Sunday, October 30, 2016

Eseakkiyeal 35 | எசேக்கியேல் 35 | Ezekiel 35

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  35:1)

karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  35:1)

மனுபுத்திரனே,  நீ  உன்  முகத்தைச்  சேயீர்மலைக்கு  நேராகத்  திருப்பி  அதற்கு  விரோதமாகத்  தீர்க்கதரிசனம்  உரைத்து,  (எசேக்கியேல்  35:2)

manupuththiranea,  nee  un  mugaththaich  seayeermalaikku  nearaagath  thiruppi  atha’rku  viroathamaagath  theerkkatharisanam  uraiththu,  (eseakkiyeal  35:2)

அதற்குச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்:  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்,  சேயீர்மலையே,  இதோ,  நான்  உனக்கு  விரோதமாக  வந்து,  என்  கையை  உனக்கு  விரோதமாகநீட்டி,  உன்னைப்  பாழும்  அவாந்தரவெளியுமாக்குவேன்.  (எசேக்கியேல்  35:3)

atha’rkuch  sollavea'ndiyathu  ennaven’raal:  karththaraagiya  aa'ndavar  uraikki’raar,  seayeermalaiyea,  ithoa,  naan  unakku  viroathamaaga  vanthu,  en  kaiyai  unakku  viroathamaaganeetti,  unnaip  paazhum  avaantharave'liyumaakkuvean.  (eseakkiyeal  35:3)

உன்  பட்டணங்களை  வனாந்தரமாக்கிப்போடுவேன்;  நீ  பாழாய்ப்போவாய்;  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வாய்.  (எசேக்கியேல்  35:4)

un  patta'nangga'lai  vanaantharamaakkippoaduvean;  nee  paazhaayppoavaay;  naan  karththar  en’ru  a’rinthuko'lvaay.  (eseakkiyeal  35:4)

நீ  பழைய  பகையை  வைத்து,  இஸ்ரவேல்  புத்திரருடைய  அக்கிரமம்  நிறைவேறுகையில்  அவர்களுக்கு  உண்டான  ஆபத்தின்  காலத்திலே  பட்டயத்தின்  கூர்மையினால்  அவர்களுடைய  இரத்தத்தைச்  சிந்தினபடியால்,  (எசேக்கியேல்  35:5)

nee  pazhaiya  pagaiyai  vaiththu,  israveal  puththirarudaiya  akkiramam  ni’raivea’rugaiyil  avarga'lukku  u'ndaana  aabaththin  kaalaththilea  pattayaththin  koormaiyinaal  avarga'ludaiya  iraththaththaich  sinthinapadiyaal,  (eseakkiyeal  35:5)

நான்  இரத்தப்  பழிக்கு  உன்னை  ஒப்புவிப்பேன்;  இரத்தப்பழி  உன்னைப்  பின்தொடரும்  என்று  கர்த்தராகிய  ஆண்டவராயிருக்கிற  நான்  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்;  நீ  இரத்தத்தை  வெறுக்காதபடியினால்  இரத்தம்  உன்னைப்  பின்தொடரும்.  (எசேக்கியேல்  35:6)

naan  iraththap  pazhikku  unnai  oppuvippean;  iraththappazhi  unnaip  pinthodarum  en’ru  karththaraagiya  aa'ndavaraayirukki’ra  naan  en  jeevanaikko'ndu  sollugi’rean;  nee  iraththaththai  ve’rukkaathapadiyinaal  iraththam  unnaip  pinthodarum.  (eseakkiyeal  35:6)

நான்  சேயீர்மலையைப்  பாழும்  அவாந்தர  இடமுமாக்கி,  அதிலே  போக்குவரவு  செய்வார்  இல்லாதபடி  சங்காரஞ்செய்து,  (எசேக்கியேல்  35:7)

naan  seayeermalaiyaip  paazhum  avaanthara  idamumaakki,  athilea  poakkuvaravu  seyvaar  illaathapadi  sanggaaragnseythu,  (eseakkiyeal  35:7)

அதின்  மலைகளைக்  கொலையுண்டவர்களாலே  நிரப்புவேன்;  உன்  மேடுகளிலும்  உன்  பள்ளத்தாக்குகளிலும்  உன்  எல்லா  ஆறுகளிலும்  பட்டயத்தால்  வெட்டுண்டவர்கள்  விழுவார்கள்.  (எசேக்கியேல்  35:8)

athin  malaiga'laik  kolaiyu'ndavarga'laalea  nirappuvean;  un  meaduga'lilum  un  pa'l'laththaakkuga'lilum  un  ellaa  aa’ruga'lilum  pattayaththaal  vettu'ndavarga'l  vizhuvaarga'l.  (eseakkiyeal  35:8)

நீ  என்றைக்கும்  அவாந்தரவெளியாயிருக்கும்படி  செய்வேன்;  உன்  பட்டணங்கள்  குடியேற்றப்படுவதில்லை;  அப்பொழுது  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்.  (எசேக்கியேல்  35:9)

nee  en’raikkum  avaantharave'liyaayirukkumpadi  seyvean;  un  patta'nangga'l  kudiyeat’rappaduvathillai;  appozhuthu  naan  karththar  en’ru  a’rinthuko'lvaarga'l.  (eseakkiyeal  35:9)

இரண்டு  ஜாதிகளும்  இரண்டு  தேசங்களும்  கர்த்தர்  வசமாயிருந்தும்,  அவைகள்  என்னுடையவைகளாகும்,  நான்  அவைகளைச்  சுதந்தரித்துக்கொள்ளுவேன்  என்று  நீ  சொல்லுகிறபடியினால்,  (எசேக்கியேல்  35:10)

ira'ndu  jaathiga'lum  ira'ndu  theasangga'lum  karththar  vasamaayirunthum,  avaiga'l  ennudaiyavaiga'laagum,  naan  avaiga'laich  suthanthariththukko'l'luvean  en’ru  nee  sollugi’rapadiyinaal,  (eseakkiyeal  35:10)

நீ  அவர்கள்மேல்  வைத்த  வர்மத்தினால்  செய்த  உன்  கோபத்துக்குத்தக்கதாகவும்,  உன்  பொறாமைக்குத்தக்கதாகவும்  நான்  செய்து,  கர்த்தராகிய  ஆண்டவராயிருக்கிற  நான்  உன்னை  நியாயந்தீர்க்கும்போது,  என்னை  அவர்களுக்குள்  அதினால்  அறியப்பண்ணுவேன்  என்று  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்.  (எசேக்கியேல்  35:11)

nee  avarga'lmeal  vaiththa  varmaththinaal  seytha  un  koabaththukkuththakkathaagavum,  un  po’raamaikkuththakkathaagavum  naan  seythu,  karththaraagiya  aa'ndavaraayirukki’ra  naan  unnai  niyaayantheerkkumpoathu,  ennai  avarga'lukku'l  athinaal  a’riyappa'n'nuvean  en’ru  en  jeevanaikko'ndu  sollugi’rean.  (eseakkiyeal  35:11)

இஸ்ரவேலின்  மலைகள்  பாழாக்கப்பட்டு  எங்களுக்கு  இரையாகக்  கொடுக்கப்பட்டது  என்று,  நீ  அவைகளுக்கு  விரோதமாய்ச்  சொன்ன  உன்  நிந்தனைகளையெல்லாம்  கர்த்தராகிய  நான்  கேட்டேன்  என்று  அப்பொழுது  அறிந்துகொள்வாய்.  (எசேக்கியேல்  35:12)

isravealin  malaiga'l  paazhaakkappattu  engga'lukku  iraiyaagak  kodukkappattathu  en’ru,  nee  avaiga'lukku  viroathamaaych  sonna  un  ninthanaiga'laiyellaam  karththaraagiya  naan  keattean  en’ru  appozhuthu  a’rinthuko'lvaay.  (eseakkiyeal  35:12)

நீங்கள்  உங்கள்  வாயினால்  எனக்கு  விரோதமாகப்  பெருமைபாராட்டி,  எனக்கு  விரோதமாக  உங்கள்  வார்த்தைகளைப்  பெருகப்பண்ணினீர்கள்;  அதை  நான்  கேட்டேன்.  (எசேக்கியேல்  35:13)

neengga'l  ungga'l  vaayinaal  enakku  viroathamaagap  perumaipaaraatti,  enakku  viroathamaaga  ungga'l  vaarththaiga'laip  perugappa'n'nineerga'l;  athai  naan  keattean.  (eseakkiyeal  35:13)

பூமியெல்லாம்  மகிழும்போது  நான்  உன்னைப்  பாழாயிருக்கும்படி  செய்வேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்.  (எசேக்கியேல்  35:14)

boomiyellaam  magizhumpoathu  naan  unnaip  paazhaayirukkumpadi  seyvean  en’ru  karththaraagiya  aa'ndavar  sollugi’raar.  (eseakkiyeal  35:14)

இஸ்ரவேல்  வம்சத்தாரின்  சுதந்தரம்  பாழாய்ப்போனதைக்  கண்டு  மகிழ்ந்தாயே,  உனக்கும்  அப்படியே  சம்பவிக்கச்செய்வேன்;  சேயீர்மலையே,  ஏதோமே,  நீ  முழுதும்  பாழாவாய்;  அதினால்  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்களென்று  உரைத்தார்  என்று  சொல்லு.  (எசேக்கியேல்  35:15)

israveal  vamsaththaarin  suthantharam  paazhaayppoanathaik  ka'ndu  magizhnthaayea,  unakkum  appadiyea  sambavikkachseyvean;  seayeermalaiyea,  eathoamea,  nee  muzhuthum  paazhaavaay;  athinaal  naan  karththar  en’ru  a’rinthuko'lvaarga'len’ru  uraiththaar  en’ru  sollu.  (eseakkiyeal  35:15)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!