Sunday, November 06, 2016

E'n'naagamam 1 | எண்ணாகமம் 1 | Numbers 1

இஸ்ரவேலர்  எகிப்துதேசத்திலிருந்து  புறப்பட்ட  இரண்டாம்  வருஷம்  இரண்டாம்  மாதம்  முதல்  தேதியில்,  கர்த்தர்  சீனாய்  வனாந்தரத்திலிருக்கிற  ஆசரிப்புக்  கூடாரத்திலே  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  1:1)

isravealar  egipthutheasaththilirunthu  pu’rappatta  ira'ndaam  varusham  ira'ndaam  maatham  muthal  theathiyil,  karththar  seenaay  vanaantharaththilirukki’ra  aasarippuk  koodaaraththilea  moaseayai  noakki:  (e’n’naagamam  1:1)

நீங்கள்  இஸ்ரவேல்  புத்திரரின்  முழுச்சபையாயிருக்கிற  அவர்கள்  பிதாக்களுடைய  வீட்டு  வம்சங்களிலுள்ள  புருஷர்களாகிய  சகல  தலைகளையும்  பேர்பேராக  எண்ணித்  தொகையேற்றுங்கள்.  (எண்ணாகமம்  1:2)

neengga'l  israveal  puththirarin  muzhuchsabaiyaayirukki’ra  avarga'l  pithaakka'ludaiya  veettu  vamsangga'lilu'l'la  purusharga'laagiya  sagala  thalaiga'laiyum  pearpearaaga  e'n'nith  thogaiyeat’rungga'l.  (e’n’naagamam  1:2)

இஸ்ரவேலிலே  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்துக்குப்  புறப்படத்தக்கவர்கள்  எல்லாரையும்  அவர்கள்  சேனைகளின்படி  நீயும்  ஆரோனும்  எண்ணிப்  பார்ப்பீர்களாக.  (எண்ணாகமம்  1:3)

isravealilea  irubathu  vayathu'l'lavarga'l  muthal  yuththaththukkup  pu’rappadaththakkavarga'l  ellaaraiyum  avarga'l  seanaiga'linpadi  neeyum  aaroanum  e'n'nip  paarppeerga'laaga.  (e’n’naagamam  1:3)

ஒவ்வொரு  கோத்திரத்துக்கு  ஒவ்வொரு  மனிதன்  உங்களோடே  இருப்பானாக;  அவன்  தன்  பிதாக்களின்  வம்சத்துக்குத்  தலைவனாயிருக்கவேண்டும்.  (எண்ணாகமம்  1:4)

ovvoru  koaththiraththukku  ovvoru  manithan  ungga'loadea  iruppaanaaga;  avan  than  pithaakka'lin  vamsaththukkuth  thalaivanaayirukkavea'ndum.  (e’n’naagamam  1:4)

உங்களோடே  நிற்கவேண்டிய  மனிதருடைய  நாமங்களாவன:  ரூபன்  கோத்திரத்தில்  சேதேயூருடைய  குமாரன்  எலிசூர்.  (எண்ணாகமம்  1:5)

ungga'loadea  ni’rkavea'ndiya  manitharudaiya  naamangga'laavana:  rooban  koaththiraththil  seatheayoorudaiya  kumaaran  elisoor.  (e’n’naagamam  1:5)

சிமியோன்  கோத்திரத்தில்  சூரிஷதாயின்  குமாரன்  செலூமியேல்.  (எண்ணாகமம்  1:6)

simiyoan  koaththiraththil  soorishathaayin  kumaaran  seloomiyeal.  (e’n’naagamam  1:6)

யூதா  கோத்திரத்தில்  அம்மினதாபின்  குமாரன்  நகசோன்.  (எண்ணாகமம்  1:7)

yoothaa  koaththiraththil  amminathaabin  kumaaran  nagasoan.  (e’n’naagamam  1:7)

இசக்கார்  கோத்திரத்தில்  சூவாரின்  குமாரன்  நெதனெயேல்.  (எண்ணாகமம்  1:8)

isakkaar  koaththiraththil  soovaarin  kumaaran  nethaneyeal.  (e’n’naagamam  1:8)

செபுலோன்  கோத்திரத்தில்  ஏலோனின்  குமாரன்  எலியாப்.  (எண்ணாகமம்  1:9)

sebuloan  koaththiraththil  ealoanin  kumaaran  eliyaab.  (e’n’naagamam  1:9)

யோசேப்பின்  குமாரராகிய  எப்பிராயீம்  கோத்திரத்தில்  அம்மியூதின்  குமாரன்  எலிஷாமா;  மனாசே  கோத்திரத்தில்  பெதாசூரின்  குமாரன்  கமாலியேல்.  (எண்ணாகமம்  1:10)

yoaseappin  kumaararaagiya  eppiraayeem  koaththiraththil  ammiyoothin  kumaaran  elishaamaa;  manaasea  koaththiraththil  pethaasoorin  kumaaran  kamaaliyeal.  (e’n’naagamam  1:10)

பென்யமீன்  கோத்திரத்தில்  கீதெயோனின்  குமாரன்  அபீதான்.  (எண்ணாகமம்  1:11)

benyameen  koaththiraththil  keetheyoanin  kumaaran  abeethaan.  (e’n’naagamam  1:11)

தாண்  கோத்திரத்தில்  அம்மிஷதாயின்  குமாரன்  அகியேசேர்.  (எண்ணாகமம்  1:12)

thaa'n  koaththiraththil  ammishathaayin  kumaaran  agiyeasear.  (e’n’naagamam  1:12)

ஆசேர்  கோத்திரத்தில்  ஓகிரானின்  குமாரன்  பாகியேல்.  (எண்ணாகமம்  1:13)

aasear  koaththiraththil  oakiraanin  kumaaran  paagiyeal.  (e’n’naagamam  1:13)

காத்  கோத்திரத்தில்  தேகுவேலின்  குமாரன்  எலியாசாப்.  (எண்ணாகமம்  1:14)

kaath  koaththiraththil  theaguvealin  kumaaran  eliyaasaap.  (e’n’naagamam  1:14)

நப்தலி  கோத்திரத்தில்  ஏனானின்  குமாரன்  அகீரா.  (எண்ணாகமம்  1:15)

napthali  koaththiraththil  eanaanin  kumaaran  ageeraa.  (e’n’naagamam  1:15)

இவர்களே  சபையில்  ஏற்படுத்தப்பட்டவர்களும்,  தங்கள்  தங்கள்  பிதாக்களுடைய  கோத்திரங்களில்  பிரபுக்களும்,  இஸ்ரவேலில்  ஆயிரவர்களுக்குத்  தலைவருமாயிருப்பவர்கள்  என்றார்.  (எண்ணாகமம்  1:16)

ivarga'lea  sabaiyil  ea’rpaduththappattavarga'lum,  thangga'l  thangga'l  pithaakka'ludaiya  koaththirangga'lil  pirabukka'lum,  isravealil  aayiravarga'lukkuth  thalaivarumaayiruppavarga'l  en’raar.  (e’n’naagamam  1:16)

அப்படியே  மோசேயும்  ஆரோனும்  பேர்பேராகக்  குறிக்கப்பட்ட  இந்த  மனிதரைக்  கூட்டிக்கொண்டு,  (எண்ணாகமம்  1:17)

appadiyea  moaseayum  aaroanum  pearpearaagak  ku’rikkappatta  intha  manitharaik  koottikko'ndu,  (e’n’naagamam  1:17)

இரண்டாம்  மாதம்  முதல்  தேதியில்  சபையார்  எல்லாரையும்  கூடிவரச்செய்தார்கள்.  அப்பொழுது  அவர்கள்  தங்கள்  தங்கள்  குடும்பத்தின்படிக்கும்,  பிதாக்களுடைய  வம்சத்தின்படிக்கும்,  நாமத்  தொகையின்படிக்கும்,  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  தலைதலையாகத்  தங்கள்  வம்ச  உற்பத்தியைத்  தெரிவித்தார்கள்.  (எண்ணாகமம்  1:18)

ira'ndaam  maatham  muthal  theathiyil  sabaiyaar  ellaaraiyum  koodivarachseythaarga'l.  appozhuthu  avarga'l  thangga'l  thangga'l  kudumbaththinpadikkum,  pithaakka'ludaiya  vamsaththinpadikkum,  naamath  thogaiyinpadikkum,  irubathu  vayathu'l'lavarga'l  muthal  thalaithalaiyaagath  thangga'l  vamsa  u’rpaththiyaith  theriviththaarga'l.  (e’n’naagamam  1:18)

இப்படிக்  கர்த்தர்  கட்டளையிட்டபடியே,  மோசே  அவர்களைச்  சீனாய்  வனாந்தரத்தில்  எண்ணிப்பார்த்தான்.  (எண்ணாகமம்  1:19)

ippadik  karththar  katta'laiyittapadiyea,  moasea  avarga'laich  seenaay  vanaantharaththil  e'n'nippaarththaan.  (e’n’naagamam  1:19)

இஸ்ரவேலின்  மூத்தகுமாரனாகிய  ரூபன்  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  தலைதலையாக  எண்ணப்பட்டபோது,  (எண்ணாகமம்  1:20)

isravealin  mooththakumaaranaagiya  rooban  puththirarudaiya  pithaakka'lin  veettu  vamsaththaaril  irubathu  vayathu'l'lavarga'lmuthal  yuththaththi’rkup  pu’rappadaththakka  purusharga'l  ellaarum  thalaithalaiyaaga  e'n'nappattapoathu,  (e’n’naagamam  1:20)

ரூபன்  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  நாற்பத்தாறாயிரத்து  ஐந்நூறுபேர்.  (எண்ணாகமம்  1:21)

rooban  koaththiraththil  e'n'nappattavarga'l,  naa’rpaththaa’raayiraththu  ainnoo’rupear.  (e’n’naagamam  1:21)

சிமியோன்  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  தலைதலையாக  எண்ணப்பட்டபோது,  (எண்ணாகமம்  1:22)

simiyoan  puththirarudaiya  pithaakka'lin  veettu  vamsaththaaril  irubathu  vayathu'l'lavarga'l  muthal  yuththaththi’rkup  pu’rappadaththakka  purusharga'l  ellaarum  thalaithalaiyaaga  e'n'nappattapoathu,  (e’n’naagamam  1:22)

சிமியோன்  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  ஐம்பத்தொன்பதினாயிரத்து  முந்நூறுபேர்.  (எண்ணாகமம்  1:23)

simiyoan  koaththiraththil  e'n'nappattavarga'l,  aimbaththonbathinaayiraththu  munnoo’rupear.  (e’n’naagamam  1:23)

காத்  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டபோது,  (எண்ணாகமம்  1:24)

kaath  puththirarudaiya  pithaakka'lin  veettu  vamsaththaaril  irubathu  vayathu'l'lavarga'l  muthal  yuththaththi’rkup  pu’rappadaththakka  purusharga'l  ellaarum  e'n'nappattapoathu,  (e’n’naagamam  1:24)

காத்  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  நாற்பத்தையாயிரத்து  அறுநூற்று  ஐம்பதுபேர்.  (எண்ணாகமம்  1:25)

kaath  koaththiraththil  e'n'nappattavarga'l,  naa’rpaththaiyaayiraththu  a’runoot’ru  aimbathupear.  (e’n’naagamam  1:25)

யூதா  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டபோது,  (எண்ணாகமம்  1:26)

yoothaa  puththirarudaiya  pithaakka'lin  veettu  vamsaththaaril  irubathu  vayathu'l'lavarga'l  muthal  yuththaththi’rkup  pu’rappadaththakka  purusharga'l  ellaarum  e'n'nappattapoathu,  (e’n’naagamam  1:26)

யூதா  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  எழுபத்து  நாலாயிரத்து  அறுநூறுபேர்.  (எண்ணாகமம்  1:27)

yoothaa  koaththiraththil  e'n'nappattavarga'l,  ezhubaththu  naalaayiraththu  a’runoo’rupear.  (e’n’naagamam  1:27)

இசக்கார்  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டபோது,  (எண்ணாகமம்  1:28)

isakkaar  puththirarudaiya  pithaakka'lin  veettu  vamsaththaaril  irubathu  vayathu'l'lavarga'l  muthal  yuththaththi’rkup  pu’rappadaththakka  purusharga'l  ellaarum  e'n'nappattapoathu,  (e’n’naagamam  1:28)

இசக்கார்  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  ஐம்பத்து  நாலாயிரத்து  நானூறுபேர்.  (எண்ணாகமம்  1:29)

isakkaar  koaththiraththil  e'n'nappattavarga'l,  aimbaththu  naalaayiraththu  naanoo’rupear.  (e’n’naagamam  1:29)

செபுலோன்  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டபோது,  (எண்ணாகமம்  1:30)

sebuloan  puththirarudaiya  pithaakka'lin  veettu  vamsaththaaril  irubathu  vayathu'l'lavarga'l  muthal  yuththaththi’rkup  pu’rappadaththakka  purusharga'l  ellaarum  e'n'nappattapoathu,  (e’n’naagamam  1:30)

செபுலோன்  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  ஐம்பத்தேழாயிரத்து  நானூறுபேர்.  (எண்ணாகமம்  1:31)

sebuloan  koaththiraththil  e'n'nappattavarga'l,  aimbaththeazhaayiraththu  naanoo’rupear.  (e’n’naagamam  1:31)

யோசேப்பின்  குமாரரில்  எப்பிராயீம்  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டபோது,  (எண்ணாகமம்  1:32)

yoaseappin  kumaararil  eppiraayeem  puththirarudaiya  pithaakka'lin  veettu  vamsaththaaril  irubathu  vayathu'l'lavarga'l  muthal  yuththaththi’rkup  pu’rappadaththakka  purusharga'l  ellaarum  e'n'nappattapoathu,  (e’n’naagamam  1:32)

எப்பிராயீம்  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  நாற்பதினாயிரத்து  ஐந்நூறுபேர்.  (எண்ணாகமம்  1:33)

eppiraayeem  koaththiraththil  e'n'nappattavarga'l,  naa’rpathinaayiraththu  ainnoo’rupear.  (e’n’naagamam  1:33)

மனாசே  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டபோது,  (எண்ணாகமம்  1:34)

manaasea  puththirarudaiya  pithaakka'lin  veettu  vamsaththaaril  irubathu  vayathu'l'lavarga'l  muthal  yuththaththi’rkup  pu’rappadaththakka  purusharga'l  ellaarum  e'n'nappattapoathu,  (e’n’naagamam  1:34)

மனாசே  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  முப்பத்தீராயிரத்து  இருநூறுபேர்.  (எண்ணாகமம்  1:35)

manaasea  koaththiraththil  e'n'nappattavarga'l,  muppaththeeraayiraththu  irunoo’rupear.  (e’n’naagamam  1:35)

பென்யமீன்  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டபோது,  (எண்ணாகமம்  1:36)

benyameen  puththirarudaiya  pithaakka'lin  veettu  vamsaththaaril  irubathu  vayathu'l'lavarga'l  muthal  yuththaththi’rkup  pu’rappadaththakka  purusharga'l  ellaarum  e'n'nappattapoathu,  (e’n’naagamam  1:36)

பென்யமீன்  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  முப்பத்தையாயிரத்து  நானூறுபேர்.  (எண்ணாகமம்  1:37)

benyameen  koaththiraththil  e'n'nappattavarga'l,  muppaththaiyaayiraththu  naanoo’rupear.  (e’n’naagamam  1:37)

தாண்  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டபோது,  (எண்ணாகமம்  1:38)

thaa'n  puththirarudaiya  pithaakka'lin  veettu  vamsaththaaril  irubathu  vayathu'l'lavarga'l  muthal  yuththaththi’rkup  pu’rappadaththakka  purusharga'l  ellaarum  e'n'nappattapoathu,  (e’n’naagamam  1:38)

தாண்  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  அறுபத்தீராயிரத்து  எழுநூறுபேர்.  (எண்ணாகமம்  1:39)

thaa'n  koaththiraththil  e'n'nappattavarga'l,  a’rubaththeeraayiraththu  ezhunoo’rupear.  (e’n’naagamam  1:39)

ஆசேர்  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டபோது,  (எண்ணாகமம்  1:40)

aasear  puththirarudaiya  pithaakka'lin  veettu  vamsaththaaril  irubathu  vayathu'l'lavarga'l  muthal  yuththaththi’rkup  pu’rappadaththakka  purusharga'l  ellaarum  e'n'nappattapoathu,  (e’n’naagamam  1:40)

ஆசேர்  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  நாற்பத்தோராயிரத்து  ஐந்நூறுபேர்.  (எண்ணாகமம்  1:41)

aasear  koaththiraththil  e'n'nappattavarga'l,  naa’rpaththoaraayiraththu  ainnoo’rupear.  (e’n’naagamam  1:41)

நப்தலி  புத்திரருடைய  பிதாக்களின்  வீட்டு  வம்சத்தாரில்  இருபது  வயதுள்ளவர்கள்  முதல்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்க  புருஷர்கள்  எல்லாரும்  எண்ணப்பட்டபோது,  (எண்ணாகமம்  1:42)

napthali  puththirarudaiya  pithaakka'lin  veettu  vamsaththaaril  irubathu  vayathu'l'lavarga'l  muthal  yuththaththi’rkup  pu’rappadaththakka  purusharga'l  ellaarum  e'n'nappattapoathu,  (e’n’naagamam  1:42)

நப்தலி  கோத்திரத்தில்  எண்ணப்பட்டவர்கள்,  ஐம்பத்து  மூவாயிரத்து  நானூறுபேர்.  (எண்ணாகமம்  1:43)

napthali  koaththiraththil  e'n'nappattavarga'l,  aimbaththu  moovaayiraththu  naanoo’rupear.  (e’n’naagamam  1:43)

எண்ணப்பட்டவர்கள்  இவர்களே;  மோசேயும்  ஆரோனும்  இஸ்ரவேலுடைய  பிதாக்களின்  வம்சத்தில்  ஒவ்வொரு  வம்சத்துக்கு  ஒவ்வொரு  பிரபுவாகிய  பன்னிரண்டுபேரும்  எண்ணினார்கள்.  (எண்ணாகமம்  1:44)

e'n'nappattavarga'l  ivarga'lea;  moaseayum  aaroanum  isravealudaiya  pithaakka'lin  vamsaththil  ovvoru  vamsaththukku  ovvoru  pirabuvaagiya  pannira'ndupearum  e'n'ninaarga'l.  (e’n’naagamam  1:44)

இஸ்ரவேல்  புத்திரருடைய  பிதாக்களின்  வம்சத்தில்  இருபது  வயதுள்ளவர்கள்முதல்,  இஸ்ரவேலில்  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்கவர்களாகிய  எண்ணப்பட்ட  பேர்கள்  எல்லாரும்,  (எண்ணாகமம்  1:45)

israveal  puththirarudaiya  pithaakka'lin  vamsaththil  irubathu  vayathu'l'lavarga'lmuthal,  isravealil  yuththaththi’rkup  pu’rappadaththakkavarga'laagiya  e'n'nappatta  pearga'l  ellaarum,  (e’n’naagamam  1:45)

ஆறுலட்சத்து  மூவாயிரத்து  ஐந்நூற்று  ஐம்பது  பேராயிருந்தார்கள்.  (எண்ணாகமம்  1:46)

aa’ruladchaththu  moovaayiraththu  ainnoot’ru  aimbathu  pearaayirunthaarga'l.  (e’n’naagamam  1:46)

லேவியர்  தங்கள்  பிதாக்களுடைய  கோத்திரத்தின்படியே,  மற்றவர்களுடனே  எண்ணப்படவில்லை.  (எண்ணாகமம்  1:47)

leaviyar  thangga'l  pithaakka'ludaiya  koaththiraththinpadiyea,  mat’ravarga'ludanea  e'n'nappadavillai.  (e’n’naagamam  1:47)

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  1:48)

karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  1:48)

நீ  லேவி  கோத்திரத்தாரைமாத்திரம்  எண்ணாமலும்,  இஸ்ரவேல்  புத்திரருக்குள்ளே  அவர்கள்  தொகையை  ஏற்றாமலும்,  (எண்ணாகமம்  1:49)

nee  leavi  koaththiraththaaraimaaththiram  e'n'naamalum,  israveal  puththirarukku'l'lea  avarga'l  thogaiyai  eat’raamalum,  (e’n’naagamam  1:49)

லேவியரைச்  சாட்சியின்  வாசஸ்தலத்திற்கும்,  அதினுடைய  சகல  பணிமுட்டுகளுக்கும்,  அதிலுள்ள  சமஸ்த  பொருள்களுக்கும்  விசாரிப்புக்காரராக  ஏற்படுத்து;  அவர்கள்  வாசஸ்தலத்தையும்  அதின்  சகல  பணிமுட்டுகளையும்  சுமப்பார்களாக;  அதினிடத்தில்  ஊழியம்  செய்து,  வாசஸ்தலத்தைச்  சுற்றிலும்  பாளயமிறங்கக்கடவர்கள்.  (எண்ணாகமம்  1:50)

leaviyaraich  saadchiyin  vaasasthalaththi’rkum,  athinudaiya  sagala  pa'nimuttuga'lukkum,  athilu'l'la  samastha  poru'lga'lukkum  visaarippukkaararaaga  ea’rpaduththu;  avarga'l  vaasasthalaththaiyum  athin  sagala  pa'nimuttuga'laiyum  sumappaarga'laaga;  athinidaththil  oozhiyam  seythu,  vaasasthalaththaich  sut’rilum  paa'layami’ranggakkadavarga'l.  (e’n’naagamam  1:50)

வாசஸ்தலம்  புறப்படும்போது,  லேவியர்  அதை  இறக்கிவைத்து,  அது  ஸ்தாபனம்  பண்ணப்படும்போது,  லேவியர்  அதை  எடுத்து  நிறுத்தக்கடவர்கள்;  அந்நியன்  அதற்குச்  சமீபத்தில்  வந்தால்  கொலைசெய்யப்படக்கடவன்.  (எண்ணாகமம்  1:51)

vaasasthalam  pu’rappadumpoathu,  leaviyar  athai  i’rakkivaiththu,  athu  sthaabanam  pa'n'nappadumpoathu,  leaviyar  athai  eduththu  ni’ruththakkadavarga'l;  anniyan  atha’rkuch  sameebaththil  vanthaal  kolaiseyyappadakkadavan.  (e’n’naagamam  1:51)

இஸ்ரவேல்  புத்திரர்  தங்கள்  தங்கள்  பாளயத்தோடும்,  தங்கள்  தங்கள்  சேனையின்  கொடியோடும்  கூடாரம்  போடக்கடவர்கள்.  (எண்ணாகமம்  1:52)

israveal  puththirar  thangga'l  thangga'l  paa'layaththoadum,  thangga'l  thangga'l  seanaiyin  kodiyoadum  koodaaram  poadakkadavarga'l.  (e’n’naagamam  1:52)

இஸ்ரவேல்  புத்திரராகிய  சபையின்மேல்  கடுங்கோபம்  வராதபடிக்கு  லேவியர்  சாட்சியின்  வாசஸ்தலத்தைச்  சுற்றிலும்  பாளயமிறங்கி,  லேவியர்  சாட்சியின்  வாசஸ்தலத்தைக்  காவல்காப்பார்களாக  என்றார்.  (எண்ணாகமம்  1:53)

israveal  puththiraraagiya  sabaiyinmeal  kadungkoabam  varaathapadikku  leaviyar  saadchiyin  vaasasthalaththaich  sut’rilum  paa'layami’ranggi,  leaviyar  saadchiyin  vaasasthalaththaik  kaavalkaappaarga'laaga  en’raar.  (e’n’naagamam  1:53)

கர்த்தர்  மோசேக்குக்  கட்டளையிட்டபடி  எல்லாவற்றையும்  இஸ்ரவேல்  புத்திரர்  செய்தார்கள்.  (எண்ணாகமம்  1:54)

karththar  moaseakkuk  katta'laiyittapadi  ellaavat’raiyum  israveal  puththirar  seythaarga'l.  (e’n’naagamam  1:54)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!