Sunday, November 06, 2016

E'n'naagamam 9 | எண்ணாகமம் 9 | Numbers 9

அவர்கள்  எகிப்துதேசத்திலிருந்து  புறப்பட்ட  இரண்டாம்  வருஷம்  முதலாம்  மாதத்தில்  கர்த்தர்  சீனாய்  வனாந்தரத்தில்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  9:1)

avarga'l  egipthutheasaththilirunthu  pu’rappatta  ira'ndaam  varusham  muthalaam  maathaththil  karththar  seenaay  vanaantharaththil  moaseayai  noakki:  (e’n’naagamam  9:1)

குறித்த  காலத்தில்  இஸ்ரவேல்  புத்திரர்  பஸ்காவை  ஆசரிக்கக்கடவர்கள்.  (எண்ணாகமம்  9:2)

ku’riththa  kaalaththil  israveal  puththirar  paskaavai  aasarikkakkadavarga'l.  (e’n’naagamam  9:2)

இந்த  மாதம்  பதினாலாந்தேதி  அந்திநேரமான  வேளையாகிய  குறித்த  காலத்தில்  அதை  ஆசரிக்கக்கடவீர்கள்;  அதற்குரிய  எல்லாக்  கட்டளையின்படியேயும்  முறைமைகளின்படியேயும்  அதை  ஆசரிக்கக்கடவீர்கள்  என்றார்.  (எண்ணாகமம்  9:3)

intha  maatham  pathinaalaantheathi  anthinearamaana  vea'laiyaagiya  ku’riththa  kaalaththil  athai  aasarikkakkadaveerga'l;  atha’rkuriya  ellaak  katta'laiyinpadiyeayum  mu’raimaiga'linpadiyeayum  athai  aasarikkakkadaveerga'l  en’raar.  (e’n’naagamam  9:3)

அப்படியே  பஸ்காவை  ஆசரிக்கும்படி  மோசே  இஸ்ரவேல்  புத்திரருக்குக்  கட்டளையிட்டான்.  (எண்ணாகமம்  9:4)

appadiyea  paskaavai  aasarikkumpadi  moasea  israveal  puththirarukkuk  katta'laiyittaan.  (e’n’naagamam  9:4)

அதினால்  முதலாம்  மாதம்  பதினான்காம்  தேதி  அந்திநேரமான  வேளையில்,  சீனாய்  வனாந்தரத்தில்  பஸ்காவை  ஆசரித்தார்கள்;  கர்த்தர்  மோசேக்குக்  கட்டளையிட்டபடியெல்லாம்  இஸ்ரவேல்  புத்திரர்  செய்தார்கள்.  (எண்ணாகமம்  9:5)

athinaal  muthalaam  maatham  pathinaangaam  theathi  anthinearamaana  vea'laiyil,  seenaay  vanaantharaththil  paskaavai  aasariththaarga'l;  karththar  moaseakkuk  katta'laiyittapadiyellaam  israveal  puththirar  seythaarga'l.  (e’n’naagamam  9:5)

அந்நாளில்  சிலர்  மனித  பிரேதத்தினால்  தீட்டுப்பட்டபடியினால்  பஸ்காவை  ஆசரிக்கத்தகாதவர்களாயிருந்தார்கள்;  அவர்கள்  அந்நாளிலே  மோசேக்கும்  ஆரோனுக்கும்  முன்பாக  வந்து:  (எண்ணாகமம்  9:6)

annaa'lil  silar  manitha  pireathaththinaal  theettuppattapadiyinaal  paskaavai  aasarikkaththagaathavarga'laayirunthaarga'l;  avarga'l  annaa'lilea  moaseakkum  aaroanukkum  munbaaga  vanthu:  (e’n’naagamam  9:6)

நாங்கள்  மனித  பிரேதத்தினால்  தீட்டுப்பட்டவர்கள்;  குறித்த  காலத்தில்  இஸ்ரவேல்  புத்திரரோடேகூடக்  கர்த்தருக்குக்  காணிக்கையைச்  செலுத்தாதபடிக்கு,  நாங்கள்  விலக்கப்பட்டிருக்கவேண்டியது  என்ன  என்றார்கள்.  (எண்ணாகமம்  9:7)

naangga'l  manitha  pireathaththinaal  theettuppattavarga'l;  ku’riththa  kaalaththil  israveal  puththiraroadeakoodak  karththarukkuk  kaa'nikkaiyaich  seluththaathapadikku,  naangga'l  vilakkappattirukkavea'ndiyathu  enna  en’raarga'l.  (e’n’naagamam  9:7)

மோசே  அவர்களை  நோக்கி:  பொறுங்கள்;  கர்த்தர்  உங்களைக்குறித்துக்  கட்டளையிடுவது  என்ன  என்று  கேட்பேன்  என்றான்.  (எண்ணாகமம்  9:8)

moasea  avarga'lai  noakki:  po’rungga'l;  karththar  ungga'laikku’riththuk  katta'laiyiduvathu  enna  en’ru  keadpean  en’raan.  (e’n’naagamam  9:8)

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  9:9)

karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  9:9)

நீ  இஸ்ரவேல்  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  உங்களிலாகிலும்  உங்கள்  சந்ததியாரிலாகிலும்  ஒருவன்  பிரேதத்தினால்  தீட்டுப்பட்டாலும்,  பிரயாணமாய்த்  தூரம்போயிருந்தாலும்,  கர்த்தருக்குப்  பஸ்காவை  ஆசரிக்கவேண்டும்.  (எண்ணாகமம்  9:10)

nee  israveal  puththiraroadea  sollavea'ndiyathu  ennaven’raal:  ungga'lilaagilum  ungga'l  santhathiyaarilaagilum  oruvan  pireathaththinaal  theettuppattaalum,  pirayaa'namaayth  thoorampoayirunthaalum,  karththarukkup  paskaavai  aasarikkavea'ndum.  (e’n’naagamam  9:10)

அவர்கள்  அதை  இரண்டாம்  மாதம்  பதினாலாந்தேதி  அந்திநேரமான  வேளையில்  ஆசரித்து,  அதைப்  புளிப்பில்லாத  அப்பங்களோடும்  கசப்பான  கீரைகளோடும்  புசித்து,  (எண்ணாகமம்  9:11)

avarga'l  athai  ira'ndaam  maatham  pathinaalaantheathi  anthinearamaana  vea'laiyil  aasariththu,  athaip  pu'lippillaatha  appangga'loadum  kasappaana  keeraiga'loadum  pusiththu,  (e’n’naagamam  9:11)

விடியற்காலம்மட்டும்  அதில்  ஒன்றும்  மீதியாக  வைக்காமலும்,  அதில்  ஒரு  எலும்பையும்  முறிக்காமலும்,  பஸ்காவினுடைய  சகல  முறைமைகளின்படியும்  அதை  ஆசரிக்கக்கடவர்கள்.  (எண்ணாகமம்  9:12)

vidiya’rkaalammattum  athil  on’rum  meethiyaaga  vaikkaamalum,  athil  oru  elumbaiyum  mu’rikkaamalum,  paskaavinudaiya  sagala  mu’raimaiga'linpadiyum  athai  aasarikkakkadavarga'l.  (e’n’naagamam  9:12)

ஒருவன்  சுத்தமுள்ளவனுமாய்ப்  பிரயாணம்  போகாதவனுமாயிருந்தும்,  பஸ்காவை  ஆசரிக்காதேபோனால்,  அந்த  ஆத்துமா  குறித்த  காலத்தில்  கர்த்தரின்  பலியைச்  செலுத்தாதபடியினால்  தன்  ஜனத்தாரில்  இராமல்  அறுப்புண்டுபோவான்;  அந்த  மனிதன்  தன்  பாவத்தைச்  சுமப்பான்.  (எண்ணாகமம்  9:13)

oruvan  suththamu'l'lavanumaayp  pirayaa'nam  poagaathavanumaayirunthum,  paskaavai  aasarikkaatheapoanaal,  antha  aaththumaa  ku’riththa  kaalaththil  karththarin  baliyaich  seluththaathapadiyinaal  than  janaththaaril  iraamal  a’ruppu'ndupoavaan;  antha  manithan  than  paavaththaich  sumappaan.  (e’n’naagamam  9:13)

ஒரு  பரதேசி  உங்களிடத்திலே  தங்கி,  கர்த்தருக்குப்  பஸ்காவை  ஆசரிக்க  வேண்டுமானால்,  அவன்  அதைப்  பஸ்காவின்  கட்டளைப்படியும்  அதின்  முறைமையின்படியும்  ஆசரிக்கக்கடவன்;  பரதேசிக்கும்  சுதேசிக்கும்  ஒரே  கட்டளை  இருக்கவேண்டும்  என்று  சொல்  என்றார்.  (எண்ணாகமம்  9:14)

oru  paratheasi  ungga'lidaththilea  thanggi,  karththarukkup  paskaavai  aasarikka  vea'ndumaanaal,  avan  athaip  paskaavin  katta'laippadiyum  athin  mu’raimaiyinpadiyum  aasarikkakkadavan;  paratheasikkum  sutheasikkum  orea  katta'lai  irukkavea'ndum  en’ru  sol  en’raar.  (e’n’naagamam  9:14)

வாசஸ்தலம்  ஸ்தாபனஞ்செய்யப்பட்ட  நாளிலே,  மேகமானது  சாட்சியின்  கூடாரமாகிய  வாசஸ்தலத்தை  மூடிற்று;  சாயங்காலமானபோது,  வாசஸ்தலத்தின்மேல்  அக்கினிமயமான  ஒரு  தோற்றம்  உண்டாயிற்று;  அது  விடியற்காலமட்டும்  இருந்தது.  (எண்ணாகமம்  9:15)

vaasasthalam  sthaabanagnseyyappatta  naa'lilea,  meagamaanathu  saadchiyin  koodaaramaagiya  vaasasthalaththai  moodit’ru;  saayanggaalamaanapoathu,  vaasasthalaththinmeal  akkinimayamaana  oru  thoat’ram  u'ndaayit’ru;  athu  vidiya’rkaalamattum  irunthathu.  (e’n’naagamam  9:15)

இப்படி  நித்தமும்  இருந்தது;  பகலில்  மேகமும்,  இரவில்  அக்கினித்தோற்றமும்  அதை  மூடிக்கொண்டிருந்தது.  (எண்ணாகமம்  9:16)

ippadi  niththamum  irunthathu;  pagalil  meagamum,  iravil  akkiniththoat’ramum  athai  moodikko'ndirunthathu.  (e’n’naagamam  9:16)

மேகம்  கூடாரத்திலிருந்து  மேலே  எழும்பும்போது  இஸ்ரவேல்  புத்திரர்  பிரயாணம்பண்ணுவார்கள்;  மேகம்  தங்குமிடத்தில்  இஸ்ரவேல்  புத்திரர்  பாளயமிறங்குவார்கள்.  (எண்ணாகமம்  9:17)

meagam  koodaaraththilirunthu  mealea  ezhumbumpoathu  israveal  puththirar  pirayaa'nampa'n'nuvaarga'l;  meagam  thanggumidaththil  israveal  puththirar  paa'layami’rangguvaarga'l.  (e’n’naagamam  9:17)

கர்த்தருடைய  கட்டளையின்படியே  இஸ்ரவேல்  புத்திரர்  பிரயாணப்படுவார்கள்;  கர்த்தருடைய  கட்டளையின்படியே  பாளயமிறங்குவார்கள்;  மேகம்  வாசஸ்தலத்தின்மேல்  தங்கியிருக்கும்  நாளெல்லாம்  அவர்கள்  பாளயத்தில்  தங்கியிருப்பார்கள்.  (எண்ணாகமம்  9:18)

karththarudaiya  katta'laiyinpadiyea  israveal  puththirar  pirayaa'nappaduvaarga'l;  karththarudaiya  katta'laiyinpadiyea  paa'layami’rangguvaarga'l;  meagam  vaasasthalaththinmeal  thanggiyirukkum  naa'lellaam  avarga'l  paa'layaththil  thanggiyiruppaarga'l.  (e’n’naagamam  9:18)

மேகம்  நெடுநாள்  வாசஸ்தலத்தின்மேல்  தங்கியிருக்கும்போது,  இஸ்ரவேல்  புத்திரர்  பிரயாணப்படாமல்  கர்த்தரின்  காவலைக்  காத்துக்கொண்டிருப்பார்கள்.  (எண்ணாகமம்  9:19)

meagam  nedunaa'l  vaasasthalaththinmeal  thanggiyirukkumpoathu,  israveal  puththirar  pirayaa'nappadaamal  karththarin  kaavalaik  kaaththukko'ndiruppaarga'l.  (e’n’naagamam  9:19)

மேகம்  சிலநாள்  மாத்திரம்  வாசஸ்தலத்தின்மேல்  தங்கியிருக்கும்போது,  கர்த்தருடைய  கட்டளையின்படியே  பாளயமிறங்கியிருந்து,  கர்த்தருடைய  கட்டளையின்படியே  பிரயாணப்படுவார்கள்.  (எண்ணாகமம்  9:20)

meagam  silanaa'l  maaththiram  vaasasthalaththinmeal  thanggiyirukkumpoathu,  karththarudaiya  katta'laiyinpadiyea  paa'layami’ranggiyirunthu,  karththarudaiya  katta'laiyinpadiyea  pirayaa'nappaduvaarga'l.  (e’n’naagamam  9:20)

மேகம்  சாயங்காலந்தொடங்கி  விடியற்காலமட்டும்  இருந்து,  விடியற்காலத்தில்  உயர  எழும்பும்போது,  உடனே  பிரயாணப்படுவார்கள்;  பகலிலாகிலும்  இரவிலாகிலும்  மேகம்  எழும்பும்போது  பிரயாணப்படுவார்கள்.  (எண்ணாகமம்  9:21)

meagam  saayanggaalanthodanggi  vidiya’rkaalamattum  irunthu,  vidiya’rkaalaththil  uyara  ezhumbumpoathu,  udanea  pirayaa'nappaduvaarga'l;  pagalilaagilum  iravilaagilum  meagam  ezhumbumpoathu  pirayaa'nappaduvaarga'l.  (e’n’naagamam  9:21)

மேகமானது  இரண்டுநாளாவது  ஒரு  மாதமாவது  ஒரு  வருஷமாவது  வாசஸ்தலத்தின்மேல்  தங்கியிருக்கும்போது,  இஸ்ரவேல்  புத்திரர்  பிரயாணம்பண்ணாமல்  பாளயமிறங்கியிருப்பார்கள்;  அது  உயர  எழும்பும்போதோ  பிரயாணப்படுவார்கள்.  (எண்ணாகமம்  9:22)

meagamaanathu  ira'ndunaa'laavathu  oru  maathamaavathu  oru  varushamaavathu  vaasasthalaththinmeal  thanggiyirukkumpoathu,  israveal  puththirar  pirayaa'nampa'n'naamal  paa'layami’ranggiyiruppaarga'l;  athu  uyara  ezhumbumpoathoa  pirayaa'nappaduvaarga'l.  (e’n’naagamam  9:22)

கர்த்தருடைய  கட்டளையின்படியே  பாளயமிறங்குவார்கள்;  கர்த்தருடைய  கட்டளையின்படியே  பிரயாணம்பண்ணுவார்கள்;  கர்த்தர்  மோசேயைக்கொண்டு  கட்டளையிடுகிறபடியே  கர்த்தருடைய  காவலைக்  காத்துக்கொள்வார்கள்.  (எண்ணாகமம்  9:23)

karththarudaiya  katta'laiyinpadiyea  paa'layami’rangguvaarga'l;  karththarudaiya  katta'laiyinpadiyea  pirayaa'nampa'n'nuvaarga'l;  karththar  moaseayaikko'ndu  katta'laiyidugi’rapadiyea  karththarudaiya  kaavalaik  kaaththukko'lvaarga'l.  (e’n’naagamam  9:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!