Wednesday, October 26, 2016

Eseakkiyeal 8 | எசேக்கியேல் 8 | Ezekiel 8

ஆறாம்  வருஷத்து  ஆறாம்  மாதம்  ஐந்தாந்தேதியிலே,  நான்  என்  வீட்டில்  உட்கார்ந்திருக்கிறபோதும்,  யூதாவின்  மூப்பர்கள்  எனக்கு  முன்பாக  உட்கார்ந்திருக்கிறபோதும்,  கர்த்தராகிய  ஆண்டவருடைய  கரம்  அங்கே  என்மேல்  அமர்ந்தது.  (எசேக்கியேல்  8:1)

aa’raam  varushaththu  aa’raam  maatham  ainthaantheathiyilea,  naan  en  veettil  udkaarnthirukki’rapoathum,  yoothaavin  moopparga'l  enakku  munbaaga  udkaarnthirukki’rapoathum,  karththaraagiya  aa'ndavarudaiya  karam  anggea  enmeal  amarnthathu.  (eseakkiyeal  8:1)

அப்பொழுது  இதோ,  அக்கினிச்சாயலாய்த்  தோன்றுகிற  ஒருவரைக்  கண்டேன்;  அவருடைய  இடுப்புக்குக்  கீழெல்லாம்  அக்கினியும்  அவருடைய  இடுப்புக்கு  மேலெல்லாம்  சொகுசாவைப்போல்  பிரகாசிக்கிற  சாயலுமாயிருந்தது.  (எசேக்கியேல்  8:2)

appozhuthu  ithoa,  akkinichsaayalaayth  thoan’rugi’ra  oruvaraik  ka'ndean;  avarudaiya  iduppukkuk  keezhellaam  akkiniyum  avarudaiya  iduppukku  mealellaam  sogusaavaippoal  piragaasikki’ra  saayalumaayirunthathu.  (eseakkiyeal  8:2)

கைபோல்  தோன்றினதை  அவர்  நீட்டி,  என்  தலைமயிரைப்  பிடித்து  என்னைத்  தூக்கினார்;  ஆவியானவர்  என்னைப்  பூமிக்கும்  வானத்துக்கும்  நடுவே  கொண்டுபோய்,  தேவதரிசனத்திலே  என்னை  எருசலேமில்  வடதிசைக்கு  எதிரான  உள்வாசலின்  நடையிலே  விட்டார்;  அங்கே  எரிச்சலுண்டாக்குகிற  விக்கிரகத்தின்  ஸ்தானம்  இருந்தது.  (எசேக்கியேல்  8:3)

kaipoal  thoan’rinathai  avar  neetti,  en  thalaimayiraip  pidiththu  ennaith  thookkinaar;  aaviyaanavar  ennaip  boomikkum  vaanaththukkum  naduvea  ko'ndupoay,  theavatharisanaththilea  ennai  erusaleamil  vadathisaikku  ethiraana  u'lvaasalin  nadaiyilea  vittaar;  anggea  erichchalu'ndaakkugi’ra  vikkiragaththin  sthaanam  irunthathu.  (eseakkiyeal  8:3)

இதோ,  நான்  பள்ளத்தாக்கிலே  கண்டிருந்த  தரிசனத்துக்குச்  சரியாக  இஸ்ரவேலின்  தேவனுடைய  மகிமை  அங்கே  விளங்கினது.  (எசேக்கியேல்  8:4)

ithoa,  naan  pa'l'laththaakkilea  ka'ndiruntha  tharisanaththukkuch  sariyaaga  isravealin  theavanudaiya  magimai  anggea  vi'langginathu.  (eseakkiyeal  8:4)

அவர்  என்னைப்பார்த்து:  மனுபுத்திரனே,  உன்  கண்களை  ஏறெடுத்து,  வடக்கே  பார்  என்றார்;  அப்பொழுது  நான்  என்  கண்களை  ஏறெடுத்து,  வடக்கே  பார்த்தேன்;  இதோ,  பலிபீடத்தின்  வாசலுக்கு  வடக்கே  பார்த்தேன்;  நடையிலே  எரிச்சலுண்டாக்குகிற  அந்த  விக்கிரகம்  இருந்தது.  (எசேக்கியேல்  8:5)

avar  ennaippaarththu:  manupuththiranea,  un  ka'nga'lai  ea’reduththu,  vadakkea  paar  en’raar;  appozhuthu  naan  en  ka'nga'lai  ea’reduththu,  vadakkea  paarththean;  ithoa,  balipeedaththin  vaasalukku  vadakkea  paarththean;  nadaiyilea  erichchalu'ndaakkugi’ra  antha  vikkiragam  irunthathu.  (eseakkiyeal  8:5)

அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  அவர்கள்  செய்கிறதைக்  காண்கிறாயா?  என்  பரிசுத்த  ஸ்தலத்தைவிட்டு  என்னைத்  தூரமாய்ப்  போகப்பண்ணும்படியான  இஸ்ரவேல்  வம்சத்தார்  இங்கே  செய்கிற  மிகுந்த  அருவருப்புகளைக்  காண்கிறாய்  அல்லவா?  இதிலும்  அதிக  அருவருப்புகளை  இன்னமும்  காண்பாய்  என்று  சொல்லி,  (எசேக்கியேல்  8:6)

avar  ennai  noakki:  manupuththiranea,  avarga'l  seygi’rathaik  kaa'ngi’raayaa?  en  parisuththa  sthalaththaivittu  ennaith  thooramaayp  poagappa'n'numpadiyaana  israveal  vamsaththaar  inggea  seygi’ra  miguntha  aruvaruppuga'laik  kaa'ngi’raay  allavaa?  ithilum  athiga  aruvaruppuga'lai  innamum  kaa'nbaay  en’ru  solli,  (eseakkiyeal  8:6)

என்னைப்  பிராகாரத்தின்  வாசலுக்குக்  கொண்டுபோனார்;  அப்பொழுது  இதோ,  சுவரில்  ஒரு  துவாரத்தைக்  கண்டேன்.  (எசேக்கியேல்  8:7)

ennaip  piraagaaraththin  vaasalukkuk  ko'ndupoanaar;  appozhuthu  ithoa,  suvaril  oru  thuvaaraththaik  ka'ndean.  (eseakkiyeal  8:7)

அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  நீ  சுவரிலே  துவாரமிடு  என்றார்;  நான்  சுவரிலே  துவாரமிட்டபோது,  இதோ,  ஒரு  வாசல்  இருந்தது.  (எசேக்கியேல்  8:8)

avar  ennai  noakki:  manupuththiranea,  nee  suvarilea  thuvaaramidu  en’raar;  naan  suvarilea  thuvaaramittapoathu,  ithoa,  oru  vaasal  irunthathu.  (eseakkiyeal  8:8)

அவர்  என்னைப்பார்த்து:  நீ  உள்ளே  போய்,  அவர்கள்  இங்கே  செய்கிற  கொடிய  அருவருப்புகளைப்  பார்  என்றார்.  (எசேக்கியேல்  8:9)

avar  ennaippaarththu:  nee  u'l'lea  poay,  avarga'l  inggea  seygi’ra  kodiya  aruvaruppuga'laip  paar  en’raar.  (eseakkiyeal  8:9)

நான்  உள்ளே  போய்ப்  பார்த்தபோது,  இதோ,  சகலவித  ஊரும்பிராணிகளும்  அருவருப்பான  மிருகங்களுமாகிய  இவைகளின்  சுரூபங்களும்,  இஸ்ரவேல்  வம்சத்தாருடைய  நரகலான  சகல  விக்கிரகங்களும்  சுவரில்  சுற்றிலும்  சித்திரந்தீரப்பட்டிருந்தன.  (எசேக்கியேல்  8:10)

naan  u'l'lea  poayp  paarththapoathu,  ithoa,  sagalavitha  oorumpiraa'niga'lum  aruvaruppaana  mirugangga'lumaagiya  ivaiga'lin  suroobangga'lum,  israveal  vamsaththaarudaiya  naragalaana  sagala  vikkiragangga'lum  suvaril  sut’rilum  siththirantheerappattirunthana.  (eseakkiyeal  8:10)

இஸ்ரவேல்  வம்சத்தாரின்  மூப்பரில்  எழுபதுபேரும்,  அவர்களின்  நடுவிலே  சாப்பானுடைய  குமாரனாகிய  யசனியாவும்,  அவனவன்  தன்தன்  கையிலே  தன்தன்  தூபகலசத்தைப்  பிடித்துக்கொண்டு,  அவைகளுக்கு  முன்பாக  நின்றார்கள்;  தூபவர்க்கத்தினால்  மிகுந்த  புகை  எழும்பிற்று.  (எசேக்கியேல்  8:11)

israveal  vamsaththaarin  moopparil  ezhubathupearum,  avarga'lin  naduvilea  saappaanudaiya  kumaaranaagiya  yasaniyaavum,  avanavan  thanthan  kaiyilea  thanthan  thoobakalasaththaip  pidiththukko'ndu,  avaiga'lukku  munbaaga  nin’raarga'l;  thoobavarkkaththinaal  miguntha  pugai  ezhumbit’ru.  (eseakkiyeal  8:11)

அப்பொழுது  அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  இஸ்ரவேல்  வம்சத்தாரின்  மூப்பர்கள்  அந்தகாரத்திலே  அவரவர்  தங்கள்  விக்கிரகங்களின்  சித்திர  விநோத  அறைகளில்  செய்கிறதை  நீ  கண்டாயா?  கர்த்தர்  எங்களைப்  பார்க்கிறதில்லை;  கர்த்தர்  தேசத்தைக்  கைவிட்டார்  என்று  சொல்லுகிறார்களே  என்றார்.  (எசேக்கியேல்  8:12)

appozhuthu  avar  ennai  noakki:  manupuththiranea,  israveal  vamsaththaarin  moopparga'l  anthagaaraththilea  avaravar  thangga'l  vikkiragangga'lin  siththira  vinoatha  a’raiga'lil  seygi’rathai  nee  ka'ndaayaa?  karththar  engga'laip  paarkki’rathillai;  karththar  theasaththaik  kaivittaar  en’ru  sollugi’raarga'lea  en’raar.  (eseakkiyeal  8:12)

பின்னும்  அவர்கள்  செய்கிற  அதிக  அருவருப்புகளை  இன்னமும்  காண்பாய்  என்று  அவர்  என்னுடனே  சொல்லி,  (எசேக்கியேல்  8:13)

pinnum  avarga'l  seygi’ra  athiga  aruvaruppuga'lai  innamum  kaa'nbaay  en’ru  avar  ennudanea  solli,  (eseakkiyeal  8:13)

என்னைக்  கர்த்தருடைய  ஆலயத்து  வடக்கு  வாசலின்  நடையிலே  கொண்டு  போனார்;  இதோ,  அங்கே  தம்மூசுக்காக  அழுதுகொண்டிருக்கிற  ஸ்திரீகள்  உட்கார்ந்திருந்தார்கள்.  (எசேக்கியேல்  8:14)

ennaik  karththarudaiya  aalayaththu  vadakku  vaasalin  nadaiyilea  ko'ndu  poanaar;  ithoa,  anggea  thammoosukkaaga  azhuthuko'ndirukki’ra  sthireega'l  udkaarnthirunthaarga'l.  (eseakkiyeal  8:14)

அப்பொழுது  அவர்:  மனுபுத்திரனே,  இதைக்  கண்டாயா?  இதிலும்  அதிக  அருவருப்புகளை  இன்னமும்  காண்பாய்  என்று  என்னுடனே  சொல்லி,  (எசேக்கியேல்  8:15)

appozhuthu  avar:  manupuththiranea,  ithaik  ka'ndaayaa?  ithilum  athiga  aruvaruppuga'lai  innamum  kaa'nbaay  en’ru  ennudanea  solli,  (eseakkiyeal  8:15)

என்னைக்  கர்த்தருடைய  ஆலயத்தின்  உட்பிராகாரத்திலே  கொண்டுபோனார்;  இதோ,  கர்த்தருடைய  ஆலயத்தின்  வாசல்  நடையிலே  மண்டபத்துக்கும்  பலிபீடத்துக்கும்  நடுவே,  ஏறக்குறைய  இருபத்தைந்து  புருஷர்,  தங்கள்  முதுகைக்  கர்த்தருடைய  ஆலயத்துக்கும்  தங்கள்  முகத்தைக்  கீழ்த்திசைக்கும்  நேராகத்  திருப்பினவர்களாய்க்  கிழக்கே  இருக்கும்  சூரியனை  நமஸ்கரித்தார்கள்.  (எசேக்கியேல்  8:16)

ennaik  karththarudaiya  aalayaththin  udpiraagaaraththilea  ko'ndupoanaar;  ithoa,  karththarudaiya  aalayaththin  vaasal  nadaiyilea  ma'ndabaththukkum  balipeedaththukkum  naduvea,  ea’rakku’raiya  irubaththainthu  purushar,  thangga'l  muthugaik  karththarudaiya  aalayaththukkum  thangga'l  mugaththaik  keezhththisaikkum  nearaagath  thiruppinavarga'laayk  kizhakkea  irukkum  sooriyanai  namaskariththaarga'l.  (eseakkiyeal  8:16)

அப்பொழுது  அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  இதைக்  கண்டாயா?  இங்கே  யூதா  வம்சத்தார்  செய்கிற  அருவருப்புகள்  அற்பமான  காரியமா?  அவர்கள்  தேசத்தைக்  கொடுமையினால்  நிரப்பி  என்னை  அடிக்கடி  கோபமூட்டுகிறார்கள்;  இதோ,  அவர்கள்  திராட்சக்கிளையைத்  தங்கள்  நாசிக்கு  நேராகப்  பிடிக்கிறார்கள்.  (எசேக்கியேல்  8:17)

appozhuthu  avar  ennai  noakki:  manupuththiranea,  ithaik  ka'ndaayaa?  inggea  yoothaa  vamsaththaar  seygi’ra  aruvaruppuga'l  a’rpamaana  kaariyamaa?  avarga'l  theasaththaik  kodumaiyinaal  nirappi  ennai  adikkadi  koabamoottugi’raarga'l;  ithoa,  avarga'l  thiraadchakki'laiyaith  thangga'l  naasikku  nearaagap  pidikki’raarga'l.  (eseakkiyeal  8:17)

ஆகையால்  நானும்  உக்கிரத்தோடே  காரியத்தை  நடத்துவேன்;  என்  கண்  தப்பவிடுவதில்லை,  நான்  இரங்குவதில்லை;  அவர்கள்  மகா  சத்தமாய்  என்  செவிகள்  கேட்கக்  கூப்பிட்டாலும்  அவர்களுக்கு  நான்  செவிகொடுப்பதில்லை  என்றார்.  (எசேக்கியேல்  8:18)

aagaiyaal  naanum  ukkiraththoadea  kaariyaththai  nadaththuvean;  en  ka'n  thappaviduvathillai,  naan  irangguvathillai;  avarga'l  mahaa  saththamaay  en  seviga'l  keadkak  kooppittaalum  avarga'lukku  naan  sevikoduppathillai  en’raar.  (eseakkiyeal  8:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!