Monday, October 31, 2016

Eseakkiyeal 38 | எசேக்கியேல் 38 | Ezekiel 38

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  38:1)

karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  38:1)

மனுபுத்திரனே,  மேசேக்  தூபால்  ஜாதிகளின்  தலைமையான  அதிபதியாகிய  மாகோகு  தேசத்தானான  கோகுக்கு  எதிராக  நீ  உன்  முகத்தைத்  திருப்பி,  அவனுக்கு  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  (எசேக்கியேல்  38:2)

manupuththiranea,  measeak  thoobaal  jaathiga'lin  thalaimaiyaana  athibathiyaagiya  maakoagu  theasaththaanaana  koagukku  ethiraaga  nee  un  mugaththaith  thiruppi,  avanukku  viroathamaagath  theerkkatharisanam  uraiththu,  (eseakkiyeal  38:2)

சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்,  மேசேக்  தூபால்  ஜாதிகளின்  அதிபதியாகிய  கோகே,  இதோ,  நான்  உனக்கு  விரோதமாக  வருவேன்.  (எசேக்கியேல்  38:3)

sollavea'ndiyathu  ennaven’raal:  karththaraagiya  aa'ndavar  uraikki’raar,  measeak  thoobaal  jaathiga'lin  athibathiyaagiya  koagea,  ithoa,  naan  unakku  viroathamaaga  varuvean.  (eseakkiyeal  38:3)

நான்  உன்னைத்  திருப்பி,  உன்  வாயில்  துறடுகளைப்  போட்டு,  உன்னையும்  உன்னுடைய  எல்லாச்  சேனையையும்,  குதிரைகளையும்,  சர்வாயுதந்தரித்த  குதிரைவீரர்களையும்,  பரிசையும்  கேடகமுமுடைய  திரளான  கூட்டத்தையும்  புறப்படப்பண்ணுவேன்;  அவர்கள்  எல்லாரும்  பட்டயங்களைப்  பிடித்திருப்பார்கள்.  (எசேக்கியேல்  38:4)

naan  unnaith  thiruppi,  un  vaayil  thu’raduga'laip  poattu,  unnaiyum  unnudaiya  ellaach  seanaiyaiyum,  kuthiraiga'laiyum,  sarvaayuthanthariththa  kuthiraiveerarga'laiyum,  parisaiyum  keadagamumudaiya  thira'laana  koottaththaiyum  pu’rappadappa'n'nuvean;  avarga'l  ellaarum  pattayangga'laip  pidiththiruppaarga'l.  (eseakkiyeal  38:4)

அவர்களோடேகூடப்  பெர்சியரும்,  எத்தியோப்பியரும்,  லீபியரும்  இருப்பார்கள்;  அவர்களெல்லாரும்  கேடகம்  பிடித்து,  தலைச்சீராவுந்  தரித்திருப்பவர்கள்.  (எசேக்கியேல்  38:5)

avarga'loadeakoodap  persiyarum,  eththiyoappiyarum,  leebiyarum  iruppaarga'l;  avarga'lellaarum  keadagam  pidiththu,  thalaichseeraavun  thariththiruppavarga'l.  (eseakkiyeal  38:5)

கோமேரும்  அவனுடைய  எல்லா  இராணுவங்களும்,  வடதிசையிலுள்ள  தோகர்மா  வம்சத்தாரும்  அவர்களுடைய  எல்லா  இராணுவங்களுமாகிய  திரளான  ஜனங்கள்  உன்னுடனேகூட  இருப்பார்கள்.  (எசேக்கியேல்  38:6)

koamearum  avanudaiya  ellaa  iraa'nuvangga'lum,  vadathisaiyilu'l'la  thoakarmaa  vamsaththaarum  avarga'ludaiya  ellaa  iraa'nuvangga'lumaagiya  thira'laana  janangga'l  unnudaneakooda  iruppaarga'l.  (eseakkiyeal  38:6)

நீ  ஆயத்தப்படு,  உன்னுடனே  கூடின  உன்  எல்லாக்  கூட்டத்தையும்  ஆயத்தப்படுத்து;  நீ  அவர்களுக்குக்  காவலாளனாயிரு.  (எசேக்கியேல்  38:7)

nee  aayaththappadu,  unnudanea  koodina  un  ellaak  koottaththaiyum  aayaththappaduththu;  nee  avarga'lukkuk  kaavalaa'lanaayiru.  (eseakkiyeal  38:7)

அநேக  நாட்களுக்குப்  பிற்பாடு  நீ  விசாரிக்கப்படுவாய்;  பட்டயத்துக்கு  நீங்கலாகி,  பற்பல  ஜனங்களிலிருந்து  சேர்த்துக்கொள்ளப்பட்டு  வந்தவர்களின்  தேசத்தில்  கடைசி  வருஷங்களிலே  வருவாய்;  நெடுநாள்  பாழாய்க்கிடந்து,  பிற்பாடு  ஜாதிகளிலிருந்து  கொண்டுவரப்பட்டவர்கள்  எல்லாரும்  சுகத்தோடே  குடியிருக்கும்  இஸ்ரவேலின்  மலைகளுக்கு  விரோதமாய்  வருவாய்;  அவர்கள்  எல்லாரும்  அஞ்சாமல்  குடியிருக்கும்போது,  (எசேக்கியேல்  38:8)

aneaga  naadka'lukkup  pi’rpaadu  nee  visaarikkappaduvaay;  pattayaththukku  neenggalaagi,  pa’rpala  janangga'lilirunthu  searththukko'l'lappattu  vanthavarga'lin  theasaththil  kadaisi  varushangga'lilea  varuvaay;  nedunaa'l  paazhaaykkidanthu,  pi’rpaadu  jaathiga'lilirunthu  ko'nduvarappattavarga'l  ellaarum  sugaththoadea  kudiyirukkum  isravealin  malaiga'lukku  viroathamaay  varuvaay;  avarga'l  ellaarum  agnchaamal  kudiyirukkumpoathu,  (eseakkiyeal  38:8)

பெருங்காற்றைப்போல்  எழும்பிவருவாய்;  நீயும்  உன்னுடைய  எல்லா  இராணுவங்களும்  உன்னோடேகூட  இருக்கும்  திரளான  ஜனங்களும்  கார்மேகம்போல்  தேசத்தை  மூடுவீர்கள்.  (எசேக்கியேல்  38:9)

perungkaat’raippoal  ezhumbivaruvaay;  neeyum  unnudaiya  ellaa  iraa'nuvangga'lum  unnoadeakooda  irukkum  thira'laana  janangga'lum  kaarmeagampoal  theasaththai  mooduveerga'l.  (eseakkiyeal  38:9)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  அந்நாளிலே  பாழாய்க்கிடந்து  திரும்பக்  குடியேற்றப்பட்ட  ஸ்தலங்களுக்கு  விரோதமாகவும்,  ஜாதிகளிடத்திலிருந்து  சேர்க்கப்பட்டதும்,  ஆடுகளையும்  மாடுகளையும்  ஆஸ்திகளையும்  சம்பாதித்து,  தேசத்தின்  நடுவில்  குடியிருக்கிறதுமான  ஜனத்துக்கு  விரோதமாகவும்,  நீ  உன்  கையைத்  திருப்பும்படிக்கு,  (எசேக்கியேல்  38:10)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  annaa'lilea  paazhaaykkidanthu  thirumbak  kudiyeat’rappatta  sthalangga'lukku  viroathamaagavum,  jaathiga'lidaththilirunthu  searkkappattathum,  aaduga'laiyum  maaduga'laiyum  aasthiga'laiyum  sambaathiththu,  theasaththin  naduvil  kudiyirukki’rathumaana  janaththukku  viroathamaagavum,  nee  un  kaiyaith  thiruppumpadikku,  (eseakkiyeal  38:10)

உன்  இருதயத்தில்  யோசனைகள்  எழும்ப,  நீ  பொல்லாத  நினைவை  நினைத்து,  (எசேக்கியேல்  38:11)

un  iruthayaththil  yoasanaiga'l  ezhumba,  nee  pollaatha  ninaivai  ninaiththu,  (eseakkiyeal  38:11)

நான்  கொள்ளையிடவும்  சூறையாடவும்,  மதில்களில்லாமல்  கிடக்கிற  கிராமங்களுள்ள  தேசத்துக்கு  விரோதமாய்ப்போவேன்;  நிர்விசாரமாய்ச்  சுகத்தோடே  குடியிருக்கிறவர்களின்மேல்  வருவேன்;  அவர்கள்  எல்லாரும்  மதில்களில்லாமல்  குடியிருக்கிறார்கள்;  அவர்களுக்குத்  தாழ்ப்பாளும்  இல்லை,  கதவுகளும்  இல்லை  என்பாய்.  (எசேக்கியேல்  38:12)

naan  ko'l'laiyidavum  soo’raiyaadavum,  mathilga'lillaamal  kidakki’ra  kiraamangga'lu'l'la  theasaththukku  viroathamaayppoavean;  nirvisaaramaaych  sugaththoadea  kudiyirukki’ravarga'linmeal  varuvean;  avarga'l  ellaarum  mathilga'lillaamal  kudiyirukki’raarga'l;  avarga'lukkuth  thaazhppaa'lum  illai,  kathavuga'lum  illai  enbaay.  (eseakkiyeal  38:12)

சேபா  தேசத்தாரும்,  தேதான்  தேசத்தாரும்,  தர்ஷீசின்  வர்த்தகரும்  அதினுடைய  பாலசிங்கங்களான  அனைவரும்  உன்னை  நோக்கி:  நீ  கொள்ளையிட  அல்லவோ  வருகிறாயென்றும்,  நீ  சூறையாடி,  வெள்ளியையும்  பொன்னையும்  ஆஸ்தியையும்  எடுத்துக்கொள்ளுகிறதற்கும்,  ஆடுகளையும்  மாடுகளையும்  பிடிக்கிறதற்கும்,  மிகவும்  கொள்ளையிடுகிறதற்கும்  அல்லவோ  உன்னுடைய  கூட்டத்தைக்  கூட்டினாயென்றும்  சொல்லுவார்கள்.  (எசேக்கியேல்  38:13)

seabaa  theasaththaarum,  theathaan  theasaththaarum,  tharsheesin  varththagarum  athinudaiya  baalasinggangga'laana  anaivarum  unnai  noakki:  nee  ko'l'laiyida  allavoa  varugi’raayen’rum,  nee  soo’raiyaadi,  ve'l'liyaiyum  ponnaiyum  aasthiyaiyum  eduththukko'l'lugi’ratha’rkum,  aaduga'laiyum  maaduga'laiyum  pidikki’ratha’rkum,  migavum  ko'l'laiyidugi’ratha’rkum  allavoa  unnudaiya  koottaththaik  koottinaayen’rum  solluvaarga'l.  (eseakkiyeal  38:13)

ஆகையால்  மனுபுத்திரனே,  நீ  தீர்க்கதரிசனம்  உரைத்து,  கோகை  நோக்கிச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்;  என்  ஜனமாகிய  இஸ்ரவேல்  சுகமாய்க்  குடியிருக்கிற  அக்காலத்திலே  நீ  அதை  அறிவாய்  அல்லவோ?  (எசேக்கியேல்  38:14)

aagaiyaal  manupuththiranea,  nee  theerkkatharisanam  uraiththu,  koagai  noakkich  sollavea'ndiyathu  ennaven’raal:  karththaraagiya  aa'ndavar  uraikki’raar;  en  janamaagiya  israveal  sugamaayk  kudiyirukki’ra  akkaalaththilea  nee  athai  a’rivaay  allavoa?  (eseakkiyeal  38:14)

அப்பொழுது  நீயும்  உன்னுடனேகூடத்  திரளான  ஜனங்களும்  வடதிசையிலுள்ள  உன்  ஸ்தானத்திலிருந்து  வருவீர்கள்;  அவர்கள்  பெரிய  கூட்டமும்  திரளான  சேனையுமாயிருந்து,  எல்லாரும்  குதிரைகளின்மேல்  ஏறுகிறவர்களாயிருப்பார்கள்.  (எசேக்கியேல்  38:15)

appozhuthu  neeyum  unnudaneakoodath  thira'laana  janangga'lum  vadathisaiyilu'l'la  un  sthaanaththilirunthu  varuveerga'l;  avarga'l  periya  koottamum  thira'laana  seanaiyumaayirunthu,  ellaarum  kuthiraiga'linmeal  ea’rugi’ravarga'laayiruppaarga'l.  (eseakkiyeal  38:15)

நீ  தேசத்தைக்  கார்மேகம்போல்  மூட,  என்  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு  விரோதமாக  எழும்பிவருவாய்;  கடைசி  நாட்களிலே  இது  சம்பவிக்கும்;  கோகே,  ஜாதிகளின்  கண்களுக்கு  முன்பாக  உன்மூலமாய்  நான்  பரிசுத்தர்  என்று  விளங்கப்படுகிறதினால்  அவர்கள்  என்னை  அறியும்படிக்கு  உன்னை  என்  தேசத்துக்கு  விரோதமாக  வரப்பண்ணுவேன்.  (எசேக்கியேல்  38:16)

nee  theasaththaik  kaarmeagampoal  mooda,  en  janamaagiya  isravealukku  viroathamaaga  ezhumbivaruvaay;  kadaisi  naadka'lilea  ithu  sambavikkum;  koagea,  jaathiga'lin  ka'nga'lukku  munbaaga  unmoolamaay  naan  parisuththar  en’ru  vi'langgappadugi’rathinaal  avarga'l  ennai  a’riyumpadikku  unnai  en  theasaththukku  viroathamaaga  varappa'n'nuvean.  (eseakkiyeal  38:16)

உன்னை  அவர்களுக்கு  விரோதமாக  வரப்பண்ணுவேன்  என்று  பூர்வநாட்களிலே  அநேக  வருஷகாலமாய்த்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  இஸ்ரவேலின்  தீர்க்கதரிசிகளாகிய  என்  ஊழியக்காரரைக்கொண்டு,  அந்நாட்களிலே  நான்  குறித்துச்சொன்னவன்  நீ  அல்லவோ  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  38:17)

unnai  avarga'lukku  viroathamaaga  varappa'n'nuvean  en’ru  poorvanaadka'lilea  aneaga  varushakaalamaayth  theerkkatharisanam  uraiththu,  isravealin  theerkkatharisiga'laagiya  en  oozhiyakkaararaikko'ndu,  annaadka'lilea  naan  ku’riththuchsonnavan  nee  allavoa  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  38:17)

இஸ்ரவேல்  தேசத்துக்கு  விரோதமாகக்  கோகு  வரும்காலத்தில்  என்  உக்கிரம்  என்  நாசியில்  ஏறுமென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  38:18)

israveal  theasaththukku  viroathamaagak  koagu  varumkaalaththil  en  ukkiram  en  naasiyil  ea’rumen’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  38:18)

அந்நாளிலே  இஸ்ரவேல்  தேசத்திலே  பெரிய  அதிர்ச்சி  உண்டாகி,  (எசேக்கியேல்  38:19)

annaa'lilea  israveal  theasaththilea  periya  athirchchi  u'ndaagi,  (eseakkiyeal  38:19)

என்  பிரசன்னத்தினால்  சமுத்திரத்து  மச்சங்களும்,  ஆகாயத்துப்  பறவைகளும்,  வெளியின்  மிருகங்களும்,  தரையில்  ஊருகிற  சகல  பிராணிகளும்,  தேசமெங்குமுள்ள  சகல  நரஜீவன்களும்  அதிரும்;  பர்வதங்கள்  இடியும்;  செங்குத்தானவைகள்  விழும்;  எல்லா  மதில்களும்  தரையிலே  விழுந்துபோம்  என்று  என்  எரிச்சலினாலும்  என்  சினத்தின்  அக்கினியினாலும்  நிச்சயமாய்ச்  சொல்லுகிறேன்.  (எசேக்கியேல்  38:20)

en  pirasannaththinaal  samuththiraththu  machchangga'lum,  aagaayaththup  pa’ravaiga'lum,  ve'liyin  mirugangga'lum,  tharaiyil  oorugi’ra  sagala  piraa'niga'lum,  theasamenggumu'l'la  sagala  narajeevanga'lum  athirum;  parvathangga'l  idiyum;  sengguththaanavaiga'l  vizhum;  ellaa  mathilga'lum  tharaiyilea  vizhunthupoam  en’ru  en  erichchalinaalum  en  sinaththin  akkiniyinaalum  nichchayamaaych  sollugi’rean.  (eseakkiyeal  38:20)

என்  எல்லா  மலைகளிலும்  பட்டயத்தை  அவனுக்கு  விரோதமாக  வரவழைப்பேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்;  அவனவன்  பட்டயம்  அவனவன்  சகோதரனுக்கு  விரோதமாயிருக்கும்.  (எசேக்கியேல்  38:21)

en  ellaa  malaiga'lilum  pattayaththai  avanukku  viroathamaaga  varavazhaippean  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar;  avanavan  pattayam  avanavan  sagoatharanukku  viroathamaayirukkum.  (eseakkiyeal  38:21)

கொள்ளைநோயினாலும்  இரத்தம்  சிந்துதலினாலும்  நான்  அவனோடே  வழக்காடி,  அவன்மேலும்  அவன்  இராணுவங்களின்மேலும்  அவனோடிருக்கும்  திரளான  ஜனங்களின்மேலும்  வெள்ளமாய்  அடிக்கும்  மழையையும்,  பெருங்கல்மழையையும்,  அக்கினியையும்,  கந்தகத்தையும்  வருஷிக்கப்பண்ணுவேன்.  (எசேக்கியேல்  38:22)

ko'l'lainoayinaalum  iraththam  sinthuthalinaalum  naan  avanoadea  vazhakkaadi,  avanmealum  avan  iraa'nuvangga'linmealum  avanoadirukkum  thira'laana  janangga'linmealum  ve'l'lamaay  adikkum  mazhaiyaiyum,  perungkalmazhaiyaiyum,  akkiniyaiyum,  kanthagaththaiyum  varushikkappa'n'nuvean.  (eseakkiyeal  38:22)

இவ்விதமாய்  நான்  அநேக  ஜாதிகளின்  கண்களுக்கு  முன்பாக  என்  மகத்துவத்தையும்  என்  பரிசுத்தத்தையும்  விளங்கப்பண்ணி,  அறியப்படுவேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  (எசேக்கியேல்  38:23)

ivvithamaay  naan  aneaga  jaathiga'lin  ka'nga'lukku  munbaaga  en  magaththuvaththaiyum  en  parisuththaththaiyum  vi'langgappa'n'ni,  a’riyappaduvean;  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lvaarga'l.  (eseakkiyeal  38:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!