Monday, November 07, 2016

E'n'naagamam 35 | எண்ணாகமம் 35 | Numbers 35

எரிகோவின்  அருகே  யோர்தானைச்  சேர்ந்த  மோவாபின்  சமனான  வெளிகளிலே  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  35:1)

erigoavin  arugea  yoarthaanaich  searntha  moavaabin  samanaana  ve'liga'lilea  karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  35:1)

இஸ்ரவேல்  புத்திரர்  தங்கள்  காணியாட்சியாகிய  சுதந்தரத்திலே  லேவியருக்குக்  குடியிருக்கும்படி  பட்டணங்களைக்  கொடுக்கவேண்டும்  என்று  அவர்களுக்குக்  கட்டளையிடு;  அந்தப்  பட்டணங்களைச்  சூழ்ந்திருக்கிற  வெளிநிலங்களையும்  லேவியருக்குக்  கொடுக்கவேண்டும்.  (எண்ணாகமம்  35:2)

israveal  puththirar  thangga'l  kaa'niyaadchiyaagiya  suthantharaththilea  leaviyarukkuk  kudiyirukkumpadi  patta'nangga'laik  kodukkavea'ndum  en’ru  avarga'lukkuk  katta'laiyidu;  anthap  patta'nangga'laich  soozhnthirukki’ra  ve'linilangga'laiyum  leaviyarukkuk  kodukkavea'ndum.  (e’n’naagamam  35:2)

அந்தப்  பட்டணங்கள்  அவர்கள்  குடியிருப்பதற்கும்,  அவைகளைச்  சூழ்ந்த  வெளிநிலங்கள்  அவர்களுடைய  ஆடுமாடுகளுக்கும்,  அவர்களுடைய  ஆஸ்திகளுக்கும்,  அவர்களுடைய  சகல  மிருகஜீவன்களுக்கும்  குறிக்கப்படவேண்டும்.  (எண்ணாகமம்  35:3)

anthap  patta'nangga'l  avarga'l  kudiyiruppatha’rkum,  avaiga'laich  soozhntha  ve'linilangga'l  avarga'ludaiya  aadumaaduga'lukkum,  avarga'ludaiya  aasthiga'lukkum,  avarga'ludaiya  sagala  mirugajeevanga'lukkum  ku’rikkappadavea'ndum.  (e’n’naagamam  35:3)

நீங்கள்  லேவியருக்குக்  கொடுக்கும்  பட்டணங்களைச்  சூழ்ந்த  வெளிநிலங்கள்  பட்டணத்தின்  மதில்தொடங்கி,  வெளியிலே  சுற்றிலும்  ஆயிரமுழ  தூரத்துக்கு  எட்டவேண்டும்.  (எண்ணாகமம்  35:4)

neengga'l  leaviyarukkuk  kodukkum  patta'nangga'laich  soozhntha  ve'linilangga'l  patta'naththin  mathilthodanggi,  ve'liyilea  sut’rilum  aayiramuzha  thooraththukku  ettavea'ndum.  (e’n’naagamam  35:4)

பட்டணம்  மத்தியில்  இருக்க,  பட்டணத்தின்  வெளிப்புறந்தொடங்கி,  கிழக்கே  இரண்டாயிரமுழமும்,  தெற்கே  இரண்டாயிரமுழமும்,  மேற்கே  இரண்டாயிரமுழமும்,  வடக்கே  இரண்டாயிரமுழமும்  அளந்துவிடக்கடவீர்கள்;  இது  அவர்கள்  பட்டணங்களுக்கு  வெளிநிலங்களாயிருப்பதாக.  (எண்ணாகமம்  35:5)

patta'nam  maththiyil  irukka,  patta'naththin  ve'lippu’ranthodanggi,  kizhakkea  ira'ndaayiramuzhamum,  the’rkea  ira'ndaayiramuzhamum,  mea’rkea  ira'ndaayiramuzhamum,  vadakkea  ira'ndaayiramuzhamum  a'lanthuvidakkadaveerga'l;  ithu  avarga'l  patta'nangga'lukku  ve'linilangga'laayiruppathaaga.  (e’n’naagamam  35:5)

நீங்கள்  லேவியருக்குக்  கொடுக்கும்  பட்டணங்களில்  அடைக்கலத்துக்காக  ஆறு  பட்டணங்கள்  இருக்கவேண்டும்;  கொலைசெய்தவன்  அங்கே  தப்பி  ஓடிப்போகிறதற்கு  அவைகளைக்  குறிக்கக்கடவீர்கள்;  அவைகளையல்லாமல்,  நாற்பத்திரண்டு  பட்டணங்களை  அவர்களுக்குக்  கொடுக்கவேண்டும்.  (எண்ணாகமம்  35:6)

neengga'l  leaviyarukkuk  kodukkum  patta'nangga'lil  adaikkalaththukkaaga  aa’ru  patta'nangga'l  irukkavea'ndum;  kolaiseythavan  anggea  thappi  oadippoagi’ratha’rku  avaiga'laik  ku’rikkakkadaveerga'l;  avaiga'laiyallaamal,  naa’rpaththira'ndu  patta'nangga'lai  avarga'lukkuk  kodukkavea'ndum.  (e’n’naagamam  35:6)

நீங்கள்  லேவியருக்குக்  கொடுக்கவேண்டிய  பட்டணங்களெல்லாம்  நாற்பத்தெட்டுப்  பட்டணங்களும்  அவைகளைச்  சூழ்ந்த  வெளிநிலங்களுமே.  (எண்ணாகமம்  35:7)

neengga'l  leaviyarukkuk  kodukkavea'ndiya  patta'nangga'lellaam  naa’rpaththettup  patta'nangga'lum  avaiga'laich  soozhntha  ve'linilangga'lumea.  (e’n’naagamam  35:7)

நீங்கள்  இஸ்ரவேல்  புத்திரரின்  சுதந்தரத்திலிருந்து  அந்தப்  பட்டணங்களைப்  பிரித்துக்  கொடுக்கும்போது,  அதிகமுள்ளவர்களிடத்திலிருந்து  அதிகமும்,  கொஞ்சமுள்ளவர்களிடத்திலிருந்து  கொஞ்சமும்  பிரித்துக்கொடுக்கவேண்டும்;  அவரவர்  சுதந்தரித்துக்கொண்ட  சுதந்தரத்தின்படியே  தங்கள்  பட்டணங்களில்  லேவியருக்குக்  கொடுக்கக்கடவர்கள்  என்றார்.  (எண்ணாகமம்  35:8)

neengga'l  israveal  puththirarin  suthantharaththilirunthu  anthap  patta'nangga'laip  piriththuk  kodukkumpoathu,  athigamu'l'lavarga'lidaththilirunthu  athigamum,  kognchamu'l'lavarga'lidaththilirunthu  kognchamum  piriththukkodukkavea'ndum;  avaravar  suthanthariththukko'nda  suthantharaththinpadiyea  thangga'l  patta'nangga'lil  leaviyarukkuk  kodukkakkadavarga'l  en’raar.  (e’n’naagamam  35:8)

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  35:9)

pinnum  karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  35:9)

நீ  இஸ்ரவேல்  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  நீங்கள்  யோர்தானைக்  கடந்து,  கானான்தேசத்தில்  பிரவேசிக்கும்போது,  (எண்ணாகமம்  35:10)

nee  israveal  puththiraroadea  sollavea'ndiyathu  ennaven’raal:  neengga'l  yoarthaanaik  kadanthu,  kaanaantheasaththil  piraveasikkumpoathu,  (e’n’naagamam  35:10)

கைப்பிசகாய்  ஒருவனைக்  கொன்றுபோட்டவன்  ஓடிப்போயிருக்கத்தக்க  அடைக்கலப்பட்டணங்களாகச்  சில  பட்டணங்களைக்  குறிக்கக்கடவீர்கள்.  (எண்ணாகமம்  35:11)

kaippisagaay  oruvanaik  kon’rupoattavan  oadippoayirukkaththakka  adaikkalappatta'nangga'laagach  sila  patta'nangga'laik  ku’rikkakkadaveerga'l.  (e’n’naagamam  35:11)

கொலைசெய்தவன்  நியாயசபையிலே  நியாயம்  விசாரிக்கப்படுமுன்  சாகாமல்,  பழிவாங்குகிறவன்  கைக்குத்  தப்பிப்போயிருக்கும்படி,  அவைகள்  உங்களுக்கு  அடைக்கலப்பட்டணங்களாய்  இருக்கக்கடவது.  (எண்ணாகமம்  35:12)

kolaiseythavan  niyaayasabaiyilea  niyaayam  visaarikkappadumun  saagaamal,  pazhivaanggugi’ravan  kaikkuth  thappippoayirukkumpadi,  avaiga'l  ungga'lukku  adaikkalappatta'nangga'laay  irukkakkadavathu.  (e’n’naagamam  35:12)

நீங்கள்  கொடுக்கும்  பட்டணங்களில்  ஆறு  பட்டணங்கள்  அடைக்கலத்துக்காக  இருக்கவேண்டும்.  (எண்ணாகமம்  35:13)

neengga'l  kodukkum  patta'nangga'lil  aa’ru  patta'nangga'l  adaikkalaththukkaaga  irukkavea'ndum.  (e’n’naagamam  35:13)

யோர்தானுக்கு  இப்புறத்தில்  மூன்று  பட்டணங்களையும்,  கானான்தேசத்தில்  மூன்று  பட்டணங்களையும்  கொடுக்கவேண்டும்;  அவைகள்  அடைக்கலப்பட்டணங்களாம்.  (எண்ணாகமம்  35:14)

yoarthaanukku  ippu’raththil  moon’ru  patta'nangga'laiyum,  kaanaantheasaththil  moon’ru  patta'nangga'laiyum  kodukkavea'ndum;  avaiga'l  adaikkalappatta'nangga'laam.  (e’n’naagamam  35:14)

கைப்பிசகாய்  ஒருவனைக்  கொன்றவன்  எவனோ,  அவன்  அங்கே  ஓடிப்போயிருக்கும்படிக்கு,  அந்த  ஆறு  பட்டணங்களும்  இஸ்ரவேல்  புத்திரருக்கும்  உங்கள்  நடுவே  இருக்கும்  பரதேசிக்கும்  அந்நியனுக்கும்  அடைக்கலப்பட்டணங்களாய்  இருக்கவேண்டும்.  (எண்ணாகமம்  35:15)

kaippisagaay  oruvanaik  kon’ravan  evanoa,  avan  anggea  oadippoayirukkumpadikku,  antha  aa’ru  patta'nangga'lum  israveal  puththirarukkum  ungga'l  naduvea  irukkum  paratheasikkum  anniyanukkum  adaikkalappatta'nangga'laay  irukkavea'ndum.  (e’n’naagamam  35:15)

ஒருவன்  இருப்பு  ஆயுதத்தினால்  ஒருவனை  வெட்டினதினால்  அவன்  செத்துப்போனால்,  வெட்டினவன்  கொலைபாதகனாயிருக்கிறான்;  கொலைபாதகன்  கொலைசெய்யப்படவேண்டும்.  (எண்ணாகமம்  35:16)

oruvan  iruppu  aayuthaththinaal  oruvanai  vettinathinaal  avan  seththuppoanaal,  vettinavan  kolaipaathaganaayirukki’raan;  kolaipaathagan  kolaiseyyappadavea'ndum.  (e’n’naagamam  35:16)

ஒருவன்  ஒரு  கல்லை  எடுத்து,  சாகத்தக்கதாக  ஒருவன்மேல்  எறிகிறதினாலே  அவன்  செத்துப்போனால்,  கல்லெறிந்தவன்  கொலைபாதகனாயிருக்கிறான்,  அவன்  கொலைசெய்யப்படவேண்டும்.  (எண்ணாகமம்  35:17)

oruvan  oru  kallai  eduththu,  saagaththakkathaaga  oruvanmeal  e’rigi’rathinaalea  avan  seththuppoanaal,  kalle’rinthavan  kolaipaathaganaayirukki’raan,  avan  kolaiseyyappadavea'ndum.  (e’n’naagamam  35:17)

ஒருவன்  தன்  கையில்  ஒரு  மர  ஆயுதத்தை  எடுத்து,  சாகத்தக்கதாக  ஒருவனை  அடித்ததினால்  அவன்  செத்துப்போனால்,  அடித்தவன்  கொலைபாதகனாயிருக்கிறான்;  கொலைபாதகன்  கொலைசெய்யப்படவேண்டும்.  (எண்ணாகமம்  35:18)

oruvan  than  kaiyil  oru  mara  aayuthaththai  eduththu,  saagaththakkathaaga  oruvanai  adiththathinaal  avan  seththuppoanaal,  adiththavan  kolaipaathaganaayirukki’raan;  kolaipaathagan  kolaiseyyappadavea'ndum.  (e’n’naagamam  35:18)

பழிவாங்கவேண்டியவனே  கொலைபாதகனைக்  கொல்லவேண்டும்;  அவனைக்  கண்டமாத்திரத்தில்  அவனைக்  கொன்றுபோடலாம்.  (எண்ணாகமம்  35:19)

pazhivaanggavea'ndiyavanea  kolaipaathaganaik  kollavea'ndum;  avanaik  ka'ndamaaththiraththil  avanaik  kon’rupoadalaam.  (e’n’naagamam  35:19)

ஒருவன்  பகையினால்  ஒருவனை  விழத்தள்ளினதினாலாயினும்,  பதுங்கியிருந்து  அவன்  சாகத்தக்கதாய்  அவன்மேல்  ஏதாகிலும்  எறிந்ததினாலாயினும்,  (எண்ணாகமம்  35:20)

oruvan  pagaiyinaal  oruvanai  vizhaththa'l'linathinaalaayinum,  pathunggiyirunthu  avan  saagaththakkathaay  avanmeal  eathaagilum  e’rinthathinaalaayinum,  (e’n’naagamam  35:20)

அவனைப்  பகைத்து,  தன்  கையினால்  அடித்ததினாலாயினும்,  அவன்  செத்துப்போனால்,  அடித்தவன்  கொலைபாதகன்;  அவன்  கொலைசெய்யப்படவேண்டும்,  பழிவாங்குகிறவன்  கொலைபாதகனைக்  கண்டமாத்திரத்தில்  கொன்றுபோடலாம்.  (எண்ணாகமம்  35:21)

avanaip  pagaiththu,  than  kaiyinaal  adiththathinaalaayinum,  avan  seththuppoanaal,  adiththavan  kolaipaathagan;  avan  kolaiseyyappadavea'ndum,  pazhivaanggugi’ravan  kolaipaathaganaik  ka'ndamaaththiraththil  kon’rupoadalaam.  (e’n’naagamam  35:21)

ஒருவன்  பகையொன்றும்  இல்லாமல்  சடுதியில்  ஒருவனைத்  தள்ளி  விழப்பண்ணினதினாலாயினும்,  பதுங்கியிராமல்  யாதொரு  ஆயுதத்தை  அவன்மேல்  பட  எறிந்ததினாலாயினும்,  (எண்ணாகமம்  35:22)

oruvan  pagaiyon’rum  illaamal  saduthiyil  oruvanaith  tha'l'li  vizhappa'n'ninathinaalaayinum,  pathunggiyiraamal  yaathoru  aayuthaththai  avanmeal  pada  e’rinthathinaalaayinum,  (e’n’naagamam  35:22)

அவனுக்குப்  பகைஞனாயிராமலும்  அவனுக்குத்  தீங்கு  செய்ய  நினையாமலும்  இருக்கையில்,  ஒருவனைக்  கொன்றுபோடத்தக்க  ஒரு  கல்லினால்  அவனைக்  காணாமல்  எறிய,  அது  அவன்மேல்  பட்டதினாலாயினும்,  அவன்  செத்துப்போனால்,  (எண்ணாகமம்  35:23)

avanukkup  pagaignanaayiraamalum  avanukkuth  theenggu  seyya  ninaiyaamalum  irukkaiyil,  oruvanaik  kon’rupoadaththakka  oru  kallinaal  avanaik  kaa'naamal  e’riya,  athu  avanmeal  pattathinaalaayinum,  avan  seththuppoanaal,  (e’n’naagamam  35:23)

அப்பொழுது  கொலைசெய்தவனையும்  பழிவாங்குகிறவனையும்  சபையார்  இந்த  நியாயப்படி  விசாரித்து,  (எண்ணாகமம்  35:24)

appozhuthu  kolaiseythavanaiyum  pazhivaanggugi’ravanaiyum  sabaiyaar  intha  niyaayappadi  visaariththu,  (e’n’naagamam  35:24)

கொலைசெய்தவனைப்  பழிவாங்குகிறவனுடைய  கைக்குத்  தப்புவித்து,  அவன்  ஓடிப்போயிருந்த  அடைக்கலப்பட்டணத்துக்கு  அவனைத்  திரும்பப்  போகும்படி  செய்யக்கடவர்கள்;  பரிசுத்த  தைலத்தினால்  அபிஷேகம்  பெற்ற  பிரதான  ஆசாரியன்  மரணமடையுமட்டும்  அவன்  அதிலே  இருக்கக்கடவன்.  (எண்ணாகமம்  35:25)

kolaiseythavanaip  pazhivaanggugi’ravanudaiya  kaikkuth  thappuviththu,  avan  oadippoayiruntha  adaikkalappatta'naththukku  avanaith  thirumbap  poagumpadi  seyyakkadavarga'l;  parisuththa  thailaththinaal  abisheagam  pet’ra  pirathaana  aasaariyan  mara'namadaiyumattum  avan  athilea  irukkakkadavan.  (e’n’naagamam  35:25)

ஆனாலும்  கொலைசெய்தவன்  தான்  ஓடிப்போயிருக்கிற  அடைக்கலப்பட்டணத்தின்  எல்லையை  விட்டு  வெளிப்பட்டிருக்கும்போது,  (எண்ணாகமம்  35:26)

aanaalum  kolaiseythavan  thaan  oadippoayirukki’ra  adaikkalappatta'naththin  ellaiyai  vittu  ve'lippattirukkumpoathu,  (e’n’naagamam  35:26)

பழிவாங்குகிறவன்  கொலைசெய்தவனை  அடைக்கலப்பட்டணத்துக்கு  வெளியே  கண்டுபிடித்துக்  கொன்றுபோட்டால்,  அவன்மேல்  இரத்தப்பழி  இல்லை.  (எண்ணாகமம்  35:27)

pazhivaanggugi’ravan  kolaiseythavanai  adaikkalappatta'naththukku  ve'liyea  ka'ndupidiththuk  kon’rupoattaal,  avanmeal  iraththappazhi  illai.  (e’n’naagamam  35:27)

கொலைசெய்தவன்  பிரதான  ஆசாரியன்  மரணமடையுமட்டும்  அடைக்கலப்  பட்டணத்திலிருக்கவேண்டும்;  பிரதான  ஆசாரியன்  மரணமடைந்தபின்பு,  தன்  சுதந்தரமான  காணியாட்சிக்குத்  திரும்பிப்  போகலாம்.  (எண்ணாகமம்  35:28)

kolaiseythavan  pirathaana  aasaariyan  mara'namadaiyumattum  adaikkalap  patta'naththilirukkavea'ndum;  pirathaana  aasaariyan  mara'namadainthapinbu,  than  suthantharamaana  kaa'niyaadchikkuth  thirumbip  poagalaam.  (e’n’naagamam  35:28)

இவைகள்  உங்கள்  வாசஸ்தலங்களிலெங்கும்  உங்கள்  தலைமுறைதோறும்  உங்களுக்கு  நியாயவிதிப்  பிரமாணமாயிருக்கக்கடவது.  (எண்ணாகமம்  35:29)

ivaiga'l  ungga'l  vaasasthalangga'lilenggum  ungga'l  thalaimu’raithoa’rum  ungga'lukku  niyaayavithip  piramaa'namaayirukkakkadavathu.  (e’n’naagamam  35:29)

எவனாகிலும்,  ஒரு  மனிதனைக்  கொன்றுபோட்டால்,  அப்பொழுது  சாட்சிகளுடைய  வாக்குமூலத்தின்படியே  அந்தக்  கொலைபாதகனைக்  கொலைசெய்யக்கடவர்கள்;  ஒரே  சாட்சியைக்கொண்டுமாத்திரம்  ஒரு  மனிதன்  சாகும்படி  தீர்ப்புச்செய்யலாகாது.  (எண்ணாகமம்  35:30)

evanaagilum,  oru  manithanaik  kon’rupoattaal,  appozhuthu  saadchiga'ludaiya  vaakkumoolaththinpadiyea  anthak  kolaipaathaganaik  kolaiseyyakkadavarga'l;  orea  saadchiyaikko'ndumaaththiram  oru  manithan  saagumpadi  theerppuchseyyalaagaathu.  (e’n’naagamam  35:30)

சாகிறதற்கேற்ற  குற்றஞ்சுமந்த  கொலைபாதகனுடைய  ஜீவனுக்காக  நீங்கள்  மீட்கும்பொருளை  வாங்கக்கூடாது;  அவன்  தப்பாமல்  கொலைசெய்யப்படவேண்டும்.  (எண்ணாகமம்  35:31)

saagi’ratha’rkeat’ra  kut’ragnsumantha  kolaipaathaganudaiya  jeevanukkaaga  neengga'l  meedkumporu'lai  vaanggakkoodaathu;  avan  thappaamal  kolaiseyyappadavea'ndum.  (e’n’naagamam  35:31)

தன்  அடைக்கலப்பட்டணத்துக்கு  ஓடிப்போனவன்  ஆசாரியன்  மரணமடையாததற்கு  முன்னே  தன்  நாட்டிற்குத்  திரும்பிவரும்படி  நீங்கள்  அவனுக்காக  மீட்கும்பொருளை  வாங்கக்கூடாது.  (எண்ணாகமம்  35:32)

than  adaikkalappatta'naththukku  oadippoanavan  aasaariyan  mara'namadaiyaathatha’rku  munnea  than  naatti’rkuth  thirumbivarumpadi  neengga'l  avanukkaaga  meedkumporu'lai  vaanggakkoodaathu.  (e’n’naagamam  35:32)

நீங்கள்  இருக்கும்  தேசத்தைப்  பரிசுத்தக்  குலைச்சலாக்காதிருங்கள்;  இரத்தம்  தேசத்தைத்  தீட்டுப்படுத்தும்;  இரத்தம்  சிந்தினவனுடைய  இரத்தத்தினாலேயொழிய,  வேறொன்றினாலும்  தேசத்திலே  சிந்துண்ட  இரத்தத்திற்காகப்  பாவநிவிர்த்தியில்லை.  (எண்ணாகமம்  35:33)

neengga'l  irukkum  theasaththaip  parisuththak  kulaichchalaakkaathirungga'l;  iraththam  theasaththaith  theettuppaduththum;  iraththam  sinthinavanudaiya  iraththaththinaaleayozhiya,  vea’ron’rinaalum  theasaththilea  sinthu'nda  iraththaththi’rkaagap  paavanivirththiyillai.  (e’n’naagamam  35:33)

நீங்கள்  குடியிருக்கும்  என்  வாசஸ்தலமாகிய  தேசத்தைத்  தீட்டுப்படுத்தவேண்டாம்;  கர்த்தராகிய  நான்  இஸ்ரவேல்  புத்திரர்  நடுவே  வாசம்பண்ணுகிறேன்  என்று  சொல்  என்றார்.  (எண்ணாகமம்  35:34)

neengga'l  kudiyirukkum  en  vaasasthalamaagiya  theasaththaith  theettuppaduththavea'ndaam;  karththaraagiya  naan  israveal  puththirar  naduvea  vaasampa'n'nugi’rean  en’ru  sol  en’raar.  (e’n’naagamam  35:34)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!