Monday, October 31, 2016

Eseakkiyeal 37 | எசேக்கியேல் 37 | Ezekiel 37

கர்த்தருடைய  கை  என்மேல்  அமர்ந்து,  கர்த்தர்  என்னை  ஆவிக்குள்ளாக்கி  வெளியே  கொண்டுபோய்,  எலும்புகள்  நிறைந்த  ஒரு  பள்ளத்தாக்கின்  நடுவில்  நிறுத்தி,  (எசேக்கியேல்  37:1)

karththarudaiya  kai  enmeal  amarnthu,  karththar  ennai  aavikku'l'laakki  ve'liyea  ko'ndupoay,  elumbuga'l  ni’raintha  oru  pa'l'laththaakkin  naduvil  ni’ruththi,  (eseakkiyeal  37:1)

என்னை  அவைகளின்  அருகே  சுற்றி  நடக்கப்பண்ணினார்;  இதோ,  பள்ளத்தாக்கின்  வெட்டவெளியிலே  அந்த  எலும்புகள்  மகா  திரளாய்க்கிடந்தது;  அவைகள்  மிகவும்  உலர்ந்ததுமாயிருந்தது.  (எசேக்கியேல்  37:2)

ennai  avaiga'lin  arugea  sut’ri  nadakkappa'n'ninaar;  ithoa,  pa'l'laththaakkin  vettave'liyilea  antha  elumbuga'l  mahaa  thira'laaykkidanthathu;  avaiga'l  migavum  ularnthathumaayirunthathu.  (eseakkiyeal  37:2)

அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  இந்த  எலும்புகள்  உயிரடையுமா  என்று  கேட்டார்;  அதற்கு  நான்:  கர்த்தராகிய  ஆண்டவரே,  தேவரீர்  அதை  அறிவீர்  என்றேன்.  (எசேக்கியேல்  37:3)

avar  ennai  noakki:  manupuththiranea,  intha  elumbuga'l  uyiradaiyumaa  en’ru  keattaar;  atha’rku  naan:  karththaraagiya  aa'ndavarea,  theavareer  athai  a’riveer  en’rean.  (eseakkiyeal  37:3)

அப்பொழுது  அவர்:  நீ  இந்த  எலும்புகளைக்குறித்துத்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  அவைகளைப்பார்த்துச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  உலர்ந்த  எலும்புகளே,  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்.  (எசேக்கியேல்  37:4)

appozhuthu  avar:  nee  intha  elumbuga'laikku’riththuth  theerkkatharisanam  uraiththu,  avaiga'laippaarththuch  sollavea'ndiyathu  ennaven’raal:  ularntha  elumbuga'lea,  karththarudaiya  vaarththaiyaik  kea'lungga'l.  (eseakkiyeal  37:4)

கர்த்தராகிய  ஆண்டவர்  இந்த  எலும்புகளை  நோக்கி:  இதோ,  நான்  உங்களுக்குள்  ஆவியைப்  பிரவேசிக்கப்பண்ணுவேன்,  அப்பொழுது  உயிரடைவீர்கள்.  (எசேக்கியேல்  37:5)

karththaraagiya  aa'ndavar  intha  elumbuga'lai  noakki:  ithoa,  naan  ungga'lukku'l  aaviyaip  piraveasikkappa'n'nuvean,  appozhuthu  uyiradaiveerga'l.  (eseakkiyeal  37:5)

நான்  உங்கள்மேல்  நரம்புகளைச்  சேர்த்து,  உங்கள்மேல்  மாம்சத்தை  உண்டாக்கி,  உங்களைத்  தோலினால்  மூடி,  உங்களில்  ஆவியைக்  கட்டளையிடுவேன்;  அப்பொழுது  நீங்கள்  உயிரடைந்து,  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்களென்று  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  37:6)

naan  ungga'lmeal  narambuga'laich  searththu,  ungga'lmeal  maamsaththai  u'ndaakki,  ungga'laith  thoalinaal  moodi,  ungga'lil  aaviyaik  katta'laiyiduvean;  appozhuthu  neengga'l  uyiradainthu,  naan  karththar  en’ru  a’rinthuko'lveerga'len’ru  uraikki’raar  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  37:6)

எனக்குக்  கட்டளையிட்டபடியே  நான்  தீர்க்கதரிசனம்  உரைத்தேன்;  நான்  தீர்க்கதரிசனம்  உரைக்கையில்  ஒரு  இரைச்சல்  உண்டாயிற்று;  இதோ,  அசைவுண்டாகி,  ஒவ்வொரு  எலும்பும்  தன்தன்  எலும்போடே  சேர்ந்துகொண்டது.  (எசேக்கியேல்  37:7)

enakkuk  katta'laiyittapadiyea  naan  theerkkatharisanam  uraiththean;  naan  theerkkatharisanam  uraikkaiyil  oru  iraichchal  u'ndaayit’ru;  ithoa,  asaivu'ndaagi,  ovvoru  elumbum  thanthan  elumboadea  searnthuko'ndathu.  (eseakkiyeal  37:7)

நான்  பார்த்துக்கொண்டிருக்கையில்,  இதோ,  அவைகள்மேல்  நரம்புகளும்  மாம்சமும்  உண்டாயிற்று,  மேற்புறமெங்கும்  தோலினால்  மூடப்பட்டது;  ஆனாலும்  அவைகளில்  ஆவி  இல்லாதிருந்தது.  (எசேக்கியேல்  37:8)

naan  paarththukko'ndirukkaiyil,  ithoa,  avaiga'lmeal  narambuga'lum  maamsamum  u'ndaayit’ru,  mea’rpu’ramenggum  thoalinaal  moodappattathu;  aanaalum  avaiga'lil  aavi  illaathirunthathu.  (eseakkiyeal  37:8)

அப்பொழுது  அவர்  என்னைப்பார்த்து:  நீ  ஆவியை  நோக்கித்  தீர்க்கதரிசனம்  உரை;  மனுபுத்திரனே,  நீ  தீர்க்கதரிசனம்  உரைத்து,  ஆவியை  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  ஆவியே,  நீ  காற்றுத்திசை  நான்கிலுமிருந்து  வந்து,  கொலையுண்ட  இவர்கள்  உயிரடையும்படிக்கு  இவர்கள்மேல்  ஊது  என்கிறார்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  37:9)

appozhuthu  avar  ennaippaarththu:  nee  aaviyai  noakkith  theerkkatharisanam  urai;  manupuththiranea,  nee  theerkkatharisanam  uraiththu,  aaviyai  noakki:  karththaraagiya  aa'ndavar  uraikki’rathu  ennaven’raal,  aaviyea,  nee  kaat’ruththisai  naangilumirunthu  vanthu,  kolaiyu'nda  ivarga'l  uyiradaiyumpadikku  ivarga'lmeal  oothu  engi’raar  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  37:9)

எனக்குக்  கற்பிக்கப்பட்டபடி  நான்  தீர்க்கதரிசனம்  உரைத்தேன்;  அப்பொழுது  ஆவி  அவர்களுக்குள்  பிரவேசிக்க,  அவர்கள்  உயிரடைந்து,  காலூன்றி,  மகா  பெரிய  சேனையாய்  நின்றார்கள்.  (எசேக்கியேல்  37:10)

enakkuk  ka’rpikkappattapadi  naan  theerkkatharisanam  uraiththean;  appozhuthu  aavi  avarga'lukku'l  piraveasikka,  avarga'l  uyiradainthu,  kaaloon’ri,  mahaa  periya  seanaiyaay  nin’raarga'l.  (eseakkiyeal  37:10)

அப்பொழுது  அவர்  என்னை  நோக்கி:  மனுபுத்திரனே,  இந்த  எலும்புகள்  இஸ்ரவேல்  வம்சத்தார்  அனைவருமே;  இதோ,  அவர்கள்  எங்கள்  எலும்புகள்  உலர்ந்துபோயிற்று;  எங்கள்  நம்பிக்கை  அற்றுப்போயிற்று;  நாங்கள்  அறுப்புண்டுபோகிறோம்  என்கிறார்கள்.  (எசேக்கியேல்  37:11)

appozhuthu  avar  ennai  noakki:  manupuththiranea,  intha  elumbuga'l  israveal  vamsaththaar  anaivarumea;  ithoa,  avarga'l  engga'l  elumbuga'l  ularnthupoayit’ru;  engga'l  nambikkai  at’ruppoayit’ru;  naangga'l  a’ruppu'ndupoagi’roam  engi’raarga'l.  (eseakkiyeal  37:11)

ஆகையால்  நீ  தீர்க்கதரிசனம்  உரைத்து,  அவர்களோடே  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்,  இதோ,  என்  ஜனங்களே,  நான்  உங்கள்  பிரேதக்குழிகளைத்  திறந்து,  உங்களை  உங்கள்  பிரேதக்குழிகளிலிருந்து  வெளிப்படவும்,  உங்களை  இஸ்ரவேல்  தேசத்துக்கு  வரவும்பண்ணுவேன்.  (எசேக்கியேல்  37:12)

aagaiyaal  nee  theerkkatharisanam  uraiththu,  avarga'loadea  sollavea'ndiyathu  ennaven’raal:  karththaraagiya  aa'ndavar  uraikki’raar,  ithoa,  en  janangga'lea,  naan  ungga'l  pireathakkuzhiga'laith  thi’ranthu,  ungga'lai  ungga'l  pireathakkuzhiga'lilirunthu  ve'lippadavum,  ungga'lai  israveal  theasaththukku  varavumpa'n'nuvean.  (eseakkiyeal  37:12)

என்  ஜனங்களே,  நான்  உங்கள்  பிரேதக்குழிகளைத்  திறந்து,  உங்களை  உங்கள்  பிரேதக்குழிகளிலிருந்து  வெளிப்படப்பண்ணும்போது,  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  (எசேக்கியேல்  37:13)

en  janangga'lea,  naan  ungga'l  pireathakkuzhiga'laith  thi’ranthu,  ungga'lai  ungga'l  pireathakkuzhiga'lilirunthu  ve'lippadappa'n'numpoathu,  naan  karththar  en’ru  a’rinthuko'lveerga'l.  (eseakkiyeal  37:13)

என்  ஆவியை  உங்களுக்குள்  வைப்பேன்;  நீங்கள்  உயிரடைவீர்கள்;  நான்  உங்களை  உங்கள்  தேசத்தில்  வைப்பேன்;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்;  இதைச்  சொன்னேன்,  இதைச்  செய்வேன்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  37:14)

en  aaviyai  ungga'lukku'l  vaippean;  neengga'l  uyiradaiveerga'l;  naan  ungga'lai  ungga'l  theasaththil  vaippean;  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lveerga'l;  ithaich  sonnean,  ithaich  seyvean  en’ru  karththar  uraikki’raar  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  37:14)

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  37:15)

pinnum  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  37:15)

மனுபுத்திரனே,  நீ  ஒரு  கோலை  எடுத்து,  அதிலே  யூதாவுக்கும்  அதைச்  சேர்ந்த  இஸ்ரவேல்  புத்திரருக்கும்  அடுத்தது  என்று  எழுதி;  பின்பு  வேறொரு  கோலை  எடுத்து,  அதிலே  எப்பிராயீமுக்கும்  அதைச்சேர்ந்த  இஸ்ரவேல்  வம்சத்தார்  அனைவருக்கும்  அடுத்த  யோசேப்பின்  கோலென்று  எழுதி,  (எசேக்கியேல்  37:16)

manupuththiranea,  nee  oru  koalai  eduththu,  athilea  yoothaavukkum  athaich  searntha  israveal  puththirarukkum  aduththathu  en’ru  ezhuthi;  pinbu  vea’roru  koalai  eduththu,  athilea  eppiraayeemukkum  athaichsearntha  israveal  vamsaththaar  anaivarukkum  aduththa  yoaseappin  koalen’ru  ezhuthi,  (eseakkiyeal  37:16)

அவைகளை  ஒரே  கோலாகும்படி  ஒன்றோடொன்று  இசையச்செய்,  அவைகள்  உன்  கையில்  ஒன்றாகும்.  (எசேக்கியேல்  37:17)

avaiga'lai  orea  koalaagumpadi  on’roadon’ru  isaiyachsey,  avaiga'l  un  kaiyil  on’raagum.  (eseakkiyeal  37:17)

இவைகளின்  பொருள்  இன்னதென்று  எங்களுக்கு  அறிவிக்கமாட்டீரோ  என்று  உன்  ஜனத்தின்  புத்திரர்  உன்னிடத்தில்  கேட்டால்,  (எசேக்கியேல்  37:18)

ivaiga'lin  poru'l  innathen’ru  engga'lukku  a’rivikkamaatteeroa  en’ru  un  janaththin  puththirar  unnidaththil  keattaal,  (eseakkiyeal  37:18)

நீ  அவர்களை  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  இதோ,  எப்பிராயீமுக்கும்  அதைச்சேர்ந்த  இஸ்ரவேல்  கோத்திரங்களுக்கும்  அடுத்த  யோசேப்பின்  கோலை  எடுத்து,  அதை  யூதாவின்  கோலோடே  சேர்த்து,  அவைகளை  ஒரே  கோலாக்குவேன்;  அவைகள்  என்  கையில்  ஒன்றாகும்  என்கிறார்  என்று  சொல்.  (எசேக்கியேல்  37:19)

nee  avarga'lai  noakki:  karththaraagiya  aa'ndavar  uraikki’rathu  ennaven’raal,  ithoa,  eppiraayeemukkum  athaichsearntha  israveal  koaththirangga'lukkum  aduththa  yoaseappin  koalai  eduththu,  athai  yoothaavin  koaloadea  searththu,  avaiga'lai  orea  koalaakkuvean;  avaiga'l  en  kaiyil  on’raagum  engi’raar  en’ru  sol.  (eseakkiyeal  37:19)

சொல்லும்போது,  நீ  எழுதின  கோல்கள்  அவர்களுடைய  கண்களுக்கு  முன்பாக  உன்  கையில்  இருக்கவேண்டும்.  (எசேக்கியேல்  37:20)

sollumpoathu,  nee  ezhuthina  koalga'l  avarga'ludaiya  ka'nga'lukku  munbaaga  un  kaiyil  irukkavea'ndum.  (eseakkiyeal  37:20)

நீ  அவர்களை  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  இதோ,  நான்  இஸ்ரவேல்  வம்சத்தாரை  அவர்கள்  போயிருக்கும்  ஜாதிகளிடத்திலிருந்து  அழைத்து,  சுற்றிலுமிருந்து  அவர்களைச்  சேர்த்து,  அவர்களை  அவர்கள்  சுயதேசத்திலே  வரப்பண்ணி,  (எசேக்கியேல்  37:21)

nee  avarga'lai  noakki:  karththaraagiya  aa'ndavar  uraikki’rathu  ennaven’raal,  ithoa,  naan  israveal  vamsaththaarai  avarga'l  poayirukkum  jaathiga'lidaththilirunthu  azhaiththu,  sut’rilumirunthu  avarga'laich  searththu,  avarga'lai  avarga'l  suyatheasaththilea  varappa'n'ni,  (eseakkiyeal  37:21)

அவர்களை  இஸ்ரவேலின்  மலைகளாகிய  தேசத்திலே  ஒரே  ஜாதியாக்குவேன்;  ஒரே  ராஜா  அவர்கள்  எல்லாருக்கும்  ராஜாவாக  இருப்பார்;  அவர்கள்  இனி  இரண்டு  ஜாதிகளாக  இருப்பதில்லை;  அவர்கள்  இனி  இரண்டு  ராஜ்யங்களாகப்  பிரிவதுமில்லை.  (எசேக்கியேல்  37:22)

avarga'lai  isravealin  malaiga'laagiya  theasaththilea  orea  jaathiyaakkuvean;  orea  raajaa  avarga'l  ellaarukkum  raajaavaaga  iruppaar;  avarga'l  ini  ira'ndu  jaathiga'laaga  iruppathillai;  avarga'l  ini  ira'ndu  raajyangga'laagap  pirivathumillai.  (eseakkiyeal  37:22)

அவர்கள்  இனித்  தங்கள்  நரகலான  விக்கிரகங்களினாலும்  தங்கள்  அருவருப்புகளினாலும்  தங்களுடைய  சகல  மீறுதல்களினாலும்  தங்களைத்  தீட்டுப்படுத்துவதுமில்லை;  அவர்கள்  குடியிருந்து  பாவஞ்செய்த  எல்லா  இடங்களிலிருந்தும்  நான்  அவர்களை  நீங்கலாக்கி  இரட்சித்து,  அவர்களைச்  சுத்தம்பண்ணுவேன்;  அப்பொழுது  அவர்கள்  என்  ஜனமாயிருப்பார்கள்,  நான்  அவர்கள்  தேவனாயிருப்பேன்.  (எசேக்கியேல்  37:23)

avarga'l  inith  thangga'l  naragalaana  vikkiragangga'linaalum  thangga'l  aruvaruppuga'linaalum  thangga'ludaiya  sagala  mee’ruthalga'linaalum  thangga'laith  theettuppaduththuvathumillai;  avarga'l  kudiyirunthu  paavagnseytha  ellaa  idangga'lilirunthum  naan  avarga'lai  neenggalaakki  iradchiththu,  avarga'laich  suththampa'n'nuvean;  appozhuthu  avarga'l  en  janamaayiruppaarga'l,  naan  avarga'l  theavanaayiruppean.  (eseakkiyeal  37:23)

என்  தாசனாகிய  தாவீது  என்பவர்  அவர்கள்மேல்  ராஜாவாக  இருப்பார்;  அவர்கள்  எல்லாருக்கும்  ஒரே  மேய்ப்பர்  இருப்பார்;  அப்பொழுது  அவர்கள்  என்  நியாயங்களில்  நடந்து,  என்  கட்டளைகளைக்  கைக்கொண்டு,  அவைகளின்படியே  செய்து,  (எசேக்கியேல்  37:24)

en  thaasanaagiya  thaaveethu  enbavar  avarga'lmeal  raajaavaaga  iruppaar;  avarga'l  ellaarukkum  orea  meayppar  iruppaar;  appozhuthu  avarga'l  en  niyaayangga'lil  nadanthu,  en  katta'laiga'laik  kaikko'ndu,  avaiga'linpadiyea  seythu,  (eseakkiyeal  37:24)

நான்  என்  தாசனாகிய  யாக்கோபுக்குக்  கொடுத்ததும்,  உங்கள்  பிதாக்கள்  குடியிருந்ததுமான  தேசத்திலே  குடியிருப்பார்கள்;  அவர்களும்  அவர்கள்  பிள்ளைகளும்  அவர்களுடைய  பிள்ளைகளின்  பிள்ளைகளும்  அதிலே  என்றென்றைக்கும்  குடியிருப்பார்கள்;  என்  தாசனாகிய  தாவீது  என்பவர்  என்றென்றைக்கும்  அவர்களுக்கு  அதிபதியாயிருப்பார்.  (எசேக்கியேல்  37:25)

naan  en  thaasanaagiya  yaakkoabukkuk  koduththathum,  ungga'l  pithaakka'l  kudiyirunthathumaana  theasaththilea  kudiyiruppaarga'l;  avarga'lum  avarga'l  pi'l'laiga'lum  avarga'ludaiya  pi'l'laiga'lin  pi'l'laiga'lum  athilea  en’ren’raikkum  kudiyiruppaarga'l;  en  thaasanaagiya  thaaveethu  enbavar  en’ren’raikkum  avarga'lukku  athibathiyaayiruppaar.  (eseakkiyeal  37:25)

நான்  அவர்களோடே  சமாதான  உடன்படிக்கை  செய்வேன்;  அது  அவர்களுக்கு  நித்திய  உடன்படிக்கையாயிருக்கும்;  நான்  அவர்களை  நிலைப்படுத்தி,  அவர்களை  வர்த்திக்கப்பண்ணி,  அவர்கள்  நடுவிலே  என்  பரிசுத்த  ஸ்தலத்தை  என்றென்றைக்கும்  ஸ்தாபிப்பேன்.  (எசேக்கியேல்  37:26)

naan  avarga'loadea  samaathaana  udanpadikkai  seyvean;  athu  avarga'lukku  niththiya  udanpadikkaiyaayirukkum;  naan  avarga'lai  nilaippaduththi,  avarga'lai  varththikkappa'n'ni,  avarga'l  naduvilea  en  parisuththa  sthalaththai  en’ren’raikkum  sthaabippean.  (eseakkiyeal  37:26)

என்  வாசஸ்தலம்  அவர்களிடத்தில்  இருக்கும்,  நான்  அவர்கள்  தேவனாயிருப்பேன்,  அவர்கள்  என்  ஜனமாயிருப்பார்கள்.  (எசேக்கியேல்  37:27)

en  vaasasthalam  avarga'lidaththil  irukkum,  naan  avarga'l  theavanaayiruppean,  avarga'l  en  janamaayiruppaarga'l.  (eseakkiyeal  37:27)

அப்படியே  என்  பரிசுத்த  ஸ்தலம்  அவர்கள்  நடுவிலே  என்றென்றைக்கும்  இருக்கும்போது,  நான்  இஸ்ரவேலைப்  பரிசுத்தம்பண்ணுகிற  கர்த்தர்  என்று  ஜாதிகள்  அறிந்துகொள்வார்கள்  என்கிறார்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  37:28)

appadiyea  en  parisuththa  sthalam  avarga'l  naduvilea  en’ren’raikkum  irukkumpoathu,  naan  isravealaip  parisuththampa'n'nugi’ra  karththar  en’ru  jaathiga'l  a’rinthuko'lvaarga'l  engi’raar  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  37:28)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!