Monday, October 31, 2016

Eseakkiyeal 36 | எசேக்கியேல் 36 | Ezekiel 36

மனுபுத்திரனே,  நீ  இஸ்ரவேல்  மலைகளை  நோக்கித்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  இஸ்ரவேல்  மலைகளே,  கர்த்தருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்.  (எசேக்கியேல்  36:1)

manupuththiranea,  nee  israveal  malaiga'lai  noakkith  theerkkatharisanam  uraiththu,  sollavea'ndiyathu  ennaven’raal:  israveal  malaiga'lea,  karththarudaiya  vaarththaiyaik  kea'lungga'l.  (eseakkiyeal  36:1)

கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்;  பகைஞன்  உங்களைக்குறித்து    ஆ,  நித்திய  மேடுகள்  எங்கள்  வசமாயிற்று  என்று  சொல்லுகிறபடியினால்,  (எசேக்கியேல்  36:2)

karththaraagiya  aa'ndavar  uraikki’raar;  pagaignan  ungga'laikku’riththu  aa  aa,  niththiya  meaduga'l  engga'l  vasamaayit’ru  en’ru  sollugi’rapadiyinaal,  (eseakkiyeal  36:2)

நீ  தீர்க்கதரிசனம்  உரைத்துச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்,  நீங்கள்  புறஜாதிகளில்  மீதியானவர்களுக்குச்  சுதந்தரமாயிருக்கும்படி  அவர்கள்  உங்களைப்  பாழாக்கி,  உங்களைச்  சுற்றிலுமிருந்து  விழுங்கினபடியினாலும்,  நீங்கள்  வாயாடிகளுக்குப்பேச்சும்  ஜனங்களுக்கு  அவதூறுமானவர்களானபடியினாலும்,  (எசேக்கியேல்  36:3)

nee  theerkkatharisanam  uraiththuch  sollavea'ndiyathu  ennaven’raal:  karththaraagiya  aa'ndavar  uraikki’raar,  neengga'l  pu’rajaathiga'lil  meethiyaanavarga'lukkuch  suthantharamaayirukkumpadi  avarga'l  ungga'laip  paazhaakki,  ungga'laich  sut’rilumirunthu  vizhungginapadiyinaalum,  neengga'l  vaayaadiga'lukkuppeachchum  janangga'lukku  avathoo’rumaanavarga'laanapadiyinaalum,  (eseakkiyeal  36:3)

இஸ்ரவேல்  மலைகளே,  நீங்கள்  கர்த்தராகிய  ஆண்டவருடைய  வார்த்தையைக்  கேளுங்கள்;  மலைகளுக்கும்,  மேடுகளுக்கும்,  ஆறுகளுக்கும்,  பள்ளத்தாக்குகளுக்கும்,  பாழாக்கப்பட்ட  அவாந்தர  இடங்களுக்கும்,  வெறுமையாய்  விடப்பட்ட  பட்டணங்களுக்கும்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்:  உங்களைச்  சுற்றிலும்  மீதியான  புறஜாதிகளுக்கு  நீங்கள்  கொள்ளையும்  பரியாசமுமாய்ப்போனபடியினால்,  (எசேக்கியேல்  36:4)

israveal  malaiga'lea,  neengga'l  karththaraagiya  aa'ndavarudaiya  vaarththaiyaik  kea'lungga'l;  malaiga'lukkum,  meaduga'lukkum,  aa’ruga'lukkum,  pa'l'laththaakkuga'lukkum,  paazhaakkappatta  avaanthara  idangga'lukkum,  ve’rumaiyaay  vidappatta  patta'nangga'lukkum  karththaraagiya  aa'ndavar  sollugi’raar:  ungga'laich  sut’rilum  meethiyaana  pu’rajaathiga'lukku  neengga'l  ko'l'laiyum  pariyaasamumaayppoanapadiyinaal,  (eseakkiyeal  36:4)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்:  என்  தேசத்தைக்  கொள்ளையிடப்பட்ட  வெளியாக்கும்படிக்கு  அதை  முழு  இருதயத்தின்  சந்தோஷத்தோடும்  கர்வமான  மனதோடும்  தங்களுக்குச்  சுதந்தரமாக  நியமித்துக்கொண்ட  புறஜாதிகளில்  மீதியானவர்களுக்கு  விரோதமாகவும்  ஏதோம்  அனைத்துக்கும்  விரோதமாகவும்,  என்  அக்கினியான  எரிச்சலினால்  பேசினேன்  என்று  நிச்சயமாய்ச்  சொல்லுகிறேன்.  (எசேக்கியேல்  36:5)

karththaraagiya  aa'ndavar  sollugi’raar:  en  theasaththaik  ko'l'laiyidappatta  ve'liyaakkumpadikku  athai  muzhu  iruthayaththin  santhoashaththoadum  karvamaana  manathoadum  thangga'lukkuch  suthantharamaaga  niyamiththukko'nda  pu’rajaathiga'lil  meethiyaanavarga'lukku  viroathamaagavum  eathoam  anaiththukkum  viroathamaagavum,  en  akkiniyaana  erichchalinaal  peasinean  en’ru  nichchayamaaych  sollugi’rean.  (eseakkiyeal  36:5)

ஆகையால்,  நீ  இஸ்ரவேல்  தேசத்தைக்குறித்துத்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  மலைகளுக்கும்,  மேடுகளுக்கும்,  ஆறுகளுக்கும்,  பள்ளத்தாக்குகளுக்கும்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்,  இதோ,  நீங்கள்  புறஜாதிகள்  செய்யும்  அவமானத்தைச்  சுமந்தபடியினால்  நான்  என்  எரிச்சலினாலும்  என்  உக்கிரத்தினாலும்  பேசினேன்,  (எசேக்கியேல்  36:6)

aagaiyaal,  nee  israveal  theasaththaikku’riththuth  theerkkatharisanam  uraiththu,  malaiga'lukkum,  meaduga'lukkum,  aa’ruga'lukkum,  pa'l'laththaakkuga'lukkum  sollavea'ndiyathu  ennaven’raal:  karththaraagiya  aa'ndavar  uraikki’raar,  ithoa,  neengga'l  pu’rajaathiga'l  seyyum  avamaanaththaich  sumanthapadiyinaal  naan  en  erichchalinaalum  en  ukkiraththinaalum  peasinean,  (eseakkiyeal  36:6)

ஆதலால்,  கர்த்தராகிய  ஆண்டவராயிருக்கிற  நான்  என்  கரத்தை  உயர்த்துவேன்,  உங்களைச்  சுற்றிலும்  இருக்கிற  புறஜாதிகள்  தங்களுடைய  அவமானத்தை  நிச்சயமாய்ச்  சுமப்பார்கள்  என்று  சொல்லுகிறேன்.  (எசேக்கியேல்  36:7)

aathalaal,  karththaraagiya  aa'ndavaraayirukki’ra  naan  en  karaththai  uyarththuvean,  ungga'laich  sut’rilum  irukki’ra  pu’rajaathiga'l  thangga'ludaiya  avamaanaththai  nichchayamaaych  sumappaarga'l  en’ru  sollugi’rean.  (eseakkiyeal  36:7)

இஸ்ரவேல்  மலைகளே,  நீங்கள்  உங்கள்  கொப்புகளை  விட்டு,  என்  ஜனமாகிய  இஸ்ரவேலுக்கு  உங்கள்  கனிகளைக்  கொடுப்பீர்கள்;  அவர்கள்  சமீபமாய்  வந்துவிட்டார்கள்.  (எசேக்கியேல்  36:8)

israveal  malaiga'lea,  neengga'l  ungga'l  koppuga'lai  vittu,  en  janamaagiya  isravealukku  ungga'l  kaniga'laik  koduppeerga'l;  avarga'l  sameebamaay  vanthuvittaarga'l.  (eseakkiyeal  36:8)

இதோ,  நான்  உங்கள்  பட்சத்திலிருந்து,  உங்களைக்  கண்ணோக்குவேன்;  நீங்கள்  பண்படுத்தப்பட்டு  விதைக்கப்படுவீர்கள்.  (எசேக்கியேல்  36:9)

ithoa,  naan  ungga'l  padchaththilirunthu,  ungga'laik  ka'n'noakkuvean;  neengga'l  pa'npaduththappattu  vithaikkappaduveerga'l.  (eseakkiyeal  36:9)

நான்  உங்கள்மேல்  இஸ்ரவேல்  வம்சமாகிய  மனுஷர்  யாவரையும்  வர்த்திக்கப்பண்ணுவேன்;  பட்டணங்கள்  குடியேற்றப்படும்,  அவாந்தரமான  ஸ்தலங்கள்  கட்டப்படும்.  (எசேக்கியேல்  36:10)

naan  ungga'lmeal  israveal  vamsamaagiya  manushar  yaavaraiyum  varththikkappa'n'nuvean;  patta'nangga'l  kudiyeat’rappadum,  avaantharamaana  sthalangga'l  kattappadum.  (eseakkiyeal  36:10)

உங்கள்மேல்  மனுஷரையும்  மிருகஜீவன்களையும்  பெருகிப்  பலுகும்படி  வர்த்திக்கப்பண்ணுவேன்;  பூர்வநாட்களில்  நீங்கள்  இருந்த  நிலைமையில்  நான்  உங்களை  ஸ்தாபித்து,  உங்கள்  முந்தின  சீரைப்பார்க்கிலும்  உங்களுக்கு  நற்சீர்  உண்டாகச்செய்வேன்;  அதினால்  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வீர்கள்.  (எசேக்கியேல்  36:11)

ungga'lmeal  manusharaiyum  mirugajeevanga'laiyum  perugip  palugumpadi  varththikkappa'n'nuvean;  poorvanaadka'lil  neengga'l  iruntha  nilaimaiyil  naan  ungga'lai  sthaabiththu,  ungga'l  munthina  seeraippaarkkilum  ungga'lukku  na’rseer  u'ndaagachseyvean;  athinaal  naan  karththar  en’ru  a’rinthuko'lveerga'l.  (eseakkiyeal  36:11)

நான்  உங்கள்மேல்  என்  ஜனமாகிய  இஸ்ரவேலின்  மனுஷரை  நடமாடப்பண்ணுவேன்,  அவர்கள்  உன்னைக்  கையாளுவார்கள்;  அவர்களுக்குச்  சுதந்தரமாயிருப்பாய்;  நீ  இனிமேல்  அவர்களைச்  சாகக்கொடுப்பதில்லை.  (எசேக்கியேல்  36:12)

naan  ungga'lmeal  en  janamaagiya  isravealin  manusharai  nadamaadappa'n'nuvean,  avarga'l  unnaik  kaiyaa'luvaarga'l;  avarga'lukkuch  suthantharamaayiruppaay;  nee  inimeal  avarga'laich  saagakkoduppathillai.  (eseakkiyeal  36:12)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  ஜனங்கள்  உன்னைப்பார்த்து:  நீ  மனுஷரைப்  பட்சிக்கிற  தேசமென்றும்,  நீ  உன்  ஜனங்களைச்  சாகக்கொடுக்கிற  தேசமென்றும்  சொல்லுகிறபடியினால்,  (எசேக்கியேல்  36:13)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal,  janangga'l  unnaippaarththu:  nee  manusharaip  padchikki’ra  theasamen’rum,  nee  un  janangga'laich  saagakkodukki’ra  theasamen’rum  sollugi’rapadiyinaal,  (eseakkiyeal  36:13)

நீ  இனிமேல்  மனுஷரைப்  பட்சிப்பதுமில்லை,  இனிமேல்  உன்  ஜனங்களைச்  சாகக்கொடுப்பதுமில்லை  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  36:14)

nee  inimeal  manusharaip  padchippathumillai,  inimeal  un  janangga'laich  saagakkoduppathumillai  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  36:14)

நான்  இனிமேல்  புறஜாதிகள்  செய்யும்  அவமானத்தை  உன்னிடத்திலே  கேட்கப்பண்ணுவதுமில்லை,  நீ  ஜனங்களின்  நிந்தையை  இனிமேல்  சுமப்பதுமில்லை;  நீ  இனிமேல்  உன்  ஜாதிகளைச்  சாகக்கொடுப்பதுமில்லையென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  36:15)

naan  inimeal  pu’rajaathiga'l  seyyum  avamaanaththai  unnidaththilea  keadkappa'n'nuvathumillai,  nee  janangga'lin  ninthaiyai  inimeal  sumappathumillai;  nee  inimeal  un  jaathiga'laich  saagakkoduppathumillaiyen’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  36:15)

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  36:16)

pinnum  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  36:16)

மனுபுத்திரனே,  இஸ்ரவேல்  வம்சத்தார்  தங்கள்  சுயதேசத்திலே  குடியிருக்கையில்  அதைத்  தங்கள்  நடக்கையினாலும்  தங்கள்  கிரியைகளினாலும்  தீட்டுப்படுத்தினார்கள்;  அவர்களுடைய  நடக்கை  என்  முகத்துக்கு  முன்பாகத்  தூரஸ்திரீயின்  தீட்டைப்போல்  இருந்தது.  (எசேக்கியேல்  36:17)

manupuththiranea,  israveal  vamsaththaar  thangga'l  suyatheasaththilea  kudiyirukkaiyil  athaith  thangga'l  nadakkaiyinaalum  thangga'l  kiriyaiga'linaalum  theettuppaduththinaarga'l;  avarga'ludaiya  nadakkai  en  mugaththukku  munbaagath  thoorasthireeyin  theettaippoal  irunthathu.  (eseakkiyeal  36:17)

ஆகையினால்  தேசத்திலே  அவர்கள்  சிந்தின  இரத்தத்தினிமித்தமும்,  அதை  அவர்கள்  தங்கள்  நரகலான  விக்கிரகங்களால்  தீட்டுப்படுத்தினதினிமித்தமும்  நான்  என்  உக்கிரத்தை  அவர்கள்மேல்  ஊற்றி,  (எசேக்கியேல்  36:18)

aagaiyinaal  theasaththilea  avarga'l  sinthina  iraththaththinimiththamum,  athai  avarga'l  thangga'l  naragalaana  vikkiragangga'laal  theettuppaduththinathinimiththamum  naan  en  ukkiraththai  avarga'lmeal  oot’ri,  (eseakkiyeal  36:18)

அவர்களைப்  புறஜாதிகளுக்குள்ளே  சிதறடித்தேன்;  தேசங்களில்  தூற்றிப்போடப்பட்டார்கள்;  அவர்களுடைய  நடக்கையின்படியேயும்  அவர்களுடைய  கிரியைகளின்படியேயும்  அவர்களை  நியாயந்தீர்த்தேன்.  (எசேக்கியேல்  36:19)

avarga'laip  pu’rajaathiga'lukku'l'lea  sitha’radiththean;  theasangga'lil  thoot’rippoadappattaarga'l;  avarga'ludaiya  nadakkaiyinpadiyeayum  avarga'ludaiya  kiriyaiga'linpadiyeayum  avarga'lai  niyaayantheerththean.  (eseakkiyeal  36:19)

அவர்கள்  புறஜாதிகளிடத்தில்  போனபோது  அந்த  ஜனங்கள்  இவர்களைக்குறித்து:  இவர்கள்  கர்த்தருடைய  ஜனங்கள்,  அவருடைய  தேசத்திலிருந்து  வந்தார்கள்  என்று  சொன்னதினால்,  இவர்கள்  என்  பரிசுத்த  நாமத்தைப்  பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.  (எசேக்கியேல்  36:20)

avarga'l  pu’rajaathiga'lidaththil  poanapoathu  antha  janangga'l  ivarga'laikku’riththu:  ivarga'l  karththarudaiya  janangga'l,  avarudaiya  theasaththilirunthu  vanthaarga'l  en’ru  sonnathinaal,  ivarga'l  en  parisuththa  naamaththaip  parisuththakkulaichchalaakkinaarga'l.  (eseakkiyeal  36:20)

ஆனாலும்  இஸ்ரவேல்  வம்சத்தார்  தாங்கள்  வந்துசேர்ந்த  புறஜாதிகளிடத்திலே  பரிசுத்தக்குலைச்சலாக்கின  என்  பரிசுத்த  நாமத்தினிமித்தமாகவே  இரங்குகிறேன்.  (எசேக்கியேல்  36:21)

aanaalum  israveal  vamsaththaar  thaangga'l  vanthusearntha  pu’rajaathiga'lidaththilea  parisuththakkulaichchalaakkina  en  parisuththa  naamaththinimiththamaagavea  iranggugi’rean.  (eseakkiyeal  36:21)

ஆதலால்,  நீ  இஸ்ரவேல்  வம்சத்தாரை  நோக்கி:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்,  இஸ்ரவேல்  வம்சத்தாரே,  உங்கள்  நிமித்தம்  அல்ல,  நீங்கள்  வந்து  சேர்ந்த  புறஜாதிகளிடத்தில்  பரிசுத்தக்குலைச்சலாக்கின  என்  பரிசுத்த  நாமத்தினிமித்தமே  நான்  இப்படிச்  செய்கிறேன்.  (எசேக்கியேல்  36:22)

aathalaal,  nee  israveal  vamsaththaarai  noakki:  karththaraagiya  aa'ndavar  uraikki’rathu  ennaven’raal,  israveal  vamsaththaarea,  ungga'l  nimiththam  alla,  neengga'l  vanthu  searntha  pu’rajaathiga'lidaththil  parisuththakkulaichchalaakkina  en  parisuththa  naamaththinimiththamea  naan  ippadich  seygi’rean.  (eseakkiyeal  36:22)

புறஜாதிகளின்  நடுவே  நீங்கள்  பரிசுத்தக்குலைச்சலாக்கினதும்  அவர்களுக்குள்  உங்களால்  பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான  என்  மகத்தான  நாமத்தை  நான்  பரிசுத்தம்பண்ணுவேன்;  அப்பொழுது  புறஜாதிகள்  தங்கள்  கண்களுக்கு  முன்பாக  நான்  உங்களுக்குள்  பரிசுத்தம்பண்ணப்படுகையில்,  நான்  கர்த்தர்  என்பதை  அறிந்துகொள்வார்கள்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  36:23)

pu’rajaathiga'lin  naduvea  neengga'l  parisuththakkulaichchalaakkinathum  avarga'lukku'l  ungga'laal  parisuththakkulaichchalaakkappattathumaana  en  magaththaana  naamaththai  naan  parisuththampa'n'nuvean;  appozhuthu  pu’rajaathiga'l  thangga'l  ka'nga'lukku  munbaaga  naan  ungga'lukku'l  parisuththampa'n'nappadugaiyil,  naan  karththar  enbathai  a’rinthuko'lvaarga'l  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  36:23)

நான்  உங்களைப்  புறஜாதிகளிடத்திலிருந்து  அழைத்து,  உங்களைச்  சகல  தேசங்களிலுமிருந்து  சேர்த்து,  உங்கள்  சுயதேசத்திற்கு  உங்களைக்  கொண்டுவருவேன்.  (எசேக்கியேல்  36:24)

naan  ungga'laip  pu’rajaathiga'lidaththilirunthu  azhaiththu,  ungga'laich  sagala  theasangga'lilumirunthu  searththu,  ungga'l  suyatheasaththi’rku  ungga'laik  ko'nduvaruvean.  (eseakkiyeal  36:24)

அப்பொழுது  நான்  உங்கள்மேல்  சுத்தமான  ஜலம்  தெளிப்பேன்;  நான்  உங்களுடைய  எல்லா  அசுத்தங்களையும்  உங்களுடைய  எல்லா  நரகலான  விக்கிரகங்களையும்  நீக்கி  உங்களைச்  சுத்தமாக்குவேன்,  நீங்கள்  சுத்தமாவீர்கள்.  (எசேக்கியேல்  36:25)

appozhuthu  naan  ungga'lmeal  suththamaana  jalam  the'lippean;  naan  ungga'ludaiya  ellaa  asuththangga'laiyum  ungga'ludaiya  ellaa  naragalaana  vikkiragangga'laiyum  neekki  ungga'laich  suththamaakkuvean,  neengga'l  suththamaaveerga'l.  (eseakkiyeal  36:25)

உங்களுக்கு  நவமான  இருதயத்தைக்  கொடுத்து,  உங்கள்  உள்ளத்திலே  புதிதான  ஆவியைக்  கட்டளையிட்டு,  கல்லான  இருதயத்தை  உங்கள்  மாம்சத்திலிருந்து  எடுத்துப்போட்டு,  சதையான  இருதயத்தை  உங்களுக்குக்  கொடுப்பேன்.  (எசேக்கியேல்  36:26)

ungga'lukku  navamaana  iruthayaththaik  koduththu,  ungga'l  u'l'laththilea  puthithaana  aaviyaik  katta'laiyittu,  kallaana  iruthayaththai  ungga'l  maamsaththilirunthu  eduththuppoattu,  sathaiyaana  iruthayaththai  ungga'lukkuk  koduppean.  (eseakkiyeal  36:26)

உங்கள்  உள்ளத்திலே  என்  ஆவியை  வைத்து,  உங்களை  என்  கட்டளைகளில்  நடக்கவும்  என்  நியாயங்களைக்  கைக்கொள்ளவும்  அவைகளின்படி  செய்யவும்பண்ணுவேன்.  (எசேக்கியேல்  36:27)

ungga'l  u'l'laththilea  en  aaviyai  vaiththu,  ungga'lai  en  katta'laiga'lil  nadakkavum  en  niyaayangga'laik  kaikko'l'lavum  avaiga'linpadi  seyyavumpa'n'nuvean.  (eseakkiyeal  36:27)

உங்கள்  பிதாக்களுக்கு  நான்  கொடுத்த  தேசத்திலே  நீங்கள்  குடியிருப்பீர்கள்;  நீங்கள்  என்  ஜனமாயிருப்பீர்கள்,  நான்  உங்கள்  தேவனாயிருந்து,  (எசேக்கியேல்  36:28)

ungga'l  pithaakka'lukku  naan  koduththa  theasaththilea  neengga'l  kudiyiruppeerga'l;  neengga'l  en  janamaayiruppeerga'l,  naan  ungga'l  theavanaayirunthu,  (eseakkiyeal  36:28)

உங்கள்  அசுத்தங்களையெல்லாம்  நீக்கி,  உங்களை  இரட்சித்து,  உங்கள்மேல்  பஞ்சத்தைக்  கட்டளையிடாமல்,  கோதுமையை  வரவழைத்து,  அதைப்பெருகப்பண்ணி,  (எசேக்கியேல்  36:29)

ungga'l  asuththangga'laiyellaam  neekki,  ungga'lai  iradchiththu,  ungga'lmeal  pagnchaththaik  katta'laiyidaamal,  koathumaiyai  varavazhaiththu,  athaipperugappa'n'ni,  (eseakkiyeal  36:29)

நீங்கள்  இனிமேல்  ஜாதிகளுக்குள்ளே  பஞ்சத்தினாலுண்டாகும்  நிந்தையை  அடையாதபடிக்கு,  விருட்சத்தின்  கனிகளையும்  வயலின்  பலன்களையும்  பெருகப்பண்ணுவேன்.  (எசேக்கியேல்  36:30)

neengga'l  inimeal  jaathiga'lukku'l'lea  pagnchaththinaalu'ndaagum  ninthaiyai  adaiyaathapadikku,  virudchaththin  kaniga'laiyum  vayalin  palanga'laiyum  perugappa'n'nuvean.  (eseakkiyeal  36:30)

அப்பொழுது  நீங்கள்  உங்கள்  பொல்லாத  மார்க்கங்களையும்  உங்கள்  தகாத  கிரியைகளையும்  நினைத்து,  உங்கள்  அக்கிரமங்களினிமித்தமும்  உங்கள்  அருவருப்புகளினிமித்தமும்  உங்களையே  அரோசிப்பீர்கள்.  (எசேக்கியேல்  36:31)

appozhuthu  neengga'l  ungga'l  pollaatha  maarkkangga'laiyum  ungga'l  thagaatha  kiriyaiga'laiyum  ninaiththu,  ungga'l  akkiramangga'linimiththamum  ungga'l  aruvaruppuga'linimiththamum  ungga'laiyea  aroasippeerga'l.  (eseakkiyeal  36:31)

நான்  இப்படிச்  செய்வது  உங்கள்  நிமித்தமாக  அல்லவென்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்,  இது  உங்களுக்கு  அறியப்பட்டிருக்கக்கடவது;  இஸ்ரவேல்  வம்சத்தாரே,  உங்கள்  வழிகளினிமித்தம்  வெட்கி  நாணுங்கள்.  (எசேக்கியேல்  36:32)

naan  ippadich  seyvathu  ungga'l  nimiththamaaga  allaven’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar,  ithu  ungga'lukku  a’riyappattirukkakkadavathu;  israveal  vamsaththaarea,  ungga'l  vazhiga'linimiththam  vedki  naa'nungga'l.  (eseakkiyeal  36:32)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  நான்  உங்கள்  அக்கிரமங்களையெல்லாம்  நீக்கி,  உங்களைச்  சுத்தமாக்கும்  காலத்திலே  பட்டணங்களில்  குடியேற்றுவிப்பேன்;  அவாந்தரமான  ஸ்தலங்களும்  கட்டப்படும்.  (எசேக்கியேல்  36:33)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  naan  ungga'l  akkiramangga'laiyellaam  neekki,  ungga'laich  suththamaakkum  kaalaththilea  patta'nangga'lil  kudiyeat’ruvippean;  avaantharamaana  sthalangga'lum  kattappadum.  (eseakkiyeal  36:33)

பாழாக்கப்பட்ட  தேசம்  கடந்துபோகிற  யாவருடைய  பார்வைக்கும்  பாழாய்க்கிடந்ததற்குப்  பதிலாக  பயிரிடப்படும்.  (எசேக்கியேல்  36:34)

paazhaakkappatta  theasam  kadanthupoagi’ra  yaavarudaiya  paarvaikkum  paazhaaykkidanthatha’rkup  bathilaaga  payiridappadum.  (eseakkiyeal  36:34)

பாழாய்க்கிடந்த  இத்தேசம்,  ஏதேன்  தோட்டத்தைப்போலாயிற்றென்றும்,  அவாந்தரமும்  பாழும்  நிர்மூலமுமாயிருந்த  பட்டணங்கள்  அரணிப்பானவைகளும்  குடியேற்றப்பட்டவைகளுமாய்  இருக்கிறது  என்றும்  சொல்லுவார்கள்.  (எசேக்கியேல்  36:35)

paazhaaykkidantha  iththeasam,  eathean  thoattaththaippoalaayit’ren’rum,  avaantharamum  paazhum  nirmoolamumaayiruntha  patta'nangga'l  ara'nippaanavaiga'lum  kudiyeat’rappattavaiga'lumaay  irukki’rathu  en’rum  solluvaarga'l.  (eseakkiyeal  36:35)

கர்த்தராகிய  நான்  நிர்மூலமானவைகளைக்  கட்டுகிறேன்  என்றும்,  பாழானதைப்  பயிர்நிலமாக்குகிறேன்  என்றும்,  அப்பொழுது  உங்களைச்  சுற்றிலுமுள்ள  மீதியான  ஜாதிகள்  அறிந்துகொள்வார்கள்;  கர்த்தராகிய  நான்  இதைச்  சொன்னேன்,  இதைச்  செய்வேன்.  (எசேக்கியேல்  36:36)

karththaraagiya  naan  nirmoolamaanavaiga'laik  kattugi’rean  en’rum,  paazhaanathaip  payirnilamaakkugi’rean  en’rum,  appozhuthu  ungga'laich  sut’rilumu'l'la  meethiyaana  jaathiga'l  a’rinthuko'lvaarga'l;  karththaraagiya  naan  ithaich  sonnean,  ithaich  seyvean.  (eseakkiyeal  36:36)

கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இஸ்ரவேல்  வம்சத்தாருக்காக  நான்  இதை  அநுக்கிரகஞ்செய்யும்படி  அவர்கள்  என்னிடத்தில்  விண்ணப்பம்  பண்ணவேண்டும்;  மந்தை  பெருகுகிறதுபோல்  அவர்களில்  மனிதரைப்  பெருகப்பண்ணுவேன்.  (எசேக்கியேல்  36:37)

karththaraagiya  aa'ndavar  sollugi’rathu  ennaven’raal:  israveal  vamsaththaarukkaaga  naan  ithai  anukkiragagnseyyumpadi  avarga'l  ennidaththil  vi'n'nappam  pa'n'navea'ndum;  manthai  perugugi’rathupoal  avarga'lil  manitharaip  perugappa'n'nuvean.  (eseakkiyeal  36:37)

பண்டிகை  காலங்களில்  எருசலேமிலே  பரிசுத்தம்பண்ணப்பட்டு  வருகிற  மந்தைகள்  எப்படித்  திரளாயிருக்கிறதோ,  அப்படியே  அவாந்தரமாயிருந்த  பட்டணங்கள்  மனுஷரின்  மந்தையால்  நிரம்பியிருக்கும்;  அதினால்  நான்  கர்த்தர்  என்பதை  அறிந்துகொள்வார்கள்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  36:38)

pa'ndigai  kaalangga'lil  erusaleamilea  parisuththampa'n'nappattu  varugi’ra  manthaiga'l  eppadith  thira'laayirukki’rathoa,  appadiyea  avaantharamaayiruntha  patta'nangga'l  manusharin  manthaiyaal  nirambiyirukkum;  athinaal  naan  karththar  enbathai  a’rinthuko'lvaarga'l  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  36:38)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!