Monday, October 31, 2016

Eseakkiyeal 44 | எசேக்கியேல் 44 | Ezekiel 44

பின்பு,  அவர்  என்னைக்  கிழக்குக்கு  எதிரே  பரிசுத்த  ஸ்தலத்துக்குப்  புறவாசல்  வழியே  திரும்பப்பண்ணினார்;  அது  பூட்டப்பட்டிருந்தது.  (எசேக்கியேல்  44:1)

pinbu,  avar  ennaik  kizhakkukku  ethirea  parisuththa  sthalaththukkup  pu’ravaasal  vazhiyea  thirumbappa'n'ninaar;  athu  poottappattirunthathu.  (eseakkiyeal  44:1)

அப்பொழுது  கர்த்தர்  என்னை  நோக்கி:  இந்த  வாசல்  திறக்கப்படாமல்  பூட்டப்பட்டிருக்கும்;  ஒருவரும்  இதற்குள்  பிரவேசிப்பதில்லை;  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  இதற்குள்  பிரவேசித்தார்,  ஆகையால்  இது  பூட்டப்பட்டிருக்கவேண்டும்.  (எசேக்கியேல்  44:2)

appozhuthu  karththar  ennai  noakki:  intha  vaasal  thi’rakkappadaamal  poottappattirukkum;  oruvarum  itha’rku'l  piraveasippathillai;  isravealin  theavanaagiya  karththar  itha’rku'l  piraveasiththaar,  aagaiyaal  ithu  poottappattirukkavea'ndum.  (eseakkiyeal  44:2)

இது  அதிபதிக்கே  உரியது,  அதிபதி  கர்த்தருடைய  சந்நிதியில்  போஜனம்பண்ணும்படி  இதில்  உட்காருவான்;  அவன்  வாசல்  மண்டபத்தின்  வழியாய்ப்  பிரவேசித்து,  மறுபடியும்  அதின்  வழியாய்ப்  புறப்படுவான்  என்றார்.  (எசேக்கியேல்  44:3)

ithu  athibathikkea  uriyathu,  athibathi  karththarudaiya  sannithiyil  poajanampa'n'numpadi  ithil  udkaaruvaan;  avan  vaasal  ma'ndabaththin  vazhiyaayp  piraveasiththu,  ma’rupadiyum  athin  vazhiyaayp  pu’rappaduvaan  en’raar.  (eseakkiyeal  44:3)

பின்பு  அவர்  என்னை  வடக்கு  வாசல்வழியாய்  ஆலயத்தின்  முகப்பிலே  அழைத்துக்கொண்டுபோனார்;  இதோ,  கர்த்தருடைய  ஆலயம்  கர்த்தருடைய  மகிமையால்  நிறைந்ததை  நான்  கண்டு,  முகங்குப்புற  விழுந்தேன்.  (எசேக்கியேல்  44:4)

pinbu  avar  ennai  vadakku  vaasalvazhiyaay  aalayaththin  mugappilea  azhaiththukko'ndupoanaar;  ithoa,  karththarudaiya  aalayam  karththarudaiya  magimaiyaal  ni’rainthathai  naan  ka'ndu,  mugangkuppu’ra  vizhunthean.  (eseakkiyeal  44:4)

அப்பொழுது  கர்த்தர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  கர்த்தருடைய  ஆலயத்தின்  சகல  நியமங்களையும்  அதின்  சகல  சட்டங்களையுங்குறித்து  நான்  உன்னோடே  சொல்வதையெல்லாம்  நீ  உன்  மனதிலே  கவனித்து,  உன்  கண்களினாலே  பார்த்து,  உன்  காதுகளினாலே  கேட்டு,  பரிசுத்த  ஸ்தலத்தினுடைய  எல்லா  வாசற்படிகளின்  வழியாய்  ஆலயத்துக்குள்  பிரவேசிப்பதும்  அதிலிருந்து  புறப்படுவதும்  இன்னவிதமென்று  நீ  ஆலோசித்துப்  பார்த்து,  (எசேக்கியேல்  44:5)

appozhuthu  karththar  ennai  noakki:  manupuththiranea,  karththarudaiya  aalayaththin  sagala  niyamangga'laiyum  athin  sagala  sattangga'laiyungku’riththu  naan  unnoadea  solvathaiyellaam  nee  un  manathilea  kavaniththu,  un  ka'nga'linaalea  paarththu,  un  kaathuga'linaalea  keattu,  parisuththa  sthalaththinudaiya  ellaa  vaasa’rpadiga'lin  vazhiyaay  aalayaththukku'l  piraveasippathum  athilirunthu  pu’rappaduvathum  innavithamen’ru  nee  aaloasiththup  paarththu,  (eseakkiyeal  44:5)

இஸ்ரவேல்  வம்சத்தாராகிய  கலகக்காரரோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்,  இஸ்ரவேல்  வம்சத்தாரே,  நீங்கள்  செய்த  சகல  அருவருப்புகளும்  போதும்.  (எசேக்கியேல்  44:6)

israveal  vamsaththaaraagiya  kalagakkaararoadea  sollavea'ndiyathu  ennaven’raal:  karththaraagiya  aa'ndavar  uraikki’raar,  israveal  vamsaththaarea,  neengga'l  seytha  sagala  aruvaruppuga'lum  poathum.  (eseakkiyeal  44:6)

நீங்கள்  எனக்குச்  செலுத்தவேண்டிய  ஆகாரமாகிய  நிணத்தையும்  இரத்தத்தையும்  செலுத்துகையில்,  என்  ஆலயத்தைப்  பரிசுத்தக்குலைச்சலாக்கும்படி  விருத்தசேதனமில்லாத  இருதயமும்  விருத்தசேதனமில்லாத  மாம்சமுமுள்ள  அந்நிய  புத்திரரை  என்  பரிசுத்த  ஸ்தலத்துக்குள்  இருக்கிறதற்காக  அழைத்துக்கொண்டுவந்தீர்கள்;  நீங்கள்  செய்த  எல்லா  அருவருப்புகளினாலும்  அவர்கள்  என்  உடன்படிக்கையை  மீறினார்கள்.  (எசேக்கியேல்  44:7)

neengga'l  enakkuch  seluththavea'ndiya  aagaaramaagiya  ni'naththaiyum  iraththaththaiyum  seluththugaiyil,  en  aalayaththaip  parisuththakkulaichchalaakkumpadi  viruththaseathanamillaatha  iruthayamum  viruththaseathanamillaatha  maamsamumu'l'la  anniya  puththirarai  en  parisuththa  sthalaththukku'l  irukki’ratha’rkaaga  azhaiththukko'nduvantheerga'l;  neengga'l  seytha  ellaa  aruvaruppuga'linaalum  avarga'l  en  udanpadikkaiyai  mee’rinaarga'l.  (eseakkiyeal  44:7)

நீங்கள்  என்  பரிசுத்த  வஸ்துக்களின்  காவலைக்  காவாமல்,  உங்களுக்கு  இஷ்டமானவர்களை  என்  பரிசுத்த  ஸ்தலத்திலே  என்  காவலைக்  காக்கிறதற்காக  வைத்தீர்கள்.  (எசேக்கியேல்  44:8)

neengga'l  en  parisuththa  vasthukka'lin  kaavalaik  kaavaamal,  ungga'lukku  ishdamaanavarga'lai  en  parisuththa  sthalaththilea  en  kaavalaik  kaakki’ratha’rkaaga  vaiththeerga'l.  (eseakkiyeal  44:8)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இஸ்ரவேல்  புத்திரரின்  நடுவில்  இருக்கிற  சகல  அந்நிய  புத்திரரிலும்,  விருத்தசேதனமில்லாத  இருதயமும்  விருத்தசேதனமில்லாத  மாம்சமுமுள்ள  அந்நிய  புத்திரன்  ஒருவனும்  என்  பரிசுத்த  ஸ்தலத்துக்குள்  பிரவேசிப்பதில்லை.  (எசேக்கியேல்  44:9)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  israveal  puththirarin  naduvil  irukki’ra  sagala  anniya  puththirarilum,  viruththaseathanamillaatha  iruthayamum  viruththaseathanamillaatha  maamsamumu'l'la  anniya  puththiran  oruvanum  en  parisuththa  sthalaththukku'l  piraveasippathillai.  (eseakkiyeal  44:9)

இஸ்ரவேல்  வழிதப்பிப்போகையில்,  என்னைவிட்டுத்  தூரமானவர்களும்,  என்னைவிட்டு  வழிதப்பித்  தங்கள்  நரகலான  விக்கிரகங்களைப்  பின்பற்றினவர்களுமாகிய  லேவியரும்  தங்கள்  அக்கிரமத்தைச்  சுமப்பார்கள்.  (எசேக்கியேல்  44:10)

israveal  vazhithappippoagaiyil,  ennaivittuth  thooramaanavarga'lum,  ennaivittu  vazhithappith  thangga'l  naragalaana  vikkiragangga'laip  pinpat’rinavarga'lumaagiya  leaviyarum  thangga'l  akkiramaththaich  sumappaarga'l.  (eseakkiyeal  44:10)

ஆகிலும்  அவர்கள்  என்  ஆலயத்தின்  வாசல்களைக்  காத்து,  என்  ஆலயத்தில்  ஊழியஞ்செய்து,  என்  பரிசுத்த  ஸ்தலத்திலே  பணிவிடைக்காரராயிருப்பார்கள்;  அவர்கள்  ஜனங்களுக்காகத்  தகனபலிகளையும்  மற்றப்  பலிகளையும்  செலுத்தி,  இவர்களுக்கு  ஊழியஞ்செய்கிறதற்கு  இவர்கள்  முன்பாக  என்  பரிசுத்த  ஸ்தலத்திலே  பணிவிடைக்காரராயிருப்பார்கள்.  (எசேக்கியேல்  44:11)

aagilum  avarga'l  en  aalayaththin  vaasalga'laik  kaaththu,  en  aalayaththil  oozhiyagnseythu,  en  parisuththa  sthalaththilea  pa'nividaikkaararaayiruppaarga'l;  avarga'l  janangga'lukkaagath  thaganabaliga'laiyum  mat’rap  baliga'laiyum  seluththi,  ivarga'lukku  oozhiyagnseygi’ratha’rku  ivarga'l  munbaaga  en  parisuththa  sthalaththilea  pa'nividaikkaararaayiruppaarga'l.  (eseakkiyeal  44:11)

அவர்கள்  இவர்களுடைய  நரகலான  விக்கிரகங்களுக்கு  முன்பாக  நின்று  இவர்களுக்கு  ஊழியஞ்செய்து,  இஸ்ரவேல்  வம்சத்தாரை  அக்கிரமத்தில்  விழப்பண்ணினபடியினால்,  நான்  என்  கையை  அவர்களுக்கு  விரோதமாய்  உயர்த்தினேன்,  அவர்கள்  தங்கள்  அக்கிரமத்தைச்  சுமப்பார்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  44:12)

avarga'l  ivarga'ludaiya  naragalaana  vikkiragangga'lukku  munbaaga  nin’ru  ivarga'lukku  oozhiyagnseythu,  israveal  vamsaththaarai  akkiramaththil  vizhappa'n'ninapadiyinaal,  naan  en  kaiyai  avarga'lukku  viroathamaay  uyarththinean,  avarga'l  thangga'l  akkiramaththaich  sumappaarga'l  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  44:12)

அவர்கள்  எனக்கு  ஆசாரியராய்  ஆராதனை  செய்யும்படி  என்  சமீபத்தில்  வராமலும்,  மகா  பரிசுத்தமான  ஸ்தலத்தில்  என்  பரிசுத்த  வஸ்துக்களில்  யாதொன்றையும்  கிட்டாமலும்  இருக்கவேண்டும்,  அவர்கள்  தங்கள்  இலச்சையையும்  தாங்கள்  செய்த  அருவருப்புகளையும்  சுமக்கக்கடவர்கள்.  (எசேக்கியேல்  44:13)

avarga'l  enakku  aasaariyaraay  aaraathanai  seyyumpadi  en  sameebaththil  varaamalum,  mahaa  parisuththamaana  sthalaththil  en  parisuththa  vasthukka'lil  yaathon’raiyum  kittaamalum  irukkavea'ndum,  avarga'l  thangga'l  ilachchaiyaiyum  thaangga'l  seytha  aruvaruppuga'laiyum  sumakkakkadavarga'l.  (eseakkiyeal  44:13)

ஆலயத்தின்  சகல  வேலைகளுக்கும்  அதில்  செய்யப்படவேண்டிய  எல்லாவற்றிற்கும்  நான்  அவர்களை  அதில்  காவல்காக்கிறவர்களாயிருக்கக்  கட்டளையிடுவேன்.  (எசேக்கியேல்  44:14)

aalayaththin  sagala  vealaiga'lukkum  athil  seyyappadavea'ndiya  ellaavat’ri’rkum  naan  avarga'lai  athil  kaavalkaakki’ravarga'laayirukkak  katta'laiyiduvean.  (eseakkiyeal  44:14)

இஸ்ரவேல்  புத்திரரே,  என்னைவிட்டு  வழிதப்பிப்போகையில்,  என்  பரிசுத்த  ஸ்தலத்தின்  காவலைக்  காக்கிற  சாதோக்கின்  புத்திரராகிய  லேவியரென்னும்  ஆசாரியர்களே  எனக்கு  ஆராதனைசெய்ய  என்  சமீபத்தில்  சேர்ந்து,  நிணத்தையும்  இரத்தத்தையும்  எனக்குச்  செலுத்த  என்  சந்நிதியில்  நிற்பார்களென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  44:15)

israveal  puththirarea,  ennaivittu  vazhithappippoagaiyil,  en  parisuththa  sthalaththin  kaavalaik  kaakki’ra  saathoakkin  puththiraraagiya  leaviyarennum  aasaariyarga'lea  enakku  aaraathanaiseyya  en  sameebaththil  searnthu,  ni'naththaiyum  iraththaththaiyum  enakkuch  seluththa  en  sannithiyil  ni’rpaarga'len’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  44:15)

இவர்கள்  என்  பரிசுத்த  ஸ்தலத்துக்குள்  பிரவேசிப்பார்கள்;  இவர்களே  எனக்கு  ஆராதனை  செய்ய  என்  பீடத்தைக்  கிட்டிவந்து,  என்  காவலைக்  காப்பார்கள்.  (எசேக்கியேல்  44:16)

ivarga'l  en  parisuththa  sthalaththukku'l  piraveasippaarga'l;  ivarga'lea  enakku  aaraathanai  seyya  en  peedaththaik  kittivanthu,  en  kaavalaik  kaappaarga'l.  (eseakkiyeal  44:16)

உட்பிராகாரத்தின்  வாசல்களுக்குள்  பிரவேசிக்கிறபோது,  சணல்நூல்  வஸ்திரங்களை  உடுத்திக்கொள்வார்களாக;  அவர்கள்  உட்பிராகாரத்தின்  வாசல்களிலும்,  உள்ளேயும்  ஆராதனை  செய்கையில்,  ஆட்டுமயிர்  உடுப்பைத்  தரிக்கலாகாது.  (எசேக்கியேல்  44:17)

udpiraagaaraththin  vaasalga'lukku'l  piraveasikki’rapoathu,  sa'nalnool  vasthirangga'lai  uduththikko'lvaarga'laaga;  avarga'l  udpiraagaaraththin  vaasalga'lilum,  u'l'leayum  aaraathanai  seygaiyil,  aattumayir  uduppaith  tharikkalaagaathu.  (eseakkiyeal  44:17)

அவர்களுடைய  தலைகளில்  சணல்நூல்  குல்லாக்களையும்,  அவர்களுடைய  இடைகளில்  சணல்நூல்  சல்லடங்களையும்  தரிக்கவேண்டும்;  வேர்வையுண்டாக்கத்தக்கதொன்றையும்  அரையில்  கட்டலாகாது.  (எசேக்கியேல்  44:18)

avarga'ludaiya  thalaiga'lil  sa'nalnool  kullaakka'laiyum,  avarga'ludaiya  idaiga'lil  sa'nalnool  salladangga'laiyum  tharikkavea'ndum;  vearvaiyu'ndaakkaththakkathon’raiyum  araiyil  kattalaagaathu.  (eseakkiyeal  44:18)

அவர்கள்  வெளிப்பிராகாரமாகிய  புறமுற்றத்திலே  ஜனங்களிடத்தில்  போகும்போது,  அவர்கள்  தாங்கள்  ஆராதனைசெய்யும்  சமயத்தில்  உடுத்தியிருந்த  தங்கள்  வஸ்திரங்களைக்  கழற்றி,  அவைகளைப்  பரிசுத்த  அறைவீடுகளில்  வைத்து,  வேறே  வஸ்திரங்களை  உடுத்திக்கொள்ளக்கடவர்கள்;  தங்கள்  வஸ்திரங்களாலே  ஜனங்களைப்  பரிசுத்தப்படுத்தலாகாது.  (எசேக்கியேல்  44:19)

avarga'l  ve'lippiraagaaramaagiya  pu’ramut’raththilea  janangga'lidaththil  poagumpoathu,  avarga'l  thaangga'l  aaraathanaiseyyum  samayaththil  uduththiyiruntha  thangga'l  vasthirangga'laik  kazhat’ri,  avaiga'laip  parisuththa  a’raiveeduga'lil  vaiththu,  vea’rea  vasthirangga'lai  uduththikko'l'lakkadavarga'l;  thangga'l  vasthirangga'laalea  janangga'laip  parisuththappaduththalaagaathu.  (eseakkiyeal  44:19)

அவர்கள்  தங்கள்  தலைகளைச்  சிரையாமலும்,  தங்கள்  மயிரை  நீளமாய்  வளர்க்காமலும்,  தங்கள்  தலைமயிரைக்  கத்தரிக்கக்கடவர்கள்.  (எசேக்கியேல்  44:20)

avarga'l  thangga'l  thalaiga'laich  siraiyaamalum,  thangga'l  mayirai  nee'lamaay  va'larkkaamalum,  thangga'l  thalaimayiraik  kaththarikkakkadavarga'l.  (eseakkiyeal  44:20)

ஆசாரியர்களில்  ஒருவனும்,  உட்பிராகாரத்துக்குள்  பிரவேசிக்கும்போது,  திராட்சரசம்  குடிக்கலாகாது.  (எசேக்கியேல்  44:21)

aasaariyarga'lil  oruvanum,  udpiraagaaraththukku'l  piraveasikkumpoathu,  thiraadcharasam  kudikkalaagaathu.  (eseakkiyeal  44:21)

விதவையையும்  தள்ளிவிடப்பட்டவளையும்  அவர்கள்  விவாகம்பண்ணாமல்,  இஸ்ரவேல்  வம்சத்தாளாகிய  கன்னிகையையாகிலும்  ஒரு  ஆசாரியனின்  மனைவியாயிருந்த  விதவையையாகிலும்  விவாகம்பண்ணலாம்.  (எசேக்கியேல்  44:22)

vithavaiyaiyum  tha'l'lividappattava'laiyum  avarga'l  vivaagampa'n'naamal,  israveal  vamsaththaa'laagiya  kannigaiyaiyaagilum  oru  aasaariyanin  manaiviyaayiruntha  vithavaiyaiyaagilum  vivaagampa'n'nalaam.  (eseakkiyeal  44:22)

அவர்கள்  பரிசுத்தமானதற்கும்  பரிசுத்தமல்லாததற்கும்,  தீட்டானதற்கும்  தீட்டல்லாததற்கும்  இருக்கும்  வித்தியாசத்தை  என்  ஜனத்துக்குப்  போதித்து,  அவர்களுக்குத்  தெரியப்பண்ணக்கடவர்கள்.  (எசேக்கியேல்  44:23)

avarga'l  parisuththamaanatha’rkum  parisuththamallaathatha’rkum,  theettaanatha’rkum  theettallaathatha’rkum  irukkum  viththiyaasaththai  en  janaththukkup  poathiththu,  avarga'lukkuth  theriyappa'n'nakkadavarga'l.  (eseakkiyeal  44:23)

வழக்கிருந்தால்  அவர்கள்  நியாயந்தீர்க்க  ஆயத்தமாயிருந்து,  என்  நியாயங்களின்படி  அதைத்  தீர்த்து,  என்னுடைய  பண்டிகைகளில்  எல்லாம்  என்  நியாயப்பிரமாணத்தையும்  என்  கட்டளைகளையும்  கைக்கொண்டு,  என்  ஓய்வுநாட்களைப்  பரிசுத்தமாக்கக்கடவர்கள்.  (எசேக்கியேல்  44:24)

vazhakkirunthaal  avarga'l  niyaayantheerkka  aayaththamaayirunthu,  en  niyaayangga'linpadi  athaith  theerththu,  ennudaiya  pa'ndigaiga'lil  ellaam  en  niyaayappiramaa'naththaiyum  en  katta'laiga'laiyum  kaikko'ndu,  en  oayvunaadka'laip  parisuththamaakkakkadavarga'l.  (eseakkiyeal  44:24)

தகப்பன்,  தாய்,  குமாரன்,  குமாரத்தி,  சகோதரன்,  புருஷனுக்கு  வாழ்க்கைப்படாத  சகோதரி  என்னும்  இவர்களுடைய  சவத்தினால்  அவர்கள்  தீட்டுப்படலாமேயல்லாமல்,  அவர்களில்  ஒருவனும்  செத்த  ஒருவனிடத்தில்  போய்த்  தீட்டுப்படலாகாது.  (எசேக்கியேல்  44:25)

thagappan,  thaay,  kumaaran,  kumaaraththi,  sagoatharan,  purushanukku  vaazhkkaippadaatha  sagoathari  ennum  ivarga'ludaiya  savaththinaal  avarga'l  theettuppadalaameayallaamal,  avarga'lil  oruvanum  seththa  oruvanidaththil  poayth  theettuppadalaagaathu.  (eseakkiyeal  44:25)

அவன்  சுத்திகரிக்கப்பட்டபின்பு,  அவனுக்கு  ஏழுநாள்  எண்ணப்படவேண்டும்.  (எசேக்கியேல்  44:26)

avan  suththigarikkappattapinbu,  avanukku  eazhunaa'l  e'n'nappadavea'ndum.  (eseakkiyeal  44:26)

அவன்  பரிசுத்த  ஸ்தலத்தில்  ஆராதனை  செய்யும்படி  பரிசுத்த  ஸ்தலம்  இருக்கிற  உட்பிராகாரத்துக்குள்  பிரவேசிக்கிறநாளிலே,  அவன்  தனக்காகப்  பாவநிவாரண  பலியைச்  செலுத்தக்கடவன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  44:27)

avan  parisuththa  sthalaththil  aaraathanai  seyyumpadi  parisuththa  sthalam  irukki’ra  udpiraagaaraththukku'l  piraveasikki’ranaa'lilea,  avan  thanakkaagap  paavanivaara'na  baliyaich  seluththakkadavan  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  44:27)

அவர்களுக்குரிய  சுதந்தரம்  என்னவென்றால்:  நானே  அவர்கள்  சுதந்தரம்;  ஆகையால்  இஸ்ரவேலில்  அவர்களுக்குக்  காணியாட்சியைக்  கொடாதிருப்பீர்களாக;  நானே  அவர்கள்  காணியாட்சி.  (எசேக்கியேல்  44:28)

avarga'lukkuriya  suthantharam  ennaven’raal:  naanea  avarga'l  suthantharam;  aagaiyaal  isravealil  avarga'lukkuk  kaa'niyaadchiyaik  kodaathiruppeerga'laaga;  naanea  avarga'l  kaa'niyaadchi.  (eseakkiyeal  44:28)

போஜனபலியையும்  பாவநிவாரணபலியையும்  குற்றநிவாரணபலியையும்  அவர்கள்  புசிப்பார்கள்;  இஸ்ரவேலிலே  பொருத்தனை  பண்ணப்பட்டதெல்லாம்  அவர்களுடையதாயிருப்பதாக.  (எசேக்கியேல்  44:29)

poajanabaliyaiyum  paavanivaara'nabaliyaiyum  kut’ranivaara'nabaliyaiyum  avarga'l  pusippaarga'l;  isravealilea  poruththanai  pa'n'nappattathellaam  avarga'ludaiyathaayiruppathaaga.  (eseakkiyeal  44:29)

சகலவித  முதற்கனிகளில்  எல்லாம்  முந்தின  பலனும்,  நீங்கள்  காணிக்கையாய்ச்  செலுத்தும்  எவ்விதமான  பொருள்களும்  ஆசாரியர்களுடையதாயிருப்பதாக;  உங்கள்  வீட்டில்  ஆசீர்வாதம்  தங்கும்படிக்கு  நீங்கள்  பிசைந்தமாவில்  முதற்பாகத்தையும்  ஆசாரியனுக்குக்  கொடுக்கக்கடவீர்கள்.  (எசேக்கியேல்  44:30)

sagalavitha  mutha’rkaniga'lil  ellaam  munthina  palanum,  neengga'l  kaa'nikkaiyaaych  seluththum  evvithamaana  poru'lga'lum  aasaariyarga'ludaiyathaayiruppathaaga;  ungga'l  veettil  aaseervaatham  thanggumpadikku  neengga'l  pisainthamaavil  mutha’rpaagaththaiyum  aasaariyanukkuk  kodukkakkadaveerga'l.  (eseakkiyeal  44:30)

பறவைகளிலும்  மிருகங்களிலும்  தானாய்ச்  செத்ததும்  பீறுண்டதுமான  ஒன்றையும்  ஆசாரியர்கள்  புசிக்கலாகாது.  (எசேக்கியேல்  44:31)

pa’ravaiga'lilum  mirugangga'lilum  thaanaaych  seththathum  pee’ru'ndathumaana  on’raiyum  aasaariyarga'l  pusikkalaagaathu.  (eseakkiyeal  44:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!