Monday, October 31, 2016

Eseakkiyeal 45 | எசேக்கியேல் 45 | Ezekiel 45

நீங்கள்  சுதந்தரித்துக்கொள்ளும்படி  தேசத்தைச்  சீட்டுப்போட்டுப்  பங்கிடும்போது,  தேசத்தில்  இருபத்தையாயிரங்கோல்  நீளமும்,  பதினாயிரங்கோல்  அகலமுமான  பரிசுத்த  பங்கைக்  கர்த்தருக்கு  அர்ப்பிதமாகப்  பிரித்து  வைக்கக்கடவீர்கள்;  இது  தன்  சுற்றெல்லை  எங்கும்  பரிசுத்தமாயிருக்கும்.  (எசேக்கியேல்  45:1)

neengga'l  suthanthariththukko'l'lumpadi  theasaththaich  seettuppoattup  panggidumpoathu,  theasaththil  irubaththaiyaayirangkoal  nee'lamum,  pathinaayirangkoal  agalamumaana  parisuththa  panggaik  karththarukku  arppithamaagap  piriththu  vaikkakkadaveerga'l;  ithu  than  sut’rellai  enggum  parisuththamaayirukkum.  (eseakkiyeal  45:1)

இதிலே  பரிசுத்த  ஸ்தலத்துக்கென்று  ஐந்நூறு  கோல்  நீளமும்  ஐந்நூறு  கோல்  அகலமுமான  நாற்சதுரம்  அளக்கப்படக்கடவது;  அதற்குச்  சுற்றிலும்  ஐம்பது  முழமான  வெளிநிலம்  இருக்கவேண்டும்.  (எசேக்கியேல்  45:2)

ithilea  parisuththa  sthalaththukken’ru  ainnoo’ru  koal  nee'lamum  ainnoo’ru  koal  agalamumaana  naa’rsathuram  a'lakkappadakkadavathu;  atha’rkuch  sut’rilum  aimbathu  muzhamaana  ve'linilam  irukkavea'ndum.  (eseakkiyeal  45:2)

இந்த  அளவு  உட்பட  இருபத்தையாயிரங்கோல்  நீளத்தையும்  பதினாயிரங்கோல்  அகலத்தையும்  அளப்பாயாக;  அதற்குள்  பரிசுத்த  ஸ்தலமும்  மகா  பரிசுத்த  ஸ்தலமும்  இருக்கவேண்டும்.  (எசேக்கியேல்  45:3)

intha  a'lavu  udpada  irubaththaiyaayirangkoal  nee'laththaiyum  pathinaayirangkoal  agalaththaiyum  a'lappaayaaga;  atha’rku'l  parisuththa  sthalamum  mahaa  parisuththa  sthalamum  irukkavea'ndum.  (eseakkiyeal  45:3)

தேசத்தில்  பரிசுத்த  பங்காகிய  இது  கர்த்தருக்கு  ஆராதனைசெய்யச்  சேருகிறவர்களும்,  பரிசுத்த  ஸ்தலத்தில்  ஆராதனை  செய்கிறவர்களுமான  ஆசாரியருடையது;  இது  அவர்களுக்கு  வீடுகளுக்கான  இடமும்,  பரிசுத்த  ஸ்தலத்துக்கு  அடுத்த  இடமுமாயிருக்கவேண்டும்.  (எசேக்கியேல்  45:4)

theasaththil  parisuththa  panggaagiya  ithu  karththarukku  aaraathanaiseyyach  searugi’ravarga'lum,  parisuththa  sthalaththil  aaraathanai  seygi’ravarga'lumaana  aasaariyarudaiyathu;  ithu  avarga'lukku  veeduga'lukkaana  idamum,  parisuththa  sthalaththukku  aduththa  idamumaayirukkavea'ndum.  (eseakkiyeal  45:4)

பின்னும்  இருபத்தையாயிரங்கோல்  நீளமும்  பதினாயிரங்கோல்  அகலமுமான  இடம்  ஆலயத்தின்  பணிவிடைக்காரராகிய  லேவியருடையதாயிருக்கும்;  அது  அவர்களுடைய  காணியாட்சி;  அதில்  இருபது  அறைவீடுகள்  இருக்கவேண்டும்.  (எசேக்கியேல்  45:5)

pinnum  irubaththaiyaayirangkoal  nee'lamum  pathinaayirangkoal  agalamumaana  idam  aalayaththin  pa'nividaikkaararaagiya  leaviyarudaiyathaayirukkum;  athu  avarga'ludaiya  kaa'niyaadchi;  athil  irubathu  a’raiveeduga'l  irukkavea'ndum.  (eseakkiyeal  45:5)

பரிசுத்த  பங்காகப்  படைக்கப்பட்டதற்கு  எதிரே  நகரத்தின்  காணியாட்சியாக  ஐயாயிரங்கோல்  அகலத்தையும்  இருபத்தையாயிரங்கோல்  நீளத்தையும்  அளந்து  கொடுப்பீர்களாக;  அது  இஸ்ரவேல்  வம்சத்தார்  அனைவருக்கும்  சொந்தமாயிருக்கும்.  (எசேக்கியேல்  45:6)

parisuththa  panggaagap  padaikkappattatha’rku  ethirea  nagaraththin  kaa'niyaadchiyaaga  aiyaayirangkoal  agalaththaiyum  irubaththaiyaayirangkoal  nee'laththaiyum  a'lanthu  koduppeerga'laaga;  athu  israveal  vamsaththaar  anaivarukkum  sonthamaayirukkum.  (eseakkiyeal  45:6)

பரிசுத்த  பங்காகப்  படைக்கப்பட்டதற்கும்  நகரத்தின்  காணியாட்சிக்கும்  இந்தப்புறத்திலும்  அந்தப்புறத்திலும்,  பரிசுத்த  படைப்புக்கு  முன்பாகவும்,  நகரத்தின்  காணிக்கு  முன்பாகவும்,  அதிபதியினுடைய  பங்கு  மேற்கிலே  மேற்புறமாகவும்  கிழக்கிலே  கீழ்ப்புறமாகவும்  இருப்பதாக;  அதின்  நீளம்  மேல்  எல்லை  துவக்கிக்  கீழ்  எல்லைமட்டும்  பங்குகளில்  ஒவ்வொன்றுக்கும்  எதிராயிருக்கவேண்டும்.  (எசேக்கியேல்  45:7)

parisuththa  panggaagap  padaikkappattatha’rkum  nagaraththin  kaa'niyaadchikkum  inthappu’raththilum  anthappu’raththilum,  parisuththa  padaippukku  munbaagavum,  nagaraththin  kaa'nikku  munbaagavum,  athibathiyinudaiya  panggu  mea’rkilea  mea’rpu’ramaagavum  kizhakkilea  keezhppu’ramaagavum  iruppathaaga;  athin  nee'lam  meal  ellai  thuvakkik  keezh  ellaimattum  pangguga'lil  ovvon’rukkum  ethiraayirukkavea'ndum.  (eseakkiyeal  45:7)

இது  அவனுக்கு  இஸ்ரவேலிலே  காணிபூமியாக  இருக்கக்கடவது;  என்  அதிபதிகள்  இனி  என்  ஜனத்தை  ஒடுக்காமல்  தேசத்தை  இஸ்ரவேல்  வம்சத்தாருக்கு  அவர்களுடைய  கோத்திரங்களுக்குத்தக்கதாக  விட்டுவிடுவார்களாக.  (எசேக்கியேல்  45:8)

ithu  avanukku  isravealilea  kaa'niboomiyaaga  irukkakkadavathu;  en  athibathiga'l  ini  en  janaththai  odukkaamal  theasaththai  israveal  vamsaththaarukku  avarga'ludaiya  koaththirangga'lukkuththakkathaaga  vittuviduvaarga'laaga.  (eseakkiyeal  45:8)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இஸ்ரவேலின்  அதிபதிகளே,  நீங்கள்  செய்ததுபோதும்;  நீங்கள்  கொடுமையையும்  கொள்ளையிடுதலையும்  தவிர்த்து,  நியாயத்தையும்  நீதியையும்  செய்யுங்கள்;  உங்கள்  உத்தண்டங்களை  என்  ஜனத்தைவிட்டு  அகற்றுங்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  45:9)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  isravealin  athibathiga'lea,  neengga'l  seythathupoathum;  neengga'l  kodumaiyaiyum  ko'l'laiyiduthalaiyum  thavirththu,  niyaayaththaiyum  neethiyaiyum  seyyungga'l;  ungga'l  uththa'ndangga'lai  en  janaththaivittu  agat’rungga'l  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  45:9)

சுமுத்திரையான  தராசும்,  சுமுத்திரையான  மரக்காலும்,  சுமுத்திரையான  அளவுகுடமும்  உங்களுக்கு  இருக்கக்கடவது.  (எசேக்கியேல்  45:10)

sumuththiraiyaana  tharaasum,  sumuththiraiyaana  marakkaalum,  sumuththiraiyaana  a'lavukudamum  ungga'lukku  irukkakkadavathu.  (eseakkiyeal  45:10)

மரக்காலும்  அளவுகுடமும்  ஒரே  அளவாயிருந்து,  மரக்கால்  கலத்திலே  பத்தில்  ஒரு  பங்கும்,  அளவுகுடம்  கலத்திலே  பத்தில்  ஒரு  பங்கும்  பிடிக்கக்கடவது;  கலத்தின்படியே  அதின்  அளவு  நிருணயிக்கப்படுவதாக.  (எசேக்கியேல்  45:11)

marakkaalum  a'lavukudamum  orea  a'lavaayirunthu,  marakkaal  kalaththilea  paththil  oru  panggum,  a'lavukudam  kalaththilea  paththil  oru  panggum  pidikkakkadavathu;  kalaththinpadiyea  athin  a'lavu  niru'nayikkappaduvathaaga.  (eseakkiyeal  45:11)

சேக்கலானது  இருபது  கேரா;  இருபது  சேக்கலும்  இருபத்தைந்து  சேக்கலும்  பதினைந்து  சேக்கலும்  உங்களுக்கு  ஒரு  இராத்தலாகும்.  (எசேக்கியேல்  45:12)

seakkalaanathu  irubathu  kearaa;  irubathu  seakkalum  irubaththainthu  seakkalum  pathinainthu  seakkalum  ungga'lukku  oru  iraaththalaagum.  (eseakkiyeal  45:12)

நீங்கள்  செலுத்தவேண்டிய  காணிக்கையாவது:  ஒரு  கலம்  கோதுமையிலே  ஒரு  மரக்காலில்  ஆறிலொரு  பங்கையும்,  ஒரு  கலம்  வாற்கோதுமையிலே  ஒரு  மரக்காலில்  ஆறிலொருபங்கையும்  படைக்கக்கடவீர்கள்.  (எசேக்கியேல்  45:13)

neengga'l  seluththavea'ndiya  kaa'nikkaiyaavathu:  oru  kalam  koathumaiyilea  oru  marakkaalil  aa’riloru  panggaiyum,  oru  kalam  vaa’rkoathumaiyilea  oru  marakkaalil  aa’rilorupanggaiyum  padaikkakkadaveerga'l.  (eseakkiyeal  45:13)

அளவுகுடத்தால்  அளக்கிற  எண்ணெயின்  கட்டளையாவது:  பத்துக்குடம்  பிடிக்கிற  கலத்துக்குச்  சரியான  ஒரு  ஜாடி  எண்ணெயிலே  பத்தில்  ஒரு  பங்கைப்  படைப்பீர்களாக;  பத்து  அளவுகுடம்  ஒரு  கலமாகும்.  (எசேக்கியேல்  45:14)

a'lavukudaththaal  a'lakki’ra  e'n'neyin  katta'laiyaavathu:  paththukkudam  pidikki’ra  kalaththukkuch  sariyaana  oru  jaadi  e'n'neyilea  paththil  oru  panggaip  padaippeerga'laaga;  paththu  a'lavukudam  oru  kalamaagum.  (eseakkiyeal  45:14)

இஸ்ரவேல்  தேசத்திலே  நல்லமேய்ச்சலை  மேய்கிற  மந்தையிலே  இருநூறு  ஆடுகளில்  ஒரு  ஆடும்,  அவர்களுடைய  பாவநிவாரணத்திற்காகப்  போஜனபலியாகவும்  தகனபலியாகவும்  சமாதானபலியாகவும்  செலுத்தப்படக்கடவதென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  45:15)

israveal  theasaththilea  nallameaychchalai  meaygi’ra  manthaiyilea  irunoo’ru  aaduga'lil  oru  aadum,  avarga'ludaiya  paavanivaara'naththi’rkaagap  poajanabaliyaagavum  thaganabaliyaagavum  samaathaanabaliyaagavum  seluththappadakkadavathen’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  45:15)

இஸ்ரவேலின்  அதிபதிக்கு  முன்பாகத்  தேசத்தின்  ஜனங்களெல்லாரும்  இந்தக்  காணிக்கையைச்  செலுத்தக்  கடனாளிகளாயிருக்கிறார்கள்.  (எசேக்கியேல்  45:16)

isravealin  athibathikku  munbaagath  theasaththin  janangga'lellaarum  inthak  kaa'nikkaiyaich  seluththak  kadanaa'liga'laayirukki’raarga'l.  (eseakkiyeal  45:16)

இஸ்ரவேல்  வம்சத்தார்  கூடிவரக்  குறிக்கப்பட்ட  சகல  பண்டிகைகளிலும்  மாதப்பிறப்புகளிலும்  ஓய்வுநாட்களிலும்  தகனபலிகளையும்  போஜனபலிகளையும்  பானபலிகளையும்  செலுத்துவது  அதிபதியின்மேல்  சுமந்த  கடனாயிருக்கும்;  அவன்  இஸ்ரவேல்  வம்சத்தாருக்காகப்  பாவநிவாரணம்பண்ணும்படிக்குப்  பாவநிவாரணபலியையும்  போஜனபலியையும்  தகனபலியையும்  சமாதானபலியையும்  படைப்பானாக.  (எசேக்கியேல்  45:17)

israveal  vamsaththaar  koodivarak  ku’rikkappatta  sagala  pa'ndigaiga'lilum  maathappi’rappuga'lilum  oayvunaadka'lilum  thaganabaliga'laiyum  poajanabaliga'laiyum  baanabaliga'laiyum  seluththuvathu  athibathiyinmeal  sumantha  kadanaayirukkum;  avan  israveal  vamsaththaarukkaagap  paavanivaara'nampa'n'numpadikkup  paavanivaara'nabaliyaiyum  poajanabaliyaiyum  thaganabaliyaiyum  samaathaanabaliyaiyum  padaippaanaaga.  (eseakkiyeal  45:17)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  முதலாம்  மாதம்  முதலாந்தேதியிலே  நீ  பழுதற்ற  ஒரு  காளையைக்  கொண்டுவந்து,  பரிசுத்த  ஸ்தலத்துக்குப்  பாவநிவிர்த்தி  செய்வாயாக.  (எசேக்கியேல்  45:18)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  muthalaam  maatham  muthalaantheathiyilea  nee  pazhuthat’ra  oru  kaa'laiyaik  ko'nduvanthu,  parisuththa  sthalaththukkup  paavanivirththi  seyvaayaaga.  (eseakkiyeal  45:18)

பாவநிவாரணபலியின்  இரத்தத்திலே  கொஞ்சம்  ஆசாரியன்  எடுத்து,  ஆலயத்தின்  வாசல்  நிலைகளிலும்,  பலிபீடத்துச்  சட்டத்தின்  நாலு  கோடிகளிலும்,  உட்பிராகாரத்தின்  வாசல்நிலைகளிலும்  பூசக்கடவன்.  (எசேக்கியேல்  45:19)

paavanivaara'nabaliyin  iraththaththilea  kogncham  aasaariyan  eduththu,  aalayaththin  vaasal  nilaiga'lilum,  balipeedaththuch  sattaththin  naalu  koadiga'lilum,  udpiraagaaraththin  vaasalnilaiga'lilum  poosakkadavan.  (eseakkiyeal  45:19)

பிழைசெய்தவனுக்காகவும்,  அறியாமல்  தப்பிதம்  செய்தவனுக்காகவும்  அந்தப்பிரகாரமாக  ஏழாந்தேதியிலும்  செய்வாயாக;  இவ்விதமாய்  ஆலயத்துக்குப்  பாவநிவர்த்தி  செய்வாயாக.  (எசேக்கியேல்  45:20)

pizhaiseythavanukkaagavum,  a’riyaamal  thappitham  seythavanukkaagavum  anthappiragaaramaaga  eazhaantheathiyilum  seyvaayaaga;  ivvithamaay  aalayaththukkup  paavanivarththi  seyvaayaaga.  (eseakkiyeal  45:20)

முதலாம்  மாதம்  பதினாலாந்தேதியிலே  புளிப்பில்லாத  அப்பம்  புசிக்கப்படுகிற  ஏழுநாள்  பண்டிகையாகிய  பஸ்கா  ஆரம்பமாகும்.  (எசேக்கியேல்  45:21)

muthalaam  maatham  pathinaalaantheathiyilea  pu'lippillaatha  appam  pusikkappadugi’ra  eazhunaa'l  pa'ndigaiyaagiya  paskaa  aarambamaagum.  (eseakkiyeal  45:21)

அந்நாளிலே  அதிபதி  தன்னிமித்தமும்  தேசத்து  எல்லா  ஜனங்களிநிமித்தமும்  பாவநிவாரணத்துக்காக  ஒரு  காளையைப்  படைப்பானாக.  (எசேக்கியேல்  45:22)

annaa'lilea  athibathi  thannimiththamum  theasaththu  ellaa  janangga'linimiththamum  paavanivaara'naththukkaaga  oru  kaa'laiyaip  padaippaanaaga.  (eseakkiyeal  45:22)

ஏழுநாள்  பண்டிகையில்,  அவன்  அந்த  ஏழுநாளும்  தினந்தோறும்  கர்த்தருக்குத்  தகனபலியாகப்  பழுதற்ற  ஏழு  காளைகளையும்  ஏழு  ஆட்டுக்கடாக்களையும்,  பாவநிவாரணபலியாக  ஒரு  வெள்ளாட்டுக்கடாவையும்  தினந்தோறும்  படைப்பானாக.  (எசேக்கியேல்  45:23)

eazhunaa'l  pa'ndigaiyil,  avan  antha  eazhunaa'lum  thinanthoa’rum  karththarukkuth  thaganabaliyaagap  pazhuthat’ra  eazhu  kaa'laiga'laiyum  eazhu  aattukkadaakka'laiyum,  paavanivaara'nabaliyaaga  oru  ve'l'laattukkadaavaiyum  thinanthoa’rum  padaippaanaaga.  (eseakkiyeal  45:23)

ஒவ்வொரு  காளையோடே  ஒரு  மரக்கால்  மாவும்  ஒவ்வொரு  ஆட்டுக்கடாவோடே  ஒரு  மரக்கால்  மாவுமான  போஜனபலியையும்,  ஒவ்வொரு  மரக்கால்  மாவோடே  ஒருபடி  எண்ணெயையும்  படைப்பானாக.  (எசேக்கியேல்  45:24)

ovvoru  kaa'laiyoadea  oru  marakkaal  maavum  ovvoru  aattukkadaavoadea  oru  marakkaal  maavumaana  poajanabaliyaiyum,  ovvoru  marakkaal  maavoadea  orupadi  e'n'neyaiyum  padaippaanaaga.  (eseakkiyeal  45:24)

ஏழாம்  மாதம்  பதினைந்தாந்தேதியில்  ஆரம்பமாகிற  பண்டிகையிலே  அவன்  அப்படியே  ஏழுநாளும்  அதற்குச்  சரியானபிரகாரமாகப்  பாவநிவாரணபலிகளையும்  தகனபலிகளையும்  போஜனபலிகளையும்,  எண்ணெயையும்  படைக்கக்கடவன்.  (எசேக்கியேல்  45:25)

eazhaam  maatham  pathinainthaantheathiyil  aarambamaagi’ra  pa'ndigaiyilea  avan  appadiyea  eazhunaa'lum  atha’rkuch  sariyaanapiragaaramaagap  paavanivaara'nabaliga'laiyum  thaganabaliga'laiyum  poajanabaliga'laiyum,  e'n'neyaiyum  padaikkakkadavan.  (eseakkiyeal  45:25)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!