Tuesday, November 01, 2016

Es'raa 10 | எஸ்றா 10 | Ezra 10

எஸ்றா  இப்படி  விண்ணப்பம்பண்ணி,  அறிக்கையிட்டு  அழுது,  தேவனுடைய  ஆலயத்துக்கு  முன்பாகத்  தாழ  விழுந்துகிடக்கையில்,  இஸ்ரவேலில்  புருஷரும்  ஸ்திரீகளும்  பிள்ளைகளுமான  மகா  பெரிய  சபை  அவனிடத்தில்  வந்து  கூடிற்று;  ஜனங்கள்  மிகவும்  அழுதார்கள்.  (எஸ்றா  10:1)

es’raa  ippadi  vi'n'nappampa'n'ni,  a’rikkaiyittu  azhuthu,  theavanudaiya  aalayaththukku  munbaagath  thaazha  vizhunthukidakkaiyil,  isravealil  purusharum  sthireega'lum  pi'l'laiga'lumaana  mahaa  periya  sabai  avanidaththil  vanthu  koodit’ru;  janangga'l  migavum  azhuthaarga'l.  (es’raa  10:1)

அப்பொழுது  ஏலாமின்  புத்திரரில்  ஒருவனாகிய  யெகியேலின்  குமாரன்  செக்கனியா  எஸ்றாவை  நோக்கி:  நாங்கள்  தேசத்து  ஜனங்களிலுள்ள  அந்நிய  ஸ்திரீகளைச்  சேர்த்துக்கொண்டதினால்,  எங்கள்  தேவனுக்கு  விரோதமாகப்  பாவஞ்செய்தோம்;  ஆகிலும்  இப்பொழுது  இந்தக்  காரியத்திலே  இன்னும்  இஸ்ரவேலுக்காக  நம்பிக்கை  உண்டு.  (எஸ்றா  10:2)

appozhuthu  ealaamin  puththiraril  oruvanaagiya  yegiyealin  kumaaran  sekkaniyaa  es’raavai  noakki:  naangga'l  theasaththu  janangga'lilu'l'la  anniya  sthireega'laich  searththukko'ndathinaal,  engga'l  theavanukku  viroathamaagap  paavagnseythoam;  aagilum  ippozhuthu  inthak  kaariyaththilea  innum  isravealukkaaga  nambikkai  u'ndu.  (es’raa  10:2)

இப்பொழுதும்  அந்த  ஸ்திரீகள்  எல்லாரையும்,  அவர்களிடத்தில்  பிறந்தவர்களையும்,  என்  ஆண்டவனுடைய  ஆலோசனைக்கும்,  நமது  தேவனுடைய  கற்பனைக்கு  நடுங்குகிறவர்களின்  ஆலோசனைக்கும்  ஏற்றபிரகாரம்  அகற்றிப்போடுவோம்  என்று  நம்முடைய  தேவனோடே  உடன்படிக்கைப்  பண்ணக்கடவோம்;  நியாயப்பிரமாணத்தின்படியே  செய்யப்படுவதாக.  (எஸ்றா  10:3)

ippozhuthum  antha  sthireega'l  ellaaraiyum,  avarga'lidaththil  pi’ranthavarga'laiyum,  en  aa'ndavanudaiya  aaloasanaikkum,  namathu  theavanudaiya  ka’rpanaikku  nadunggugi’ravarga'lin  aaloasanaikkum  eat’rapiragaaram  agat’rippoaduvoam  en’ru  nammudaiya  theavanoadea  udanpadikkaip  pa'n'nakkadavoam;  niyaayappiramaa'naththinpadiyea  seyyappaduvathaaga.  (es’raa  10:3)

எழுந்திரும்;  இந்தக்  காரியத்தை  நடப்பிக்கிறது  உமக்கு  அடுத்தது;  நாங்களும்  உம்மோடேகூட  இருப்போம்;  நீர்  திடன்கொண்டு  இதைச்  செய்யும்  என்றான்.  (எஸ்றா  10:4)

ezhunthirum;  inthak  kaariyaththai  nadappikki’rathu  umakku  aduththathu;  naangga'lum  ummoadeakooda  iruppoam;  neer  thidanko'ndu  ithaich  seyyum  en’raan.  (es’raa  10:4)

அப்பொழுது  எஸ்றா  எழுந்திருந்து,  ஆசாரியரிலும்  லேவியரிலும்  பிரதானமானவர்களும்  இஸ்ரவேல்  அனைவரும்  இந்த  வார்த்தையின்படி  செய்யும்படிக்கு,  அவர்களை  ஆணையிடச்  சொன்னான்;  அவர்கள்  ஆணையிட்டார்கள்.  (எஸ்றா  10:5)

appozhuthu  es’raa  ezhunthirunthu,  aasaariyarilum  leaviyarilum  pirathaanamaanavarga'lum  israveal  anaivarum  intha  vaarththaiyinpadi  seyyumpadikku,  avarga'lai  aa'naiyidach  sonnaan;  avarga'l  aa'naiyittaarga'l.  (es’raa  10:5)

அதின்பின்பு  எஸ்றா  தேவனுடைய  ஆலயத்துக்கு  முன்னிருந்து  எழுந்து,  எலியாசிபின்  குமாரனாகிய  யோகனானின்  அறைக்குள்  பிரவேசித்தான்;  அங்கே  வந்தபோது,  அவன்  சிறையிருப்பிலிருந்து  வந்தவர்களுடைய  குற்றத்தினிமித்தம்  அப்பம்  புசியாமலும்  தண்ணீர்  குடியாமலும்  துக்கித்துக்கொண்டிருந்தான்.  (எஸ்றா  10:6)

athinpinbu  es’raa  theavanudaiya  aalayaththukku  munnirunthu  ezhunthu,  eliyaasibin  kumaaranaagiya  yoaganaanin  a’raikku'l  piraveasiththaan;  anggea  vanthapoathu,  avan  si’raiyiruppilirunthu  vanthavarga'ludaiya  kut’raththinimiththam  appam  pusiyaamalum  tha'n'neer  kudiyaamalum  thukkiththukko'ndirunthaan.  (es’raa  10:6)

அப்பொழுது  சிறையிருப்பிலிருந்து  வந்தவர்கள்  எல்லாரும்  எருசலேமிலே  வந்து  கூடவேண்டும்  என்றும்,  (எஸ்றா  10:7)

appozhuthu  si’raiyiruppilirunthu  vanthavarga'l  ellaarum  erusaleamilea  vanthu  koodavea'ndum  en’rum,  (es’raa  10:7)

மூன்றுநாளைக்குள்ளே  பிரபுக்கள்  மூப்பர்களுடைய  ஆலோசனையின்படியே  எவனாகிலும்  வராதேபோனால்,  அவனுடைய  பொருளெல்லாம்  ஜப்தி  செய்யப்பட்டு,  சிறையிருப்பிலிருந்து  வந்த  சபைக்கு  அவன்  புறம்பாக்கப்படுவான்  என்றும்,  யூதாவிலும்  எருசலேமிலும்  விளம்பரம்பண்ணினார்கள்.  (எஸ்றா  10:8)

moon’runaa'laikku'l'lea  pirabukka'l  moopparga'ludaiya  aaloasanaiyinpadiyea  evanaagilum  varaatheapoanaal,  avanudaiya  poru'lellaam  japthi  seyyappattu,  si’raiyiruppilirunthu  vantha  sabaikku  avan  pu’rambaakkappaduvaan  en’rum,  yoothaavilum  erusaleamilum  vi'lambarampa'n'ninaarga'l.  (es’raa  10:8)

அப்படியே  யூதா  பென்யமீன்  கோத்திரத்தார்  எல்லாரும்  மூன்று  நாளைக்குள்ளே  எருசலேமிலே  கூடினார்கள்;  அது  ஒன்பதாம்  மாதம்  இருபதாந்  தேதியாயிருந்தது;  ஜனங்கள்  எல்லாரும்  தேவனுடைய  ஆலயத்தின்  வீதியிலே  அந்தக்  காரியத்தினாலும்  அடைமழையினாலும்  நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.  (எஸ்றா  10:9)

appadiyea  yoothaa  benyameen  koaththiraththaar  ellaarum  moon’ru  naa'laikku'l'lea  erusaleamilea  koodinaarga'l;  athu  onbathaam  maatham  irubathaan  theathiyaayirunthathu;  janangga'l  ellaarum  theavanudaiya  aalayaththin  veethiyilea  anthak  kaariyaththinaalum  adaimazhaiyinaalum  nadunggikko'ndirunthaarga'l.  (es’raa  10:9)

அப்பொழுது  ஆசாரியனாகிய  எஸ்றா  எழுந்திருந்து  அவர்களை  நோக்கி:  நீங்கள்  இஸ்ரவேலின்மேலிருக்கிற  குற்றத்தை  அதிகரிக்கப்பண்ண,  மறுஜாதியான  ஸ்திரீகளை  விவாகம்பண்ணினதினால்  பாவஞ்செய்தீர்கள்.  (எஸ்றா  10:10)

appozhuthu  aasaariyanaagiya  es’raa  ezhunthirunthu  avarga'lai  noakki:  neengga'l  isravealinmealirukki’ra  kut’raththai  athigarikkappa'n'na,  ma’rujaathiyaana  sthireega'lai  vivaagampa'n'ninathinaal  paavagnseytheerga'l.  (es’raa  10:10)

இப்பொழுதும்  நீங்கள்  உங்கள்  பிதாக்களின்  தேவனாகிய  கர்த்தரிடத்தில்  அறிக்கையிட்டு,  அவருடைய  பிரியத்தின்படியே  செய்து,  தேசத்தின்  ஜனங்களையும்,  மறுஜாதியான  ஸ்திரீகளையும்  விட்டு  விலகுங்கள்  என்றான்.  (எஸ்றா  10:11)

ippozhuthum  neengga'l  ungga'l  pithaakka'lin  theavanaagiya  karththaridaththil  a’rikkaiyittu,  avarudaiya  piriyaththinpadiyea  seythu,  theasaththin  janangga'laiyum,  ma’rujaathiyaana  sthireega'laiyum  vittu  vilagungga'l  en’raan.  (es’raa  10:11)

அப்பொழுது  சபையார்  யாவரும்  மகா  சத்தத்தோடே  பிரதியுத்தரமாக:  ஆம்,  நீர்  சொன்ன  வார்த்தைகளின்படியே  செய்யவேண்டியதுதான்.  (எஸ்றா  10:12)

appozhuthu  sabaiyaar  yaavarum  mahaa  saththaththoadea  pirathiyuththaramaaga:  aam,  neer  sonna  vaarththaiga'linpadiyea  seyyavea'ndiyathuthaan.  (es’raa  10:12)

ஆனாலும்  ஜனங்கள்  திரளாயிருக்கிறார்கள்,  இது  மாரிகாலமுமாயிருக்கிறது,  இங்கே  வெளியிலே  நிற்க  எங்களாலே  கூடாது;  இது  ஒருநாள்  இரண்டுநாள்  வேலையல்ல;  இந்தக்  காரியத்திலே  கட்டளை  மீறினவர்களாகிய  நாங்கள்  அநேகர்.  (எஸ்றா  10:13)

aanaalum  janangga'l  thira'laayirukki’raarga'l,  ithu  maarikaalamumaayirukki’rathu,  inggea  ve'liyilea  ni’rka  engga'laalea  koodaathu;  ithu  orunaa'l  ira'ndunaa'l  vealaiyalla;  inthak  kaariyaththilea  katta'lai  mee’rinavarga'laagiya  naangga'l  aneagar.  (es’raa  10:13)

ஆகையால்  இதற்குச்  சபையெங்கும்  எங்கள்  பிரபுக்கள்  விசாரிப்புக்காரராக  வைக்கப்படவேண்டும்;  இந்தக்  காரியத்தினிமித்தம்  நம்முடைய  தேவனுக்கு  இருக்கிற  உக்கிரகோபம்  எங்களை  விட்டுத்  திரும்பும்படி,  எங்கள்  பட்டணங்களில்  மறுஜாதியான  ஸ்திரீகளைக்கொண்ட  அனைவரும்  ஒவ்வொரு  பட்டணத்தின்  மூப்பரோடும்  நியாயாதிபதிகளோடும்  குறித்தகாலங்களில்  வரக்கடவர்கள்  என்றார்கள்.  (எஸ்றா  10:14)

aagaiyaal  itha’rkuch  sabaiyenggum  engga'l  pirabukka'l  visaarippukkaararaaga  vaikkappadavea'ndum;  inthak  kaariyaththinimiththam  nammudaiya  theavanukku  irukki’ra  ukkirakoabam  engga'lai  vittuth  thirumbumpadi,  engga'l  patta'nangga'lil  ma’rujaathiyaana  sthireega'laikko'nda  anaivarum  ovvoru  patta'naththin  moopparoadum  niyaayaathibathiga'loadum  ku’riththakaalangga'lil  varakkadavarga'l  en’raarga'l.  (es’raa  10:14)

ஆசகேலின்  குமாரன்  யோனத்தானும்,  திக்காவின்  குமாரன்  யக்சியாவுமாத்திரம்  அதை  விசாரிக்கும்படிக்கு  வைக்கப்பட்டார்கள்;  மெசுல்லாமும்,  சப்பேதா  என்னும்  லேவியனும்  அவர்களுக்கு  உதவியாயிருந்தார்கள்.  (எஸ்றா  10:15)

aasakealin  kumaaran  yoanaththaanum,  thikkaavin  kumaaran  yaksiyaavumaaththiram  athai  visaarikkumpadikku  vaikkappattaarga'l;  mesullaamum,  sabbeathaa  ennum  leaviyanum  avarga'lukku  uthaviyaayirunthaarga'l.  (es’raa  10:15)

சிறையிருப்பிலிருந்து  வந்தவர்கள்  இந்தப்பிரகாரம்  செய்தார்கள்;  ஆசாரியனாகிய  எஸ்றாவும்,  தங்கள்  பிதாக்களுடைய  குடும்பத்தின்படியே  பேர்பேராக  அழைக்கப்பட்ட  பிதா  வம்சங்களின்  தலைவர்  அனைவரும்,  இந்தக்  காரியத்தை  விசாரிக்கும்படி,  பத்தாம்  மாதம்  முதல்தேதியிலே,  தனித்து  உட்கார்ந்து,  (எஸ்றா  10:16)

si’raiyiruppilirunthu  vanthavarga'l  inthappiragaaram  seythaarga'l;  aasaariyanaagiya  es’raavum,  thangga'l  pithaakka'ludaiya  kudumbaththinpadiyea  pearpearaaga  azhaikkappatta  pithaa  vamsangga'lin  thalaivar  anaivarum,  inthak  kaariyaththai  visaarikkumpadi,  paththaam  maatham  muthaltheathiyilea,  thaniththu  udkaarnthu,  (es’raa  10:16)

அந்நியஜாதியான  ஸ்திரீகளைக்  கொண்டவர்கள்  எல்லாருடைய  காரியத்தையும்  முதலாம்  மாதம்  முதல்தேதியிலே  விசாரித்து  முடித்தார்கள்.  (எஸ்றா  10:17)

anniyajaathiyaana  sthireega'laik  ko'ndavarga'l  ellaarudaiya  kaariyaththaiyum  muthalaam  maatham  muthaltheathiyilea  visaariththu  mudiththaarga'l.  (es’raa  10:17)

ஆசாரிய  புத்திரரில்  மறுஜாதியான  மனைவிகளைக்  கொண்டவர்களாகக்  காணப்பட்டவர்கள்  யாரென்றால்:  யோசதாக்கின்  குமாரனாகிய  யெசுவாவின்  குமாரரிலும்  அவன்  சகோதரரிலும்,  மாசெயா,  எலியேசர்,  யாரீப்,  கெதலியா  என்பவர்கள்.  (எஸ்றா  10:18)

aasaariya  puththiraril  ma’rujaathiyaana  manaiviga'laik  ko'ndavarga'laagak  kaa'nappattavarga'l  yaaren’raal:  yoasathaakkin  kumaaranaagiya  yesuvaavin  kumaararilum  avan  sagoathararilum,  maaseyaa,  eliyeasar,  yaareeb,  kethaliyaa  enbavarga'l.  (es’raa  10:18)

இவர்கள்  தங்கள்  ஸ்திரீகளைத்  தள்ளிவிடுவோம்  என்று  கையடித்துக்கொடுத்து;  தாங்கள்  குற்றவாளிகளானபடியினால்  குற்றநிவாரணபலியாக  ஒரு  ஆட்டுக்கடாவைச்  செலுத்தினார்கள்.  (எஸ்றா  10:19)

ivarga'l  thangga'l  sthireega'laith  tha'l'lividuvoam  en’ru  kaiyadiththukkoduththu;  thaangga'l  kut’ravaa'liga'laanapadiyinaal  kut’ranivaara'nabaliyaaga  oru  aattukkadaavaich  seluththinaarga'l.  (es’raa  10:19)

இம்மேரின்  புத்திரரில்  அனானியும்,  செபதியாவும்,  (எஸ்றா  10:20)

immearin  puththiraril  anaaniyum,  sebathiyaavum,  (es’raa  10:20)

ஆரீமின்  புத்திரரில்  மாசெயா,  எலியா,  செமாயா,  யெகியேல்,  உசியா  என்பவர்களும்;  (எஸ்றா  10:21)

aareemin  puththiraril  maaseyaa,  eliyaa,  semaayaa,  yegiyeal,  usiyaa  enbavarga'lum;  (es’raa  10:21)

பஸ்கூரின்  புத்திரரில்  எலியோனாய்,  மாசெயா,  இஸ்மவேல்,  நெதனெயேல்,  யோசபாத்,  எலாசா  என்பவர்களும்;  (எஸ்றா  10:22)

paskoorin  puththiraril  eliyoanaay,  maaseyaa,  ismaveal,  nethaneyeal,  yoasabaath,  elaasaa  enbavarga'lum;  (es’raa  10:22)

லேவியரில்  யோசபாத்,  சிமேயி,  கெலிதா  என்னும்  பேருமுள்ள  கெலாயா,  பெத்தகீயா,  யூதா,  எலியேசர்  என்பவர்களும்;  (எஸ்றா  10:23)

leaviyaril  yoasabaath,  simeayi,  kelithaa  ennum  pearumu'l'la  kelaayaa,  peththakeeyaa,  yoothaa,  eliyeasar  enbavarga'lum;  (es’raa  10:23)

பாடகரில்  எலியாசிபும்,  வாசல்காவலாளரில்  சல்லூம்,  தேலேம்,  ஊரி  என்பவர்களும்;  (எஸ்றா  10:24)

paadagaril  eliyaasibum,  vaasalkaavalaa'laril  salloom,  thealeam,  oori  enbavarga'lum;  (es’raa  10:24)

மற்ற  இஸ்ரவேலருக்குள்ளே  பாரோஷின்  புத்திரரில்  ரமீயா,  யெசியா,  மல்கியா,  மியாமின்,  எலெயாசார்,  மல்கிஜா,  பெனாயா  என்பவர்களும்;  (எஸ்றா  10:25)

mat’ra  isravealarukku'l'lea  paaroashin  puththiraril  rameeyaa,  yesiyaa,  malkiyaa,  miyaamin,  eleyaasaar,  malkijaa,  benaayaa  enbavarga'lum;  (es’raa  10:25)

ஏலாமின்  புத்திரரில்  மத்தனியா,  சகரியா,  யெகியேல்,  அப்தி,  யெரிமோத்,  எலியா  என்பவர்களும்;  (எஸ்றா  10:26)

ealaamin  puththiraril  maththaniyaa,  sagariyaa,  yegiyeal,  abthi,  yerimoath,  eliyaa  enbavarga'lum;  (es’raa  10:26)

சத்தூவின்  புத்திரரில்  எலியோனாய்,  எலியாசிப்,  மத்தனியா,  யெரிமோத்,  சாபாத்,  அசிசா  என்பவர்களும்;  (எஸ்றா  10:27)

saththoovin  puththiraril  eliyoanaay,  eliyaasib,  maththaniyaa,  yerimoath,  saabaath,  asisaa  enbavarga'lum;  (es’raa  10:27)

பெபாயின்  புத்திரரில்  யோகனான்,  அனனியா,  சாபாயி,  அத்லாயி  என்பவர்களும்;  (எஸ்றா  10:28)

bebaayin  puththiraril  yoaganaan,  ananiyaa,  saabaayi,  athlaayi  enbavarga'lum;  (es’raa  10:28)

பானியின்  புத்திரரில்  மெசுல்லாம்,  மல்லூக்,  அதாயா,  யாசுப்,  செயால்,  ராமோத்  என்பவர்களும்;  (எஸ்றா  10:29)

baaniyin  puththiraril  mesullaam,  mallook,  athaayaa,  yaasub,  seyaal,  raamoath  enbavarga'lum;  (es’raa  10:29)

பாகாத்மோவாபின்  புத்திரரில்  அத்னா,  கெலால்,  பெனாயா,  மாசெயா,  மத்தனியா,  பெசலெயேல்,  பின்னூயி,  மனாசே  என்பவர்களும்;  (எஸ்றா  10:30)

paahaathmoavaabin  puththiraril  athnaa,  kelaal,  benaayaa,  maaseyaa,  maththaniyaa,  besaleyeal,  binnooyi,  manaasea  enbavarga'lum;  (es’raa  10:30)

ஆரீமின்  புத்திரரில்  எலியேசர்,  இஷியா,  மல்கியா,  செமாயா,  ஷிமியோன்,  (எஸ்றா  10:31)

aareemin  puththiraril  eliyeasar,  ishiyaa,  malkiyaa,  semaayaa,  shimiyoan,  (es’raa  10:31)

பென்யமீன்,  மல்லூக்,  செமரியா  என்பவர்களும்;  (எஸ்றா  10:32)

benyameen,  mallook,  semariyaa  enbavarga'lum;  (es’raa  10:32)

ஆசூமின்  புத்திரரில்  மத்னாயி,  மத்தத்தா,  சாபாத்,  எலிபெலேத்,  எரெமாயி,  மனாசே,  சிமெயி  என்பவர்களும்;  (எஸ்றா  10:33)

aasoomin  puththiraril  mathnaayi,  maththaththaa,  saabaath,  elipeleath,  eremaayi,  manaasea,  simeyi  enbavarga'lum;  (es’raa  10:33)

பானியின்  புத்திரரில்  மாதாயி,  அம்ராம்,  ஊவேல்,  (எஸ்றா  10:34)

baaniyin  puththiraril  maathaayi,  amraam,  ooveal,  (es’raa  10:34)

பெனாயா,  பெதியா,  கெல்லூ,  (எஸ்றா  10:35)

benaayaa,  bethiyaa,  kelloo,  (es’raa  10:35)

வனியா,  மெரெமோத்,  எலெயாசீப்,  (எஸ்றா  10:36)

vaniyaa,  meremoath,  eleyaaseeb,  (es’raa  10:36)

மத்தனியா,  மதனாய்,  யாசாய்,  (எஸ்றா  10:37)

maththaniyaa,  mathanaay,  yaasaay,  (es’raa  10:37)

பானி,  பின்னூயி,  சிமெயி,  (எஸ்றா  10:38)

baani,  binnooyi,  simeyi,  (es’raa  10:38)

செலேமியா,  நாத்தான்,  அதாயா,  (எஸ்றா  10:39)

seleamiyaa,  naaththaan,  athaayaa,  (es’raa  10:39)

மக்நாத்பாயி,  சாசாயி,  சாராயி,  (எஸ்றா  10:40)

maknaathbaayi,  saasaayi,  saaraayi,  (es’raa  10:40)

அசரெயேல்,  செலேமியா,  செமரியா,  (எஸ்றா  10:41)

asareyeal,  seleamiyaa,  semariyaa,  (es’raa  10:41)

சல்லூம்,  அமரியா,  யோசேப்  என்பவர்களும்;  (எஸ்றா  10:42)

salloom,  amariyaa,  yoaseap  enbavarga'lum;  (es’raa  10:42)

நேபோவின்  புத்திரரில்  ஏயெல்,  மத்தித்தியா,  சாபாத்,  செபினா,  யதாய்,  யோவேல்,  பெனாயா  என்பவர்களுமே.  (எஸ்றா  10:43)

neaboavin  puththiraril  eayel,  maththiththiyaa,  saabaath,  sebinaa,  yathaay,  yoaveal,  benaayaa  enbavarga'lumea.  (es’raa  10:43)

இவர்கள்  எல்லாரும்  மறுஜாதியான  ஸ்திரீகளைக்  கொண்டவர்கள்;  இவர்களில்  சிலர்  கொண்டிருந்த  ஸ்திரீகளிடத்தில்  பிள்ளைகளைப்  பெற்றிருந்தார்கள்.  (எஸ்றா  10:44)

ivarga'l  ellaarum  ma’rujaathiyaana  sthireega'laik  ko'ndavarga'l;  ivarga'lil  silar  ko'ndiruntha  sthireega'lidaththil  pi'l'laiga'laip  pet’rirunthaarga'l.  (es’raa  10:44)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!