Monday, October 31, 2016

Eseakkiyeal 39 | எசேக்கியேல் 39 | Ezekiel 39

இப்போதும்  மனுபுத்திரனே,  நீ  கோகுக்கு  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  உரைத்துச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்,  மேசேக்  தூபால்  ஜாதிகளின்  அதிபதியாகிய  கோகே,  இதோ,  நான்  உனக்கு  விரோதமாக  வருகிறேன்.  (எசேக்கியேல்  39:1)

ippoathum  manupuththiranea,  nee  koagukku  viroathamaagath  theerkkatharisanam  uraiththuch  sollavea'ndiyathu  ennaven’raal:  karththaraagiya  aa'ndavar  uraikki’raar,  measeak  thoobaal  jaathiga'lin  athibathiyaagiya  koagea,  ithoa,  naan  unakku  viroathamaaga  varugi’rean.  (eseakkiyeal  39:1)

நான்  உன்னைத்  திருப்பி  உன்னை  ஆறு  துறடுகளால்  இழுத்து,  உன்னை  வடபுறங்களிலிருந்து  எழும்பவும்  இஸ்ரவேல்  மலைகளில்  வரவும்பண்ணி,  (எசேக்கியேல்  39:2)

naan  unnaith  thiruppi  unnai  aa’ru  thu’raduga'laal  izhuththu,  unnai  vadapu’rangga'lilirunthu  ezhumbavum  israveal  malaiga'lil  varavumpa'n'ni,  (eseakkiyeal  39:2)

உன்  வில்லை  உன்  இடதுகையிலிருந்து  தட்டிவிட்டு,  உன்  அம்புகளை  உன்  வலதுகையிலிருந்து  விழப்பண்ணுவேன்.  (எசேக்கியேல்  39:3)

un  villai  un  idathukaiyilirunthu  thattivittu,  un  ambuga'lai  un  valathukaiyilirunthu  vizhappa'n'nuvean.  (eseakkiyeal  39:3)

நீயும்  உன்  எல்லா  இராணுவங்களும்  உன்னோடிருக்கிற  ஜனங்களும்  இஸ்ரவேல்  மலைகளில்  விழுவீர்கள்;  உராய்ஞ்சுகிற  சகலவித  பட்சிகளுக்கும்  வெளியின்  மிருகங்களுக்கும்  உன்னை  இரையாகக்  கொடுப்பேன்.  (எசேக்கியேல்  39:4)

neeyum  un  ellaa  iraa'nuvangga'lum  unnoadirukki’ra  janangga'lum  israveal  malaiga'lil  vizhuveerga'l;  uraaygnchugi’ra  sagalavitha  padchiga'lukkum  ve'liyin  mirugangga'lukkum  unnai  iraiyaagak  koduppean.  (eseakkiyeal  39:4)

விசாலமான  வெளியில்  விழுவாய்;  நான்  இதைச்  சொன்னேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்.  (எசேக்கியேல்  39:5)

visaalamaana  ve'liyil  vizhuvaay;  naan  ithaich  sonnean  en’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar.  (eseakkiyeal  39:5)

நான்  மாகோகிடத்திலும்  தீவுகளில்  நிர்விசாரமாய்க்  குடியிருக்கிறவர்களிடத்திலும்  அக்கினியை  அனுப்புவேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  (எசேக்கியேல்  39:6)

naan  maakoagidaththilum  theevuga'lil  nirvisaaramaayk  kudiyirukki’ravarga'lidaththilum  akkiniyai  anuppuvean;  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lvaarga'l.  (eseakkiyeal  39:6)

இவ்விதமாய்  நான்  என்  ஜனமாகிய  இஸ்ரவேலின்  நடுவிலே  என்  பரிசுத்தநாமத்தைத்  தெரிவிப்பேன்;  என்  பரிசுத்த  நாமத்தை  இனிப்  பரிசுத்தக்குலைச்சலாக்கவொட்டேன்;  அதினால்  நான்  இஸ்ரவேலில்  பரிசுத்தராகிய  கர்த்தர்  என்று  புறஜாதிகள்  அறிந்துகொள்வார்கள்.  (எசேக்கியேல்  39:7)

ivvithamaay  naan  en  janamaagiya  isravealin  naduvilea  en  parisuththanaamaththaith  therivippean;  en  parisuththa  naamaththai  inip  parisuththakkulaichchalaakkavottean;  athinaal  naan  isravealil  parisuththaraagiya  karththar  en’ru  pu’rajaathiga'l  a’rinthuko'lvaarga'l.  (eseakkiyeal  39:7)

இதோ,  அது  வந்தது,  அது  சம்பவித்தது  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்;  நான்  சொன்ன  நாள்  இதுவே.  (எசேக்கியேல்  39:8)

ithoa,  athu  vanthathu,  athu  sambaviththathu  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar;  naan  sonna  naa'l  ithuvea.  (eseakkiyeal  39:8)

இஸ்ரவேல்  பட்டணங்களின்  குடிகள்  வெளியே  போய்,  கேடகங்களும்,  பரிசைகளும்,  வில்லுகளும்,  அம்புகளும்,  வளைதடிகளும்,  ஈட்டிகளுமாகிய  ஆயுதங்களை  எடுத்து  எரிப்பார்கள்;  ஏழுவருஷம்  அவைகளை  எடுத்து  எரிப்பார்கள்.  (எசேக்கியேல்  39:9)

israveal  patta'nangga'lin  kudiga'l  ve'liyea  poay,  keadagangga'lum,  parisaiga'lum,  villuga'lum,  ambuga'lum,  va'laithadiga'lum,  eettiga'lumaagiya  aayuthangga'lai  eduththu  erippaarga'l;  eazhuvarusham  avaiga'lai  eduththu  erippaarga'l.  (eseakkiyeal  39:9)

அவர்கள்  வெளியிலிருந்து  விறகு  கொண்டுவராமலும்  காடுகளில்  வெட்டாமலும்,  ஆயுதங்களை  எடுத்து  எரிப்பார்கள்;  அவர்கள்  தங்களைக்  கொள்ளையிட்டவர்களைக்  கொள்ளையிட்டு,  தங்களைச்  சூறையாடினவர்களைச்  சூறையாடுவார்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  39:10)

avarga'l  ve'liyilirunthu  vi’ragu  ko'nduvaraamalum  kaaduga'lil  vettaamalum,  aayuthangga'lai  eduththu  erippaarga'l;  avarga'l  thangga'laik  ko'l'laiyittavarga'laik  ko'l'laiyittu,  thangga'laich  soo’raiyaadinavarga'laich  soo’raiyaaduvaarga'l  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  39:10)

அந்நாளில்  இஸ்ரவேல்  தேசத்திலே  சமுத்திரத்துக்குக்  கிழக்கே  பிரயாணக்காரரின்  பள்ளத்தாக்கைப்  புதைக்கிற  ஸ்தானமாகக்  கோகுக்குக்  கொடுப்பேன்;  அது  வழிப்போக்கர்  மூக்கைப்  பொத்திக்கொண்டுபோகப்பண்ணும்;  அங்கே  கோகையும்  அவனுடைய  எல்லாச்  சேனையையும்  புதைத்து,  அதை  ஆமோன்கோகின்  பள்ளத்தாக்கு  என்பார்கள்.  (எசேக்கியேல்  39:11)

annaa'lil  israveal  theasaththilea  samuththiraththukkuk  kizhakkea  pirayaa'nakkaararin  pa'l'laththaakkaip  puthaikki’ra  sthaanamaagak  koagukkuk  koduppean;  athu  vazhippoakkar  mookkaip  poththikko'ndupoagappa'n'num;  anggea  koagaiyum  avanudaiya  ellaach  seanaiyaiyum  puthaiththu,  athai  aamoankoagin  pa'l'laththaakku  enbaarga'l.  (eseakkiyeal  39:11)

இஸ்ரவேல்  வம்சத்தார்,  தேசத்தைச்  சுத்தம்பண்ணும்படிக்கு  அவர்களைப்  புதைத்துத்தீர  ஏழுமாதம்  செல்லும்.  (எசேக்கியேல்  39:12)

israveal  vamsaththaar,  theasaththaich  suththampa'n'numpadikku  avarga'laip  puthaiththuththeera  eazhumaatham  sellum.  (eseakkiyeal  39:12)

தேசத்தின்  ஜனங்களெல்லாரும்  புதைத்துக்கொண்டிருப்பார்கள்;  நான்  மகிமைப்படும்  அந்நாளிலே  அது  அவர்களுக்குக்  கீர்த்தியாக  இருக்கும்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  39:13)

theasaththin  janangga'lellaarum  puthaiththukko'ndiruppaarga'l;  naan  magimaippadum  annaa'lilea  athu  avarga'lukkuk  keerththiyaaga  irukkum  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  39:13)

தேசத்தைச்  சுத்தம்பண்ணுவதற்காக  அதில்  கிடக்கும்  மற்றப்  பிரேதங்களைப்  புதைக்கும்படிக்கு  நித்தமும்  தேசத்தில்  சுற்றித்திரியும்  மனுஷரையும்,  சுற்றித்திரிகிறவர்களோடேகூடப்  புதைக்கிறவர்களையும்  தெரிந்து  நியமிப்பார்கள்;  ஏழுமாதங்கள்  முடிந்தபின்பும்  இவர்கள்  தேடிக்கொண்டிருப்பார்கள்.  (எசேக்கியேல்  39:14)

theasaththaich  suththampa'n'nuvatha’rkaaga  athil  kidakkum  mat’rap  pireathangga'laip  puthaikkumpadikku  niththamum  theasaththil  sut’riththiriyum  manusharaiyum,  sut’riththirigi’ravarga'loadeakoodap  puthaikki’ravarga'laiyum  therinthu  niyamippaarga'l;  eazhumaathangga'l  mudinthapinbum  ivarga'l  theadikko'ndiruppaarga'l.  (eseakkiyeal  39:14)

தேசத்தில்  சுற்றித்திரிகிறவர்கள்  திரிந்துகொண்டிருப்பார்கள்;  யாராவது  ஒருவன்  மனுஷனின்  எலும்பைக்  காணும்போது  புதைக்கிறவர்கள்  அதை  ஆமோன்கோகுடைய  பள்ளத்தாக்கிலே  புதைக்குமட்டும்  அதினண்டையிலே  ஒரு  அடையாளத்தை  நாட்டுவான்.  (எசேக்கியேல்  39:15)

theasaththil  sut’riththirigi’ravarga'l  thirinthuko'ndiruppaarga'l;  yaaraavathu  oruvan  manushanin  elumbaik  kaa'numpoathu  puthaikki’ravarga'l  athai  aamoankoagudaiya  pa'l'laththaakkilea  puthaikkumattum  athina'ndaiyilea  oru  adaiyaa'laththai  naattuvaan.  (eseakkiyeal  39:15)

அந்த  நகரத்துக்கு  ஆமோனா  என்று  பெயரிடப்படும்;  இவ்விதமாய்த்  தேசத்தைச்  சுத்தம்பண்ணுவார்கள்.  (எசேக்கியேல்  39:16)

antha  nagaraththukku  aamoanaa  en’ru  peyaridappadum;  ivvithamaayth  theasaththaich  suththampa'n'nuvaarga'l.  (eseakkiyeal  39:16)

மனுபுத்திரனே,  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நீ  சகலவித  பட்சிகளையும்  வெளியில்  இருக்கிற  சகல  மிருகங்களையும்  நோக்கி:  நீங்கள்  ஏகமாய்க்  கூடிக்கொண்டு,  இஸ்ரவேலின்  மலைகளில்  நான்  உங்களுக்காகச்  செய்யும்  யாகமாகிய  மகா  யாகத்துக்குச்  சுற்றிலுமிருந்து  வந்துசேர்ந்து,  மாம்சம்  தின்று  இரத்தங்குடியுங்கள்.  (எசேக்கியேல்  39:17)

manupuththiranea,  karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  nee  sagalavitha  padchiga'laiyum  ve'liyil  irukki’ra  sagala  mirugangga'laiyum  noakki:  neengga'l  eagamaayk  koodikko'ndu,  isravealin  malaiga'lil  naan  ungga'lukkaagach  seyyum  yaagamaagiya  mahaa  yaagaththukkuch  sut’rilumirunthu  vanthusearnthu,  maamsam  thin’ru  iraththangkudiyungga'l.  (eseakkiyeal  39:17)

நீங்கள்  பராக்கிரமசாலிகளின்  மாம்சத்தைத்  தின்று,  பூமியினுடைய  பிரபுக்களின்  இரத்தத்தைக்  குடிப்பீர்கள்;  அவர்கள்  எல்லாரும்  பாசானிலே  கொழுத்துப்போன  ஆட்டுக்கடாக்களுக்கும்,  ஆட்டுக்குட்டிகளுக்கும்  வெள்ளாட்டுக்  கடாக்களுக்கும்  காளைகளுக்கும்  சமானமானவர்கள்.  (எசேக்கியேல்  39:18)

neengga'l  baraakkiramasaaliga'lin  maamsaththaith  thin’ru,  boomiyinudaiya  pirabukka'lin  iraththaththaik  kudippeerga'l;  avarga'l  ellaarum  baasaanilea  kozhuththuppoana  aattukkadaakka'lukkum,  aattukkuttiga'lukkum  ve'l'laattuk  kadaakka'lukkum  kaa'laiga'lukkum  samaanamaanavarga'l.  (eseakkiyeal  39:18)

நான்  உங்களுக்காகச்  செய்யும்  யாகத்திலே  நீங்கள்  திருப்தியாகுமளவும்  கொழுப்பைத்  தின்று,  வெறியாகுமளவும்  இரத்தத்தைக்  குடிப்பீர்கள்.  (எசேக்கியேல்  39:19)

naan  ungga'lukkaagach  seyyum  yaagaththilea  neengga'l  thirupthiyaaguma'lavum  kozhuppaith  thin’ru,  ve’riyaaguma'lavum  iraththaththaik  kudippeerga'l.  (eseakkiyeal  39:19)

இவ்விதமாய்  என்  பந்தியிலே  குதிரைகளையும்,  இரதவீரர்களையும்,  பராக்கிரமசாலிகளையும்,  சகல  யுத்தவீரர்களையும்  தின்று,  திருப்தியாவீர்களென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்லு.  (எசேக்கியேல்  39:20)

ivvithamaay  en  panthiyilea  kuthiraiga'laiyum,  irathaveerarga'laiyum,  baraakkiramasaaliga'laiyum,  sagala  yuththaveerarga'laiyum  thin’ru,  thirupthiyaaveerga'len’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar  en’ru  sollu.  (eseakkiyeal  39:20)

இவ்விதமாய்  என்  மகிமையை  நான்  புறஜாதிகளுக்குள்ளே  விளங்கப்பண்ணுவேன்;  நான்  செய்த  என்  நியாயத்தையும்  அவர்கள்மேல்  நான்  வைத்த  என்  கையையும்  எல்லா  ஜாதிகளும்  காண்பார்கள்.  (எசேக்கியேல்  39:21)

ivvithamaay  en  magimaiyai  naan  pu’rajaathiga'lukku'l'lea  vi'langgappa'n'nuvean;  naan  seytha  en  niyaayaththaiyum  avarga'lmeal  naan  vaiththa  en  kaiyaiyum  ellaa  jaathiga'lum  kaa'nbaarga'l.  (eseakkiyeal  39:21)

அன்றுமுதல்  என்றும்  நான்  தங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்று  இஸ்ரவேல்  வம்சத்தார்  அறிந்துகொள்வார்கள்.  (எசேக்கியேல்  39:22)

an’rumuthal  en’rum  naan  thangga'l  theavanaagiya  karththar  en’ru  israveal  vamsaththaar  a’rinthuko'lvaarga'l.  (eseakkiyeal  39:22)

இஸ்ரவேல்  வம்சத்தார்  தங்கள்  அக்கிரமத்தினிமித்தமே  சிறைப்பட்டுப்போனார்கள்  என்று  அப்பொழுது  புறஜாதிகள்  அறிந்துகொள்வார்கள்;  அவர்கள்  எனக்கு  விரோதமாய்த்  துரோகம்பண்ணினபடியால்,  என்  முகத்தை  நான்  அவர்களுக்கு  மறைத்து,  அவர்கள்  சத்துருக்களின்  கையில்  அவர்களை  ஒப்புக்கொடுத்தேன்;  அவர்கள்  அனைவரும்  பட்டயத்தால்  விழுந்தார்கள்.  (எசேக்கியேல்  39:23)

israveal  vamsaththaar  thangga'l  akkiramaththinimiththamea  si’raippattuppoanaarga'l  en’ru  appozhuthu  pu’rajaathiga'l  a’rinthuko'lvaarga'l;  avarga'l  enakku  viroathamaayth  thuroagampa'n'ninapadiyaal,  en  mugaththai  naan  avarga'lukku  ma’raiththu,  avarga'l  saththurukka'lin  kaiyil  avarga'lai  oppukkoduththean;  avarga'l  anaivarum  pattayaththaal  vizhunthaarga'l.  (eseakkiyeal  39:23)

அவர்களுடைய  அசுத்தத்துக்குத்  தக்கதாகவும்,  அவர்களுடைய  மீறுதல்களுக்குத்தக்கதாகவும்,  நான்  அவர்களுக்குச்  செய்து,  என்  முகத்தை  அவர்களுக்கு  மறைத்தேன்.  (எசேக்கியேல்  39:24)

avarga'ludaiya  asuththaththukkuth  thakkathaagavum,  avarga'ludaiya  mee’ruthalga'lukkuththakkathaagavum,  naan  avarga'lukkuch  seythu,  en  mugaththai  avarga'lukku  ma’raiththean.  (eseakkiyeal  39:24)

ஆதலால்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  (எசேக்கியேல்  39:25)

aathalaal  karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  (eseakkiyeal  39:25)

அவர்கள்  தங்கள்  அவமானத்தையும்,  பயப்படுத்துவார்  இல்லாமல்,  தாங்கள்  சுகமாய்த்  தங்கள்  தேசத்தில்  குடியிருக்கும்போது  எனக்கு  விரோதமாய்த்  தாங்கள்  செய்த  எல்லாத்  துரோகத்தையும்  சுமந்து  தீர்த்தபின்பு,  நான்  யாக்கோபின்  சிறையிருப்பைத்  திருப்பி,  இஸ்ரவேல்  வம்சமனைத்துக்கும்  இரங்கி,  என்  பரிசுத்த  நாமத்துக்காக  வைராக்கியமாயிருப்பேன்.  (எசேக்கியேல்  39:26)

avarga'l  thangga'l  avamaanaththaiyum,  bayappaduththuvaar  illaamal,  thaangga'l  sugamaayth  thangga'l  theasaththil  kudiyirukkumpoathu  enakku  viroathamaayth  thaangga'l  seytha  ellaath  thuroagaththaiyum  sumanthu  theerththapinbu,  naan  yaakkoabin  si’raiyiruppaith  thiruppi,  israveal  vamsamanaiththukkum  iranggi,  en  parisuththa  naamaththukkaaga  vairaakkiyamaayiruppean.  (eseakkiyeal  39:26)

நான்  அவர்களை  ஜனசதளங்களிலிருந்து  திரும்பிவரப்பண்ணி,  அவர்களுடைய  பகைஞரின்  தேசங்களிலிருந்து  அவர்களைக்  கூட்டிக்கொண்டுவந்து,  திரளான  ஜாதிகளுடைய  கண்களுக்கு  முன்பாக  அவர்களுக்குள்  நான்  பரிசுத்தர்  என்று  விளங்கும்போது,  (எசேக்கியேல்  39:27)

naan  avarga'lai  janasatha'langga'lilirunthu  thirumbivarappa'n'ni,  avarga'ludaiya  pagaignarin  theasangga'lilirunthu  avarga'laik  koottikko'nduvanthu,  thira'laana  jaathiga'ludaiya  ka'nga'lukku  munbaaga  avarga'lukku'l  naan  parisuththar  en’ru  vi'langgumpoathu,  (eseakkiyeal  39:27)

தங்களைப்  புறஜாதிகளிடத்தில்  சிறைப்பட்டுப்போகப்பண்ணின  நான்  தங்களில்  ஒருவரையும்  அங்கே  அப்புறம்  வைக்காமல்,  தங்களைத்  தங்கள்  சுயதேசத்திலே  திரும்பக்கூட்டிக்கொண்டுவந்தேன்  என்பதினால்,  நான்  தங்கள்  தேவனாகிய  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  (எசேக்கியேல்  39:28)

thangga'laip  pu’rajaathiga'lidaththil  si’raippattuppoagappa'n'nina  naan  thangga'lil  oruvaraiyum  anggea  appu’ram  vaikkaamal,  thangga'laith  thangga'l  suyatheasaththilea  thirumbakkoottikko'nduvanthean  enbathinaal,  naan  thangga'l  theavanaagiya  karththar  en’ru  a’rinthuko'lvaarga'l.  (eseakkiyeal  39:28)

நான்  இஸ்ரவேல்  வம்சத்தார்மேல்  என்  ஆவியை  ஊற்றினபடியினால்  என்  முகத்தை  இனி  அவர்களுக்கு  மறைக்கமாட்டேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்  என்றார்.  (எசேக்கியேல்  39:29)

naan  israveal  vamsaththaarmeal  en  aaviyai  oot’rinapadiyinaal  en  mugaththai  ini  avarga'lukku  ma’raikkamaattean  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar  en’raar.  (eseakkiyeal  39:29)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!