Monday, November 07, 2016

E'n'naagamam 36 | எண்ணாகமம் 36 | Numbers 36


யோசேப்பின்  குமாரனுடைய  வம்சத்தாரில்  மனாசேயின்  குமாரனாகிய  மாகீருக்குப்  பிறந்த  கீலேயாத்தின்  வம்ச  பிதாக்களான  தலைவர்  சேர்ந்து,  மோசேக்கும்  இஸ்ரவேல்  புத்திரருடைய  பிதாக்களில்  தலைவராகிய  பிரபுக்களுக்கும்  முன்பாக  வந்து,  அவர்களை  நோக்கி:  (எண்ணாகமம்  36:1)

yoaseappin  kumaaranudaiya  vamsaththaaril  manaaseayin  kumaaranaagiya  maakeerukkup  pi’rantha  keeleayaaththin  vamsa  pithaakka'laana  thalaivar  searnthu,  moaseakkum  israveal  puththirarudaiya  pithaakka'lil  thalaivaraagiya  pirabukka'lukkum  munbaaga  vanthu,  avarga'lai  noakki:  (e’n’naagamam  36:1)

சீட்டுப்போட்டு,  தேசத்தை  இஸ்ரவேல்  புத்திரருக்குச்  சுதந்தரமாகக்  கொடுக்கும்படி  எங்கள்  ஆண்டவனுக்குக்  கர்த்தர்  கட்டளையிட்டாரே;  அன்றியும்,  எங்கள்  சகோதரனாகிய  செலொப்பியாத்தின்  சுதந்தரத்தை  அவன்  குமாரத்திகளுக்குக்  கொடுக்கவேண்டும்  என்றும்  எங்கள்  ஆண்டவனுக்குக்  கர்த்தராலே  கட்டளையிடப்பட்டதே.  (எண்ணாகமம்  36:2)

seettuppoattu,  theasaththai  israveal  puththirarukkuch  suthantharamaagak  kodukkumpadi  engga'l  aa'ndavanukkuk  karththar  katta'laiyittaarea;  an’riyum,  engga'l  sagoatharanaagiya  seloppiyaaththin  suthantharaththai  avan  kumaaraththiga'lukkuk  kodukkavea'ndum  en’rum  engga'l  aa'ndavanukkuk  karththaraalea  katta'laiyidappattathea.  (e’n’naagamam  36:2)

இப்படியிருக்க,  இவர்கள்  இஸ்ரவேல்  புத்திரருடைய  வேறொரு  கோத்திரத்தின்  புத்திரருக்கு  மனைவிகளானால்,  அந்தக்  குமாரத்திகளுடைய  சுதந்தரம்  எங்கள்  பிதாக்களுடைய  சுதந்தரத்திலிருந்து  நீங்கி,  அவர்கள்  உட்படுகிற  கோத்திரத்தின்  சுதந்தரத்தோடே  சேர்ந்துபோகும்;  இப்படி  எங்கள்  சுதந்தரத்துக்குச்  சீட்டினால்  விழுந்த  பங்கில்  இராமல்  அற்றுப்போகுமே.  (எண்ணாகமம்  36:3)

ippadiyirukka,  ivarga'l  israveal  puththirarudaiya  vea’roru  koaththiraththin  puththirarukku  manaiviga'laanaal,  anthak  kumaaraththiga'ludaiya  suthantharam  engga'l  pithaakka'ludaiya  suthantharaththilirunthu  neenggi,  avarga'l  udpadugi’ra  koaththiraththin  suthantharaththoadea  searnthupoagum;  ippadi  engga'l  suthantharaththukkuch  seettinaal  vizhuntha  panggil  iraamal  at’ruppoagumea.  (e’n’naagamam  36:3)

இஸ்ரவேல்  புத்திரருக்கு  யூபிலி  வருஷம்  வந்தாலும்,  அவர்களுடைய  சுதந்தரம்  அவர்கள்  உட்பட்டுப்போன  கோத்திரத்தின்  சுதந்தரத்தோடே  சேர்ந்துபோகும்;  இப்படி  எங்கள்  பிதாக்களுடைய  கோத்திரத்தின்  சுதந்தரத்திலிருந்து  அது  நீங்கிப்போகுமே  என்றார்கள்.  (எண்ணாகமம்  36:4)

israveal  puththirarukku  yoobili  varusham  vanthaalum,  avarga'ludaiya  suthantharam  avarga'l  udpattuppoana  koaththiraththin  suthantharaththoadea  searnthupoagum;  ippadi  engga'l  pithaakka'ludaiya  koaththiraththin  suthantharaththilirunthu  athu  neenggippoagumea  en’raarga'l.  (e’n’naagamam  36:4)

அப்பொழுது  மோசே  கர்த்தருடைய  கட்டளையின்படியே  இஸ்ரவேல்  புத்திரரை  நோக்கி:  யோசேப்பு  புத்திரரின்  கோத்திரத்தார்  சொல்லுகிறது  சரியே.  (எண்ணாகமம்  36:5)

appozhuthu  moasea  karththarudaiya  katta'laiyinpadiyea  israveal  puththirarai  noakki:  yoaseappu  puththirarin  koaththiraththaar  sollugi’rathu  sariyea.  (e’n’naagamam  36:5)

கர்த்தர்  செலொப்பியாத்தின்  குமாரத்திகளைக்குறித்த  காரியத்தில்  கட்டளையிடுகிறதாவது:  அவர்கள்  தங்களுக்கு  இஷ்டமானவர்களை  விவாகஞ்செய்யலாம்;  ஆனாலும்,  தங்கள்  பிதாவின்  கோத்திர  வம்சத்தாரில்மாத்திரம்  அவர்கள்  விவாகஞ்செய்யவேண்டும்.  (எண்ணாகமம்  36:6)

karththar  seloppiyaaththin  kumaaraththiga'laikku’riththa  kaariyaththil  katta'laiyidugi’rathaavathu:  avarga'l  thangga'lukku  ishdamaanavarga'lai  vivaagagnseyyalaam;  aanaalum,  thangga'l  pithaavin  koaththira  vamsaththaarilmaaththiram  avarga'l  vivaagagnseyyavea'ndum.  (e’n’naagamam  36:6)

இப்படியே  இஸ்ரவேல்  புத்திரரின்  சுதந்தரம்  ஒரு  கோத்திரத்தைவிட்டு,  வேறு  கோத்திரத்துக்குப்  போகாதிருக்கும்;  இஸ்ரவேல்  புத்திரர்  அவரவர்  தங்கள்தங்கள்  பிதாக்களுடைய  கோத்திரத்தின்  சுதந்தரத்திலே  நிலைகொண்டிருக்க  வேண்டும்.  (எண்ணாகமம்  36:7)

ippadiyea  israveal  puththirarin  suthantharam  oru  koaththiraththaivittu,  vea’ru  koaththiraththukkup  poagaathirukkum;  israveal  puththirar  avaravar  thangga'lthangga'l  pithaakka'ludaiya  koaththiraththin  suthantharaththilea  nilaiko'ndirukka  vea'ndum.  (e’n’naagamam  36:7)

இஸ்ரவேல்  புத்திரர்  அவரவர்  தங்கள்தங்கள்  பிதாக்களின்  சுதந்தரத்தை  அநுபவிக்கும்படி,  இஸ்ரவேல்  புத்திரருடைய  ஒரு  கோத்திரத்திலே  சுதந்தரம்  அடைந்திருக்கிற  எந்தக்  குமாரத்தியும்  தன்  பிதாவின்  கோத்திர  வம்சத்தாரில்  ஒருவனுக்கு  மனைவியாகவேண்டும்.  (எண்ணாகமம்  36:8)

israveal  puththirar  avaravar  thangga'lthangga'l  pithaakka'lin  suthantharaththai  anubavikkumpadi,  israveal  puththirarudaiya  oru  koaththiraththilea  suthantharam  adainthirukki’ra  enthak  kumaaraththiyum  than  pithaavin  koaththira  vamsaththaaril  oruvanukku  manaiviyaagavea'ndum.  (e’n’naagamam  36:8)

சுதந்தரமானது  ஒரு  கோத்திரத்தைவிட்டு  வேறொரு  கோத்திரத்தைச்  சேரக்கூடாது;  இஸ்ரவேல்  புத்திரருடைய  ஒவ்வொரு  கோத்திரமும்  தன்தன்  சுதந்தரத்திலே  நிலைகொண்டிருக்கவேண்டும்  என்று  கட்டளையிட்டிருக்கிறார்  என்றான்.  (எண்ணாகமம்  36:9)

suthantharamaanathu  oru  koaththiraththaivittu  vea’roru  koaththiraththaich  searakkoodaathu;  israveal  puththirarudaiya  ovvoru  koaththiramum  thanthan  suthantharaththilea  nilaiko'ndirukkavea'ndum  en’ru  katta'laiyittirukki’raar  en’raan.  (e’n’naagamam  36:9)

கர்த்தர்  மோசேக்குக்  கட்டளையிட்டபடியே  செலொப்பியாத்தின்  குமாரத்திகள்  செய்தார்கள்.  (எண்ணாகமம்  36:10)

karththar  moaseakkuk  katta'laiyittapadiyea  seloppiyaaththin  kumaaraththiga'l  seythaarga'l.  (e’n’naagamam  36:10)

செலொப்பியாத்தின்  குமாரத்திகளாகிய  மக்லாள்  திர்சாள்  ஒக்லாள்  மில்காள்  நோவாள்  என்பவர்கள்  தங்கள்  பிதாவின்  சகோதரருடைய  புத்திரரை  விவாகம்பண்ணினார்கள்;  அவர்கள்  யோசேப்பின்  குமாரனாகிய  மனாசே  புத்திரரின்  வம்சத்தாரை  விவாகம்பண்ணினபடியால்,  (எண்ணாகமம்  36:11)

seloppiyaaththin  kumaaraththiga'laagiya  maklaa'l  thirsaa'l  oklaa'l  milkaa'l  noavaa'l  enbavarga'l  thangga'l  pithaavin  sagoathararudaiya  puththirarai  vivaagampa'n'ninaarga'l;  avarga'l  yoaseappin  kumaaranaagiya  manaasea  puththirarin  vamsaththaarai  vivaagampa'n'ninapadiyaal,  (e’n’naagamam  36:11)

அவர்களுடைய  சுதந்தரம்  அவர்கள்  பிதாவின்  வம்சமான  கோத்திரத்தோடே  இருந்தது.  (எண்ணாகமம்  36:12)

avarga'ludaiya  suthantharam  avarga'l  pithaavin  vamsamaana  koaththiraththoadea  irunthathu.  (e’n’naagamam  36:12)

எரிகோவின்  அருகே  யோர்தானுக்கு  இப்புறத்திலுள்ள  மோவாபின்  சமனான  வெளிகளில்  கர்த்தர்  மோசேயைக்கொண்டு  இஸ்ரவேல்  புத்திரருக்கு  விதித்த  கட்டளைகளும்  நியாயங்களும்  இவைகளே.  (எண்ணாகமம்  36:13)

erigoavin  arugea  yoarthaanukku  ippu’raththilu'l'la  moavaabin  samanaana  ve'liga'lil  karththar  moaseayaikko'ndu  israveal  puththirarukku  vithiththa  katta'laiga'lum  niyaayangga'lum  ivaiga'lea.  (e’n’naagamam  36:13)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!