Monday, October 31, 2016

Eseakkiyeal 48 | எசேக்கியேல் 48 | Ezekiel 48

கோத்திரங்களின்  நாமங்களாவன:  வடமுனைதுவக்கி  ஆமாத்துக்குப்போகிற  எத்லோன்  வழியின்  ஓரத்துக்கும்,  ஆத்சார்ஏனானுக்கும்,  ஆமாத்தருகே  வடக்கேயிருக்கிற  தமஸ்குவின்  எல்லைக்கும்  உள்ளாகக்  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  தாணுக்கு  ஒரு  பங்கும்,  (எசேக்கியேல்  48:1)

koaththirangga'lin  naamangga'laavana:  vadamunaithuvakki  aamaaththukkuppoagi’ra  ethloan  vazhiyin  oaraththukkum,  aathsaareanaanukkum,  aamaaththarugea  vadakkeayirukki’ra  thamaskuvin  ellaikkum  u'l'laagak  keezhththisai  thuvakki  meat’risaimattum  thaa'nukku  oru  panggum,  (eseakkiyeal  48:1)

தாணின்  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  ஆசேருக்கு  ஒரு  பங்கும்,  (எசேக்கியேல்  48:2)

thaa'nin  ellaiyarugea  keezhththisai  thuvakki  meat’risaimattum  aasearukku  oru  panggum,  (eseakkiyeal  48:2)

ஆசேரின்  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  நப்தலிக்கு  ஒரு  பங்கும்,  (எசேக்கியேல்  48:3)

aasearin  ellaiyarugea  keezhththisai  thuvakki  meat’risaimattum  napthalikku  oru  panggum,  (eseakkiyeal  48:3)

நப்தலியின்  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  மனாசேக்கு  ஒரு  பங்கும்,  (எசேக்கியேல்  48:4)

napthaliyin  ellaiyarugea  keezhththisai  thuvakki  meat’risaimattum  manaaseakku  oru  panggum,  (eseakkiyeal  48:4)

மனாசேயின்  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  எப்பிராயீமுக்கு  ஒரு  பங்கும்,  (எசேக்கியேல்  48:5)

manaaseayin  ellaiyarugea  keezhththisai  thuvakki  meat’risaimattum  eppiraayeemukku  oru  panggum,  (eseakkiyeal  48:5)

எப்பிராயீமின்  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  ரூபனுக்கு  ஒரு  பங்கும்,  (எசேக்கியேல்  48:6)

eppiraayeemin  ellaiyarugea  keezhththisai  thuvakki  meat’risaimattum  roobanukku  oru  panggum,  (eseakkiyeal  48:6)

ரூபனின்  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  யூதாவுக்கு  ஒரு  பங்கும்  உண்டாவதாக.  (எசேக்கியேல்  48:7)

roobanin  ellaiyarugea  keezhththisai  thuvakki  meat’risaimattum  yoothaavukku  oru  panggum  u'ndaavathaaga.  (eseakkiyeal  48:7)

யூதாவின்  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  நீங்கள்  அர்ப்பிதமாக்கவேண்டிய  பங்கு  இருக்கும்;  அது,  இருபத்தையாயிரங்கோல்  அகலமும்,  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  இருக்கிற  பங்குகளில்  ஒவ்வொன்றுக்கும்  சரியான  நீளமுமாம்;  பரிசுத்த  ஸ்தலம்  அதின்  நடுவிலே  இருப்பதாக.  (எசேக்கியேல்  48:8)

yoothaavin  ellaiyarugea  keezhththisai  thuvakki  meat’risaimattum  neengga'l  arppithamaakkavea'ndiya  panggu  irukkum;  athu,  irubaththaiyaayirangkoal  agalamum,  keezhththisai  thuvakki  meat’risaimattum  irukki’ra  pangguga'lil  ovvon’rukkum  sariyaana  nee'lamumaam;  parisuththa  sthalam  athin  naduvilea  iruppathaaga.  (eseakkiyeal  48:8)

இதிலே  கர்த்தருக்கு  நீங்கள்  அர்ப்பிதமாக்கவேண்டிய  பங்கு  இருபத்தையாயிரங்கோல்  நீளமும்,  பதினாயிரங்கோல்  அகலமுமாயிருப்பதாக.  (எசேக்கியேல்  48:9)

ithilea  karththarukku  neengga'l  arppithamaakkavea'ndiya  panggu  irubaththaiyaayirangkoal  nee'lamum,  pathinaayirangkoal  agalamumaayiruppathaaga.  (eseakkiyeal  48:9)

வடக்கே  இருபத்தையாயிரங்கோல்  நீளமும்,  மேற்கே  பதினாயிரங்கோல்  அகலமும்,  கிழக்கே  பதினாயிரங்கோல்  அகலமும்,  தெற்கே  இருபத்தையாயிரங்கோல்  நீளமுமாகிய  இந்தப்  பரிசுத்த  அர்ப்பிதநிலமானது  ஆசாரியருடையதாயிருக்கும்;  கர்த்தருடைய  பரிசுத்த  ஸ்தலம்  அதின்  நடுவிலே  இருப்பதாக.  (எசேக்கியேல்  48:10)

vadakkea  irubaththaiyaayirangkoal  nee'lamum,  mea’rkea  pathinaayirangkoal  agalamum,  kizhakkea  pathinaayirangkoal  agalamum,  the’rkea  irubaththaiyaayirangkoal  nee'lamumaagiya  inthap  parisuththa  arppithanilamaanathu  aasaariyarudaiyathaayirukkum;  karththarudaiya  parisuththa  sthalam  athin  naduvilea  iruppathaaga.  (eseakkiyeal  48:10)

இஸ்ரவேல்  புத்திரர்  வழிதப்பிப்போகையில்,  லேவியர்  வழிதப்பிப்போனதுபோல  வழிதப்பிப்போகாமல்,  என்  காவலைக்  காத்துக்கொண்ட  சாதோக்கின்  புத்திரராகிய  பரிசுத்தமாக்கப்பட்ட  ஆசாரியர்களுக்கு  அது  உரியதாகும்.  (எசேக்கியேல்  48:11)

israveal  puththirar  vazhithappippoagaiyil,  leaviyar  vazhithappippoanathupoala  vazhithappippoagaamal,  en  kaavalaik  kaaththukko'nda  saathoakkin  puththiraraagiya  parisuththamaakkappatta  aasaariyarga'lukku  athu  uriyathaagum.  (eseakkiyeal  48:11)

அப்படியே  தேசத்தில்  அர்ப்பிதமாக்கப்படுகிறதிலே  மகா  பரிசுத்தமான  பங்கு  அவர்களுக்கு  லேவியருடைய  எல்லையருகே  இருப்பதாக.  (எசேக்கியேல்  48:12)

appadiyea  theasaththil  arppithamaakkappadugi’rathilea  mahaa  parisuththamaana  panggu  avarga'lukku  leaviyarudaiya  ellaiyarugea  iruppathaaga.  (eseakkiyeal  48:12)

ஆசாரியரின்  எல்லைக்கு  எதிராக  லேவியர்  அடையும்  பங்கு  இருபத்தையாயிரங்கோல்  நீளமும்,  பதினாயிரங்கோல்  அகலமுமாயிருக்கவேண்டும்;  நீளம்  இருபத்தையாயிரங்கோலும்,  அகலம்  பதினாயிரங்கோலுமாயிருப்பதாக.  (எசேக்கியேல்  48:13)

aasaariyarin  ellaikku  ethiraaga  leaviyar  adaiyum  panggu  irubaththaiyaayirangkoal  nee'lamum,  pathinaayirangkoal  agalamumaayirukkavea'ndum;  nee'lam  irubaththaiyaayirangkoalum,  agalam  pathinaayirangkoalumaayiruppathaaga.  (eseakkiyeal  48:13)

அவர்கள்  அதில்  ஒன்றையும்  விற்கவும்  தேசத்தின்  முதல்  விளைவை  மாற்றவும்  மற்றவர்களுக்குக்  கொடுக்கவும்  தகாது;  அது  கர்த்தருக்குப்  பரிசுத்தமானது.  (எசேக்கியேல்  48:14)

avarga'l  athil  on’raiyum  vi’rkavum  theasaththin  muthal  vi'laivai  maat’ravum  mat’ravarga'lukkuk  kodukkavum  thagaathu;  athu  karththarukkup  parisuththamaanathu.  (eseakkiyeal  48:14)

இருபத்தையாயிரங்கோலுக்கு  எதிராக  அகலத்தில்  மீதியாயிருக்கும்  ஐயாயிரங்கோலோவென்றால்,  பரிசுத்தமாயிராமல்,  குடியேறும்  நகரத்துக்கும்  வெளிநிலங்களுக்கும்  விடவேண்டும்;  நகரம்  அதின்  நடுவில்  இருப்பதாக.  (எசேக்கியேல்  48:15)

irubaththaiyaayirangkoalukku  ethiraaga  agalaththil  meethiyaayirukkum  aiyaayirangkoaloaven’raal,  parisuththamaayiraamal,  kudiyea’rum  nagaraththukkum  ve'linilangga'lukkum  vidavea'ndum;  nagaram  athin  naduvil  iruppathaaga.  (eseakkiyeal  48:15)

அதின்  அளவுகளாவன:  வடபுறம்  நாலாயிரத்தைந்நூறு  கோலும்,  தென்புறம்  நாலாயிரத்தைந்நூறு  கோலும்,  கீழ்ப்புறம்  நாலாயிரத்தைந்நூறு  கோலும்,  மேற்புறம்  நாலாயிரத்தைந்நூறு  கோலுமாம்.  (எசேக்கியேல்  48:16)

athin  a'lavuga'laavana:  vadapu’ram  naalaayiraththainnoo’ru  koalum,  thenpu’ram  naalaayiraththainnoo’ru  koalum,  keezhppu’ram  naalaayiraththainnoo’ru  koalum,  mea’rpu’ram  naalaayiraththainnoo’ru  koalumaam.  (eseakkiyeal  48:16)

நகரத்தின்  வெளிநிலங்கள்  வடக்கே  இருநூற்றைம்பது  கோலும்,  தெற்கே  இருநூற்றைம்பது  கோலும்,  கிழக்கே  இருநூற்றைம்பது  கோலும்,  மேற்கே  இருநூற்றைம்பது  கோலுமாயிருப்பதாக.  (எசேக்கியேல்  48:17)

nagaraththin  ve'linilangga'l  vadakkea  irunoot’raimbathu  koalum,  the’rkea  irunoot’raimbathu  koalum,  kizhakkea  irunoot’raimbathu  koalum,  mea’rkea  irunoot’raimbathu  koalumaayiruppathaaga.  (eseakkiyeal  48:17)

பரிசுத்த  அர்ப்பிதநிலத்துக்கு  எதிராக  நீளத்தில்  மீதியானது  கிழக்கே  பதினாயிரங்கோலும்  மேற்கே  பதினாயிரங்கோலுமாம்;  அது  பரிசுத்த  அர்ப்பிதநிலத்துக்கு  எதிராயிருக்கும்;  அதின்  வருமானம்  நகரத்திற்காக  ஊழியஞ்செய்கிறவர்களுக்கு  ஆகாரமாயிருப்பதாக.  (எசேக்கியேல்  48:18)

parisuththa  arppithanilaththukku  ethiraaga  nee'laththil  meethiyaanathu  kizhakkea  pathinaayirangkoalum  mea’rkea  pathinaayirangkoalumaam;  athu  parisuththa  arppithanilaththukku  ethiraayirukkum;  athin  varumaanam  nagaraththi’rkaaga  oozhiyagnseygi’ravarga'lukku  aagaaramaayiruppathaaga.  (eseakkiyeal  48:18)

இஸ்ரவேலின்  சகல  கோத்திரங்களிலுமிருந்து  குறிக்கப்பட்ட  சிலர்  நகரத்திற்காகப்  பணிவிடை  செய்வார்கள்.  (எசேக்கியேல்  48:19)

isravealin  sagala  koaththirangga'lilumirunthu  ku’rikkappatta  silar  nagaraththi’rkaagap  pa'nividai  seyvaarga'l.  (eseakkiyeal  48:19)

அர்ப்பிதநிலமனைத்தும்  இருபத்தையாயிரங்கோல்  நீளமும்,  இருபத்தையாயிரங்கோல்  அகலமுமாய்  இருக்கக்கடவது;  பட்டணத்தின்  காணி  உட்பட  இந்தப்  பரிசுத்த  அர்ப்பிதநிலம்  சதுரமாய்  இருக்கவேண்டும்.  (எசேக்கியேல்  48:20)

arppithanilamanaiththum  irubaththaiyaayirangkoal  nee'lamum,  irubaththaiyaayirangkoal  agalamumaay  irukkakkadavathu;  patta'naththin  kaa'ni  udpada  inthap  parisuththa  arppithanilam  sathuramaay  irukkavea'ndum.  (eseakkiyeal  48:20)

பரிசுத்த  அர்ப்பிதநிலத்துக்கும்  நகரத்தின்  காணிக்கும்  இந்தப்புறத்திலும்  அந்தப்புறத்திலும்,  அர்ப்பிதநிலத்தினுடைய  இருபத்தையாயிரங்கோலின்  முன்பாகக்  கிழக்கு  எல்லைமட்டுக்கும்,  மேற்கிலே  இருபத்தையாயிரங்கோலின்  முன்பாக  மேற்கு  எல்லைமட்டுக்கும்  மீதியாயிருப்பது  அதிபதியினுடையது;  பங்குகளுக்கு  எதிரான  அது  அதிபதியினுடையதாயிருப்பதாக;  அதற்கு  நடுவாகப்  பரிசுத்த  அர்ப்பிதநிலமும்  ஆலயத்தின்  பரிசுத்த  ஸ்தலமும்  இருக்கும்.  (எசேக்கியேல்  48:21)

parisuththa  arppithanilaththukkum  nagaraththin  kaa'nikkum  inthappu’raththilum  anthappu’raththilum,  arppithanilaththinudaiya  irubaththaiyaayirangkoalin  munbaagak  kizhakku  ellaimattukkum,  mea’rkilea  irubaththaiyaayirangkoalin  munbaaga  mea’rku  ellaimattukkum  meethiyaayiruppathu  athibathiyinudaiyathu;  pangguga'lukku  ethiraana  athu  athibathiyinudaiyathaayiruppathaaga;  atha’rku  naduvaagap  parisuththa  arppithanilamum  aalayaththin  parisuththa  sthalamum  irukkum.  (eseakkiyeal  48:21)

அதிபதியினுடையதற்கு  நடுவேயிருக்கும்  லேவியரின்  காணிதுவக்கியும்  நகரத்தின்  காணிதுவக்கியும்,  யூதாவின்  எல்லைக்கும்  பென்யமீனின்  எல்லைக்கும்  நடுவேயிருக்கிறது  அதிபதியினுடையது.  (எசேக்கியேல்  48:22)

athibathiyinudaiyatha’rku  naduveayirukkum  leaviyarin  kaa'nithuvakkiyum  nagaraththin  kaa'nithuvakkiyum,  yoothaavin  ellaikkum  benyameenin  ellaikkum  naduveayirukki’rathu  athibathiyinudaiyathu.  (eseakkiyeal  48:22)

மற்றக்  கோத்திரங்களுக்கு  உண்டாகும்  பங்குகளாவன:  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  பென்யமீனுக்கு  ஒரு  பங்கும்,  (எசேக்கியேல்  48:23)

mat’rak  koaththirangga'lukku  u'ndaagum  pangguga'laavana:  keezhththisai  thuvakki  meat’risaimattum  benyameenukku  oru  panggum,  (eseakkiyeal  48:23)

பென்யமீன்  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  சிமியோனுக்கு  ஒரு  பங்கும்,  (எசேக்கியேல்  48:24)

benyameen  ellaiyarugea  keezhththisai  thuvakki  meat’risaimattum  simiyoanukku  oru  panggum,  (eseakkiyeal  48:24)

சிமியோனின்  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  இசக்காருக்கு  ஒரு  பங்கும்,  (எசேக்கியேல்  48:25)

simiyoanin  ellaiyarugea  keezhththisai  thuvakki  meat’risaimattum  isakkaarukku  oru  panggum,  (eseakkiyeal  48:25)

இசக்காரின்  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  செபுலோனுக்கு  ஒரு  பங்கும்,  (எசேக்கியேல்  48:26)

isakkaarin  ellaiyarugea  keezhththisai  thuvakki  meat’risaimattum  sebuloanukku  oru  panggum,  (eseakkiyeal  48:26)

செபுலோனின்  எல்லையருகே  கீழ்த்திசை  துவக்கி  மேற்றிசைமட்டும்  காத்துக்கு  ஒரு  பங்கும்  உண்டாயிருப்பதாக.  (எசேக்கியேல்  48:27)

sebuloanin  ellaiyarugea  keezhththisai  thuvakki  meat’risaimattum  kaaththukku  oru  panggum  u'ndaayiruppathaaga.  (eseakkiyeal  48:27)

காத்தின்  எல்லையருகே  தென்மூலையாகிய  தெற்கு  எல்லை,  தாமார்துவக்கி  காதேசிலுள்ள  சண்டைமூட்டுதலின்  தண்ணீர்கள்  மட்டாகவும்  பெரிய  சமுத்திரமட்டாகவும்  போகும்.  (எசேக்கியேல்  48:28)

kaaththin  ellaiyarugea  thenmoolaiyaagiya  the’rku  ellai,  thaamaarthuvakki  kaatheasilu'l'la  sa'ndaimoottuthalin  tha'n'neerga'l  mattaagavum  periya  samuththiramattaagavum  poagum.  (eseakkiyeal  48:28)

சுதந்தரிக்கும்படி  இதுவே  நீங்கள்  இஸ்ரவேல்  கோத்திரங்களுக்குச்  சீட்டுப்போட்டுப்  பங்கிடும்  தேசம்,  இவைகளே  அவர்களின்  பங்குகள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  48:29)

suthantharikkumpadi  ithuvea  neengga'l  israveal  koaththirangga'lukkuch  seettuppoattup  panggidum  theasam,  ivaiga'lea  avarga'lin  pangguga'l  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  48:29)

நகரத்தினின்று  புறப்படும்  வழிகளாவன:  வடபுறத்திலே  நாலாயிரத்தைந்நூறு  கோலாகிய  அளவுண்டாயிருக்கும்.  (எசேக்கியேல்  48:30)

nagaraththinin’ru  pu’rappadum  vazhiga'laavana:  vadapu’raththilea  naalaayiraththainnoo’ru  koalaagiya  a'lavu'ndaayirukkum.  (eseakkiyeal  48:30)

நகரத்தின்  வாசல்கள்,  இஸ்ரவேல்  கோத்திரங்களுடைய  நாமங்களின்படியே  பெயர்  பெறக்கடவது;  வடக்கே  ரூபனுக்கு  ஒரு  வாசல்,  யூதாவுக்கு  ஒரு  வாசல்,  லேவிக்கு  ஒரு  வாசல்,  ஆக  மூன்று  வாசல்கள்  இருப்பதாக.  (எசேக்கியேல்  48:31)

nagaraththin  vaasalga'l,  israveal  koaththirangga'ludaiya  naamangga'linpadiyea  peyar  pe’rakkadavathu;  vadakkea  roobanukku  oru  vaasal,  yoothaavukku  oru  vaasal,  leavikku  oru  vaasal,  aaga  moon’ru  vaasalga'l  iruppathaaga.  (eseakkiyeal  48:31)

கீழ்ப்புறத்திலே  நாலாயிரத்தைந்நூறு  கோல்,  அதில்  யோசேப்புக்கு  ஒரு  வாசல்,  பென்யமீனுக்கு  ஒரு  வாசல்,  தாணுக்கு  ஒரு  வாசல்,  ஆக  மூன்று  வாசல்கள்  இருப்பதாக.  (எசேக்கியேல்  48:32)

keezhppu’raththilea  naalaayiraththainnoo’ru  koal,  athil  yoaseappukku  oru  vaasal,  benyameenukku  oru  vaasal,  thaa'nukku  oru  vaasal,  aaga  moon’ru  vaasalga'l  iruppathaaga.  (eseakkiyeal  48:32)

தென்புறத்திலே  நாலாயிரத்தைந்நூறு  கோல்,  அதில்  சிமியோனுக்கு  ஒரு  வாசல்,  இசக்காருக்கு  ஒரு  வாசல்,  செபுலோனுக்கு  ஒரு  வாசல்,  ஆக  மூன்று  வாசல்கள்  இருப்பதாக.  (எசேக்கியேல்  48:33)

thenpu’raththilea  naalaayiraththainnoo’ru  koal,  athil  simiyoanukku  oru  vaasal,  isakkaarukku  oru  vaasal,  sebuloanukku  oru  vaasal,  aaga  moon’ru  vaasalga'l  iruppathaaga.  (eseakkiyeal  48:33)

மேற்புறத்திலே  நாலாயிரத்தைந்நூறு  கோல்,  அதில்  காத்துக்கு  ஒரு  வாசல்,  ஆசேருக்கு  ஒரு  வாசல்,  நப்தலிக்கு  ஒரு  வாசல்,  ஆக  மூன்று  வாசல்கள்  இருப்பதாக.  (எசேக்கியேல்  48:34)

mea’rpu’raththilea  naalaayiraththainnoo’ru  koal,  athil  kaaththukku  oru  vaasal,  aasearukku  oru  vaasal,  napthalikku  oru  vaasal,  aaga  moon’ru  vaasalga'l  iruppathaaga.  (eseakkiyeal  48:34)

சுற்றிலும்  அதின்  அளவு  பதினெண்ணாயிரங்கோலாகும்;  அந்நாள்  முதல்  நகரம்  யேகோவா  ஷம்மா  என்னும்  பெயர்பெறும்.  (எசேக்கியேல்  48:35)

sut’rilum  athin  a'lavu  pathine'n'naayirangkoalaagum;  annaa'l  muthal  nagaram  yeagoavaa  shammaa  ennum  peyarpe’rum.  (eseakkiyeal  48:35)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!