Monday, November 07, 2016

E'n'naagamam 33 | எண்ணாகமம் 33 | Numbers 33

மோசே  ஆரோன்  என்பவர்களுடைய  கையின்கீழ்த்  தங்கள்தங்கள்  சேனைகளின்படியே  எகிப்துதேசத்திலிருந்து  புறப்பட்ட  இஸ்ரவேல்  புத்திரருடைய  பிரயாணங்களின்  விபரம்:  (எண்ணாகமம்  33:1)

moasea  aaroan  enbavarga'ludaiya  kaiyinkeezhth  thangga'lthangga'l  seanaiga'linpadiyea  egipthutheasaththilirunthu  pu’rappatta  israveal  puththirarudaiya  pirayaa'nangga'lin  vibaram:  (e’n’naagamam  33:1)

மோசே  தனக்குக்  கர்த்தர்  கட்டளையிட்டபடியே  அவர்கள்  புறப்பட்டபிரகாரமாக  அவர்களுடைய  பிரயாணங்களை  எழுதினான்;  அவர்கள்  ஒவ்வொரு  இடங்களிலிருந்து  புறப்பட்டுப்பண்ணின  பிரயாணங்களாவன:  (எண்ணாகமம்  33:2)

moasea  thanakkuk  karththar  katta'laiyittapadiyea  avarga'l  pu’rappattapiragaaramaaga  avarga'ludaiya  pirayaa'nangga'lai  ezhuthinaan;  avarga'l  ovvoru  idangga'lilirunthu  pu’rappattuppa'n'nina  pirayaa'nangga'laavana:  (e’n’naagamam  33:2)

முதலாம்  மாதத்தின்  பதினைந்தாம்  தேதியிலே  அவர்கள்  ராமசேசை  விட்டுப்  புறப்பட்டார்கள்;  பஸ்காவுக்கு  மறுநாளிலே,  எகிப்தியர்  எல்லாரும்  பார்க்க,  இஸ்ரவேல்  புத்திரர்  பெலத்தகையுடன்  புறப்பட்டார்கள்.  (எண்ணாகமம்  33:3)

muthalaam  maathaththin  pathinainthaam  theathiyilea  avarga'l  raamaseasai  vittup  pu’rappattaarga'l;  paskaavukku  ma’runaa'lilea,  egipthiyar  ellaarum  paarkka,  israveal  puththirar  belaththakaiyudan  pu’rappattaarga'l.  (e’n’naagamam  33:3)

அப்பொழுது  எகிப்தியர்  கர்த்தர்  தங்களுக்குள்ளே  சங்கரித்த  தலைச்சன்பிள்ளைகளையெல்லாம்  அடக்கம்பண்ணினார்கள்;  அவர்கள்  தேவர்களின்பேரிலும்  கர்த்தர்  நீதிசெலுத்தினார்.  (எண்ணாகமம்  33:4)

appozhuthu  egipthiyar  karththar  thangga'lukku'l'lea  sanggariththa  thalaichchanpi'l'laiga'laiyellaam  adakkampa'n'ninaarga'l;  avarga'l  theavarga'linpearilum  karththar  neethiseluththinaar.  (e’n’naagamam  33:4)

பின்பு  இஸ்ரவேல்  புத்திரர்  ராமசேசிலிருந்து  புறப்பட்டுப்போய்,  சுக்கோத்திலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:5)

pinbu  israveal  puththirar  raamaseasilirunthu  pu’rappattuppoay,  sukkoaththilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:5)

சுக்கோத்திலிருந்து  புறப்பட்டுப்போய்,  வனாந்தரத்தின்  எல்லையிலிருக்கிற  ஏத்தாமிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:6)

sukkoaththilirunthu  pu’rappattuppoay,  vanaantharaththin  ellaiyilirukki’ra  eaththaamilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:6)

ஏத்தாமிலிருந்து  புறப்பட்டுப்போய்,  பாகால்செபோனுக்கு  எதிராக  இருக்கிற  ஈரோத்  பள்ளத்தாக்கின்  முன்னடிக்குத்  திரும்பி,  மிக்தோலுக்கு  முன்பாகப்  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:7)

eaththaamilirunthu  pu’rappattuppoay,  baagaalsepoanukku  ethiraaga  irukki’ra  eeroath  pa'l'laththaakkin  munnadikkuth  thirumbi,  mikthoalukku  munbaagap  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:7)

ஈரோத்தை  விட்டுப்  புறப்பட்டு,  சமுத்திரத்தை  நடுவாகக்  கடந்து  வனாந்தரத்திற்குப்போய்,  ஏத்தாம்  வனாந்தரத்திலே  மூன்றுநாள்  பிரயாணம்பண்ணி,  மாராவிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:8)

eeroaththai  vittup  pu’rappattu,  samuththiraththai  naduvaagak  kadanthu  vanaantharaththi’rkuppoay,  eaththaam  vanaantharaththilea  moon’runaa'l  pirayaa'nampa'n'ni,  maaraavilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:8)

மாராவிலிருந்து  புறப்பட்டு,  ஏலிமுக்குப்  போனார்கள்;  ஏலிமிலே  பன்னிரண்டு  நீரூற்றுகளும்  எழுபது  பேரீச்சமரங்களும்  இருந்தது;  அங்கே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:9)

maaraavilirunthu  pu’rappattu,  ealimukkup  poanaarga'l;  ealimilea  pannira'ndu  neeroot’ruga'lum  ezhubathu  peareechchamarangga'lum  irunthathu;  anggea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:9)

ஏலிமிலிருந்து  புறப்பட்டு,  சிவந்த  சமுத்திரத்தின்  அருகே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:10)

ealimilirunthu  pu’rappattu,  sivantha  samuththiraththin  arugea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:10)

சிவந்த  சமுத்திரத்தை  விட்டுப்  புறப்பட்டுப்போய்,  சீன்வனாந்தரத்திலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:11)

sivantha  samuththiraththai  vittup  pu’rappattuppoay,  seenvanaantharaththilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:11)

சீன்வனாந்தரத்திலிருந்து  புறப்பட்டுப்போய்,  தொப்காவிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:12)

seenvanaantharaththilirunthu  pu’rappattuppoay,  thopkaavilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:12)

தொப்காவிலிருந்து  புறப்பட்டுப்போய்,  ஆலூசிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:13)

thopkaavilirunthu  pu’rappattuppoay,  aaloosilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:13)

ஆலூசிலிருந்து  புறப்பட்டுப்போய்,  ரெவிதீமிலே  பாளயமிறங்கினார்கள்;  அங்கே  ஜனங்களுக்குக்  குடிக்கத்  தண்ணீர்  இல்லாதிருந்தது.  (எண்ணாகமம்  33:14)

aaloosilirunthu  pu’rappattuppoay,  revitheemilea  paa'layami’rangginaarga'l;  anggea  janangga'lukkuk  kudikkath  tha'n'neer  illaathirunthathu.  (e’n’naagamam  33:14)

ரெவிதீமிலிருந்து  புறப்பட்டுப்போய்,  சீனாய்  வனாந்தரத்திலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:15)

revitheemilirunthu  pu’rappattuppoay,  seenaay  vanaantharaththilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:15)

சீனாய்  வனாந்தரத்திலிருந்து  புறப்பட்டுப்போய்,  கிப்ரோத்  அத்தாவிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:16)

seenaay  vanaantharaththilirunthu  pu’rappattuppoay,  kibroath  aththaavilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:16)

கிப்ரோத்  அத்தாவிலிருந்து  புறப்பட்டுப்போய்,  ஆஸரோத்திலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:17)

kibroath  aththaavilirunthu  pu’rappattuppoay,  aasaroaththilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:17)

ஆஸரோத்திலிருந்து  புறப்பட்டுப்போய்,  ரித்மாவிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:18)

aasaroaththilirunthu  pu’rappattuppoay,  rithmaavilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:18)

ரித்மாவிலிருந்து  புறப்பட்டுப்போய்,  ரிம்மோன்பேரேசிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:19)

rithmaavilirunthu  pu’rappattuppoay,  rimmoanpeareasilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:19)

ரிம்மோன்பேரேசிலிருந்து  புறப்பட்டுப்போய்,  லிப்னாவிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:20)

rimmoanpeareasilirunthu  pu’rappattuppoay,  libnaavilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:20)

லிப்னாவிலிருந்து  புறப்பட்டுப்போய்,  ரீசாவிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:21)

libnaavilirunthu  pu’rappattuppoay,  reesaavilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:21)

ரீசாவிலிருந்து  புறப்பட்டுப்போய்,  கேலத்தாவிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:22)

reesaavilirunthu  pu’rappattuppoay,  kealaththaavilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:22)

கேலத்தாவிலிருந்து  புறப்பட்டுப்போய்,  சாப்பேர்  மலையிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:23)

kealaththaavilirunthu  pu’rappattuppoay,  saappear  malaiyilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:23)

சாப்பேர்  மலையிலிருந்து  புறப்பட்டுப்போய்,  ஆரதாவிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:24)

saappear  malaiyilirunthu  pu’rappattuppoay,  aarathaavilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:24)

ஆரதாவிலிருந்து  புறப்பட்டுப்போய்,  மக்கெலோத்திலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:25)

aarathaavilirunthu  pu’rappattuppoay,  makkeloaththilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:25)

மக்கெலோத்திலிருந்து  புறப்பட்டுப்போய்,  தாகாத்திலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:26)

makkeloaththilirunthu  pu’rappattuppoay,  thaagaaththilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:26)

தாகாத்திலிருந்து  புறப்பட்டுப்போய்,  தாராகிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:27)

thaagaaththilirunthu  pu’rappattuppoay,  thaaraakilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:27)

தாராகிலிருந்து  புறப்பட்டுப்போய்,  மித்காவிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:28)

thaaraakilirunthu  pu’rappattuppoay,  mithkaavilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:28)

மித்காவிலிருந்து  புறப்பட்டுப்போய்,  அஸ்மோனாவிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:29)

mithkaavilirunthu  pu’rappattuppoay,  asmoanaavilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:29)

அஸ்மோனாவிலிருந்து  புறப்பட்டுப்போய்,  மோசெரோத்திலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:30)

asmoanaavilirunthu  pu’rappattuppoay,  moaseroaththilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:30)

மோசெரோத்திலிருந்து  புறப்பட்டுப்போய்,  பெனெயாக்கானிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:31)

moaseroaththilirunthu  pu’rappattuppoay,  beneyaakkaanilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:31)

பெனெயாக்கானிலிருந்து  புறப்பட்டுப்போய்,  கித்காத்  மலையிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:32)

beneyaakkaanilirunthu  pu’rappattuppoay,  kithkaath  malaiyilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:32)

கித்காத்  மலையிலிருந்து  புறப்பட்டுப்போய்,  யோத்பாத்தாவிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:33)

kithkaath  malaiyilirunthu  pu’rappattuppoay,  yoathbaaththaavilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:33)

யோத்பாத்தாவிலிருந்து  புறப்பட்டுப்போய்,  எப்ரோனாவிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:34)

yoathbaaththaavilirunthu  pu’rappattuppoay,  ebroanaavilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:34)

எப்ரோனாவிலிருந்து  புறப்பட்டுப்போய்,  எசியோன்  கேபேரிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:35)

ebroanaavilirunthu  pu’rappattuppoay,  esiyoan  keabearilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:35)

எசியோன்  கேபேரிலிருந்து  புறப்பட்டுப்போய்,  காதேசாகிய  சீன்வனாந்தரத்திலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:36)

esiyoan  keabearilirunthu  pu’rappattuppoay,  kaatheasaagiya  seenvanaantharaththilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:36)

காதேசிலிருந்து  புறப்பட்டுப்போய்,  ஏதோம்  தேசத்தின்  எல்லையிலிருக்கிற  ஓர்  என்னும்  மலையிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:37)

kaatheasilirunthu  pu’rappattuppoay,  eathoam  theasaththin  ellaiyilirukki’ra  oar  ennum  malaiyilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:37)

அப்பொழுது  ஆசாரியனாகிய  ஆரோன்  கர்த்தருடைய  கட்டளையின்படியே  ஓர்  என்னும்  மலையின்மேல்  ஏறி,  அங்கே  இஸ்ரவேல்  புத்திரர்  எகிப்துதேசத்திலிருந்து  புறப்பட்ட  நாற்பதாம்  வருஷம்  ஐந்தாம்  மாதம்  முதல்  தேதியிலே  மரணமடைந்தான்.  (எண்ணாகமம்  33:38)

appozhuthu  aasaariyanaagiya  aaroan  karththarudaiya  katta'laiyinpadiyea  oar  ennum  malaiyinmeal  ea’ri,  anggea  israveal  puththirar  egipthutheasaththilirunthu  pu’rappatta  naa’rpathaam  varusham  ainthaam  maatham  muthal  theathiyilea  mara'namadainthaan.  (e’n’naagamam  33:38)

ஆரோன்  ஓர்  என்னும்  மலையிலே  மரணமடைந்தபோது,  நூற்றிருபத்துமூன்று  வயதாயிருந்தான்.  (எண்ணாகமம்  33:39)

aaroan  oar  ennum  malaiyilea  mara'namadainthapoathu,  noot’rirubaththumoon’ru  vayathaayirunthaan.  (e’n’naagamam  33:39)

அந்நாட்களிலே  கானான்  தேசத்தின்  தென்திசையில்  குடியிருந்த  கானானியனாகிய  ஆராத்  என்னும்  ராஜா  இஸ்ரவேல்  புத்திரர்  வருகிறதைக்  கேள்விப்பட்டான்.  (எண்ணாகமம்  33:40)

annaadka'lilea  kaanaan  theasaththin  thenthisaiyil  kudiyiruntha  kaanaaniyanaagiya  aaraath  ennum  raajaa  israveal  puththirar  varugi’rathaik  kea'lvippattaan.  (e’n’naagamam  33:40)

ஓர்  என்னும்  மலையை  விட்டுப்  புறப்பட்டுப்போய்,  சல்மோனாவிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:41)

oar  ennum  malaiyai  vittup  pu’rappattuppoay,  salmoanaavilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:41)

சல்மோனாவிலிருந்து  புறப்பட்டுப்போய்,  பூனோனிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:42)

salmoanaavilirunthu  pu’rappattuppoay,  poonoanilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:42)

பூனோனிலிருந்து  புறப்பட்டுப்போய்,  ஓபோத்திலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:43)

poonoanilirunthu  pu’rappattuppoay,  oaboaththilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:43)

ஓபோத்திலிருந்து  புறப்பட்டுப்போய்,  மோவாபின்  எல்லையிலுள்ள  அபாரீமின்  மேடுகளிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:44)

oaboaththilirunthu  pu’rappattuppoay,  moavaabin  ellaiyilu'l'la  abaareemin  meaduga'lilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:44)

அந்த  மேடுகளை  விட்டுப்  புறப்பட்டுப்போய்,  தீபோன்காத்திலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:45)

antha  meaduga'lai  vittup  pu’rappattuppoay,  theeboankaaththilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:45)

தீபோன்காத்திலிருந்து  புறப்பட்டுப்போய்,  அல்மோன்  திப்லத்தாயிமிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:46)

theeboankaaththilirunthu  pu’rappattuppoay,  almoan  thiblaththaayimilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:46)

அல்மோன்  திப்லத்தாயிமிலிருந்து  புறப்பட்டுப்போய்,  நேபோவுக்கு  எதிரான  அபாரீம்  மலைகளிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:47)

almoan  thiblaththaayimilirunthu  pu’rappattuppoay,  neaboavukku  ethiraana  abaareem  malaiga'lilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:47)

அபாரீம்  மலைகளிலிருந்து  புறப்பட்டுப்போய்,  எரிகோவின்  அருகே  யோர்தானைச்  சார்ந்த  மோவாபின்  சமனான  வெளிகளிலே  பாளயமிறங்கினார்கள்.  (எண்ணாகமம்  33:48)

abaareem  malaiga'lilirunthu  pu’rappattuppoay,  erigoavin  arugea  yoarthaanaich  saarntha  moavaabin  samanaana  ve'liga'lilea  paa'layami’rangginaarga'l.  (e’n’naagamam  33:48)

யோர்தானைச்  சார்ந்த  மோவாபின்  சமனான  வெளிகளில்  அவர்கள்  பெத்யெசிமோத்தைத்  தொடங்கி,  ஆபேல்சித்தீம்மட்டும்  பாளயமிறங்கியிருந்தார்கள்.  (எண்ணாகமம்  33:49)

yoarthaanaich  saarntha  moavaabin  samanaana  ve'liga'lil  avarga'l  bethyesimoaththaith  thodanggi,  aabealsiththeemmattum  paa'layami’ranggiyirunthaarga'l.  (e’n’naagamam  33:49)

எரிகோவின்  அருகே  யோர்தானைச்  சார்ந்த  மோவாபின்  சமனான  வெளிகளிலே  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  33:50)

erigoavin  arugea  yoarthaanaich  saarntha  moavaabin  samanaana  ve'liga'lilea  karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  33:50)

நீ  இஸ்ரவேல்  புத்திரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  நீங்கள்  யோர்தானைக்  கடந்து,  கானான்தேசத்தில்  போய்ச்  சேரும்போது,  (எண்ணாகமம்  33:51)

nee  israveal  puththiraroadea  sollavea'ndiyathu  ennaven’raal:  neengga'l  yoarthaanaik  kadanthu,  kaanaantheasaththil  poaych  searumpoathu,  (e’n’naagamam  33:51)

அத்தேசத்துக்  குடிகளையெல்லாம்  உங்களுக்கு  முன்பாகத்  துரத்திவிட்டு,  அவர்களுடைய  எல்லாச்  சிலைகளையும்  வார்ப்பிக்கப்பட்ட  அவர்களுடைய  எல்லா  விக்கிரகங்களையும்  அழித்து,  அவர்கள்  மேடைகளையெல்லாம்  நிர்மூலமாக்கி,  (எண்ணாகமம்  33:52)

aththeasaththuk  kudiga'laiyellaam  ungga'lukku  munbaagath  thuraththivittu,  avarga'ludaiya  ellaach  silaiga'laiyum  vaarppikkappatta  avarga'ludaiya  ellaa  vikkiragangga'laiyum  azhiththu,  avarga'l  meadaiga'laiyellaam  nirmoolamaakki,  (e’n’naagamam  33:52)

தேசத்திலுள்ளவர்களைத்  துரத்திவிட்டு,  அதிலே  குடியிருக்கக்கடவீர்கள்;  அந்தத்  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொள்ளும்படி  அதை  உங்களுக்குக்  கொடுத்தேன்.  (எண்ணாகமம்  33:53)

theasaththilu'l'lavarga'laith  thuraththivittu,  athilea  kudiyirukkakkadaveerga'l;  anthath  theasaththaich  suthanthariththukko'l'lumpadi  athai  ungga'lukkuk  koduththean.  (e’n’naagamam  33:53)

சீட்டுப்போட்டு,  தேசத்தை  உங்கள்  குடும்பங்களுக்குச்  சுதந்தரங்களாகப்  பங்கிட்டு,  அதிக  ஜனங்களுக்கு  அதிக  சுதந்தரமும்,  கொஞ்ச  ஜனங்களுக்குக்  கொஞ்சச்  சுதந்தரமும்  கொடுக்கக்கடவீர்கள்;  அவரவர்க்குச்  சீட்டு  விழும்  இடம்  எதுவோ,  அவ்விடம்  அவரவர்க்கு  உரியதாகும்;  உங்கள்  பிதாக்களுடைய  கோத்திரங்களின்படியே  சுதந்தரம்  பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.  (எண்ணாகமம்  33:54)

seettuppoattu,  theasaththai  ungga'l  kudumbangga'lukkuch  suthantharangga'laagap  panggittu,  athiga  janangga'lukku  athiga  suthantharamum,  kogncha  janangga'lukkuk  kognchach  suthantharamum  kodukkakkadaveerga'l;  avaravarkkuch  seettu  vizhum  idam  ethuvoa,  avvidam  avaravarkku  uriyathaagum;  ungga'l  pithaakka'ludaiya  koaththirangga'linpadiyea  suthantharam  pet’rukko'l'lakkadaveerga'l.  (e’n’naagamam  33:54)

நீங்கள்  தேசத்தின்  குடிகளை  உங்களுக்கு  முன்பாகத்  துரத்திவிடாமலிருப்பீர்களானால்,  அப்பொழுது  அவர்களில்  நீங்கள்  மீதியாக  வைக்கிறவர்கள்  உங்கள்  கண்களில்  முள்ளுகளும்  உங்கள்  விலாக்களிலே  கூர்களுமாயிருந்து,  நீங்கள்  குடியிருக்கிற  தேசத்திலே  உங்களை  உபத்திரவப்படுத்துவார்கள்.  (எண்ணாகமம்  33:55)

neengga'l  theasaththin  kudiga'lai  ungga'lukku  munbaagath  thuraththividaamaliruppeerga'laanaal,  appozhuthu  avarga'lil  neengga'l  meethiyaaga  vaikki’ravarga'l  ungga'l  ka'nga'lil  mu'l'luga'lum  ungga'l  vilaakka'lilea  koorga'lumaayirunthu,  neengga'l  kudiyirukki’ra  theasaththilea  ungga'lai  ubaththiravappaduththuvaarga'l.  (e’n’naagamam  33:55)

அன்றியும்,  நான்  அவர்களுக்குச்  செய்ய  நினைத்ததை  உங்களுக்குச்  செய்வேன்  என்று  சொல்  என்றார்.  (எண்ணாகமம்  33:56)

an’riyum,  naan  avarga'lukkuch  seyya  ninaiththathai  ungga'lukkuch  seyvean  en’ru  sol  en’raar.  (e’n’naagamam  33:56)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!