Monday, October 31, 2016

Eseakkiyeal 46 | எசேக்கியேல் 46 | Ezekiel 46

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  வேலைசெய்கிற  ஆறுநாளிலும்  கிழக்குக்கு  எதிரான  உட்பிராகாரத்தினுடைய  வாசல்  பூட்டப்பட்டிருந்து,  ஓய்வுநாளிலும்  மாதப்பிறப்பிலும்  திறக்கப்படக்கடவது.  (எசேக்கியேல்  46:1)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  vealaiseygi’ra  aa’runaa'lilum  kizhakkukku  ethiraana  udpiraagaaraththinudaiya  vaasal  poottappattirunthu,  oayvunaa'lilum  maathappi’rappilum  thi’rakkappadakkadavathu.  (eseakkiyeal  46:1)

அப்பொழுது  அதிபதி  வெளிவாசல்  மண்டபத்தின்  வழியாய்ப்  பிரவேசித்து,  வாசல்  நிலையண்டையிலே  நிற்கக்கடவன்;  ஆசாரியர்களோ  அவனுடைய  தகனபலியையும்,  அவனுடைய  சமாதான  பலிகளையும்  படைக்கக்கடவர்கள்;  அவன்  வாசற்படியிலே  ஆராதனைசெய்து,  பின்பு  புறப்படுவானாக;  அந்த  வாசல்  சாயங்காலமட்டும்  பூட்டப்படாதிருப்பதாக.  (எசேக்கியேல்  46:2)

appozhuthu  athibathi  ve'livaasal  ma'ndabaththin  vazhiyaayp  piraveasiththu,  vaasal  nilaiya'ndaiyilea  ni’rkakkadavan;  aasaariyarga'loa  avanudaiya  thaganabaliyaiyum,  avanudaiya  samaathaana  baliga'laiyum  padaikkakkadavarga'l;  avan  vaasa’rpadiyilea  aaraathanaiseythu,  pinbu  pu’rappaduvaanaaga;  antha  vaasal  saayanggaalamattum  poottappadaathiruppathaaga.  (eseakkiyeal  46:2)

தேசத்து  ஜனங்களும்  ஓய்வுநாட்களிலும்  மாதப்பிறப்புகளிலும்  அந்த  வாசலின்  நடையிலே  கர்த்தருடைய  சந்நிதியில்  ஆராதனை  செய்யக்கடவர்கள்.  (எசேக்கியேல்  46:3)

theasaththu  janangga'lum  oayvunaadka'lilum  maathappi’rappuga'lilum  antha  vaasalin  nadaiyilea  karththarudaiya  sannithiyil  aaraathanai  seyyakkadavarga'l.  (eseakkiyeal  46:3)

அதிபதி  ஓய்வுநாளிலே  கர்த்தருக்குப்  பலியிடும்  தகனபலி,  பழுதற்ற  ஆறு  ஆட்டுக்குட்டிகளும்  பழுதற்ற  ஒரு  ஆட்டுக்கடாவுமே.  (எசேக்கியேல்  46:4)

athibathi  oayvunaa'lilea  karththarukkup  baliyidum  thaganabali,  pazhuthat’ra  aa’ru  aattukkuttiga'lum  pazhuthat’ra  oru  aattukkadaavumea.  (eseakkiyeal  46:4)

ஆட்டுக்கடாவோடே  போஜனபலியாக  ஒரு  மரக்கால்  மாவையும்,  ஆட்டுக்குட்டிகளோடே  போஜனபலியாகத்  தன்  திராணிக்குத்தக்கதாய்த்  தருகிற  ஈவையும்,  ஒவ்வொரு  மரக்கால்  மாவோடே  ஒருபடி  எண்ணெயையும்  படைக்கக்கடவன்.  (எசேக்கியேல்  46:5)

aattukkadaavoadea  poajanabaliyaaga  oru  marakkaal  maavaiyum,  aattukkuttiga'loadea  poajanabaliyaagath  than  thiraa'nikkuththakkathaayth  tharugi’ra  eevaiyum,  ovvoru  marakkaal  maavoadea  orupadi  e'n'neyaiyum  padaikkakkadavan.  (eseakkiyeal  46:5)

மாதப்பிறப்பான  நாளிலோ,  அவன்  பழுதற்ற  ஒரு  இளங்காளையையும்,  பழுதற்ற  ஆறு  ஆட்டுக்குட்டிகளையும்,  ஒரு  ஆட்டுக்கடாவையும்  பலியிட்டு,  (எசேக்கியேல்  46:6)

maathappi’rappaana  naa'liloa,  avan  pazhuthat’ra  oru  i'langkaa'laiyaiyum,  pazhuthat’ra  aa’ru  aattukkuttiga'laiyum,  oru  aattukkadaavaiyum  baliyittu,  (eseakkiyeal  46:6)

போஜனபலியாக  இளங்காளையோடே  ஒரு  மரக்கால்  மாவையும்,  ஆட்டுக்கடாவோடே  ஒரு  மரக்கால்  மாவையும்,  ஆட்டுக்குட்டிகளோடே  தன்  திராணிக்குத்தக்கதாய்,  ஒவ்வொரு  மரக்கால்  மாவோடே  ஒருபடி  எண்ணெயையும்  படைக்கக்கடவன்.  (எசேக்கியேல்  46:7)

poajanabaliyaaga  i'langkaa'laiyoadea  oru  marakkaal  maavaiyum,  aattukkadaavoadea  oru  marakkaal  maavaiyum,  aattukkuttiga'loadea  than  thiraa'nikkuththakkathaay,  ovvoru  marakkaal  maavoadea  orupadi  e'n'neyaiyum  padaikkakkadavan.  (eseakkiyeal  46:7)

அதிபதி  வருகிறபோது  வாசல்  மண்டபத்தின்  வழியாய்ப்  பிரவேசித்து,  அது  வழியாய்த்  திரும்பப்  புறப்படக்கடவன்.  (எசேக்கியேல்  46:8)

athibathi  varugi’rapoathu  vaasal  ma'ndabaththin  vazhiyaayp  piraveasiththu,  athu  vazhiyaayth  thirumbap  pu’rappadakkadavan.  (eseakkiyeal  46:8)

தேசத்தின்  ஜனங்கள்  குறிக்கப்பட்ட  நாட்களில்  கர்த்தருடைய  சந்நிதியில்  வரும்போது,  ஆராதனை  செய்கிறதற்காக  வடக்கு  வாசல்வழியாய்  உட்பிரவேசித்தவன்  தெற்கு  வாசல்  வழியாய்ப்  புறப்படவும்,  தெற்கு  வாசல்வழியாய்  உட்பிரவேசித்தவன்  வடக்கு  வாசல்வழியாய்ப்  புறப்படவும்கடவன்;  தான்  பிரவேசித்த  வாசல்வழியாய்த்  திரும்பிப்போகாமல்,  தனக்கு  எதிரான  வழியாய்ப்  புறப்பட்டுப்போவானாக.  (எசேக்கியேல்  46:9)

theasaththin  janangga'l  ku’rikkappatta  naadka'lil  karththarudaiya  sannithiyil  varumpoathu,  aaraathanai  seygi’ratha’rkaaga  vadakku  vaasalvazhiyaay  udpiraveasiththavan  the’rku  vaasal  vazhiyaayp  pu’rappadavum,  the’rku  vaasalvazhiyaay  udpiraveasiththavan  vadakku  vaasalvazhiyaayp  pu’rappadavumkadavan;  thaan  piraveasiththa  vaasalvazhiyaayth  thirumbippoagaamal,  thanakku  ethiraana  vazhiyaayp  pu’rappattuppoavaanaaga.  (eseakkiyeal  46:9)

அவர்கள்  உட்பிரவேசிக்கும்போது,  அதிபதி  அவர்கள்  நடுவிலே  அவர்களோடேகூட  உட்பிரவேசித்து,  அவர்கள்  புறப்படும்போது  அவனும்  கூடப்  புறப்படுவானாக.  (எசேக்கியேல்  46:10)

avarga'l  udpiraveasikkumpoathu,  athibathi  avarga'l  naduvilea  avarga'loadeakooda  udpiraveasiththu,  avarga'l  pu’rappadumpoathu  avanum  koodap  pu’rappaduvaanaaga.  (eseakkiyeal  46:10)

பண்டிகைகளிலும்  குறிக்கப்பட்ட  காலங்களிலும்  அவன்  படைக்கும்  போஜனபலியாவது:  காளையோடே  ஒரு  மரக்கால்  மாவும்,  ஆட்டுக்கடாவோடே  ஒரு  மரக்கால்  மாவும்,  ஆட்டுக்குட்டிகளோடே  அவன்  திராணிக்குத்தக்கதாய்த்  தருகிற  ஒரு  ஈவும்,  ஒவ்வொரு  மரக்கால்  மாவோடே  ஒருபடி  எண்ணெயும்  கொடுக்கவேண்டும்.  (எசேக்கியேல்  46:11)

pa'ndigaiga'lilum  ku’rikkappatta  kaalangga'lilum  avan  padaikkum  poajanabaliyaavathu:  kaa'laiyoadea  oru  marakkaal  maavum,  aattukkadaavoadea  oru  marakkaal  maavum,  aattukkuttiga'loadea  avan  thiraa'nikkuththakkathaayth  tharugi’ra  oru  eevum,  ovvoru  marakkaal  maavoadea  orupadi  e'n'neyum  kodukkavea'ndum.  (eseakkiyeal  46:11)

அதிபதி  உற்சாகமான  தகனபலியாகிலும்,  சமாதான  பலிகளையாகிலும்  கர்த்தருக்கு  உற்சாகமாய்ச்  செலுத்தவேண்டுமென்றால்,  அவனுக்குக்  கிழக்கு  நோக்கிய  எதிரான  வாசல்  திறக்கப்படுவதாக;  அப்பொழுது  அவன்  ஓய்வுநாளில்  செய்கிறதுபோல,  தன்  தகனபலியையும்  தன்  சமாதான  பலியையும்  செலுத்தி,  பின்பு  புறப்படக்கடவன்;  அவன்  புறப்பட்டபின்பு  வாசல்  பூட்டப்படவேண்டும்.  (எசேக்கியேல்  46:12)

athibathi  u’rchaagamaana  thaganabaliyaagilum,  samaathaana  baliga'laiyaagilum  karththarukku  u’rchaagamaaych  seluththavea'ndumen’raal,  avanukkuk  kizhakku  noakkiya  ethiraana  vaasal  thi’rakkappaduvathaaga;  appozhuthu  avan  oayvunaa'lil  seygi’rathupoala,  than  thaganabaliyaiyum  than  samaathaana  baliyaiyum  seluththi,  pinbu  pu’rappadakkadavan;  avan  pu’rappattapinbu  vaasal  poottappadavea'ndum.  (eseakkiyeal  46:12)

தினந்தோறும்  ஒரு  வயதான  பழுதற்ற  ஒரு  ஆட்டுக்குட்டியைக்  கர்த்தருக்குத்  தகனபலியாகப்  படைக்கக்கடவாய்;  காலைதோறும்  அதைப்படைக்கவேண்டும்.  (எசேக்கியேல்  46:13)

thinanthoa’rum  oru  vayathaana  pazhuthat’ra  oru  aattukkuttiyaik  karththarukkuth  thaganabaliyaagap  padaikkakkadavaay;  kaalaithoa’rum  athaippadaikkavea'ndum.  (eseakkiyeal  46:13)

அதினோடே  காலைதோறும்  போஜனபலியாக  ஒரு  மரக்கால்  மாவிலே  ஆறத்தொரு  பங்கையும்,  மெல்லிய  மாவைப்  பிசையும்படிக்கு  ஒருபடி  எண்ணெயிலே  மூன்றத்தொரு  பங்கையும்  படைக்கக்கடவாய்;  இது  அன்றாடம்  கர்த்தருக்குப்  படைக்கவேண்டிய  நித்திய  கட்டளையான  போஜனபலி.  (எசேக்கியேல்  46:14)

athinoadea  kaalaithoa’rum  poajanabaliyaaga  oru  marakkaal  maavilea  aa’raththoru  panggaiyum,  melliya  maavaip  pisaiyumpadikku  orupadi  e'n'neyilea  moon’raththoru  panggaiyum  padaikkakkadavaay;  ithu  an’raadam  karththarukkup  padaikkavea'ndiya  niththiya  katta'laiyaana  poajanabali.  (eseakkiyeal  46:14)

இப்படிக்  காலைதோறும்  அன்றாட  தகனபலியாக  ஆட்டுக்குட்டியையும்  போஜனபலியையும்  எண்ணெயையும்  செலுத்துவார்களாக.  (எசேக்கியேல்  46:15)

ippadik  kaalaithoa’rum  an’raada  thaganabaliyaaga  aattukkuttiyaiyum  poajanabaliyaiyum  e'n'neyaiyum  seluththuvaarga'laaga.  (eseakkiyeal  46:15)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  அதிபதி  தன்  குமாரரில்  ஒருவனுக்குத்  தன்  சுதந்தரத்தில்  ஒரு  பங்கைக்  கொடுத்தால்,  அது  அவன்  குமாரருடையதாயிருக்கும்;  அது  சுதந்தரவீதமாய்  அவர்களுக்குச்  சொந்தமாகும்.  (எசேக்கியேல்  46:16)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  athibathi  than  kumaararil  oruvanukkuth  than  suthantharaththil  oru  panggaik  koduththaal,  athu  avan  kumaararudaiyathaayirukkum;  athu  suthantharaveethamaay  avarga'lukkuch  sonthamaagum.  (eseakkiyeal  46:16)

அவன்  தன்  ஊழியக்காரரில்  ஒருவனுக்குத்  தன்  சுதந்தரத்தில்  ஒரு  பங்கைக்  கொடுத்தானேயாகில்,  அது  விடுதலையின்  வருஷமட்டும்  அவனுடையதாயிருந்து,  பின்பு  திரும்ப  அதிபதியின்  வசமாய்ச்  சேரும்;  அதின்  சுதந்தரம்  அவன்  குமாரருக்கே  உரியது,  அது  அவர்களுடையதாயிருக்கும்.  (எசேக்கியேல்  46:17)

avan  than  oozhiyakkaararil  oruvanukkuth  than  suthantharaththil  oru  panggaik  koduththaaneayaagil,  athu  viduthalaiyin  varushamattum  avanudaiyathaayirunthu,  pinbu  thirumba  athibathiyin  vasamaaych  searum;  athin  suthantharam  avan  kumaararukkea  uriyathu,  athu  avarga'ludaiyathaayirukkum.  (eseakkiyeal  46:17)

அதிபதியானவன்  ஜனத்தை  இடுக்கண்  செய்து,  அவர்களின்  சொந்தமானதற்கு  அவர்களைப்  புறம்பாக்கி,  அவர்களுடைய  சுதந்தரத்திலிருந்து  ஒன்றும்  எடுக்கலாகாது;  என்  ஜனத்தில்  ஒருவரும்  தங்கள்  சொந்தமானதற்குப்  புறம்பாக்கப்பட்டுச்  சிதறடிக்கப்படாதபடிக்கு  அவன்  தன்  சொந்தத்திலே  தன்  குமாரருக்குச்  சுதந்தரம்  கொடுக்கக்கடவன்.  (எசேக்கியேல்  46:18)

athibathiyaanavan  janaththai  idukka'n  seythu,  avarga'lin  sonthamaanatha’rku  avarga'laip  pu’rambaakki,  avarga'ludaiya  suthantharaththilirunthu  on’rum  edukkalaagaathu;  en  janaththil  oruvarum  thangga'l  sonthamaanatha’rkup  pu’rambaakkappattuch  sitha’radikkappadaathapadikku  avan  than  sonthaththilea  than  kumaararukkuch  suthantharam  kodukkakkadavan.  (eseakkiyeal  46:18)

பின்பு  அவர்  வாசலின்  பக்கத்தில்  இருந்த  நடைவழியாய்  என்னை  வடக்குக்கு  எதிரான  ஆசாரியர்களுடைய  பரிசுத்த  அறைவீடுகளுக்கு  அழைத்துக்கொண்டுபோனார்;  அவ்விடத்தில்  மேற்கே  இருபுறத்திலும்  ஒரு  இடம்  இருந்தது.  (எசேக்கியேல்  46:19)

pinbu  avar  vaasalin  pakkaththil  iruntha  nadaivazhiyaay  ennai  vadakkukku  ethiraana  aasaariyarga'ludaiya  parisuththa  a’raiveeduga'lukku  azhaiththukko'ndupoanaar;  avvidaththil  mea’rkea  irupu’raththilum  oru  idam  irunthathu.  (eseakkiyeal  46:19)

அவர்  என்னை  நோக்கி:  குற்றநிவாரணபலியையும்  பாவநிவாரணபலியையும்  போஜனபலியையும்  ஆசாரியர்கள்  வெளிப்பிராகாரத்திலே  கொண்டுபோய்  ஜனங்களைப்  பரிசுத்தம்பண்ணாதபடிக்கு,  அவர்கள்  அவைகளைச்  சமைக்கிறதற்கும்  சுடுகிறதற்குமான  ஸ்தலம்  இதுவே  என்றார்.  (எசேக்கியேல்  46:20)

avar  ennai  noakki:  kut’ranivaara'nabaliyaiyum  paavanivaara'nabaliyaiyum  poajanabaliyaiyum  aasaariyarga'l  ve'lippiraagaaraththilea  ko'ndupoay  janangga'laip  parisuththampa'n'naathapadikku,  avarga'l  avaiga'laich  samaikki’ratha’rkum  sudugi’ratha’rkumaana  sthalam  ithuvea  en’raar.  (eseakkiyeal  46:20)

பின்பு  அவர்  என்னை  வெளிப்பிராகாரத்தில்  அழைத்துக்கொண்டுபோய்,  என்னைப்  பிராகாரத்தின்  நாலு  மூலைகளையும்  கடந்துபோகப்பண்ணினார்;  பிராகாரத்து  ஒவ்வொரு  மூலையிலும்  ஒவ்வொரு  முற்றம்  இருந்தது.  (எசேக்கியேல்  46:21)

pinbu  avar  ennai  ve'lippiraagaaraththil  azhaiththukko'ndupoay,  ennaip  piraagaaraththin  naalu  moolaiga'laiyum  kadanthupoagappa'n'ninaar;  piraagaaraththu  ovvoru  moolaiyilum  ovvoru  mut’ram  irunthathu.  (eseakkiyeal  46:21)

பிராகாரத்தின்  நாலு  மூலைகளிலும்  புகைத்துவாரங்களுள்ள  இந்த  முற்றங்கள்  நாற்பது  முழ  நீளமும்,  முப்பது  முழ  அகலமுமானவைகள்;  இந்த  நாலு  மூலை  முற்றங்களுக்கும்  ஒரே  அளவு  இருந்தது.  (எசேக்கியேல்  46:22)

piraagaaraththin  naalu  moolaiga'lilum  pugaiththuvaarangga'lu'l'la  intha  mut’rangga'l  naa’rpathu  muzha  nee'lamum,  muppathu  muzha  agalamumaanavaiga'l;  intha  naalu  moolai  mut’rangga'lukkum  orea  a'lavu  irunthathu.  (eseakkiyeal  46:22)

இந்த  நாலுக்கும்  சுற்றிலும்  உள்ளே  ஒரு  சுற்றுக்கட்டு  உண்டாயிருந்தது;  இந்தச்  சுற்றுக்கட்டுகளின்  சுற்றிலும்  அடுப்புகள்  போடப்பட்டிருந்தது.  (எசேக்கியேல்  46:23)

intha  naalukkum  sut’rilum  u'l'lea  oru  sut’rukkattu  u'ndaayirunthathu;  inthach  sut’rukkattuga'lin  sut’rilum  aduppuga'l  poadappattirunthathu.  (eseakkiyeal  46:23)

அவர்  என்னை  நோக்கி:  இவைகள்  ஜனங்கள்  இடும்  பலிகளை  ஆலயத்தின்  பணிவிடைக்காரர்  சமைக்கிற  வீடுகள்  என்றார்.  (எசேக்கியேல்  46:24)

avar  ennai  noakki:  ivaiga'l  janangga'l  idum  baliga'lai  aalayaththin  pa'nividaikkaarar  samaikki’ra  veeduga'l  en’raar.  (eseakkiyeal  46:24)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!