பின்பு அவர் என்னைக் கீழ்த்திசைக்கு எதிர் வாசலாகிய வாசலுக்கு
அழைத்துக்கொண்டுபோனார். (எசேக்கியேல் 43:1)
pinbu avar ennaik
keezhththisaikku ethir vaasalaagiya vaasalukku azhaiththukko'ndupoanaar. (eseakkiyeal
43:1)
இதோ, இஸ்ரவேலின்
தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது;
அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல
இருந்தது; அவருடைய மகிமையினால்
பூமி பிரகாசித்தது. (எசேக்கியேல்
43:2)
ithoa, isravealin
theavanudaiya magimai keezhththisaiyilirunthu vanthathu; avarudaiya saththam peruve'l'laththin iraichchalaippoala irunthathu;
avarudaiya magimaiyinaal boomi piragaasiththathu. (eseakkiyeal 43:2)
நான் கண்ட இந்தத் தரிசனம்
நகரத்தை அழிக்கவந்தபோது கண்ட தரிசனம்போல இருந்தது;
இந்தத் தரிசனங்கள் கேபார்
நதியண்டையிலே நான் கண்டிருந்த
தரிசனத்தைப்போலும் இருந்தது; நான் முகங்குப்புற விழுந்தேன்.
(எசேக்கியேல் 43:3)
naan ka'nda
inthath tharisanam nagaraththai azhikkavanthapoathu ka'nda
tharisanampoala irunthathu;
inthath tharisanangga'l keabaar nathiya'ndaiyilea naan ka'ndiruntha tharisanaththaippoalum irunthathu;
naan mugangkuppu’ra vizhunthean. (eseakkiyeal
43:3)
கர்த்தருடைய மகிமை கீழ்த்திசைக்கு எதிரான
வாசல்வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசித்தது.
(எசேக்கியேல் 43:4)
karththarudaiya magimai keezhththisaikku ethiraana
vaasalvazhiyaay aalayaththukku'l piraveasiththathu. (eseakkiyeal
43:4)
அப்பொழுது ஆவி என்னை எடுத்து,
உட்பிராகாரத்திலே கொண்டுபோய்விட்டது; இதோ, கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று.
(எசேக்கியேல் 43:5)
appozhuthu aavi ennai eduththu,
udpiraagaaraththilea ko'ndupoayvittathu; ithoa,
karththarudaiya magimai aalayaththai nirappit’ru. (eseakkiyeal
43:5)
அவர் ஆலயத்திலிருந்து என்னோடே
பேசுகிறதைக் கேட்டேன்; அந்தப்
புருஷன் என்னண்டையில் நின்றிருந்தார். (எசேக்கியேல்
43:6)
avar aalayaththilirunthu ennoadea
peasugi’rathaik keattean; anthap
purushan enna'ndaiyil nin’rirunthaar. (eseakkiyeal
43:6)
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே,
இது நான் இஸ்ரவேல்
புத்திரரின் நடுவே என்றென்றைக்கும் வாசம்பண்ணும்
என் சிங்காசனமும் என் பாதபீடத்தின் ஸ்தானமுமாயிருக்கிறது; இனி இஸ்ரவேல் வம்சத்தாரும்
அவர்களுடைய ராஜாக்களும் என் பரிசுத்த நாமத்தைத்
தங்கள் மேடைகளில் தங்கள்
வேசித்தனத்தினாலும் தங்கள் ராஜாக்களின்
பிரேதங்களினாலும் தீட்டுப்படுத்துவதில்லை. (எசேக்கியேல்
43:7)
avar ennai noakki: manupuththiranea, ithu naan israveal
puththirarin naduvea en’ren’raikkum vaasampa'n'num en singgaasanamum en paathapeedaththin sthaanamumaayirukki’rathu; ini israveal vamsaththaarum avarga'ludaiya raajaakka'lum
en parisuththa naamaththaith
thangga'l
meadaiga'lil thangga'l veasiththanaththinaalum thangga'l raajaakka'lin
pireathangga'linaalum theettuppaduththuvathillai. (eseakkiyeal
43:7)
அவர்கள் எனக்கும்
தங்களுக்கும் நடுவே ஒரு சுவர் இருக்கும்படி,
தங்கள் வாசற்படியை என் வாசற்படியண்டையிலும், தங்கள்
வாசல்நிலைகளை என் வாசல் நிலைகளண்டையிலும் சேர்த்து,
என் பரிசுத்த நாமத்தைத்
தாங்கள் செய்த அருவருப்புகளினால் தீட்டுப்படுத்தினார்கள்; ஆகையால்
என் கோபத்திலே அவர்களை
நாசமாக்கினேன். (எசேக்கியேல் 43:8)
avarga'l enakkum thangga'lukkum naduvea
oru suvar irukkumpadi,
thangga'l
vaasa’rpadiyai en vaasa’rpadiya'ndaiyilum,
thangga'l
vaasalnilaiga'lai en vaasal nilaiga'la'ndaiyilum searththu, en parisuththa naamaththaith thaangga'l seytha aruvaruppuga'linaal theettuppaduththinaarga'l; aagaiyaal en koabaththilea avarga'lai naasamaakkinean. (eseakkiyeal
43:8)
இப்பொழுதும் அவர்கள்
தங்கள் வேசித்தனத்தையும் தங்கள்
ராஜாக்களின் பிரேதங்களையும் என் சமுகத்தினின்று அகற்றினால்
நான் என்றென்றைக்கும் அவர்கள்
நடுவே வாசமாயிருப்பேன். (எசேக்கியேல்
43:9)
ippozhuthum avarga'l thangga'l veasiththanaththaiyum thangga'l raajaakka'lin
pireathangga'laiyum en samugaththinin’ru agat’rinaal naan en’ren’raikkum avarga'l naduvea vaasamaayiruppean. (eseakkiyeal
43:9)
மனுபுத்திரனே, இஸ்ரவேல்
வம்சத்தார் தங்கள் அக்கிரமங்களினிமித்தம் வெட்கப்படும்படிக்கு, நீ அவர்களுக்கு இந்த ஆலயத்தைக் காண்பி;
அதின் அளவை அளக்கக்கடவர்கள். (எசேக்கியேல்
43:10)
manupuththiranea, israveal
vamsaththaar thangga'l akkiramangga'linimiththam vedkappadumpadikku, nee avarga'lukku intha aalayaththaik
kaa'nbi;
athin a'lavai a'lakkakkadavarga'l. (eseakkiyeal
43:10)
அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெட்கப்பட்டால், அப்பொழுது
இந்த ஆலயத்தின் ரூபத்தையும்,
அதின் அளவையும், அதின் முன் வாசல்களையும்,
அதின் பின் வாசல்களையும்,
அதின் எல்லா ஒழுங்குகளையும், அதின் எல்லாக் கட்டளைகளையும், அதின் எல்லா நியமங்களையும், அதின் எல்லாச் சட்டங்களையும்
அவர்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்கள்
அதினுடைய எல்லா ஒழுங்குகளையும், அதினுடைய
எல்லா முறைமைகளையும் கைக்கொண்டு,
அவைகளின்படி செய்யும்படிக்கு அதை அவர்கள் கண்களுக்கு
முன்பாக எழுதிவை. (எசேக்கியேல்
43:11)
avarga'l seytha
ellaavat’rinimiththamum vedkappattaal, appozhuthu
intha aalayaththin roobaththaiyum, athin a'lavaiyum, athin mun vaasalga'laiyum, athin pin vaasalga'laiyum, athin ellaa ozhungguga'laiyum, athin ellaak katta'laiga'laiyum, athin ellaa niyamangga'laiyum, athin ellaach sattangga'laiyum avarga'lukkuth theriyappaduththi, avarga'l athinudaiya
ellaa ozhungguga'laiyum, athinudaiya ellaa mu’raimaiga'laiyum kaikko'ndu,
avaiga'linpadi seyyumpadikku athai avarga'l ka'nga'lukku munbaaga ezhuthivai. (eseakkiyeal
43:11)
ஆலயத்தினுடைய பிரமாணம்
என்னவென்றால்: மலையுச்சியின்மேல் சுற்றிலும்
அதின் எல்லையெங்கும் மிகவும்
பரிசுத்தமாயிருக்கும்; இதுவே ஆலயத்தினுடைய
பிரமாணம். (எசேக்கியேல் 43:12)
aalayaththinudaiya piramaa'nam
ennaven’raal: malaiyuchchiyinmeal
sut’rilum athin ellaiyenggum migavum parisuththamaayirukkum;
ithuvea aalayaththinudaiya piramaa'nam.
(eseakkiyeal 43:12)
முழங்களின்படி அளக்கும்
பலிபீடத்தின் அளவுகளாவன: ஒரு கை முழமும்
நாலு விரற்கடையும் கொண்டது
ஒரு முழமாகும்; அதின்படி
சுற்றாதாரம், ஒரு முழ உயரமும், ஒரு முழ அகலமும்,
அதின் ஓரத்தைச் சுற்றிலுமுள்ள
விளிம்பு ஒரு ஜாணுமாயிருக்கும்; இது பலிபீடத்தின் மேற்புறம்.
(எசேக்கியேல் 43:13)
muzhangga'linpadi a'lakkum balipeedaththin a'lavuga'laavana: oru kai muzhamum
naalu vira’rkadaiyum ko'ndathu oru muzhamaagum; athinpadi sut’raathaaram, oru muzha uyaramum,
oru muzha agalamum, athin oaraththaich sut’rilumu'l'la vi'limbu oru jaa'numaayirukkum; ithu balipeedaththin
mea’rpu’ram. (eseakkiyeal
43:13)
தரையில் இருக்கிற
ஆதாரந்துவக்கிக் கீழ்நிலைமட்டும் இரண்டுமுழமும், அகலம் ஒரு முழமும்,
சின்ன நிலைதுவக்கிப் பெரிய நிலைமட்டும் நாலு முழமும், அகலம் ஒரு முழமுமாயிருக்கும். (எசேக்கியேல்
43:14)
tharaiyil irukki’ra aathaaranthuvakkik keezhnilaimattum ira'ndumuzhamum, agalam oru muzhamum,
sinna nilaithuvakkip periya
nilaimattum naalu muzhamum, agalam oru muzhamumaayirukkum. (eseakkiyeal
43:14)
பலிபீடத்தின் சிகரம்
நாலு முழ உயரமாயிருக்கும்; பலிபீடத்தின்
சிகரத்துக்குமேலே நாலு கொம்புகள்
இருக்கும். (எசேக்கியேல் 43:15)
balipeedaththin sigaram
naalu muzha uyaramaayirukkum; balipeedaththin
sigaraththukkumealea naalu kombuga'l irukkum. (eseakkiyeal
43:15)
பலிபீடத்தின் சிகரம்
பன்னிரண்டு முழ நீளமும்,
பன்னிரண்டு முழ அகலமும்
தன் நாலு பக்கங்களிலும்
நாற்சதுரமுமாயிருக்கும். (எசேக்கியேல் 43:16)
balipeedaththin sigaram
pannira'ndu muzha nee'lamum,
pannira'ndu muzha agalamum than naalu pakkangga'lilum naa’rsathuramumaayirukkum. (eseakkiyeal
43:16)
அதின் நாலு பக்கங்களிலுள்ள சட்டத்தின்
நீளம் பதிநாலு முழமும்,
அகலம் பதிநாலு முழமும்,
அதைச் சுற்றிலுமிருக்கிற விளிம்பு
அரை முழமும், அதற்கு
ஆதாரமானது சுற்றிலும் ஒரு முழமுமாயிருக்கும்; அதின் படிகள் கிழக்குக்கு
எதிராயிருக்கும் என்றார். (எசேக்கியேல்
43:17)
athin naalu pakkangga'lilu'l'la sattaththin nee'lam
pathinaalu muzhamum, agalam pathinaalu
muzhamum, athaich sut’rilumirukki’ra vi'limbu arai muzhamum, atha’rku aathaaramaanathu sut’rilum oru muzhamumaayirukkum; athin padiga'l kizhakkukku ethiraayirukkum en’raar. (eseakkiyeal
43:17)
பின்னும் அவர் என்னை நோக்கி:
மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர்
உரைக்கிறது என்னவென்றால்: பலிபீடத்தை
உண்டுபண்ணும் நாளிலே அதின்மேல்
தகனபலியிடுகிறதற்கும் அதின்மேல் இரத்தம்
தெளிக்கிறதற்குமான கட்டளைகளாவன: (எசேக்கியேல்
43:18)
pinnum avar ennai noakki:
manupuththiranea, karththaraagiya aa'ndavar uraikki’rathu ennaven’raal: balipeedaththai u'ndupa'n'num
naa'lilea athinmeal thaganabaliyidugi’ratha’rkum athinmeal iraththam
the'likki’ratha’rkumaana katta'laiga'laavana: (eseakkiyeal 43:18)
எனக்கு ஆராதனை
செய்கிறதற்கு என்னிடத்தில் சேருகிற
சாதோக்கின் வம்சத்தாரான லேவி கோத்திரத்தாராகிய ஆசாரியர்களுக்கு நீ பாவநிவாரணபலியாக ஒரு இளங்காளையைக் கொடுப்பாயாக
என்று கர்த்தராகிய ஆண்டவர்
சொல்லுகிறார். (எசேக்கியேல் 43:19)
enakku aaraathanai seygi’ratha’rku ennidaththil
searugi’ra saathoakkin vamsaththaaraana leavi koaththiraththaaraagiya aasaariyarga'lukku nee paavanivaara'nabaliyaaga oru i'langkaa'laiyaik koduppaayaaga en’ru karththaraagiya aa'ndavar sollugi’raar. (eseakkiyeal
43:19)
அதின் இரத்தத்தில்
கொஞ்சம் எடுத்து, அதின் நாலு கொம்புகளிலும், சட்டத்தின்
நாலு கோடிகளிலும், சுற்றியிருக்கிற விளிம்பிலும்
பூசி பாவநிவிர்த்திசெய்து, அதைச் சுத்திகரித்து, (எசேக்கியேல்
43:20)
athin iraththaththil kogncham eduththu,
athin naalu kombuga'lilum,
sattaththin naalu koadiga'lilum, sut’riyirukki’ra vi'limbilum poosi paavanivirththiseythu, athaich suththigariththu, (eseakkiyeal 43:20)
பின்பு பாவநிவாரணத்தின் காளையைக்
கொண்டுபோய், அதை ஆலயத்திலே
பரிசுத்த ஸ்தலத்துக்குப் புறம்பாகக்
குறிக்கப்பட்ட இடத்திலே சுட்டெரிக்கவேண்டும். (எசேக்கியேல்
43:21)
pinbu paavanivaara'naththin kaa'laiyaik
ko'ndupoay, athai aalayaththilea parisuththa sthalaththukkup pu’rambaagak ku’rikkappatta idaththilea sutterikkavea'ndum. (eseakkiyeal
43:21)
இரண்டாம் நாளிலே
பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணத்துக்காகப் பலியிடுவாயாக;
அவர்கள் இளங்காளையினாலே பலிபீடத்தைச்
சுத்திசெய்ததுபோலப் பாவநிவாரணஞ் செய்யவேண்டும். (எசேக்கியேல்
43:22)
ira'ndaam naa'lilea
pazhuthat’ra oru ve'l'laattukkadaavaip paavanivaara'naththukkaagap baliyiduvaayaaga; avarga'l i'langkaa'laiyinaalea balipeedaththaich suththiseythathupoalap paavanivaara'nagn seyyavea'ndum. (eseakkiyeal
43:22)
நீ பாவநிவாரணத்தை
முடித்தபின்பு, பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற
ஒரு ஆட்டுக்கடாவையும் மந்தையிலிருந்தெடுத்துப் பலியிடுவாயாக.
(எசேக்கியேல் 43:23)
nee paavanivaara'naththai mudiththapinbu, pazhuthat’ra oru i'langkaa'laiyaiyum, pazhuthat’ra oru aattukkadaavaiyum
manthaiyiliruntheduththup baliyiduvaayaaga. (eseakkiyeal
43:23)
அவைகளைக் கர்த்தருடைய
சந்நிதியில் பலியிடுவாயாக; ஆசாரியர்கள்
அவைகளின்மேல் உப்புதூவி, அவைகளைக்
கர்த்தருக்குத் தகனபலியாக இடக்கடவர்கள்.
(எசேக்கியேல் 43:24)
avaiga'laik karththarudaiya
sannithiyil baliyiduvaayaaga; aasaariyarga'l avaiga'linmeal upputhoovi,
avaiga'laik karththarukkuth thaganabaliyaaga idakkadavarga'l. (eseakkiyeal
43:24)
ஏழுநாள்வரைக்கும் தினந்தினம்
பாவநிவாரணத்துக்காக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் படைப்பாயாக;
பழுதற்றவைகளான இளங்காளையையும் மந்தையிலிருந்தெடுத்த ஆட்டுக்கடாவையும் படைப்பார்களாக. (எசேக்கியேல்
43:25)
eazhunaa'lvaraikkum thinanthinam
paavanivaara'naththukkaaga oru ve'l'laattukkadaavaip padaippaayaaga; pazhuthat’ravaiga'laana i'langkaa'laiyaiyum manthaiyiliruntheduththa aattukkadaavaiyum padaippaarga'laaga. (eseakkiyeal 43:25)
ஏழுநாள்வரைக்கும் பலிபீடத்தைப்
பாவநிவிர்த்திசெய்து, அதைச் சுத்திகரித்து, பிரதிஷ்டைபண்ணக்கடவர்கள். (எசேக்கியேல்
43:26)
eazhunaa'lvaraikkum balipeedaththaip paavanivirththiseythu, athaich suththigariththu, pirathishdaipa'n'nakkadavarga'l. (eseakkiyeal 43:26)
அந்நாட்கள் முடிந்தபின்பு, எட்டாம்
நாள்முதல் ஆசாரியர்கள் பலிபீடத்தின்மேல் உங்கள்
தகனபலிகளையும் உங்கள் ஸ்தோத்திரபலிகளையும் படைப்பார்களாக; அப்பொழுது
உங்களை அங்கீகரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர்
சொல்லுகிறார். (எசேக்கியேல் 43:27)
annaadka'l mudinthapinbu, ettaam naa'lmuthal
aasaariyarga'l balipeedaththinmeal ungga'l thaganabaliga'laiyum ungga'l sthoaththirabaliga'laiyum padaippaarga'laaga; appozhuthu
ungga'lai
anggeegarippean en’ru karththaraagiya aa'ndavar sollugi’raar. (eseakkiyeal
43:27)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!