Wednesday, October 26, 2016

Eseakkiyeal 7 | எசேக்கியேல் 7 | Ezekiel 7

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  7:1)

pinnum  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  7:1)

மனுபுத்திரனே,  இஸ்ரவேல்  தேசத்தைக்குறித்துக்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  முடிவு  வருகிறது,  தேசத்தின்  நாலு  முனைகளின்மேலும்  முடிவு  வருகிறது.  (எசேக்கியேல்  7:2)

manupuththiranea,  israveal  theasaththaikku’riththuk  karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  mudivu  varugi’rathu,  theasaththin  naalu  munaiga'linmealum  mudivu  varugi’rathu.  (eseakkiyeal  7:2)

இப்போதே  உன்மேல்  முடிவு  வருகிறது;  நான்  என்  கோபத்தை  உன்மேல்  வருவித்து,  உன்  வழிகளுக்குத்தக்கதாக  உன்னை  நியாயந்தீர்த்து,  உன்  எல்லா  அருவருப்புகளின்  பலனையும்  உன்மேல்  வரப்பண்ணுவேன்.  (எசேக்கியேல்  7:3)

ippoathea  unmeal  mudivu  varugi’rathu;  naan  en  koabaththai  unmeal  varuviththu,  un  vazhiga'lukkuththakkathaaga  unnai  niyaayantheerththu,  un  ellaa  aruvaruppuga'lin  palanaiyum  unmeal  varappa'n'nuvean.  (eseakkiyeal  7:3)

என்  கண்  உன்னைத்  தப்பவிடாது;  நான்  இரங்காமல்  உன்  வழிகளுக்குத்தக்கதை  உன்மேல்  வரப்பண்ணுவேன்;  உன்  அருவருப்புகளுக்குத்தக்கது  உன்  நடுவில்  வந்திருக்கும்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  (எசேக்கியேல்  7:4)

en  ka'n  unnaith  thappavidaathu;  naan  iranggaamal  un  vazhiga'lukkuththakkathai  unmeal  varappa'n'nuvean;  un  aruvaruppuga'lukkuththakkathu  un  naduvil  vanthirukkum;  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lveerga'l.  (eseakkiyeal  7:4)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  தீங்கு  வருகிறது;  இதோ,  ஏகமான  தீங்கு  வருகிறது.  (எசேக்கியேல்  7:5)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  theenggu  varugi’rathu;  ithoa,  eagamaana  theenggu  varugi’rathu.  (eseakkiyeal  7:5)

முடிவு  வருகிறது,  முடிவு  வருகிறது,  அது  உன்மேல்  நோக்கமாயிருக்கிறது;  இதோ,  வருகிறது.  (எசேக்கியேல்  7:6)

mudivu  varugi’rathu,  mudivu  varugi’rathu,  athu  unmeal  noakkamaayirukki’rathu;  ithoa,  varugi’rathu.  (eseakkiyeal  7:6)

தேசத்தில்  குடியிருக்கிறவனே,  அந்நாளின்  விடியற்காலம்  வருகிறது,  காலம்  வருகிறது,  அமளியின்  நாள்  சமீபித்திருக்கிறது,  மலைகளில்  சந்தோஷசத்தம்  இல்லை.  (எசேக்கியேல்  7:7)

theasaththil  kudiyirukki’ravanea,  annaa'lin  vidiya’rkaalam  varugi’rathu,  kaalam  varugi’rathu,  ama'liyin  naa'l  sameebiththirukki’rathu,  malaiga'lil  santhoashasaththam  illai.  (eseakkiyeal  7:7)

இப்பொழுது  விரைவில்  என்  உக்கிரத்தை  உன்மேல்  ஊற்றி,  என்  கோபத்தை  உன்னில்  தீர்த்துக்கொண்டு,  உன்னை  உன்  வழிகளுக்குத்தக்கதாக  நியாயந்தீர்த்து,  உன்  எல்லா  அருவருப்புகளின்  பலனையும்  உன்மேல்  வரப்பண்ணுவேன்.  (எசேக்கியேல்  7:8)

ippozhuthu  viraivil  en  ukkiraththai  unmeal  oot’ri,  en  koabaththai  unnil  theerththukko'ndu,  unnai  un  vazhiga'lukkuththakkathaaga  niyaayantheerththu,  un  ellaa  aruvaruppuga'lin  palanaiyum  unmeal  varappa'n'nuvean.  (eseakkiyeal  7:8)

என்  கண்  உன்னைத்  தப்பவிடாது;  நான்  இரங்காமல்  உன்  வழிகளுக்குத்தக்கதை  உன்மேல்  வரப்பண்ணுவேன்;  உன்  அருவருப்புகளுக்குத்தக்கது  உன்  நடுவில்  வந்திருக்கும்;  அப்பொழுது  அடிக்கிறவராகிய  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  (எசேக்கியேல்  7:9)

en  ka'n  unnaith  thappavidaathu;  naan  iranggaamal  un  vazhiga'lukkuththakkathai  unmeal  varappa'n'nuvean;  un  aruvaruppuga'lukkuththakkathu  un  naduvil  vanthirukkum;  appozhuthu  adikki’ravaraagiya  naan  karththar  en’ru  a’rinthuko'lveerga'l.  (eseakkiyeal  7:9)

இதோ,  அந்த  நாள்,  இதோ,  வருகிறது,  அந்நாளின்  விடியற்காலம்  உதிக்கிறது,  மிலாறு  பூக்கிறது,  அகந்தை  செழிக்கிறது.  (எசேக்கியேல்  7:10)

ithoa,  antha  naa'l,  ithoa,  varugi’rathu,  annaa'lin  vidiya’rkaalam  uthikki’rathu,  milaa’ru  pookki’rathu,  aganthai  sezhikki’rathu.  (eseakkiyeal  7:10)

அக்கிரமத்துக்கு  மிலாறாகக்  கொடுமை  எழும்புகிறது;  அவர்களிலும்  அவர்களுடைய  திரளான  கும்பிலும்  அவர்களுடைய  அமளியிலும்  ஒன்றும்  மீதியாயிருப்பதில்லை;  அவர்கள்  நிமித்தம்  புலம்பல்  உண்டாயிருப்பதுமில்லை.  (எசேக்கியேல்  7:11)

akkiramaththukku  milaa’raagak  kodumai  ezhumbugi’rathu;  avarga'lilum  avarga'ludaiya  thira'laana  kumbilum  avarga'ludaiya  ama'liyilum  on’rum  meethiyaayiruppathillai;  avarga'l  nimiththam  pulambal  u'ndaayiruppathumillai.  (eseakkiyeal  7:11)

அந்தக்  காலம்  வருகிறது,  அந்த  நாள்  கிட்டுகிறது;  கொள்ளுகிறவன்  சந்தோஷப்படாமலும்,  விற்கிறவன்  துக்கப்படாமலும்  இருப்பானாக;  அதின்  திரளான  கும்பின்மேலும்  உக்கிரம்  இறங்கும்.  (எசேக்கியேல்  7:12)

anthak  kaalam  varugi’rathu,  antha  naa'l  kittugi’rathu;  ko'l'lugi’ravan  santhoashappadaamalum,  vi’rki’ravan  thukkappadaamalum  iruppaanaaga;  athin  thira'laana  kumbinmealum  ukkiram  i’ranggum.  (eseakkiyeal  7:12)

அவர்கள்  ஜீவனுள்ளோருக்குள்ளே  இன்னும்  உயிரோடிருந்தாலும்,  விற்றவன்  விற்கப்பட்டதற்குத்  திரும்பிவருவதில்லை;  அதின்  திரளான  கும்பின்மேலும்  உண்டான  தரிசனம்  திரும்பாது;  தன்  அக்கிரமத்திலே  வாழுகிற  எவனும்  தன்னைத்  திடப்படுத்தமாட்டான்.  (எசேக்கியேல்  7:13)

avarga'l  jeevanu'l'loarukku'l'lea  innum  uyiroadirunthaalum,  vit’ravan  vi’rkappattatha’rkuth  thirumbivaruvathillai;  athin  thira'laana  kumbinmealum  u'ndaana  tharisanam  thirumbaathu;  than  akkiramaththilea  vaazhugi’ra  evanum  thannaith  thidappaduththamaattaan.  (eseakkiyeal  7:13)

அவர்கள்  எக்காளம்  ஊதி,  எல்லாவற்றையும்  ஆயத்தம்பண்ணியும்,  யுத்தத்துக்குப்  போகிறவனில்லை;  என்  உக்கிரம்  அதின்  திரளான  கும்பின்மேலும்  இறங்குகிறது.  (எசேக்கியேல்  7:14)

avarga'l  ekkaa'lam  oothi,  ellaavat’raiyum  aayaththampa'n'niyum,  yuththaththukkup  poagi’ravanillai;  en  ukkiram  athin  thira'laana  kumbinmealum  i’ranggugi’rathu.  (eseakkiyeal  7:14)

வெளியே  பட்டயமும்  உள்ளே  கொள்ளைநோயும்  பஞ்சமும்  உண்டு;  வயல்வெளியில்  இருக்கிறவன்  பட்டயத்தால்  சாவான்;  நகரத்தில்  இருக்கிறவனையோ  பஞ்சமும்  கொள்ளைநோயும்  பட்சிக்கும்.  (எசேக்கியேல்  7:15)

ve'liyea  pattayamum  u'l'lea  ko'l'lainoayum  pagnchamum  u'ndu;  vayalve'liyil  irukki’ravan  pattayaththaal  saavaan;  nagaraththil  irukki’ravanaiyoa  pagnchamum  ko'l'lainoayum  padchikkum.  (eseakkiyeal  7:15)

அவர்களில்  தப்புகிறவர்கள்  தப்புவார்கள்;  ஆனாலும்  அவர்கள்  அனைவரும்  அவனவன்  தன்  தன்  அக்கிரமத்தினிமித்தம்  துக்கித்துக்  கூப்பிடுகிற  பள்ளத்தாக்குகளின்  புறாக்களைப்போல  மலைகளில்  இருப்பார்கள்.  (எசேக்கியேல்  7:16)

avarga'lil  thappugi’ravarga'l  thappuvaarga'l;  aanaalum  avarga'l  anaivarum  avanavan  than  than  akkiramaththinimiththam  thukkiththuk  kooppidugi’ra  pa'l'laththaakkuga'lin  pu’raakka'laippoala  malaiga'lil  iruppaarga'l.  (eseakkiyeal  7:16)

எல்லாக்  கைகளும்  சலித்து,  எல்லா  முழங்கால்களும்  தண்ணீரைப்போல்  தத்தளிக்கும்.  (எசேக்கியேல்  7:17)

ellaak  kaiga'lum  saliththu,  ellaa  muzhangkaalga'lum  tha'n'neeraippoal  thaththa'likkum.  (eseakkiyeal  7:17)

இரட்டை  உடுத்திக்கொள்வார்கள்;  தத்தளிப்பு  அவர்களை  மூடும்;  எல்லா  முகங்களும்  வெட்கப்படும்,  எல்லாத்  தலைகளும்  மொட்டையிடப்படும்.  (எசேக்கியேல்  7:18)

irattai  uduththikko'lvaarga'l;  thaththa'lippu  avarga'lai  moodum;  ellaa  mugangga'lum  vedkappadum,  ellaath  thalaiga'lum  mottaiyidappadum.  (eseakkiyeal  7:18)

தங்கள்  வெள்ளியைத்  தெருக்களில்  எறிந்துவிடுவார்கள்;  அவர்களுடைய  பொன்  வேண்டாவெறுப்பாயிருக்கும்;  கர்த்தருடைய  சினத்தின்  நாளிலே  அவர்கள்  வெள்ளியும்  அவர்கள்  பொன்னும்  அவர்களை  விடுவிக்கமாட்டாது;  அவர்கள்  அதினால்  தங்கள்  ஆத்துமாக்களைத்  திருப்தியாக்குவதும்  இல்லை,  தங்கள்  வயிறுகளை  நிரப்புவதும்  இல்லை;  அவர்கள்  அக்கிரமமே  அவர்களுக்கு  இடறலாயிருந்தது.  (எசேக்கியேல்  7:19)

thangga'l  ve'l'liyaith  therukka'lil  e’rinthuviduvaarga'l;  avarga'ludaiya  pon  vea'ndaave’ruppaayirukkum;  karththarudaiya  sinaththin  naa'lilea  avarga'l  ve'l'liyum  avarga'l  ponnum  avarga'lai  viduvikkamaattaathu;  avarga'l  athinaal  thangga'l  aaththumaakka'laith  thirupthiyaakkuvathum  illai,  thangga'l  vayi’ruga'lai  nirappuvathum  illai;  avarga'l  akkiramamea  avarga'lukku  ida’ralaayirunthathu.  (eseakkiyeal  7:19)

அவருடைய  சிங்காரத்தின்  மகிமையை  அகந்தைக்கென்று  வைத்து,  அதிலே  அருவருக்கப்படத்தக்கதும்  சீயென்றிகழப்படத்தக்கதுமான  காரியங்களின்  விக்கிரகங்களை  உண்டுபண்ணினார்கள்;  ஆகையால்  நான்  அவைகளை  அவர்களுக்கு  வேண்டாவெறுப்பாக்கி,  (எசேக்கியேல்  7:20)

avarudaiya  singgaaraththin  magimaiyai  aganthaikken’ru  vaiththu,  athilea  aruvarukkappadaththakkathum  cheeyen’rigazhappadaththakkathumaana  kaariyangga'lin  vikkiragangga'lai  u'ndupa'n'ninaarga'l;  aagaiyaal  naan  avaiga'lai  avarga'lukku  vea'ndaave’ruppaakki,  (eseakkiyeal  7:20)

அதை  அந்நியர்  கையிலே  கொள்ளையாகவும்,  பூமியில்  துஷ்டர்களுக்குச்  சூறையாகவும்  கொடுப்பேன்;  அவர்கள்  அதைப்  பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.  (எசேக்கியேல்  7:21)

athai  anniyar  kaiyilea  ko'l'laiyaagavum,  boomiyil  thushdarga'lukkuch  soo’raiyaagavum  koduppean;  avarga'l  athaip  parisuththakkulaichchalaakkuvaarga'l.  (eseakkiyeal  7:21)

என்  முகத்தை  அவர்களை  விட்டுத்  திருப்புவேன்;  அதினால்  என்  அந்தரங்க  ஸ்தலத்தைப்  பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்;  பறிகாரர்  அதற்குள்  பிரவேசித்து,  அதைப்  பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.  (எசேக்கியேல்  7:22)

en  mugaththai  avarga'lai  vittuth  thiruppuvean;  athinaal  en  antharangga  sthalaththaip  parisuththakkulaichchalaakkuvaarga'l;  pa’rikaarar  atha’rku'l  piraveasiththu,  athaip  parisuththakkulaichchalaakkuvaarga'l.  (eseakkiyeal  7:22)

ஒரு  சங்கிலியைப்  பண்ணிவை;  தேசம்  நியாயத்தீர்ப்புக்குள்ளான  இரத்தப்பழிகளால்  நிறைந்திருக்கிறது;  நகரம்  கொடுமையால்  நிறைந்திருக்கிறது.  (எசேக்கியேல்  7:23)

oru  sanggiliyaip  pa'n'nivai;  theasam  niyaayaththeerppukku'l'laana  iraththappazhiga'laal  ni’rainthirukki’rathu;  nagaram  kodumaiyaal  ni’rainthirukki’rathu.  (eseakkiyeal  7:23)

ஆகையால்  புறஜாதிகளின்  துஷ்டர்களை  வரப்பண்ணுவேன்,  அவர்கள்  இவர்களுடைய  வீடுகளைச்  சுதந்தரித்துக்கொள்வார்கள்;  பலவான்களின்  பெருமையை  ஒழியப்பண்ணுவேன்,  அவர்கள்  பரிசுத்த  ஸ்தலங்கள்  பரிசுத்தக்குலைச்சலாகும்.  (எசேக்கியேல்  7:24)

aagaiyaal  pu’rajaathiga'lin  thushdarga'lai  varappa'n'nuvean,  avarga'l  ivarga'ludaiya  veeduga'laich  suthanthariththukko'lvaarga'l;  balavaanga'lin  perumaiyai  ozhiyappa'n'nuvean,  avarga'l  parisuththa  sthalangga'l  parisuththakkulaichchalaagum.  (eseakkiyeal  7:24)

சங்காரம்  வருகிறது;  அப்பொழுது  சமாதானத்தைத்  தேடுவார்கள்;  ஆனாலும்  அது  கிடையாது.  (எசேக்கியேல்  7:25)

sanggaaram  varugi’rathu;  appozhuthu  samaathaanaththaith  theaduvaarga'l;  aanaalum  athu  kidaiyaathu.  (eseakkiyeal  7:25)

விக்கினத்தின்மேல்  விக்கினம்  வரும்;  துர்ச்செய்தியின்மேல்  துர்ச்செய்தி  பிறக்கும்;  அப்பொழுது  தீர்க்கதரிசியினிடத்திலே  தரிசனத்தைத்  தேடுவார்கள்;  ஆனாலும்  ஆசாரியனிடத்திலே  வேதமும்  மூப்பரிடத்திலே  ஆலோசனையும்  இராமல்  ஒழிந்துபோகும்.  (எசேக்கியேல்  7:26)

vikkinaththinmeal  vikkinam  varum;  thurchseythiyinmeal  thurchseythi  pi’rakkum;  appozhuthu  theerkkatharisiyinidaththilea  tharisanaththaith  theaduvaarga'l;  aanaalum  aasaariyanidaththilea  veathamum  moopparidaththilea  aaloasanaiyum  iraamal  ozhinthupoagum.  (eseakkiyeal  7:26)

ராஜா  துக்கித்துக்கொண்டிருப்பான்;  பிரபுவைத்  திகில்  மூடிக்கொண்டிருக்கும்;  தேசத்து  ஜனங்களின்  கைகள்  தளர்ந்துபோகும்;  நான்  அவர்கள்  வழிகளின்படியே  அவர்களுக்குச்  செய்து,  அவர்கள்  நியாயங்களின்படியே  அவர்களை  நியாயந்தீர்ப்பேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்  என்றார்.  (எசேக்கியேல்  7:27)

raajaa  thukkiththukko'ndiruppaan;  pirabuvaith  thigil  moodikko'ndirukkum;  theasaththu  janangga'lin  kaiga'l  tha'larnthupoagum;  naan  avarga'l  vazhiga'linpadiyea  avarga'lukkuch  seythu,  avarga'l  niyaayangga'linpadiyea  avarga'lai  niyaayantheerppean;  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lvaarga'l  en’raar.  (eseakkiyeal  7:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!