Tuesday, November 01, 2016

Es'raa 1 | எஸ்றா 1 | Ezra 1

எரேமியாவின்  வாயினாலே  கர்த்தர்  சொன்ன  வார்த்தை  நிறைவேறும்படி,  பெர்சியாவின்  ராஜாவாகிய  கோரேசுடைய  முதலாம்  வருஷத்திலே,  கர்த்தர்  பெர்சியாவின்  ராஜாவாகிய  கோரேசின்  ஆவியை  ஏவினதினாலே  அவன்:  (எஸ்றா  1:1)

ereamiyaavin  vaayinaalea  karththar  sonna  vaarththai  ni’raivea’rumpadi,  persiyaavin  raajaavaagiya  koareasudaiya  muthalaam  varushaththilea,  karththar  persiyaavin  raajaavaagiya  koareasin  aaviyai  eavinathinaalea  avan:  (es’raa  1:1)

பரலோகத்தின்  தேவனாகிய  கர்த்தர்  பூமியின்  ராஜ்யங்களையெல்லாம்  எனக்குத்  தந்தருளி,  யூதாவிலுள்ள  எருசலேமிலே  தமக்கு  ஆலயத்தைக்  கட்டும்படி  எனக்குக்  கட்டளையிட்டிருக்கிறார்.  (எஸ்றா  1:2)

paraloagaththin  theavanaagiya  karththar  boomiyin  raajyangga'laiyellaam  enakkuth  thantharu'li,  yoothaavilu'l'la  erusaleamilea  thamakku  aalayaththaik  kattumpadi  enakkuk  katta'laiyittirukki’raar.  (es’raa  1:2)

அவருடைய  ஜனங்கள்  எல்லாரிலும்  எவன்  உங்களுக்குள்  இருக்கிறானோ,  அவனோடே  அவனுடைய  தேவன்  இருப்பாராக;  அவன்  யூதாவிலுள்ள  எருசலேமுக்குப்போய்,  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தருடைய  ஆலயத்தைக்  கட்டக்கடவன்;  எருசலேமில்  வாசம்பண்ணுகிற  தேவனே  தேவன்.  (எஸ்றா  1:3)

avarudaiya  janangga'l  ellaarilum  evan  ungga'lukku'l  irukki’raanoa,  avanoadea  avanudaiya  theavan  iruppaaraaga;  avan  yoothaavilu'l'la  erusaleamukkuppoay,  isravealin  theavanaagiya  karththarudaiya  aalayaththaik  kattakkadavan;  erusaleamil  vaasampa'n'nugi’ra  theavanea  theavan.  (es’raa  1:3)

அந்த  ஜனங்களில்  மீதியாயிருக்கிறவன்  எவ்விடத்தில்  தங்கியிருக்கிறானோ,  அவ்விடத்து  ஜனங்கள்  எருசலேமிலுள்ள  தேவனுடைய  ஆலயத்துக்கென்று  அவனிடத்தில்  உற்சாகமாய்க்  காணிக்கை  கொடுத்து  அனுப்புகிறதுமன்றி,  அவனுக்குப்  பொன்  வெள்ளி  முதலிய  திரவியங்களையும்,  மிருகஜீவன்களையும்  கொடுத்து,  உதவிசெய்யவேண்டும்  என்று  பெர்சியாவின்  ராஜாவாகிய  கோரேஸ்  அறிவிக்கிறார்  என்று  தன்  ராஜ்யமெங்கும்  எழுதியனுப்பி  விளம்பரம்பண்ணுவித்தான்.  (எஸ்றா  1:4)

antha  janangga'lil  meethiyaayirukki’ravan  evvidaththil  thanggiyirukki’raanoa,  avvidaththu  janangga'l  erusaleamilu'l'la  theavanudaiya  aalayaththukken’ru  avanidaththil  u’rchaagamaayk  kaa'nikkai  koduththu  anuppugi’rathuman’ri,  avanukkup  pon  ve'l'li  muthaliya  thiraviyangga'laiyum,  mirugajeevanga'laiyum  koduththu,  uthaviseyyavea'ndum  en’ru  persiyaavin  raajaavaagiya  koareas  a’rivikki’raar  en’ru  than  raajyamenggum  ezhuthiyanuppi  vi'lambarampa'n'nuviththaan.  (es’raa  1:4)

அப்பொழுது  எருசலேமிலுள்ள  கர்த்தருடைய  ஆலயத்தைக்  கட்டுகிறதற்குப்  போகும்படி  யூதா  பென்யமீன்  வம்சங்களின்  தலைவரும்  ஆசாரியரும்  லேவியருமன்றி,  எவர்கள்  ஆவியை  தேவன்  ஏவினாரோ  அவர்கள்  எல்லாரும்  எழும்பினார்கள்.  (எஸ்றா  1:5)

appozhuthu  erusaleamilu'l'la  karththarudaiya  aalayaththaik  kattugi’ratha’rkup  poagumpadi  yoothaa  benyameen  vamsangga'lin  thalaivarum  aasaariyarum  leaviyaruman’ri,  evarga'l  aaviyai  theavan  eavinaaroa  avarga'l  ellaarum  ezhumbinaarga'l.  (es’raa  1:5)

அவர்களைச்  சுற்றிலும்  குடியிருக்கிற  யாவரும்  மனஉற்சாகமாய்க்  காணிக்கை  கொடுத்ததுமன்றி,  வெள்ளிப்  பணிமுட்டுகளையும்  பொன்னையும்  மற்ற  வஸ்துக்களையும்  மிருகஜீவன்களையும்  உச்சிதமான  பொருள்களையும்  கொடுத்து,  அவர்கள்  கைகளைத்  திடப்படுத்தினார்கள்.  (எஸ்றா  1:6)

avarga'laich  sut’rilum  kudiyirukki’ra  yaavarum  manau’rchaagamaayk  kaa'nikkai  koduththathuman’ri,  ve'l'lip  pa'nimuttuga'laiyum  ponnaiyum  mat’ra  vasthukka'laiyum  mirugajeevanga'laiyum  uchchithamaana  poru'lga'laiyum  koduththu,  avarga'l  kaiga'laith  thidappaduththinaarga'l.  (es’raa  1:6)

நேபுகாத்நேச்சார்  எருசலேமிலிருந்து  கொண்டுவந்து,  தன்  தேவனுடைய  கோவிலிலே  வைத்திருந்த  கர்த்தருடைய  ஆலயத்துப்  பணிமுட்டுகளையும்  கோரேஸ்  ராஜா  எடுத்துக்கொடுத்தான்.  (எஸ்றா  1:7)

neabukaathneachchaar  erusaleamilirunthu  ko'nduvanthu,  than  theavanudaiya  koavililea  vaiththiruntha  karththarudaiya  aalayaththup  pa'nimuttuga'laiyum  koareas  raajaa  eduththukkoduththaan.  (es’raa  1:7)

அவைகளைப்  பெர்சியாவின்  ராஜாவாகிய  கோரேஸ்  பொக்கிஷக்காரனாகிய  மித்திரேதாத்தின்  கையினால்  எடுக்கச்செய்து,  யூதாவின்  அதிபதியாகிய  சேஸ்பாத்சாரிடத்தில்  எண்ணிக்கொடுத்தான்.  (எஸ்றா  1:8)

avaiga'laip  persiyaavin  raajaavaagiya  koareas  pokkishakkaaranaagiya  miththireathaaththin  kaiyinaal  edukkachseythu,  yoothaavin  athibathiyaagiya  seasbaathsaaridaththil  e'n'nikkoduththaan.  (es’raa  1:8)

அவைகளின்  தொகையாவது:  பொன்  தட்டுகள்  முப்பது,  வெள்ளித்தாலங்கள்  ஆயிரம்,  கத்திகள்  இருபத்தொன்பது.  (எஸ்றா  1:9)

avaiga'lin  thogaiyaavathu:  pon  thattuga'l  muppathu,  ve'l'liththaalangga'l  aayiram,  kaththiga'l  irubaththonbathu.  (es’raa  1:9)

பொற்கிண்ணங்கள்  முப்பது,  வெள்ளிக்கிண்ணங்கள்  நானூற்றுப்பத்து,  மற்றப்  பணிமுட்டுகள்  ஆயிரம்.  (எஸ்றா  1:10)

po’rki'n'nangga'l  muppathu,  ve'l'likki'n'nangga'l  naanoot’ruppaththu,  mat’rap  pa'nimuttuga'l  aayiram.  (es’raa  1:10)

பொன்  வெள்ளிப்  பணிமுட்டுகளெல்லாம்  ஐயாயிரத்து  நானூறு,  இவைகளையெல்லாம்  சேஸ்பாத்சார்,  சிறையிருப்பினின்று  விடுதலைபெற்றவர்கள்  பாபிலோனிலிருந்து  எருசலேமுக்குப்  போகையில்,  எடுத்துக்கொண்டுபோனான்.  (எஸ்றா  1:11)

pon  ve'l'lip  pa'nimuttuga'lellaam  aiyaayiraththu  naanoo’ru,  ivaiga'laiyellaam  seasbaathsaar,  si’raiyiruppinin’ru  viduthalaipet’ravarga'l  baabiloanilirunthu  erusaleamukkup  poagaiyil,  eduththukko'ndupoanaan.  (es’raa  1:11)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!