Monday, November 07, 2016

E'n'naagamam 18 | எண்ணாகமம் 18 | Numbers 18

பின்பு  கர்த்தர்  ஆரோனை  நோக்கி:  நீயும்  உன்னோடேகூட  உன்  குமாரரும்  உன்  தகப்பன்  வம்சத்தாரும்  பரிசுத்த  ஸ்தலத்தைப்பற்றிய  அக்கிரமத்தைச்  சுமக்கவேண்டும்;  நீயும்  உன்னோடேகூட  உன்  குமாரரும்  உங்கள்  ஆசாரிய  ஊழியத்தைப்பற்றிய  அக்கிரமத்தைச்  சுமக்கவேண்டும்.  (எண்ணாகமம்  18:1)

pinbu  karththar  aaroanai  noakki:  neeyum  unnoadeakooda  un  kumaararum  un  thagappan  vamsaththaarum  parisuththa  sthalaththaippat’riya  akkiramaththaich  sumakkavea'ndum;  neeyum  unnoadeakooda  un  kumaararum  ungga'l  aasaariya  oozhiyaththaippat’riya  akkiramaththaich  sumakkavea'ndum.  (e’n’naagamam  18:1)

உன்  தகப்பனாகிய  லேவியின்  கோத்திரத்தாரான  உன்  சகோதரரையும்  உன்னோடே  கூடியிருக்கவும்  உன்னிடத்திலே  சேவிக்கவும்  அவர்களைச்  சேர்த்துக்கொள்;  நீயும்  உன்  குமாரருமோ  சாட்சியின்  கூடாரத்துக்குமுன்  ஊழியம்  செய்யக்கடவீர்கள்.  (எண்ணாகமம்  18:2)

un  thagappanaagiya  leaviyin  koaththiraththaaraana  un  sagoathararaiyum  unnoadea  koodiyirukkavum  unnidaththilea  seavikkavum  avarga'laich  searththukko'l;  neeyum  un  kumaararumoa  saadchiyin  koodaaraththukkumun  oozhiyam  seyyakkadaveerga'l.  (e’n’naagamam  18:2)

அவர்கள்  உன்  காவலையும்  கூடாரம்  அனைத்தின்  காவலையும்  காக்கக்கடவர்கள்;  ஆகிலும்  அவர்களும்  நீங்களும்  சாகாதபடிக்கு,  அவர்கள்  பரிசுத்த  ஸ்தலத்தின்  பணிமுட்டுகளண்டையிலும்  பலிபீடத்தண்டையிலும்  சேராமல்,  (எண்ணாகமம்  18:3)

avarga'l  un  kaavalaiyum  koodaaram  anaiththin  kaavalaiyum  kaakkakkadavarga'l;  aagilum  avarga'lum  neengga'lum  saagaathapadikku,  avarga'l  parisuththa  sthalaththin  pa'nimuttuga'la'ndaiyilum  balipeedaththa'ndaiyilum  searaamal,  (e’n’naagamam  18:3)

உன்னோடே  கூடிக்கொண்டு,  கூடாரத்துக்கடுத்த  எல்லாப்  பணிவிடையையும்  செய்ய,  ஆசரிப்புக்  கூடாரத்தின்  காவலைக்  காக்கக்கடவர்கள்;  அந்நியன்  ஒருவனும்  உங்களிடத்தில்  சேரக்கூடாது.  (எண்ணாகமம்  18:4)

unnoadea  koodikko'ndu,  koodaaraththukkaduththa  ellaap  pa'nividaiyaiyum  seyya,  aasarippuk  koodaaraththin  kaavalaik  kaakkakkadavarga'l;  anniyan  oruvanum  ungga'lidaththil  searakkoodaathu.  (e’n’naagamam  18:4)

இஸ்ரவேல்  புத்திரர்மேல்  இனிக்  கடுங்கோபம்  வராதபடிக்கு,  நீங்கள்  பரிசுத்த  ஸ்தலத்தின்  காவலையும்  பலிபீடத்தின்  காவலையும்  காக்கக்கடவீர்கள்.  (எண்ணாகமம்  18:5)

israveal  puththirarmeal  inik  kadungkoabam  varaathapadikku,  neengga'l  parisuththa  sthalaththin  kaavalaiyum  balipeedaththin  kaavalaiyum  kaakkakkadaveerga'l.  (e’n’naagamam  18:5)

ஆசரிப்புக்  கூடாரத்தின்  பணிவிடையைச்  செய்ய,  கர்த்தருக்குக்  கொடுக்கப்பட்ட  உங்கள்  சகோதரராகிய  லேவியரை  நான்  இஸ்ரவேல்  புத்திரரிலிருந்து  பிரித்து,  உங்களுக்குத்  தத்தமாகக்  கொடுத்தேன்.  (எண்ணாகமம்  18:6)

aasarippuk  koodaaraththin  pa'nividaiyaich  seyya,  karththarukkuk  kodukkappatta  ungga'l  sagoathararaagiya  leaviyarai  naan  israveal  puththirarilirunthu  piriththu,  ungga'lukkuth  thaththamaagak  koduththean.  (e’n’naagamam  18:6)

ஆகையால்  நீயும்  உன்னோடேகூட  உன்  குமாரரும்  பலிபீடத்துக்கும்  திரைக்கு  உட்புறத்துக்கும்  அடுத்த  எல்லாவற்றையும்  செய்யும்பொருட்டு,  உங்கள்  ஆசாரிய  ஊழியத்தைக்  காத்துச்  சேவிக்கக்கடவீர்கள்;  உங்கள்  ஆசாரிய  ஊழியத்தை  உங்களுக்கு  தத்தமாக  அருளினேன்;  அதைச்  செய்யும்படி  சேருகிற  அந்நியன்  கொலைசெய்யப்படக்கடவன்  என்றார்.  (எண்ணாகமம்  18:7)

aagaiyaal  neeyum  unnoadeakooda  un  kumaararum  balipeedaththukkum  thiraikku  udpu’raththukkum  aduththa  ellaavat’raiyum  seyyumporuttu,  ungga'l  aasaariya  oozhiyaththaik  kaaththuch  seavikkakkadaveerga'l;  ungga'l  aasaariya  oozhiyaththai  ungga'lukku  thaththamaaga  aru'linean;  athaich  seyyumpadi  searugi’ra  anniyan  kolaiseyyappadakkadavan  en’raar.  (e’n’naagamam  18:7)

பின்னும்  கர்த்தர்  ஆரோனை  நோக்கி:  இஸ்ரவேல்  புத்திரர்  பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம்  எனக்கு  ஏறெடுத்துப்  படைக்கப்படும்  படைப்புகளைக்  காத்துக்கொண்டிருக்கிறீர்களே,  அவைகளை  உனக்குக்  கொடுத்தேன்;  அபிஷேகத்தினிமித்தம்  அவைகளை  உனக்கும்  உன்  குமாரருக்கும்  நித்திய  கட்டளையாகக்  கொடுத்தேன்.  (எண்ணாகமம்  18:8)

pinnum  karththar  aaroanai  noakki:  israveal  puththirar  parisuththappaduththugi’ravaiga'lilellaam  enakku  ea’reduththup  padaikkappadum  padaippuga'laik  kaaththukko'ndirukki’reerga'lea,  avaiga'lai  unakkuk  koduththean;  abisheagaththinimiththam  avaiga'lai  unakkum  un  kumaararukkum  niththiya  katta'laiyaagak  koduththean.  (e’n’naagamam  18:8)

மகா  பரிசுத்தமானவைகளிலே,  அக்கினிக்கு  உட்படுத்தப்படாமல்  உன்னுடையதாயிருப்பது  எவையெனில்,  அவர்கள்  எனக்குப்  படைக்கும்  எல்லாப்  படைப்பும்,  எல்லாப்  போஜனபலியும்,  எல்லாப்  பாவநிவாரணபலியும்,  எல்லாக்  குற்றநிவாரணபலியும்,  உனக்கும்  உன்  குமாரருக்கும்  பரிசுத்தமாயிருக்கும்.  (எண்ணாகமம்  18:9)

mahaa  parisuththamaanavaiga'lilea,  akkinikku  udpaduththappadaamal  unnudaiyathaayiruppathu  evaiyenil,  avarga'l  enakkup  padaikkum  ellaap  padaippum,  ellaap  poajanabaliyum,  ellaap  paavanivaara'nabaliyum,  ellaak  kut’ranivaara'nabaliyum,  unakkum  un  kumaararukkum  parisuththamaayirukkum.  (e’n’naagamam  18:9)

பரிசுத்த  ஸ்தலத்திலே  அவைகளைப்  புசிக்கவேண்டும்;  ஆண்மக்கள்  யாவரும்  அவைகளைப்  புசிக்கலாம்;  அவைகள்  உனக்குப்  பரிசுத்தமாயிருப்பதாக.  (எண்ணாகமம்  18:10)

parisuththa  sthalaththilea  avaiga'laip  pusikkavea'ndum;  aa'nmakka'l  yaavarum  avaiga'laip  pusikkalaam;  avaiga'l  unakkup  parisuththamaayiruppathaaga.  (e’n’naagamam  18:10)

இஸ்ரவேல்  புத்திரர்  ஏறெடுத்துப்  படைக்கிறதும்  அசைவாட்டுகிறதுமான  அவர்களுடைய  எல்லாக்  காணிக்கைகளின்  படைப்பும்  உன்னுடையவைகளாயிருக்கும்;  அவைகளை  உனக்கும்  உன்  குமாரருக்கும்  உன்  குமாரத்திகளுக்கும்  நித்திய  நியமமாகக்  கொடுத்தேன்;  உன்  வீட்டிலே  சுத்தமானவர்கள்  எல்லாரும்  அவைகளைப்  புசிக்கலாம்.  (எண்ணாகமம்  18:11)

israveal  puththirar  ea’reduththup  padaikki’rathum  asaivaattugi’rathumaana  avarga'ludaiya  ellaak  kaa'nikkaiga'lin  padaippum  unnudaiyavaiga'laayirukkum;  avaiga'lai  unakkum  un  kumaararukkum  un  kumaaraththiga'lukkum  niththiya  niyamamaagak  koduththean;  un  veettilea  suththamaanavarga'l  ellaarum  avaiga'laip  pusikkalaam.  (e’n’naagamam  18:11)

அவர்கள்  கர்த்தருக்குக்  கொடுக்கும்  அவர்களுடைய  முதற்பலன்களாகிய  உச்சிதமான  எண்ணெயையும்,  உச்சிதமான  திராட்சரசத்தையும்,  தானியத்தையும்  உனக்கு  உரியதாகக்  கொடுத்தேன்.  (எண்ணாகமம்  18:12)

avarga'l  karththarukkuk  kodukkum  avarga'ludaiya  mutha’rpalanga'laagiya  uchchithamaana  e'n'neyaiyum,  uchchithamaana  thiraadcharasaththaiyum,  thaaniyaththaiyum  unakku  uriyathaagak  koduththean.  (e’n’naagamam  18:12)

தங்கள்  தேசத்தில்  முதற்பழுத்த  பலனில்  அவர்கள்  கர்த்தருக்குக்  கொண்டுவருவதெல்லாம்  உனக்கு  உரியதாகும்;  உன்  வீட்டிலே  சுத்தமாயிருப்பவர்கள்  யாவரும்  அவைகளைப்  புசிக்கலாம்.  (எண்ணாகமம்  18:13)

thangga'l  theasaththil  mutha’rpazhuththa  palanil  avarga'l  karththarukkuk  ko'nduvaruvathellaam  unakku  uriyathaagum;  un  veettilea  suththamaayiruppavarga'l  yaavarum  avaiga'laip  pusikkalaam.  (e’n’naagamam  18:13)

இஸ்ரவேலிலே  சாபத்தீடாக  நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம்  உனக்கு  உரியதாயிருக்கும்.  (எண்ணாகமம்  18:14)

isravealilea  saabaththeedaaga  nearnthuko'l'lappattathellaam  unakku  uriyathaayirukkum.  (e’n’naagamam  18:14)

மனிதரிலும்  மிருகங்களிலும்  அவர்கள்  கர்த்தருக்குச்  செலுத்தும்  சமஸ்த  பிராணிகளுக்குள்ளே  கர்ப்பந்திறந்து  பிறக்கும்  யாவும்  உனக்கு  உரியதாயிருக்கும்;  ஆனாலும்  மனிதரின்  முதற்பேற்றை  அகத்தியமாய்  மீட்கவேண்டும்;  தீட்டான  மிருகஜீவனின்  தலையீற்றையும்  மீட்கவேண்டும்.  (எண்ணாகமம்  18:15)

manitharilum  mirugangga'lilum  avarga'l  karththarukkuch  seluththum  samastha  piraa'niga'lukku'l'lea  karppanthi’ranthu  pi’rakkum  yaavum  unakku  uriyathaayirukkum;  aanaalum  manitharin  mutha’rpeat’rai  agaththiyamaay  meedkavea'ndum;  theettaana  mirugajeevanin  thalaiyeet’raiyum  meedkavea'ndum.  (e’n’naagamam  18:15)

மீட்கவேண்டியவைகள்  ஒரு  மாதத்திற்கு  மேற்பட்டதானால்,  உன்  மதிப்புக்கு  இசைய  பரிசுத்த  ஸ்தலத்தின்  சேக்கல்  கணக்கின்படி  ஐந்து  சேக்கல்  பணத்தாலே  அவைகளை  மீட்கவேண்டும்;  ஒரு  சேக்கல்  இருபது  கேரா.  (எண்ணாகமம்  18:16)

meedkavea'ndiyavaiga'l  oru  maathaththi’rku  mea’rpattathaanaal,  un  mathippukku  isaiya  parisuththa  sthalaththin  seakkal  ka'nakkinpadi  ainthu  seakkal  pa'naththaalea  avaiga'lai  meedkavea'ndum;  oru  seakkal  irubathu  kearaa.  (e’n’naagamam  18:16)

மாட்டின்  தலையீற்றும்,  செம்மறியாட்டின்  தலையீற்றும்,  வெள்ளாட்டின்  தலையீற்றுமோ  மீட்கப்படவேண்டாம்;  அவைகள்  பரிசுத்தமானவைகள்;  அவைகளின்  இரத்தத்தைப்  பலிபீடத்தின்மேல்  தெளித்து,  அவைகளின்  கொழுப்பைக்  கர்த்தருக்குச்  சுகந்த  வாசனையான  தகனமாகத்  தகனிக்கவேண்டும்.  (எண்ணாகமம்  18:17)

maattin  thalaiyeet’rum,  semma’riyaattin  thalaiyeet’rum,  ve'l'laattin  thalaiyeet’rumoa  meedkappadavea'ndaam;  avaiga'l  parisuththamaanavaiga'l;  avaiga'lin  iraththaththaip  balipeedaththinmeal  the'liththu,  avaiga'lin  kozhuppaik  karththarukkuch  sugantha  vaasanaiyaana  thaganamaagath  thaganikkavea'ndum.  (e’n’naagamam  18:17)

அசைவாட்டும்  மார்க்கண்டத்தைப்போலும்  வலது  முன்னந்தொடையைப்போலும்  அவைகளின்  மாம்சமும்  உன்னுடையதாகும்.  (எண்ணாகமம்  18:18)

asaivaattum  maarkka'ndaththaippoalum  valathu  munnanthodaiyaippoalum  avaiga'lin  maamsamum  unnudaiyathaagum.  (e’n’naagamam  18:18)

இஸ்ரவேல்  புத்திரர்  கர்த்தருக்கு  ஏறெடுத்துப்  படைக்கிற  பரிசுத்த  படைப்புகளையெல்லாம்  உனக்கும்  உன்  குமாரருக்கும்  உன்  குமாரத்திகளுக்கும்  நித்திய  கட்டளையாகக்  கொடுத்தேன்;  கர்த்தருடைய  சந்நிதியில்  இது  உனக்கும்  உன்  சந்ததிக்கும்  என்றைக்கும்  செல்லும்  மாறாத  உடன்படிக்கை  என்றார்.  (எண்ணாகமம்  18:19)

israveal  puththirar  karththarukku  ea’reduththup  padaikki’ra  parisuththa  padaippuga'laiyellaam  unakkum  un  kumaararukkum  un  kumaaraththiga'lukkum  niththiya  katta'laiyaagak  koduththean;  karththarudaiya  sannithiyil  ithu  unakkum  un  santhathikkum  en’raikkum  sellum  maa’raatha  udanpadikkai  en’raar.  (e’n’naagamam  18:19)

பின்னும்  கர்த்தர்  ஆரோனை  நோக்கி:  அவர்களுடைய  தேசத்தில்  நீ  ஒன்றையும்  சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம்,  அவர்கள்  நடுவே  உனக்குப்  பங்கு  உண்டாயிருக்கவும்  வேண்டாம்;  இஸ்ரவேல்  புத்திரர்  நடுவில்  நானே  உன்  பங்கும்  உன்  சுதந்தரமுமாய்  இருக்கிறேன்.  (எண்ணாகமம்  18:20)

pinnum  karththar  aaroanai  noakki:  avarga'ludaiya  theasaththil  nee  on’raiyum  suthanthariththukko'l'lavea'ndaam,  avarga'l  naduvea  unakkup  panggu  u'ndaayirukkavum  vea'ndaam;  israveal  puththirar  naduvil  naanea  un  panggum  un  suthantharamumaay  irukki’rean.  (e’n’naagamam  18:20)

இதோ,  லேவியின்  புத்திரர்  ஆசரிப்புக்  கூடாரத்தின்  பணிவிடையைச்  செய்கிற  அவர்களுடைய  வேலைக்காக,  இஸ்ரவேலருக்குள்ளவை  எல்லாவற்றிலும்  தசமபாகத்தை  அவர்களுக்குச்  சுதந்தரமாகக்  கொடுத்தேன்.  (எண்ணாகமம்  18:21)

ithoa,  leaviyin  puththirar  aasarippuk  koodaaraththin  pa'nividaiyaich  seygi’ra  avarga'ludaiya  vealaikkaaga,  isravealarukku'l'lavai  ellaavat’rilum  thasamapaagaththai  avarga'lukkuch  suthantharamaagak  koduththean.  (e’n’naagamam  18:21)

இஸ்ரவேல்  புத்திரர்  குற்றஞ்சுமந்து  சாகாதபடிக்கு,  இனி  ஆசரிப்புக்  கூடாரத்தைக்  கிட்டாதிருக்கக்கடவர்கள்.  (எண்ணாகமம்  18:22)

israveal  puththirar  kut’ragnsumanthu  saagaathapadikku,  ini  aasarippuk  koodaaraththaik  kittaathirukkakkadavarga'l.  (e’n’naagamam  18:22)

லேவியர்மாத்திரம்  ஆசரிப்புக்  கூடாரத்துக்கடுத்த  வேலைகளைச்  செய்யவேண்டும்;  அவர்கள்  தங்கள்  அக்கிரமத்தைச்  சுமப்பார்கள்;  இஸ்ரவேல்  புத்திரர்  நடுவே  அவர்களுக்குச்  சுதந்தரம்  இல்லை  என்பது  உங்கள்  தலைமுறைதோறும்  நித்திய  கட்டளையாயிருக்கும்.  (எண்ணாகமம்  18:23)

leaviyarmaaththiram  aasarippuk  koodaaraththukkaduththa  vealaiga'laich  seyyavea'ndum;  avarga'l  thangga'l  akkiramaththaich  sumappaarga'l;  israveal  puththirar  naduvea  avarga'lukkuch  suthantharam  illai  enbathu  ungga'l  thalaimu’raithoa’rum  niththiya  katta'laiyaayirukkum.  (e’n’naagamam  18:23)

இஸ்ரவேல்  புத்திரர்  கர்த்தருக்கு  ஏறெடுத்துப்  படைக்கும்  படைப்பாகிய  தசமபாகத்தை  லேவியருக்குச்  சுதந்தரமாகக்  கொடுத்தேன்;  ஆகையால்  இஸ்ரவேல்  புத்திரரின்  நடுவே  அவர்களுக்குச்  சுதந்தரமில்லையென்று  அவர்களுக்குச்  சொன்னேன்  என்றார்.  (எண்ணாகமம்  18:24)

israveal  puththirar  karththarukku  ea’reduththup  padaikkum  padaippaagiya  thasamapaagaththai  leaviyarukkuch  suthantharamaagak  koduththean;  aagaiyaal  israveal  puththirarin  naduvea  avarga'lukkuch  suthantharamillaiyen’ru  avarga'lukkuch  sonnean  en’raar.  (e’n’naagamam  18:24)

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  18:25)

pinnum  karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  18:25)

நீ  லேவியரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  இஸ்ரவேல்  புத்திரர்  கையில்  வாங்கிக்கொள்ளும்படி  நான்  உங்களுக்குச்  சுதந்தரமாகக்  கொடுத்த  தசமபாகத்தை  நீங்கள்  அவர்கள்  கையில்  வாங்கும்போது,  தசமபாகத்தில்  பத்தில்  ஒரு  பங்கைக்  கர்த்தருக்கு  ஏறெடுத்துப்  படைக்கும்  படைப்பாகச்  செலுத்தவேண்டும்.  (எண்ணாகமம்  18:26)

nee  leaviyaroadea  sollavea'ndiyathu  ennaven’raal:  israveal  puththirar  kaiyil  vaanggikko'l'lumpadi  naan  ungga'lukkuch  suthantharamaagak  koduththa  thasamapaagaththai  neengga'l  avarga'l  kaiyil  vaanggumpoathu,  thasamapaagaththil  paththil  oru  panggaik  karththarukku  ea’reduththup  padaikkum  padaippaagach  seluththavea'ndum.  (e’n’naagamam  18:26)

நீங்கள்  ஏறெடுத்துப்  படைக்கும்  இந்தப்  படைப்பு  களத்தின்  தானியத்தைப்போலும்,  ஆலையின்  இரசத்தைப்போலும்  உங்களுக்கு  எண்ணப்படும்.  (எண்ணாகமம்  18:27)

neengga'l  ea’reduththup  padaikkum  inthap  padaippu  ka'laththin  thaaniyaththaippoalum,  aalaiyin  irasaththaippoalum  ungga'lukku  e'n'nappadum.  (e’n’naagamam  18:27)

இப்படியே  நீங்கள்  இஸ்ரவேல்  புத்திரர்  கையில்  வாங்கும்  தசமபாகமாகிய  உங்கள்  பங்குகளிலெல்லாம்  நீங்களும்  கர்த்தருக்கு  என்று  ஒரு  படைப்பை  ஏறெடுத்துப்  படைத்து,  அந்தப்  படைப்பை  ஆசாரியனாகிய  ஆரோனுக்குக்  கொடுக்கவேண்டும்.  (எண்ணாகமம்  18:28)

ippadiyea  neengga'l  israveal  puththirar  kaiyil  vaanggum  thasamapaagamaagiya  ungga'l  pangguga'lilellaam  neengga'lum  karththarukku  en’ru  oru  padaippai  ea’reduththup  padaiththu,  anthap  padaippai  aasaariyanaagiya  aaroanukkuk  kodukkavea'ndum.  (e’n’naagamam  18:28)

உங்களுக்குக்  கொடுக்கப்படுகிற  ஒவ்வொரு  காணிக்கையிலுமுள்ள  உச்சிதமான  பரிசுத்த  பங்கையெல்லாம்  கர்த்தருக்கு  ஏறெடுத்துப்  படைக்கும்  படைப்பாகச்  செலுத்தவேண்டும்.  (எண்ணாகமம்  18:29)

ungga'lukkuk  kodukkappadugi’ra  ovvoru  kaa'nikkaiyilumu'l'la  uchchithamaana  parisuththa  panggaiyellaam  karththarukku  ea’reduththup  padaikkum  padaippaagach  seluththavea'ndum.  (e’n’naagamam  18:29)

ஆதலால்  நீ  அவர்களோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  அதில்  உச்சிதமானதை  நீங்கள்  ஏறெடுத்துப்  படைக்கும்போது,  அது  களத்தின்  வரத்திலும்  ஆலையின்  வரத்திலும்  இருந்து  எடுத்துச்  செலுத்துகிறதுபோல  லேவியருக்கு  எண்ணப்படும்.  (எண்ணாகமம்  18:30)

aathalaal  nee  avarga'loadea  sollavea'ndiyathu  ennaven’raal:  athil  uchchithamaanathai  neengga'l  ea’reduththup  padaikkumpoathu,  athu  ka'laththin  varaththilum  aalaiyin  varaththilum  irunthu  eduththuch  seluththugi’rathupoala  leaviyarukku  e'n'nappadum.  (e’n’naagamam  18:30)

அதை  நீங்களும்  உங்கள்  குடும்பத்தாரும்  எவ்விடத்திலும்  புசிக்கலாம்;  அது  நீங்கள்  ஆசரிப்புக்  கூடாரத்திலே  செய்யும்  பணிவிடைக்கு  ஈடான  உங்கள்  சம்பளம்.  (எண்ணாகமம்  18:31)

athai  neengga'lum  ungga'l  kudumbaththaarum  evvidaththilum  pusikkalaam;  athu  neengga'l  aasarippuk  koodaaraththilea  seyyum  pa'nividaikku  eedaana  ungga'l  samba'lam.  (e’n’naagamam  18:31)

இப்படி  அதில்  உச்சிதமானதை  ஏறெடுத்துப்  படைத்தீர்களானால்,  நீங்கள்  அதினிமித்தம்  பாவம்  சுமக்கமாட்டீர்கள்;  நீங்கள்  சாகாதிருக்கும்படிக்கு,  இஸ்ரவேல்  புத்திரரின்  பரிசுத்தமானவைகளைத்  தீட்டுப்படுத்தலாகாது  என்று  சொல்  என்றார்.  (எண்ணாகமம்  18:32)

ippadi  athil  uchchithamaanathai  ea’reduththup  padaiththeerga'laanaal,  neengga'l  athinimiththam  paavam  sumakkamaatteerga'l;  neengga'l  saagaathirukkumpadikku,  israveal  puththirarin  parisuththamaanavaiga'laith  theettuppaduththalaagaathu  en’ru  sol  en’raar.  (e’n’naagamam  18:32)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!