Sunday, October 30, 2016

Eseakkiyeal 33 | எசேக்கியேல் 33 | Ezekiel 33

கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  33:1)

karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  33:1)

மனுபுத்திரனே,  நீ  உன்  ஜனத்தின்  புத்திரரோடே  பேசி,  அவர்களோடே  சொல்லவேண்டியதாவது:  நான்  தேசத்தின்மேல்  பட்டயத்தை  வரப்பண்ணுகையில்  தேசத்தின்  ஜனம்  தங்கள்  எல்லைகளிலுள்ள  ஒருவனை  அழைத்து,  அவனைத்  தங்களுக்குக்  காவற்காரனாக  வைத்தபின்பு,  (எசேக்கியேல்  33:2)

manupuththiranea,  nee  un  janaththin  puththiraroadea  peasi,  avarga'loadea  sollavea'ndiyathaavathu:  naan  theasaththinmeal  pattayaththai  varappa'n'nugaiyil  theasaththin  janam  thangga'l  ellaiga'lilu'l'la  oruvanai  azhaiththu,  avanaith  thangga'lukkuk  kaava’rkaaranaaga  vaiththapinbu,  (eseakkiyeal  33:2)

இவன்  தேசத்தின்மேல்  பட்டயம்  வருவதைக்கண்டு,  எக்காளம்  ஊதி,  ஜனத்தை  எச்சரிக்கும்போது,  (எசேக்கியேல்  33:3)

ivan  theasaththinmeal  pattayam  varuvathaikka'ndu,  ekkaa'lam  oothi,  janaththai  echcharikkumpoathu,  (eseakkiyeal  33:3)

எக்காளத்தின்  சத்தத்தைக்  கேட்கிறவன்  அதைக்  கேட்டும்,  எச்சரிக்கையாயிராமல்,  பட்டயம்  வந்து  அவனை  வாரிக்கொள்ளுகிறது  உண்டானால்,  அவனுடைய  இரத்தப்பழி  அவன்  தலையின்மேல்  சுமரும்.  (எசேக்கியேல்  33:4)

ekkaa'laththin  saththaththaik  keadki’ravan  athaik  keattum,  echcharikkaiyaayiraamal,  pattayam  vanthu  avanai  vaarikko'l'lugi’rathu  u'ndaanaal,  avanudaiya  iraththappazhi  avan  thalaiyinmeal  sumarum.  (eseakkiyeal  33:4)

அவன்  எக்காளத்தின்  சத்தத்தைக்  கேட்டும்,  எச்சரிக்கையாயிருக்கவில்லை;  அவனுடைய  இரத்தப்பழி  அவன்  பேரிலே  சுமரும்;  எச்சரிக்கையாயிருக்கிறவனோ  தன்  ஜீவனைத்  தப்புவித்துக்கொள்ளுவான்.  (எசேக்கியேல்  33:5)

avan  ekkaa'laththin  saththaththaik  keattum,  echcharikkaiyaayirukkavillai;  avanudaiya  iraththappazhi  avan  pearilea  sumarum;  echcharikkaiyaayirukki’ravanoa  than  jeevanaith  thappuviththukko'l'luvaan.  (eseakkiyeal  33:5)

காவற்காரன்  பட்டயம்  வருவதைக்  கண்டும்,  அவன்  எக்காளம்  ஊதாமலும்  ஜனங்கள்  எச்சரிக்கப்படாமலும்,  பட்டயம்  வந்து  அவர்களில்  யாதொருவனை  வாரிக்கொள்ளுகிறது  உண்டானால்,  அவன்  தன்  அக்கிரமத்திலே  வாரிக்கொள்ளப்பட்டான்;  ஆனாலும்  அவன்  இரத்தப்பழியைக்  காவற்காரன்  கையிலே  கேட்பேன்.  (எசேக்கியேல்  33:6)

kaava’rkaaran  pattayam  varuvathaik  ka'ndum,  avan  ekkaa'lam  oothaamalum  janangga'l  echcharikkappadaamalum,  pattayam  vanthu  avarga'lil  yaathoruvanai  vaarikko'l'lugi’rathu  u'ndaanaal,  avan  than  akkiramaththilea  vaarikko'l'lappattaan;  aanaalum  avan  iraththappazhiyaik  kaava’rkaaran  kaiyilea  keadpean.  (eseakkiyeal  33:6)

மனுபுத்திரனே,  நான்  உன்னை  இஸ்ரவேல்  வம்சத்தாருக்குக்  காவற்காரனாக  வைத்தேன்;  ஆகையால்  நீ  என்  வாயினாலே  வார்த்தையைக்கேட்டு,  என்  நாமத்தினாலே  அவர்களை  எச்சரிப்பாயாக.  (எசேக்கியேல்  33:7)

manupuththiranea,  naan  unnai  israveal  vamsaththaarukkuk  kaava’rkaaranaaga  vaiththean;  aagaiyaal  nee  en  vaayinaalea  vaarththaiyaikkeattu,  en  naamaththinaalea  avarga'lai  echcharippaayaaga.  (eseakkiyeal  33:7)

நான்  துன்மார்க்கனை  நோக்கி:  துன்மார்க்கனே,  நீ  சாகவே  சாவாய்  என்று  சொல்லுகையில்,  நீ  துன்மார்க்கனைத்  தன்  துன்மார்க்கத்தில்  இராதபடி  எச்சரிக்கத்தக்கதாக  அதை  அவனுக்குச்  சொல்லாமற்போனால்,  அந்தத்  துன்மார்க்கன்  தன்  அக்கிரமத்திலே  சாவான்;  ஆனாலும்  அவன்  இரத்தப்பழியை  உன்  கையிலே  கேட்பேன்.  (எசேக்கியேல்  33:8)

naan  thunmaarkkanai  noakki:  thunmaarkkanea,  nee  saagavea  saavaay  en’ru  sollugaiyil,  nee  thunmaarkkanaith  than  thunmaarkkaththil  iraathapadi  echcharikkaththakkathaaga  athai  avanukkuch  sollaama’rpoanaal,  anthath  thunmaarkkan  than  akkiramaththilea  saavaan;  aanaalum  avan  iraththappazhiyai  un  kaiyilea  keadpean.  (eseakkiyeal  33:8)

துன்மார்க்கன்  தன்  வழியைவிட்டுத்  திரும்பும்படி  நீ  அவனை  எச்சரித்தும்,  அவன்  தன்  வழியைவிட்டுத்  திரும்பாமற்போனால்,  அவன்  தன்  அக்கிரமத்திலே  சாவான்;  நீயோ  உன்  ஆத்துமாவைத்  தப்புவிப்பாய்.  (எசேக்கியேல்  33:9)

thunmaarkkan  than  vazhiyaivittuth  thirumbumpadi  nee  avanai  echchariththum,  avan  than  vazhiyaivittuth  thirumbaama’rpoanaal,  avan  than  akkiramaththilea  saavaan;  neeyoa  un  aaththumaavaith  thappuvippaay.  (eseakkiyeal  33:9)

மனுபுத்திரனே,  நீ  இஸ்ரவேல்  வம்சத்தாரை  நோக்கி:  எங்கள்  துரோகங்களும்  எங்கள்  பாவங்களும்  எங்கள்மேல்  இருக்கிறது,  நாங்கள்  சோர்ந்துபோகிறோம்,  நாங்கள்  பிழைப்பது  எப்படியென்று  நீங்கள்  சொல்லுகிறீர்கள்.  (எசேக்கியேல்  33:10)

manupuththiranea,  nee  israveal  vamsaththaarai  noakki:  engga'l  thuroagangga'lum  engga'l  paavangga'lum  engga'lmeal  irukki’rathu,  naangga'l  soarnthupoagi’roam,  naangga'l  pizhaippathu  eppadiyen’ru  neengga'l  sollugi’reerga'l.  (eseakkiyeal  33:10)

கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறது  என்னவென்றால்:  நான்  துன்மார்க்கனுடைய  மரணத்தை  விரும்பாமல்,  துன்மார்க்கன்  தன்  வழியைவிட்டுத்  திரும்பிப்  பிழைப்பதையே  விரும்புகிறேன்  என்று  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்;  இஸ்ரவேல்  வம்சத்தாரே,  உங்கள்  பொல்லாத  வழிகளைவிட்டுத்  திரும்புங்கள்,  திரும்புங்கள்;  நீங்கள்  ஏன்  சாகவேண்டும்  என்கிறார்  என்று  அவர்களோடே  சொல்லு.  (எசேக்கியேல்  33:11)

karththaraagiya  aa'ndavar  uraikki’rathu  ennaven’raal:  naan  thunmaarkkanudaiya  mara'naththai  virumbaamal,  thunmaarkkan  than  vazhiyaivittuth  thirumbip  pizhaippathaiyea  virumbugi’rean  en’ru  en  jeevanaikko'ndu  sollugi’rean;  israveal  vamsaththaarea,  ungga'l  pollaatha  vazhiga'laivittuth  thirumbungga'l,  thirumbungga'l;  neengga'l  ean  saagavea'ndum  engi’raar  en’ru  avarga'loadea  sollu.  (eseakkiyeal  33:11)

மனுபுத்திரனே,  நீ  உன்  ஜனத்தின்  புத்திரரை  நோக்கி:  நீதிமான்  துரோகம்பண்ணுகிற  நாளிலே  அவனுடைய  நீதி  அவனைத்  தப்புவிப்பதில்லை;  துன்மார்க்கன்  தன்  துன்மார்க்கத்தைவிட்டுத்  திரும்புகிற  நாளிலே  அவன்  தன்  அக்கிரமத்தினால்  விழுந்துபோவதுமில்லை;  நீதிமான்  பாவஞ்செய்கிற  நாளிலே  தன்  நீதியினால்  பிழைப்பதுமில்லை.  (எசேக்கியேல்  33:12)

manupuththiranea,  nee  un  janaththin  puththirarai  noakki:  neethimaan  thuroagampa'n'nugi’ra  naa'lilea  avanudaiya  neethi  avanaith  thappuvippathillai;  thunmaarkkan  than  thunmaarkkaththaivittuth  thirumbugi’ra  naa'lilea  avan  than  akkiramaththinaal  vizhunthupoavathumillai;  neethimaan  paavagnseygi’ra  naa'lilea  than  neethiyinaal  pizhaippathumillai.  (eseakkiyeal  33:12)

பிழைக்கவே  பிழைப்பாய்  என்று  நான்  நீதிமானுக்குச்  சொல்லும்போது,  அவன்  தன்  நீதியை  நம்பி,  அநியாயஞ்செய்தால்,  அவனுடைய  நீதியில்  ஒன்றும்  நினைக்கப்படுவதில்லை,  அவன்  செய்த  தன்  அநியாயத்திலே  சாவான்.  (எசேக்கியேல்  33:13)

pizhaikkavea  pizhaippaay  en’ru  naan  neethimaanukkuch  sollumpoathu,  avan  than  neethiyai  nambi,  aniyaayagnseythaal,  avanudaiya  neethiyil  on’rum  ninaikkappaduvathillai,  avan  seytha  than  aniyaayaththilea  saavaan.  (eseakkiyeal  33:13)

பின்னும்  சாகவே  சாவாய்  என்று  நான்  துன்மார்க்கனுக்குச்  சொல்லும்போது,  அவன்  தன்  பாவத்தைவிட்டுத்  திரும்பி,  நியாயமும்  நீதியுஞ்செய்து,  (எசேக்கியேல்  33:14)

pinnum  saagavea  saavaay  en’ru  naan  thunmaarkkanukkuch  sollumpoathu,  avan  than  paavaththaivittuth  thirumbi,  niyaayamum  neethiyugnseythu,  (eseakkiyeal  33:14)

துன்மார்க்கன்  தான்  வாங்கின  அடைமானத்தையும்  தான்  கொள்ளையிட்ட  பொருளையும்  திரும்பக்  கொடுத்துவிட்டு,  அநியாயம்  செய்யாதபடி  ஜீவப்பிரமாணங்களில்  நடந்தால்,  அவன்  சாகாமல்  பிழைக்கவே  பிழைப்பான்.  (எசேக்கியேல்  33:15)

thunmaarkkan  thaan  vaanggina  adaimaanaththaiyum  thaan  ko'l'laiyitta  poru'laiyum  thirumbak  koduththuvittu,  aniyaayam  seyyaathapadi  jeevappiramaa'nangga'lil  nadanthaal,  avan  saagaamal  pizhaikkavea  pizhaippaan.  (eseakkiyeal  33:15)

அவன்  செய்த  அவனுடைய  எல்லாப்  பாவங்களும்  அவனுக்கு  விரோதமாக  நினைக்கப்படுவதில்லை;  அவன்  நியாயமும்  நீதியும்  செய்தான்,  பிழைக்கவே  பிழைப்பான்  என்று  சொல்லு.  (எசேக்கியேல்  33:16)

avan  seytha  avanudaiya  ellaap  paavangga'lum  avanukku  viroathamaaga  ninaikkappaduvathillai;  avan  niyaayamum  neethiyum  seythaan,  pizhaikkavea  pizhaippaan  en’ru  sollu.  (eseakkiyeal  33:16)

உன்  ஜனத்தின்  புத்திரரோ,  ஆண்டவருடைய  வழி  செம்மையானதல்ல  என்கிறார்கள்;  அவர்களுடைய  வழியே  செம்மையானதல்ல.  (எசேக்கியேல்  33:17)

un  janaththin  puththiraroa,  aa'ndavarudaiya  vazhi  semmaiyaanathalla  engi’raarga'l;  avarga'ludaiya  vazhiyea  semmaiyaanathalla.  (eseakkiyeal  33:17)

நீதிமான்  தன்  நீதியைவிட்டுத்  திரும்பி,  அநியாயஞ்செய்தால்,  அவன்  அதினால்  சாவான்.  (எசேக்கியேல்  33:18)

neethimaan  than  neethiyaivittuth  thirumbi,  aniyaayagnseythaal,  avan  athinaal  saavaan.  (eseakkiyeal  33:18)

துன்மார்க்கன்  தன்  அக்கிரமத்தைவிட்டுத்  திரும்பி,  நியாயமும்  நீதியும்  செய்தால்,  அவன்  அவைகளினால்  பிழைப்பான்.  (எசேக்கியேல்  33:19)

thunmaarkkan  than  akkiramaththaivittuth  thirumbi,  niyaayamum  neethiyum  seythaal,  avan  avaiga'linaal  pizhaippaan.  (eseakkiyeal  33:19)

நீங்களோ,  ஆண்டவருடைய  வழி  செம்மையானதல்ல  என்கிறீர்கள்,  இஸ்ரவேல்  வீட்டாரே,  நான்  உங்களில்  ஒவ்வொருவனையும்  அவனவன்  வழிகளின்படியே  நியாயந்தீர்ப்பேன்  என்று  சொல்  என்றார்.  (எசேக்கியேல்  33:20)

neengga'loa,  aa'ndavarudaiya  vazhi  semmaiyaanathalla  engi’reerga'l,  israveal  veettaarea,  naan  ungga'lil  ovvoruvanaiyum  avanavan  vazhiga'linpadiyea  niyaayantheerppean  en’ru  sol  en’raar.  (eseakkiyeal  33:20)

எங்கள்  சிறையிருப்பின்  பன்னிரண்டாம்  வருஷம்  பத்தாம்  மாதம்  ஐந்தாந்தேதியிலே  எருசலேமிலிருந்து  தப்பின  ஒருவன்  என்னிடத்தில்  வந்து:  நகரம்  அழிக்கப்பட்டது  என்றான்.  (எசேக்கியேல்  33:21)

engga'l  si’raiyiruppin  pannira'ndaam  varusham  paththaam  maatham  ainthaantheathiyilea  erusaleamilirunthu  thappina  oruvan  ennidaththil  vanthu:  nagaram  azhikkappattathu  en’raan.  (eseakkiyeal  33:21)

தப்பினவன்  வருகிறதற்கு  முந்தின  சாயங்காலத்திலே  கர்த்தருடைய  கை  என்மேல்  அமர்ந்து,  அவன்  காலையில்  என்னிடத்தில்  வருமட்டும்  என்  வாயைத்  திறந்திருக்கப்பண்ணிற்று;  என்  வாய்  திறக்கப்பட்டது,  பின்பு  நான்  மௌனமாயிருக்கவில்லை.  (எசேக்கியேல்  33:22)

thappinavan  varugi’ratha’rku  munthina  saayanggaalaththilea  karththarudaiya  kai  enmeal  amarnthu,  avan  kaalaiyil  ennidaththil  varumattum  en  vaayaith  thi’ranthirukkappa'n'nit’ru;  en  vaay  thi’rakkappattathu,  pinbu  naan  maunamaayirukkavillai.  (eseakkiyeal  33:22)

அப்பொழுது  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (எசேக்கியேல்  33:23)

appozhuthu  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (eseakkiyeal  33:23)

மனுபுத்திரனே,  இஸ்ரவேல்  தேசத்தின்  பாழான  இடங்களிலுள்ள  குடிகள்:  ஆபிரகாம்  ஒருவனாயிருந்து,  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொண்டான்;  நாங்கள்  அநேகராயிருக்கிறோம்,  எங்களுக்கு  இந்தத்  தேசம்  சுதந்தரமாகக்  கொடுக்கப்பட்டது  என்று  சொல்லுகிறார்கள்.  (எசேக்கியேல்  33:24)

manupuththiranea,  israveal  theasaththin  paazhaana  idangga'lilu'l'la  kudiga'l:  aabirahaam  oruvanaayirunthu,  theasaththaich  suthanthariththukko'ndaan;  naangga'l  aneagaraayirukki’roam,  engga'lukku  inthath  theasam  suthantharamaagak  kodukkappattathu  en’ru  sollugi’raarga'l.  (eseakkiyeal  33:24)

ஆகையால்,  நீ  அவர்களை  நோக்கி:  நீங்கள்  இரத்தத்தோடே  கூடியதைத்  தின்று,  உங்கள்  நரகலான  விக்கிரகங்களுக்கு  நேராக  உங்கள்  கண்களை  ஏறெடுத்து,  இரத்தத்தைச்  சிந்தியிருக்கிறீர்கள்,  நீங்கள்  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொள்வீர்களோ?  (எசேக்கியேல்  33:25)

aagaiyaal,  nee  avarga'lai  noakki:  neengga'l  iraththaththoadea  koodiyathaith  thin’ru,  ungga'l  naragalaana  vikkiragangga'lukku  nearaaga  ungga'l  ka'nga'lai  ea’reduththu,  iraththaththaich  sinthiyirukki’reerga'l,  neengga'l  theasaththaich  suthanthariththukko'lveerga'loa?  (eseakkiyeal  33:25)

நீங்கள்  உங்கள்  பட்டயத்தை  நம்பிக்கொண்டு,  அருவருப்பானதைச்  செய்து,  உங்களில்  அவனவன்  தன்தன்  அயலான்  மனைவியைத்  தீட்டுப்படுத்துகிறீர்கள்;  நீங்கள்  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொள்வீர்களோ  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்லு.  (எசேக்கியேல்  33:26)

neengga'l  ungga'l  pattayaththai  nambikko'ndu,  aruvaruppaanathaich  seythu,  ungga'lil  avanavan  thanthan  ayalaan  manaiviyaith  theettuppaduththugi’reerga'l;  neengga'l  theasaththaich  suthanthariththukko'lveerga'loa  en’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar  en’ru  sollu.  (eseakkiyeal  33:26)

நீ  அவர்களை  நோக்கி:  பாழான  இடங்களில்  இருக்கிறவர்கள்  பட்டயத்தால்  விழுவார்கள்;  வெளிகளில்  இருக்கிறவனை  மிருகங்களுக்கு  இரையாக  ஒப்புக்கொடுப்பேன்;  கோட்டைகளிலும்  கெபிகளிலும்  இருக்கிறவர்கள்  கொள்ளைநோயால்  சாவார்கள்.  (எசேக்கியேல்  33:27)

nee  avarga'lai  noakki:  paazhaana  idangga'lil  irukki’ravarga'l  pattayaththaal  vizhuvaarga'l;  ve'liga'lil  irukki’ravanai  mirugangga'lukku  iraiyaaga  oppukkoduppean;  koattaiga'lilum  kebiga'lilum  irukki’ravarga'l  ko'l'lainoayaal  saavaarga'l.  (eseakkiyeal  33:27)

நான்  தேசத்தைப்  பாழும்  அவாந்தரமுமாக்குவேன்;  அப்பொழுது  அதினுடைய  பெலத்தின்  பெருமை  ஒழிந்துபோகும்;  அப்பொழுது  இஸ்ரவேலின்  மலைகள்  கடந்துபோவாரில்லாமல்  அவாந்தரமாய்க்  கிடக்கும்.  (எசேக்கியேல்  33:28)

naan  theasaththaip  paazhum  avaantharamumaakkuvean;  appozhuthu  athinudaiya  belaththin  perumai  ozhinthupoagum;  appozhuthu  isravealin  malaiga'l  kadanthupoavaarillaamal  avaantharamaayk  kidakkum.  (eseakkiyeal  33:28)

அவர்கள்  செய்த  அவர்களுடைய  எல்லா  அருவருப்புகளினிமித்தமும்  நான்  தேசத்தைப்  பாழும்  அவாந்தரமுமாக்கும்போது,  நான்  கர்த்தர்  என்று  அறிந்துகொள்வார்கள்,  இதை  என்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்று  கர்த்தராகிய  ஆண்டவர்  உரைக்கிறார்  என்று  சொல்லு.  (எசேக்கியேல்  33:29)

avarga'l  seytha  avarga'ludaiya  ellaa  aruvaruppuga'linimiththamum  naan  theasaththaip  paazhum  avaantharamumaakkumpoathu,  naan  karththar  en’ru  a’rinthuko'lvaarga'l,  ithai  en  jeevanaikko'ndu  sollugi’rean  en’ru  karththaraagiya  aa'ndavar  uraikki’raar  en’ru  sollu.  (eseakkiyeal  33:29)

மேலும்  மனுபுத்திரனே,  உன்  ஜனத்தின்  புத்திரர்  சுவர்  ஓரங்களிலும்  வீட்டுவாசல்களிலும்  உன்னைக்குறித்துப்  பேசி,  கர்த்தரிடத்திலிருந்து  புறப்பட்ட  வார்த்தை  என்னவென்று  கேட்போம்  வாருங்கள்  என்று  ஒருவரோடொருவரும்  சகோதரனோடே  சகோதரனும்  சொல்லி,  (எசேக்கியேல்  33:30)

mealum  manupuththiranea,  un  janaththin  puththirar  suvar  oarangga'lilum  veettuvaasalga'lilum  unnaikku’riththup  peasi,  karththaridaththilirunthu  pu’rappatta  vaarththai  ennaven’ru  keadpoam  vaarungga'l  en’ru  oruvaroadoruvarum  sagoatharanoadea  sagoatharanum  solli,  (eseakkiyeal  33:30)

ஜனங்கள்  கூடிவருகிற  வழக்கத்தின்படி  உன்னிடத்தில்  வந்து,  உனக்கு  முன்பாக  என்  ஜனங்கள்போல்  உட்கார்ந்து,  உன்  வார்த்தைகளைக்  கேட்கிறார்கள்;  ஆனாலும்  அவர்கள்  அவைகளின்படி  செய்கிறதில்லை;  அவர்கள்  தங்கள்  வாயினாலே  இன்பமாய்ப்  பேசுகிறார்கள்,  அவர்கள்  இருதயமோ  பொருளாசையைப்  பின்பற்றிப்  போகிறது.  (எசேக்கியேல்  33:31)

janangga'l  koodivarugi’ra  vazhakkaththinpadi  unnidaththil  vanthu,  unakku  munbaaga  en  janangga'lpoal  udkaarnthu,  un  vaarththaiga'laik  keadki’raarga'l;  aanaalum  avarga'l  avaiga'linpadi  seygi’rathillai;  avarga'l  thangga'l  vaayinaalea  inbamaayp  peasugi’raarga'l,  avarga'l  iruthayamoa  poru'laasaiyaip  pinpat’rip  poagi’rathu.  (eseakkiyeal  33:31)

இதோ,  நீ  இனிய  குரலும்  கீதவாத்தியம்  வாசிப்பதில்  சாமர்த்தியமுமுடையவன்  பாடும்  இன்பமான  பாட்டுக்குச்  சமானமாயிருக்கிறாய்;  அவர்கள்  உன்  வார்த்தைகளைக்  கேட்கிறார்கள்;  ஆனாலும்  அவைகளின்படி  செய்யாமற்போகிறார்கள்.  (எசேக்கியேல்  33:32)

ithoa,  nee  iniya  kuralum  keethavaaththiyam  vaasippathil  saamarththiyamumudaiyavan  paadum  inbamaana  paattukkuch  samaanamaayirukki’raay;  avarga'l  un  vaarththaiga'laik  keadki’raarga'l;  aanaalum  avaiga'linpadi  seyyaama’rpoagi’raarga'l.  (eseakkiyeal  33:32)

இதோ,  அது  வருகிறது,  அது  வருகையில்  தங்கள்  நடுவிலே  ஒரு  தீர்க்கதரிசி  இருந்தான்  என்று  அறிந்துகொள்வார்கள்  என்றார்.  (எசேக்கியேல்  33:33)

ithoa,  athu  varugi’rathu,  athu  varugaiyil  thangga'l  naduvilea  oru  theerkkatharisi  irunthaan  en’ru  a’rinthuko'lvaarga'l  en’raar.  (eseakkiyeal  33:33)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!