ஆதாரங்களின்மேல்  ஸ்தாபித்து,  அதின்மேல்  அவர்கள்  கர்த்தருக்கு  அந்திசந்தி  சர்வாங்க  தகனபலிகளைச்  செலுத்தினார்கள்.  (எஸ்றா  3:3)

avarga'l  aththeasaththin  janangga'lukkup  bayanthathinaal,  balipeedaththai  athin  aathaarangga'linmeal  sthaabiththu,  athinmeal  avarga'l  karththarukku  anthisanthi  sarvaangga  thaganabaliga'laich  seluththinaarga'l.  (es’raa  3:3)

எழுதியிருக்கிறபடியே  அவர்கள்  கூடாரப்பண்டிகையை  ஆசரித்து,  நித்திய  நியமத்தின்படியும்  அன்றாடகக்  கணக்கின்படியும்  ஒவ்வொருநாளிலும்  பலியிட்டார்கள்.  (எஸ்றா  3:4)

ezhuthiyirukki’rapadiyea  avarga'l  koodaarappa'ndigaiyai  aasariththu,  niththiya  niyamaththinpadiyum  an’raadagak  ka'nakkinpadiyum  ovvorunaa'lilum  baliyittaarga'l.  (es’raa  3:4)

அதற்குப்பின்பு  நித்தமும்,  மாதப்பிறப்புகளிலும்,  கர்த்தருடைய  சகல  பரிசுத்த  பண்டிகைகளிலும்  செலுத்தும்  சர்வாங்க  தகனபலியையும்,  கர்த்தருக்கு  அவரவர்  செலுத்தும்  உற்சாகபலியையும்  செலுத்தினார்கள்.  (எஸ்றா  3:5)

atha’rkuppinbu  niththamum,  maathappi’rappuga'lilum,  karththarudaiya  sagala  parisuththa  pa'ndigaiga'lilum  seluththum  sarvaangga  thaganabaliyaiyum,  karththarukku  avaravar  seluththum  u’rchaagabaliyaiyum  seluththinaarga'l.  (es’raa  3:5)

ஏழாம்  மாதம்  முதல்தேதியில்  கர்த்தருக்குச்  சர்வாங்க  தகனபலிகளைச்  செலுத்தத்  தொடங்கினார்கள்;  ஆனாலும்  கர்த்தருடைய  ஆலயத்தின்  அஸ்திபாரம்  இன்னும்  போடப்படவில்லை.  (எஸ்றா  3:6)

eazhaam  maatham  muthaltheathiyil  karththarukkuch  sarvaangga  thaganabaliga'laich  seluththath  thodangginaarga'l;  aanaalum  karththarudaiya  aalayaththin  asthibaaram  innum  poadappadavillai.  (es’raa  3:6)

அப்பொழுது  பெர்சியாவின்  ராஜாவாகிய  கோரேஸ்  தங்களுக்குப்  பிறப்பித்த  உத்தரவின்படியே  அவர்கள்  கல்தச்சருக்கும்  தச்சருக்கும்  பணத்தையும்,  லீபனோனிலிருந்து  கேதுருமரங்களைச்  சமுத்திரவழியாய்  யோபாமட்டும்  கொண்டுவரச்  சீதோனியருக்கும்  தீரியருக்கும்  போஜனபானத்தையும்  எண்ணெயையும்  கொடுத்தார்கள்.  (எஸ்றா  3:7)

appozhuthu  persiyaavin  raajaavaagiya  koareas  thangga'lukkup  pi’rappiththa  uththaravinpadiyea  avarga'l  kalthachcharukkum  thachcharukkum  pa'naththaiyum,  leebanoanilirunthu  keathurumarangga'laich  samuththiravazhiyaay  yoapaamattum  ko'nduvarach  seethoaniyarukkum  theeriyarukkum  poajanabaanaththaiyum  e'n'neyaiyum  koduththaarga'l.  (es’raa  3:7)

அவர்கள்  எருசலேமிலுள்ள  தேவனுடைய  ஆலயத்திற்கு  வந்த  இரண்டாம்  வருஷம்  இரண்டாம்  மாதத்திலே,  செயல்தியேலின்  குமாரனாகிய  செருபாபேலும்,  யோசதாக்கின்  குமாரனாகிய  யெசுவாவும்,  மற்றுமுள்ள  அவர்கள்  சகோதரராகிய  ஆசாரியரும்  லேவியரும்,  சிறையிருப்பிலிருந்து  எருசலேமுக்கு  வந்த  அனைவரும்,  ஆரம்பஞ்செய்து,  இருபதுவயதுமுதல்  அதற்கு  மேற்பட்ட  லேவியரைக்  கர்த்தருடைய  ஆலயத்தின்  வேலையை  நடத்தும்படி  வைத்தார்கள்.  (எஸ்றா  3:8)

avarga'l  erusaleamilu'l'la  theavanudaiya  aalayaththi’rku  vantha  ira'ndaam  varusham  ira'ndaam  maathaththilea,  seyalthiyealin  kumaaranaagiya  serubaabealum,  yoasathaakkin  kumaaranaagiya  yesuvaavum,  mat’rumu'l'la  avarga'l  sagoathararaagiya  aasaariyarum  leaviyarum,  si’raiyiruppilirunthu  erusaleamukku  vantha  anaivarum,  aarambagnseythu,  irubathuvayathumuthal  atha’rku  mea’rpatta  leaviyaraik  karththarudaiya  aalayaththin  vealaiyai  nadaththumpadi  vaiththaarga'l.  (es’raa  3:8)

அப்படியே  தேவனுடைய  ஆலயத்தின்  வேலையைச்  செய்கிறவர்களை  நடத்தும்படி  யெசுவாவும்  அவன்  குமாரரும்  சகோதரரும்,  கத்மியேலும்  அவன்  குமாரரும்,  யூதாவின்  குமாரரும்,  எனாதாத்தின்  குமாரரும்,  அவர்கள்  சகோதரராகிய  லேவியரும்  ஒருமனப்பட்டு  நின்றார்கள்.  (எஸ்றா  3:9)

appadiyea  theavanudaiya  aalayaththin  vealaiyaich  seygi’ravarga'lai  nadaththumpadi  yesuvaavum  avan  kumaararum  sagoathararum,  kathmiyealum  avan  kumaararum,  yoothaavin  kumaararum,  enaathaaththin  kumaararum,  avarga'l  sagoathararaagiya  leaviyarum  orumanappattu  nin’raarga'l.  (es’raa  3:9)

சிற்பாசாரிகள்  கர்த்தருடைய  ஆலயத்திற்கு  அஸ்திபாரம்  போடுகிறபோது,  இஸ்ரவேல்  ராஜாவாகிய  தாவீதுடைய  கட்டளையின்படியே,  கர்த்தரைத்  துதிக்கும்படிக்கு,  வஸ்திரங்கள்  தரிக்கப்பட்டு,  பூரிகைகளை  ஊதுகிற  ஆசாரியரையும்,  தாளங்களைக்  கொட்டுகிற  ஆசாபின்  குமாரராகிய  லேவியரையும்  நிறுத்தினார்கள்.  (எஸ்றா  3:10)

si’rpaasaariga'l  karththarudaiya  aalayaththi’rku  asthibaaram  poadugi’rapoathu,  israveal  raajaavaagiya  thaaveethudaiya  katta'laiyinpadiyea,  karththaraith  thuthikkumpadikku,  vasthirangga'l  tharikkappattu,  poorigaiga'lai  oothugi’ra  aasaariyaraiyum,  thaa'langga'laik  kottugi’ra  aasaapin  kumaararaagiya  leaviyaraiyum  ni’ruththinaarga'l.  (es’raa  3:10)

கர்த்தர்  நல்லவர்,  இஸ்ரவேலின்மேல்  அவருடைய  கிருபை  என்றுமுள்ளது  என்று  அவரைப்  புகழ்ந்து  துதிக்கையில்,  மாறிமாறிப்  பாடினார்கள்;  கர்த்தரைத்  துதிக்கையில்,  ஜனங்கள்  எல்லாரும்  கர்த்தருடைய  ஆலயத்தின்  அஸ்திபாரம்  போடப்படுகிறதினிமித்தம்  மகா  கெம்பீரமாய்  ஆரவாரித்தார்கள்.  (எஸ்றா  3:11)

karththar  nallavar,  isravealinmeal  avarudaiya  kirubai  en’rumu'l'lathu  en’ru  avaraip  pugazhnthu  thuthikkaiyil,  maa’rimaa’rip  paadinaarga'l;  karththaraith  thuthikkaiyil,  janangga'l  ellaarum  karththarudaiya  aalayaththin  asthibaaram  poadappadugi’rathinimiththam  mahaa  kembeeramaay  aaravaariththaarga'l.  (es’raa  3:11)

முந்தின  ஆலயத்தைக்  கண்டிருந்த  முதிர்வயதான  ஆசாரியரிலும்,  லேவியரிலும்,  பிதாக்கள்  வம்சங்களின்  தலைவரிலும்  அநேகர்  இந்த  ஆலயத்துக்குத்  தங்கள்  கண்களுக்கு  முன்பாக  அஸ்திபாரம்  போடப்படுகிறதைக்  கண்டபோது,  மகா  சத்தமிட்டு  அழுதார்கள்;  வேறே  அநேகம்பேரோ  கெம்பீர  சந்தோஷமாய்  ஆர்ப்பரித்தார்கள்.  (எஸ்றா  3:12)

munthina  aalayaththaik  ka'ndiruntha  muthirvayathaana  aasaariyarilum,  leaviyarilum,  pithaakka'l  vamsangga'lin  thalaivarilum  aneagar  intha  aalayaththukkuth  thangga'l  ka'nga'lukku  munbaaga  asthibaaram  poadappadugi’rathaik  ka'ndapoathu,  mahaa  saththamittu  azhuthaarga'l;  vea’rea  aneagampearoa  kembeera  santhoashamaay  aarppariththaarga'l.  (es’raa  3:12)

ஜனங்கள்  மகா  கெம்பீரமாய்  ஆர்ப்பரிக்கிறதினால்  அவர்கள்  சத்தம்  வெகுதூரம்  கேட்கப்பட்டது;  ஆனாலும்  சந்தோஷ  ஆரவாரத்தின்  சத்தம்  இன்னதென்றும்,  ஜனங்களுடைய  அழுகையின்  சத்தம்  இன்னதென்றும்  பகுத்தறியக்கூடாதிருந்தது.  (எஸ்றா  3:13)

janangga'l  mahaa  kembeeramaay  aarpparikki’rathinaal  avarga'l  saththam  veguthooram  keadkappattathu;  aanaalum  santhoasha  aaravaaraththin  saththam  innathen’rum,  janangga'ludaiya  azhugaiyin  saththam  innathen’rum  paguththa’riyakkoodaathirunthathu.  (es’raa  3:13)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!