Wednesday, October 26, 2016

Eseakkiyeal 9 | எசேக்கியேல் 9 | Ezekiel 9

பின்பு  அவர்  என்  காதுகள்  கேட்க  மகா  சத்தமாய்:  நகரத்தின்  விசாரிப்புக்காரர்  சங்கரிக்கும்  ஆயுதங்களைத்  தங்கள்  கைகளில்  பிடித்துக்கொண்டு  வரக்கடவர்கள்  என்று  சொன்னார்.  (எசேக்கியேல்  9:1)

pinbu  avar  en  kaathuga'l  keadka  mahaa  saththamaay:  nagaraththin  visaarippukkaarar  sanggarikkum  aayuthangga'laith  thangga'l  kaiga'lil  pidiththukko'ndu  varakkadavarga'l  en’ru  sonnaar.  (eseakkiyeal  9:1)

அப்பொழுது  இதோ,  ஆறு  புருஷர்,  வெட்டுகிற  ஆயுதங்களைத்  தங்கள்  கைகளில்  பிடித்துக்கொண்டு,  வடக்கே  பார்த்த  உயர்ந்த  வாசலின்  வழியிலிருந்து  வந்தார்கள்;  அவர்களில்  சணல்நூல்  அங்கிதரித்து,  தன்  அரையில்  கணக்கனுடைய  மைக்கூட்டை  வைத்திருக்கிற  ஒருவன்  இருந்தான்;  அவர்கள்  உள்ளே  பிரவேசித்து,  வெண்கல  பலிபீடத்தண்டையிலே  நின்றார்கள்.  (எசேக்கியேல்  9:2)

appozhuthu  ithoa,  aa’ru  purushar,  vettugi’ra  aayuthangga'laith  thangga'l  kaiga'lil  pidiththukko'ndu,  vadakkea  paarththa  uyarntha  vaasalin  vazhiyilirunthu  vanthaarga'l;  avarga'lil  sa'nalnool  anggithariththu,  than  araiyil  ka'nakkanudaiya  maikkoottai  vaiththirukki’ra  oruvan  irunthaan;  avarga'l  u'l'lea  piraveasiththu,  ve'ngala  balipeedaththa'ndaiyilea  nin’raarga'l.  (eseakkiyeal  9:2)

அப்பொழுது  இஸ்ரவேலின்  தேவனுடைய  மகிமை  கேருபீன்மேலிருந்தெழும்பி,  ஆலயத்தின்  வாசற்படியிலே  வந்து,  சணல்நூல்  அங்கிதரித்து,  தன்  அரையிலே  கணக்கனுடைய  மைக்கூட்டை  வைத்திருக்கிற  புருஷனைக்  கூப்பிட்டு,  (எசேக்கியேல்  9:3)

appozhuthu  isravealin  theavanudaiya  magimai  kearubeenmealirunthezhumbi,  aalayaththin  vaasa’rpadiyilea  vanthu,  sa'nalnool  anggithariththu,  than  araiyilea  ka'nakkanudaiya  maikkoottai  vaiththirukki’ra  purushanaik  kooppittu,  (eseakkiyeal  9:3)

கர்த்தர்  அவனை  நோக்கி:  நீ  எருசலேம்  நகரம்  எங்கும்  உருவப்போய்,  அதற்குள்ளே  செய்யப்படுகிற  சகல  அருவருப்புகளினிமித்தமும்  பெருமூச்சுவிட்டழுகிற  மனுஷரின்  நெற்றிகளில்  அடையாளம்  போடு  என்றார்.  (எசேக்கியேல்  9:4)

karththar  avanai  noakki:  nee  erusaleam  nagaram  enggum  uruvappoay,  atha’rku'l'lea  seyyappadugi’ra  sagala  aruvaruppuga'linimiththamum  perumoochchuvittazhugi’ra  manusharin  net’riga'lil  adaiyaa'lam  poadu  en’raar.  (eseakkiyeal  9:4)

பின்பு  அவர்  என்  காதுகள்  கேட்க  மற்றவர்களை  நோக்கி:  நீங்கள்  இவன்  பின்னாலே  நகரமெங்கும்  உருவப்போய்  வெட்டுங்கள்;  உங்கள்  கண்  தப்பவிடாமலும்,  நீங்கள்  இரங்காமலும்,  (எசேக்கியேல்  9:5)

pinbu  avar  en  kaathuga'l  keadka  mat’ravarga'lai  noakki:  neengga'l  ivan  pinnaalea  nagaramenggum  uruvappoay  vettungga'l;  ungga'l  ka'n  thappavidaamalum,  neengga'l  iranggaamalum,  (eseakkiyeal  9:5)

முதியோரையும்,  வாலிபரையும்,  கன்னிகைகளையும்,  குழந்தைகளையும்,  ஸ்திரீகளையும்  சங்கரித்துக்  கொன்றுபோடுங்கள்;  அடையாளம்  போடப்பட்டிருக்கிற  ஒருவனையும்  கிட்டாதிருங்கள்,  என்  பரிசுத்த  ஸ்தலத்திலே  துவக்குங்கள்  என்று  என்  காதுகள்  கேட்கச்  சொன்னார்;  அப்பொழுது  அவர்கள்  ஆலயத்துக்குமுன்னே  இருந்த  மூப்பரிடத்தில்  துவக்கம்  பண்ணினார்கள்.  (எசேக்கியேல்  9:6)

muthiyoaraiyum,  vaalibaraiyum,  kannigaiga'laiyum,  kuzhanthaiga'laiyum,  sthireega'laiyum  sanggariththuk  kon’rupoadungga'l;  adaiyaa'lam  poadappattirukki’ra  oruvanaiyum  kittaathirungga'l,  en  parisuththa  sthalaththilea  thuvakkungga'l  en’ru  en  kaathuga'l  keadkach  sonnaar;  appozhuthu  avarga'l  aalayaththukkumunnea  iruntha  moopparidaththil  thuvakkam  pa'n'ninaarga'l.  (eseakkiyeal  9:6)

அவர்  அவர்களை  நோக்கி:  நீங்கள்  ஆலயத்தைத்  தீட்டுப்படுத்தி,  பிராகாரங்களைக்  கொலையுண்டவர்களாலே  நிரப்பி,  புறப்பட்டுப்போங்கள்  என்றார்;  அவர்கள்  நகரத்தில்  போய்  வெட்டினார்கள்.  (எசேக்கியேல்  9:7)

avar  avarga'lai  noakki:  neengga'l  aalayaththaith  theettuppaduththi,  piraagaarangga'laik  kolaiyu'ndavarga'laalea  nirappi,  pu’rappattuppoangga'l  en’raar;  avarga'l  nagaraththil  poay  vettinaarga'l.  (eseakkiyeal  9:7)

அவர்கள்  வெட்டிக்கொண்டுபோகையில்  நான்மாத்திரம்  தனித்து,  முகங்குப்புற  விழுந்து:  ஆ,  கர்த்தராகிய  ஆண்டவரே,  தேவரீர்  எருசலேமின்மேல்  உமது  உக்கிரத்தை  ஊற்றுகையில்  இஸ்ரவேலின்  மீதியானவர்களையெல்லாம்  அழிப்பீரோ  என்று  முறையிட்டேன்.  (எசேக்கியேல்  9:8)

avarga'l  vettikko'ndupoagaiyil  naanmaaththiram  thaniththu,  mugangkuppu’ra  vizhunthu:  aa,  karththaraagiya  aa'ndavarea,  theavareer  erusaleaminmeal  umathu  ukkiraththai  oot’rugaiyil  isravealin  meethiyaanavarga'laiyellaam  azhippeeroa  en’ru  mu’raiyittean.  (eseakkiyeal  9:8)

அதற்கு  அவர்:  இஸ்ரவேலும்  யூதாவுமாகிய  வம்சத்தாரின்  அக்கிரமம்  மிகவும்  பெரிது;  தேசம்  இரத்தப்பழிகளால்  நிறைந்திருக்கிறது;  நகரமும்  மாறுபாட்டினால்  நிரப்பப்பட்டிருக்கிறது;  கர்த்தர்  தேசத்தைக்  கைவிட்டார்;  கர்த்தர்  பார்க்கமாட்டார்  என்று  சொல்லுகிறார்கள்.  (எசேக்கியேல்  9:9)

atha’rku  avar:  isravealum  yoothaavumaagiya  vamsaththaarin  akkiramam  migavum  perithu;  theasam  iraththappazhiga'laal  ni’rainthirukki’rathu;  nagaramum  maa’rupaattinaal  nirappappattirukki’rathu;  karththar  theasaththaik  kaivittaar;  karththar  paarkkamaattaar  en’ru  sollugi’raarga'l.  (eseakkiyeal  9:9)

ஆகையால்  என்  கண்  தப்பவிடுவதுமில்லை,  நான்  இரக்கஞ்செய்வதுமில்லை;  அவர்களுடைய  வழியின்  பலனை  அவர்கள்  சிரசின்மேல்  இறங்கப்பண்ணுவேன்  என்றார்.  (எசேக்கியேல்  9:10)

aagaiyaal  en  ka'n  thappaviduvathumillai,  naan  irakkagnseyvathumillai;  avarga'ludaiya  vazhiyin  palanai  avarga'l  sirasinmeal  i’ranggappa'n'nuvean  en’raar.  (eseakkiyeal  9:10)

இதோ,  சணல்நூல்  அங்கி  தரித்து,  தன்  அரையில்  மைக்கூட்டை  வைத்திருக்கிற  புருஷன்  வந்து:  நீர்  எனக்குக்  கட்டளையிட்டபடியே  செய்தேன்  என்று  காரியத்தைத்  தெரிவித்தான்.  (எசேக்கியேல்  9:11)

ithoa,  sa'nalnool  anggi  thariththu,  than  araiyil  maikkoottai  vaiththirukki’ra  purushan  vanthu:  neer  enakkuk  katta'laiyittapadiyea  seythean  en’ru  kaariyaththaith  theriviththaan.  (eseakkiyeal  9:11)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!