Monday, November 07, 2016

E'n'naagamam 30 | எண்ணாகமம் 30 | Numbers 30

மோசே  இஸ்ரவேல்  புத்திரருடைய  கோத்திரங்களின்  தலைவரை  நோக்கி:  கர்த்தர்  கட்டளையிடுவது  என்னவென்றால்:  (எண்ணாகமம்  30:1)

moasea  israveal  puththirarudaiya  koaththirangga'lin  thalaivarai  noakki:  karththar  katta'laiyiduvathu  ennaven’raal:  (e’n’naagamam  30:1)

ஒருவன்  கர்த்தருக்கு  யாதொரு  பொருத்தனை  பண்ணினாலும்,  அல்லது  யாதொரு  காரியத்தைச்  செய்யும்படி  ஆணையிட்டுத்  தன்  ஆத்துமாவை  நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும்,  அவன்  சொல்தவறாமல்  தன்  வாயிலிருந்து  புறப்பட்ட  வாக்கின்படியெல்லாம்  செய்யக்கடவன்.  (எண்ணாகமம்  30:2)

oruvan  karththarukku  yaathoru  poruththanai  pa'n'ninaalum,  allathu  yaathoru  kaariyaththaich  seyyumpadi  aa'naiyittuth  than  aaththumaavai  nibanthanaikkudpaduththikko'ndaalum,  avan  solthava’raamal  than  vaayilirunthu  pu’rappatta  vaakkinpadiyellaam  seyyakkadavan.  (e’n’naagamam  30:2)

தன்  தகப்பன்  வீட்டிலிருக்கிற  ஒரு  பெண்பிள்ளை  தன்  சிறுவயதிலே  கர்த்தருக்குப்  பொருத்தனைபண்ணி  யாதொரு  காரியத்தைச்  செய்யும்படி  தன்  ஆத்துமாவை  நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டால்,  (எண்ணாகமம்  30:3)

than  thagappan  veettilirukki’ra  oru  pe'npi'l'lai  than  si’ruvayathilea  karththarukkup  poruththanaipa'n'ni  yaathoru  kaariyaththaich  seyyumpadi  than  aaththumaavai  nibanthanaikkudpaduththikko'ndaal,  (e’n’naagamam  30:3)

அவள்  செய்த  பொருத்தனையையும்,  அவள்  பண்ணிக்கொண்ட  நிபந்தனையையும்  அவளுடைய  தகப்பன்  கேட்டும்  அவளுக்கு  ஒன்றும்  சொல்லாதிருப்பானானால்,  அவள்  செய்த  எல்லாப்  பொருத்தனைகளும்  அவள்  தன்  ஆத்துமாவை  நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட  நிபந்தனையும்  நிறைவேறவேண்டும்.  (எண்ணாகமம்  30:4)

ava'l  seytha  poruththanaiyaiyum,  ava'l  pa'n'nikko'nda  nibanthanaiyaiyum  ava'ludaiya  thagappan  keattum  ava'lukku  on’rum  sollaathiruppaanaanaal,  ava'l  seytha  ellaap  poruththanaiga'lum  ava'l  than  aaththumaavai  nibanthanaikkudpaduththikko'nda  nibanthanaiyum  ni’raivea’ravea'ndum.  (e’n’naagamam  30:4)

அவள்  செய்த  பொருத்தனைகளையும்,  அவள்  செய்யும்படி  தன்  ஆத்துமாவை  நிபந்தனைக்குட்படுத்தின  நிபந்தனையையும்  அவளுடைய  தகப்பன்  கேட்கிற  நாளில்  அவன்  வேண்டாம்  என்று  தடுத்தால்,  அது  நிறைவேறவேண்டியதில்லை;  அவளுடைய  தகப்பன்  வேண்டாம்  என்று  தடுத்தபடியால்,  கர்த்தர்  அதை  அவளுக்கு  மன்னிப்பார்.  (எண்ணாகமம்  30:5)

ava'l  seytha  poruththanaiga'laiyum,  ava'l  seyyumpadi  than  aaththumaavai  nibanthanaikkudpaduththina  nibanthanaiyaiyum  ava'ludaiya  thagappan  keadki’ra  naa'lil  avan  vea'ndaam  en’ru  thaduththaal,  athu  ni’raivea’ravea'ndiyathillai;  ava'ludaiya  thagappan  vea'ndaam  en’ru  thaduththapadiyaal,  karththar  athai  ava'lukku  mannippaar.  (e’n’naagamam  30:5)

அவள்  பொருத்தனை  பண்ணும்போதும்,  தன்  உதடுகளைத்  திறந்து  தன்  ஆத்துமாவை  நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளும்போதும்,  அவளுக்குப்  புருஷன்  இருந்தால்,  (எண்ணாகமம்  30:6)

ava'l  poruththanai  pa'n'numpoathum,  than  uthaduga'laith  thi’ranthu  than  aaththumaavai  nibanthanaikkudpaduththikko'l'lumpoathum,  ava'lukkup  purushan  irunthaal,  (e’n’naagamam  30:6)

அப்பொழுது  அவளுடைய  புருஷன்  அதைக்  கேட்டிருந்தும்,  அதைக்  கேள்விப்படுகிற  நாளில்  அவளுக்கு  ஒன்றும்  சொல்லாதிருந்தால்,  அவளுடைய  பொருத்தனைகளும்  அவள்  தன்  ஆத்துமாவை  நிபந்தனைக்குட்படுத்தின  நிபந்தனையும்  நிறைவேறவேண்டும்.  (எண்ணாகமம்  30:7)

appozhuthu  ava'ludaiya  purushan  athaik  keattirunthum,  athaik  kea'lvippadugi’ra  naa'lil  ava'lukku  on’rum  sollaathirunthaal,  ava'ludaiya  poruththanaiga'lum  ava'l  than  aaththumaavai  nibanthanaikkudpaduththina  nibanthanaiyum  ni’raivea’ravea'ndum.  (e’n’naagamam  30:7)

அவளுடைய  புருஷன்  அதைக்  கேட்கிற  நாளில்  அவன்  வேண்டாம்  என்று  தடுத்து,  அவள்  செய்த  பொருத்தனையும்  அவள்  தன்  ஆத்துமாவை  நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட  நிபந்தனையும்  செல்லாதபடி  செய்தானேயானால்,  அப்பொழுது  கர்த்தர்  அதை  அவளுக்கு  மன்னிப்பார்.  (எண்ணாகமம்  30:8)

ava'ludaiya  purushan  athaik  keadki’ra  naa'lil  avan  vea'ndaam  en’ru  thaduththu,  ava'l  seytha  poruththanaiyum  ava'l  than  aaththumaavai  nibanthanaikkudpaduththikko'nda  nibanthanaiyum  sellaathapadi  seythaaneayaanaal,  appozhuthu  karththar  athai  ava'lukku  mannippaar.  (e’n’naagamam  30:8)

ஒரு  விதவையாவது,  தள்ளப்பட்டுப்போன  ஒரு  ஸ்திரீயாவது  தன்  ஆத்துமாவை  எந்த  நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளுகிறாளோ  அந்த  நிபந்தனை  நிறைவேறவேண்டும்.  (எண்ணாகமம்  30:9)

oru  vithavaiyaavathu,  tha'l'lappattuppoana  oru  sthireeyaavathu  than  aaththumaavai  entha  nibanthanaikkudpaduththikko'l'lugi’raa'loa  antha  nibanthanai  ni’raivea’ravea'ndum.  (e’n’naagamam  30:9)

அவள்  தன்  புருஷனுடைய  வீட்டில்  யாதொரு  பொருத்தனை  பண்ணினாலும்,  அல்லது  யாதொரு  காரியத்தைச்  செய்யும்படி  ஆணையிட்டுத்  தன்  ஆத்துமாவை  நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும்,  (எண்ணாகமம்  30:10)

ava'l  than  purushanudaiya  veettil  yaathoru  poruththanai  pa'n'ninaalum,  allathu  yaathoru  kaariyaththaich  seyyumpadi  aa'naiyittuth  than  aaththumaavai  nibanthanaikkudpaduththikko'ndaalum,  (e’n’naagamam  30:10)

அவளுடைய  புருஷன்  அதைக்  கேட்டும்  அவளுக்கு  அதை  வேண்டாமென்று  தடுக்காமல்  மவுனமாயிருந்தால்,  அவள்  செய்த  எல்லாப்  பொருத்தனைகளும்,  அவள்  தன்  ஆத்துமாவை  நிபந்தனைக்குட்படுத்தின  எல்லா  நிபந்தனைகளும்  நிறைவேறவேண்டும்.  (எண்ணாகமம்  30:11)

ava'ludaiya  purushan  athaik  keattum  ava'lukku  athai  vea'ndaamen’ru  thadukkaamal  mavunamaayirunthaal,  ava'l  seytha  ellaap  poruththanaiga'lum,  ava'l  than  aaththumaavai  nibanthanaikkudpaduththina  ellaa  nibanthanaiga'lum  ni’raivea’ravea'ndum.  (e’n’naagamam  30:11)

அவளுடைய  புருஷன்  அவைகளைக்  கேட்ட  நாளில்  அவைகளைச்  செல்லாதபடி  பண்ணினால்,  அப்பொழுது  அவள்  செய்த  பொருத்தனைகளும்,  அவள்  தன்  ஆத்துமாவையுட்படுத்தின  நிபந்தனையைக்குறித்து  அவள்  வாயிலிருந்து  புறப்பட்டதொன்றும்  நிறைவேறவேண்டியதில்லை;  அவளுடைய  புருஷன்  அவைகளைச்  செல்லாதபடி  பண்ணினதினாலே  கர்த்தர்  அதை  அவளுக்கு  மன்னிப்பார்.  (எண்ணாகமம்  30:12)

ava'ludaiya  purushan  avaiga'laik  keatta  naa'lil  avaiga'laich  sellaathapadi  pa'n'ninaal,  appozhuthu  ava'l  seytha  poruththanaiga'lum,  ava'l  than  aaththumaavaiyudpaduththina  nibanthanaiyaikku’riththu  ava'l  vaayilirunthu  pu’rappattathon’rum  ni’raivea’ravea'ndiyathillai;  ava'ludaiya  purushan  avaiga'laich  sellaathapadi  pa'n'ninathinaalea  karththar  athai  ava'lukku  mannippaar.  (e’n’naagamam  30:12)

எந்தப்  பொருத்தனையையும்,  ஆத்துமாவைத்  தாழ்மைப்படுத்தும்படி  செய்யப்பட்ட  எந்த  ஆணையையும்,  அவளுடைய  புருஷன்  ஸ்திரப்படுத்தவுங்கூடும்,  செல்லாதபடி  பண்ணவும்  கூடும்.  (எண்ணாகமம்  30:13)

enthap  poruththanaiyaiyum,  aaththumaavaith  thaazhmaippaduththumpadi  seyyappatta  entha  aa'naiyaiyum,  ava'ludaiya  purushan  sthirappaduththavungkoodum,  sellaathapadi  pa'n'navum  koodum.  (e’n’naagamam  30:13)

அவளுடைய  புருஷன்  ஒருநாளும்  அவளுக்கு  ஒன்றும்  சொல்லாதிருந்தானாகில்,  அவன்  அவளுடைய  எல்லாப்  பொருத்தனைகளையும்,  அவள்பேரிலிருக்கிற  அவளுடைய  எல்லா  நிபந்தனைகளையும்  ஸ்திரப்படுத்துகிறான்;  அவன்  அதைக்  கேட்ட  நாளிலே  அவளுக்கு  ஒன்றும்  சொல்லாமற்  போனதினால்,  அவைகளை  ஸ்திரப்படுத்துகிறான்.  (எண்ணாகமம்  30:14)

ava'ludaiya  purushan  orunaa'lum  ava'lukku  on’rum  sollaathirunthaanaagil,  avan  ava'ludaiya  ellaap  poruththanaiga'laiyum,  ava'lpearilirukki’ra  ava'ludaiya  ellaa  nibanthanaiga'laiyum  sthirappaduththugi’raan;  avan  athaik  keatta  naa'lilea  ava'lukku  on’rum  sollaama’r  poanathinaal,  avaiga'lai  sthirappaduththugi’raan.  (e’n’naagamam  30:14)

அவன்  அவைகளைக்  கேட்டபின்பு  செல்லாதபடி  பண்ணினால்,  அவளுடைய  அக்கிரமத்தை  அவன்  சுமப்பான்  என்றார்.  (எண்ணாகமம்  30:15)

avan  avaiga'laik  keattapinbu  sellaathapadi  pa'n'ninaal,  ava'ludaiya  akkiramaththai  avan  sumappaan  en’raar.  (e’n’naagamam  30:15)

புருஷனையும்  ஸ்திரீயையும்,  தகப்பனையும்  தகப்பனுடைய  வீட்டில்  சிறுவயதில்  இருக்கிற  அவன்  குமாரத்தியையும்  குறித்து,  கர்த்தர்  மோசேக்கு  விதித்த  கட்டளைகள்  இவைகளே.  (எண்ணாகமம்  30:16)

purushanaiyum  sthireeyaiyum,  thagappanaiyum  thagappanudaiya  veettil  si’ruvayathil  irukki’ra  avan  kumaaraththiyaiyum  ku’riththu,  karththar  moaseakku  vithiththa  katta'laiga'l  ivaiga'lea.  (e’n’naagamam  30:16)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!