Sunday, November 06, 2016

E'n'naagamam 6 | எண்ணாகமம் 6 | Numbers 6

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  6:1)

karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  6:1)

நீ  இஸ்ரவேல்  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  புருஷனாகிலும்  ஸ்திரீயாகிலும்  கர்த்தருக்கென்று  விரதம்  பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி  நசரேய  விரதமாகிய  ஒரு  விசேஷித்த  பொருத்தனையைப்  பண்ணினால்,  (எண்ணாகமம்  6:2)

nee  israveal  puththiraroadea  sollavea'ndiyathu  ennaven’raal:  purushanaagilum  sthireeyaagilum  karththarukken’ru  viratham  pa'n'nikko'ndavarga'laayirukkumpadi  nasareaya  virathamaagiya  oru  viseashiththa  poruththanaiyaip  pa'n'ninaal,  (e’n’naagamam  6:2)

அப்படிப்பட்டவன்  திராட்சரசத்தையும்  மதுபானத்தையும்  விலக்கக்கடவன்;  அவன்  திராட்சரசத்தின்  காடியையும்  மற்ற  மதுபானத்தின்  காடியையும்,  திராட்சரசத்தினால்  செய்த  எவ்விதமான  பானத்தையும்  குடியாமலும்,  திராட்சப்பழங்களையாவது  திராட்ச  வற்றல்களையாவது  புசியாமலும்,  (எண்ணாகமம்  6:3)

appadippattavan  thiraadcharasaththaiyum  mathubaanaththaiyum  vilakkakkadavan;  avan  thiraadcharasaththin  kaadiyaiyum  mat’ra  mathubaanaththin  kaadiyaiyum,  thiraadcharasaththinaal  seytha  evvithamaana  baanaththaiyum  kudiyaamalum,  thiraadchappazhangga'laiyaavathu  thiraadcha  vat’ralga'laiyaavathu  pusiyaamalum,  (e’n’naagamam  6:3)

தான்  நசரேயனாயிருக்கும்  நாளெல்லாம்  திராட்சச்செடி  விதைமுதல்  தோல்வரையிலுள்ளவைகளினால்  செய்யப்பட்ட  யாதொன்றையும்  புசியாமலும்  இருக்கக்கடவன்.  (எண்ணாகமம்  6:4)

thaan  nasareayanaayirukkum  naa'lellaam  thiraadchachsedi  vithaimuthal  thoalvaraiyilu'l'lavaiga'linaal  seyyappatta  yaathon’raiyum  pusiyaamalum  irukkakkadavan.  (e’n’naagamam  6:4)

அவன்  நசரேய  விரதங்காக்கும்  நாளெல்லாம்  சவரகன்  கத்தி  அவன்  தலையின்மேல்  படலாகாது;  அவன்  கர்த்தருக்கென்று  விரதங்காக்கும்  காலம்  நிறைவேறுமளவும்  பரிசுத்தமாயிருந்து,  தன்  தலைமயிரை  வளரவிடக்கடவன்.  (எண்ணாகமம்  6:5)

avan  nasareaya  virathangkaakkum  naa'lellaam  savaragan  kaththi  avan  thalaiyinmeal  padalaagaathu;  avan  karththarukken’ru  virathangkaakkum  kaalam  ni’raivea’ruma'lavum  parisuththamaayirunthu,  than  thalaimayirai  va'laravidakkadavan.  (e’n’naagamam  6:5)

அவன்  கர்த்தருக்கென்று  விரதங்காக்கும்  நாளெல்லாம்  யாதொரு  பிரேதத்தண்டையில்  போகக்கூடாது.  (எண்ணாகமம்  6:6)

avan  karththarukken’ru  virathangkaakkum  naa'lellaam  yaathoru  pireathaththa'ndaiyil  poagakkoodaathu.  (e’n’naagamam  6:6)

அவன்  தன்  தேவனுக்கென்று  செய்த  நசரேய  விரதம்  அவன்  தலைமேல்  இருக்கிறபடியால்,  மரணமடைந்த  தன்  தகப்பனாலாகிலும்  தாயினாலாகிலும்  சகோதரனாலாகிலும்  சகோதரியினாலாகிலும்  தன்னைத்  தீட்டுப்படுத்தலாகாது.  (எண்ணாகமம்  6:7)

avan  than  theavanukken’ru  seytha  nasareaya  viratham  avan  thalaimeal  irukki’rapadiyaal,  mara'namadaintha  than  thagappanaalaagilum  thaayinaalaagilum  sagoatharanaalaagilum  sagoathariyinaalaagilum  thannaith  theettuppaduththalaagaathu.  (e’n’naagamam  6:7)

அவன்  நசரேயனாயிருக்கும்  நாளெல்லாம்  கர்த்தருக்குப்  பரிசுத்தமாயிருப்பான்.  (எண்ணாகமம்  6:8)

avan  nasareayanaayirukkum  naa'lellaam  karththarukkup  parisuththamaayiruppaan.  (e’n’naagamam  6:8)

அவனண்டையிலே  ஒருவன்  சடுதியில்  மரணமடைந்ததினால்,  நசரேய  விரதமுள்ள  அவனுடைய  தலை  தீட்டுப்பட்டதேயாகில்,  அவன்  தன்  சுத்திகரிப்பின்  நாளாகிய  ஏழாம்  நாளில்  தன்  தலைமயிரைச்  சிரைத்துக்கொண்டு,  (எண்ணாகமம்  6:9)

avana'ndaiyilea  oruvan  saduthiyil  mara'namadainthathinaal,  nasareaya  virathamu'l'la  avanudaiya  thalai  theettuppattatheayaagil,  avan  than  suththigarippin  naa'laagiya  eazhaam  naa'lil  than  thalaimayiraich  siraiththukko'ndu,  (e’n’naagamam  6:9)

எட்டாம்  நாளில்  இரண்டு  காட்டுப்புறாக்களையாவது  இரண்டு  புறாக்குஞ்சுகளையாவது  ஆசரிப்புக்  கூடாரவாசலில்  ஆசாரியனிடத்தில்  கொண்டுவரக்கடவன்.  (எண்ணாகமம்  6:10)

ettaam  naa'lil  ira'ndu  kaattuppu’raakka'laiyaavathu  ira'ndu  pu’raakkugnchuga'laiyaavathu  aasarippuk  koodaaravaasalil  aasaariyanidaththil  ko'nduvarakkadavan.  (e’n’naagamam  6:10)

அப்பொழுது  ஆசாரியன்  ஒன்றைப்  பாவநிவாரணபலியாகவும்,  மற்றொன்றைச்  சர்வாங்க  தகனபலியாகவும்  செலுத்தி,  பிணத்தினால்  அவனுக்கு  உண்டான  தீட்டை  நிவிர்த்திசெய்து,  அவன்  தலையை  அந்நாளில்  பரிசுத்தப்படுத்துவானாக.  (எண்ணாகமம்  6:11)

appozhuthu  aasaariyan  on’raip  paavanivaara'nabaliyaagavum,  mat’ron’raich  sarvaangga  thaganabaliyaagavum  seluththi,  pi'naththinaal  avanukku  u'ndaana  theettai  nivirththiseythu,  avan  thalaiyai  annaa'lil  parisuththappaduththuvaanaaga.  (e’n’naagamam  6:11)

அவன்  திரும்பவும்  தன்  விரதநாட்களைக்  கர்த்தருக்கென்று  காத்து,  ஒரு  வருஷத்து  ஆட்டுக்குட்டியைக்  குற்றநிவாரணபலியாகக்  கொண்டுவரக்கடவன்;  அவனுடைய  நசரேய  விரதம்  தீட்டுப்பட்டதினால்  சென்ற  நாட்கள்  விருதாவாகும்.  (எண்ணாகமம்  6:12)

avan  thirumbavum  than  virathanaadka'laik  karththarukken’ru  kaaththu,  oru  varushaththu  aattukkuttiyaik  kut’ranivaara'nabaliyaagak  ko'nduvarakkadavan;  avanudaiya  nasareaya  viratham  theettuppattathinaal  sen’ra  naadka'l  viruthaavaagum.  (e’n’naagamam  6:12)

நசரேயனுக்குரிய  பிரமாணமாவது:  அவன்  விரதங்காக்கும்  நாட்கள்  நிறைவேறின  அன்றே,  அவன்  ஆசரிப்புக்  கூடாரவாசலிலே  வந்து,  (எண்ணாகமம்  6:13)

nasareayanukkuriya  piramaa'namaavathu:  avan  virathangkaakkum  naadka'l  ni’raivea’rina  an’rea,  avan  aasarippuk  koodaaravaasalilea  vanthu,  (e’n’naagamam  6:13)

சர்வாங்க  தகனபலியாக  ஒரு  வருஷத்து  பழுதற்ற  ஒரு  ஆட்டுக்குட்டியையும்,  பாவநிவாரணபலியாக  ஒரு  வருஷத்து  பழுதற்ற  ஒரு  பெண்ணாட்டுக்குட்டியையும்,  சமாதானபலியாக  பழுதற்ற  ஒரு  ஆட்டுக்கடாவையும்,  (எண்ணாகமம்  6:14)

sarvaangga  thaganabaliyaaga  oru  varushaththu  pazhuthat’ra  oru  aattukkuttiyaiyum,  paavanivaara'nabaliyaaga  oru  varushaththu  pazhuthat’ra  oru  pe'n'naattukkuttiyaiyum,  samaathaanabaliyaaga  pazhuthat’ra  oru  aattukkadaavaiyum,  (e’n’naagamam  6:14)

ஒரு  கூடையில்  எண்ணெயிலே  பிசைந்த  புளிப்பில்லாத  மெல்லிய  மாவினால்  செய்த  அதிரசங்களையும்,  எண்ணெய்  தடவப்பட்ட  புளிப்பில்லாத  அடைகளையும்,  அவைகளுக்கு  அடுத்த  போஜனபலியையும்,  பானபலிகளையும்  கர்த்தருக்குத்  தன்  காணிக்கையாகச்  செலுத்தக்கடவன்.  (எண்ணாகமம்  6:15)

oru  koodaiyil  e'n'neyilea  pisaintha  pu'lippillaatha  melliya  maavinaal  seytha  athirasangga'laiyum,  e'n'ney  thadavappatta  pu'lippillaatha  adaiga'laiyum,  avaiga'lukku  aduththa  poajanabaliyaiyum,  baanabaliga'laiyum  karththarukkuth  than  kaa'nikkaiyaagach  seluththakkadavan.  (e’n’naagamam  6:15)

அவைகளை  ஆசாரியன்  கர்த்தருடைய  சந்நிதியில்  கொண்டுவந்து,  அவனுடைய  பாவநிவாரண  பலியையும்  அவனுடைய  சர்வாங்க  தகனபலியையும்  செலுத்தி,  (எண்ணாகமம்  6:16)

avaiga'lai  aasaariyan  karththarudaiya  sannithiyil  ko'nduvanthu,  avanudaiya  paavanivaara'na  baliyaiyum  avanudaiya  sarvaangga  thaganabaliyaiyum  seluththi,  (e’n’naagamam  6:16)

ஆட்டுக்கடாவைக்  கூடையிலிருக்கும்  புளிப்பில்லாத  அப்பங்களோடுங்கூடக்  கர்த்தருக்குச்  சமாதான  பலியாகச்  செலுத்தி,  அவனுடைய  போஜனபலியையும்  பானபலியையும்  படைப்பானாக.  (எண்ணாகமம்  6:17)

aattukkadaavaik  koodaiyilirukkum  pu'lippillaatha  appangga'loadungkoodak  karththarukkuch  samaathaana  baliyaagach  seluththi,  avanudaiya  poajanabaliyaiyum  baanabaliyaiyum  padaippaanaaga.  (e’n’naagamam  6:17)

அப்பொழுது  நசரேயன்  ஆசரிப்புக்  கூடாரவாசலிலே,  பொருத்தனை  செய்யப்பட்ட  தன்  தலையைச்  சிரைத்து,  பொருத்தனை  செய்யப்பட்ட  தன்  தலைமயிரை  எடுத்து,  சமாதானபலியின்கீழ்  எரிகிற  அக்கினியில்  போடக்கடவன்.  (எண்ணாகமம்  6:18)

appozhuthu  nasareayan  aasarippuk  koodaaravaasalilea,  poruththanai  seyyappatta  than  thalaiyaich  siraiththu,  poruththanai  seyyappatta  than  thalaimayirai  eduththu,  samaathaanabaliyinkeezh  erigi’ra  akkiniyil  poadakkadavan.  (e’n’naagamam  6:18)

நசரேயன்  பொருத்தனை  செய்யப்பட்ட  தன்  தலைமயிரைச்  சிரைத்துக்கொண்டபின்பு,  ஆசாரியன்  ஆட்டுக்கடாவினுடைய  வேவிக்கப்பட்ட  ஒரு  முன்னந்தொடையையும்,  கூடையில்  இருக்கிறவைகளிலே  புளிப்பில்லாத  ஒரு  அதிரசத்தையும்  புளிப்பில்லாத  ஒரு  அடையையும்  எடுத்து,  அவனுடைய  உள்ளங்கைகளில்  வைத்து,  (எண்ணாகமம்  6:19)

nasareayan  poruththanai  seyyappatta  than  thalaimayiraich  siraiththukko'ndapinbu,  aasaariyan  aattukkadaavinudaiya  veavikkappatta  oru  munnanthodaiyaiyum,  koodaiyil  irukki’ravaiga'lilea  pu'lippillaatha  oru  athirasaththaiyum  pu'lippillaatha  oru  adaiyaiyum  eduththu,  avanudaiya  u'l'langkaiga'lil  vaiththu,  (e’n’naagamam  6:19)

அவைகளைக்  கர்த்தருடைய  சந்நிதியில்  அசைவாட்டக்கடவன்;  அது  அசைவாட்டப்பட்ட  மார்க்கண்டத்தோடும்,  ஏறெடுத்துப்  படைக்கப்பட்ட  முன்னந்தொடையோடும்,  ஆசாரியனைச்  சேரும்;  அது  பரிசுத்தமானது.  பின்பு  நசரேயன்  திராட்சரசம்  குடிக்கலாம்.  (எண்ணாகமம்  6:20)

avaiga'laik  karththarudaiya  sannithiyil  asaivaattakkadavan;  athu  asaivaattappatta  maarkka'ndaththoadum,  ea’reduththup  padaikkappatta  munnanthodaiyoadum,  aasaariyanaich  searum;  athu  parisuththamaanathu.  pinbu  nasareayan  thiraadcharasam  kudikkalaam.  (e’n’naagamam  6:20)

பொருத்தனைபண்ணின  நசரேயனுக்கும்,  அவன்  தன்  கைக்கு  உதவுகிறதையல்லாமல்,  தன்  நசரேய  விரதத்தினிமித்தம்  கர்த்தருக்குச்  செலுத்தும்  காணிக்கைக்கும்  அடுத்த  பிரமாணம்  இதுவே.  அவன்  செய்த  பொருத்தனையின்படியே  தன்  பொருத்தனையின்  பிரமாணத்துக்கேற்க  செய்து  தீரவேண்டும்  என்று  சொல்  என்றார்.  (எண்ணாகமம்  6:21)

poruththanaipa'n'nina  nasareayanukkum,  avan  than  kaikku  uthavugi’rathaiyallaamal,  than  nasareaya  virathaththinimiththam  karththarukkuch  seluththum  kaa'nikkaikkum  aduththa  piramaa'nam  ithuvea.  avan  seytha  poruththanaiyinpadiyea  than  poruththanaiyin  piramaa'naththukkea’rka  seythu  theeravea'ndum  en’ru  sol  en’raar.  (e’n’naagamam  6:21)

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  6:22)

pinnum  karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  6:22)

நீ  ஆரோனோடும்  அவன்  குமாரரோடும்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  நீங்கள்  இஸ்ரவேல்  புத்திரரை  ஆசீர்வதிக்கும்போது,  அவர்களைப்  பார்த்துச்  சொல்லவேண்டியதாவது:  (எண்ணாகமம்  6:23)

nee  aaroanoadum  avan  kumaararoadum  sollavea'ndiyathu  ennaven’raal:  neengga'l  israveal  puththirarai  aaseervathikkumpoathu,  avarga'laip  paarththuch  sollavea'ndiyathaavathu:  (e’n’naagamam  6:23)

கர்த்தர்  உன்னை  ஆசீர்வதித்து,  உன்னைக்  காக்கக்கடவர்.  (எண்ணாகமம்  6:24)

karththar  unnai  aaseervathiththu,  unnaik  kaakkakkadavar.  (e’n’naagamam  6:24)

கர்த்தர்  தம்முடைய  முகத்தை  உன்மேல்  பிரகாசிக்கப்பண்ணி,  உன்மேல்  கிருபையாயிருக்கக்கடவர்.  (எண்ணாகமம்  6:25)

karththar  thammudaiya  mugaththai  unmeal  piragaasikkappa'n'ni,  unmeal  kirubaiyaayirukkakkadavar.  (e’n’naagamam  6:25)

கர்த்தர்  தம்முடைய  முகத்தை  உன்மேல்  பிரசன்னமாக்கி,  உனக்குச்  சமாதானம்  கட்டளையிடக்கடவர்  என்பதே.  (எண்ணாகமம்  6:26)

karththar  thammudaiya  mugaththai  unmeal  pirasannamaakki,  unakkuch  samaathaanam  katta'laiyidakkadavar  enbathea.  (e’n’naagamam  6:26)

இவ்விதமாய்  அவர்கள்  என்  நாமத்தை  இஸ்ரவேல்  புத்திரர்மேல்  கூறக்கடவர்கள்;  அப்பொழுது  நான்  அவர்களை  ஆசீர்வதிப்பேன்  என்று  சொல்  என்றார்.  (எண்ணாகமம்  6:27)

ivvithamaay  avarga'l  en  naamaththai  israveal  puththirarmeal  koo’rakkadavarga'l;  appozhuthu  naan  avarga'lai  aaseervathippean  en’ru  sol  en’raar.  (e’n’naagamam  6:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!