Tuesday, October 25, 2016

Eseakkiyeal 5 | எசேக்கியேல் 5 | Ezekiel 5

பின்னும்  அவர்:  மனுபுத்திரனே,  சவரகன்  கத்தியாகிய  கருக்கான  கத்தியை  வாங்கி,  அதினால்  உன்  தலையையும்  உன்  தாடியையும்  சிரைத்துக்கொண்டு,  பின்பு  நிறுக்கும்  தராசை  எடுத்து,  அந்த  மயிரைப்  பங்கிடக்கடவாய்.  (எசேக்கியேல்  5:1)

pinnum  avar:  manupuththiranea,  savaragan  kaththiyaagiya  karukkaana  kaththiyai  vaanggi,  athinaal  un  thalaiyaiyum  un  thaadiyaiyum  siraiththukko'ndu,  pinbu  ni’rukkum  tharaasai  eduththu,  antha  mayiraip  panggidakkadavaay.  (eseakkiyeal  5:1)

மூன்றில்  ஒரு  பங்கை  எடுத்து  முற்றிக்கைபோடும்  நாட்கள்  முடிகிறபோது  நகரத்தின்  நடுவிலே  அக்கினியால்  சுட்டெரித்து,  மூன்றில்  ஒரு  பங்கை  எடுத்து,  அதைச்  சுற்றிலும்  கத்தியாலே  வெட்டி,  மூன்றில்  ஒரு  பங்கை  எடுத்துக்  காற்றிலே  தூற்றக்கடவாய்;  அவைகளின்  பின்னாக  நான்  பட்டயத்தை  உருவுவேன்.  (எசேக்கியேல்  5:2)

moon’ril  oru  panggai  eduththu  mut’rikkaipoadum  naadka'l  mudigi’rapoathu  nagaraththin  naduvilea  akkiniyaal  sutteriththu,  moon’ril  oru  panggai  eduththu,  athaich  sut’rilum  kaththiyaalea  vetti,  moon’ril  oru  panggai  eduththuk  kaat’rilea  thoot’rakkadavaay;  avaiga'lin  pinnaaga  naan  pattayaththai  uruvuvean.  (eseakkiyeal  5:2)

அதில்  கொஞ்சம்மாத்திரம்  எடுத்து,  அதை  உன்  வஸ்திரத்தோரங்களில்  முடிந்துவைப்பாயாக.  (எசேக்கியேல்  5:3)

athil  kognchammaaththiram  eduththu,  athai  un  vasthiraththoarangga'lil  mudinthuvaippaayaaga.  (eseakkiyeal  5:3)

பின்னும்  அதில்  கொஞ்சம்  எடுத்து,  அதைத்  தீயின்  நடுவில்  எறிந்து,  அதை  அக்கினியால்  சுட்டெரிப்பாயாக;  அதிலிருந்து  இஸ்ரவேல்  வம்சத்தார்  அனைவருக்கும்  விரோதமாக  அக்கினி  புறப்படும்.  (எசேக்கியேல்  5:4)

pinnum  athil  kogncham  eduththu,  athaith  theeyin  naduvil  e’rinthu,  athai  akkiniyaal  sutterippaayaaga;  athilirunthu  israveal  vamsaththaar  anaivarukkum  viroathamaaga  akkini  pu’rappadum.  (eseakkiyeal  5:4)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  இதுவே  எருசலேம்,  புறஜாதிகளின்  நடுவிலே  நான்  அதை  வைத்தேன்,  அதைச்  சுற்றிலும்  தேசங்கள்  இருக்கிறது.  (எசேக்கியேல்  5:5)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal,  ithuvea  erusaleam,  pu’rajaathiga'lin  naduvilea  naan  athai  vaiththean,  athaich  sut’rilum  theasangga'l  irukki’rathu.  (eseakkiyeal  5:5)

அது  புறஜாதிகளைப்பார்க்கிலும்  என்  நியாயங்களையும்,  தன்னைச்  சுற்றிலும்  இருக்கிற  தேசங்களைப்பார்க்கிலும்  என்  கட்டளைகளையும்  அக்கிரமமாக  மாற்றிப்போட்டது;  அவர்கள்  என்  நியாயங்களை  வெறுத்து,  என்  கட்டளைகளில்  நடவாமற்  போனார்கள்.  (எசேக்கியேல்  5:6)

athu  pu’rajaathiga'laippaarkkilum  en  niyaayangga'laiyum,  thannaich  sut’rilum  irukki’ra  theasangga'laippaarkkilum  en  katta'laiga'laiyum  akkiramamaaga  maat’rippoattathu;  avarga'l  en  niyaayangga'lai  ve’ruththu,  en  katta'laiga'lil  nadavaama’r  poanaarga'l.  (eseakkiyeal  5:6)

ஆகையால்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  உங்களைச்  சுற்றிலும்  இருக்கிற  புறஜாதிகளைப்பார்க்கிலும்  அதிகரிக்கிறவர்களாகிய  நீங்கள்  என்  கட்டளைகளிலே  நடவாமலும்,  என்  நியாயங்களின்படி  செய்யாமலும்,  உங்களைச்  சுற்றிலும்  இருக்கிற  புறஜாதிகளுடைய  நீதிநியாயங்களின்படியாவது  நடவாமலும்  போனபடியினாலே,  (எசேக்கியேல்  5:7)

aagaiyaal  karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal,  ungga'laich  sut’rilum  irukki’ra  pu’rajaathiga'laippaarkkilum  athigarikki’ravarga'laagiya  neengga'l  en  katta'laiga'lilea  nadavaamalum,  en  niyaayangga'linpadi  seyyaamalum,  ungga'laich  sut’rilum  irukki’ra  pu’rajaathiga'ludaiya  neethiniyaayangga'linpadiyaavathu  nadavaamalum  poanapadiyinaalea,  (eseakkiyeal  5:7)

இதோ,  நான்,  நானே  உனக்கு  விரோதமாக  வந்து,  புறஜாதிகளுடைய  கண்களுக்கு  முன்பாக  உன்  நடுவிலே  நீதி  செலுத்தி,  (எசேக்கியேல்  5:8)

ithoa,  naan,  naanea  unakku  viroathamaaga  vanthu,  pu’rajaathiga'ludaiya  ka'nga'lukku  munbaaga  un  naduvilea  neethi  seluththi,  (eseakkiyeal  5:8)

நான்  முன்பு  செய்யாததும்  இனிச்செய்யாதிருப்பதுமானவிதமாய்  உனக்கு  உன்  எல்லா  அருவருப்புகளினிமித்தமும்  செய்வேன்.  (எசேக்கியேல்  5:9)

naan  munbu  seyyaathathum  inichseyyaathiruppathumaanavithamaay  unakku  un  ellaa  aruvaruppuga'linimiththamum  seyvean.  (eseakkiyeal  5:9)

ஆதலால்  உன்  நடுவிலே  பிதாக்கள்  பிள்ளைகளைத்  தின்பார்கள்;  பிள்ளைகள்  பிதாக்களைத்  தின்பார்கள்;  நான்  உன்னில்  நீதிசெலுத்தி  உன்னில்  மீதியாயிருப்பவர்களையெல்லாம்  சகல  திசைகளிலும்  சிதறிப்போகப்பண்ணுவேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  5:10)

aathalaal  un  naduvilea  pithaakka'l  pi'l'laiga'laith  thinbaarga'l;  pi'l'laiga'l  pithaakka'laith  thinbaarga'l;  naan  unnil  neethiseluththi  unnil  meethiyaayiruppavarga'laiyellaam  sagala  thisaiga'lilum  sitha’rippoagappa'n'nuvean  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  5:10)

ஆதலால்,  சீயென்றிகழப்படத்தக்கதும்  அருவருக்கப்படத்தக்கதுமான  உன்  கிரியைகளால்  நீ  என்  பரிசுத்த  ஸ்தலத்தைத்  தீட்டுப்படுத்தினபடியால்  என்  கண்  உன்னைத்  தப்பவிடாது,  நான்  உன்னைக்  குறுகிப்போகப்பண்ணுவேன்,  நான்  இரங்கமாட்டேன்,  இதை  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  (எசேக்கியேல்  5:11)

aathalaal,  cheeyen’rigazhappadaththakkathum  aruvarukkappadaththakkathumaana  un  kiriyaiga'laal  nee  en  parisuththa  sthalaththaith  theettuppaduththinapadiyaal  en  ka'n  unnaith  thappavidaathu,  naan  unnaik  ku’rugippoagappa'n'nuvean,  naan  iranggamaattean,  ithai  en  jeevanaikko'ndu  sollugi’rean  en’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar.  (eseakkiyeal  5:11)

உன்னிலே  மூன்றில்  ஒரு  பங்கு  கொள்ளைநோயால்  சாவார்கள்,  பஞ்சத்தாலும்  உன்  நடுவிலே  மடிந்துபோவார்கள்;  மூன்றில்  ஒரு  பங்கு  உன்னைச்  சுற்றிலும்  இருக்கிற  பட்டயத்தால்  வெட்டுண்டு  விழுவார்கள்;  மூன்றில்  ஒரு  பங்கை  நான்  சகல  திசைகளிலும்  சிதறிப்போகப்பண்ணி,  அவர்கள்  பின்னே  பட்டயத்தை  உருவுவேன்.  (எசேக்கியேல்  5:12)

unnilea  moon’ril  oru  panggu  ko'l'lainoayaal  saavaarga'l,  pagnchaththaalum  un  naduvilea  madinthupoavaarga'l;  moon’ril  oru  panggu  unnaich  sut’rilum  irukki’ra  pattayaththaal  vettu'ndu  vizhuvaarga'l;  moon’ril  oru  panggai  naan  sagala  thisaiga'lilum  sitha’rippoagappa'n'ni,  avarga'l  pinnea  pattayaththai  uruvuvean.  (eseakkiyeal  5:12)

இப்படி  என்  கோபம்  நிறைவேறும்;  இப்படி  நான்  என்  உக்கிரத்தை  அவர்கள்மேல்  தங்கப்பண்ணுகிறதினால்  என்னை  ஆற்றிக்கொள்வேன்;  நான்  என்  உக்கிரத்தை  அவர்களில்  நிறைவேற்றும்போது,  கர்த்தராகிய  நான்  என்  வைராக்கியத்திலே  இதைப்  பேசினேன்  என்று  அறிவார்கள்.  (எசேக்கியேல்  5:13)

ippadi  en  koabam  ni’raivea’rum;  ippadi  naan  en  ukkiraththai  avarga'lmeal  thanggappa'n'nugi’rathinaal  ennai  aat’rikko'lvean;  naan  en  ukkiraththai  avarga'lil  ni’raiveat’rumpoathu,  karththaraagiya  naan  en  vairaakkiyaththilea  ithaip  peasinean  en’ru  a’rivaarga'l.  (eseakkiyeal  5:13)

கடந்துபோகிற  யாவருடைய  கண்களுக்கு  முன்பாகவும்  உன்  சுற்றுப்புறத்தாராகிய  ஜாதிகளுக்குள்ளே  நான்  உன்னைப்  பாழும்  நிந்தையுமாக்குவேன்.  (எசேக்கியேல்  5:14)

kadanthupoagi’ra  yaavarudaiya  ka'nga'lukku  munbaagavum  un  sut’ruppu’raththaaraagiya  jaathiga'lukku'l'lea  naan  unnaip  paazhum  ninthaiyumaakkuvean.  (eseakkiyeal  5:14)

நான்  கோபத்தாலும்  உக்கிரத்தாலும்  கொடிய  கண்டனைகளாலும்,  உன்னில்  நீதிசெலுத்தும்போது,  உன்  சுற்றுப்புறத்தாராகிய  ஜாதிகளுக்கு  அது  நிந்தையும்  துர்க்கீர்த்தியும்  எச்சரிப்பும்  பிரமிப்புமாய்  இருக்கும்;  கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்.  (எசேக்கியேல்  5:15)

naan  koabaththaalum  ukkiraththaalum  kodiya  ka'ndanaiga'laalum,  unnil  neethiseluththumpoathu,  un  sut’ruppu’raththaaraagiya  jaathiga'lukku  athu  ninthaiyum  thurkkeerththiyum  echcharippum  piramippumaay  irukkum;  karththaraagiya  naan  ithaich  sonnean.  (eseakkiyeal  5:15)

உங்களை  அழிப்பதற்கு  நான்  அனுப்பும்  அழிவுக்கேதுவான  பஞ்சத்தின்  கொடிய  அம்புகளை  நான்  அவர்களுக்குள்ளே  எய்யும்போது,  நான்  பஞ்சத்தை  உங்கள்மேல்  அதிகரிக்கப்பண்ணி,  உங்கள்  அப்பம்  என்னும்  ஆதரவுகோலை  முறித்துப்போடுவேன்.  (எசேக்கியேல்  5:16)

ungga'lai  azhippatha’rku  naan  anuppum  azhivukkeathuvaana  pagnchaththin  kodiya  ambuga'lai  naan  avarga'lukku'l'lea  eyyumpoathu,  naan  pagnchaththai  ungga'lmeal  athigarikkappa'n'ni,  ungga'l  appam  ennum  aatharavukoalai  mu’riththuppoaduvean.  (eseakkiyeal  5:16)

பஞ்சத்தையும்,  உன்னைப்  பிள்ளையில்லாமற்போகப்பண்ணும்  துஷ்டமிருகங்களையும்  உங்களுக்கு  விரோதமாக  அனுப்புவேன்;  கொள்ளைநோயும்  இரத்தஞ்சிந்துதலும்  உன்னில்  சுற்றித்திரியும்;  பட்டயத்தை  நான்  உன்மேல்  வரப்பண்ணுவேன்;  கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்  என்றார்.  (எசேக்கியேல்  5:17)

pagnchaththaiyum,  unnaip  pi'l'laiyillaama’rpoagappa'n'num  thushdamirugangga'laiyum  ungga'lukku  viroathamaaga  anuppuvean;  ko'l'lainoayum  iraththagnsinthuthalum  unnil  sut’riththiriyum;  pattayaththai  naan  unmeal  varappa'n'nuvean;  karththaraagiya  naan  ithaich  sonnean  en’raar.  (eseakkiyeal  5:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!